Category Archives: பொது

அரசியல் பங்களிப்பு, தமிழர் நலன்: வெளிநாடுகளில் தெற்காசியர்கள் – வெங்கட்

2. அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் கனடா அரசியலில் தெற்காசியர்கள் பெருமளவில் ஈடுபடுவதாக உணர்கிறேன். உண்மையா? இதனால் தமிழர்களின் நலன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா? அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினரின் தேர்தல் பங்களிப்பு குறித்த உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்…

உன்மைதான். தெற்காசியர்களின் பங்கேற்பு கனேடிய அரசியலில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. இதில் தாராளக் கொள்கைகளைக் கொண்ட புதிய ஜனநாயாகக் கட்சியின் பங்கை மிகவும் பாராட்டியாக வேண்டும். (தலைவர் ஜாக் லெய்ட்டனின் மனைவி சீன வம்சாவளி ஒலிவியா சௌ). அதிக அளவில் சிறுபான்மையினரை நிறுத்துவது இவர்கள்தான்.

அதற்கு அடுத்தபடியாக லிபரல்கள். பஞ்சாபியனர் அதிகம் வசிக்கும் (சொல்லப்போனால் பஞ்சாபியர் மாத்திரமே வசிக்கும்) டொராண்டோவின் வடமேற்குப் புறநகர் ப்ராம்ப்டனில் (Brampton) ரூபி பல்லா தற்பொழுதைய லிபரல் எம்.பி. அழகுப்போட்டி ஒன்றையே மூலதனமாக அரசியலில் இவர் வந்தபொழுது எனக்கு நம்பிக்கையில்லை; ஆனால் தற்பொழுது தொகுதியின் அடிப்படை நலன்களை நல்ல முறையில் பாதுகாக்கிறார். இன்னும் சில பஞ்சாபியினர் எம்.பிக்களாக இருக்கிறார்கள், (ஒண்டாரியோ, அல்பெர்ட்டா, ப்ரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்களில்). பஞ்சாபியரைப் போலவே பாக்கிஸ்தானியர், இரானிய வம்சாவளியினர் என்று சிலரும் எம்பிக்களாக இருக்கிறார்கள். சீனர்களைச் சொல்லவே வேண்டாம்.

வலதுசாரி கன்ஸர்வேட்டிவினர் பொதுவில் அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சியைப் போலத்தான் இவர்கள் கூட்டத்தில் பொற்றலை (Blond) இல்லாதவர்கள்தான் சிறுபான்மை. கறுப்பு, சீனர், இந்தியர் இவர்கள் யாராவது தென்பட்டால் அதிசயம்தான். ஆனால் சமீபத்தில் பார்க்க நன்றாக இருப்பதால் ஸ்டீபன் ஹார்ப்பரின் எல்லா போட்டோக்களிலும் பின்னால் நீல டர்பனை அணிந்த ஒரு சீக்கியரும், இடுப்புக்குக் கீழே ஒளிந்துகொண்டு ஒரு சீனரும் தென்படுகிறார்.

ப்ளாக் க்யெபெக்வாவுக்கு இந்த நாடகமாடும் தேவைகூட கிடையாது.

ஆனால் தமிழர் யாரும் இன்னும் மத்திய அரசியலில் முதலடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. இங்கிருக்கும் இந்தியத் தமிழர்களின் அதிகபட்ச சமூக நடவடிக்கை கர்நாடக சங்கீதக் கச்சேரிக்குப் போவதுதான். எனவே அவர்களை ஒதுக்கிவிடலாம்.

டொராண்டோ பெருநகர் பகுதியில் மாத்திரம் இரண்டரை லட்சம் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் எல்லா அடுக்குகளிலும் இடம்பெற்றிருக்கிறார்கள்; மருத்துவர், வழக்கறிஞர், தொடங்கி மாஃபியா வரை எல்லாமே உண்டு. ஆனால் ஜனநாயக முறை அரசியலில் இவர்கள்க்கு இன்னும் இடமில்லை. இதற்குக் காரணம் கடின உழைப்பாளிகள் பலருக்கு அரசியல் தேவையற்றதாக இருக்கிறது. அரசியலுக்கு வரும் பிற தமிழர்கள், தமிழர் நலனை மாத்திரமே முன்வைக்கிறார்கள். (அதாவது விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை). இது தொகுதியில் இருக்கும் பிற சமூகத்தினரின் ஒரு ஓட்டுகூட அவர்களுக்குக் கிடைக்காமற் செய்துவிடுகிறது.

