மெக்கெய்னுக்கு ராம்னி ஆதரவு


சற்று முன் வந்த செய்திகளின்படி பிரச்சார களத்தில் பரம விரோதிகள் போல நடந்துகொண்ட மிட் ராம்னியும், ஜான் மெக்கெயினும் கூட்டாளிகளாக இருக்கிறார்கள். விரைவில் மிட் ராம்னி மெக்கெயினுக்கு தன் ஆதரவை அறிவிப்பார் எனத் தெரிகிறது.

தேர்தல் களத்திலிருந்து விலகுமுன் மிட் ராம்னி 166 (286 என CNN சொல்கிறது) பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றிருந்தார்.

தற்போது மெக்கெயின் ஆதரவு பிரதிநிதிகள் எண்ணிக்கை 815. ராம்னியின் 166 சேர்த்தால் மொத்தம் தேவையான 1191க்கு மிக அருகில் வந்துவிடுவார்.

மிட் ராம்னியின் இந்த ஆதரவு குடியரசுக் கட்சியின் தீவிர பாரம்பரியவாதிகள்(Consertvatives) மத்தியில் ஜான் மெக்கெயினுக்கு ஆதரவைப் பெற்றுத்தரலாம்.

மிட் ராம்னியின் மெக் கெயின் ஆதரவு அவருக்கு துணை அதிபர் சீட்டுக்கு வழி வகுக்கலாம். ஏற்கனவே ஆட்டத்திலிருந்து விலகிய ரூடி ஜூலியானி, ஃப்ரெட் தாம்சன் ஆகியோர் மெக்கெயினுக்கு ஆதரவளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Romney To Endorse McCain – CBS

Romney backs McCain – CNN

One response to “மெக்கெய்னுக்கு ராம்னி ஆதரவு

  1. உப ஜனாதிபதியாக போட்டியிட எல்லோரும் துண்டு போட்டு வச்சிக்கிறாங்க போல 😛

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.