-
-
அண்மைய பதிவுகள்
- செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- டேய்… அவனா நீ
- முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்
- தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்
- What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words
- பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா
- பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
- ‘பாரதி யார்’ @ பாஸ்டன்
- தர்ஜமா
- நீலத்தில் இத்த்தனை நிறங்களா!
- இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?
- ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?
- கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?
- ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?
காப்பகம்
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Category Archives: சமூகம்
Kaisika Purana Nadagam: Nambaduvaan Sarithiram by Prof. Ramanujam
Posted in Arts, சமூகம், நிகழ்வுகள்
குறிச்சொல்லிடப்பட்டது anita Ratnam, Anitha Rathnam, Arts, ஆழ்வார் திருநகரி, இ.பா., இந்திரா பார்த்தசாரதி, கலை, கைசிக, கோயில், கோவில், சரித்திரம், தாசி, தேவதாசி, நாடகம், பேராசிரியர், ராமானுஜம், Chennai, Culture, Devadasi, Drama, Events, Heritage, Indira Parthasarathy, Indra Parthasarathy, IPa, Kaisiga, Nadagam, Nadakam, Nambaduvaan, Nambatuvaan, Nampaduvaan, Performance, Ramanujam, Shows, Sponsors, SriVaishnava, Stage, Temple, Tradition, TVS, Vaishnavites
ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்
ஆனந்த விகடனில் வெளியாகிய மருதனின் அமெரிக்கப் பள்ளிகள் காலி வாசிக்க கிடைத்தது.
முதலில் மருதன் பாணியில் rhetoric மட்டும்.
காட்ஃபாதர் நாயகன் ஆனது போல் சிலர், பல ஆங்கிலப் படத்தில் இருந்து சிற்சில இடங்களைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றியமைத்து திரையாக்குவார். எஸ் ஜே சூர்யா போல் சிலர் அப்படியே தமிழுக்கு இடப்பெயர்வு செய்வார். இன்னும் சிலர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை போல் அதே பாட்டை, அப்படியே வேறு பாட்டாக்குவார்.
மருதன் ஹாரிஸ் ஜெயராஜ் ரகம்.
- எந்த மாணவர் எதற்காக நீக்கப்பட்டார் என்னும் முன்கதை இருக்காது.
- ஆர்னே அல்ல; ஆர்நி என்னும் சின்ன விசயம் கற்றுக் கொள்ளும் உழைப்பு கூட இருக்காது.
- ‘ஒபாமாவின் தீவிர ரசிகர்களேகூட இந்த விஷயத்தில் சங்கடத்துடன் நெளிந்துகொண்டிருக்கிறார்கள்’ என்பார். எவர், எங்கே, எப்போது, என்ன சொன்னார் என்பதெல்லாம் மூடுமந்திரம்.
- ஆனால், அமெரிக்காவில் கறுப்பர்களை விட வெள்ளையர்களின் மக்கள்தொகை அதிகம் போன்ற தகவற்பிழை நிரப்பியிருப்பார்.
இந்த மாதிரிதான் எல்.டி.டி.ஈ., லியனார்டோ டா வின்ச்சி என்று புத்தகம் எழுதி குவிக்கிறாரா என்னும் அச்சமும் எழுகிறது.
இப்பொழுது மருதனின் விகடன் கட்டுரையில் இல்லாதவை இங்கு இடம் பெறும் இடம். ஆதாரம், அலசல், பின்னணி, விஷயம்.
அமெரிக்கக் கல்வித் திட்டத்தை அதனுடன் சரிசமமான OECD, மேற்கத்திய சூழலுடன் ஒப்பிட வேண்டும். அதை மருதன் செய்யவில்லை.
கடந்த எட்டாண்டில் பள்ளி மாணவர் தேர்ச்சி, பெரிய வகுப்புகளில் எண்ணிக்கை, மேற்படிப்பு நிலவரம், குடும்பச் சூழல் என்று மதிப்பிடலாம். மற்ற வளர்ந்த நாடுகளில் இந்த குறியீட்டெண் என்ன, எவ்வாறு வளர்கிறது, ஜார்ஜ் புஷ்ஷின் No Child Left Behind என்ன செய்ய நினைத்தது என்றும் ஆராயலாம்.
