Tag Archives: UN

ஐ.நாவின் உடற் கழிவு வாயு

இது முதல் செய்தி: Water in Moon: India’s Chandrayaan-1 mission :: நீர் நிரம்பிய நிலவு

biopact_biogas_pipeline_UN-Indiaஇரண்டாவது: UN offsets balance CO2 emissions | Marketplace From American Public Media

உலக அதிபர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சந்திப்புக்காக நியு யார்க் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தலைவருக்கும் இரு மந்திரிகள். ஒவ்வொரு மந்திரிக்கும் நான்கு அதிகாரிகள். ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு மனைவி. ஒவ்வொரு மனைவிக்கும் இரு மெய்காப்பாளர்கள்.

Bio-gas-recycle-solar-photo-synthetic-electricity-utilityஇந்த மாதிரி கூட்டிப் பார்த்து, அதற்கான கார்பன் கழிவுகளை இந்தியாவிடம் விற்று விட்டது ஐ.நா.

லிபியாவின் அரசர் கடாஃபி மாதிரி கூடாரம் அடித்தவர்களின் சிக்கன நடவடிக்கையை எடுத்துக் கொண்டதா என்று தெரியவில்லை.

மொத்தமாக வெளியாகும் நச்சுப் பொருள் எவ்வளவு என்று கணக்குப் municipal_solid_waste_generation_for_selected_large_cities_in_asiaபோட்டார்கள். அவ்வளவுக்கும் ஈடுகட்டும் விதமாக, பயோகாஸ் முறையில் அடுப்புகள் வாங்கிக் கொடுத்து விட்டார்கள். மரங்களை வெட்டி, விறகடுப்பில் சமைக்க வேண்டாம். சிக்கனத்திற்கு சிக்கனம். புகை, கரியமில வாயு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு.

காலங்காலமாக மாட்டுச் சாணத்திலிருந்து வறட்டி, காலைக் கடனாக கழிகளை உரமாக்குவது போன்றவற்றின் பரிணாம மற்றும் அறிவியல் வளர்ச்சி.

biogas_lifecycle2025க்குள் ஒன்பது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மாபெரும் தொழில்துறையாக பயோ கேஸ் அமையும். மற்றொரு மாற்று எரிசக்தியான சூரியக்கதிர்கள் மூலம் அமைந்த மின்கலத்துறையில் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள்.

பெரும்பாலும் கிராமப்புறங்களில் இந்த வளர்ச்சி அமைந்திருக்கும். அங்கிருக்கும் மைக்ரோ க்ரெடிட் நிறுவனங்களுக்கும், அதன் மூலம் குறுங்கடன் பெறுபவர்களுக்கும் சென்றடைந்து, பெண்களுக்கும் தன்னிறைவு தரும் திட்டம்.biogasn-India-Cooking-stove-plants-alt-energy-fuel

India Together: Compact biogas plant making waves – 10 July 2006: “Biogas plants are not new, but their size, relative unwieldyness and reliance on large quantities of cattle dung have held back their potential attractiveness for the domestic cooking sector. That may change soon, thanks to the ingenuity of Dr Anand Karve. Vinita Deshmukh reports about Karve’s new award-winning compact plant.”

பாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா?

India reels over Obama’s silence

Asia Times Online :: South Asia news, business and economy from India and Pakistan: By: M.K. Bhadrakumar

India’s leaders are miffed that United States president-elect Barack Obama didn’t give them a telephone call, as he did numerous heads of state around the world — including Pakistan’s.

    அலசலில் இருந்து சில முக்கியபுள்ளி:

