Tag Archives: சினிமா

இளையராஜா பாடி இசையமைத்ததில் பிடித்தவை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.

16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்

21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட

26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்

31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!

36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)

61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை

66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே

71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே

76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)

81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு

86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது

91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)

95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே

101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு

106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்


கொசுறு:

icarusprakash

  1. தாலாட்டு மாறிப்போனதே – உன்னை நான் சந்தித்தேன்
  2. ஒரு கணம் ஒரு யுகமாக – நாடோடித் தென்றல்
  3. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
  4. சிறு பொன்மணி – கல்லுக்குள் ஈரம்
  5. கண்ணே என் கார்முகிலே -வா :: தங்கமான ராசா.
  6. மெட்டி மெட்டி இராகம் எங்கேயோ – மெட்டி
  7. துப்பாக்கி கையிலெடுத்து, ரெண்டு தோட்டாவு பையிலெடுத்து
  8. பொன்னோவியம், சங்கீதமாம் எங்கெங்கும் – கழுகு

kabishraj

  1. திண்டாடுதே ரெண்டு கிளியே – ஆனந்தக் கும்மி
  2. வீணைக்கு வீணை – வீரத்தாலாட்டு
  3. அம்மா என்னும் வார்த்தைதான் – தாலாட்டு கேட்குதம்மா
  4. மருதாணி அரச்சேனே – ராஜா கைய வச்சா
  5. வாடி என் கப்பக்கிழங்கே

Aravindank

  1. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா.. :: தேடி வந்த ராசா

nchokkan

  1. கத போலத் தோணும், இது கதையும் இல்ல … (வீரத் தாலாட்டு)
  2. ‘இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்’

வாரணம் ஆயிரம்: ச்சும்மா அதிருதுல்ல! (இரண்டாம் பாகம்)

முந்தைய விமர்சனத் தொகுப்பு

கோவில் மடப்பள்ளியின் அருகே கை கழுவ குழாய் போட்டிருப்பார்கள். பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பிற்பாடு அங்கு கை நனைத்துக் கொள்வது தாத்பர்யம். அந்தக் குழாய் மித்தத்திலேயே பக்தகோடிகளின் குழந்தைகள் வாந்திபேதி முதல் நான்கு மாதம் முன்பு அனுமனுக்கு சாத்திய வெண்ணெய் முதற்கொண்டு எல்லாமும் மிதக்கும். கற்பூர வாசமும் கமழ, திருவாதிரைக் களியும் கிடைக்க, விறுவிறு துளசியும் கிடைக்கும் சன்னிதானத்தில் இறை மணத்திற்கு குறைவே கிடையாது.

வாரணம் ஆயிரமும் மணக்கிறது.

கற்பூர அரூபமாக தந்தையின் பேரன் பாசம். திருவாதிரைக் களி தரும் அசட்டு தித்திப்புடன் குளிர் தென்றலாகிய பக்கத்து வீட்டு சினேகிதி கம் மனைவியின் பாசம். புதினா போன்ற காரசார சுவையும் இல்லாமல் கருவேப்பிலை போல் லோக்கல் சரக்காகவும் இறங்காத இதமான துளசியாக காதலி. மசாலா அதிகமாகி கடமுடா செய்த குழந்தைத்தனமாக புது தில்லி பயணங்கள்.

திரைப்படமோ, எழுத்தோ, ஓவியமோ! எப்பொழுது நிறைவுறுகிறது?

எனக்கு வீட்டுப்பாடம் செய்கின்ற மகள் அதை முடித்துவிட்டால், இந்தப் பதிவின் இறுதி வாக்கியமும் எழுதப்பட்டிருக்கும். நடிகருக்கு அடுத்த படம் வரை. இயக்குநருக்கு தயாரிப்பாளரின் நிதிநிலை.

வாரணமாயிரத்தில் கவுதமிற்கு நிறைய பட்ஜெட் இருந்திருக்க வேண்டும். இழைப்பதற்கு பதில் இறைத்திருக்கிறார்.

கதாபாத்திரங்கள் எவ்வாறு பார்வையாளனுக்குள் உருவாகிறது?

சம்பவங்களால் நிறைந்தது வாழ்க்கை. திரைப்படம் முடிந்தவுடன் எந்த காட்சிகள் தங்கிப் போகின்றன? பேரனுக்கு கதை சொல்ல முடியாத தாத்தா தெரிகிறார்.

சிம்ரனிடம் வலியுறுத்தப்பட்ட ‘கிருஷ்ணனுக்கு உங்களைப் பிடிச்சிருக்காம்’ நிற்கிறதா?

Movies enact rituals; we know the form; watch 4 variations. Gr8 is the one with free will; சப் குச் சலேகா. but, don’t say that is realistic. – ஸ்னாப்ஜட்ஜ்

திரைப்படங்களில் எனக்குப் பிடித்ததாக மூன்று குணாதிசயங்களை சொல்லலாம்:

  1. அமைதியாக, ஆர்பாட்டமில்லாத மென் நகர்வு
  2. நளினமான நடை, கீறல் விழாத வசனம்
  3. குழப்பமான சங்கதி; ஏன் பிடித்திருக்கிறது என்பதை விளக்க முடியாத விவரிப்பு.

ஓக்லஹோமா குண்டுவெடிப்பு மிகச் சரியான அதிர்ச்சியை (#3) கொடுக்கிறது.

கல்லூரி சகாவிற்கு தினசரி காலை எட்டு மணிக்கு சந்திப்பு உண்டு. உலக வர்த்தக மையத்தின் எண்பதாவது மாடி அலுவலில் போய் உட்காராவிட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள் என்பான். விதிக்கப்பட்ட 9/11 அன்று மட்டும் வாசற்படித் தடுக்கி விழுந்து விடுகிறான். சிராய்த்த இடத்தில் பேன்ட்டை அவிழ்த்து பேண்ட் – எயிட் போட்டு முதலுதவி முடித்து, மீட்டிங்கைத் தவறவிட்டு போய் சேர்ந்தால், மீட்டீங்கில் இருந்தவர்கள் போய் சேர்ந்திருக்கிறார்கள்.

அன்று மட்டும்! நம்பமுடியவில்லை. நிஜ வாழ்க்கை. விதி?