அதெல்லாம் மருதன் கட்டுரையில் கிடைக்கவில்லை.
பராக் ஒபாமாவின் திட்டம் என்ன, ஏன் அவர் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார், எவ்வாறு ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுகிறார், படிப்பு கொள்கை எங்ஙனம் செயலாக்கம் பெறும் என்றெல்லாம் சுட்டலாம்.
மருதனின் பத்தியில் விஷயம் இல்லை.
அமெரிக்க கல்வியின் இன்றைய நிலை :
வினாத்தாளா, Street smart சாதுர்யமா?
அமெரிக்கா கேள்விஞானத்திற்கு பெருமதிப்பு தருகிறது. விஷயஞானத்திற்கு அல்ல.
அதாவது, இந்தியாவில் (x+y)² என்ன என்பது மிக முக்கியம். இங்கே அது ‘ஏன் முக்கியம்’ என்று தெரிந்து வைத்தால் போதுமானது.
எப்படி விடை வருகிறது, (x+y)² ≡ 2(x+y) என்றெல்லாம் வித்தியாசமாக யோசித்து கேள்வி கேட்க வேண்டும். அதுதான் முக்கியம்.
இந்த மாதிரி வினாக்காரரின் விடைத்தாளை எவ்வாறு திருத்துவது?
குதித்தது ‘தேர்வு முறை‘. அமெரிக்காவில் பலருக்கு ‘தேர்வு எழுது, அதில் 40 வாங்கினால் பி க்ரேடு’ என்பது அலர்ஜி தந்தது. வினா – விடை வேண்டாம்; ‘இவ நல்லா படிக்கிறா!’ என்று சொல்லி அடுத்த வகுப்பிற்கு தூக்கிப் போடலாம் என்னும் சமூகம்.
இதை மாற்ற முயற்சி நடந்து வருகிறது.
ஆசிரியர் ஊக்கத்தொகை
ஒழுங்காக வேலை செய்பவருக்கு ஊக்கத் தொகையா? அல்லது வேலைக்கு எட்டு மணிக்கு ஆஜராகிவிட்டு ஐந்து மணி வரை இருக்கை தேய்ப்பவருக்கும் ஊக்கத் தொகையா?
தொழிற்சங்கவாதியிடம் கேட்டால் ‘வேலைக்கு வராவிட்டால் கூட போனஸ் வேண்டும் என்று போராடு தோழா’ என்பார்.
திறமையாக பாடங்கற்பிப்பவருக்கு சம்பளம் அதிகம் தர வேண்டும். சூட்டிகையான மாணவரையும் தூங்கவைக்குமாறு தாலாட்டும் ஆசிரியருக்கு சம்பளம் குறைக்க வேண்டும்.
கையில் காசு; வாயில் படிப்பு.
கல்வி: யார் பொறுப்பு?
‘உணவகத்த்கின் உரிமை மாறியுள்ளது’ என்னும் பலகையை பார்த்திருப்போம். பழைய சொந்தக்காரர் ஒழுங்காக நடத்தாவிட்டால் புதியதாக இன்னொருவர் பொறுப்பேற்று அதை நல்லபடியாக்குவது சகஜம்.
கல்விக்கூடத்திலும் அதை நடைமுறை ஆக்கலாம்.
மோசமான பள்ளி என்று பெயர் எவ்வாறு கிடைக்கிறது? மாணவரின் குடும்பச்சூழல் காரணமாக பள்ளிக்கு ஒழுங்காக வர இயலவில்லை; தரமாக சொல்லித் தராத வாத்தியார்; உபகரணம் உடைந்த சோதனைச்சாவடி; பராமரிப்பு இல்லாத பள்ளிக்கூடம்.
இப்படி எதுவாக இருந்தாலும், ‘தண்டம்’ என்று பெயரெடுத்ததை மூடிவிட்டு, அதற்கு பதில் இன்னொரு பள்ளி புத்தம்புதிதாக புதிய ரத்தம் கொண்டு துவங்குவது; அதுவரை, அங்கு வாசித்தவர்களை, தாற்காலிகமாக இன்னொரு சிறப்பான பள்ளியில் கோர்த்து, அந்த அலைவரிசையில் பயணிக்க வைப்பது.
