சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம்


பாலிண்ட்ரோம் (Palindrome) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இடம்வலம் வலம் இடமாகப் படித்தால் மாறாத வார்த்தைகள் வாக்கியங்கள்.

தமிழில்

 • மோருபோருமோ
 • தேருவருதே
 • விகடகவி

இவை மூன்றைத் தவிர வேறு உதாரணங்களை நான் பார்த்ததில்லை.

ஆங்கிலத்தில் இவைகளை அமைப்பது சுலபம். New American Writing பத்திரிகையில் ஒரு கவிதை வரிகள் அனைத்தும் ‘பேலின்ட்ரோம்’ வடிவத்தில் இருந்தன. உதாரண வரி:

But no repaid diaper on tub!

தமிழில் இவ்வாறு நீண்ட சொற்றொடர்கள் அமைப்பது எழுத்தாளனாகிய எனக்கு சவாலாக, ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது.

 1. வா தாத்தா வா!
 2. மாவடு போடுவமா?
 3. மாலா போலாமா?
 4. யானை பூனையா?
 5. யானையா பூ யானையா?
 6. போ வாருவா போ.

கொஞ்சம் சந்திப்பிழைகளை அனுமதித்தால்:

 1. மாமர சில சிரமமா?

முழுசாக அர்த்தம் வேண்டும் என்று கட்டாயமில்லாவிட்டால் மிக நீண்ட வாக்கியங்கள் அமைக்க இயலும்

 1. ஓர் பாயை தின வானதியை பார் ஓ!
 2. துவள் கொடி மரவுரி பரிவிர மடிகொள்வது!

வாசகர்கள் முயற்சி பண்ணி எனக்கு எழுதினால் இந்தப் பகுதியில் வெளியிடுகிறேன்

மே 1990

முந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு)

The following poem, which Lydia presented in class, was based on an assignment to create your own form. Maxine Chernoff and I (Paul Hoover's Poetry Blog: Lydia Tomkiw) published it in one of the first issues of New American Writing, and it was also included in the first edition of The Best American Poetry [1988], ed. David Lehman and John Ashbery. The poem consists entirely of palindromes, some of which she must have created to suit the poem, for instance the next to last line:

Six of Ox Is

O, no iron, o Rio, no
red rum murder;
in moon: no omni
devil-lived
derision; no I sired
Otto,
a
drab bard,
Bob,
but no repaid diaper on tub.
O grab me, ala embargo
emit time,
Re-Wop me, empower
Eros’ Sore
sinus and DNA sun is
fine, drags as garden if
sad as samara, ruff of fur, a ram; as sad as
Warsaw was raw.

19 responses to “சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம்

 1. வெங்கட்!

  தூள் சுட்டி & பேலின்ட்ரோம்.

  மாலை மாற்று கேள்விப்பட்டிருந்தாலும் நினைவில் வரவில்லை. நன்றிகள் பல

 2. படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு 🙂

 3. நன்றி பாலா!

  சுவாரசியம் என்னவென்றால் தமிழ், ஆங்கிலம் இரண்டுமே ஓரளவு அறிந்த நிறைய பேருக்கு இந்த பழக்கம் உண்டு – சில சொற்பிரயோகங்கள், பிரத்தியேகமாக ஒரு மொழியில் மட்டுமே தெரிந்திருக்கும் – உதாரணம் – Oxymoron (முரண்தொடை). இதைப் போன்ற இன்னொரு ரிவர்ஸ் உதாரணம் – இடக்கரடக்கல் (Euphemism).

 4. அன்பரசு,

  சுஜாதாவும் சுவாரசியமும் இரட்டைக்கிளவி 🙂

 5. எஸ்ஸார்கே

  நானும் எசப்பாட்டு மாதிரி நிறைய முயன்றேன். வரமாட்டேங்குதே 🙂

 6. //முயன்றேன்.//

  சிவா வாசி – என்று டூயட் படத்தில் வரும். வானவா, பாப்பா, வா மாமா வா, காலாலாகா [கையாலாகாததற்கு எதிர்ப்பதம் 🙂 ]போன்ற மெய்யெழுத்தில் துவங்காத, முடியாத வார்த்தைகளை வைத்து Memento திரைக்கதை மாதிரியோ, அல்லது resume-யை reverse chronological order-ல் நிரப்புகிற மாதிரியோ யோசித்தால் தமிழில் கொஞ்சம் அகப்படும்.

 7. The famous Palindrome used by ” Nepolean” The Great”…. “ABLE WAS I EVE I SAW ELBA”
  ….I will do give the longest Palindromes in English in my next post….

 8. IT WAS SAID THAT WHEN NEOPOLEAN WAS CAPTURED AND WAS SENT TO ELBA, HE WROTE.”ABLE WAS I ERE I SAW ELBA” I DONT KNOW HOW AUTHENTIC IT WAS , BUT IT IS A PALINDROME. THE WORD. MALAYALAM, IS A PALINDROME.

 9. தாத்தா

  திகதி

  பாப்பா

 10. Thiru jebamoni sai”IT WAS SAID THAT WHEN NEOPOLEAN WAS CAPTURED AND WAS SENT TO ELBA, HE WROTE.”ABLE WAS I ERE I SAW ELBA” I DONT KNOW HOW AUTHENTIC IT WAS , BUT IT IS A PALINDROME. THE WORD. MALAYALAM, IS A PALINDROME.”…If you want the proff that this is a Palindrome…please refer SIDNEY SHELDON’S …”DOMSDAY CONSPRACY”… where lots of description has been given to the word PALINDROME…just for your info…do not take it otherwise…

 11. பிங்குபாக்: சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?” « Snap Judgment

 12. உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

  கேள்வி. நெட்

 13. பாலா!
  கைரேகை – இன்னிக்கு யதேச்சையா மாட்டிச்சு! (பக்கத்துல ஒருத்தர் விசா அப்ளிகேஷன் நிரப்பும்போது TIன்னா என்னனு கேட்டார். சொன்னப்புறம் யோசிச்சா…)

 14. பாலா!
  தேளு மீளுதே!

  இந்த வார கல்கியில் நடனத்தின் ஜோக் திருவிழா என்றொரு மெகா ஜோக்கில் வந்திருந்த உதாரணம்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.