மேரிலான்ட், வெர்ஜீனியா, டிசி: ஒபாமா & மெகெயின் வெற்றி


அமெரிக்காவில் இன்று நடந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பாக ஜான் மெக்கெயினும், ஜனநாயகக் கட்சி சார்பாக பராக் ஒபாமாவும் வென்றனர்.

ஒபாமா கடந்த எட்டு மாகாணங்களைத் தொடர்ச்சியாக வென்றதன் மூலம் பெரும்பான்மை பிரதிநிதிகளை ஹில்லரி க்ளின்டனிடமிருந்து கைப்பற்றியிருக்கிறார். எனினும் மார்ச் 4 நடக்கும் அடுத்த கட்ட ப்ரைமரிகளில் ஹில்லாரி தலைதூக்கினால் மீண்டும் முன்னிலை பெறமுடியும்.

அடுத்த செவ்வாய் அன்று, இரண்டு மாகாணங்கள் – விஸ்கான்சினும் ஹவாயும் வாக்களிக்க இருக்கிறது.

மார்ச் நான்கு வாக்குப்பதிவு நடக்க இருக்கும் டெக்சாஸில், இன்று நடந்த மேரிலாந்து மாகாணம் போலவே – பெருமளவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் இருப்பதும் அவர்களில் பெரும்பானமையோர் ஒபாமாவுக்கு வாக்களிப்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்துப் போட்டிகளிலும் வென்றதன் மூலம் மெகெயின் பலமடைந்திருந்தாலும், வெர்ஜீனியாவில் இழுபறியாக ஊசலாடி நூலிழையில் மைக் ஹக்கபீயை தோற்கடித்திருக்கிறார். எவாஞ்சலிகல் கிறித்துவர்களின் வாக்கையும், குடியரசு கட்சியின் பாரம்பரிய (பழமைவாத) வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறவும் மேலும் முயற்சியெடுக்க வேண்டும் என்று நோக்கர்கள் அபிப்ராயம் தெரிவித்துள்ளார்கள்.

2 responses to “மேரிலான்ட், வெர்ஜீனியா, டிசி: ஒபாமா & மெகெயின் வெற்றி

  1. Winning hands down என்பது மெக்கெய்னுக்கு மிகப் பொருந்துகிறது; அவரால்தான் கைகளை மேலே உயர்த்த முடியாதே!

  2. ஓ! வியட்நாம் போரின் பங்குபெற்றதால் இவ்வாறு ஆனதா?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.