Tag Archives: Analysis

அமெரிக்காவில் 'ஒபாமாவுக்காக தமிழர்கள்' – அதிபர் தேர்தல் பதிவுகள்

1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

ஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்?’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார்.

‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன?’ என்று கேட்டதற்கும் சரியான பதில் அளிக்கவில்லை.

இந்தப் பேட்டி நடந்த அன்றே (செப்டம்பர் 11, 2008) பேலினுடைய மகனும் மற்றும் சிலரும் ஈராக்கிற்குக் கிளம்பிய சந்தர்ப்பத்தில் பேலின் பேசிய உரையில் ‘இன்று அமெரிக்கக் கட்டடங்களை வீழ்த்தி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்த நம் எதிரிகளோடு இவர்கள் போர் புரியப் போகிறார்கள்’ என்றார். ஈராக்கிற்கும் ஈராக்கை ஆண்ட சத்தாம் ஹுசேனுக்கும் 2001ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று புஷ்ஷே மறைமுகமாக ஒப்புக்கொண்ட பிறகும் அது பற்றி பேலினுக்குத் தெரியாமல் இருப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம் என்கிறார்கள்.

சென்ற வருடம்தான் பாஸ்போர்ட் பெற்ற, அமெரிக்க வெளியுறவு பற்றியும் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றியும் எதுவும் தெரியாத இந்த பேலினைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் குடியரசுக் கட்சி ஓட்டுப் போடும் தகுதி பெற்ற அமெரிக்கக் குடிமக்களை இழிவுபடுத்தியிருக்கிறது என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அங்கலாய்க்கிறது.


2. வீரகேசரி: பதிவு! – Pathivu.com: “அமெரிக்கத் தேர்தல் மாற்றத்திற்கு வித்திடுமா? – நோர்வேயிலிருந்து வெற்றித் திருமகள்”

செனட்டர் பராக் ஒபாமா 158.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், செனட்டர் ஹிலரி கிளின்டன் 140.7 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் 58.4 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலவிட்டிருப்பதாக ஓர் அண்ணளவான கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.ஆசிய பிராந்தியத்திலே விவசாயத்துறைக்கு அளிக்கப்படாத முக்கியத்துவத்தினால், ஏறத்தாழ 218 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு நிதித்தொகை செலவிடப்படுவது அவசியம்தானா என தமது ஆதங்கங்களையும் விசனங்களையும் பல ஊடகங்கள் எழுப்பி நிற்கின்றன.


3. News view – TamilWin.com:

அமெரிக்காவிலுள்ள தமிழர்களை உள்ளடக்கிய ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்‘ என்ற அரசியல் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

‘ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வானது பொஸ்னியாவையோ அல்லது மொன்ரிநிக்ரோ, கிழக்குத்தீமோர், கியூபெக், ஸ்லோவாக்கியா, கொசோவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தீர்வைப் போன்று அமைய முடியும். தூதுவர் ரிச்சட் கோல்புக்கின் நிபுணத்துவத்தை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்” என்று அமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.


4. மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று!!! | மயிலாடுதுறை சிவா: ஓபாமாவிற்காக ஓர் நாள்!

உடல்நல மருத்துவம் – ஒபாமா & மெகயின் திட்ட ஓப்பீடு

உடல்நலம்/சேமநிதி காப்பீடு (Health care/Insurance) – பத்மா அர்விந்த் தொடர்ச்சியாக

நன்றி: Comparing healthcare plans – Boston.com

மேலும் வாசிப்புக்கு:

1. CJR: Twelve Questions About Health Care for Tonight’s Debate: “There’s more to talk about than taxing benefits”

2. Worlds apart on healthcare – The Boston Globe: “Obama’s plan is like the new Massachusetts universal coverage law with one exception”

3. McCain plan may cost Northeast – The Boston Globe: “John McCain’s healthcare plan would bring a dramatic change to the existing system: People would get a flat tax credit worth as much as $5,000 instead of the tax break on the insurance they now get at work, allowing them more flexibility to buy insurance on their own.”

அமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது? – வெங்கட்

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

அமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.

அரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.

