Tag Archives: பக்தி

கனகதாசரின் வேண்டுதல் – சரணாகதியின் ஆத்மா

ಪಲ್ಲವಿ (Pallavi)

ತೊರೆದು ಜೀವಿಸಬಹುದೇ ಹರಿ ನಿನ್ನ ಚರಣಗಳ

ಬರಿದೆ ಮಾತೇಕಿನ್ನು ಅರಿತು ಪೇಳುವೆನಯ್ಯ

ಚರಣ 1 (Charanam 1)

ತಾಯಿ ತಂದೆಯ ಬಿಟ್ಟು ತಪವಮಾಡಲುಬಹುದು

ದಾಯಾದಿ ಬಂಧುಗಳ ಬಿಡಲುಬಹುದು

ರಾಯ ತಾ ಮುನಿದರೆ ರಾಜ್ಯವನೆ ಬಿಡಬಹುದು

ಕಾಯಜಾಪಿತ ನಿನ್ನಡಿಯ ಬಿಡಲಾಗದು

ಚರಣ 2 (Charanam 2)

ಒಡಲು ಹಸಿಯಲು ಅನ್ನವಿಲ್ಲದೆಲೆ ಇರಬಹುದು

ಪಡೆದ ಕ್ಷೇತ್ರವಬಿಟ್ಟು ಹೊರಡಬಹುದು

ಮಡದಿ ಮಕ್ಕಳ ಕಡೆಗೆ ತೊಲಗಿಸಿಯೇ ಬಿಡಬಹುದು

ಕಡಲೊಡೆಯ ನಿನ್ನಡಿಯ ಘಳಿಗೆ ಬಿಡಲಾಗದು

ಚರಣ 3 (Charanam 3)

ಪ್ರಾಣವನು ಪರರು ಬೇಡಿದರೆತ್ತಿ ಕೊಡಬಹುದು

ಮಾನದಲಿ ಮನವ ತಗ್ಗಿಸಲುಬಹುದು

ಪ್ರಾಣನಾಯಕನಾದ ಆದಿ ಕೇಶವರಾಯ

ಜಾಣ ಶ್ರೀಕೃಷ್ಣ ನಿನ್ನಡಿಯ ಬಿಡಲಾಗದು

Tamil Transliteration & Meaning (தமிழ் உச்சரிப்பு மற்றும் விளக்கம்)

பல்லவி (Pallavi)

பாடல்:

தொரெது ஜீவிஸபஹுதே ஹரி நின்ன சரணகள

பரிதெ மாதேகின்னு அரிது பேளுவெனய்ய

அர்த்தம்:

ஹரியே! உந்தன் திருவடிகளைத் துறந்து (விட்டு) என்னால் உயிர்வாழ முடியுமா? வீண் வார்த்தைகள் எதற்கு? உண்மையை முழுமையாக உணர்ந்தே நான் இதைச் சொல்கிறேன் ஐயா.

சரணம் 1 (Charanam 1)

பாடல்:

தாயி தந்தெய பிட்டு தபவ மாடலுபஹுது

தாயாதி பந்துகள பிடலுபஹுது

ராய தா முனிதரெ ராஜ்யவனெ பிடபஹுது

காயஜபித நின்னடிய பிதலாகது

அர்த்தம்:

தவம் செய்வதற்காக பெற்ற தாய் தந்தையரைக் கூட விட்டுப் பிரிந்து செல்லலாம். பங்காளிகள் மற்றும் உறவினர்களை விட்டுவிடலாம். அரசன் கோபப்பட்டால் இந்த நாட்டையே விட்டுச் சென்றுவிடலாம். ஆனால் மன்மதனின் தந்தையே (திருமால்), உன் திருவடிகளை என்னால் ஒருபோதும் விடமுடியாது.

சரணம் 2 (Charanam 2)

பாடல்:

ஒடலு ஹஸியலு அன்னவில்லதெலெ இரபஹுது

படெத க்ஷேத்ரவ பிட்டு ஹொரடலுபஹுது

மடதி மக்கள கடெகெ தொலகிஸியே பிடபஹுது

கடலொடெய நின்னடிய களிகெ பிதலாகது

அர்த்தம்:

உடல் பசியால் வாடும்போது உணவின்றி கூட இருந்துவிடலாம். நான் கஷ்டப்பட்டு ஈட்டிய நிலத்தை / வீட்டை விட்டுவிட்டு வெளியேறலாம். மனைவி குழந்தைகளைக் கூட விலக்கி தள்ளி வைத்துவிடலாம். ஆனால் கடலின் நாதனே (பாற்கடல் வாசனே)! உன் திருவடிகளை ஒரு கணம் கூட என்னால் விட முடியாது.

சரணம் 3 (Charanam 3)

பாடல்:

ப்ராணவனு பரரு பேடிதரெத்தி கொடபஹுது

மானதலி மனவ தக்கிஸலுபஹுது

ப்ராணநாயகனாத ஆதிகேசவராய

ஜாண ஸ்ரீகிருஷ்ண நின்னடிய பிதலாகது

அர்த்தம்:

என் உயிரைப் பிறர் கேட்டால் அதை அப்படியே எடுத்துக் கொடுத்துவிடலாம். என் மானத்திற்காக மனதை அடக்கிப் பணிந்து போகலாம். என் உயிரின் நாயகனான ஆதி கேசவராயனே! அறிவுக்களஞ்சியமான ஸ்ரீ கிருஷ்ணனே, உன் திருவடிகளை என்னால் ஒருபோதும் விட முடியாது!