நளினமான நடை, கீறல் விழாத வசனம் நிறையவே உண்டு. ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த பி சென்டர், சி சென்டர் என்று பிரித்தாளாத சூழ்ச்சி.

இறுக்கமான உள்பொதிந்த திரைக்கதையாகிய #1 மட்டும் மொத்தமாக சறுக்கி சிவாஜியின் சத்தத்தோடு தமிழ்ப்படமாக அரங்கேறுகிறது. அஞ்சல ஆட்டமாகட்டும்; வெறுமனே காதலர் ஆகி உல்லாசபுரியில் சல்லாசம் ஆகட்டும்; இராணுவ வீரனாக வெற்றி வாகை குவிப்பது ஆகட்டும்; வாசனைக்கு மசாலா அல்ல -> மசாலாவிற்கு நடுவில் பருக்கைகளாக சம்பவங்கள்.

டிஸ்னிவோர்ல்டில் மட்டுமே சாத்தியமாகும் இவ்வாறான கனவுலக நிகழ்வுகள் திரையில் அரங்கேற்றுவது ஸ்லம்டாக் மில்லியனராகும் இந்திய சினிமாவில் மட்டுமே சாத்தியம். எனவே விட்டுவிடுவோம்.

பராக் ஒபாமாவின் தாரக மந்திரம் போல் அப்பா கிருஷ்ணன் நம்பிக்கையாக காலந்தள்ளுகிறார். பில் க்ளின்டன் போல் சகலமும் தெரிந்த அப்பாவின் நிழலில் ஹில்லரியாக மகன் சூர்யா. சூர்யா உணர்ச்சிவசப்படுபவன். அப்பா பற்றற்ற ஞானியாக முன்னேறி செல்பவர். பையனோ கவிஞனை ஒத்த மனநிலையில் துடிப்பானவன்; செயல் வீரன். தந்தை அரசு உத்தியோகமாக காலத்தை ஓட்டுபவர். பிள்ளை ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்காவாக கடன் வாங்கி, முதுவலி அஜீத்தாக ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுபவன்.

ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் தெரிந்திருக்கும். கூண்டுக்குள் அடைத்த கிரிமினலையே காதலிக்க ஆரம்பிப்பது. அமெரிக்கா வந்த தொணதொணப்பு சூர்யாவின் தொண்ணூறு நாள் சிறையில் மேக்னா மாட்டிக் கொள்ள காதல் ஆரம்பிக்கிறது.

இதன் உல்டா ‘ரிவர்ஸ் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்’. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் மேல் சிறைக் காவலாளிக்கு அனுதாபக் காதல் தோன்றுவது. இது ப்ரியாவின் நிலை. போதை, குறிக்கோளின்மை என்று இலக்கற்ற வலைப்பதிவனாய் வீடெனும் சிறையில் தனியனாய் ஆன சூர்யாவை பக்கத்து வீட்டு ப்ரியா பச்சாதாப காதல் கொள்கிறார்.

  • மக்கள் மாறுகிறார்களா? இல்லை.
  • உலகம் மாறி விடுமா? ஆம்.

கல்லூரியில் சூர்யாவை சேர்த்துவிட்டு பிரியாவிடை கோரும் தந்தை கிருஷ்ணனுக்கும் போர்முனைக்கு செல்லும் சூர்யாவிற்கு வாழ்த்து சொல்லி அனுப்பும் தாத்தா கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் உண்டா? கிடையாது. இதெல்லாம் எப்போது உணர முடிகிறது?

கௌதம் மேனன் என்னும் கிருஷ்ணன் → சூர்யா எனப்படும் ‘வாரணமாயிர’த்தை ் → கல்லூரியாகிய திரையரங்கில் விட்டிருக்கிறார். அது எப்படி வளர்கிறது என்பது ‘வாரணம் ஆயிரம்’ கையில் கிடையாது. உலகம் என்னும் உங்களின் அனுபவப் பருக்கையில்தான் எங்கோ ஒட்டியிருக்க வேண்டும்.

‘ஒழுங்காப் படிச்சுடுவான்’ என்னும் நம்பிக்கை, ‘சரியா செஞ்சுடுவான்’ என்று இராணுவத்திலும் தொடர்கிறது. பையன் சூர்யாவும் அதே நம்பிக்கையில்தான் ‘அன்பு வெல்லும்’ என்று மேக்னாவை துரத்தினான். ‘நான் என்னை மீட்டெடுப்பேன்’ என்று மாற்றிக் கொள்ளும் முயற்சியாக ப்ரியாவை கரம்பிடிக்கிறான்.

‘இதைத்தான் செய்யவேண்டும்’ என்பது போன தலைமுறை உபதேசம். ‘மனதிற்கு விருப்பமான லட்சியத்தை எவருக்கும் உபத்திரவமில்லாமல் எப்படியாகினும் செய்து காட்டு’ என்பது இந்தக்கால தாரக மந்திரம்.

மேலும் சில பார்வைகளின் நறுக்குகள்

வாரணம் ஆயிரம்: எதிர்பார்ப்பும் மசாலாவும்

படம் பார்த்த கதை

  • நாலைந்து பேர்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்; கிட்டத்தட்ட 150 பேராவது வந்திருந்தார்கள். (பாஸ்டன் பக்கத்தில் மட்டும் மொத்தம் பத்து காட்சிகள்)
  • இணையமில்லாத பாலாஜியாக போதை சூர்யா துடித்து முடிந்த திரையரங்கு நிசப்தத்தில், பின் இருக்கை சிறுமி கேட்ட கேள்வி: “What happened to him ma? Why is he acting up like that?’
  • முஸாஃபிர்இல் சமீராவை பார்த்தவுடனேயே பூமிகா மாதிரி பொறுமை, நதியாவின் ஆளுமை, பானுப்ரியாவின் அழகு எல்லாம் சேர்ந்திருக்கும் இவரை தமிழுக்கு அழைக்க வேண்டாமோ என்று பொருமியது.
  • மூகாம்பிகா, மெக்கானிகல், மியூசிக் என்று ‘மின்னலே – 2’வாக இல்லாமல் இருந்தாலும், இடைச்செருகலாய் ஆங்காங்கே ஆசுவாசப்படுத்தியதாக வந்த விமர்சனங்கள் குழப்பியிருந்தது.

