பேலினாயணம் – சாரா பேலின் மகாத்மியம்

குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் குறித்து நேற்று மட்டும் (மட்டுமே) வெளியான செய்திகள்.

இவர் மைய அரசு செயல்படும் விதத்தை மாற்றி, வாஷிங்டன் அரசின் செலவைக் குறைத்து, மற்ற அரசியல்வாதியைப் போல் இல்லாமல், வித்தியாசமாக, தன்னை உதாரணமாக முன்னிறுத்தி, தேவையில்லா விரயங்களை நீக்கி இயங்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு செலவில் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா

குடும்பத்தோடு செல்ல வேண்டிய விழாக்களுக்கு கணவனையும் குழந்தைகளையும், அரசியல் கட்சித் தலைவர்கள் அழைத்துச் செல்லுதல் இயல்பு. ஆனால், அவ்வாறு அவர்கள் அழைக்கப்படாத இடங்களுக்கும், அவர்களை சாரா பேலின் அழைத்து சென்றிருக்கிறார்.

அழையா விருந்தாளியாக சென்றதை மறைக்க, அசலாக கணக்கு காட்டியதை, வெகு நாள்களுக்குப் பிறகு மாற்றி திருத்தியிருக்கிறார்.

டிசம்பர் 2006- இல் பதவியேற்றபின் பதின்ம வயது மகளும் உல்லாசமாக ஊர்சுற்ற ஏதுவாக 64 ஒரு வழி விமானப் பதிவுகளையும், 12 போக-வர பயணங்களையும் அலாஸ்கா அரசின் தலையில் சுமத்தியுள்ளார்.

செய்தி: Palin billed Alaska for kids’ travel – Los Angeles Times

கட்சி செலவில் $150,000த்திற்கு பேலினுக்கு கிடைத்த பகட்டு ஆடைகள்

அமெரிக்காவில் இந்தியர்களும் ஏழைகளும் வால்-மார்ட்டிலும், நடுத்தர வர்க்கத்தினர் ஓல்ட் நேவியிலும், கொஞ்சம் வசதிப்பட்டவர் சியர்ஸ் / டார்கெட்களிலும், மெகயினிடம் வரிவிலக்கு பெறுபவர் மேசீஸ் / லார்ட் அன்ட் டெய்லரிடமிருந்தும் ஆடைகள், அணிகலன்கள் வாங்குவோம்.

செல்வம் கொழிக்கும் பில் கேட்ஸ், வாரன் பஃபே போன்றவர்கள் மட்டுமே நீமன் மார்கஸ், சாக்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் மதிப்பு பெற்ற கடை பக்கம் எட்டிப் பார்க்க முடியும்.

உடுத்தும் உடைக்காக, சாதாரண அமெரிக்கர் வருடத்திற்கு $1,874 செலவழித்தால், சாரா பேலினோ கடந்த இரு மாதங்களில் மட்டுமே குடியரசு கட்சியின் புண்ணியத்தில் $150,000 கபளீகரம் செய்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ‘பிரச்சாரம் முடிந்தவுடன் இந்த ஆடைகளை தான தருமத்திற்கு கொடுத்துவிடப் போவதாக’ ஜான் மெகயின் குழு தெரிவித்திருக்கிறது.

செய்தி: Sarah Palin went on some kind of RNC-financed shopping spree, Politico says: Top of the Ticket – Los Angeles Times | Sarah Palin won’t be keeping her GOP-financed clothes

அமெரிக்கா என்பது எங்குள்ளது என்றதற்காக பேலின் மன்னிப்பு கோரினார்

வட கரோலினாவில் பிரச்சாரம் மேற்கொண்டபோது

‘ஒரு சிலர்தான் உண்மையான அமெரிக்கர்கள். இந்த இடத்தைப் போல் சிற்சில இடங்கள்தான் அமெரிக்கா. மற்ற இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் போலிகள்; அமெரிக்கர்கள் அல்ல’

என்று பொருள்பட பேசியதற்கு சாரா பேலின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

செய்தி: Palin Apologizes for ‘Real America’ Comments – washingtonpost.com: “Two Congressmen Face Backlash After Their Own Remarks Questioning Others’ Patriotism” | P.S. Palin Apologizes – The Caucus Blog – NYTimes.com

துணை ஜனாதிபதியின் கடமை என்ன – சாரா பேலின் பேச்சுக்கு கண்டனம் எழுகிறது

கேள்வி: ‘துணை ஜனாதிபதி என்ன செய்வார்?’