யுத்தங்கள்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக அமெரிக்காவிற்கு உன்னத பிம்பம் இருக்கிறது. அமெரிக்காவின் வெற்றிகளை (போர் வெற்றிகளையல்ல, ஈடுபட்ட போர்கள் எதிலுமே அமெரிக்கா தீர்மானமான வெற்றியடையவில்லை, இதில் வியட்நாம், குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் ராணுவத் தலையீடுகளைக் கொண்ட க்யூபா, சிலி, நிகராகுவா, போன்ற பல விஷயங்களிலும் அமெரிக்கா பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் சோகமான உண்மை, சரியாகப் பாதி அமெரிக்கர்கள் இந்தத் தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடும் மயக்கத்திலிருக்கிறார்கள்).

போர்வீரர்களை முன்னிருத்தும் நிலை அமெரிக்காவில் ஒழிந்தாலேயொழிய அமெரிக்காவிற்கு உலகில் மதிப்பு கூடப்போவதில்லை, உலகிற்கும் அமெரிக்காவின் தொல்லை குறையப்போவதில்லை. எல்லாவற்றையுமே இராணுவத்தால் தீர்த்துவிட முடியும் என்ற அசட்டுத்தனத்தை அமெரிக்கா கைவிட்டாக வேண்டும். ஆனால் ஜார்ஜியாவை நேட்டோவில் கொண்டுவர ரஷ்யாவின் மீது போர் தொடுக்கலாம், அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று உளறும் ரிவால்வார் ரீட்டா ஸேரா பேலின் போன்றவர் துனை ஜனாதிபதியாக வந்தால் இதற்கெல்லாம் சந்தப்பம் குறைவுதான்.

புவி சூடேற்றம்

எண்ணைய்க்குத் துளையிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்த்துவிட முடியும் என்பது அபத்தமானது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உலகளாவியச் சூடேற்றத்திற்குச் செவிமடுப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். சூடேற்றத்தின் அச்சுறுத்தலையே ஒரு புதிய துவக்கத்திற்கான வாய்ப்பாக மாற்றும் தீர்க்கம் வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

மாசுகட்டுப்பாடுகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் சரியும் என்பது பொய்க்கூற்று. (குறிப்பிடத்தக் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதராம அச்சுறுத்தப்படும் என்பதே உண்மை). கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டை ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், போன்ற நார்டிக் நாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது.

ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புதுப் பொருளாதாரத்திற்குத் தங்களைத் தயார் செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்கா தேக்கநிலையை அடைந்திருக்கிறது. ஹைட் ரோ கார்பன் பொருளாதாரத்தில் விடிவில்லை என்பதை அமெரிக்க அதிபர் உணரவேண்டும். தவிர்க்க முடியாத பொருளாதாரச் சரிவிலிருக்கும் ஜப்பான் கூட இன்றைய பொருளாதார இறக்கத்தை மறுக்காமல் அதேசமயத்தில் வரவிருக்கும் புதுப் பொருளாதாரத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது.

வளர்நிலையிலிருக்கும் சீனா சில வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது. இவற்றுடன் ஒப்பிட அமெரிக்கா தேக்கச் சிந்தனையில் இருக்கிறது.

பொருளாதாரம்

வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், இலக்கற்ற வலதுசாரித்தனம் அழிவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு சமீபத்தில் சரிந்துகொண்டிருக்கும் வீட்டுச் சந்தை உதாரணம். ஃபானி மே, ஃப்ரெட்டி மாக் போன்ற ‘மொதலாளிகள்’ நேர்மையாக இருப்பார் என்று கருதி அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை இது. சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது பெருமளவுக்கு உண்மை என்றாலும் அதற்கான காலத் தேவை மிக அதிகம், அந்த இடைவெளிகளில் பெரும்பாலும் அழிந்துபோகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.

இடது சாய்வுள்ள சந்தைப் பொருளாதாரம் எப்படி சிறப்பாக நடக்க முடியும் என்பதற்கு , ஸ்விட்ஸர்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடனிலிருந்து உதாரணங்களைப் பெறமுடியும். உலகிலேயே இந்த நாடுகளில்தான் வரிகள் மிக அதிகம்; பொருளாதார வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் இந்த நாடுகள் இருக்கின்றன.

அப்படியான அரசுகள் இரும்புக்கரத்துடன் உலக வல்லரசாக இருப்பது இயலாததுதான், ஆனால் உலக நண்பனாக, ஆதர்சமாக இருப்பது சாத்தியம். குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது, எனவே தீர்மானமான வலது/இடது சாரி சிந்தனைகள் ஒருக்காலத்திலும் வெல்லமுடியாது. எப்படி தீர்மானமான கம்யூனிசம் படிப்பதற்குக் கவர்ச்சியாக, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்கின்றதோ அதே போல முற்றான மூலதனவாதமும் வறட்டுக் கற்பனைதான்.