    • ருசியாவைப் போல் மன்மோகனும் நடந்து கொள்ளலாம். ஜெயித்தவுடன் Dmitry Medvedevஐ ஒபாமா அழைக்கவேயில்லை. பொறுத்திருந்து பார்த்த டிமிட்ரி தானே தொலைபேசியை சுழற்றி ஒபாமாவை அழைத்து வாழ்த்து சொல்லி, செய்தியையும் ஊடகங்களில் பரப்பிவிட்டார். புலம்பி சோம்பவில்லை.
    • காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனை, ஒபாமா நியமிக்கக் கூடும்.
    • பில் க்ளிண்டனைப் போலவே காஷ்மீரத்துக்கு தனி தூதுவரையோ ஆலோசகரையோ ஒபாமா வைத்துக் கொள்வதன் மூலம் ‘காஷ்மீர் சுதந்திர நாடு‘ என்னும் கொள்கைக்கு வலிமை சேர்ப்பார்.
    • சீனாவின் அதிகாரத்தை மட்டுப்படுத்த, ‘இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்‘ என்று இந்தியா பகல் கனவு காண்கிறது.
    • அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்கண்டுள்ள இந்த நேரத்தில், சீனாவின் நிதியை ஒபாமா பெரிதும் நம்பியுள்ளார்.
    • பெர்சிய வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணை வரை இந்தியாவை இராணுவ உதவிக்கு உறுதுணையாக நம்பியிருந்த ஜார்ஜ் புஷ் பதவிக்காலம் முடிந்துபோய்விட்டது.
    • அதே போல், முந்தைய குடியரசு கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஆப்கானிஸ்தானுக்குள் இந்தியா நுழையவும் அடிகோல்வதற்கான முயற்சிகளை வைத்திருந்தது.
    • இந்த மாதிரி காரணங்களினால் சீன எண்ணெய்க்குழாய் பாதிக்கப்படலாம் என்பதால் —

      • அருணாச்சல் பிரதேசத்திற்குள் சீனா அத்துமீறல்களை வைத்தது
      • இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு கம்யூனிஸ்ட்கள் முரண்டியது
    • அமெரிக்கா உடன் இந்தியா கையெழுத்திட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் கருத்து வேறுபாடு எழும். அமெரிக்காவில் கையெழுத்திட்ட புஷ் இனிமேல் இல்லை. இந்தியாவில் ஒப்புக்கொண்ட மன்மோகன்/காங்கிரஸ் பதவி இழக்கலாம். அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தை (CTBT) இந்தியா பின்பற்ற ஒபாமா விரும்புகிறார்.

    தனக்குரிய மரியாதையை அமெரிக்கா தந்து தன்னை உயர் ஸ்தானத்தில் வைக்க வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது. பாகிஸ்தானும் ஒன்றுதான்; இந்தியாவிற்கும் அதே தட்டுதான் என்று சமன்படுத்தப் பார்க்கிறார் பராக் ஒபாமா.

    இது காஷ்மீரில் பிரிவினைவாதிகள் வளரவும், இந்தியாவிற்கு கோபமும் வரவைக்கும்.


    தொடர்புள்ள செய்திகள்:

    Obama tried to speak to me: PM: “இந்தியாவை ஒபாமா ஒதுக்கவில்லை – பிரதமர்”

    அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தன்னுடன் தொலைபேசியில் பேச முயன்றதாகவும், தனது வெளிநாட்டுப் பயணம் காரணமாக பேச முடியாமல் போய்விட்டதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

    கத்தாரிலிருந்து நேற்றிரவு டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர், இந்தியாவை ஒபாமா ஒதுக்குகிறார், அதனால் தான் என்னுடன் இன்னும் பேசவில்லை என்பதெல்லாம் புரளிகள். கடந்த 8ம் தேதியே அவர் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.

    ஆனால், அந்தத் தொடர்பை மேற்கொள்ள (to establish contact) மிகச் சிறிய கால அவகாசமே இருந்தது. அதற்குள் எனது திட்டப்படி நான் ஓமன் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. தொடர்ந்து 3 நாட்களாக பயணத்திலேயே இருக்கிறேன். இதனால் தான் பேச முடியவில்லை.

    முன்னதாக காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்தால் தான் இந்தப் பிராந்தியத்தில் தீவிரவாதம் ஒழியும் என ஒபாமா கூறியுள்ள கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. இது இரு நாட்டு விவகாரம், இதில் மற்றவர்கள் தலையிட வேண்டியதில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


    என்னைப் புறக்கணித்தாரா ஒபாமா: பிரதமர் விளக்கம்

    அதிபராகத் தேர்வு பெற்ற பின்னர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உட்பட 15 நாட்டுத் தலைவர்களுடன் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    ராஜேஷ் சந்திரா: அமெரிக்காவும் அயல்நாடுகளும் – வளைகுடா நாடுகளுடனான உறவு

    முந்தைய இடுகையின் தொடர்ச்சி:

    3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?