கனேடியத் தமிழர்கள் பெரும்பாலும் உள்ளார்ந்த பார்வையையே கொண்டவர்கள், இதை உதறிவிட்டு கனேடியப் பொதுநலனை முன்னிருத்தி அதன் வாயிலாகத் தமிழர் நலனை முன்னெடுத்துச் செல்லாதவரை இவர்களுக்கு மத்திய அரசில் என்ன, உள்ளூர் மாநகராட்சித் தேர்தலில்கூட ஒரு இடமும் கிடைக்கப்போவதில்லை. பஞ்சாபியனர் இதைத் திறமையாகச் செய்கிறார்கள், பாக்கிஸ்தானியர் கூட. ஆனால் 2.5 லட்சம் தமிழர்களில் இன்னும் ஐந்து வருடங்களிலாவது உள்ளூர் நகர்மன்ற உறுப்பினராகும் வாய்ப்புகூட யாருக்கும் இல்லை என்பது வருத்தமான நிலைதான்.

அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்களிப்பைக் குறித்து என்னைவிடத் திறமையாகக் கருத்து சொல்லப் பலரும் இருக்கிறார்கள். நான் பார்த்தவரை அரசியலில் ஈடுபடும் பல இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் தங்கள் பின்புலத்தின் காரணமாகவோ, அதன் நலனுக்காகவோ இல்லை. அதையும் மீறித்தான் அவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். (Indians are not in American politics because of it, they are there despite of it.) தனிப்பட்ட நலன்கள் மாத்திரமே அவர்கள் முன்வைப்பது. பாபி ஜிந்தால் ஒருவர்தான் ஓரளவுக்கு அமெரிக்க அரசியலோடு இயைந்துபோகிறார் என்று தோன்றுகிறது.

3. டோக்யோவிலும் தாங்கள் வசித்ததுண்டு அல்லவா? ஜப்பான் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுப்பு எவ்வாறு வேறுபடுகிறது?

ஜப்பானிய அரசியல் அமெரிக்கக், கனேடிய, ஏன் இன்னும் பல ஜனநாயக முறைகளிலிருந்து வேறுபட்டது.

1950களில் அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை இரகசியமாகச் செலவிட்டு தஙகள் சித்தாந்தங்களை ஜப்பானிய மண்ணில் வேரிடச் செய்தார்கள். இதே ரீதியாக பாக்கிஸ்தான், சிலி, ஈரான் உட்பட பல நாடுகளில் அவர்கள் கொடுங்கோலர்களை வளர்ந்த்தெடுக்க ஜப்பான் கொஞ்சம் தப்பித்துக் கொண்டு ஜனநாயகத்தைப் பற்றிக் கொண்டது. 1955 தொடங்கி இன்றுவரை ஜப்பானில் (ஒரு சிறிய இடைவெளியைத் தவிர) லிபரல் டெமாக்ரடிக் என்று சொல்லப்படும் ஒரே கட்சிதான் ஆண்டுவருகிறது. இது கலவை இடது-வலது கட்சி.

தனியார் தொழில் முன்னேற்றம் போன்ற விஷயங்களில் ரிபப்ளிக்கன் கட்சியை ஒத்தது இதன் கொள்கை, ஆனால் வலுவான, எல்லாவற்றிலும் தலையிடும் மத்திய அரசு, இலவசப் படிப்பு, மருத்துவம், ஓய்வுப் பாதுகாப்பு போன்ற பல விஷயக்களில் அமெரிக்க டெமாக்ரட்களை ஒத்தவர்கள். அதைத்தவிர பொதுவில் ஜப்பானின் கலாச்சாரம் இடதுசாயும் லிபரல் கலாச்சாரம்தான், இங்கே கருக்கலைப்பு எதிர்ப்பு, வலுவான ராணுவம், எல்லோரும் துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடலாம் போன்ற சித்தாந்தங்கள் வேகாது.

ஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (ஜியூ மின்ஷுதோ) உட்கட்சி ஜனநாயகம் என்ற வகையில் மிகவும் செழிப்பாகவே இருக்கிறது. ஜியூவின் உள்ளே பல பிரிவுகள் உண்டு. இவர்களுக்குளே பூசல் மிகவும் பிரபலம். 55 தொடங்கி ஐம்பது வருடங்களில் கிட்டத்தட்ட 25 பிரதமர்கள் என்று ஆட்சி-ஆட்சிக்கலைப்பு ஆட்டங்கள் ஜப்பானில் சாதாரணம். ஆனால், ஜியூக்கள் மற்றவர்கள் தலையெழும்பச் செய்யாமல் பார்த்துக்கொள்ளும் திறமையில் உன்னதம் கண்டவர்கள். கட்சியில் அடுக்கு முறைகள் வலுவானவை.

