Tag Archives: Privacy

அரசியல்-தத்துவ விளக்கம்

அமெரிக்க அரசியலமைப்பின் சில திருத்தச் சட்டங்கள் (Amendments) தொடர்ச்சியான சுதந்திர அமைப்பாக எப்படி செயல்படுகின்றன? அதாவது முதல் (First), நான்காம் (Fourth), இரண்டாம் (Second) திருத்தங்கள் சேர்ந்து சிந்தனை → வெளிப்பாடு → பாதுகாப்பு என்ற சுதந்திர சங்கிலியை எவ்வாறு உருவாக்குகின்றன?

1. முதல் திருத்தச் சட்டம் (First Amendment): சிந்திக்கவும் பேசவும் உரிமை

இந்த சட்டம் கீழ்கண்ட சுதந்திரங்களை பாதுகாக்கிறது:

  • – பேச்சுச் சுதந்திரம்
  • – ஊடகச் சுதந்திரம்
  • – மதச் சுதந்திரம்
  • – அமைதியாக கூட்டம் நடத்தும் உரிமை
  • – அரசாங்கத்திடம் மனு அளிக்கும் உரிமை

இதன் அடிப்படை கருத்து: தனி மனிதன் தன் கருத்தை சுதந்திரமாக சிந்தித்து அதை வெளிப்படுத்தும் உரிமை.

அமெரிக்க நீதிபதி ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் ஜூனியர்:

“அரசாங்கத்தை விமர்சிப்பதாக இருந்தாலும் கூட, அந்தக் கருத்துகளை சிந்தித்து, அவற்றை பொதுவெளியில் வெளிப்படுத்த சுதந்திரமாக இருக்கிறீர்கள்.”

அதாவது:

படி 1:
நீங்கள் நினைப்பதை பொதுவாக வெளிப்படையாக சொல்லும் உரிமை இருக்க வேண்டும்.
—-

2. நான்காம் திருத்தச் சட்டம் (Fourth Amendment): அரசின் அத்துமீறலிலிருந்து பாதுகாப்பு

இந்த சட்டம் மக்களை கீழ்கண்டவற்றிலிருந்து பாதுகாக்கிறது:

  • – காரணமில்லாத வீடு சோதனை ரோதனை
  • – சட்டவிரோத கைதுகள்
  • – அரசின் அத்துமீறிய கண்காணிப்பு

இதன் முக்கியத்துவம்:

அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் வீட்டை சோதிக்கலாம் அல்லது கண்காணிக்கலாம் என்றால் மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்த பயப்படுவார்கள்.

அதனால்:

படி 2:
நீங்கள் பேசும் உரிமையை பயன்படுத்த அரசின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு இருக்க வேண்டும்.
—-

3. இரண்டாம் திருத்தச் சட்டம் (Second Amendment): இறுதி பாதுகாப்பு

இந்த சட்டம் ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை பாதுகாக்கிறது.

அரசியல் தத்துவவாதிகள் கூறுவது:

  • – அரசு அடக்குமுறையாக மாறினால்
  • – மக்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டால்

அப்பொழுது மக்களிடம் எதிர்க்கும் திறன் இருக்க வேண்டும்.

அதாவது:

படி 3:
பேச்சு சுதந்திரமும் சட்டப் பாதுகாப்பும் தோல்வியடைந்தால், மக்களுக்கு தங்கள் சுதந்திரத்தை காக்கும் கடைசி வழி இருக்க வேண்டும்.

சுருக்கினால்:

“முதல் திருத்தத்தைப் பாதுகாப்பதற்காகவே இரண்டாம் திருத்தம் இருக்கிறது”

4. அமெரிக்க ஸ்தாபகர் பார்வை

அமெரிக்காவின் நிறுவனத் தலைவர்கள் — குறிப்பாக
ஜேம்ஸ் மாடிசன் மற்றும்
தாமஸ் ஜெஃபர்சன் — நம்பிய கருத்து:

– உரிமைகள் அரசாங்கம் கொடுப்பவை அல்ல
– மனிதர்களுக்கு இயற்கையாகவே உள்ளவை
– அரசியலமைப்பு அவற்றை அரசின் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கும்.

இந்தக் கருத்தின் மொத்த அமைப்பு

நிலைஅர்த்தம்
சிந்தனைமனிதனின் சுதந்திரமான மனம்
First Amendmentகருத்தை வெளிப்படுத்தும் உரிமை
Fourth Amendmentஅரசின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு
Second Amendmentஅடக்குமுறைக்கு எதிரான இறுதி பாதுகாப்பு

சிந்தனை சுதந்திரம் (First Amendment), அரசின் அத்துமீறலிலிருந்து பாதுகாப்பு (Fourth Amendment), மற்றும் சுதந்திரத்தை காக்கும் இறுதி திறன் (Second Amendment) ஆகியவை சேர்ந்து அமெரிக்க சுதந்திர அமைப்பை உருவாக்குகின்றன.

