ரொம்ப நாள் கழித்து ‘மச்சீ’ என்றழைக்கும் உரிமையை கல்லூரி செஷன்ஸ் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்த தோழர் அழைத்திருந்தார்.
“எந்திரன் பார்த்தாச்சாடா?”
“இனிமேல் ‘பாபா’ குறித்த பயம் போயாச்சு. அப்படியே ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’னு பல்லவி பாடும் ஷாஜி பிள்ளையாண்டர்களுக்கும் புதுசா ஒண்ணு சேர்ந்துகிடுச்சு.”
எந்திரன் பிரச்சாரங்களை பட்டியல் போட்டால்:
சன் டிவி அராஜகம்: மாறன் சகோதரர்களின் அசுர பலம்
ஐஸ்வர்யா ராஜ் சிலாகிப்பு: எப்பொழுது, எங்கே முத்தம்
சூப்பர் ஸ்டார் பன்ச்: ரோபோ நடிக்கும் அற்புதம்
ஷங்கர் அரசியல்: பெண்ணியம் முதல் காறியுமிழும் புணர்ச்சி
சுஜாதா சுட்டார்: அறிபுனை கதை அணிவகுப்பு ஜெராக்ஸ்
ரெஹ்மான் நாதம்: டமார மொழி
பெரும் பொருட்செலவு: சிறுவியாபாரிகளை நசுக்கும் பட்ஜெட்
ரசிகரடிப்பொடி மனநிலை: பா.ம.க., பாஜக + தமிழக அரசியல்
இப்படியாக தமிழிலிருந்தே தமிழுக்கு காப்பியடிக்கும் விமர்சகச் சூழலில் எந்திரமயமான பயம் தொற்றிக் கொண்டது.
சன் டிவி ரோபாட்: சீரியலுக்கு வசனம் முதல் சீரிய சிந்தனை வரை
ஐஸ்வர்யா ராஜ் எந்திரம்: நாட்டுக் கட்டை
சூப்பர் ஸ்டார் சக்கரம்: தன்னைத் தானே எறித்துக் கொள்ளும் சூரியன்
ஷங்கர் பொறி: பணம் செய்யும் மெஷின்
சுஜாதா சூத்திரம்: ஏற்கனவே தமிழ் எழுத்துலகத்தை ஆக்கிரமிக்கும் எழுத்து சுனாமி
ரெஹ்மான் கருவி: இயந்திரமே இயந்திரத்தை இயற்றும் மீட்டும்
பொருட்செலவு விறிசு: என் இனிய இயந்திராவிற்கு அடுத்து ஜீனோ
ரசிகரடிப்பொடி உபகரணம்: இது மட்டும் ரோபோ அல்ல
எந்திரம் பத்திரம். கூடிய சீக்கிரமே எந்திரக் குழந்தையும் ‘இந்தப் பாடலைப் பாடுபவர் உங்கள் எந்திரனின் வாரிசு’ என்று வெள்ளித்திரையில் வலம் வரும்.
VIDEO
சற்றே தொடர்பிருந்திருக்கக் கூடிய குரல் பதிவு: Conquering A Fear Of Robots : NPR
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது இயந்திரன் , எந்திரன் , என்பிஆர் , பட்டியல் , பத்து , பாட்காஸ்ட் , மனுசன் , மெஷின் , ரஜினி , ரேடியோ , ரோபாட் , ரோபோ , வானொலி , வில் ஸ்மித் , வில்லோ , Endhiran , Enthiran , Jada Pinkett Smith , National Public Radio , Rajini , Rajni , Recreation , Tamil script , whip my hair , willow smith