வட கரோலினா வாக்குச்சீட்டு: குளறுபடியா?


பதிவர் வாசன் ஓட்டு போட்ட: வாக்குசீட்டு

எட்டாண்டுகளுக்கு முன்பு ஆல் கோருக்கு வாக்களித்தால் ஜார்ஜ் புஷ்ஷுக்கு செல்லுமாறு கோடு போட்ட ஃப்ளோரிடா வாக்குச்சீட்டு வெகு பிரபலம். இவ்வளவு காலம் கழிந்தும் வடக்கு கரோலினா அது போன்ற குழப்பமான வாக்குச்சீட்டுகளை வடிவமைத்திருகிறது.

ஜனாதிபதி தேர்தல், மேல்சபை தேர்தல், எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல், நீதியரசர் தேர்தல் என்று ஒவ்வொன்றாக வாக்களித்துக் கொண்டிராமல் சட்டு புட்டென்று ‘என்னுடைய வாக்கு குடியரசுக் கட்சி‘க்கு என்று முத்திரை குத்துமாறு வாக்குச்சீட்டுகளை அமைப்பது வழக்கம்.

அதே போல்தான் வட கரோலினாவும் தன்னுடைய வாக்குச்சீட்டை நிர்ணயித்துள்ளது.

ஆனால், இந்த மாதிரி குடியரசு/ஜனநாயகம் என்று சொன்ன பின்னும், அதிபர் தேர்தலில் தனியாக இன்னொரு தடவை ஓட்டு போட வேண்டும். இல்லையென்றால், உங்கள் வாக்கு செல்லாது என்பதுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்.

‘ஒரு தடவை போட்டால் போதுங்க’ என்று சொல்லிவிட்டு, ‘இன்னொரு தடவை குத்தாவிட்டால் உங்க வாக்கு செல்லாதுங்க’ என்று சொல்லும் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறை பல செல்லாத வாக்குகளை வரவழைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

முழுவதும் வாசிக்க: Editorial – This Year’s Butterfly Ballot – NYTimes.com: North Carolina’s ballot design is already causing confusion with early voters. If the presidential race is close, it could change the outcome.

மேலும் விவரங்களுக்கு:
1. How Bad is North Carolina’s Ballot Flaw? The Numbers Say, Pretty Bad: Brennan Center for Justice

2. Facing South: Voting Rights Watch: Could confusing ballots swing the presidential election in NC?

3. How Design Can Save Democracy: Interactive Graphic – NYTimes.com: “On Nov. 4, most ballots will repeat design mistakes made in previous elections. Many of these errors are avoidable. This year, the United States Election Assistance Commission released ballot design guidelines. Using these guidelines, we at AIGA developed this feature to identify common design problems and offer improvements”

4 responses to “வட கரோலினா வாக்குச்சீட்டு: குளறுபடியா?

 1. இதெல்லாம் ஈறை பேனாக்கிற ரிப்போர்டிங் சமாச்சாரம்.

  வெகு தெளிவாக ‘straight party voting will not include presidential election only partisan offices’ன்னு போட்டிருக்கு.

  ஏதோ நிர்வாக வசதிக்காக அதிபர் தேர்தல் வாக்குபதிவையும் ஏனைய பதவிகளுக்கான வாக்கு பதிவையும் சேர்த்து நடத்துகிறார்கள்ப் போல. தனித் தனியாகவே வாக்குசீட்டு கொடுத்திருக்கலாம்.

 2. ஸ்ரீதர் 🙂

  மேலும் மேலும் பிரச்சினை 😉

  CNN Political Ticker: All politics, all the time Blog Archive – Paper towels solve NC soggy ballot problem « – Blogs from CNN.com: “If the ballot is wet the machine has trouble feeding the paper and it can jam or tear.”

  திட்டமிட்ட சூழ்ச்சி 😀

 3. இங்கிட்டு கேம்பிரிட்ஜ்ல பட்டியல்ல வாக்காளர் பெயரைக் காணோம்னு ஓட்டுப் போடப் போனவங்க எகிற, அலறி அடிச்சு மாநில அரசுக்குத் தகவல் சொல்லி மேயர்லருந்து எல்லாரும் ஓடியாந்து “அச்சிட்ட பட்டியல் பழசு. லேட்டஸ்ட் அடிச்சு ஓட்டுச் சாவடிக்கு விநியோகம் பண்ணியேச்சு. அதுல விடுபட்ட பேர்லாம் கரெக்ட்டா இருக்கு”ன்னு சமாளிச்சிருக்காங்க. ஆனாலும் ஊரு விட்டு ஊரு மாறின (மாநிலத்துக்குள்ளாவே) சில ஆளுங்களோட பேரு பழைய ஊருல இருக்கற பட்டியல்ல மட்டும் இருக்கறதால அங்கிட்டுப் போகச் சொல்லி திருப்பியனுப்பிருக்காங்க. இது தவிர பத்து வருசமா வெளிநாட்டுல இருக்கற சில அமெரிக்கர்களோட பேரும் பட்டியல்ல விடுபட்டிருக்கு – அவங்கள்ல சிலர் திரும்பிப் போயிருக்காங்க. அவங்களுக்கும் ஐடி காட்டி விண்ணப்பத்துல கையெழுத்து போட்டு ஓட்டுப் போட விட்டதாத் தகவல். 100% அப்பழுக்கில்லாம எங்கியும் தேர்தல் நடக்க முடியுமான்னு தெரியலை. வடகிழக்குல பெரிய அளவுப் பிரச்சினைகள் எதுவும் இதுவரை இல்லைன்னுதான் சொல்லணும்!

 4. பேசாம ‘absentee ballot’ போடுவதுதான் சரி!

  நிச்சயமாக வாக்களிக்கலாம். பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.