சாரா பேலின்: ‘ஜனாதிபதியின் திட்டத்தை ஆதரிப்பது; ஜனாதிபதியின் அணியில் குழு உறுப்பினராக அங்கம் வகிப்பது போன்றவை துணை ஜனாதிபதியின் பணி.

அமெரிக்க செனேட்டின் பொறுப்பும் அவர்கள் கையில் உள்ளது. துணை ஜனாதிபதி விருப்பப்பட்டால், செனேட்டுக்குள்ளே நுழைந்து கொள்கை மாறுதல்களை விளைவிக்க முடியும்!’

நூறு உறுப்பினர் கொண்ட செனேட் அவையில் 50-50 என்று இழுபறியாக ஏதாவது வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் மட்டும், தன்னுடைய வாக்கை அளித்து பெரும்பான்மையை கொடுப்பது துணை ஜனாதிபதியின் வேலை. மற்றபடிக்கு, செனேட்டில் சாரா பேலினுக்கு ‘திட்டம்’ முன்னெடுத்து செல்ல எந்தவித அதிகாரமும் கிடையாது.

தற்போதைய துணை ஜனாதிபதி டிக் சேனி இவ்விதமாக துஷ்பிரயோகம் செய்துவருகிறார் என்னும் குற்றச்சாட்டு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

செய்தி: Palin’s view of vice presidency critiqued – 2008 Presidential Campaign Blog – Political Intelligence – Boston.com

அறிவுசார் சிந்தனைக்கு எதிரானவரா சாரா பேலின்?

இது கேள்வி: The Corner on National Review Online: “Palin’s Alleged Anti-Intellectualism : [Ramesh Ponnuru]”

இது கட்டுரை: The resentments of Sarah Palin: The New Republic :: Barracuda by Noam Scheiber

இது நச் பதில்: The Daily Dish | By Andrew Sullivan (October 22, 2008) – How Anti-Intellectual Is Palin?

  • குடும்பத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்? தனி மனித வாழ்வில் பகுத்தறிவு/படிப்பு/கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்?
    • பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மகன்
    • கல்லூரிக்கு செல்லும் எண்ணமில்லாத மகள்
    • வகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு அம்மாவின் பிரச்சார பீரங்கியாக செயல்படும் 13 வயது குழந்தை
  • மாநகர வருமானத்தை வைத்து விளையாட்டு மைதானம் கட்ட செலவு செய்தது
  • அருங்காட்சியகத்திற்கான நிதியைக் குறைத்தது
  • புது நூலகம் கட்ட கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்தது
  • அரசியல் சாசனம் குறித்த பேதைமை

கொசுறு

Palin: God will do the right thing on election day – It’s easy to get the sense that Sarah Palin is not a vice presidential candidate sympathetic to the concerns of a religious right activist, she’s a religious right activist running for the vice presidency.

முந்தைய இடுகைகள்:

1. வலையக கணக்கு வழக்கு

2. அலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’

அமெரிக்க அதிபரின் தலையாய கடமை

அமெரிக்காவில்:

  • எவருக்கு வாக்களிக்க உரிமை இருக்கிறது (ஆண்கள், பெண்கள், கறுப்பர், குடிபுகுந்தோர், குற்றம் புரிந்தோர் போன்ற பிரிவுகளில்) என்று யார் அறிவுறுத்துகிறார்கள்?
  • எது சுதந்திரம் (துப்பாக்கி வைத்துக் கொள்ளுதல், கருவைத் தக்க வைத்துக் கொள்ளுதல் அல்லது சுயமாக நிர்ணயம் செய்வது போன்ற பிரச்சினைகளில்) என்று எவர் முடிவெடுக்கிறார்கள்?
  • சமூக நீதியை (சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு, ஆண்/பெண் ஏற்றத்தாழ்வு, வந்தேறிகளுக்கும் குடிமகன்களுக்கும் இடையே வித்தியாசங்களை) பரிபாலிப்பவர் யார்?
  • இன்ன பிற (சுற்றுச்சூழல் மாசு, புகை பிடித்தல், நோய்க்கான மருந்து போன்றவற்றில் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையே உள்ள பொறுப்பை) தீர்மானிப்பது எங்கே?