எண்ணம்: பாலா / எழுத்து: ஏ.ஐ.

சென்னை மெரினா ராஜாங்கம் – IV

ஊக்கம் கொடுத்த பதிவு: பா ராகவன் பேப்பர் » நடந்த கதை

Posters-Marina-Beach-Chennai-Madras-Sightseeing-Child-Laborசென்னை எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரையில் முன்பெல்லாம் மணல் இருக்கும். இப்பொழுது சிறிய மீன்களும், செதில்களும், இருக்கின்றன. மணல் வீட்டுக்கு பதிலாக leftover மீன் குழம்பு வைத்து சிறார் விளையாடுவார்.

காலையில் தெரிந்த முகத்தினரின் அணிவகுப்பு சொல்ப அதிகம். தாமதமான ஏழரைக்குக் கூட சாருஹாஸன், செய்தி வாசிப்பாளர், நெடுந்தொடர் தம்பதியினர் கூட்டம்.

கூட்டுத்தொழுகை, பிரார்த்தனை க்ளப், அரசியல் பேச்சுக்கு வரும் லாரிக் கூட்டம் போல் ஒரு சேர உடற்பயிற்சி பாவ்லா காட்டுவது தமிழருக்கு மனமகிழ்வு தருகிறது. முகமன் கூறிக்கொள்கிறார்கள். சேர்ந்து இளநீர் சாப்பிடுகிறார்கள். நேற்றைய செய்தியைத் தாங்கிய ‘தி ஹிந்து’வை உரையாடி மகிழ்கிறார்கள்.

ஃபேஸ்புக், ட்விட்டர், குறுஞ்செய்தி என்று குறுகி, தொடர்பை கைவிட்ட தலைமுறை அல்ல அவர்கள். கூட்டுப்புழு சமுதாயத்தில் நேரடி சந்திப்பை மதிப்பவர்கள்.

Parthasarathy-Temple-Triplicane-Entrance-Railway-Station-Chennai-Beach-Mareenaமதியம் மனமகிழ் மன்றத்தில் கேரம், மாலை கன்ட்ரி க்ளபில் ஐபிஎல்லுடன் ராயல் சேலஞ்சர் என்று வழக்கப்படுத்திக் கொண்ட உயர்வட்ட கூட்டம். காலையில் ஐஸ் ஹவுசில் இருந்து லைட் ஹவுஸ் வரை நடந்துவிட்டு பதநீர், இளநீர், வறுகடலை, தர்பூசணி, கிர்னிப்பழம் என்று அப்பிடைசர் அருந்தி, ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவனில் மசாலா தோசையும் பூரி மசாலாவும் அடித்து துவம்சிப்பவர்கள்.

பாரம்பரிய லுங்கி முதல் மாறனின் அதிகாரபூர்வ ஆடையான பருத்தி அரைக்கால் சட்டை வரை எல்லாவிதமும் பார்க்கக் கிடைக்கிறது. தொடையோடு இறுக்கமான ஷார்ட்ஸ், டெரிலின் ஷர்ட் + முழுக்கால் சட்டை என்று டை கட்டாத குறையோடு தங்கள் நாகரிக அனுபவத்தை பறை சாற்றுபவர் அன்றாட வரவு போல் அத்யந்தமாக சூரிய நமஸ்காரம் செய்கிறார். குர்தி & நீல ஜீன்ஸ் அணியும் ஒருத்தரே ஒருத்தரும் வந்திருந்தார்.

Classical-Tamil-Research-Scholars-Institute-Languagesபெண்களுக்கு 33% சதம் வேண்டாம். 3% கூட தேறமாட்டார்கள். ஓடுபவர்கள் 1%. ஓடுபவர்களை விட குதிரை போலீஸ் அதிகம். பீச் ரோடில் இருந்தே பார்த்தசாரதி அழைக்கிறார். கூடிய சீக்கிரமே மேல்மருவத்தூர் சக்தி பீடம் பிரான்ச், சத்யசாய்பாபா சத்சங், காஞ்சி ஜெயேந்திரர் மட கிளை எல்லாம் அலங்கார வளைவுடன் அரோகரா போட வைக்கலாம்.

தம்பதியினருக்கு பாந்தமான இடம். பிரச்சினைகளை மனம்விட்டு பேச காலைப் புத்துணர்ச்சியுடன் தனிமையும் கிடைக்கும் இடம். கூட்டுக் குடும்பத்திலிருந்து தப்பிக்க தினசரி தேனிலவு தரும் தலம். நிறைய நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொண்ட மாதிரிதான் தெரிகிறது.

