இயல் விருது அறிவிப்பு
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.
இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார். முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ நூறு பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.
இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது
சிஜு ஆலெக்ஸ் Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு
1. Analysis of the Indic Language Wikipedia Statistical Report 2012 | Indian Wikimedia Stories
2. Wiki turns 15, free libraries a bonanza – Times of India
கூகுளும் விக்கியும் மொழியாக்கமும்
2. Google_translation_project_-_Tamil_Wikipedia.pdf
3. Google Translate Blog: Translating Wikipedia
தமிழ்விக்கியில் தரப்பட்டுள்ள புள்ளிவிவரம்
நன்றி: தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்
- பக்கங்கள்= 2,43,640
- கட்டுரைகள்= 84,002
- கோப்புகள்= 9,251
- தொகுப்புகள்= 20,92,989
- பயனர்கள் = 94,626
- சிறப்பு பங்களிப்பாளர்கள்= 304
- தானியங்கிகள் = 181
- நிருவாகிகள் = 37
- அதிகாரிகள் = 4
தமிழ் விக்கிப்பிடியா தொடர்பாக எப்போதும் இருக்கும் கேள்விகள்
- உங்களைப் பற்றி விக்கிப்பிடியாவில் நீங்கள் தகவல் சேர்த்ததுண்டா?
- உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் (நீங்கள் எழுதிய புத்தகம், விற்கும் பொருள் போன்றவை) தவிர வேறு எதாவது விக்கிப்பிடியாவில் எழுதியதுண்டா?
- ஸ, ஹ, ஜ, ஷ, ஸ்ரீ, க்ஷ போன்ற எழுத்துக்களை நீக்கி கர்ண கடூரமாக்கும் முறை பற்றி உங்கள் எண்ணம் என்ன? (தொடர்புள்ள இடுகை: விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு) – கவனிக்க… எனக்கு பஜ்ஜி சொஜ்ஜி பிடிக்கும்
- 85 பேர் சேர்ந்து 78.7% பக்கங்களைத் தொகுக்கும் முயற்சியில் அந்தக் கூட்டமைப்பிற்குத்தானே விருது போக வேண்டும்?
- பலரும் வலைப்பதிவு, ட்விட்டர் ஓடை, ஃபேஸ்புக் பக்கம், புத்தக வெளியீடு, அச்சு நூல், ஊடக வேலை என்று பிழைப்பையோ பெருமையோ நாடும்போது, எது தன்னலமற்ற விக்கிப்பிடியாவை நாட வைக்கிறது?
- பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விக்கிப்பிடியாவை குறிப்புதவிக்கு பயன்படுத்தக்கூடாது என்பதை சொல்லியே வளர்க்கிறார்கள். இவ்விதச் சூழலில் விக்கிப்பிடியாவின் பயன்பாட்டையும் மதிப்பையும் எப்படி தக்க வைப்பது?
- நீங்கள் எழுதிய ஒன்றை இன்னொருவர் உடனடியாக மாற்றுவார்; உங்களின் ஆக்கத்தை மற்றொருவர் அழிப்பார்; பஞ்சாயத்தில் வரும் தீர்ப்பே இறுதி முடிவு என்னும் சூழலில் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தி எங்கிருந்து வருகிறது?
- லாபநோக்கற்ற அமைப்புகள் தொடர்ந்து நீடித்திருப்பது ஆச்சரியகரமானது. நன்கொடைகள் மூலமாகவே காலாகாலத்திற்கும் தமிழ் விக்கிப்பீடியா இயங்குமா?
- தமிழ் வாசிக்கத் தெரியாத (ஆனால், கேட்க/பார்க்க மட்டுமே தெரிந்த) தலைமுறை இப்போது உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் விக்கியின் வருங்கால முக்கியத்துவம் எப்படி இருக்கும்?
- விக்கிப்பிடியாவின் நம்பகத்தன்மையை எவ்வாறு நம்புவது? காந்திக்கு இரு பக்கம் என்று நிரூபிப்பதற்காக, மஹாத்மாவின் மீது வீசப்படும் சேறுகளுக்கு இடம் தந்து நடுநிலை வகிப்பதாலா? அல்லது மதவெறியைத் தூண்டும் அமைப்பிற்கும் பக்கம் ஒதுக்கி அவர்களின் தூஷணை வெளிப்பாட்டிற்கு தளம் அமைத்து இயங்குவதாலா?
சில சுவாரசியங்கள்
- டிசம்பர் 2003ல் முதன் முதலாக துவங்கியவுடன் எழுதப்பட்ட பக்கங்கள்:
- பத்து பக்கங்களுக்குள் கை வைத்தவர்களின் எண்ணிக்கை: 11,381 (80% பேர் சேர்ந்து இரண்டு சதவிகிதத்திற்கும் கீழான பக்கங்களில் கை வைத்திருக்கிறார்கள்)
- டாப் 10 விக்கிப்பிடியர்களை இங்கேக் காணலாம்.
- ஆங்கில் விக்கியில் கீழ்க்கண்ட பக்கங்கள் மிக அதிகமாக மறுபடியும் மறுபடியும் திருத்தி சண்டைக்குள்ளாகி எடிட் செய்யப்பட்டிருக்கிறது:
- இன்றைய தேதியில் 61ஆம் இடத்தில் தமிழ் இருக்கிறது:
- ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மொழிக்கு விக்கி ஆக்கங்களை உருவாக்கியதைக் குறித்த விழியத்தை இங்கே பார்க்கலாம் (தொடர்புள்ள பதிவு: Duolingo creator: ‘I wanted to create a way to learn languages for free’ | Education | The Guardian)
- இன்றைய நிலையில் தலை பத்து விக்கி மொழிகள்:
- பயன்பாட்டின் (உபயோகிப்போரின் எண்ணிக்கைப்படி)
-
வரிசை மொழி வலைவழியே பார்வையிடுவோர் தொகை மொத்த வருகையாளர்களின் இந்த மொழியின் பங்கு 1 English 872,950,266 25.9% 2 Chinese 704,484,396 20.9% 3 Spanish 256,787,878 7.6% 4 Arabic 168,176,008 5.0% 5 Portuguese 131,903,391 3.9% 6 Japanese 114,963,827 3.4% 7 Russian 103,147,691 3.1% 8 Malay 98,915,747 2.9% 9 French 97,180,032 2.9% 10 German 83,738,911 2.5%
-
- விக்கி திட்டங்கள்
-
திட்டம் உரல் விக்கிப்பீடியா http://ta.wikipedia.org/ விக்ஷனரி http://ta.wiktionary.org/ விக்கி புத்தகங்கள் http://ta.wikibooks.org/ விக்கி மூலம் http://ta.wikisource.org/ மேற்கோள் விக்கிப்பிடியா http://ta.wikiquote.org/ செய்திகள் வாசிப்பது விக்கி http://ta.wikinews.org/
-
- மேலும் புள்ளிவிவரங்கள்
-
ata Languages Regions Participation Usage Content Month Code
⇒ Project
Main PageLanguage
⇒ Wikipedia articleSpeakers in millions
(log scale) (?)
Editors per million
speakers (5+ edits)Prim.+Sec.
Speakers
M=millions
k=thousandsEditors (5+)
per million
speakersViews
per hourArticle
count -
Dec Summary Tables Charts ta Tamil AS
66 M 2 2,668 83,971
-