இதையெல்லாம் தாண்டி ஒபாமா மாதிரி ஒருவர் ஜப்பானில் வந்துவிட முடியாது.

அடுக்கு முறையில் படிப்படியாக மேலெழும்பி வருபவர்கள்தான் பிரதமர்கள். 1999-2001 ல் ஜப்பானில் நான் வசித்த பொழுதே யோஷிரோ மோரி, ஜுனிச்சிரோ கொய்ஸுமி, ஷின்ஷோ அபே போன்றவர்களின் பெயர்கள் கெய்ஸோ ஒபூச்சிக்கு அடுத்தபடியாக அடிபட்டன. இவர்கள் அனைவரும் பின்னால் ஒவ்வொருவராக பிரதமர்கள் ஆனார்கள். அப்பொழுது மேலடுக்கில் இருந்ததில் இன்னும் பிரதமர் ஆகாமல் இருப்பவர் டோக்கியோ மேயர் இஷிகாரா ஒருவர்தான். எனவே ஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குள்ளே ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட வரிசையில் நகர்ந்து இலக்கை அடைவதுதான்.

பெண்களுக்கு ஜப்பானிய அரசியலில் இன்னும் சொல்லிக்கொள்ளும் இடமில்லை.

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

தொடரும்…

பதிவுகளின் சார்பு நிலையும் ஊடக போக்குகளும் – இடது x வலது

பெரும்பாலான அமெரிக்க அரசியல் பதிவுகள் பராக் ஒபாமாவிற்கு சார்பாக இயங்குகிறதா?

எத்தகைய விஷயங்கள் வலைப்பதிவுகளில் அலசப்படுகின்றன?

எவர் அதிகம் கவனிக்கப்படுகிறார்?

அயலுறவுக் கொள்கையில் எந்த நாடு முக்கியத்துவம் பெறுகிறது?

முழுமையான அலசல்களுக்கு: PoliticalTrends.info – Political Bias

Srikanth Meenakshi: Obama’s Campaign Finance Pledge & System of Public Financing

ஸ்ரீகாந்த் மீனாக்ஷி கருத்துகளின் தொடர்ச்சி:

3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம்? உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

பதில்: ஹில்லரி க்ளிண்டனையும் சாரா பேலினையும் எதிர்த்துப் பிரசாரம் நிகழ்த்துவது என்பதே ‘தாக்குவதற்கு’ இணையானது என்றால் அது அநியாயம். ‘என்னை எதிர்த்து என்ன சொன்னாலும் அது பெண்களையே அவமானம் செய்வதற்கு ஒப்பு’ என்று சொல்பவர்கள் பொது வாழ்விற்கு லாயக்கற்றவர்கள்.

உதட்டுச்சாயம்/பன்றி விஷயத்தில் அவர் பேலினை மனதில் வைத்துப் பேசவில்லை என்பது பேச்சைக் கேட்ட/படித்த எவருக்கும் தெளிவாகத் தெரியும் விஷயம். வாஷிங்டன் போஸ்ட் இதைக் கிண்டலாக ‘What’s the Pig deal?’ என்று எழுதி, மெக்கெயினைச் சாடியது.

மற்றபடி இந்த உவமானப் பேச்சைக் கண்டிப்பது போன்றவை எதிரிகளுக்கு வாய்ப்பூட்டு போட முயலும் தந்திரம். மெக்கெயினை எதிர்த்தால், ‘ஒரு போர் வீரனை அவமானப்படுத்துகிறார்’, பேலினை எதிர்த்தால், ‘ஒரு பெண்ணை/பெண்ணினத்தை அவமானப்படுத்துகிறார்’. என்ன கயமை, என்ன பேடித்தனம்!

4. ஜனநாயகக் கட்சி மாநாட்டிலும் — ஏடி & டி (AT&T) போன்ற பெருநிறுவனங்கள் எக்ஸ்க்ளூசிவ் விருந்து அளிக்கின்றன. ஒபாமாவும் வீடு வாங்கியதில் சந்தேகாஸ்தபமான நபரின் உதவியை நாடியிருக்கிறார். மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து பராக் ஒபாமா எப்படி மாறுபட்டு விளங்குவார்?