படம் எப்படி?

பார்வையாளர் வட்டம் யார்:

  1. நாற்பதைத் தாண்டி ‘நான் சின்னப் பையனாக இருந்தப்ப…’ என்று தொடங்குபவர்கள்.
  2. ‘நமக்குக் கிடைக்கும் நல்ல கணவன், கடைத்தேறும் காலம் வரை மெல்லிய மனங்கவர் காதலனாக இருப்பான்’ என்பதை நம்பும் மணமாகாத பெண்கள்.
  3. காக்க காக்க’வின் மிடுக்கையும் ‘மாயாவி‘யின் துடுக்கையும் ‘பேரழகன்‘ அமரிக்கையும் கொண்டாடும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்.
  4. ‘Chick flick பார்க்கணும்; ஆனா, தமிழில் இருக்கணும்’ என்றெண்ணும் ஆங்கிலேயர்கள்.
  5. ‘எனக்கு கமல் படம் பிடிக்கும்; ஆனா, அம்மா மட்டுமே ஆக்கிரமிக்கும் தசாவதார அதிமுக மாதிரி இல்லாமல், கலைஞர் குடும்ப அங்கத்தினர் போல் பலர் நிறைந்த திமுக வேண்டும்’ என்று ஆசைப்படும் சினிமா ரசிகர்கள்.

கதை:

என் மகள் எனக்கு நேற்று சொல்லியது: He meets this friend first. She dies. He marries another girl later. Now, his father dies.

அப்புறம்?

  • மிகக் குறைவான எதிர்பார்ப்புகளுடன் செல்ல வேண்டும்.
  • நான் சிறுவனாக இருந்தபோது என் பெற்றோர் ‘திரிசூலம்‘ இழுத்து சென்றார்கள். ‘இமயம்‘ போன்ற ‘எத்தனையோ தாங்கிட்டோம்! இதையும் பார்த்துட மாட்டோமா?’ என்பதை தவிடுபொடியாக்கிய சிவாஜி சாரின் நடிப்பு அங்கே எனக்கு கிடைத்தது. உங்களுக்கு இது இன்றைய சிவாஜியாகிய சூர்யாவின் நடிப்புக்கு திலகமாகவும், அடுத்த தலைமுறைக்கு மொக்கை அழுகையாகவும் தோன்றும்.

மொத்தத்தில்?

  • சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் கிடைக்கவில்லை. ஆனால், தொட்டுக்க சிக்கன் விங்ஸ் இருப்பதால் நெஞ்சில் பறக்கிறது.

வீடியோ பேட்டி


பதிவுகளும் பதில்களும்

சரித்திரம்

இதுவரை வந்த இவரின் எந்த படமும் சோடை போகவில்லை, ஏமாற்றியதில்லை. வாரணம் ஆயிரமும், ஏமாற்றவில்லை.

ஆனா என்ன ஒரே வித்யாசம்னா, கௌதம் மேனனின், மற்ற படங்களெல்லாம், டிவிடி வாங்கி வச்சுக்கிட்டு, மூணு நாலு மாசத்துக்கு ஒரு தரம், திரும்ப பாத்தாலும் போரடிக்காத வகையைச் சேர்ந்தவை. வாரணத்தை, அப்படியெல்லாம் திரும்ப திரும்ப பாக்கமுடியாது.

சர்வேசன்

லா அன்ட் ஆர்டர் பார்ப்பவருக்கு வேட்டையாடு விளையாடு அரிச்சுவடி என்றால் ப.கி.மு.ச.த்திலும் ஜெனிஃபர் ஆனிஸ்டனே வியாபித்திருந்தார். ‘மின்னலே‘வில் 80 ஹாக்கி அணியாக தங்கம் வென்று ‘காக்க காக்க’வில் 83 கிரிக்கெட் கபில் தேவாக இருந்த கவுதம், முந்தைய இரண்டில் மேட்ச் ஃபிக்சிங் கபில் தேவாக சறுக்கியதை, வாரணமாயிரத்தில் மீட்டெடுத்திருக்கிறார்.


கல்யாணம் செய்தால் திரையில் காட்டித்தான் ஆக வேண்டுமா?

ஒரு சந்தேகம்.

சூர்யா BE முடிக்கும் போது 22 வயசு.

அப்றொம், பிசினஸ் பண்ணி, வீடு கட்டி முடிக்க ஒரு ரெண்டு வருஷம் -> 24 வயசு.

அப்றொம் US visa + US visit ஒரு ஒரு வருஷம்? -> 25 வயசு.

அதுக்கு அப்றொம், போதை, டில்லி பயணம் ஒரு வருஷம்னு வெச்சிக்கலாம். -> 26 வயசு.

Armyல major ஆகறதுக்கு ஒரு 5 வருஷம்? (எனக்கு தெரில) -> 31 வயசு.

அதுக்கு அப்றொம், கல்யாணம் பண்ணி குழந்தை பொறந்து, குழந்தைக்கு 3 வயசு ஆகற மாதிரி காட்றாங்க. சோ இன்னொரு 4 வருஷம் அதுக்கு. ஆக க்ளைமேக்ஸ் அப்போ சூர்யாக்கு 35 வயசு ஆகுது.

குத்து ரம்யா ஒரு சீன்ல சூர்யாவ பாத்து, “உனக்கு 17 வயசு எனக்கு 15 வயசு, அப்போவே உன்ன எனக்கு புடிச்சுது” அப்டீன்னு சொல்றா. சோ படம் முடியும் போது குத்து ரம்யாக்கு 33 வயசு.

வெற ஒரு சீன்ல, குத்து ரம்யாவும், சூர்யாவோட தங்கையும் ஒரே க்லாஸ்னு சொல்றாங்க. ஆக தங்கைக்கும் படம் முடியும் போது 33 வயசு. ஆனா கல்யாணமே நடக்கல? தங்கைக்கு என்ன ப்ரச்சனனு எங்கயாச்சும் சொன்னாக்களா? நான் மிஸ் பண்ணிடேனா?

Truth

ஃபிகர் ஃப்ரீயா இருக்கா என்பதை எவ்வளவு டீசண்ட்டா கேட்கிறார்? தங்கைக்கு கல்யாணமாகவில்லை என்றும் சொல்லவில்லை.


