புத்தக கடையில் ஜெமோ விரும்பி வாசிக்க எடுத்த நூல்களின் பட்டியல்:
1. Confessions of a Philosopher – Bryan Magee
2. If on a winter’s night a traveler – Italo Calvino
3. 2666 – Roberto Bolano
4. Ludwig Wittgenstein: The Duty of Genius – Ray Monk
5. Pragmatism: The Classic Writings – Edited by H S Thayer
6. The Meaning of Truth: William James
7. Evolution and the Founders of Pragmatism: Philip P Wiener
8. The Geography of Thought: Richard E Nisbett
பிங்குபாக்: Snap Judgment
பிங்குபாக்: Achamundu Achamundu: 10 Questions « Snap Judgment
//2666- Roberto Bolano//
அவருடைய Savage Detectives படித்ததால், இதை 30 பவுண்டுக்கு வாங்கி ஏமாந்து போனேன். ஒண்ணுமே புரியலை.
😦
கிரி, ஓ!!! இரண்டுமே வாசித்ததில்லை. முதலில் சொன்னதை முதலில் எடுக்கிறேன்.
new yorkerல் 2666ஐ தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். 🙂
2666 பற்றி சன்னாசி எழுதியிருக்கிறார்.புரியவில்லை என்றால் அவரைக் கேளுங்கள் :).
அண்ணாச்சி,2666ஐ தலையில் தூக்கி ஆடினால் , தலை சப்பையாகிவிடுமே!
By Night in Chile, 200 பக்க அளவில் பொலானோ மயக்க வைத்திருப்பார்.அதில் ஏமாந்து Savage Detectives முக்கி முனகி முடித்தேன். 2666 – முடியல,அழுதுட்டேன் !!
ஆனால், காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு போல்.இவர் கதைகளில் சதா எல்லாரும் எதையாவது தேடிக்கொண்டிருப்பார்கள். மேலும் இவர் எழுதிய அனைத்துப் புதினங்களிலும் ஒரே பேரை உடைய பல கதாபாத்திரங்கள் வரும்.
இதோ – http://quarterlyconversation.com/roberto-bolano-the-geometry-of-his-fictions – இதில் ஜாவீர் என்பவர் பொலானோவின் புதினங்களை பிரித்து மேய்ந்து, சூத்திரமாக்கி வைத்திருக்கிறார், பார்த்து மகிழுங்கள்.
ஒரே கதாப்பாத்திரங்களை தங்கள் கதைகளில் பயன்படுத்துவதில், தமிழில் யுவன் நினைவுக்கு வருகிறார். யுவனின் பெரும்பாலான சிறுகதைகள் கிருஷ்ணன்(கிட்டத்தட்ட யுவன்) என்ற ஒருவரை சுற்றியே நிகழ்கின்றன.
பல கதாபாத்திரங்கள் அறிமுகத்துக்கு பின்னர் காணாமல்போய்விடுவார்கள். அவர்களே மற்ற இடங்களிலும் வந்து trivial விஷயங்களை சொல்லிச் செல்வார்கள். இதனால் யார் முக்கிய பாத்திரம் என்ற குழப்பம் இருந்துகொண்டேயிருக்கும்.
கிருஷ்ணனாக வரும் யுவனுக்கு எல்லா இடங்களிலும் ஒரே identity தான் உண்டு. எனக்கு என்னமோ, சாருவின் நாவல்களில் வந்து காணாமல்போகும் பாத்திரங்களைப் போல் இருக்கும் இந்த பொலானோவின் கவிஞர்கள். Plus deeper characterisation..