எல்லாக் கேள்விக்கும் விடை: அமெரிக்க உச்சநீதிமன்றம்

இதில் ஒன்பது நீதிபதிகள் அமர்ந்து முடிவெடுக்கிறார்கள். 88 வயதான ஜான் பால் ஸ்டீவன்ஸ் கூடிய சீக்கிரமே ஓய்வெடுப்பார் என்று நம்பப்படுகிறது. அவரின் இடத்தை நிரப்புவது அடுத்த அதிபரின் மிக முக்கிய கடமை.

புஷ் அதிபராக இருந்தபோது இரண்டு பாரம்பரிய (பழமைவாத) நீதிபதிகளை மெகயினின் அருந்துணையோடு அமர்த்தினார்.

மெகயின் அதிபரானால் கலாச்சார காவலர்களில் கை வலுப்படும். ஒபாமா வந்தால் தாராள சிந்தனை உள்ளவர் வருவார்.

இது இன்றைய நிலை:

மெகயின் அதிபரானால் என்னவாகும்? அலசல்: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் – Shifting Median: A McCain Supreme Court

ஒபாமா அதிபரானால்… ஆய்வு: Dissenting Opinions on the Supreme Court’s Future: See what an Obama Supreme Court might look like.

அமெரிக்க அதிபர் தேர்தல் சூழலும் வெற்றி பெறும் வித்தைகளும் – மூஸ் ஹன்டர்

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

மெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு.

மெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது.

மெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் சீர்த்திருத்த மசோதா போன்றவற்றில் அவர் பங்காற்றியபோது அவருடைய ‘மேவரிக்’ பிம்பம் மீது ஒரு கவர்ச்சி இருந்தது.

தேர்தல் மீது ஒரு கண்வைத்து கடந்த சில வருடங்களாக புஷ்ஷின் ஒவ்வொரு சொல்லையும், செயலையும் ஆதரிக்க ஆரம்பித்ததிலிருந்து தற்போது ஒபாமாவின் மீது சேறு வாரி இறைக்கும் தேர்தல் உத்திவரை மெக்கெயினின் நடவடிக்கையைப் பார்த்தால் அவர் மீது இருந்த மரியாதை முற்றிலுமாக மறைந்துவிட்டது.

அவருடைய நிலைப்பாடுகள் எதுவும் இப்போது நிலையானதாக தெரியவில்லை. அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் குடியேற்ற சீர்த்திருத்தம்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் டெமாக்ரடிக் செனட்டர் எட்வர்ட் கென்னடியுடன் இணைந்து குடியேற்றச் சீர்த்திருத்தச் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் முதற்கட்ட வேட்பாளர் தேர்தலின்போது கன்சர்வேடிவ்களின் வாக்குகளை மனதில் வைத்து அதைப் பற்றி பேசவே மறுத்தார்.

பிறகு லத்தினோக்களின் வாக்குகளை மனதில் வைத்து குடியேற்றச் சீர்த்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். பிறகு மீண்டும் மாற்றிக்கொண்டார். எப்படியாவது இந்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பல விஷயங்களில் முன்னுக்குப் பிறகு முரணாக பேசிக்கொண்டிருக்கிறார்.

அவருடைய நிலைப்பாடு மாறாமலிருப்பது ராணுவவிஷயங்களில் மட்டுமே. எனக்கு இவ்விஷயங்களில் ஆர்வமில்லை.

4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்? எதற்காக?

முதல் கேள்வியில் சொன்னமாதிரி ரால்ப் நேடரைச் சுட்டிக்காட்டலாம். பெரிய கட்சிகளில் இருந்து தான் வரவேண்டுமென்றால் ஜனநாயகக் கட்சியில் இருந்து ஹில்லரியும், குடியரசுக் கட்சியில் இருந்து மைக் ஹக்கபியையும் காட்டுவேன்.

