Tag Archives: எழுத்து

யுவ புரஸ்கார் விருது பெற்ற பின்வினைப் பயன் என்ன?

Yuva_Puraskar_Natarjan_Abilash_Chandran_Sahitya_Academy_2014_Awards_Prizes_Tamil_Authors_Writers_Literature_Story_Fiction_Kids
எழுத்துத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான சிறுவர் இலக்கியத்திற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பால சாகித்ய விருது, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் என்ற படைப்பை எழுதிய இரா. நடராஜனுக்கும், 35 வயதுக்குள்பட்ட இளம் படைப்பாளிகளுக்கான ’யுவ புரஸ்கார்’ விருதுக்கு கால்கள் என்ற படைப்புக்காக, எழுத்தாளர் ஆர். அபிலாஷ் சந்திரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் வாழ்த்துகள்.

யுவ புரஸ்கார் விருதிற்கும் கணிதத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் மெடலுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை உண்டு. கணித ஆராய்ச்சி பரிசு பெறுவதற்கு நாற்பது வயதிற்குள் இருக்க வேண்டும். சாகித்ய அகாதெமியின் இளவயது விருது பெற முப்பத்தைந்திற்குள் இருக்க வேண்டும். ஃபீல்ட்ஸ் மெடல் பெற்றால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலராவது கைவசம் கிட்டும். யுவ புரஸ்கார் கிடைத்தால் இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள் கிடைக்கிறது.

இரண்டு விருதுகளுமே தத்தம் துறைகளில் செயல்படுபவர்களை மேலும் ஆர்வத்துடன் இயக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. கணிதத்தில் என்ன உட்பிரிவில் விருப்பமோ, அந்தப் பகுதியில் பணத்தட்டுப்பாடின்றி ஆராயவும் நேரஞ்செலவழிக்கவும் ஃபீல்ட்ஸ் பதக்கம் தருகிறார்கள். பல்கலைக்கழகத்திடம் கையேந்த வேண்டாம். பெருநிறுவனத்தின் ஆமையும் முயலும் பந்தயங்களில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று நிதி கேட்டு புரவலர்களை எதிர்நோக்க வேண்டாம். கணித மேதைகள் தேர்ந்தெடுத்து சாதித்த துறையில் மேலும் தீவிரமாக ஆராயவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் இந்த மில்லியன் டாலர் பரிசு உதவும்.

ஆனால், நடப்பது என்ன?

ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வெல்லாதவர்கள், இன்னும் ஆழமாக, புதியதாக, வித்தியாசமாக ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் வெளியிடுகிறார்கள். ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றவர்கள் வெளியிடும் ஆராய்ச்சிகளை விட கிடைக்காதவர்களின் ஆய்வேடுகள் எண்ணிக்கை அளவில் அதிகம் என்கிறார்கள். இது வரை பதக்கம் வென்றவர்கள் வெளியிட்டதையும் பதக்கம் வெல்லாதவர்கள் நாற்பது வயதிற்கு பிறகு வெளியிட்டதையும் Kirk Doran at Notre Dame and George Borjas at Harvard அலசினார்கள்.

பரிசு வென்றவர்கள் தங்களின் மூல ஆராய்ச்சியை விட்டு ஒதுங்கிவிட்டார்கள். தங்களின் திறமையை வேறு துறைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால், இந்தப் புதிய துறையில் புத்தம்புதியதாகக் கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் நிறைய நாளாகி இருக்கிறது. அதனால், அவர்களால், அதிக அளவு ஆழமான ஆராய்ச்சிகளை செய்யமுடிவதில்லை. பரிசு வெல்லாதவர்களோ, பண ஆதாரம் இல்லாத நிலையில், தங்களின் முதல் துறையிலேயே கவனமாக ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து இருக்கிறார்கள். அதனால், மென்மேலும் பல்வித புதிய எழுத்துகளை ஊக்கத்துடனும் புதிய தரிசனங்களுடனும் உண்டாக்க முடிந்திருக்கிறது.