புதிய பள்ளி கட்டுமானம்:
இந்தப் புதிய பள்ளிக்கான பணத்திற்கு என்ன செய்வது?
‘இவ்வளவுதான் பணம். இதைக் கொண்டு பள்ளி துவங்க முடியுமா?’ என்றால் அரசிடம் இருந்து இயலாமை. ஆனால், தனியார் நிறுவனமோ — துடிப்புடன், கொடுத்த பணத்தை வைத்து, வேண்டிய தரத்தில், சேர்க்கவேண்டிய எண்ணிக்கையையும் நிரப்பி பள்ளி துவங்க ரெடி!
பெற்றோரும், ‘என் குழந்தைக்கு செலவிடும் பணத்தை என்னிடமே கொடுத்துவிடு! அந்தப் பணத்தை கொண்டு நானே நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.’ என்கிறார்.
இந்த நிலையில் கையாலாகாத அரசாங்கமே பள்ளியை நிர்வகிக்க வேண்டுமா? அல்லது அதே நிதியில் அதே அளவு மாணவர்களை இன்னும் சிறப்பாக தயார் செய்யும் தனியாரிடம் தர வேண்டுமா?
ஒவ்வொரு கு(ட்)டி மக்களுக்கும் செலவழிக்கும் கல்வித்தொகையை அவரிடமே தந்து நன்றாக படித்து முன்னேரிக் கொள்ளுமாறு விட்டுவிட வேண்டுமா? அல்லது தானே வரிந்து கட்டி சீர்திருத்த வேண்டுமா?
எல்லோரும் ஆசிரியர் ஆகலாம்:
ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் காலத்தில், வாத்தியாராக பட்டம் பெற ஏழு கடல் கடந்து, செவ்வாய்க்கு சென்று கல் எடுத்து வந்தால்தான் ஆச்சு என்பது சரிப்படுமா?
அறிவியல் போதிக்க அறிவியலில் முதுகலை படித்திருந்தால் மட்டும் போதுமே? வீட்டில் இரண்டு குழந்தையை மேய்ப்பது போல் இருபது குழந்தை நிரம்பிய வகுப்பைத் தந்து பார்ப்போம். போகப் போக பழகிக் கொள்வார் என்பது ஒரு வாதம்.
இப்படி சேர்க்கப்பட்டு, தலைமை ஆசிரியர் வரை உயர்ந்து நிற்பவர் ஏராளம். குறிப்பாக புதிய தலைமுறை சப்ஜெக்ட்களான கணினி, நுண்ணுயிரியல் போன்றவற்றில் சக்கைபோடு போடுகிறது.
இவ்வாறு புது இரத்தம் வருவதை, ஆசிரியர் யூனியன் விரும்பவில்லை. பல்லாண்டு கால வழக்குமுறை மாற்றப்படுவதை பயத்துடன் நிராகரித்து, பொது அறிவு வினாத்தாள் முதல் உளவியல் பயிற்சி வரை பல்வேறு தடைக்கல்லை வைத்து புதிய ஆசிரியர் சேர்ப்புக்கு முட்டுக்கட்டை இட்டிருக்கிறது.
இன்னும் இது போல் நிறைய உபதலைப்பில் விலாவாரியாக ஆயலாம். மருதனின் விகடன் அலசலை மட்டும் படித்து கிணற்றுத்தவளையாக இல்லாமல் இருக்க; நுனிப்புல் மேய நமக்கு இது போதும்.
ஆர்நியைக் குறித்து
- ஆர்நியின் குழந்தைகள் அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிக்கு அனுப்பும் செல்வம் இருந்தாலும், ஒய்யாரமாக சென்றுவரவில்லை.
- 2001ல் டங்கன் பதவியேற்ற பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளதாக ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
- எல்லாத்தரப்பு மாணவரிடத்திலும், ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாதவரிடத்தும், உடல் ஊனமுற்றோரிடத்திலும் எல்லாப் பாடத்திலும் அளவிடக்கூடிய வளர்ச்சிக் காணக்கிடைக்கிறது.