நெகிழ்ச்சியற்ற பொருளாதாரக் கொள்கைகளால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து அமெரிக்க அதிபர் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது அமெரிக்காவுக்கும், பொதுவில் உலகிற்கும் நல்லது.

அறிவியல்

ஊனமுற்றோர், வறியோர், முதியோர், வேலையிழந்தோர், போன்றவர்களைக் காலில் போட்டு நசுக்குவது வலதுசாரிகளின் பொழுதுபோக்கு. ஆனால், தமக்கென்று வரும்பொழுது தற்பால் நாட்டம் கொண்ட மகளை நெருக்கி அணைத்துக் கொள்வார்கள் (டிக் செய்னி), கரு ஆதாரச் செல்களில் (Embryonic Stem Cell) ஆராய்ச்சி நடத்தியாவது அல்ஸைமருக்கு மருந்து காணலாம் (நான்ஸி ரேகன்) என்பார்கள்.

தலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது தங்கள் குடும்பத்திற்கு மாத்திரம் இடதுசாரிகளாக மாறுவது இவர்கள் வழக்கம். தனிநபர் செல்வத்தாலும், ராணுவ பலத்தாலும் பணக்கார நாடாகவும், வல்லரசாகவும் இருக்கலாம், ஆனால் முழுக்க ஏழ்மையற்ற, அவலங்களற்ற, பயங்களற்ற நல்லரசாக இருப்பது சாத்தியமில்லை. வரப்போகும் அமெரிக்க அதிபர் உன்னதத்தை நாடுபவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அயல்நாட்டுக் கொள்கை

இராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எனவே அதைவிட்டு விரைவில் வெளிவருவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் படிப்படியாக வெளியேவர முயற்சிக்க வேண்டும்.

சீனாவைப் பற்றிய மயக்கங்கள் நிறைந்த தோற்றம்தான் அமெரிக்காவிலும் உலகிலும் இருக்கிறது; இது பொதுவில் யாருக்குமே நல்லதில்லை. தோழமைகாட்டி சீனாவை வெளியே அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.

வெனிசூலா, ஈரான் போன்ற நாடுகளிடம் மீசையை முறுக்குவதில் எந்த வீரமும் இல்லை. ஒன்றும் பேசாமலிருந்தாலே போதுமானது. இப்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.

பாரம்பரியம் (பழமைவாதம்)

சிறுவயது முதலிருந்தே அமெரிக்காவில் எனக்கு ஆர்வம் இருந்தது அறிவியல், நுட்பத்தில் அவர்களின் அபார சாதனைகள் வாயிலாகத்தான். தடைகளற்ற ஆர்வம் பெருகும் சிந்தனைகளினால் அமெரிக்கா அறிவியல் உலகிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது. கடந்த பத்து/பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை வளர்ந்து வருகிறது (இது ரீகன் காலத்தில் தொடங்கியது; புஷ் இளையர் காலத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது).

மதத்தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டற்ற சிந்தனை என்ற அமெரிக்க வாழ்முறையை பாறையிடை வேராகப் பிளந்து வருகிறது. வலதுசாரி அரசியல் முழுக்க முழுக்க இதையே நம்பியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியல் சிந்தனைகள் மீது, கற்பித்தல் மீது, அறிவியல் நிர்வாகத்தின் மீது என்று பல முனைகளிலும் அறிவியல் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறது.

நானோநுட்பம், உயிர்நுட்பம், மரபியல் தொடங்கி சூடேற்றம், மருத்துவ ஆய்வு என்று பல துறைகளில் இன்றைய ஆட்சியாளர் கேட்க விரும்புவதை மாத்திரமே அறிஞர்கள் சொல்ல வேண்டும் என்று வற்புத்தப்படுகிறார்கள். இந்தப் புற்று நோய் முற்றுமுன் இதிலிருந்து அமெரிக்கச் சிந்தனையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் வரவிருக்கும் அதிபருக்கு இருக்கின்றது. அடிப்படை அறிவியலுக்கான ஆதரவு அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்து வருகிறது (மறுபுறத்தில் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது).

அறிவியலுக்கு எதிராகத் திரும்பிவரும் அமெரிக்க சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியது வளமையான அமெரிக்க எதிர்காலத்திற்கு முக்கியம்.

5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?

