Boss of Sivaji Spoilers – Fult(h)an Boston


 • தமிழ் கலாச்சாரம் என்கிறார்கள். கோவிலில் தொழுவது, தாவணி போடுவது என்று சொன்னாலும்… தமிழரின் கலாச்சாரம் திரையரங்குதான் என்பது போல் பாஸ்டனில் மட்டும் பதினைந்து காட்சிகள் நிறைவரங்காக திரள்கிறார்கள். ஆன்மிகமாக விவேக் தேட சொல்கிறார். தமிழ்ப் பெண்களைத் தேட வேண்டிய இடம் சினிமா கொட்டகை.
 • ‘யு’ என்று போட்டாலும் ஷிட் என்று எஸ்-வோர்ட் வருவதால் ஆங்கிலத்தில் ஆரே போட்டு விடுவார்கள்.
 • ஓவர் டு சில வசனங்கள்
  • காசு கொடுக்கலேன்னா கக்கூஸ் கூட கட்ட முடியாது.
  • தமிழ்நாட்டில், கற்பை பத்தியும் கறுப்பை பத்தியும் பேசக் கூடாது
  • பால் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி தெரியலியே! டிகாஷன் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி இல்ல இருக்கு.
  • (மிளகாயாக விழுங்குவதைப் பார்த்து) பில்லி சூனியம் கேள்விப்பட்டிருக்கேன்… இது சில்லி சூனியம்
  • பழக பழக என்று வரவேற்கிறோம்!
  • (பல அர்த்தத்தைக் கொடுக்கவல்ல) ஆரம்பத்தில் எல்லாரும் இப்படித்தான் சொல்வாங்க
  • காட்டிக் கொடுக்க சொல்றீங்களா?
   இல்ல… நட்டைக் காப்பாத்த சொல்றேன்!
 • இடைவேளைக்கு முன் சுமன் சொல்லும் அண்ணாமலை பால், பாட்சா ஆட்டோ, உழைப்பாளி கூலி உதிர்ப்பு… சீரியஸ் காமெடி
 • சென்னையில் ஜே-7 காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி செய்த புகாரின் அடிப்படையில் தலைவர் கைதாகிறார். J-7→ வேளச்சேரி. இது எம்.ஜி.ஆருக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இடம்: அங்கேதான் உள்ளாட்சித்துறை அமைச்சர் முக ஸ்டாலின் வசிக்கிறார்.
 • படையப்பா‘வில் வாட் எ மேன் சொல்லவைத்த அசம்பாவிதம் போல் எதுவும் இல்லாமல் நெஞ்செல்லாம் நிமிர்த்தி வைத்திருக்கிறார்கள்.
 • ஆதியின் பதுக்கல் பணத்தை கறக்கும் காட்சி, திருவிளையாடல் ஆரம்பத்தில் பிரகாஷ்ராஜ் x தனுஷ் கல்லறைப் பணப்பெட்டி பரிமாற்றத்தை நினைவுறுத்தினாலும், தி.ஆ காட்சியமைப்பு மச் மச் பெட்டர்.
 • ஷங்கருக்கு லாஸ் வேகாஸ் ரொம்பப் பிடிக்கும் என்று தெரிகிறது. டிஸ்னி, யூனிவர்சல் என்று சுற்றுலாவும் சென்றிருக்கிறார் என்று அறியப் பெறுகிறோம்.
  • வேகாசின் மிராஜ் ↔ வாஜி வாஜி;
  • பெலாஜியோ ↔ சஹானா;
  • எம்.ஜி.எம். டிஸ்னி சண்டைக்காட்சிகள் ↔ ட்ரைவ் – இன் கார் துரத்தல்
 • வியன்னா-வின் முகமூடிகளும், முதுமை நீங்கிய முக்காபலாவின் கலைவையுடனும் ‘அதிரடி மச்சான்!’ – ரொம்ப நாளைக்கு பேர் சொல்லும் பாடல்
 • ஜெயா டிவி மைக் கூட சிவாஜி முன் நீட்டப்படுகிறது. படம் தாமதம் ஆன வேகத்தில் ஆட்சி கூட மாறிவிடலாம் என்னும் பாதுகாப்பு கலந்த புரிந்தூனர்வு போல.
 • மேலும் ஒரு முக்கிய தகவல்: நயந்தாராவுக்கு innie; ஷ்ரியாவுக்கு outie.