- நியு யார்க், லாஸ் ஏஞ்சலீசுக்கு அடுத்த படியாக மூன்றாவது மிகப் பெரிய, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்களை கொண்ட சிகாகோ கல்விக்கூட பொறுப்பை நிர்வகித்த அனுபவம் கொண்டவர்.
மேலும் தகவல்: Snap Judgement: US Education System; Secretary of State
கடைசியாக மருதன் கட்டுரைக்கு பதில்.
தன்னை எதற்காக பள்ளியில் இருந்து நீக்கினார்கள் என்று அந்த மாணவருக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.
கதையுடன் கட்டுரையை ஆரம்பிப்பது நல்ல உத்தி. நானும் இப்படித்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், நான் ஆதாரம் தருவேன். அவர் இணையத்தில் இடும் கட்டுரையிலும் சாய்ஸில் விட்டு விடுவார்.
கெமரான் பள்ளி பாலகர் பள்ளி. ஆனால், பச்சிளம் பாலகரும் ஏகே-47 சுடக் கற்றுக் கொண்டுதான் ஆன்னா, ஆவன்னா கற்றுக் கொள்வதற்கு வருவார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கே மழலைச் செல்வங்களின் வாசிப்பு சக்தி உயர்ந்திருக்கிறது. கணித மேதையாகாத குறை.
இந்தப் பள்ளி சிகாகோவில் உள்ளது.
என்னை நம்பவேண்டாம். 2001ல் இருந்து பள்ளிச்சிறுவர்கள் பரீட்சை முடிவில் வாங்கிய மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.
ஒழுங்கீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு பலர் சிறைச்சாலைகளில் (குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வீட்டிற்கே சென்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரில் ஆரம்பித்து விளையும் பயிரை முளையிலேயே வளைத்துப் போடுவதற்கு ஒபாமா தரும் பத்து பில்லியன் வரை தொட்டு செல்லவேண்டியதை, ‘ரெண்டுகண்ணன் வரான்; குழந்தையப் பிடிச்சுண்டு போயிடுவான்’ என்னும் ரீதியில் சிம்ப்ளிஃபை செய்திருக்கிறார் மருதன்.
ஜார்ஜ் புஷ்ஷின் மற்றுமொரு சொதப்பல் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டது அமெரிக்கா
ஜார்ஜ் புஷ்ஷின் நோ சைல்ட் லெஃப்ட் பிஹன்ட், பதின்ம வகுப்புகளில் மாணவரைத் தக்கவைப்பதிலும், விருப்பப் பாடத்தை தேர்வு செய்வதிலும், கல்லூரிக்கு அழைத்துச் செல்வதிலும் பெருத்த வெற்றி என்பதை அவரின் எதிரியே ஒத்துக் கொள்கிறார்.
இளவயது நண்பர் எனும் ஒரே காரணத்துக்காக ஒரு முக்கியப் பதவியை அவரிடம் கொடுப்பது நியாயமா? பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவு அல்லவா இது?
சினிமாவின் அடுக்கு மொழி வசனம் கெட்டது போங்கோ 🙂
பள்ளிக்கூடங்களில் ராணுவக் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும்.
ஒரு கையில் நூறு பேருக்குத் தேவையான அபின் (விற்பனைக்குத்தான்; ஒரு பிஸினஸ்மேன் உருவாகிறார்); இன்னொரு கையில் சேவல்தோகையாக (காக்-டெயில்) வோட்கா கலந்த தண்ணீர் (இது விற்பனைக்காக அல்ல; சுய பயன்பாட்டிற்கு); பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் உலா வரும் உள்ளூர் கஸப்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் மருதன் ஆலோசனை தரவேண்டுகிறேன்.
பச்சை, மஞ்சள், சிகப்பு என்று கிராஃப் போட்டு. குறிப்பிட்ட வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களது மூன்று மாத பெர்ஃபார்மன்ஸ் என்ன, எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு அனைத்தையும் கலரில் குறிக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பள்ளியின் தரத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்
இதில் என்ன தவறோ? ரிப்போர் கார்டில் போலி கையெழுத்து போட்டால்தானே பிரச்சினை!
