சேலையைப் போட்டு எவர்சில்வர் பாத்திரம் கொடுத்தது அந்தக் காலம். மின் பொருளை மறு சுழற்சி செய்து நோட்டு எண்ணுவது இந்தக்காலம். உங்களின் தொழில்நுட்ப சாதனங்களை தள்ளுபடியாக விற்க, வாங்க:
- The average lifespan of computers in developed countries has dropped from six years in 1997 to just two years in 2005.
- Mobile phones have a lifecycle of less than two years in developed countries.
- 183 million computers were sold worldwide in 2004 – 11.6 percent more than in 2003.
- 674 million mobile phones were sold worldwide in 2004 – 30 percent more than in 2003.
- By 2010, there will be 716 million new computers in use. There will be 178 million new computer users in China, 80 million new users in India.
- உங்களின் வெள்ளித்திரை மானிட்டர், மடிக்கணினி, வீ/ப்ளேஸ்டேஷன்/எக்ஸ் பாக்ஸ் போன்ற விளையாட்டுப் பெட்டி, கேமிரா, ப்ரின்டர், எம்பி3 ப்ளேயர், ஐபாட், செல்பேசி என்று சகலத்தையும் மறுசுழற்சி செய்து, அதற்கான பணமும் தருகிறார்.
- பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு தானமாகவும் அளித்துவிடும் வாய்ப்பும் அளிக்கிறார்.
- 45 நாளுக்குள் எல்லா பணமும் பைசல் செய்யப்பட்டு பரிமாற்ற பட்டுவாடாவும் முடிந்துவிடும்.
2. Flipswap » Get Paid for Recycling Your Phone
- வருடத்திற்கு வருடம் செல் போன் மாற்றும் ஆசாமியா? அல்லது மாதத்திற்கு மாதம் புது டெக்னாலாஜி வாங்கிப் பழசு மக்கிப் போகிறதா? பழசை இவர்களிடம் அனுப்பினால் கைமேல் காசு கிடைக்கும்.
- அனுப்பிய பொருளை ரிப்பேர் செய்வார்; பழுது பார்த்தபின் ஓடத்துவங்கி விட்டால் அதை பயன்படுத்த விழைவோரிடம் விற்றுவிடுவார்.
- செப்பனிட முடியவில்லை என்றால் சுற்றுச்சூழலை மாசு படுத்தாத நிலையில் ரிசைக்கிள் ஆகி விடும்.

3. Buy and Sell Electronics, Sell Cell Phone, Recycle Electronics – gazelle.com
- சராசரியாக 115 அமெரிக்க டாலர்கள் உங்களின் பழைய தட்டுமுட்டு சமாச்சாரத்திற்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?
- வஸ்துவை நீங்கள் தபாலில் அனுப்புவதற்கான உறை முதற்கொண்டு அனுப்பி வைப்பார். தபால் தலை, கொடுக்கல்/வாங்கலில் நசுங்குதல் என்றெல்லாம் கவலைப்படவே தேவையில்லை.
- விசா தவணை அட்டையாக கொடுக்கிறார்.






















Why blogs should not be just Email Subscription Letters?
தொடர்பான பதிவுகள், விளக்கங்கள்:
1. நேசமுடன் » கொஞ்சம் விளக்கம்; கொஞ்சம் அறிமுகம் ~ மடல் இதழ்
2. IdlyVadai – இட்லிவடை: மீண்டும் நேசமுடன் மடல் இதழ்
பத்து போட்டுவிடலாமா?
