அமெரிக்க தேர்தல் – ஜான் மெக்கெயின் சறுக்கிய தருணங்கள்


McCain Love Link - Romance by Republicans: GOP Valentines Day  Specialகட்டுரையில் இருந்து…

  • வலப்பக்கம் உள்ளவர் மெக்கெயினின் காதலியா!?! நாற்பது வயது பெண்ணுடன் தொடர்பா?
      நட்பின் பேச்சைக் கேட்டு லாபியிஸ்ட்களின் நிறைவேறிய கோரிக்கைகள்…

    1. பெருநகரத்தில் இயங்கும் இரண்டு முக்கிய தொலைக்காட்சி கன்னல்களையும் ஒரே நிறுவனமே வைத்துக் கொள்ள வகை செய்யும் திட்டம்
    2. சிறுமுதலீட்டுக்காரர்களின் விருப்பப்படி வரிவிலக்கு தரும் சட்டம்
    3. மாநிலத்தில் இயங்கும் பல ஊடகங்களை ஒரே ஒருவரே கையகப்படுத்த விதிவிலக்கு ஏற்படுத்துதல் (இந்த நிறுவனத்தின் விமானத்தையும் சொந்தப் பயணங்களுக்கு பயன்படுத்தி உள்ளார்)
  • (தங்களுக்கு சௌகரியமான சட்டங்களை இயற்றவும், பரிவு ஏற்படும் பார்வையை தோற்றுவிக்கவும் இந்தியா முதல் இன்டெல் நிறுவனம் வரை அனைவரும் ‘லாபியிஸ்ட்’களை நியமித்திருப்பார்கள்.) இவர்கள் கொடுக்கும் பணத்தை எதிர்த்து சட்டம் கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டே, லாபியிஸ்ட் பணத்தை வாங்கிக் கொண்ட கதை.
  • வங்கி அதிபரின் தனி விமானத்தில் பலமுறை வாஷிங்டன் டிசிக்கும் சொந்த ஊருக்கும் பறந்து சென்றது;
  • அமெரிக்காவில் (முன்பு) ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணகர்த்தாக்களில் ஒருவருடன் பஹாமாஸ் உல்லாசப் பயணம் சென்றது;
  • மெகெயினின் மனைவிக்கு ஷாப்பிங் மாலில் பங்கு கொடுத்து விட்டு, அதற்கு பிரதிபலனாக வங்கியின் கடன் கெடுபிடிகளை, நடுவண அரசு கண்டும் காணாமல் இருக்கச் செய்தது
  • தொலைத்தொடர்பு நிறுவன லாபியிஸ்ட்களை தன்னுடைய பிரச்சாரக் குழுவின் முக்கிய அங்கத்தினர்களாக நியமிப்பது; அது மட்டுமல்லாமல், அதே தொலைபேசி/தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து எண்ணிலடங்கா நிதியை தன்னுடைய பிரச்சாரத்துக்காகப் பெற்றுக் கொள்வது

விடைகளையும் விவரங்களையும் அறிய (நியு யார்க் டைம்ஸ்): For McCain, Self-Confidence on Ethics Poses Its Own Risk

இதற்கெல்லாம் நேரில் விளக்கம் கொடுக்கும் பேட்டி கொடுத்து தன் பக்கத்து நியாயங்களை வைக்குமாறு வாய்ப்பு வழங்கிய நியு யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு நேர்காணல் வழங்காமல் புறக்கணித்தும் விட்டார்.

12 responses to “அமெரிக்க தேர்தல் – ஜான் மெக்கெயின் சறுக்கிய தருணங்கள்

  1. மெக்கயின் இதை உண்மையில்லை எனக் கூறியுள்ளார்.

    http://www.reuters.com/article/politicsNews/idUSN2144724120080221

    “Obviously I’m very disappointed in the article. It’s not true,” the four-term Arizona senator told a news conference. “At no time have I ever done anything that would betray the public trust or make a decision which in any way would not be in the public interest and would favor any one or any organization.”

  2. மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தை விட மெக்கெயின் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு முக்கியமானது.