அமெரிக்காவின் கடற்கரையை எதிர்நோக்கும் சாலைகளில் பல்வேறு பொருளை விற்கும் பேரங்காடி வணி வர்த்தக மையங்கள் நிறைத்திருக்கும். இல்லையென்றால் விநோதமான வடிவமைப்புடன் ஏதாவது பெருநிறுவனம் 99 வருட குத்தகை எடுத்து 98வது மாடியில் போர்ட் மீட்டிங் நடத்திக் கொண்டிருக்கும். அதுவும் லேது என்றால், மடோனாவும் மரியா கரேவும் குடித்தனம் செய்யாமல் காலியாகப் பூட்டி வைத்திருக்கும் மாட மாளிகை அமைந்திருக்கும். இங்கே அரசினர் கட்டிடங்கள், முக ஸ்டாலின் புகுந்து தடுத்தாட்கொண்ட இராணி மேரி கல்லூரி, மாணவர்களே பூட்டிக் கொள்ளும் பிரெசிடன்சி காலேஜ். தொட்டுக்க அரசினர் முன்மாதிரி (மாடல்) மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.

கோவிலுக்கு சென்றால் இதே நடை பயிலலாம். இன்னும் உக்கிரமாக, வேகமாக புண்ணியம் வரவழைக்கும் வீரியத்துடன் சுழலலாம். ஆனால், சுலோகமோ, நாமாவளியோ முணுமுணுக்க வேண்டும். நாலாவது வெளிப்பிரகார சுற்றுக்குப் பின் ‘என்ன வேண்டுதலோ?’ என்று மூணாம் வீட்டு பச்ச கேட் மாமி கண்ணால் விசாரிப்பாள். எட்டாவது சுற்று முடிந்தவுடன் ‘என்னடீயம்மா பிரச்சினை?’ என்று நேரடியாகவே பிக்கல் பிடுங்குவாள்.

பீச்சில் அதெல்லாம் கிடைக்கமாட்டாது.

சென்னையின் முக்கிய சாலைகளில் நடக்க இயலவில்லை. எப்பொழுதுமே பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தராத நகரம். நடராசா சர்வீஸில் செல்பவர்களை கீழே வீழ்த்துவது இருசக்கர வாகனவோட்டிகளின் முக்கிய கடமை. இப்பொழுது அது நாற்சக்கர காலம். ஹோண்டா சிடியும் டொயோட்டா இன்னோவாவும் ஸ்கோடாவும் முட்டி மோதி விளையாடும் 99.999% ஸிக்ஸ் ஸிக்மா சென்னையில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடம் மெரினா வாக்கிங்.

‘ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் பயன்படுத்தாதே!’

Harry Lewis: “Blown to Bits: Your Life, Liberty, and Happiness After the Digital Explosion.”

Almost everything we now do on a regular basis, from sending emails, taking photographs, writing text messages, calling on our cell phones, downloading music, typing on our computers, and using our credit and ATM cards, all of it generates information. And every single day the endless information generated by our ever-expanding digital footprints is recorded, tracked, searched through, sold, analyzed, and saved forever.

Some might call this hyper-networked digital explosion and its potential for collaboration and innovation a kind of utopia. But others warn that it also raises important concerns about privacy, identity, freedom of expression, accountability, and the future of democracy.

1. செல்பேசியை அணைத்து விட்டாலும் ஒட்டு கேட்கலாம்.

அந்தக் காலத்தில் வீட்டுக்குள் புகுந்து, வேவு பார்க்கும் கருவியை நிறுவினார்கள். ஆனால், இன்றோ, மிகவும் சுளுவாக சாஃப்ட்வேரை உங்களின் செல்பேசிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

அதன் பிறகு உங்களின் ஒவ்வொரு பேச்சையும் ஒட்டுக் கேட்கலாம்.

இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மாஃபியா தலைவர்களின் குற்றத்தை நிரூபித்து இருக்கிறார்கள்.

எஸ்.வி சேகருக்கு குளிராடி போட்டது நதியா காலம். எஃப்.பி.ஐ. செல்பேசி மூலம் உங்களைப் பார்ப்பது இந்தக்காலம்!

~oOo~

2. தான்யா ரைடரின் சம்பவம்:

மனைவியைக் காணவில்லை என்று கணவன் போலீசை நாடுகிறார். காவல்துறையோ, ‘உங்கள் மனைவி சுதந்திரத்தை நாடி, பிறிதொரு துணையைத் தேடி சென்றிருக்கலாம். எனவே, அவரைத் தேட மாட்டோம். தேடவும் கூடாது!’ என்று மறுத்து திருப்பியனுப்பி விடுகிறது.