அ) மின்னஞ்சல் எல்லாம் செம பழைய நாகரிகம். (ஓல்ட் ஃபேஷண்ட்) சொல்லப் போனால் சொந்த விஷயமற்றதை மின்மடலில் வாராவரம் அனுப்புவது நாகரிகமற்றது. (ஃபேசன்லெஸ்)
ஆ) ‘மின்னஞ்சல் மூலம் பெற’ என்னும் வசதியை வோர்ட்ப்ரெஸ் பதிவில் இணைப்பது வெகு சுலபம். ஜெயமோகன்.இன் கூட இதை செய்திருக்கிறது. விரும்புபவர்கள், இவ்வாறு செய்து கொள்ளலாம் என்று ஒற்றை மடலை (ஒரேயொரு தடவை) அறிவிப்பாக அனுப்பலாம். அப்படி ஒரு ப்ளகின் இங்கே: Subscribe2 Plugin. கூகிள் ஃபீட்ரன்னர் கூட இருக்கிறது. அதை விட்டுட்டு…
இ) என் மனைவிக்கு கூட இந்த மடல் வருகிறது. அவர் வெகு அமரிக்கையாக ‘எரிதம்‘ என்று ஒதுக்கிவிடுகிறார். நாள்டைவில் இவ்வாறு பலரும் ஸ்பாம் என்று குறியிடுவதன் மூலம், வெங்கடேஷ் ஐடி, தானியங்கியாக அனைவருக்குமே ‘எரிதம்’ என்று குறியிடப்பெற்று ஒதுக்கப்பட்டுவிடும். அவசர, ஆத்திரத்திற்கு கூட தொடர்பு கொள்ள முடியாமல் போய்விடும்.
உ) ஆர்.எஸ்.எஸ் செய்தியோடை நன்றாக வளர்ந்து வயசுக்கு வந்துவிட்ட காலத்தில், இந்த மாதிரி அரதப் பழசான நுட்பம் தேவைதானா?
ஊ) இந்த மின்னஞ்சலைக் கைவிடக் கூடாது என்றால் அதற்கும் உபாயம் இருக்கிறது. ஆரம்பத் தொனியிலேயே அன்னியோன்யம் கொஞ்ச வேண்டும். வேறெங்கும் (குறிப்பாக அவரின் நேசமுடன் வலையகத்தில்) கிடைக்காத சரக்காக இருக்க வேண்டும். ஹரிகிருஷ்ணன் கடிதம் போட்டதைத் தொட்டு; மாலனின் புதிய பத்திரிகையில் வந்த பின் குறிப்புகளின் சுவையான விரிவாக்கம்… இப்படி
எ) அவருக்கு பிறர் அனுப்புமகின்ற பதில்கள், இணையத்தளத்தில் மட்டும்தான் கிடைக்கிறது. அதுவும் ஏன் பார்சல் செய்யப்படுவதில்லை?
ஏ) மின்னஞ்சல் என்றால் சட்டுபுட்டென்று சங்கதிக்கு வர வேண்டும். மூன்று பத்திக் கட்டுரைகளை ஆசுவாசமாக வாசிக்க இயலாது. கடைசியாக எண்ணியதில் ஜிமெயிலில் மட்டும் என்னிடம் இப்படிப்பட்ட படிக்க வேண்டிய மடல்கள்: 3425.
ஒ) நேசமுடன் வரும் வெங்கடேஷின் மடல் இன்பாக்சில் வந்தவுடன் துள்ளியெழும் ஆர்வமும், அலுவல் சந்திப்புக்கு செல்லும் ஐந்து நிமிடத்திற்குள் மேலோட்டமாகவாவது படிக்கும் உணர்வும், அதற்கு இரண்டு வரி பதிலனுப்பும் உத்வேகமும் தொடரவேண்டும் என்னும் எண்ணத்தில் மட்டுமே இந்த 10 போடப்பட்டுள்ளது.
8 பின்னூட்டங்கள்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 10, அஞ்சல், நேசமுடன், மடல், மின்னஞ்சல், வெங்கடேஷ், Blogs, Comments, Emails, Experience, feedbacks, Feeds, Letters, Mails, Nesamudan, Nesamutan, Personal, Posts, Replies, RSS, Sites, Subscribe, Subscriptions, Tamil Blogs, Vengadesh, Vengatesh, Venkadesh, Venkatesh, Web, Weblogs