    மோனிகாவிற்காக பில் க்ளின்டன் எந்தக் காரியத்தையும் சாதித்து, பாரபட்சமான சட்டங்களை உருவாக்க துணை போகவில்லை. அப்படியிருந்தும் impeach செய்யப்பட்டார்.

    ஆனால், மெகெயினோ, தன்னுடைய பிரியத்திற்காக, சட்டதிருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியும் இருக்கிறார்.

    அந்தக் கட்டுரையின் இன்னொரு பகுதியான, முறையில்லா பிரச்சார பணத்தை ஒழித்துக் கட்டுவதாக சொல்லிக் கொண்டே, அதே வழிமுறையில் தனக்காக பிரச்சார பணம் வாங்கிக் கொண்ட குற்றச்சாட்டும், — மெகெயினின் ‘straight talk express’ என்னும் சந்தைப்படுத்தலை இளிக்க வைக்கிறது.

    ‘இதற்கெல்லாம் பதில் சொல்வது வேஸ்ட்’ என்று புறந்தள்ளி, ஒபாமா மீது சேறு பூசுவதுதான் ப்ரொஃபசனல் அரசியல்வாதிக்கு நாகரிகம் 😉

  3. இப்போழுது தானே நியூயார்க் டைம்ஸ் Mccain endorse செய்தது. எழுதிய மை(?) காயுமுன்னே எதிர்த்து எழுதுவது சந்தேகத்தை கிளப்புகிறது. [இது போன்ற ஒரு குற்ற்ச்சாட்டு முன்னமே ஒரு முறை வந்து அமுங்கி விட்டதாக ஞாபகம். சரியாக தெரியவில்லை]. ஆனால் நியூயார்க் டைம்ஸ் LIBERAL MEDIAவின் ஒரு icon. It’s endorsement of McCain was very severely criticized by Conservatives. This may be an attempt to line up the conservatives behind McCain ஆக இருக்கலாம்.
    சேறு எவ்வளவு ஒட்டிகொள்ளும் என்று தெரியவில்லை…. போக போக தெரியும் பூவின் வாசம் புரியும்!!

  4. நியு யார்க் டைம்ஸின் பரிந்துரை ‘இருப்பதற்குள் பரவாயில்லை’ என்னும் ரகமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

    * நேற்றைக்கு ஒரு நிலை; இன்றைக்கு இன்னொரு மாற்று நிலை என்று இடத்திற்கு தகுந்தபடி பேசிய ராம்னி;
    * எவாஞ்சலிகர்களின் தூதர் என்றே முன்னிறுத்திக் கொண்ட ஹக்கபி;
    * 9/11- ஐ மட்டும் காரணம் காட்டி, அப்பொழுது நியூ யார்க் மேயராக இருந்ததால் போட்டியிட்ட ஜியூலியானி;
    * மற்றும் ரான் பால் – ஆகியோர் இடையே மெகெயின் தேவலாம் என்றார்கள்.

    லாபியிஸ்ட்கள் சொற்படி நடப்பது அமெரிக்காவில் தெய்வகுற்றமல்ல; எனினும், அவ்வாறு நடப்பது தப்பு என்று பிரச்சாரம் செய்த ஒருவர், கொண்ட கருத்துக்கு முரணாக நடந்து கொண்டாரா என்பதுதான் சர்ச்சை எழுப்பியிருக்கிறது.

  5. //நியு யார்க் டைம்ஸின் பரிந்துரை ‘இருப்பதற்குள் பரவாயில்லை’ என்னும் ரகமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.//

    சுட சுட பதில் உடனே தருகிறீர்களே!! என்டொர்செமென்டுக்கு அவசியம் இல்லை என் நினைக்கிறேன். “உடனே” மாறியது எனக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை. இந்த விஷயம் இவர்களிடம் (NYtimes) முன்னமே இருந்திருக்க வேண்டும். ஒரு முறை ஒரு மாகாண ஆளுநர் பதவிக்கு (Primary election’l) ஒரு பெரிய பத்ரிக்கை நிற்பவர்களில் யாரும் சரி இல்லை என்று சொல்லியது!! அவ்வாறு செய்தால் பத்திரிக்கையின் மேல் ஒரு மதிப்பு ஏற்படும்.