இந்தியப் புனைவுலகில் ஒரு கதை எழுதியவுடனேயே ஒருவர் இலக்கிய விமர்சகராகவும் சமூக சிந்தனையாளராகவும் பீடம் போட்டுக் கொள்வதால், ‘யுவ புரஸ்கா’ருக்கு இந்த அபாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

நன்றாக எழுத என்ன தேவை?

ஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.

சென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்டுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்?

1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்?
2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்? ஏன்?
4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.

இப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.

பள்ளியில் இரண்டு மணி நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.

ஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ!’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.

இதே போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது?’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.

நான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ!?

ஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவாக்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.

இது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.

தமிழ் ஹிந்து: தி இந்து – ஏன்? ஒரு சிறிய விளக்கம் + நியாயம்

தினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி, தின இதழ், தினமுரசு, தினக்குரல் என எல்லா தினசரிகளும் ”தி’”யில் துவங்குவதை எதிர்க்காத தமிழ்ப் பற்றாளர்கள், ‘தி இந்து’ வை “தி” போட்டதற்காக திட்டுவது திடுக்கிடவைக்கிறது.

தமிழில் பெண்பால் சொற்கள் “தி”யில் முடியும். ஒருத்தி… குறத்தி… கார்த்தி… “தி”யை கண்டிப்பதால் பெண்ணியக் குரலையே முடக்க நினைக்கிறார்கள் ஆணாதிக்கவா”தி”கள்.

எழுத்தாளர்களுக்கு “தி” மிகவும் பிடித்த முதல் எழுத்து. தி. ஜானகிராமன், தி. க. சி, திரு. வி. க… எல்லோருக்கும் முதல் எழுத்து “தி”. அந்த நீண்ட நெடிய மரபில் “தி இந்து” உதயமாகிறது.

உதய சூரியனுக்கு “தி”.மு.க. அந்த திராவிட் அணி ஆடிய காலத்திலேயே கிரிக்கெட் வருணணைக்கு புகழ் பெற்றது “தி” இந்து.

இடுகுறிப்பெயர்களுக்கு முதலில் வருவது “தி”.
திசை… (மாலனுக்கு முன்னோடி!)
திணை… (திண்ணை.காம்)
திரு… (செல்வம்)
திரி… (எதையும் மாற்றிச் சொல்வது – திரிப்பது)

திமிரால் இணைவோம்!

Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

What have you read among Jeyamohan books?

ஜெயமோகன் எழுதிய புத்தகங்களின் பட்டியலை (http://www.jeyamohan.in/?p=11233) கொடுத்தார்.

எனக்கு மூன்று வினாக்கள் எழுந்தன:

1. உங்களுக்கு இந்த லிஸ்ட்டில் மிகவும் பிடித்தது எது?

2. அவசியம் இந்த வருடம் படிக்க வேண்டும் என்று நினைப்பது?

3. அனுராதா ரமணன்/சுஜாதா மட்டுமே அறிமுகமான நண்பருக்கு, பரிசாக எந்த படைப்பை கொடுப்பீங்க?

தர்மசங்கடத்திற்கு தயார் என்றால்… கொசுறு கேள்வி:
இவற்றுள் தங்களைக் கவராத நூல்?

வாக்கெடுப்பு (தற்போதைய நிலை) – தொகுக்கப்பட்ட பதில்:

மனதில் நிற்பவை

காடு – 7

பின் தொடரும் நிழலின் குரல் – 4

விஷ்ணுபுரம் – 3

சங்கச் சித்திரங்கள் – 3

இன்றைய காந்தி – 3

பனிமனிதன் – 2

ஏழாம் உலகம் – 2

நவீன தமிழிலக்கிய அறிமுகம் – 2

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 2

சிறுகதைத் தொகுப்பு – 2

கொற்றவை

பத்ம வியூகம்

இலக்கிய முன்னோடிகள் வரிசை

நாவல் கோட்பாடு

ஊமைச்செந்நாய் (மத்தகம்)