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கி

Imposter syndrome is a predictor of success. If you feel like a fraud, research suggests you may be on the right track.

இந்தியாவில்தான் நாடி ஜோசியம், ஜாதகம், பரிகாரம், கைரேகை, கிளி சீட்டெடுத்தல் என்று நினைத்திருந்தேன். அமெரிக்காவும் அதே கதிதான் என்பது ஜார்ஜ் டபிள்யூ புஷ் (பெரியண்ணன்) நீதிபதிகள் என்னும் கிளிகளின் சீட்டுக்களில் ஜெயித்தபோது தெரிந்தது. அதன் பின் நேற்றைய தேர்தலில் யேசு கிறிஸ்துவின் உதவியுடன் டெட் குரூஸ் (ஜோ. டி. குரூஸ் மாதிரியே பெயர் கொண்டிருப்பவர்) ஜெயிப்பது வரை உறுதியாகிக் கொண்டே இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக அறிவியல்தனமான இரு புத்தகங்கள்:

Medical Medium: Secrets Behind Chronic and Mystery Illness and How to Finally Heal by Anthony William

Medical Medium - Secrets Behind Chronic and Mystery Illness and How to Finally Heal

அறிவியல் என்றால் கவனிப்பது, கவனித்ததை அளவெடுப்பது, அளவுகளைப் பரிசோதிப்பது, பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதன் அடிப்படையில் இறுதி முடிவை நிரூபிப்பது என்பார்கள். அந்தோணி வில்லியம் அந்த வகையைச் சேர்ந்தவர் அல்லர்.

கியானு ரீவ்ஸ் நடித்து ‘கான்ஸ்டாண்டின்’ என்று ஒரு பேய் + சாமியார் + கிறித்துவ பூதம் படம் வரும். அதில் வருவது மாதிரி நான்கு வயதில் அவருக்கு முன் அரூப உருவங்கள் தோன்றி அவருக்கு ஞானப்பால் கொடுத்திருக்கிறது. நான்கு வயதிலேயே நேராகச் சென்றார். பாட்டியின் மார்பில் கை வைக்கிறார். ‘பிஞ்சிலேயேப் பழுத்திடுச்சு’ என்போமே… அது போல். அப்பொழுதே கையடித்து சொல்லி இருக்கிறார்: “நுரையீரல் புற்றுநோய்” (தமிழில் சொல்லவில்லை; லங் கேன்சர் என்று ஆங்கிலத்தில் மழலையாகச் சொன்னதை கற்பூரம்… சாரி… மெழுகுவர்த்தி அடித்து சத்தியம் செய்கிறார்).

அடுத்த நாள் காலையே மருத்துவமனைக்கு பாட்டியை அழைத்துச் செல்கிறார்கள். சரியான கருநாக்கு. அப்படியே பலித்துவிட்டது.

நீங்கள் வில்லியமை நினைத்தவுடன் தரிசிக்க முடியாது. அதற்கு பெரிய க்யூ நிற்கிறது. லாட்டரியில்தான் நோயாளிகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் தேர்ந்தெடுத்தாலே உங்களின் பிணி பரிபூரண குணமடையும். அறுவை சிகிச்சையின்றி மருந்தின்றி மாத்திரையின்றி குமுதம் பிரார்த்தனை கிளப் இல்லாமல் நலமடைவீர்கள்.

இவருக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று சொல்லவும் வேண்டுமோ! நீங்கள் விசுவாசியா?

Cure: A Journey into the Science of Mind Over Body by Jo Marchant

Cure - A Journey into the Science of Mind Over Body by Jo Marchant

எஸ்.வி. சேகரின் ‘காட்டுல மழை’யில் சில புகழ்பெற்ற கடிஜோக்குகள் உண்டு. கீழ்கண்ட சம்பவத்தைப் படித்தால் வடிவேலு, விவேக் கூட நினைவிற்கு வரலாம்.

”முதல் நாள் கொதிக்கும் தண்ணீரில் கால் வைத்தேன். என்னால் அதைத் தாங்கவே முடியவில்லை.

அடுத்த நாள் என்னுடைய பிடித்தமான விளையாட்டை ஐ-பேட் எடுத்து விளையாடிக் கொண்டே, அதே கொதிக்கும் வென்னீரில் காலை வைத்தேன். என்ன ஆச்சரியம்… சூடே தெரியவில்லை!”

திருநாவுக்கரசர் அன்றே பாடினார்:

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

காதலன் காதலியிடம் மயங்குகிறான். சிலர் ஃபேஸ்புக்கில் விழுகிறார். சிலர் ஆசானிடம் அடிமையாகிறார்கள். மனவசியம் எனலாம். தொழுகையில் லயிக்கலாம்.

எல்லாம் நம் சிந்தையில்தானே இருக்கிறது. பூதம் இருக்கிறது என நினைத்தால் அது நம்மை விழுங்கும். பூச்சிதான் இருக்கு, என்று நினைத்து எல்லாப் பிரச்சினைகளையும் நசுக்கு என்கிறார்.

’ஏமாறாதே… ஏமாற்றாதே’ என்று வாத்தியார் பாடியிருக்கலாம். கடைபிடிக்கவில்லையே!

திருக்குறள் : 1160

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.