முதற்கட்ட வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹில்லரியே வெற்றி பெற வேண்டுமென்று விரும்பினேன்.

என்னுடைய எதிர்பார்ப்பு ஹில்லரி அதிபராகவும், அவருடைய துணை அதிபராக நியூ மெக்சிகோ ஆளுநர் பில் ரிச்சர்ட்சனும் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று இருந்தது. ஹில்லரி வேட்பாளராக தேர்வாகாதது ஏமாற்றமாக கூட இருந்தது.

காரணம் ஹில்லரி, ஒபாமா இருவரது அனுபவம், வயது வித்தியாசம்.

பல பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடுகளும் ஒரே மாதிரியிருந்தாலும், இந்த வாய்ப்பை விட்டால் ஹில்லரிக்கு அல்லது அவர் போன்ற முற்போக்கு பெண்ணுக்கு இன்னொரு வாய்ப்பு அடுத்த சில தேர்தல்களில் கிடைப்பது அரிது. அவரது தோல்வியின் எதிரொலி இப்போதே தெரிந்துவிட்டது.

அவருக்கு மாற்றாக ஒரு பிற்போக்குப் பெண்மணி முன்னிருத்தப்படுகிறார். இது என்னைப் பொருத்தமட்டில் ஒரு பெண் அதிபராவதற்கு பின்னடைவைத் தான் ஏற்படுத்தும்.

ஒபாமா இளம்வயதுக்காரர். இன்னும் சில ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று ஹில்லரிக்குப் பிறகு 2016 இல் இப்போதிருப்பதை விட இன்னும் தீவிரமாக, அனுபவ முதிர்ச்சியோடு களமிறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறுவார். இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது முழுக்க அவரது வெற்றி என்று சொல்ல முடியாது.

ஜார்ஜ் புஷ்ஷின் எட்டாண்டு ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒபாமாவுக்கு பெருமளவு உதவியாக இருக்கப்போகிறது.

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

வாக்குசீட்டு & வாக்காளர்

ஒரு அமேரிக்க வாக்காளரின் விபரம், அவர் கடந்த தேர்தல்களில் அளித்த வாக்கு விபரங்கள், இணையத்தில்:

மாதிரி வாக்குசீட்டு – 1/3 முன்பக்கம்:

மாதிரி வாக்குசீட்டு – 2/3 முன்பக்கம்:

வேலையிலிருக்கும் அனைத்து நீதிபதிகளுக்கு (முக்கால்வாசி ஜனநாயக கட்சியினர்) எதிர்த்து அளிக்கப்படும் வாக்காளரின் 2008 வாக்கு.

வாக்களிக்க முடிவு செய்துள்ளவை கரும் கோளத்தில் தெரிகின்றன!

ஒரு அமேரிக்க மாநிலத்தில் நடக்கவிருக்கும் அதிபர் மற்றைய தேர்தல்களின் முழு வாக்குசீட்டை காண ஆர்வமுள்ளோர், இங்கு காணலாம்:

வாக்குசீட்டு

தீவிரவாதிகளும் ஒபாமாவும்: இஸ்லாம் – குடியரசு கட்சி

அமெரிக்காவுடன் முரண்டு பிடிக்கும் (கியுபா, வெனிசுவேலா, வட கொரியா, இரான் போன்ற) நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் காணவேண்டும் என்பது ஒபாமாவின் நிலை.

பிரிவினைவாதம் பேசும் தலைவர்களுடன் சரிசமமாக அமெரிக்கா அமர்ந்து பேசும் என்பது ஒபாமாவின் நிலை அல்ல.

இதை விமர்சித்து (திரித்து) விளம்பரம் செய்து வருகிறது குடியரசு கட்சி.

அட்டையில்:

9/11 விமானத் தாக்குதல்களை வாக்காளர்களுக்கு நினைவுறுத்தும் அட்டைப்படம்

பிரித்தால் உள்ளே:

இந்த பதாகையை ஆதரிக்கும் மெகயின்:

Courteous Commenting

Before you make any questionable comment to someone, you should always ask yourself three questions:

  • Is the comment sexually explicit or derogatory of a protected characteristic?
  • How well do I know the person and what he or she finds offensive?
  • Is it possible that someone might overhear me?