வாசிக்க விழைபவை

கொற்றவை – 6

விஷ்ணுபுரம் – 4

ரப்பர் – 2

சங்க சித்திரங்கள்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

பின் தொடரும் நிழலின் குரல்

காடு

ஏழாம் உலகம்

குறுநாவல் தொகுப்பு

பரிந்துரை

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 3

அனல்காற்று – 2

வாழ்விலே ஒருமுறை – 2

சங்கச் சித்திரங்கள் – 2

ஏழாம் உலகம் – 2

காடு

கன்னியாகுமரி

நிகழ்தல்

ஊமை செந்நாய் தொகுப்பு

நிழல் வெளி கதைகள்

நினைவின் நதியில்

இன்றைய காந்தி

தேவகி சித்தியின் டயரி, ஒன்றுமில்லை, விரல், மாடன் மோட்சம்

சிரமதசை

சங்கச் சித்திரங்கள்

இலக்கிய விமர்சனம் தொகுப்பு

ஏழாம் உலகம்

கொற்றவை

விஷ்ணுபுரம்

உங்கள் பதில்களை – https://groups.google.com/forum/#!topic/jeyamohan/R6CvIwQYmfM குழுமத்தில் தரலாம்.

‘அச்சடிக்க காசு கொடுக்கிறவன் கேக்கிறபடிதான் எழுதணும்’

The ‘un-interfering publisher’ is one of journalism’s great myths

பத்திரிகை வெளியிடுபவர், தன்னுடைய இதழின் உள்ளடக்கத்தில் கைவைக்கமாட்டார் என்பது மிகப் பெரிய பொய்.

தலைப்பில் வந்திருக்கும் கருத்தை வழிமொழிந்தவர்: இந்து என் ராம்: http://twitter.com/nramind/status/2508349650

மீடியாவில் இருப்போரின் தரப்பட்டியலையும் தலை பத்து வரிசையையும் http://www.mediaite.com/ வலையகம் வெளியிடுகிறது. இதைத் துவங்கியவர் MSNBC சேனலலின் வழக்கறிஞர். மேலும், ஊடகத் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நிர்வகிப்பவர்.

தொடர்புள்ள தள உரிமையாளரின் பேட்டி: Q&A: Mediaite’s Colby Hall And Rachel Sklar – The Web site’s managing editor and editor at large discuss what all the fuss is about

Detractors were quick to point out that site founder Dan Abrams serves in some respects as a publicist, a journalist and a businessman–roles that work best when separate–as CEO of a media consultancy firm and legal analyst for MSNBC in addition to his role at Mediaite.

அதாகப்பட்டது, தன்னுடைய கன்ஸல்டிங்கை காசு கொடுத்து பெறுபவர்களின் ரேட்டிங்கை — மீடீயேட்.காம் உயர்த்திக் காட்டும்.

தொடர்புள்ள ஸ்லேட் கட்டுரை: The fledgling media Web site leaves an acrid aftertaste

This statement combines media hypocrisy, a gaffe, a bit of self-righteousness, and a dollop of stupidity all in one short sentence. The “un-interfering publisher” is one of journalism’s great myths. Every publisher who has the power to hire and fire makes his wishes known, either overtly or covertly. When his signals are ignored or disobeyed, the promised editorial independence always vanishes. Always. Mediaite will be no exception.

தமிழில் இருக்கும் பத்தி எழுத்தாளர்களுக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கும் செய்தி ஆசிரியர்களுக்கும் மீட்டர் போடும் வெப்சைட் ஆரம்பித்தால் நன்றாகத்தான் இருக்கும்.