ஒரு வாரம் கழிகிறது.

ஒரு வேளை கணவனே, தன் மனைவியைத் தீர்த்துக் கட்டியிருப்பாரோ என்று காவலர்களுக்கு சந்தேகம் வருகிறது. அதனால் அவரை குற்றஞ்சாட்டுவதற்காக தான்யாவைத் தேடத் துவங்கினார்கள்.

கார் விபத்தில் சிக்கிய தான்யா குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு வாரப் பட்டினியில் சேதமடைந்த காரில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப் பட்டார்.

பெண் சுதந்திரம் வேண்டுந்தான்! குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க வேண்டுந்தான்!!

அதற்காக, கணவன் புகார் தந்தால் எஃப்.ஐ.ஆர். போட மறுக்கலாமா?

~oOo~

3. நீங்கள் நல்ல தந்தையா? பொறுப்பான தாய்?

இது விவாகரத்து கேஸ்.

கடுமையாக உழைக்கும் மனைவி சொல்கிறாள், ‘நான் என் குழந்தையை மிக சிறப்பாக கவனித்துக் கொள்வேன்’.

கணவனின் வக்கீல் தன் பக்க சாட்சியாக சுங்கச்சாவடிகளில் கட்டும் வரி ரசீதுகளை கொண்டு வரலாம். முன்னாளில் நீங்கள் எப்பொழுது அலுவலில் இருந்து வீட்டுக்கு வந்தீர்கள், எத்தனை நேரம் குழந்தையோடு செலவழித்தீர்கள் என்றெல்லாம் கண்டுபிடிக்க இயலாது.

ஆனால், இன்றோ, நாற்சக்கர சாலைகளில் இருக்கும் toll boothகளைக் கொண்டு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவதை சொல்லி, மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு வாதிட்டு வென்றும் விடலாம்.

சௌகரியமாக இருக்கிறது என்பதற்காக EZ-Pass போட்டு வைக்கிறோம். அதைக் கொண்டு, எங்கே, எப்போது, எத்தனை மணி நேரம் செலவழிக்கிறோம் என்பதை நாம் விரும்பாமலே உலகுக்கு சொல்கிறோம்.

~oOo~

4. வாடிக்கையாளர் அட்டை

ஷாப்-ரைட் ஆரம்பித்து சிவியெஸ் வரை எல்லோரும் தங்களின் நுகர்வோருக்கு ‘தள்ளுபடிக்கான அடையாள அட்டை’ தருகிறார்கள்.

என்ன சரக்கு அடிப்பீர்கள், அந்த சரக்கு அடித்தால் என்ன நோய் வருகிறது, நோய் வந்தால் என்ன வாங்குவீர்கள் என்றெல்லாம் இதன் மூலம் அறிய முடியும்.

~oOo~

5. விமான நிலையத்தில் CLEAR முறை

ஒசாமா பின் லாடனின் வேலையை அமெரிக்கா எளிதாக்கி இருக்கிறது. தீவிரவாதி விமானத்திற்குள் நுழைய வேண்டுமா?

வெறும் 80 டாலர் போதும் ஜென்டில்மேன்.

உங்களுக்கு சோதனையில் இருந்து விலக்குத் தரப்படும். பாதுகாப்பாக நீங்கள் ‘பாதுகாப்பு சோதனை’யை தவிர்க்கலாம்.

ஆல் க்ளியர்!

~oOo~

6. கூகிள் சக்தி

உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்கிறீர்கள்?

“மூக்கொழுகல் AND காதடைப்பு” என்று கூகிள் செய்வோம். உங்களை மாதிரியே பக்கத்து தெரு பங்கஜம், அதே பேட்டையில் வசிக்கும் பேட்ரிக் என்று பன்மடங்காக ஒரே மாதிரியான தேடல் வர ஆரம்பிக்கிறது.

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், அரசாங்கத்திற்கு தகவல் போவதற்கு முன், இன்டெலிஜென்ஸ் அறிந்துகொள்வதற்கு முன் கூகிளுக்கு ‘இந்த நோய், இப்படிப்பட்ட இடத்தில்’ பரவ ஆரம்பித்துள்ளது.

நோய் சரியாகாத படசத்தில் ஓரிரண்டு நாள் கழித்துதான் டாக்டரை நாடுவோம். ஆனால், எல்லா தகவலையும் அதற்கு பல மணி நேரம் முன்பே கூகிள் கணித்துவிடுகிறது.

இன்ஃபோர்மேசன் இஸ் பவர்!