பதில்: இரு வேறு விஷயங்கள்.
ஜனநாயகக் கட்சி மாநாட்டில் நிறுவனங்கள் விருந்தளிப்பது என்பது கட்சி சார்ந்த முடிவு (வேட்பாளர் எடுக்கும் முடிவு இல்லை). மேலும், இன்றைய அமெரிக்க அரசியலில் இது ஒரு தவிர்க்க முடியாத சடங்கு. இது போன்றவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு ஒரு சமகளனில் போராட முடியாது.

ஒபாமா வீடு வாங்கிய விஷயத்தில் சறுக்கினார் என்றுதான் நினைக்கிறேன். அதை அவரும் ஏற்றுக் கொள்கிறார் (‘A bone-headed decision’). ஒரு ஆரம்பகால அரசியல்வாதி ஆழம் தெரியாமல் காலை விட்ட நிகழ்வு என்று என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

5. தேர்தல் நிதி குறித்து முன்பு ஒரு மாதிரி வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன்பின் அந்தக் கொள்கையை ஒபாமா மாற்றிக்கொண்டது, ‘அவர் நிலையான நம்பிக்கை உடையவர் அல்ல’ என்பதற்கான உதாரணமா? பொதுமக்களிடமிருந்து அளப்பரிய காணிக்கை பெறுவது பின்வாசல் கதவைத் திறந்து மீண்டும் நிக்சன்களை உருவாக்காதா? பிரச்சார செலவுகளை இப்படி திரைமறைவாக பணம் திரட்டி நடத்துவது குறித்த தங்கள் எண்ணங்கள் என்ன?

பதில்: பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பணம் பெறுவது என்பதற்கும் அரசாங்கத்திடமிருந்து (மக்கள் வரிப்பணத்திலிருந்து) பணம் பெறுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சில பெரும் நிறுவனங்களிடமிருந்து பெரும்பணம் பெறுவதே தவறானது, ஆபத்தானது. ஒபாமாவின் திறமையான தேர்தல் இயந்திரம் வரலாறு காணாத அளவு ஏராளமான மக்களிடமிருந்து சிறிய நன்கொடைகளைப் பெற்று செயல்படுகிறது. இது போன்ற ஒரு ஜனநாயக ரீதியான தேர்தல் நிதி சேகரிப்பு உலக வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை. இது ஒரு பிரமிக்கத்தக்க சாதனை.

இத்தகைய வெற்றியை, சாதனையை, ஒபாமாவே எதிர்பார்க்கவில்லை என்பதையே அவரது முந்திய வாக்குறுதி உணர்த்துகிறது. அவர் அந்த வாக்குறுதியை மீறியது உண்மையாயினும், அவரது மீறல் எழுத்தளவான மீறலேயன்றி, கொள்கைரீதியான மீறல் இல்லை.

வலைப்பதிவுகளில் 'அமெரிக்க அதிபர் தேர்தல்'

தமிழ்ப்பதிவுகளில் சமீபத்திய குடியரசு, ஜனநாயக் கட்சி மாநாடுகள்; ஒபாமா, மெகெயின், பைடன், பேலின் குறித்த பார்வைகள்; ஆகியவற்றின் தொகுப்பு. விடுபட்டதை சொல்லவும்.

1. டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன், டென்வர்- ஒரு நேரடி ரிப்போர்ட் :: ராஜா சொக்கலிங்கம்

நான் அறிவாலயம் சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள், தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் குட்டி குட்டி கடைகள் என நான் அங்கே பார்த்ததை அனைத்தும் இங்கேயும் பார்க்க முடிந்தது. கலைஞருக்கு பதில் இங்கே ஒபாமா அவ்வளவுதான் வித்தியாசம்.

2. ஒபாமா பராக் பராக் :: ‘உள்ளும் புறமும்’ மருதன்

ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது.

3. மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts :: தெக்கிகாட்டான்

சாரா பலீன் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது… பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி “க்கோ ட்டீம் க்கோ” சொல்லி…

4. அமெரிக்க அரசியல் – தெகாவிற்கான பதில்! :: யு.எஸ்.தமிழன்

Unemployment rate had been within the required amount throughout Bush’s regime. ஒரு நாடு சுபிட்சமாக, inflation இல்லாமல் இருக்க 4-6% unemployment rate இருக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்…highly not recommended to bring the unemployment rate below this levels as it will trigger inflation! http://www.bls.gov/cps/cpsaat1.pdf இதில் கிளிண்டன் காலத்தையும் புஷ்சின் காலகட்டத்தையும் compare செய்து நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

5. பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி! :: புதிய ஜனநாயகம்

முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அடிப்படையான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதற்கு பல நாடுகளின் அனுபவங்கள் சான்றாக உள்ளன. அமெரிக்க ஜனநாயகம் பற்றிய வீண்பெருமையில் மூழ்கிக் கிடக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த அனுபவங்கள் கண்ணில் படாது, அமெரிக்க மக்கள் பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டுமானால், பாரக் ஒபாமாவின் தேர்வு பயன்படக்கூடும்.

6. வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பிபுதிய கலாச்சாரம்

கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்க சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம், இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலொஜ் பதிப்பகத்தின் ஒயிட்ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர்.பேகின், ஷொர்னன் வெரா மற்றும் பினார்பாதர்.

சமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்கா ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.

7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…. :: அவியல் செல்வி

ஒரே வேலைக்கு, பெண்களுக்கும் , ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதையே ஏற்றுக்கொள்ளாத மெக்கெயின், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கும் பெண்ணை திடீர்னு துணை ஜனாதிபதி பதவிக்கு ஏன் நிறுத்தினார்?

ஒபாமாவை நிர்வாக அனுபவம் பத்தாதுன்னு மூச்சுக்கு மூச்சு திட்டிக்கிட்டே, இரண்டே இரண்டு வருஷங்கள் அலாஸ்கா என்ற பனி பிரதேசத்திற்கு ஆளுநராக இருக்கும், தனக்கு பரிச்சயமில்லாத ஒருவரை ஏன் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராகினார்

8. சாரா பாலினின் திருமணமாகாத 17 வயது மகள் கர்ப்பம் :: வினாயக்

– அமேரிக்க பள்ளிகளில் வெளிப்படையான பாலியல் கல்வி கூடாது,
– பாலியல் கல்விக்கு அரசுப் பணமேன் ? வரிப் பணமேன் ?
– abstinence – அதாவது மறுத்தலே சிறந்த கருத்தடை
– கருக்கலைப்பு கூடாது
என்றெல்லாம் பழமையான கருத்துக்களை பறை சாற்றிவரும் சாரா பாலினின் வீட்டிலேயே, அவருடைய சொந்தப் பெண்ணே, 17ழே வயதில், அதுவும் திருமணத்துக்கு முன் கருவுற்று இருப்பது எதிர் தரப்பில் பெரும் நகைப்பையும், அமேரிக்க conservative பழமைவாதிகளிடத்து பெரும் திகைப்பையும் உண்டாக்கியுள்ளது

9. அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா!நாடும் நடப்பும்

அவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.

10. ஒபாமா இது நியாயமா! சாய்கணேஷ் (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க)

இனவெறிக்கு எதிராக போராடியவர் என்றெல்லாம் சொல்லபடும் அவர் பேசியதும் (மண்ணின் மைந்தர்களுக்கே முதலிடம் என்ற வகையில்) இனவெறி தாக்குதலே/தூண்டுதலே.

அமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் மற்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த விசயம்…. அப்படி இருக்கையில், அவர் நடை முறைக்கு சாத்தியமா (அமெரிக்க காங்கிரஸின் அங்கிகாரம் / செனட் அங்கிகாரம் கிடைக்குமா) என்பதை யோசிக்காமல் சொல்லிய வார்த்தைகள், ஓட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளின் பேச்சை போல் தான் இருந்தது

11. இந்தியா – அமெரிக்கா ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் – சுதந்திர தின வாழ்த்து செய்தியில் ஒபாமா :: வியப்பு.கொம் செய்தி

21ஆம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனை இந்தியா அமெரிக்க நாடுகள் இணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

12. வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… !!! :: சேவியர்

ஒபாமா காண்டம் சொல்கிறது : Use With Good Judgment
மெக்கெயின் காண்டம் சொல்கிறது : Old but not expired

13. ஒபாமாவின் நலன் கருதிய உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு :: அதிரன் மெட்ரோ நியூஸ் 29.08.08

பயங்கரவாதத்தை பொறுத்தரை ஈராக் முக்கிய இடம் வகிக்கவில்லை. ஒரு போதும் வகிக்கவும் போவதில்லை என்பது ஒபாமாவின் முடிவாக இருந்தாலும் ஈராக்கில் நிலையான இராணுவ தளங்களை ஏற்படுத்துவது தொடர்பான தவறான வழிகாட்டலுக்கு அமெரிக்கப் படையினரையும் வளங்களையும் வீணடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.

'அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்' – செய்தித் தொகுப்பு

1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி

ஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.