ரிப்போர் கார்டே ஆகாதா? பள்ளியில் தூங்கினாலும், பள்ளிக்கே வராமல் இருந்தாலும், அடுத்த அடுத்த வகுப்பிற்கு பிரமோசன் உண்டா? மருதன் இன்னும் குழந்தையா; அதான் இவ்வளவு ஆசை!
பொதுப் பள்ளிகள் மீது ஏன் அரசாங்கத்துக்கும், குறிப்பாக கல்வி அமைச்சகத்துக்கும் இத்தனை காழ்ப்புணர்ச்சி? ஏன் இத்தனை வெறுப்பு? காரணம், பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர்.
என்னது! அமெரிக்காவில் வெள்ளை இனம் மைனாரிட்டியா! சொல்லவே இல்லியே!!
Posted in சமூகம், நிகழ்வுகள், Magazines, Magz
குறிச்சொல்லிடப்பட்டது America, Analysis, Anandha Vikatan, Arne, ஒபாமா, கல்வி, நிதி, படிப்பு, பராக், பொருளாதாரம், விகடன், Duncan, Economy, Education, Finance, Funds, Guns, GWB, NCLB, Obama, Policy, Schools, Students, Study, Teachers, USA, Vikadan, Vikatan, Violence
சாதனைச் செம்மல் சீனா & தியாக ஜோதி ஒலிம்பிக்ஸ்
2008 ஆம் வருட ஒலிம்பிக்ஸில் சீனா பல வித்தியாசங்களை முயற்சித்து, விளையாட்டுப் போட்டிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. அவை:
- ஆஸ்திரேலியாவிற்காக: நூறு மீட்டர் நீச்சலின் முதல் சுற்று. சீனாவின் பாங் (Pang Jiayang) முதலிடம் பிடிக்கிறார். பெயர் தெரியாத அவர் நுழைவதால், விளம்பரதாரர்களுக்கு எந்தப் பயனுமில்லை. அவர் தேர்வு பெற்றால் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் லிபி ட்ரிக்கெட் (Libby Trickett) நுழைய முடியாது.
‘முதல் மரியாதை’யில் ராதா கால்பட்டவுடன் தசையாட்டும் சிவாஜியாக அசைந்து கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சீனா தன் முதலிடத்தை விட்டுக் கொடுத்தது. ஆஸ்திரேலிய தொலைக்காட்சிகளுக்கும் மகிழ்ச்சி. நேரடி ஒளிபரப்பாளர்களும் மானசீக நன்றி செலுத்துகிறார்கள்.
- சீன மக்களுக்காக: சீனாவில் 57 மில்லியன் (5.7 கோடி) மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். வருடத்திற்கு நூறு அமெரிக்க டாலர் கூட சம்பாதிக்க முடியாத இவர்களால் ஐம்பதாயிரம் ரூபாய் எல்லாம் கொடுத்து, விளையாட்டை கண்டுகளிக்க முடியுமா? அதனால்தான், அரசே அரங்கு மொத்தத்திற்குமான இருக்கைகளை வாங்கி, சொந்த செலவில் சிலரை அமர்த்துகிறது.
எனினும், தமிழ்நாட்டில் கரண் படத்தை காசு கொடுத்து பார்க்க இயலாத நிலையில் இருந்தாலும், தானே சொந்த செலவில் ‘நிறை அரங்கை’ ஏற்படுத்திக் கொள்வதை பார்த்து இந்த வித்தையைக் கற்றுக் கொண்டதை ஒப்புக் கொள்ளாதது கண்டிக்கத்தக்கதே.
- குழந்தைகளுக்காக: ‘படிக்கிற வயசில் என்னடா விளையாட்டு’ என்று வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க. அந்த மாதிரி பெற்றோரிடம் தவிக்க விடாமல் மூன்று வயதிலேயே சின்னஞ்சிறார்களைப் பிரித்து விடுகிறார்கள். அதன் பிறகு அனுதினமும் பதினாறு மணி நேரமும் உடற்பயிற்சி மட்டும்தான் பொழுதுபோக்கு. ஒரு நாடென்பது, தன்னுடைய சிறுவர்களை பாலிக்க இதைவிட என்ன செய்துவிட முடியும்?