ஆவக்கா பிரியாணி

வேல பாக்கிற கம்பெனி பசங்க எல்லாமா சேந்து வாரணம் ஆயிரம் படம் போறதுக்கு முடிவு பண்ணி இண்டெர்னெட்ல டிக்கெட் புக் பண்ண முடிவு பண்ணிருக்காங்க, அதுல இருந்த ஒரு தெலுகுப்பையன் அந்த குரூப்புக்கு எங்க நமக்கும் வாரணம் ஆயிரம் புக் பண்ணிருவாங்களோன்னு பயந்து எனக்கு ஒரு ஆவக்கா பிரியாணி புக் பண்ணிருங்கன்னு ஒரு முன்னெச்சரிக்கை மெயில் அனுப்பிருக்காரு, அந்த மெயில் லிஸ்ட்ல இருந்த தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.

குடுகுடுப்பை

🙂 😀 😛


Is it an adaptation?

The film was believed to be based on the Best Foreign Film Oscar Winner, ‘Character‘ Directed by Mike van Diem, The Netherlands.

Mohana Krishna

இந்தப் படத்தின் கதையைப் படித்தால் அப்படித் தெரியவில்லை!


மெதுவடை

அப்பா சூர்யா பரிதாபமாக இருக்கிறார்.

கோவி. கண்ணன்

ரஜினி ‘பாபா’ மாதிரி இருக்கார்னு சொல்லாமல் செய்துவிட்டாரே?!


அப்பன் பூஜையில் நுழைந்த கரடி மகன்

இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது.
:::
தசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை.

லக்கிலுக்

Bug testing என்பது கிடைக்கவே முடியாத தவறும் கண்டுபிடிக்குமாறு அமைய வேண்டும். அது போல் ‘நல்லா நடிச்சிருக்கான்யா!’, அருமையான மேக்கப், என்ன மாதிரி கேமிரா என்றெல்லாம் வெளிப்படையாக ஜிகினா ஒட்டாமல்; அதே சமயம் ‘வெள்ளித்திரைபிரகாஷ்ராஜ் சொல்வது போல் தலை வாழை இலையில் பொரியல், வடை, அப்பளம், லட்டு, காரக்குழம்பு என்று ரகரகமாகவும் கொட்டியிருக்கிறார் கவுதம்.


ஆறும் அது ஆழமில்ல

காதலனின் ஒப்புதலைப் பெற டெல்லி வரை வந்திருந்தவளை பிடித்திருக்கின்றது பிடிக்கவில்லை என்று ஒரு முடிவாக சொல்லாத முன் தொட முயற்சிக்கும் சூர்யாவிடம் அவர் காட்டும் கோபமும் கேள்விகளும் அற்புதம். எனக்கும் உன்னோட தோள்ல சாய்ந்துக்கனும் உன்னை கிஸ் பண்ணனும்னு ஆசைதான் ஆனால் என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்றதையே சொல்லாமல் தொட பார்க்கிற நீ என்ன மாதிரியான மனுஷன் என்கிற அவருடைய கேள்வி ஏனோ என்னை மிகவும் இம்சித்தது.

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்


தனயனைக் காத்த தந்தை

மகனின் வாழ்க்கை வழியாக தந்தையின் வாழ்க்கையை சொல்லும் விதம் புதிது. ஒரு இளைஞன் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டுமானால் அவனுக்கு அவன் தந்தையிடம் இருந்து கிடைக்கும் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும், சுதந்திரமும் முக்கியம்.

வீரசுந்தர்


சிறுவர்களுக்கான திரைப்படம் அல்ல

படம் நகர நகர நம்மோடு கதைச் சொல்லியும் கூட வந்து நம்மை அவர்களோடு இணைத்துக் கொண்டு படத்தை மெல்ல நகர்த்தும் திறனை கவுதமிடம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நம் தமிழ் இரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விரைவு, ஒரு நகைச்சுவை தடம் என்று எல்லாமும் கலந்த மசாலாவையே சுவைத்து பழகிவிட்டார்கள். அதுவே தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிந்தும் கூட இப்படிப்பட்ட சிகிச்சையை தைரியமாகத் தந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘கவிதை’. ஏனெனில் சிலருக்கு படம் புரியாமலுமிருக்கலாம். குழந்தைகள் நீதிக் கதையின் முடிவில் அப்ப ‘கதை என்ன சொல்ல வருது’ என்று கேட்பது போல் படத்தைப் பார்த்து முடித்த பிறகு என்ன சொல்ல முயற்சியிருக்காங்க என்று கேட்பவர்களுக்குச் சொல்ல எந்த நீதியும் இல்லை.

ஜெஸிலா


வாழ்க்கை என்ன? வாழ்ந்து பார்க்கலாம் அப்பாவும், வாழ்ந்து காட்டலாம் மகனும்

பதின்ம சூர்யா, கல்லூரி சூர்யா, காதல் சூர்யா, பொறுப்பான சூர்யா, தடுமாறும் சூர்யா, அலையும் சூர்யா, திரும்பும் சூர்யா, உழைக்கும் சூர்யா, சாகச சூர்யா, குடும்ப சூர்யா,அப்பா சூர்யா,சந்தோஷமாய் மரணிக்கும் சூர்யா. ஒவ்வொரு காட்சியிலும் புதிய சூர்யாவை பார்க்க முடிகிறது.
:::
சுயசரிதை படங்கள் கசாமுசா வென இருப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது. நேர்கோட்டில் எவரின் வாழ்வும் இல்லை.

அய்யனார்


🙂

நான்: படம் ஆரம்பித்ததுமே அப்பா சூர்யா சிரித்த முகமாகவே சாகிறார்! ஏன்?

சூர்யா: மீதி படம் பாக்க போகும் உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று! நினைச்சு பார்த்து இருப்பார்!