Matt-Bors-Idiot-box-Future-of-Journalism-Media-MSM-Cartoons

தற்போது வெளியாகும் சிறுபத்திரிகை பத்திக் கட்டுரைகள், கருத்துத் தொடர்கள், அனுபவச் சிதறல்கள், இதழ்தோறும் இடம்பெறுபவர்கள்:

அ) காலச்சுவடு

  1. பெருமாள்முருகன்
  2. ஸ்டாலின் ராஜாங்கம்
  3. கவிதா
  4. சச்சிதானந்தன் சுகிர்தராஜா
  5. சக்கரியா
  6. திவாகர் ரங்கநாதன்
  7. ஆ. சிவசுப்பிரமணியன்
  8. ரவிக்குமார்
  9. அ. ராமசாமி

ஆ) உயிர்மை

  1. சாரு நிவேதிதா
  2. எஸ்.ராமகிருஷ்ணன்
  3. ஷாஜி
  4. பிரபஞ்சன்
  5. பிரபஞ்சன்
  6. சு.தியடோர் பாஸ்கரன்
  7. இளைய அப்துல்லாஹ்
  8. மாயா
  9. ஆர்.அபிலாஷ்
  10. அ.முத்துலிங்கம்
  11. எஸ்.வி.ராமகிருஷ்ணன்
  12. யமுனா ராஜேந்திரன்
  13. சுகுமாரன்
  14. அழகிய பெரியவன்
  15. அ.ராமசாமி
  16. ச.தமிழ்ச் செல்வன்
  17. இந்திரா பார்த்தசாரதி
  18. பாரதி மணி
  19. அ.முத்துக்கிருஷ்ணன்
  20. வெங்கடேஷ் சக்கரவர்த்தி

இ) யுகமாயினி

  1. இரா. முருகன்
  2. சுப்ரபாரதி மணியன்
  3. அழகிய பெரியவன்
  4. நவீன்குமார்
  5. சந்திரசேகரன் கிருஷ்ணன்
  6. த அகிலன்
  7. பாவண்ணன்
  8. செங்கை ஆழியான்
  9. நா கண்ணன்
  10. நாகரத்தினம் கிருஷ்ணா
  11. எஸ் வைதீஸ்வரன்
  12. திருப்பூர் கிருஷ்ணன்
  13. இ.பா அம்சப்ரியா
  14. கே பாலமுருகன்
  15. கோவி லெனின்
  16. புதிய மாதவி
  17. சந்திரவதனா செல்வகுமாரன்
  18. ரவி சுப்ரமணியன்
  19. சோலை சுந்தரபெருமாள்

ஈ) புதுவிசை

  1. எஸ்.வி.ராஜதுரை
  2. அழகிய பெரியவன்
  3. டி.அருள் எழிலன்

உ) வார்த்தை

  1. இரா. முருகன்
  2. வ. ஸ்ரீநிவாசன்
  3. சுகா
  4. கே.எம். விஜயன்
  5. நரேந்திரன்
  6. எஸ். ஜெயஸ்ரீ
  7. பி.ச. குப்புசாமி

ஊ) உன்னதம்

  1. கலையரசன்
  2. யமுனா ராஜேந்திரன்
  3. எச்.பீர்முஹம்மது
  4. குட்டிரேவதி

ஒபாமா: பன்முகம்

வெறும் வார்த்தைகள் போதுமா? ஒபாமாவைக் காட்சிப்படுத்த அவரின் உரை மட்டுமே போதும் என்கிறார் இவர்:

நன்றி: Neoformix – Discovering and Illustrating Patterns in Data: Obama Victory Speech | Obama Word Portrait | Obama Word Portrait II | Colored Word Portraits | President Obama

Dreams

என் ஏழு வயது மகள் கடிதமாக எனக்கு எழுதித் தந்தது. அவ்வப்போது அவள் பகிர்வதை, அவளின் எழுத்துக்களாகவே பதிந்து வைக்க திட்டம்.

When I was sleeping I was dreaming.

What I was dreaming is I was sleeping and I was flying. I was flying to the moon.

But it was fun in top of the moon.

I was dancing in top of the moon.

I was singing a lot of things. But after that I woke up.

But when I woke up I wasn’t in the moon anymore.