    ‘பெண்கள்” விஷயத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்வது இல்லை!!
    லாபிய்ச்ட் lobbyist விஷயத்தில் எப்படி சமாளிக்கிறார் என்று பார்க்க வேண்டும்??

  6. நியு யார்க் டைம்ஸின் பரிந்துரை கட்டுரை:
    Primary Choices: John McCain – New York Times

    —ஒரு பெரிய பத்திரிக்கை நிற்பவர்களில் யாரும் சரி இல்லை என்று சொல்லியது—

    ஹ்ம்ம்… அரசியலே குப்பை என்பது போல் எல்லாரும் ‘சரியில்லை’ என்று சொல்லி ஒதுங்க வேண்டாம் என்பது பாலிசி போல 🙂

    —இந்த விஷயம் இவர்களிடம் (NYtimes) முன்னமே இருந்திருக்க வேண்டும்—

    முன்பே கைவசம் இருந்திருந்தாலும், பரிந்துரைத்தபின் விளக்கம் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டிருக்கலாம். இந்தக் குற்றச்சாட்டுகளில் பல, ஏற்கனவே அவர் மீது விழுந்து, அவரும் ஒத்துக் கொண்டு, அதன் பின் மறந்து போன வகையை சேர்ந்தது.

    புதிதாக கண்டுபிடித்த ‘அழுக்கு’களுக்குத்தான் மதிப்பு என்கிறார் மெகெயின் 😉

    —‘பெண்கள்” விஷயத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்வது இல்லை!—

    நேருவில் ஆரம்பித்து சரத்குமார் வரை மன்னிப்பது தமிழனின் குணம். அமெரிக்காவில், அதுவும் குடியரசு கட்சிகாரர்கள் காருண்யமே காட்டுவதில்லை.

    வீட்டுக்குள் எது நடந்தாலும் சரி… சந்தியில் கன்சர்வேடிவாக, பாரம்பரியத்தை நிலைகுலையாமல், ‘ஒருவனுக்கு ஒருத்தி மட்டுமே’ என்பவர்கள் அல்லவா அவர்கள்!

    தன்னுடைய ராமர் குணத்தை ராம்னி எடுத்துவைத்தும், பலதார மணத்தை மார்மன் பிரிவு அனுமதிக்கிறது என்று மிட் ராம்னியைக் கூட கிண்டல் செய்தார்கள்.

  7. பின்னணி… The New Republic – The Long Run-Up by Gabriel Sherman: Behind the Bombshell in ‘The New York Times.’

  8. The McCain Article – New York Times: Ask a Question: Editors and reporters who worked on The Times’s recent article about Senator John McCain will answer questions.

    நியூ யார்க் டைம்ஸும் பின்னூட்ட பிரியராக மாறி இருக்கிறது. 2400+ மறுமொழிகள் வந்திருக்கிறது. வலைப்பதிவுகள் பக்கம் ஒதுங்கிய எல்லோரையும், நாளிதழ் பக்கம் கவனம் திருப்ப வைத்திருக்கிறது.

    பதிலளித்த கேள்விகள்…

    * Why Did The Times Endorse McCain?

    * Did you discuss the damage that might be done to the woman by including her name and photograph?

    * Considerations of Privacy

    * Did The Times Violate Its Standards on Anonymity?

  9. முன்னுக்குப் பின் முரணாக மறுத்ததை தெளிவாக்குகிறார்கள்: A Hole in McCain’s Defense? | Newsweek Politics: Campaign 2008 | Newsweek.com: “An apparent contradiction in his response to lobbyist story.”

  10. பிங்குபாக்: ரால்ஃப் நாடர் - சில குறிப்புகள் « US President 08

  11. பிங்குபாக்: இன்றைய உலகம் & சுதந்திரம் & தணிக்கை - சிந்தனை « Snap Judgment

  12. பிங்குபாக்: மணிக் கூண்டு சிவாவின் கேள்விக்கு பதில்: கறுப்பு/வெள்ளை: ஏன் மெகயின்? « US President 08

cvalex -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.