    லெபனான், பாலஸ்தீனத்தில் அமெரிக்கா எப்போதுமே முற்றும் கோணல். இஸ்ரேல் பேச்சையும், அராஃபத்தையும் நம்பி இழந்தவை ஏராளம். ஹமாஸை தீவிரவாத இயக்கமாகவே பார்த்து அதை மேலும் வளர்த்தது இதில் அடங்கும். அராஃபத்தை விட கட்டுக்கோப்பானவர்கள் ஹமாஸ். அரசியலிலும், பாலஸ்தீனிய அகதிகள் முகாம்களில் மக்கள் தேவையைக் கவனிப்பதில் ஹமாஸ் முதலிடம்.

    அராஃபத்தும் அவருடைய ஜால்ராக்களும் பணத்தை வாங்கி தங்களை வளப்படுத்திக் கொண்டது மட்டும் மிச்சம் (இதில் மூன்றாம் உலக நாடுகளில் அராஃபத்துக்குக் கிடைத்த கதாநாயக அந்தஸ்து மிகவும் நகை முரணானது).

    இஸ்ரேலுக்கும் அராஃபத்தை அமெரிக்கா ஆதரிப்பது வசதியாக இருந்தது. விலைப் போகக் கூடியவர். ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பது இந்த வகையில் சாத்தியமாக இருந்தது.

    ஹமாஸ் தீவிரவாததிற்கு ஒன்றும் குறைந்ததில்லை. ஆனால் அவர்களை ஜனநாயகத்திற்குத் திருப்பாதது இன்றும் அமெரிக்கா மத்தியக் கிழக்கில் கொடுக்கும் விலை.

    ஹமாஸ் இலங்கை விடுதலைப் புலிகளைப் போன்றவர்கள்.

    ஹெஸ்பொல்லா என்னைப் பொறுத்தவரை எடுப்பார் கைப்பிள்ளை. இன்று இரான், நாளை சிரியா என ஆடை மாற்றிக் கொண்டிருக்கும். ஆனாலும் இஸ்ரேலை லெபனானில் மண் கவ்வ வைத்ததில் இவர்கள் பங்கு அதிகம்.

    மேற்சொன்ன இரண்டும் அமெரிக்காவைப் பற்றி நல்லதாக நினைக்கப் போவதில்லை. அதற்கு சரித்திரமே 1900-க்குப் பிறகு திருப்பி எழுதினால்தான் உண்டு. மாற்றம் கொண்டு வரவேண்டியவர்கள் மிதவாத மக்கள். சோகமான விஷயம் என்னவெனில் பொது மக்களும் அரசியல் நிலையாமையில் மிகுந்த கசப்பில் இருக்கிறார்கள்.

    மத்தியக் கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரை மக்களாட்சி என்பது அங்கே எண்ணை கிடைக்கும் வரை வராது (எண்ணெய் தீர்ந்தவுடன் அங்கே ஆட்சி செய்ய ஒன்றும் இருக்காது). Pseudo மக்களாட்சி நடக்க வாய்ப்புண்டு. ஒமான் போன்ற நாடுகள் சும்மா ஒப்புக்கு சப்பாணியாக பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதிகாரம் முழுக்க ராஜா கையில். ஆனாலும் அது ஒரு விதத்தில் நல்லதுதான். இதன் தொடர்ச்சி மேலும் மக்களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும்.

    4. இஸ்ரேல்: யூதர்களின் தேர்தல் நிதி காணிக்கை; ஊடக ஆதிக்கம்; ஆளுமை நிறைந்த பதவிகள் — இவற்றை தாண்டி மஹ்மூத் அகமதிநிஜாதுடன் அமெரிக்க அதிபர் உரையாடுவதால் மட்டும் இங்கே என்ன மாற்றம் விளைந்துவிடும்? புஷ், க்ளின்டன்கள் எவ்வாறு இந்த பிரச்சினை நாட்டை கையாண்டார்கள்?

    1979-ல் ஷா வெளியேறியதிலிருந்து அமெரிக்கா இரானை ஜென்ம விரோதியாகத்தான் பார்க்கிறது. இதில் இஸ்ரேலின் பங்கு தேவைப்படவில்லை. அகமதிநிஜாத் தன்னை ஒரு தைரியமான தலைவராகக் காட்டிக் கொள்ள தடாலடி வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

    • யூதப் படுகொலைகளை ஆராயும் மாநாடு,
    • இஸ்ரேலை ஐரோப்பாவிற்கு விரட்டுவது

    என கானல் நீர் கனவில் அரபு மக்களைத் திருப்தி படுத்தும் வரை இவரோடு அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தப் போவதில்லை.

