நம்ம ஊரு தேர்தல் போல எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதல்ல அமெரிக்க தேர்தல்! பல விதிமுறைகளும் “குழப்பங்களும்” நிறைந்தது.
அயோவா (Iowa)வில் ஆரம்பிக்கும் இந்த குழப்பங்கள், டிசம்பரில் Elecrol Collegeல் தான் முடியுது.
இதில் பணந்திரட்டும் சக்தி, விகிதாச்சார பிரதிநித்துவ கணக்கு, பிரதிநிதிகள்(Delegates), பெரிய பிரதிநிதிகள் (Super delegates), கட்சியின் இறுதி முடிவு (அப்ப ஓட்டு போட்ட மக்கள்..?), தேர்தல் கல்லூரி (Elecrol College)னு எவ்வளவு குழப்பனுமோ அவ்வளவு குழப்பி, குழம்பி கடைசியா புஷ் மாதிரி ஒருவரை அமெரிக்கா அதிபராய் ஆக்குவார்கள்!
‘Sliding Door’ (அதாங்க நம்ம 12B திரைப்படம்) போல — 2000ல் மக்கள் செல்வாக்கு இருந்தும் Electrol Collegeல் பெரும்பான்மை இல்லாததால் தோற்ற ஆல்கோர், ஒரு வேளை வெற்றி பெற்றிருந்தால் …………….. இவ்வளவு குழப்பங்கள் வந்திருக்குமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!!
பெரிய புதன், பெரிய வெள்ளி மாதிரி தேர்தல் நேரத்தில் “பெரிய செவ்வாய்’ பிரபலம்.
அமெரிக்கர்கள் இரண்டு முறை ஓட்டு போடுகிறார்கள்.
முதல் முறை – களத்தில் இருக்கிற நாலோ அல்லது ஆறு பேரில் யார் சிறந்த ஜனாதிபதி (இரண்டு கட்சிகளிலும் சேர்த்து) என்று,
இரண்டாவது முறை, நவம்பர் 8ம் தேதி — இறுதியாக நிற்கும் “அந்த” இரண்டு பேரில், “அடுத்த நாலு வருடத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி யாரு?”னு முடிவு பண்றாங்க.
ஆரம்பத்தில் இரண்டு கட்சிகளுலிருந்து “போற வர்வங்கலாம்” – மொத்தம் 8 பேர்(!) களத்தில் இறங்க…
குடியரசுக் கட்சியிலிருந்து (சின்னம்:யானை & நிறம்:சிகப்பு) – ஜான் மெக்கெய்ன், மைக் ஹக்கபி, ரான் பால், ஆலன் கீஸ், மிட் ராம்னி, ரூடி ஜியூலியானி, ஃப்ரெட் தாம்ஸன், டன்கன் ஹண்டர்
ஜனநாயக கட்சியிலிருந்து (சின்னம்:கழுதை & நிறம்:ஊதா ) – பாரக் ஒபாமா, ஹிலரி கிளிண்டன், ஜான் எட்வர்ட்ஸ், மைக் கிரவல்,டெனிஸ் குசினிச், பில் ரிச்சர்ட்சன், கிரிஸ் டாட், ஜோ பிடன்.
ஜனநாயக கட்சியில் எளிதாக கணிக்க முடிந்தது…. பாரக் ஒபாமா அல்லது ஹிலரி கிளிண்டன் என்று..
ஆனால் குடியரசுக் கட்சியில் யார் வருவார்கள் என்பது அவ்வளவு எளிதாக சொல்ல முடியவில்லை (என்னைப் பொறுத்த அளவிலாவது…!!)
ஆனால் இப்பொழுது குடியரசுக் கட்சியிலிருந்து ஜான் மெக்கெய்ன் என்று கிட்டதட்ட முடிவாகி விட்டது.
ஜனநாயக கட்சியில்தான் கடும் போட்டியா இருக்கு…
போன செவ்வாய் கிழமை (பிப்ரவரி 7, 2008) வரை ஹிலரி கிளிண்டன் 1045* பிரதிநிதிகளுடன் முன்னிலை இருக்க [பாரக் ஒபாமா 960* ]… { * — பெரிய பிரதிநிதிகளையும் சேர்த்து }
இந்த வாரம் (பிப்ரவரி 15, 2008), 1253 பிரதிநிதிகளுடன் பாரக் ஒபாமா முன்னிலையில் இருக்கிறார். [ஹிலரி கிளிண்டன் 1211….]
அடுத்த முக்கிய செவ்வாய், மார்ச் 4, 2008! பார்க்கலாம் — ஹிலரியா ஓபாமானு??











அட்டா! இம்புட்டு குளப்பமா இருக்குமா அமெரிக்கத் தேர்தல்! 😉
—தோற்ற ஆல்கோர், ஒரு வேளை வெற்றி பெற்றிருந்தால் …………….. இவ்வளவு குழப்பங்கள் வந்திருக்குமா—
இன்னும் கொஞ்சம் பின்னோக்கி சென்று இத்தனைக்கும் காரணம் மைக்கேல் டுகாகீஸ்தான் என்று சொல்லிவிடலாம் 😀 அப்பா புஷ்ஷை அவர்தானே ஜெயிக்க விட்டார்!