குசும்பன்


மிகை நாடும் கலை குறித்த மாற்றுப் பார்வை

தவமாய்த்தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற சேரன் படங்களை உயர் மத்தியதர வர்க்கக் குடும்பத்திற்குப் பொருத்தி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஆனால் தவமாய்த்தவமிருந்து, ஒன்பது ரூபாய் நோட்டில் இருக்கும் ஒரிஜினாலிட்டியும் பார்வையாளனின் மீதான தாக்கமும் வாரணத்திற்குக் கிடையாது. மணிரத்னம், ஷங்கர், மேனன் போன்ற வலதுசாரிச் சினிமா இயக்குனர்களின் படங்களிலிருந்து கேமிரா, இசை, அழகியல் போன்ற சமாச்சாரங்களைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அடிப்படை அறிவும் தர்க்கமும் கூட இல்லாது அம்மணமாய் நிற்பது தெரியும்

சுகுணாதிவாகர்


படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்கா குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல..என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காற்றில நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

வாழ்க்க ராட்டிணம் தான் டா,தினம் சுத்துது ஜோரா,
அது மேல கீழ மேல கீழ காட்டுது, தோடா!!
மொத நாள் உச்சத்திலிருந்தேன், நான் பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்,
அது யாருயென்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே!!
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளை இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!


நான் படம் பார்க்க போகலாமா?

நீண்ட நாவலைப் படிப்பது போல சில சமயங்களில் சுவாரஸ்யமகாவும் சில சமயங்களில் அயர்ச்சியூட்டுவதாகவும் சில சமயங்களில் போதை தருவதாகவும் சில சமயங்களில் வடுவேற்படுத்துவதாகவும், சில சமயங்களில் மென்முறுவல் பூக்க வைப்பதாகவும் இருந்த போதிலும் படிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒன்றிப்போக முடிவதாக இருப்பது படத்தின் சிறப்பு.

ஆசிப் மீரான்


உள்ளங்கவர் கதாநாயகி

குத்துரம்யா கொஞ்சம் பப்ளியாய் இப்ப அழகாகவே இருக்கிறார். பெங்களூர் பக்கத்தில் ரம்யாவை ‘கிழவி’ என்று சொல்வார்கள் என்றாலும் – பள்ளிக் கூட மாணவி உடையிலும் அருமையாக இருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேல், கேம்பிற்கு வரும் பொழுது புடவையில் ம்ம்ம் பிரம்மாதம்.

ஆனால் எனக்கு சமீரா ரெட்டியைப் பிடித்துப் போனது, அதற்கு மிகமுக்கிய காரணம் அந்தக் காதலாய்த் தான் இருக்க வேண்டும். RECயில் படித்த அமேரிக்காவில் MS Computers படிக்கும் பிகர் அப்படித்தான் இருக்கும்.

அந்தப் பொண்ணு பேசுற மாதிரி, அந்தப் பொண்ணு நடக்குற மாதிரி தான் இருக்கும். கௌதம் அதை உணர்ந்து செய்திருக்கிறார்.

அந்தப் பெண் சுகி(சுடிதாரில்)யில் வரும் எல்லா சமயங்களிலும் ஷால் அணிந்திருப்பதை கவனித்தீர்களா?

டிரெயினில் சூர்யா அவளிடம் சேட்டை செய்யும் பொழுது சமீராவின் ரியாக்‌ஷன் மனதைக் கவர்வதாக இருந்தது. இந்தப் பொண்ணும் கொஞ்சம் பப்ளியாய், சிரிக்கும் பொழுது அவள் முகமே சிரிக்கிறது.

மோகன்தாஸ்

W & McCain

‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ

கருத்துப் படம்:

கொசுறு படம்:

India Films to Indie Movies – Meme

முதலில் நாகார்ஜுனன் பதிவு. அதன் தொடர்ச்சியாக பிரகாஷ் மீம் வித்திட்டிருக்கிறார்.

1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.

1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

ப்ரியா.

1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?

  • பெண்கள் சினிமாவில் நுழைந்தால் ஆபத்து பின்தொடரும்.
  • ஸ்ரீதேவி நீச்சலுடை.
  • எவராவது கடத்தி சென்றுவிட்டால் குடும்பப் பாட்டு கற்றுவைத்துக் கொள்ளவேண்டும்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தமிழ்: தசாவதாரம் (ஆங்கிலம்; வால் – ஈ)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.

ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.

  • அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்
  • அன்பைத் தேடி – எத்தனையோ பழைய படங்களை புத்துருவாக்கம் செய்யும் நிலையில் இந்த premise நன்றாக இருந்தது. ஏதாவது கற்பனையில் சஞ்சரித்து நிஜத்தைக் கோட்டை விடும் நாயகன் சிவாஜி. (குழந்தை நடிகை) இந்திரா (காந்தி) & நாயகன் (ம.கோ.) ராமுவையும் கோர்த்து அரசியல் கிண்டல் செய்யும் சோ.
  • எவனோ ஒருவன் – சுவாரசியமான அறச்சீற்றம்

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.

குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.

குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.

லன்ச்-ப்ரேக்.

பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.

‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’

அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.

பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’

குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?

பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?

இரத்தத்தையும் வன்முறையையும் வலிக்க வலிக்க காட்டுவது.

சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.

7. தமிழ்ச்சினிமா இசை?

  • திருப்புகழ் கூட டி.எம்.எஸ் பாடிய சினிமாப் பாட்டு – ஆன்மிகம்
  • எஸ்.பி.பி பாடிய பாடல் என்பதால் சங்கராபரணம் – கர்நாடக/சாஸ்திரீய சங்கீதம்
  • வேப்பமரத்து உச்சி பேய் முதல் கல்லை மட்டும் கண்டால் – சமூகம்
  • மன்றம் வந்த தென்றலுக்கு என்பதும் கல்யாண மாலை கொண்டாடுவதும் – வாழ்க்கை

என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.

  • When Harry met Sally – ஆங்கிலம்
  • City of God – வேற்றுமொழி (துணையெழுத்து உபயம்)
  • Mississippi Masala (தேசி – NRI)
  • Raju Ban Gaya Gentleman – இந்தி

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.

பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.

வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.

என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.

சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  • அருண் வைத்யநாதன் போன்ற தமிழ் சினிமாவின் நாகேஷ் குகூனூர்கள்
  • தொலைக்காட்சி, இணையம், செல்பேசித்திரை என்று விரியும் வழிகள்
  • குறைந்த பொருட்செலவும் பத்து நிமிடத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கவைக்கும் நேர விரயமாகாத நுட்பங்களின் அணுக்கம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?

காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?

நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.

