பாஸ்டன் ஸ்கர்ட் – டிசம்பர் முகப்பு பக்கம்

பாஸ்டன் ஸ்கர்ட் – டிசம்பர் முகப்பு பக்கம்

பள்ளிபுரத் ஜோசப் ஏழு மலை கடந்து இரண்டு கடல்களைக் கடந்து கஷ்டப்பட்டு இந்தியா சென்றடைந்து மனைவியைக் கண்டுபிடித்தார். மூன்று மாத காலமாக மனைவியை வாட்டியெடுத்து நரகத்தில் தள்ளினார். சாய்ந்து கொள்வதற்கு மாமியாரும் இல்லாத வீட்டில் இருந்து, இவரின் கொடுமையில் இருந்து தப்பியோடி நியுஜெர்சியில் தஞ்சம் புகுந்தார் மனைவி ரேஷ்மா.
இந்தியா சென்று இல்லத்தரசியைக் கண்டுபிடித்தது போல் மீன்டும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து அதே மனைவியை சுட்டுத் தள்ளியும்விட்டார்.
ஜோஜப்பை விட்டுப் பிரிந்த ரேஷ்மா ஜேம்ஸ் நியு ஜெர்சியில் இருக்கும் கசினுடன் ஒதுங்கி வாழ்ந்து வந்தார். கலிபோர்னியாவின் சாக்ரமென்டோவில் கிளம்பிய ஜோசப், நியூ ஜெர்சியின் க்ளிஃப்டனில் ஞாயிறு காலை தேவாலயத்திற்கு வந்த மனைவியை அடையாளம் கண்டுகொண்டு நெற்றிப் பொட்டில் சுட்டுத் தள்ளினார்.
பக்கத்தில் இருந்த சிலருக்கும் குறிதவறி குண்டு பாய்ந்துள்ளது.ரேஷ்மாவின் கசின் சில்வி பெரிஞ்செரிலுக்கும் பலத்த காயம். ரேஷ்மாவைக் காப்பாற்ற முனைந்த இருபத்தாறு வயது கூட நிரம்பாத மலோசெரிலும் மரணமடைந்தார்.
ஜியார்ஜியாவுக்கு தப்பியோடிய ஜோசப்பை உறவினர்களின் வீட்டில் வைத்து பிடித்துவிட்டார்கள்.
1. The Associated Press: NJ church killings shake up close-knit community: “The shootings at the St. Thomas Syrian Orthodox Knanaya Church in Clifton have reverberated throughout the Knanaya faith, a close-knit Christian minority in India”
2. Authorities nab California man accused of fatally shooting estranged wife, another man in Clifton, N.J., church – Lehigh Valley News, Easton News, Nazareth News, Bethlehem News, Phillipsburg: “Pallipurath, of Sacramento, is suspected of shooting and killing 24-year-old Reshma James, and Dennis John Mallosseril inside the St. Thomas Syrian Orthodox Knanaya Church in Clifton”
3. Kaduthuruthy shocked: “Reshma, the only daughter of James and Mercy, had got married on August 25, 2007, to Joseph Sanish Pallipurath, 27, son of Pallipurathu Mathew from Nilambur”
ஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்?
61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.
இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா? ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்:
தொடர்புள்ள பதிவு: Kamala Harris, an early Barack Obama backer, is beginning her ascent | Top of the Ticket | Los Angeles Times
ஹில்லரி/பில் க்ளின்டனின் மகள் செல்ஸீ கிளிண்டன், தற்போதைய அரசின் செயலர் காண்டலீஸா ரைஸ், துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின், ஈபேயின் தலைவர் மெக் விட்மன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சமீபத்தில் செனேட்டரான கே ஹேகன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவரும் பந்தயத்தில் உள்ளதாக எண்ணலாம்.
நன்றி: மே 18 நியு யார்க் டைம்ஸ் கட்டுரை: Step Right Up – Who Will Be Hillary Clinton’s Successor? – NYTimes.com
சாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்:
சாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்:
Jean-Honore Fragonard: The Swing
This picture became an immediate success, not merely for its technical excellence, but for the scandal behind it. The young nobleman is not only getting an interesting view up the lady’s skirt, but she is being pushed into this position by her priest-lover, shown in the rear.
நன்றி: ஃபிலி.காம்
சென்ற பதிவின் தொடர்ச்சி
2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி
நிச்சயம் இல்லை.
ஏதேனும் ஒரு பெண் வேட்பாளர் இருக்க கூடிய சாத்தியம் மட்டுமே இருக்க முடியும். சாராவிற்கு கிடைத்தது எதிர்பார்க்காத பரிசு, ஹிலரியின் ஆதரவு வாங்குகளை பெற மெக்கெயின் போட்ட ஒரு கணக்கு.
இங்கே அரசுத்துறையில் பெண் அதிபர்கள் வருவது இன்னமும் பரவல் ஆகவில்லை. அப்படி ஆகும் என்றும் எனக்கு தோன்றவில்லை. என்னை பொருத்தவரை அதிபராக நிர்வாக திறமைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் அல்லாது genderக்கு அல்ல.
எனக்கு சாராபேலின் பல கொள்கைகள் உடன்பாடில்லை, பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவரை ஆதரிக்க முடியாது.
3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?
தற்போதைய ஆட்சியை அதிகம் குறை சொல்லாமல் அதிலும் சமீபத்திய பொருளாதார சரிவுக்கிடையில் சமாளிக்கும் முதிர்ச்சி. முட்டை ஓட்டின் மேல் நடப்பது போன்ற கவனத்துடன் கையாளும் நகைச்சுவை கூடிய பிரச்சாரம்.