பள்ளியில் இருந்து வந்த மகள் என்னிடம் ‘அப்பா ஒரு ரகசியம்’ என்றாள்.

மிரட்சியுடன் ‘பத்திரமா வச்சுக்கறேன்… சொல்லு’ என்றேன்.

‘S-இல் ஆரம்பிக்கும் ரெண்டு கெட்ட வார்த்தை கத்துண்டேன். யாரிடமும் சொல்லக்கூடாதவை’ என்கிறாள்.

‘எனக்கு ஒண்ணுதானே தெரியும்!’

“They are very bad words pa.”

“What are they!!?”

“One is ‘Shut-up’ and the other is ‘Stupid'”!

‘ஓ…’! கொஞ்சம் சிரிப்பு & பெருமூச்சு.

செய்தித்தாளில் F***, B*****d என்று போட்டு பலுக்கப் பிழையில்லாமல் புரிந்துகொள்ள வசதிப்படுத்துவது போல் ஆதி… நீ ஒரு *தி… என்று சொல்ல வந்தேன்; ஆனால் கபோதி என்று மூடிக்கிறார்கள்.

பலரும் சொல்வது போல் படம் நெடுக பாடல் காட்சியில் மட்டுமே சங்கர் ‘உள்ளேன் அய்யா’. மற்ற இடங்களில் அந்நாளில் ‘அண்ணாமலை‘ இயக்கப் பணித்தபோது வசந்த் சொன்னது போல் ‘ரஜினி படத்துக்கெல்லாம் இயக்குநர் எதுக்குய்யா! குப்பத்து ராஜாவில் இருந்து ரெண்டு சீன்; இன்னும் அங்கே இங்கே என்று பீராஞ்சாலே போதுமே’ என்று டபாய்த்திருக்கிறார்.

‘அன்னிய’னின் நேரு ஸ்டேடியம், ‘இந்திய’னின் நிழல்கள் ரவி லைவ் ரிலே, ‘ஜென்டில்மேன்’ நீதிமன்றம், ‘முதல்வன்’ இன்டெர்வ்யூ எல்லாம் கேட்கவில்லை. மினிமம் கியாரண்டியாக ‘பாய்ஸ்’ பெற்றோர் மீட் கூட அமையாதது ரஜினியின் பயந்தாங்கொள்ளித்தனமாகக் கூட இருக்கலாம்.

துடிக்கும் கரங்க‘ளில் ஜெய்சங்கர் வில்லனாக பணம் பறக்கவிட்டு ஏழைச் சிறுவனை இடைவேளைக்கு முன் சாவடித்து அகமகிழ்வார். இங்கே வில்லன், பணத்துக்காக மிதிபட்டு மரணமுறுவதை மொட்டை பாஸ் சிரித்து புளகாங்கிதமடைகிறார்.

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் Republican கட்சியின் தாரக மந்திரம்:

 • வரியைக் குறைப்போம்; வருமான வரியே போடாத நிலைக்கு இட்டுச் செல்வோம்!
 • அரசாங்கம் ஒதுங்கி நிற்கும்; சேவைகளை சமுதாயமே தன்னிறைவாக்கிக் கொள்ளும்!
 • மக்களே அனைத்துக்கும் முனைப்பெடுக்க வேன்டும்;
 • முதலாளிகளை முன்னிலைப்படுத்தும் முகமாக பொதுப்பணித்துறை அடக்கி வாசிக்கும்.
 • எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர்களை சார்ந்திராத நிலையை உருவாக்கித் தருவோம்!

சிவாஜி சொல்வதும் அதுதான்.

10 responses to “Boss of Sivaji Spoilers – Fult(h)an Boston

 1. பின்னிப் பெடலெடுத்துட்டீங்களே.
  ஜோஸ்யத்த பத்தி ஒண்ணுமே சொல்லல? அங்கவை சங்கவை கறுப்பாயிருப்பதெல்லாம்ுன்க்க கண்னுக்கு படலியா?