“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”

“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

வழிகாட்டலுக்கு மட்டுமாக சில விதிகள்:

  1. இசை, சினிமாப்படங்கள் போன்ற புள்ளிக்கு மூன்றுக்கு மேல் பட்டியல் போடுவதை தவிர்க்கலாம்
  2. புள்ளிவிவர ஆட்டத்தைத் தொடர ஐந்து பேருக்கு அழைப்பு விடுக்கவும்
  3. இந்த வழிகாட்டல்களை முற்றுமாக நிராகரிக்கலாம்; ஆனால், டக்குன்னு பதிவிடணும் 🙂

கருத்துப் படங்கள்: அமெரிக்க ஜனாதிபதி & தேர்தல் – MAD Mag

மேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு:

முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்

இசை: வித்யாசாகர்

பாடலாசிரியர்: வைரமுத்து

இயக்கம்: திருமுருகன்

ஆண்:
கட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்க
எட்டிமிதிக்கும் யானைய நம்புங்க

ஸ்டிக்கர் பொட்டுக்காரிகள நம்பாதீங்க
அப்புறம் சீரழிஞ்சு பிஞ்சிலேயே வெம்பாதீங்க

கண்ணால காதல் கொடுப்பா
ஒரு நேரம் வந்தா காதலுக்கே கடுக்கா கொடுப்பா

முந்தான தந்தியடிப்பா
நீ கிட்ட வந்தா மூஞ்சியிலே எட்டியுதைப்பா

பெண்:
ஒட்டிக் கெடக்கும் செங்கல நம்புங்க
…???… கூரைய நம்புங்க

கட்சி மாறும் ஆம்புளைய நம்பாதீங்க
பிறகு கத்திரியில் …???… வெம்பாதீங்க

சீனி முட்டா வாங்கிக் கொடுப்பான்
அத முடிச்சதுமே சீமத்தண்ணி ஊத்தியடிப்பான்

ராமனப் போல் நல்லா நடிப்பான்
உன்ன ஒறங்கவிட்டு காமனுக்கு தந்தியடிப்பான்

ஆண்:
கொளத்துல மீனிருந்தா
கொத்தவரும் கொக்கு வரும்

வெக்கயில தண்ணி கொறஞ்சா
கொளத்த மாத்தி றெக்கையடிக்கும்

பொம்பளையும் கொக்கு
இதப் புரிஞ்சுக்காதவன் மக்கு

பெண்:
பொட்டிபணம் உள்ளவரைக்கும்
பொம்பளயக் காலப்பிடிப்பான்

ரொக்கமுள்ள முண்டச்சி கண்டா
வெக்கம் விட்டு சீலத் துவைப்பான்

ஆம்பளதான் பொறுக்கி
இத அறியாதவ சிறுக்கி

ஆண்:
சத்தியமும் செஞ்சு கொடுப்பா
சமயம் பாத்து சாமத்துல கழுத்த அறுப்பா

சட்டிப்பானை எல்லாம் மறைப்பா
ஒன்ன உறங்கவிட்டு தாந்தின்னியா தின்னு தீர்ப்பா

பெண்:
தாலி தந்த பொம்பளையோட
தலகாணியில் ஒட்டிக் கெடப்பான்

கோழி கூவும் சாமத்துல
கொழுந்தியாளக் கட்டிப் பிடிப்பான்

கொரங்கு மனசுக்காரன்
அவன் குடிகெடுப்பதில் சூரன்

ஆண்:
கடலெல்லாம் பொங்கி வரட்டும்
காதல் மட்டும் மூழ்காதப்பா

பெத்தவுங்க கண்ணீர் சொட்டில்
மொத்தத்தையும் மூழ்கடிப்பா

பெரிய நடிப்புக்காரி
அவ பேச்சில்லாத லாரி

பெண்:
ஆம்பளைக்கு வருத்தமெல்லாம் …???…
பொம்பளைக்கு வருத்தமெல்லாம் இந்த மண்ணவிட்டு போகுற காலம்வரைக்கும்

பாடலைக் கேட்க: Kattipidikkum Karadiya :: Muniyandi Vilangiyal Moondramandu

ஒத்த முந்தைய பாடல்: மண்வாசனை :: பாட்டுக்கு பாட்டெடுத்தேன்

தொடர்புள்ள எசப்பாட்டு இடுகை: வே.சபாநாயகம் :: புதுமைப்பித்தன், ஒட்டக்கூத்தர், கம்பர், ஔவை

Dasavatharam, தசாவதாரம்: FAQ – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்

Bio Data of Kamal - Dasavatharam Special by Kumudham

படம் பெயர் என்ன? தசாவதாரம்

என்று பிறந்த நாள்? ஜூன் 12, 2008, வியாழன்

எத்தனை மணி நேரம்? மூன்று மணி 15 நிமிடங்கள் அல்லது 166 மணித்துளிகள்

என்ன வகை? மசாலா (சண்டை + காமெடி – டிராமா – காதல்)

குழந்தைகளுக்கு உகந்ததா? நடு விரலும், ‘ஷிட்’ பிரயோகங்களும், மல்லிகாவின் லேப் டான்சும், கழுத்தை அறுக்கும் கொலையும், கழுத்தில் குத்தும் கொலையும் உண்டு என்பதால் பதின்ம வயதினருக்கு மேல் பொருத்தமானது. ஆனால், ‘வேட்டையாடு… விளையாடு’ அளவு வன்முறை கிடையாது.

பெரியவர்களுக்குப் பிடிக்குமா? நிச்சயம் பிடிக்கும்

உலகில் யாருமே ஒரே படத்தில் பத்துக்கு மேல் வேடம் தரித்ததில்லையா? எட்டி மர்ஃபி மட்டுமே ஞாபகம் வந்தாலும், 1913- இலேயே 27 வேடம் கட்டியவர் இருந்திருக்கிறார்.

இரட்டை வேட அசின் எப்படி? விஜய் படத்திலேயே இதை விட பெட்டர் ரோல் கிடைக்கும் என்னும் மறக்கக்கூடிய நிலை.

அப்படியானால், மல்லிகா ஷெராவத்? சடாரென்று வந்து அரங்க ஆட்டத்திற்குரிய சாமுத்ரிகா லட்சணங்களைக் காட்டி. ஒய்யார நடை பயின்று இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் கமல் இருட்டடிக்கப் படுவார் என்பதாக துள்ளுகிறார்.