இந்தப் படத்தை பார்த்திருக்கீங்க இல்லியா… 100 Photographs that Changed the World by Life – The Digital Journalist
—ஆனால் குடியரசுக் கட்சியில் யார் வருவார்கள் என்பது அவ்வளவு எளிதாக சொல்ல முடியவில்லை—
ஆமாம். ஜியூலியானி, ராம்னி ஆகிய இருவருமே இன்னும் நீடித்து இருப்பார்கள் போல தென்பட்டது.
அந்தப் பக்கமும் ஆல் கோர் வருவாரா மாட்டாரா என்பதும் ‘இரண்டு வருட அனுபவமேயுள்ள ஒபாமாவாது… பழந்தின்று கொட்டை போட்டு அந்தக் கொட்டையும் மரமாகி வளர்ந்துள்ள ஹில்லரிக்கு ஈடு கொடுப்பதாவது…!’ என்று பேசிக் கொண்டார்கள்!
காலம் மாறிப் போச்சு 😉
//இன்னும் கொஞ்சம் பின்னோக்கி சென்று இத்தனைக்கும் காரணம் மைக்கேல் டுகாகீஸ்தான் என்று சொல்லிவிடலாம் //
🙂
ஆனா பாருங்க …Mayooresan!
போஸ்டர்கள் ஒட்டாமல்…
இமாலய கட்-அவுட் வைக்காமல் ….
மாநாடு நடத்தாமல் அதுவும் தின வாழ்க்கைய பாதிக்காம..
அலங்கார விளக்குகள் இல்லாம…
பெரிய பந்தல் போடமா…
பேச்சில் வெட்டி முழக்கங்கள் இல்லாமல் …
‘உடன் பிறப்பே, இரத்ததின் இரத்தமே’ என்று உணர்ச்சிவசபடாமல் …
இலவசங்கள் அறிவிக்காமல்…
“‘ரீகன் ஆட்சி அமைப்போம்…. கென்னடி ஆட்சி அமைப்போம்” என்று கூக்குரல் இல்லாமல்…
நடிக நடிகைகளை பிரச்சாரத்திற்கு அழைக்காமல்….
இப்படி ஏகப்பட்ட ஆச்சரியங்களும், ‘நம்பவே முடியாத’ நிகழ்வுகளும் உண்டு…
—‘ரீகன் ஆட்சி அமைப்போம்…. கென்னடி ஆட்சி அமைப்போம்’ என்று கூக்குரல் இல்லாமல்…—
Senator, you're no Jack Kennedy என்று போட்டுத் தாக்குவதால் இருக்கலாம் 😉
இருந்தாலும், ஆங்காங்கே ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டுதானே இருக்கிறார்கள்!?
புஷ்ஷின் ஆட்சியைத் தொடர்வேன் என்கிறார் மெகெயின்
கரோலின் கென்னடியையும் துணைக்கழைத்துக் கொண்டு ‘நவீன் ஜே எஃப் கே’வாக ஒபாமா சித்தரிக்கப்பட வைத்துக் கொள்கிறார்.
[quote]போஸ்டர்கள் ஒட்டாமல்…
இமாலய கட்-அவுட் வைக்காமல் ….
மாநாடு நடத்தாமல் அதுவும் தின வாழ்க்கைய பாதிக்காம..
அலங்கார விளக்குகள் இல்லாம…
பெரிய பந்தல் போடமா…
பேச்சில் வெட்டி முழக்கங்கள் இல்லாமல் …
‘உடன் பிறப்பே, இரத்ததின் இரத்தமே’ என்று உணர்ச்சிவசபடாமல் …
இலவசங்கள் அறிவிக்காமல்…
“‘ரீகன் ஆட்சி அமைப்போம்…. கென்னடி ஆட்சி அமைப்போம்” என்று கூக்குரல் இல்லாமல்…
நடிக நடிகைகளை பிரச்சாரத்திற்கு அழைக்காமல்….
[/quote]
இத்தனையும் இருந்தும்.. எப்படியோ மன்மோகன் சிங்கைப் போல் ஒரு பொருளாதார வல்லுனரை தலைமைப் பொறுப்புக்கு அமர்த்தியிருக்கிறோம்.
அமெரிக்கர்களோ, ‘முட்டாள்களான’ புஷ், மெக்கெய்ன் போன்றோர்களுக்கு பதவிகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் நிச்சயமாக ‘காலரைத்’ தூக்கிகொள்ளலாம்.
பாலா,
நம்ம ஊருல ‘காமராஜ் ஆட்சி அமைப்போம்’னு சரத்குமார் கட்சி ஆரம்பிக்கிறார்ல அந்த மாதிரி கேவலமா போகலையே……
//இத்தனையும் இருந்தும்.. எப்படியோ மன்மோகன் சிங்கைப் போல் ஒரு பொருளாதார வல்லுனரை தலைமைப் பொறுப்புக்கு அமர்த்தியிருக்கிறோம்.
அமெரிக்கர்களோ, ‘முட்டாள்களான’ புஷ், மெக்கெய்ன் போன்றோர்களுக்கு பதவிகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் நிச்சயமாக ‘காலரைத்’ தூக்கிகொள்ளலாம்.
//
சரண், ‘காலரை’ தூக்கி விட்டுக்கலாம்கிறிங்க….!!
ஆனா…
ஒரு பொருளாதார வல்லுநரையையும் எப்படி ‘உருப்படி இல்லாம’ பண்ணி வைச்சிருக்காங்க… வைச்சிருக்கோம்னு நினைச்சாதான் நம்ம (அரசியல்) மேலேயே ‘கொஞ்சம்’ கோபம் வருது….