2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு! :: வெப்துனியா

அமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

3. அமெ‌‌ரி‌க்க ‌நி‌தியை பா‌கி‌ஸ்தா‌ன் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக பய‌ன்படு‌த்து‌‌கிறது: ஒபாமா கு‌ற்ற‌ச்சா‌‌ற்று! :: வெப்துனியா

தீ‌விரவா‌த‌த்து‌க்கு எ‌திரான போரு‌க்காக அமெ‌ரி‌க்கா, பா‌கி‌ஸ்தா‌னு‌க்கு 10 ‌பி‌‌ல்‌லிய‌ன் டால‌ர் நி‌தி அ‌ளி‌‌த்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அரசு அ‌ந்த ‌நி‌தியை பய‌ன்படு‌த்‌தி இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக போரு‌க்கு த‌ன்னை தயா‌ர் படு‌த்‌தி வரு‌கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம் சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

4. இந்தியாவுடன் நிரந்தர உறவு: அமெரிக்க குடியரசு கட்சி விருப்பம்! :: வெப்துனியா

இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் குடியரசுக் கட்சியின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது

5. தட்பவெப்ப நிலை : ஒபாமா, மெக்கைனுக்கு ஐ.நா. வலியுறுத்தல் :: யாஹூ

புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களை (கரியமில வாயு உள்ளிட்டவை) வெளியிடுவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் முக்கியத்துவம் பெறுகிறது என்ற அவர், உலக அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கும் அந்நாடு, புவி வெப்பமடைதலை தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க வகையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமா அல்லது ஜான் மெக்கைன், தற்போதையை நிலையைக் காட்டிலும் மிகச் சிறப்பான வகையில் தட்பவெப்ப நிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பான் கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.

6. ஒபாமாவின் காணாமல் போன சகோதரர் கண்டுபிடிப்பு :: கூடல்

பராக் ஒபாமாவிற்கு ஜார்ஜ் ஹூசைன் ஓனியான்கோ ஒபாமா என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு இப்போது 26 வயது ஆகிறது. இவர் இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியின் புற நகர் பகுதி ஒன்றில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஜார்ஜ் ஒபாமா வேறு ஒரு மனைவிக்கு பிறந்தவர் என்று இத்தாலியின் வேனிட்டி பேர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தான் இரண்டே முறை தான் பராக் ஒபாமாவை பார்த்ததாகவும், 5 வயதாக இருக்கும் போது ஒருமுறையும், கடந்த 2006 ம் ஆண்டு பராக் ஒபாமா நைரோபிக்கு வந்திருந்த போது ஒருமுறையும் மட்டுமே பார்த்ததாக ஜார்ஜ் ஒபாமா கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தி தாளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

7. சர்வதேச தலைவர்களுக்கான கூட்டத்தில் கார்த்தி ப.சிதம்பரம் :: மாலைச்சுடர்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மேடாலின் கே.ஆல்பிரைட் அழைப்பினை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் அமெரிக்கா பயணமானார்.

8. யுஎஸ் மீது புதின் தாக்கு :: மாலைச்சுடர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பலனடையும் நோக்குடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒருவர் ஜார்ஜியா பிரச்சனையை கிளப்பி இருப்பதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனை குறி வைத்து இவ்வாறு கூறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

9. ஒபாமாவை கொல்ல சதி :: மாலைச்சுடர்

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 750 அடி தொலைவில் இருந்து ஒபாமாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத் தேர்தல் 2008 – மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல் – வாஷிங்டனில் நல்லதம்பி

வாஷிங்டனில் நல்லதம்பியிடமிருந்து வந்த மின்மடலை ஸ்க்ரிப்டில் இங்கே சேமித்திருக்கிறேன்.

வாசிப்பதற்கு முன் எச்சரிக்கை: திராவிட எதிர்க்கருத்துகளைத் தவிர்த்து அமெரிக்க தேர்தல் கூட்டத்தை மட்டும் கருத்தில் கொள்வது நன்மை பயக்கும்.

ஒபாமா-பைடன் வெற்றிக்கூட்டணி

ஒபாமா நேற்று வரை இருந்த கடைசி சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே கருதுகிறேன். இதுவரை ஒபாமாவின் பாதை சரியான பாதையாகவே இருக்கிறது. நடு நடுவில் சில குழப்பங்களை விதைத்தாலும்(offshore drilling) சரியான திசையிலேயே செல்கிறார். மெக்கெயின் இதுபோன்ற சங்கதிகளில் தீர்மானமான மக்கள் விரும்பும் பெரும்பான்மை முடிவைச் சொல்லி அசத்திவருகிறார். ஒபாமா டயரில் காற்றடியுங்கள் என்கிறார் சொதப்பலாக.