அமெரிக்காவை விட்டு வெளியேற ‘டிபார்ட்மென்ட் ஆஃப் ஹோம்லான்ட் செக்யூரிட்டி’ செல்ல வேண்டுமா? விசாவில் வந்தாலும் சரி; பச்சை அட்டை வைத்திருந்தாலும் சரி; குடிமகனாக இருந்தாலும் சரி. தேவையில்லை. ஆனால், மல்லிகா ஷெராவத்துக்கு (ஜாஸ்மின் கதாபாத்திரம்) க்யூவில் நிற்கிறாள். புதிதாக கமல்ஹாசன் (அதாவது, ஜார்ஜ் புஷ் குணச்சித்திரம்) உருவாக்கி இருக்கலாம்.

லாஜிக்? மூளைக்கு வேலை உண்டா? படம் பார்த்து களிக்க சிரமப்படத் தேவையில்லை. விஜய்காந்த், விஜய் போன்றவர்கள் நாயகர்களாக வரும் சினிமா போலவே இதுவும் ஜாலியாக ரசிக்க வேண்டியது.

அப்படியானால் ‘வண்ணாத்திப்பூச்சி விளைவு’ & ‘கசாகூளக் கோட்பாடு’ எல்லாம்?

திரைப்படத்தின் இசை, பாடல்கள்? வெளியாகுவதற்கு முன்பு ‘உலக நாயகனே’ & ‘கல்லை மட்டும் கண்டால்’ ரசித்தது. படத்தில் மல்லிகா ஷெராவத்தின் காபரே தவிர எந்தப் பாட்டுமே ஒட்டவில்லை. குறிப்பாக, அலகிட்டு அந்தரத்தில் தொங்கும்போது அரற்றத்தான் இயலுமே தவிர வாயசைக்க கூட முடியாது என்பது போல் உறுத்தலான இடையூறுகள்.

எத்தனை பாடல் ஒட்டுமாங்கனிகள்? ‘கல்லை மட்டும் கண்டால்’ குறித்து ஏற்கனவே பலர் சொல்லிவிட்டார்கள். படத்தின் இறுதியில் வரும் ‘உலக நாயகனே’ கூட ‘தில் மாங்கே மோர்’ ஹிந்திப்படத்திற்காக ஹிமேஷ் ரேஷமையா ஏற்கனவே இட்டதை திருப்பி சுட்டதுதான். தசாவதாரத்தில் பாடல்களே தேவையில்லை என்பது வேறு விஷயம்.

சரி… எங்கே உருப்படியான விமர்சனம்? பிரசன்னா :: நிழல்கள்: தசாவதாரம் – ஒட்டாத முகங்கள்

அந்த பத்து பெருமாள் அவதாரங்களுக்கும் கமல் வரும் தோற்றங்களுக்கும் ஆன தொடர்பு? புருனோ :: பயணங்கள்: மகாவிஷ்னுவின் பத்து வேடங்களும் – ஒப்பீடு / ஒற்றுமை / வேற்றுமை

டி20 ஆட்டம் தொலைக்காட்சியில் காட்டுறாங்க; டி10 போக கூப்பிடுறாங்க! என்ன செய்யலாம்? டி20 பாருங்க. கடைசி ஒவர் வரைக்கும் விறுவிறுப்பாக இருக்கும். யாரு மேட்ச் – ஃபிக்சிங் செஞ்சிருப்பாங்கன்னு தெரியாது. இங்கே கமல் சாகமாட்டார் என்பது கோலிவுட் நியதி.

அந்த முதல் பதினைந்து நிமிடம்? ‘பள்ளிகளில் நாடகம் நடத்தும் போது கடல் காட்சி இருந்தால் நீல நிற புடவையை ஆட்டி கடல் உணர்வை ஏற்படுத்துவார்கள்‘ என்று மாதவன் சொல்வது போல்; சீரீயஸ் காட்சிகளில் கமல் அழுது காமெடியாக்குவது போல் பல்லிளித்திருக்கிறது.

அப்படியானால் கிராஃபிக்ஸ்? தீவிரவாத குண்டுவெடிப்பு நடக்காமல் தடுப்பதில்தான் ‘உளவுத்துறை’யின் சூட்சுமம் என்பதாக கலக்கல் மேக்கப், சூப்பர் கிராஃபிக்ஸ் என்று சிலாகிக்காமல் இருப்பதில்தான் அந்தந்தத் துறையின் வெற்றி இருக்கிறது. பல்ராம் நாயுடுவும் கோயிந்துவும் பேசும் காட்சிகளில் கண்ணாடி பிரதிபலிப்பு, இறுதிச் சண்டை என்று பல இடங்களில் இருப்பதே தெரியல.

பத்தில் ஒட்டாதது எவர்? ஹீரோயிச கோவிந்த் இராமசாமி

பத்தில் நம்பமுடியாதவர் எவர்? ரொம்பவே அப்பாவியாக விபத்தை உண்டாக்கியவர் எவர் என்று கூட பார்க்காத கலிபுல்லா கான்

வெறுப்பேற்றுபவர்? ‘செத்துத் தொலையேண்டா’ என்று அவஸ்தைப்பட்டு, தமிழ் பேசத் தெரியாதது போல் சரளமாக அளவளாவும் அவ்தார் சிங்

தோற்றத்தில் பின்னி பெடலெடுப்பவர்? ஜப்பானியர். நடை, உடை, சண்டை எல்லாம் தூள். ஆங்கிலம் & தமிழ் பேசும் இடங்களில் மட்டுமே கமல் தலைதூக்குகிறார். மற்ற இடங்களில் ஏதோ ஒரு சப்பானிய வீரர் மட்டுமே இருக்கிறார்.

அசத்தல் மன்னர்? க்றிஸ்டியன் ஃப்ளெட்சர். கமல் எட்டிக் கூட பார்க்காமல் தூர நிற்கும் அமெரிக்க டாலருக்கு டஜன் கொலைகாரர்.

படம் பொலிடிகலி கரெக்டா? இறை மறுப்பாளர்களும் குற்றம் காண்கிறார்கள். நம்பிக்கையாளர்களும் ‘சூ’ கொட்டுகிறார்கள். அப்படியானால் நிச்சயம் ‘pc’.