If you have asked yourself the three questions and are still unsure whether a comment is appropriate or not, think about how you would answer these questions:

  1. Would I want this comment made to my spouse, significant other, or child?
  2. Would I say this if my supervisor, spouse, significant other, or child could hear me?
  3. Would I feel comfortable if my comment were replayed on the 11 o’clock news?
  4. Would I feel comfortable repeating my comment in court?

தமிழினத் தலைவர்களைப் புறக்கணிக்கும் கூகிளைப் புறக்கணிக்கும் போராட்டம்

மம்தா பேனர்ஜி இருக்கிறார்;

அனில் ககோத்கர் (யாருப்பா இவரு?!) இருக்கிறார்!

அமெரிக்காவுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கூட இடம் உண்டு.

அமெரிக்கரான டேவிட் மல்ஃபோர்டும் உண்டு.

இந்தப் பட்டியலில் ஏன் ஒரு தமிழருக்கு கூட ‘மேற்கோள் மழை’ பொழிய இடம் ஒதுக்கப்படவில்லை?

கூகிள் சோதனைக்கூடம் வழங்கும்: In Quotes

மெகயின் ஜெயிப்பது துர்லபம்: ஏன்? (ஆராய்ச்சி)

கேள்வி:

அமெரிக்க அதிபர் தேர்தலில் நிக்ஸனோ, புஷ்ஷினரோ வேட்பாளராக இல்லாமல் குடியரசுக் கட்சியினர் கடைசியாக வென்றது எப்போது?

விடை: The Last U.S. Presidential Election the GOP Won Without a Nixon or a Bush on the Ticket

'ஒபாமா எப்படி என்னைக் கவர்கிறார்?' – மூஸ்ஹன்டர்

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது

ஒபாமாவின் பல கொள்கைகள் எனக்கு ஏற்புடையதாகவே உள்ளன. ஆனாலும் நேடர் அளவுக்கு இல்லை. குறிப்பிட்டு சிலவற்றை சொல்லவேண்டுமென்றால்:

அ. வெளியுறவுக் கொள்கையில் கடும் எதிரி நாடுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்பது.

இத்தனை ஆண்டுகளாக அண்டை நாடான கூபாவை ஒதுக்கி வைத்து என்னத்தைக் கண்டார்கள் என்று தெரியவில்லை. ராணுவத்தைக் கொண்டு சாதிப்பது தான் மானமிக்க முறை என்று முழங்கும் முன்னாள் போர்வீரரின் அணுகுமுறை எனக்கு உடன்பாடானதல்ல. அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளின் கொள்கையைத் தலைகீழாகத் திருப்பிப் போடவேண்டும் என்கிறார் நேடர்.

ஆ. அனைவருக்குமான மருத்துவ நல திட்டம்.

இதை ஒபாமாவை விட ஹில்லரி சிறப்பாக செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை இருந்தாலும் இப்போதைக்கு ஒபாமா தேவலாம் என்று நினைக்கிறேன். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முற்றிலும் தனியார்வாசம் ஒப்படைத்து விட்டு, முடிவுகளை தனிமனிதர்களிடம் விட்டுவிட வேண்டும் என்ற மெக்கெய்னின் அணுகுமுறையில் உடன்பாடில்லை.

கனடா, ஸ்வீடன் நாடுகளைப் போன்ற மருத்துவக் காப்பீட்டு முறையை வலியுறுத்துகிறார் நேடர்.

இ. மாற்று எரிசக்திகளில் கவனம் குவித்து, அவற்றின் ஆய்வு & வளர்ச்சியில் முதலீடு செய்து இத்துறைகளில் புதிய தொழில்கள் வளர்ந்து பல்லாயிரக்கணக்கான புதுவகை வேலை வாய்ப்புகள் உருவாக்க விழையும் ஒபாமாவின் திட்டமும் எனக்குப் பிடித்த ஒன்று.