4. உதட்டுச்சாயம், பன்றி மொழியைப் பரவலாக இரு ஆண் ஜனாதிபதி வேட்பாளரும் பயன்படுத்துகிறார்களே. சாரா பேலினையும் ஹில்லரி க்ளின்டனையும் இவர்கள் குறிப்பிடவில்லை என்றாலும் லிப்ஸ்டிக் தவிர வேறு பொருத்தமான அடைமொழி பயன்படுத்தி இருக்கலாமோ? முகஞ்சுளிக்க வைக்கிறதா? வேறு பேச்சுகள் ஏதாவது அதிர்ச்சி அடைய வைத்ததா?
அரசியல் என்றில்லை, பொதுவாகவே அலுவலகங்களில் கூட சில சமயங்களில் (குறிப்பாக பெண்கள் தலை பொறுப்பேற்கும்) இது போன்ற பிரயோகங்கள் சகஜமாக பயன்படுத்தப்படுகின்றன. முன்போல அல்லாமல், பெண்களும் பேசக்கேட்பது சகஜம், இங்கே (நியுஜெர்சி) நகரசபை கூட்டங்களில் சில சமயங்களில் இன்னமும் கேவலமாக பேசுவது மட்டும் இல்லாமல்,கைகலப்பில் எல்லாம் முடிந்திருக்கிறது.
ஆகக்கூடி பொதுவாழ்க்கை வருபவர்கள் ஆணானாலும் பெண்னானாலும் தடித்த தோலுடனான வாழ்க்கைக்கு பழகிக்கொள்ளத்தான் வேண்டும். இதில் முகம் சுளிக்க வைக்கவோ சினம் கொள்லவோ எதுவும் இல்லை. When you know it’s a pissing match, be ready with an umbrella is a common phrase!!
5. அடுத்த அதிபருக்கு நீங்கதான் ஆலோசகர். என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?
தொடரும்…
5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?
பொதுவில் தனிநபர் வாழ்க்கையையும் அரசியலையும் இணைப்பது எனக்கு ஒவ்வாத விஷயம். ஆனால் தனிநபர் நேர்மையையும் நம்பத்தன்மையையும் மாத்திரமே முன்னிருத்தி அரசியல் நடத்திய ஒருவர் நடைமுறையில் அதற்கு எதிராக நடந்து கொண்டால் அவரது நம்பகத் தன்மை முற்றாக இழந்துபோகிறது.
அந்த வகையில் ஜான் எட்வர்ட் மீதான என் மதிப்பு பெருமளவிற்குச் சரிந்திருக்கிறது. ஆனால் இதற்காக அவரை முற்றாக குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று நான் கூச்சலிடமாட்டேன்.
அந்தத் தவறில் சிக்கியிருக்காவிட்டால் அமெரிக்காவின் உன்னதமான அதிபர்களில் ஒருவராக கிளிண்டன் நிச்சயமாக கோபுரமேறியிருப்பார். தவறுக்கு வெளியேயாக அவருடைய சாதனைகள் அபாரமானவை. எனவேதான் ஜனநாயகக் கட்சியினர் அவருக்குக்
கட்டுப்பட்டிருக்கிறார்கள். தவறிலிருந்து மீண்டெழும் உரிமையை கிளிண்டன் வேண்டிப் பெற்றார்; அதை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். எனவேதான் அது அவருடைய ஒட்டு மொத்த பிம்பத்தில் விழுந்த ஒரு புள்ளியாக மாத்திரமே நின்று போயிருக்கிறது.
மீண்டெழும் வாய்ப்பைத் தேடிப்பெறுவதிலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயிர்த்தெழுந்து வருவதிலும் ஜான் எட்வர்ட்ஸ் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்க்க வேண்டும். தவறை நேராக எதிர்கொண்டு அதற்கான சுமையைச் சுமந்துகொண்டு மேலெழுந்து வருவது முற்றாக அவர் கையில்தான் இருக்கிறது. அமெரிக்கர்கள் பொதுவில் எப்படியோ, நான் அவருக்கு அந்த உரிமையைக் கட்டாயம் மறுக்க மாட்டேன்.
ஜர்தாரி: “உங்களை நேரில் பார்க்கும்போது … பார்ப்பதைவிட அமர்க்களமாக இருக்கிறீர்கள்”
பேலின்: “உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி!”
ஜர்தாரி: “ஏன் ஒட்டுமொத்த அமெரிக்காவும் உங்க பின்னாடி மயங்கிக் கெடக்குதுன்னு இப்பத்தான் எனக்கு புரியுது”
[புகைப்படம் எடுப்பதற்காக பேலினையும் ஜர்தாரியையும் கைகுலுக்க பணிக்கிறார் பாகிஸ்தான் பிரதம மந்திரியின் உதவியாளர்]
பேலின்: “நான் மீண்டும் படத்திற்காக நிற்கணும்”
ஜர்தாரி: “அவர்கள் கேட்டுக்கொண்டால், உங்களைக் கட்டிக் கொள்வேன்”
நன்றி: Pakistan’s president gushes over Sarah Palin | Top of the Ticket | Los Angeles Times
மேலும் விவரங்களுக்கு: CNN Political Ticker: All politics, all the time Blog Archive – Pakistan’s president tells Palin she is ‘gorgeous’ « – Blogs from CNN.com: “On entering a room filled with several Pakistani officials this afternoon, Palin was immediately greeted by Sherry Rehman, the country’s Information Minister.
‘And how does one keep looking that good when one is that busy?,’
Rehman asked, drawing friendly laughter from the room when she complimented Palin.”