சின்னத் திரையில் வரும்வரை காத்திருக்கலாமா? வேண்டாம். அத்தனை விளம்பரங்களுக்கு, கலைஞர் தொலைக்காட்சியில் கீழே ஓடும் துணுக்குகளுக்கு நடுவே பார்ப்பது தண்டனை. எனினும், குறுவட்டு வரும் வரை காத்திருக்கவும். அவசியம் 70 எம்.எம்.மில் பார்க்கும் நிர்ப்பந்திக்கத்தக்க பிரும்மாண்டம் இல்லை என்றாலும், வெள்ளித்திரையில் பார்த்தால் கொட்டாவி வராது.

படம் பார்ப்பதற்கு முன் காபியா? ஜாக் டேனியல்ஸ் சிறந்ததா? காது குளிக்குமளவு வசனமழை பொழிவதால் காபி சிறந்தது; ஆனால், அதன் மூலம் மூளை சுறுசுறுப்படைந்து ஓட்டைகள் விகாரமாகும் என்பதால் ஒரு பெக் ஜாக் டேனியல்ஸ் உகந்தது. சுருக்கமாக ஜாக் டேனியல்ஸ் அடித்துப் போனால் அவ்தார் சிங் அழும்போது சிரிக்கலாம்; காப்பி அடித்துப் போனால் அடுத்த கேள்விக்கான பதில் வரும்.

படத்தில் கமல் தவிர குறிப்பிடத்தகுந்தவர்? அலுவல் சகாவாக வந்து கோவிந்தை வீட்டில் வைத்துக் காட்டிக் கொடுக்கும் சுரேஷ். கை கால் ஆட்டி, முகத்தில் அஷ்ட கோணல்களையும் கொணர்ந்து சிறந்த மேடை நாடகத்திற்கான கூறுகளை விளக்கியிருக்கிறார்.

இந்த மாதிரி பதிவுகளை ‘திரைப்படங்கள் வந்ததுமே இணையத்தில் அவற்றை நாராகக் கிழிப்பவர்கள் எழுதுவது எனக்குப் பெரும்பாலும் புரிவதில்லை’ என்றிருக்கிறாரே ஜெயமோகன்? எனக்கு தமிழ் இலக்கிய விருதுகள் குறித்த ஞானம் மிக மிகக் குறைவு.

ஞானக்குழந்தை தெரிகிறதா? தெரிகிறது

அசின் தொப்புள்? 😀 😛

வசனம்? நிறைய

கதை? அது எதற்கு

மொத்தத்தில்? ட்விட்டரில் கதைத்ததுதான்

அவ்தார் சிங்கும் ஏமி வைன்ஹவுசும்: Kamal is a Visionary – Sridhar Narayan

கமல் வருங்காலத்தை புட்டு பிட்டு வைக்கிறார் என்கிறார் ச்றீதர் நாராயன்.

நிஜ செய்தி: BBC NEWS | Entertainment | Singer Winehouse has lung disease

தொடர்புள்ள விமர்சன பின்னூட்டம் #1: Sridhar Narayanan said…:

தொண்டையில் வளர்ந்திருக்கும் புற்று நோயை துப்பாக்கி தோட்டா துளைத்து சரி செய்து விட்டதாக கூட ஒரு காட்சி வருகிறது. There is no magic bullet for cancer என்று புற்றுநோய் மருத்துவர்கள் சாடலாம். அப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையை விரிவாக்கலாம்.

தொடர்புள்ள அறிவியல் ஆராய்ச்சி #2: Sridhar Narayanan said…: ஒரு Magic Bullet-னால் பாடகர் அவ்தார் சிங்கின் கேன்சர் குணமாகிறது.

தொடர்புள்ள ஆன்மிக சொற்பொழிவு மறுமொழி #3: Sridhar Narayanan said…: மனைவியின் மேல் மாறாப்பாசம் வைத்திருக்கும் அவ்தாரின் தொண்டை கேன்சரை ‘magic bullet’னால் சரி செய்கிறார்.

அவ்தார் சிங்கும் பாடகர்; ஏமி வைன்ஹவுஸும் பாடகர்!
Aவ்தார் சிங் முதலெழுத்தும் ஏ; Aமி வைன்ஹவுசுக்கும் ஏ!!
அங்கும் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் மேடையேறும் வித்தகர்; இங்கும் அரங்கேறுகிறார் ஏமி!!!

வாவ்!!!!

எமக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் ‘கமலின் தொலைநோக்கு பார்வைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு’ என்கிறார் ஸ்ரீதர் நாராயண்.

Is Google biased towards Rajni? – Condemning the hijacking of Dasavatharam

ஆஸ்க்.காம்

Tamil Cinema Search Results by Ask.com
சொல்லப்பட்ட பரிந்துரை: தசாவதாரம் ஸ்டோரீஸ்

லைவ்.காம்

Dasavatharam - Tamil Films

சொல்லப்பட்ட பரிந்துரை:

  • தசாவதாரம் கமல் மூவி
  • தசாவதாரம் தமிழ் மூவி

யாஹூ.காம்

Thasavatharam in Yahoo

சொல்லப்பட்ட பரிந்துரை: எக்கச்சக்கம்! ஆனால், ரஜினி, சிவாஜி இல்லை

கூகிள்.காம்

Dasavatharam - Kamalahassan

கூகிளின் பச்சை துரோகத்தை, தசாவதாரம் தேடுபவர்களை ‘சிவாஜி‘க்கு திசை திருப்புவதை கண்டிக்கிறேன்.

அது எப்படி! கூகிள் மட்டும் கமலைத் தேடினா ரஜினி வரணும் என்று சரியா யோசிக்குது?!

ஆனால்… ‘சிவாஜி‘ என்று தேடினால், தசாவதாரம் வராமல், கமல் முதுகில் குத்தியுள்ளதை கண்டிக்கிறேன். இனி தன்மான கமல் ரசிகர் எவரும் கூகுளை நாடக்கூடாது என்று பெட்டிசன் போட்டால், கையெழுத்து இடுவேன் என்று வாக்குறுதியும் கொடுக்கிறேன்.

குறிப்பிட்ட ‘சிவாஜி’ தேடல் முடிவுகள்:

Rajnikantha Movie - Sivaji The Boss by Shankar