1. என்ன தான் லிபரல் சிந்தனையாளர்களாக காட்டிக்கொண்டாலும் ஒரு கறுப்பரை தேர்ந்தெடுப்பதா என்னும் குழப்பத்தில் இருந்த பெரும்பான்மை ஓட்டுக்களுக்களை பெற ஒரு தெளிவான முடிவை எடுக்க இந்த கூட்டணி உதவும்

2. வெள்ளையர் – 80 % கறுப்பர் -12% உள்ள மக்கள்தொகை இதுவரை ஒரு வெள்ளை ஆணையே தேர்ந்தெடுத்து வந்திருக்கிறது. மொத்தமாக கறுப்பர்+பெண் கூட்டணி கட்டாயம் பழைமைவாதிகளை மெக்கெயின் பக்கம் மொத்தமாக திருப்பி இருக்கும்.

3. ஒபாமா சின்னப்பையன் அவனுக்கு அனுபவமில்லை. வெளிநாட்டுக்கொள்கை கிலோ என்ன விலைன்னு கேக்கற ஆளுன்னு மெக்கெயின் சொல்லி வருவதற்கு சரியான பதிலடி இதுவாகத்தான் இருக்கமுடியும். பைடன் வெளிநாட்டுக்கொள்கைல பழம்தின்னு கொட்டை போட்ட ஆள்.

4. அடுத்து வரும் ஆட்சிக்கு பெரும் தலைவலியாக இருக்கப்போகும் சமன்செய்யப்படவேண்டிய வெளிநாட்டு உறவுகளுக்கு(எண்ணெய் டாலர், ஈராக், ரஷ்யா) ஒபாமாவுக்கு சரியான முடிவை எடுக்க அதை கொண்டு சொல்ல இவர் பெரிதும் உதவுவார் என்று எதிர்பார்க்கலாம்.

வாழ்த்துகள் ஒபாமா-பைடன்.

அமெரிக்க தேர்தல் – வலைப்பதிவுகளில்

1. அ.ராமசாமி எழுத்துகள்: அமெரிக்கத்தேர்தலும் அடையாள அரசியலும்

2. சேவியர்: வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… !!!

3. ஊடறு: அதிகாரம் யாருக்கு…

4. பத்ரி: ஏன் பராக் ஒபாமா? – 2

5. சிறில் அலெக்ஸ்: அமெரிக்கத் தேர்தல்

6. கீர்த்தி: இனிமேல் ஒபாமா நல்லவர்

7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்: Yes; We Can – ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர் பகுதி-1 & பகுதி-2

8. டோண்டு ராகவன்: “நான் தற்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியைத்தான் ஆதரிக்கிறேன்”

ஒபாமாவிற்கு சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவு அதிகரிக்கிறது

தேர்ந்தெடுக்கப்பட்ட டெலிகேட்ஸ் ஆதரவு ஒபாமாவிற்கு இருந்தாலும் சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவு மூலம் ஹில்லரி, ஒபாமாவின் வெற்றியை தடுக்க ஒரு வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை இருந்தது. ஆனால் வடகரோலினா, இண்டியானா தேர்தலுக்கு பிறகு ஒபாமா பக்கம் சூப்பர் டெலிகேஸ் சாய தொடங்கியுள்ளனர்.

ஹில்லரி சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவில் முன்னிலை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய நிலவரப்படி இந்த ஆதரவை ஒபாமா சமன் செய்துள்ளார். இருவருக்கும் இப்பொழுது 273 சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவு தற்பொழுது உள்ளது. ஒபாமாவிற்கு இன்னும் ஆதரவு அதிகரிக்க கூடும்.

இதனால் ஹில்லரி போட்டியில் இருந்து விலக வேண்டும் என்னும் கோரிக்கை இன்னும் வலுவடையும். ஏற்கனவே ஹில்லரி அத்தகைய ஒரு நெருக்கடியை எதிர்கொண்டே வருகிறார்.

சி.என்.என் செய்தி :  Obama, Clinton tied in race for superdelegates

டேவிட் லெட்டர்மெனுடன் தலை பத்து – ஒபாமா & ஹில்லரி

அமெரிக்காவில் இரவுகளில் நிலா வருகிறதோ இல்லையோ… தொலைக்காட்சியில் தினசரி டேவிட் லெட்டர்மெனின் நிகழ்ச்சி வரும். வாரநாட்களில் தன்னுடைய நகைச்சுவையான தலை பத்து பட்டியல் போடுவார்.

