விஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி


விஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெறுவார் என சி.என்.என் அறிவித்துள்ளது. தற்பொழுது ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் ஒபாமா முன்னிலையில் உள்ளார். இந்த மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெற்றால் அவர் பெறும் 9வது தொடர் வெற்றியாகும்.

இது ஹில்லரி கிளிண்டன் நிச்சயம் தோல்வி அடையக்கூடும் என்பதன் திட்டவட்டமான அறிகுறியாகவே தெரிகிறது. காரணம் ஹில்லரி கிளிண்டனுக்கு சாதகமான வாக்களார்கள் அதிகம் கொண்ட மாநிலமாக விஸ்கான்சின் கருதப்பட்டது.

விஸ்கான்சின் தோல்வி அடுத்து வரும் டெக்சாஸ், ஓகாயோ போன்ற மாநிலங்கள் ஹில்லரிக்கு வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றி ஒபாமா தான் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் என்பதை ஏறத்தாழ உறுதிப்படுத்துகிறது.

குடியரசுக் கட்சியின் சார்பாக விஸ்கான்சின் மாநிலத்தில் மெக்கெய்ன் வெற்றி பெறுவார் என சி.என்.என் அறிவித்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு…

7 responses to “விஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி

  1. மண்ணைக் கவ்வினார் என்றுதான் சித்தரிக்கிறார்கள்! கிட்டத்தட்ட 20 புள்ளி வித்தியாத்தில் தோற்றிருக்கிறார்.

    ஆனால், விஸ்கான்சின் மற்றும் ஹவாய் – ஆகிய இரண்டுமே அவருக்கு கிடைக்காது என்பதை ‘பெரிய செவ்வாய்’ அன்றே கணித்திருந்தார்கள்.

    எனினும், ரூடி ஜியூலியானி போல் கோதாவில் குதிக்காவிட்டால், மொத்தமாக ஒதுக்கப்படுவோம் என்று அஞ்சி, விஸ்கான்சினில் ஒபாமாவை கடுமையாகத் தாக்கினார்; நிறைய விளம்பரம் செலவழித்தார்; குடியரசு மெகியினுக்கு பேச பாயின்ட் எடுத்துக் கொடுத்தார். மகள் செல்ஸியை வைத்து யுவாக்களை வாக்களிக்கக் கோரினார்.

    ‘விடியும் வரை காத்திரு’ என்கிறார்கள் ஹில்லாரி பிரச்சாரக் கமிட்டி. நாளைக்கு ‘திட்ட வரைவு கூட்டத்தில்’ புதிய அம்புகள் காத்திருக்கின்ரனவாம்.

    வருமான வரியை எப்பொழுது பப்ளிக்காக்கப் போகிறார்கள் என்பதுதான் தெரியல 😉

  2. ஹி.. ஹி.. பாவம் திருமதி. கிளின்டன். என்ன நடக்குது என்று பார்ப்போம்!

  3. இன்னமும் ஜனநாயக கட்சி கூட்டம் இருக்கிறது. அங்கே எதுவும் நடக்கலாம். ஹிலரியோ இல்லை ஓபாமாவொ என்றில்லாமால் யார் வேட்பாளரானால் ஜனநாயக கட்சி வெற்றி பெரும் என்பது கொண்டே தீர்மானிக்கப்படும். பதவிகளுக்கான வாக்குறுதிகள், சிறையில் வாழும் (மேலும் விசாரணை நடந்து கட்சியின் ஊழல் வெளியே போகாமல், மற்றவர்களுக்காக பழியை ஒப்புக்கொண்டு) சில தலைவர்களுக்காக தந்த வாக்குறுதிகள், பணம் திரட்ட பேரம் பேசிய சில நிறுவனங்கள், இன்னமும் பல நிர்ணயிக்க கூடிய சங்கதிகள் உண்டு.

  4. ஹிலரியோ இல்லை ஓபாமாவொ என்றில்லாமால் யார் வேட்பாளரானால் ஜனநாயக கட்சி வெற்றி பெரும் என்பது கொண்டே தீர்மானிக்கப்படும்

    ****

    ஆம். அப்படி பார்த்தால் ஹில்லரி வீட்டிற்கு போக வேண்டியதும், ஒபாமா ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆக வேண்டியதும் அவசியமாகிறது 🙂

    டெக்சாஸ், ஒகாயோ ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஒபாமா வெற்றி பெறும் பட்சத்தில் வெற்றியை தீர்மானிக்க கூடிய சூப்பர் டெலிகேட்ஸ் ஒபாமா பக்கம் சாயக்கூடும்.

    டெக்சாஸ், ஒகாயோ இரண்டும் தங்கள் தோல்விகளை தடுக்க கூடிய Firewall என்கின்றனர் ஹில்லரி அணியினர்…

    பார்க்கலாம்…

  5. விச்கான்சின் வெற்றி ஓபாமாவிர்கு மிகப்பெரிய தொழிற்சங்கத்தின் ஆதரவை பெற்றுத் தந்திருக்கிறது. அது இன்று ஓபாமாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. போகிறபோக்கை பார்த்தால் ஓபாமாவிற்கு வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிரது. ஹிலரி வீட்டுக்கு போக கூடியவரா என்ன? :)அப்படியே ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பொருளாதாரம் (கோர்சனிக்காம் வதந்திகள்) இல்லை என்றால் உடல் நல கமிஷன் இருக்கவே இருக்கிறது. பார்க்கலாம்.

  6. இப்போது உள்ள நிலவரப்படி டெக்ஸாஸிலும் ஓபாமா காற்று வீச ஆரம்பித்து விட்டது! கருத்துக் கணிப்புப்படி கிளிண்டனுக்கு சமமாக வந்து விட்டார்.

    இங்குள்ள (TX) மிகக் குழப்பமான Primary தேர்தல் நடைமுறைகள் ஓபாமாவுக்கே delegate count’ ல் சாதகம் என்று சொல்லுகிறார்கள். பார்க்கலாம்.

  7. —பொருளாதாரம் (கோர்சனிக்காம் வதந்திகள்) —

    இது என்ன மேட்டர்?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.