இதில் அணு மின்சாரம், தூயக் கரி தொழில்நுட்பம் போன்றவற்றில் பிரச்சினைகள் உருவாகக்கூடும் என்றாலும், பிற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொழில்நுட்பமுறைகள் விரைவில் வளரவும் வாய்ப்புகள் உண்டு.

நேடர் காற்று, சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வகைகளுக்கு முதலிடம் தர வேண்டுமென்கிறார். அணுசக்தியை எதிர்க்கிறார்.

ஒபாமா சிலமுறை மனதில் இருப்பதை வாய்தவறி வெளிப்படுத்தும் கருத்துக்களே அதிகம் கவர்வதாக உள்ளது

(உ-ம். .

  • விரக்தியடைந்த நாட்டுப்புறத்து அமெரிக்கர்கள் கடவுளையும், துப்பாக்கிகளையும் பிடித்துத் தொங்குவது,
  • குடியேறிகளின் மீதான வெறுப்பு கொள்வது பற்றிய கருத்து).

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

தொலைக்காட்சி விளம்பரம் – செலவு எவ்வளவு?

செலவழித்த கணக்கு

  1. பராக் ஒபாமா: $145,064,338
  2. ஜான் மெகயின்: $90,415,962
  3. T. Boone Pickens: $24,026,256
  4. குடியரசுக் கட்சி: $10,080,774
  5. அமெரிக்க ஒய்வுற்றவர்கள் சங்கம்: $7,098,639
  6. முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கம் (Vets for Freedom):$3,899,753
  7. பள்ளி, படிப்பு, ஆசிரியர் சங்கம் (Strong American Schools):$3,075,462
  8. American Issues Project: $2,287,945
  9. S.E.I.U.:$2,019,476
  10. One Campaign (one.org):$1,451,238
  11. MoveOn.org: $1,448,331
  12. உடல்நலம், காப்பீடு சங்கம் (Health Care First): $1,397,726
  13. RightChange.com:$1,377,003
  14. Healthcare for America Now: $922,618
  15. Committee for Truth in Politics: $734,479
  16. United Auto Workers:$489,517
  17. ஜனநாயகக் கட்சி: $436,015
  18. திட்டமிடப்பட்ட தாய்மை (Planned Parenthood):$321,269
  19. கருக்கலைப்பு எதிர்ப்போர் சங்கம் (Vitae Society):$258,710
  20. முன்னாள் இராணுவ வீரர்கள் VoteVets:$201,752
  21. Let Freedom Ring:$197,030
  22. Judicial Confirmation Network:$192.882
  23. BornAliveTruth.org: $165,948
  24. விலங்குகள் பாதுகாப்பு/நல சங்கம்: $128,735
  25. தொழிற்சங்கங்கள்: $123,274
  26. Citizens United: $88,002
  27. U.F.C.W.:$85,012
  28. PowerPAC: $80,383
  29. California Nurses Association: $60,162
  30. Bring Ohio Back: $40,457
  31. Matthew 25 Network:$8.858
  32. Brave New PAC and Democracy for America: $3,293
  33. கறுப்பர் தொலைக்காட்சி: $3,036
  34. மதம்/கடவுள்/யேசு கிறிஸ்து – pH for America:$2,2,42
  35. Denver Group:$1,102

விளம்பர மோதல் (நியு யார்க் டைம்ஸ்):

தொலைக்காட்சி விளம்பர – வாரம் வாரியாக:

நன்றி:

1. The Ad Wars – Election Guide 2008 – The New York Times: “About $300 million has been spent from April 3 to Oct. 13, 2008 to broadcast over 200 ads, according to statistics compiled by Campaign Media Analysis Group, which tracks political advertising expenditures.”

2. Nearing Record, Obama’s Ad Effort Swamps McCain – NYTimes.com: “Senator Barack Obama on Friday in Roanoke, Va. Analysts say his campaign is on pace to surpass next week the record of $188 million in advertising spending in a general election.”

3. Day’s Campaigning Shows an Inverted Political Plane – NYTimes.com: “There was the feel of a political world turned upside down on Saturday as Senator John McCain found himself defending North Carolina and Virginia, while Senator Barack Obama was greeted by huge crowds in Missouri, which Republicans had also considered safe just months ago.”