நாளையுடன் முடியும்

குடியரசு வேட்பாளர்: சாரா பேலின் – வலையக கணக்கு வழக்கு

சாரா பேலின் துணை ஜனாதிபதியாகிறாரோ இல்லையோ… அமெரிக்க நிறுவனங்களும் பங்குச்சந்தையும் அதலபாதாளம் பாய்ந்தாலும் குடியரசுக் கட்சியின் உபவேட்பாகர்தான் செய்திகளில் எக்கச்சக்கமாய் புழங்குகிறார். அவரைக் குறித்து கண்டதும் கேட்டதும்:

வலைப்பதிவுகள்/கருத்து:

  • சாரா பேலின் பெண் என்னும் கருத்தாக்கத்தில் எப்படி புகைப்படம் எடுக்கிறார்கள், அமெரிக்க ஊடகங்களில் எத்தகைய நிழற்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்த ஏமி வில்சனின் பதிவு: Picturing Sarah Palin « working
  • வாக்கு வங்கி அரசியலாக கைக்குழந்தையை அலைக்கழிக்கிறாரா (அ) அமெரிக்காவில் அலுவலில் சின்னஞ்சிறுசுகளை கொண்டுவர முடியுமா: Sarah Palin and bringing your baby to work – Maryland parents :: The Baltimore Sun’s Kate Shatzkin

ஊடகங்கள்/வாழ்க்கை குறிப்பு:

பொதுக்கூட்டம்/பேட்டி தர அச்சம்:

இணையம்/தேடல் புராணம்:

  • சாரா பேலின் என்று கூகுளிப்பவர்களில் பெரும்பாலானோர் ‘சூடான படங்கள்‘ என்றே வினவி இருக்கிறார்கள். தேடற்பதங்கள்:
    1. Vogue Magazine
    2. Photos
    3. Beauty Pageant
    4. Bio
    5. Biography
    6. Pictures
    7. Scandal
  • எட்டு தங்கம் வென்ற மைக்கேல் ஃபெல்ப்ஸ், கிசுகிசு பத்திரிகைகளில் ஆஸ்தான நாயகி ப்ரிட்னி ஸ்பேர்ஸ், பாப் கலாச்சாரத்தின் பாரிஸ் ஹில்டன், பராக் ஒபாமா ஆகிய அனைவர் குறித்த ஒட்டுமொத்த தேடல்களை விட சாரா பேலின் குறித்த தேடல்களே அதிகம்:

  • ஆகஸ்ட் 29க்கு முன் பேலின் சம்பந்தமாக யூட்யுபில் 300 விழியங்கள் இருந்தன. தற்போதைய எண்ணிக்கை: 130,000+
  • சாரா பேலினின் விக்கிப்பிடியா பக்கத்தை ஒன்றேகால் மில்லியன் வாசகர்கள் எட்டிப்பார்த்துள்ளனர்:

உல்டா புல்டா/அங்கதம்:

  • ஆனந்த் சொன்னது போல் “அமெரிக்க கொடி பிகினி உடையோடு, துப்பாக்கியை உயர்த்திக் காட்டும் படத்தை, யாரேனும், மின்னஞ்சலில் அனுப்பி இருக்கக்கூடும்.” அது போன்ற பல்வேறு போட்டோஷாப் ஆக்கங்களை ‘மீடியா ஷிஃப்டின் ஐடியா லேப்’ ஆராய்கிறது.
  • டினா ஃபே சாரா பேலிநாக வந்திருந்த சாடர்டே நைட் லைவ்:

புறத்தோற்றம்/பிரபலம்:

இளமைக்காலம்:

  • சின்ன வயதில் சாரா பேலின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்ததின் விழியம்:

மின்னஞ்சல்:

குறிப்புகள்/இன்ன பிற:

இன்னும் கொஞ்சம் வேணுமா?


பதிவுகளின் சார்பு நிலையும் ஊடக போக்குகளும் – இடது x வலது

பெரும்பாலான அமெரிக்க அரசியல் பதிவுகள் பராக் ஒபாமாவிற்கு சார்பாக இயங்குகிறதா?

எத்தகைய விஷயங்கள் வலைப்பதிவுகளில் அலசப்படுகின்றன?

எவர் அதிகம் கவனிக்கப்படுகிறார்?

அயலுறவுக் கொள்கையில் எந்த நாடு முக்கியத்துவம் பெறுகிறது?

முழுமையான அலசல்களுக்கு: PoliticalTrends.info – Political Bias