பல்கூட விழுந்து முளைக்காத பன்னிரெண்டு வயதில் உலக அரங்கில் தோன்ற வைக்க வேறு எந்த நாட்டால் இயலும்?
- சிறுபான்மையினருக்காக: சீனாவில் 56 இனங்கள் இருக்கிறது. திபெத் கூட இதில் ஒன்று. இந்த 56 விதமான மக்களின் உடை, பாரம்பரியத்தை சித்தரிக்கும் நிகழ்ச்சி துவக்கவிழாவில் இடம்பிடித்தது.
‘எல்லோரும் ஒரு குலம்’ என்று பறைசாற்றுவது எவ்வாறு? இத்தனை எண்ணிக்கை இருந்தால் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்றெல்லாம் பாடத்திட்டம் கொடுக்க வேண்டுமே?? ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று நினைத்தாலே இனிக்கும் வேறு திரைப்பாடல் போடணுமே!
ஐம்பத்தியாறையும் ஒன்றாக்கி, பெரும்பான்மையை மட்டுமே பிரதிநிதியாகி விட்டார்கள். சிறுபான்மையினரை இல்லாமல் ஆக்கும் அற்புதத் திட்டம்.
- இந்தியர்களுக்காக (அல்லது) அறிவியல் புனைவாளர்களுக்காக: Wiiஐ வைத்துக் கொண்டு டென்னிஸ் ஆடுகிறோம். ஊக்க மருந்தை உட்கொண்டு சாதனைகளைப் படைக்கிறோம். இதெல்லாம் பழங்கதை. வீடீயோ கேம்ஸ் போல் ஒலிம்பிக்ஸை வீட்டில் இருந்தே விளையாடலாம் என்பதற்கான முதற்கட்ட ஒத்திகைதான் வாணவேடிக்கை கிராஃபிக்ஸ். இதன் தொடர்ச்சியாக, நமது தொலைக்காட்சியில் இருந்தே படைப்புத் திறனும், கலையார்வமும் கலந்த Synchronized Swimming முதல் குத்துச்சண்டை வரை எல்லாம் செய்யமுடியும்; வெல்லமுடியும்.
இந்தியர்களாலும் இதனால் பதக்கம் பல வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆப்பிரிக்காவிற்காக: தற்போதைக்கு சுடானில் மட்டுமே பெரிய அளவில் உதவி செய்யமுடிகிறது. அந்த மாதிரி செய்கைகளை ஆப்பிரிக்க கண்டம் முழுக்க பரப்ப…
- கிளர்ச்சியாளர்களுக்காக: தன்னுடைய பூங்காக்களை திபெத், தியான்மென், தாய்வான், பர்மா என்று எல்லா பிரிவினைவாதிகளுக்கும் திறந்து வைத்திருக்கிறது சீனா. இருந்தாலும் சிறையில் தஞ்சம் புகுந்ததால், பெய்ஜிங் நகரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு கடும் பஞ்சம்.
அப்படியும் பாக்கி இருக்கும் மிச்சத்தையும் எங்கே என்று விசாரித்து, கொஞ்ச நஞ்ச சொச்சத்தவர்களையும் உள்ளே தள்ளும்படி செயல்படும் பிபிசி செய்தியாளர்களை விரட்டி, நாடு கடத்துவதன் மூலம் கூட்டம் போடுபவர்களைக் காப்பாற்றுகிறது.
- சுவர் எழுப்புவர்களுக்காக: சீனப் பெருஞ்சுவருக்கு போட்டியாக எட்டடி சுவர் எழுப்பி இருக்கிறார்கள். சிறு/குறு வியாபாரிகளின் கடை முகப்பு தெரியக்கூடாது என்று இவ்வாறு திரை போட்டு மறைத்திருக்கும் சுவர், கட்டுமானத்துறையில் இருப்பவர்களுக்க்கான அர்ப்பணிப்பு.