    இவரின் ஒரு நேர்காணலை கொஞ்ச நாட்கள் முன் தொலைக் காட்சியில் காண நேர்ந்தது. அபத்தமான பதில்கள், முன்னுக்குப் பின் முரணாக பேசுவது என்று அரசியல் கோமாளியாகக் காட்சி அளித்தார்.

    ஒரு வேடிக்கை என்னவென்றால் இராக்-இரான் யுத்தத்தில் அமெரிக்காவின் ஆயுதங்கள் இஸ்ரேல் மூலமாக இரானுக்கு அனுப்பப்பட்டது. எல்லாம் சகஜம்.

    மற்ற நாடுகளை தன் வான் படையைக் கொண்டு மிரட்டும் அமெரிக்கா இதுவரை இரானுடன் மோதுவதில் பெரிதும் தயக்கம் காட்டுகிறது.

    புஷ், கிளிண்டன்களின் இரான் கொள்கை ரேகனின் அடியொற்றி எடுக்கப்பட்டவை. அதாவது சும்மா சலம்புவது, பின் இரானிடமிருந்து எண்ணையை வாங்கிக் கொள்வது.

    5. கல்வியை முன்னிறுத்தும் கத்தார், பஹ்ரைன் போன்ற மேற்கத்திய குடாநாடுகள்; நட்பு கொஞ்சமும் எண்ணெய் நிறையவும் கொண்ட சவூதி அரேபியா, குவைத் போன்றவர்கள்; முதலாளித்துவத்தை முன்னிறுத்தி வியாபாரத்தை கவனிக்கும் அமீரகம் – அடுத்த அமெரிக்கா இங்கே ஒளிந்திருக்கிறதா? அல்லது USSR பதுங்கி இருக்கிறதா? இரண்டும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஆனால் பன்மடங்கு பலம் வாய்ந்த புலி நித்திரை கலைக்குமா?

    கல்வியை முன்னிறுத்தினாலும் மக்களின் சமூக வாழ்க்கை முன்னேறியுள்ளதா என்பது கேள்விக்குறியே. உதாரணமாக எனக்குத் தெரிந்தவரை, பெண்கள் அங்கே தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் இருக்கிறது. நகரங்கள் முன்னேறிய முகம் காட்டினாலும் சிறு கிராமங்களை இந்த வளர்ச்சிகள் அடைகின்றதா என்பதே சந்தேகம்.

    நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் ஏற்கெனவே OPEC மூலமாக இனந்திருக்கின்றன. ஆனால் ஒன்றியமாக இணைய அனவரையும் கவர்ந்த ஒரு தலைவர் வேண்டும் (நாசர் போல). ஆனால் இந்த குறு மன்னர்கள் அதை யோசிக்கவில்லை. தேவையும் இல்லை என நினக்கிறார்கள். எண்ணை, மதம் இவர்களை இணைத்தாலும் மத உட்பிரிவுகளை (ஷியா, சுன்னி மற்றும் வஹாபி) இவர்களால் வெல்ல முடியவில்லை (வெல்ல வேண்டுமா என்பது வேறு). அது நடக்கும் வரை ஒன்றினைந்த மாகாணங்களாக ஆக இயலாது.

    அமெரிக்கா என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

    பொருளாதாரம்? நிச்சயமாக இல்லை. முன்பே சொன்னது போல் எண்ணை இல்லையெனில் பொருளாதாரம் இல்லை.

    படைபலம்? இல்லை. இயற்கை வளம்? கேள்விக் குறிதான்.

    அரசியல் பலம்? குரான் வழி ஆட்சி நடப்பதால் இவைகள் இணைய வாய்ப்பு உண்டு. ஆனால் அரசியல் முதிர்ச்சி அடைய மத வழி அரசியல் மட்டும் போதாது.

    பி.கு.: ஒரு கேள்வி தோன்றியது…ஏன் மேற்கத்திய ஊடகங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளை இன்னும் அலாவிதீன், அலிபாபா காலத்திலேயே பார்க்கின்றன என்று…பின் யோசித்ததில் அந்தக் கோணத்தில் படிக்க வேண்டியது நிறைய, இந்த வலைப் பக்கத்திற்கு பொருந்தாது மற்றும் அது சக நண்பர்களோடு விவாதிக்கப் பட வேண்டிய ஒன்று.

    ராஜேஷ் சந்திரா