பட்டியல்களில் விருப்பமுள்ள அமெரிக்கர்களை இந்த டாப் 10 மிகவும் கவர்ந்துள்ளது. தேர்தல் பிரச்சார காலங்களில் அரசியல்வாதிகளும், சினிமாக்காலங்களில் நட்சத்திரங்களும் தங்களைத் தாங்களே பகிடி செய்து கொள்வதும் உண்டு.

சென்ற வாரம் ஒபாமா வந்திருந்தார். தன்னைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டார். அவற்றில் சில…

  • ஜனாதிபதி ஆனவுடன், எம்டிவி நாடகத்தில் வரும் குழாயடி சண்டைகளைத் தீர்த்து வைப்பதுதான் என்னுடைய முதல் கைங்கர்யமாக இருக்கும்.
  • என்னுடைய மாநிலத்தில் நடந்த வாக்குப்பதிவில் கைதவறி இன்னொரு வேட்பாளருக்கு வாக்களித்து விட்டேன்.
  • குழந்தைகளின் அறைகளை ஒழுங்குபடுத்த சொல்லும் போது கூட ‘நான் பராக் ஒபாமா; என்னுடைய ஒப்புதலுடன்தான் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது‘ என்று முடிக்கிறேன்.
  • இன்று பௌலிங் ஆடியதில் எனக்கு 39 கிடைத்தது.
  • செக்ஸ் அன்ட் தி சிடி‘ வெளியாகும் அன்று, நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் அந்த நாளை காலியாக வைத்திருக்கிறேன்.
  • நான் அக்டோபரில் இருந்து நித்திரை பயிலவில்லை.

சற்றும் சளைக்காத ஹில்லரி கிளின்டன் நேற்றைய டேவிட் லெட்டர்மேனில் தோன்றி, ‘நான் ஏன் அமெரிக்காவை நேசிக்கிறேன்?’ என்று தலை பத்து போட்டார்.

  • கனடாவின் இறைச்சி: மெல்லவும் முடியாது; விழுங்கவும் முடியாது! அமெரிக்காவின் கறி: நறுக் சுவை!!
  • நல்லவேளை இணையம் இருக்கிறது! 24×7 ஆடைகளை வாங்க முடிகிறது. (இப்ப சந்தோஷம்தானே டேவ்? நீங்க கேட்ட டிரவுசர் ஜோக் வந்துடுச்சி)
  • டிவோ
  • 232 ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு தடவை கூட பிஸ்கோத்து தட்டுப்பாடு வரவில்லை.
  • இப்பொழுதுதானே நான் ‘சாடர்டே நைட் லைவ்’ என்று சொல்லணும்?
  • யார் வேணும்னாலும் இந்த மாதிரி நிகழ்ச்சியில் கலந்துக்க முடியுதே!

இப்படித் தொலைக்காட்சி எங்கும் ஜனநாயக வேட்பாளர்களே நிறைத்திருப்பது கண்டு சகிக்காத குடியரசுக் கட்சி, தன்னுடைய தலை பத்தை வெளியிட்டுள்ளது. ‘ஒபாமா ஏன் ஜனாதியாக தயார் நிலையில் இல்லை?’ என்னும் தலைப்பில் கொஞ்சம் காரம் ஜாஸ்தியாக…

  • தேநீர் விருந்துக்கு அழைத்தால்தான், எதிரிகள் நட்போடு பழகுவார்கள் என்று நினைப்பதால்
  • ஆமான்னா அப்படி ஆட்டு! இல்லேன்னா இப்படி ஆட்டு!!
  • பெட்ரோல் விலை மேலும் விண்ணை முட்டுமாறு வரியைத் தாளிக்க
  • சும்மாக்காச்சியும் அயலுறவுக் குழுவில் அங்கம் வகிப்பதால்
  • இராக்கை விட்டு தற்போது வெளியேறி, அங்கிருக்கும் அல் க்வெய்தா ஆட்கொண்டபின் மீண்டும் போரிட
  • வினாக்களுக்கு விடையா? அதற்கு பதில் வாயில் வடை வேண்டும் என்பதால்

இவ்வளவு காட்டம் வர என்ன காரணம்?

ரான் பால் போன்ற சக குடியரசு கட்சிக்காரர்களே, பராக் ஒபாமாதான் அடுத்த ஜனாதிபதி என்று நம்புவது கூட காரணமாக இருக்கலாம்.

ஆனால், ஜெரமையா ரைட் விவகாரம் அவ்வளவு எளிதாக விடப்படுமா!?