 2. நன்றி சிறில்.
  ‘அருணாசல’த்துக்குப் பின் ரஜினி, ரஜினியாக நடித்த படம் என்று தோன்றுகிறது.

  சிவாஜி சூப்பர் படமா? « வடக்கு மாசி வீதி படித்தீர்களா?

  ஜோசியம் & கறுப்புப் பெண்கள் குறித்தாவது சப்பைக்கட்டு (அதாங்க… மாத்துக் கண்ணோட்டம்) வைக்கலாம் 😛

  ஜோசியம் – விதி வலிது என்றாலும், அதை மதியால் வென்று ‘செத்துப் பிழைக்கிறார்’
  கருமைத் தோற்றம் – ரஜ்னி வெள்ளை மாவு பூசிக் கொண்டு வந்தாலும், ஷ்ரியா ‘உங்க மனசுதாங்க முக்கியம்’ என்று சொல்வதில் இருந்தே, புறவயங்களைப் பார்த்து சிவாஜி மயங்கவில்லை என்று தெளிவாகிறது 😉

 3. பத்மா அர்விந்த்

  //தமிழ்ப் பெண்களைத் தேட வேண்டிய இடம் சினிமா கொட்டகை// Interesting. ஜனநாயகம் என்றாலே மக்களே தங்களை தாங்களாக கவனித்துக்கொள்வது, அரசாங்கத்தை நம்பி இருப்பதில்லை என்றுதானே மக்களே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே நிறைய சமுதாய நிறுவனங்கள் (கொள்ளை அடிக்க கொஞ்சம், பொறுப்பாய் கவனிக்க மீதி)தோன்ருகிறது, அவற்றிற்கு நிதியும் கிடைக்கிறது.
  மற்ற விமரிசங்களில் இருந்து மாறுபட்டு இருந்தது.

  ஆமாம், பாஸ்டன் மகளிர் அணியில் பொங்கல்/ ஆரத்தி இல்லையா?
  நான் இப்பதான் அண்ணாமலையே பார்த்தேன். இன்னும் நிறைய வருஷமாகும் இது பார்க்க.

 4. hi,

  I am not a rajni fan…but would like to say something…its behavior of a ordinarily human being, that they will talk unnecessarily about the big shots…but being in a good position you are not suppose to leave an comment like this….i know we will not be able to compromise everyone…its applicable for you also…if the reality is like this, you are suppose to comment like this about others….

  rgds,
  K.Vijayalakshmi

 5. i doubt…will you put this as a comment in your website???????

 6. ஜெயா TV , Republican தாரக மந்திரம் பற்றி சொல்லி இருக்கிறீர்களே.. நான் Hillary கிட்ட சொல்லின்னு ஒரு வசனம் வருதே கவனிச்சீங்களா?

  அன்புடன் விச்சு

 7. //‘அன்னிய’னின் நேரு ஸ்டேடியம், ‘இந்திய’னின் நிழல்கள் ரவி லைவ் ரிலே, ‘ஜென்டில்மேன்’ நீதிமன்றம், ‘முதல்வன்’ இன்டெர்வ்யூ எல்லாம் கேட்கவில்லை. மினிமம் கியாரண்டியாக ‘பாய்ஸ்’ பெற்றோர் மீட் கூட அமையாதது ரஜினியின் பயந்தாங்கொள்ளித்தனமாகக் கூட இருக்கலாம்.//

  அந்த ஆடிட்டர்ஸ் மீட்’டும் அதில் வழங்கப்படும் இலவச அறிவுறைகளும் இந்த வகையை சார்ந்தது இல்லையா?

 8. —அந்த ஆடிட்டர்ஸ் மீட்’டும் அதில் வழங்கப்படும் இலவச அறிவுறைகளும்—

  அதில் அடி வழங்கியதுதான் ஞாபகம் இருக்கு! 😉

 9. Pingback: Is Google biased towards Rajni? - Condemning the hijacking of Dasavatharam « Snap Judgment

 10. Pingback: வாரணம் ஆயிரம்: ச்சும்மா அதிருதுல்ல! (இரண்டாம் பாகம்) « Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.