- பின்னணிக் குரல் கொடுப்பவர்களுக்காக: ஷ்ரேயாவுக்கு குரல் கொடுத்தவர் யார் தெரியுமா? ஷாலினி, ஷாமிலி என்று பாடலில் வாயசைத்தது பார்த்திருப்போம். அவர்களுக்கும் இன்னும் ‘டாடி… டாடி’ என்று சாஸ்வதமாய் ஜானகி ஒலித்த்தை உலகறியச் செய்யும் வகையும் எதிர்மறையாக உதாரணம் காட்டியிருக்கிறார்கள்.
உதட்டசவை ஒலிம்பிக்ஸ் அரங்குக்குக் கொண்டு வந்து திரைக்குப் பின்னால் உதிரும் சவீதாக்களுக்கு வெளிச்சம் தேவையில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியதற்காக!
- அமெரிக்காவிற்காக: ஒன்றா? இரண்டா??
- பெண்களுக்கான உடற்பயிற்சியில் பத்து மாதக் குழந்தைகளை அனுப்பி, ‘பாரு! எப்படி பல்டி அடிக்கிறா?’ என்று பறைசாற்றி பதக்கங்களை தட்டிச்செல்லவில்லை.
- மைக்கேல் ஃபெல்ப்ஸ் (Michael Phelps) தொட்டாரா/இல்லையா என்பதை தன் கிராபிக்ஸ் நுட்பத்தைக் கொண்டு நிரூபித்து மானத்தைக் கப்பலேற்றவில்லை.
- சீதாப்பிராட்டிக்கு கணையாழி கொடுத்த அனுமனாய், கடற்கரை மணலில் கெரி வால்ஷ் (Kerri Walsh)ஷின் தவறிய மோதிரத்தை சுய ஆர்வலர்களின் தேடுதல் வேட்டையால் தொலைக்கவில்லை.
தொடர்புடைய பதிவுகள் :
- ஒலிம்பிக்ஸ் – பிம்பங்களும் சிதைவும் :: வெங்கட்
- பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் – சீனா செய்யாத மோசடிகள் :: நாடோடி – noMAD, China
- பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் – சீனாவுக்கு வரவு , நமக்கோ தாறு மாறு செலவு – 1 :: நாடோடி – noMAD, China
- சீன ஒலிம்பிக்கிஸ் : தங்கப் பதக்கங்களுக்கிடையில் நசுங்கிய இரு குழந்தைகள் :: ஆர் செல்வகுமார்
- சீனாவின் மீதான பிபிசியின் போர் தொடர்கிறது :: மு மாலிக்
- மனிதம்..? :: வாசன்
- தீப விளையாட்டும் திபெத்தும் :: திருவடியான்
- Darfur and Steven Spielberg – A political Olympics :: திருவடியான்
- ஒலிம்பிக்ஸில் கலைஞரும் ரஜினியும் :: அதிஷா
- பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சீனா செய்த மோசடிகள் :: மை ஃபிரண்ட்
- ஒலிம்பிக் போட்டிக்காக வீடுகளில் இருந்து துரத்தப்பட்ட மக்கள் :: தமிழ் சசி / Tamil SASI
- பீஜிங்க் ஒலிம்பிக் போட்டி – ஐந்து குறும்படங்கள் :: மதி கந்தசாமி
- ஸ்பீல்பர்க் ஏன் ஒலிம்பிக்ஸிலிருந்து விலகினாரு? :: PPattian : புபட்டியன்
- சீனாவிலும் தனிநாடு கேட்கிறார்கள் :: Orukanani
- திபெத் : மதம், விளையாட்டு, அரசியல் :: கலையரசன்
- திபெத்திய கலகம்: தேசிய இனவிடுதலைப் போரா? :: புதிய ஜனநாயகம் – பாலன்
Posted in சமூகம், நிகழ்வுகள், நையாண்டி, விமர்சனம், Reviews
குறிச்சொல்லிடப்பட்டது 2008, ஒலிம்பிக்ஸ், சீனா, நிகழ்வுகள், நையாண்டி, பதக்கம், விமர்சனம், விளையாட்டு, Beijing, China, Conspiracy, Darfur, Gold, Medals, Olympics, Sports, Sudan

































































