Hug, Kiss, Love, Lust, Sex – Appropriateness in Public places


சிபா

—அப்ப திரையரங்கில் கானும் சினிமாவில் ஓகேவா?—

எனக்கும் இந்தக் கேள்வி உண்டு. பெரும்பாலும் அமெரிக்க சூழலை கருத்தில் கொண்டு சில சிதறல்கள்:

1. அரங்கில் பிஜி-13, ஆர் என்று முத்திரை இட்டு, அந்தரங்கமான பாலுறவுக் காட்சிகள், வன்சொல் உபயோகம், அதீத வன்முறை என்று அடைப்புக்குறிக்குள், எதனால் இப்படி சான்றிதழ் வழங்கினோம் என்பதையும் சொல்லிவிட்டு, காசு கொடுத்து வரவைக்கிறார்கள்.
பேருந்தில், அங்காடியில், விளையாட்டரங்கில் ‘இந்த இடத்தில் வசவுகள் சொல்லலாம்; இங்கு இச்சையை இஷ்டப்படி தணித்துக் கொள்ளலாம்!’ என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதில்லை.

2. கட்டிப்பிடிப்பதிலேயே பல வகை இருக்கிறதே… மீண்டும் அமெரிக்க சினிமா தர வரிசைப்படி strong sex sequence, sexual references, brief sexual images, pervasive strong crude and sexual content, graphic nudity என்று பலவகை. இதில் எல்லா விஷயமும் பொதுவில் செய்வது சரியா? எங்கு லகான் போடலாம்? எப்படி லிமிட் வைக்கலாம்?

காட்டாக திரைப்படம் என்றால் குரு-வையும் தென்றல்: வேட்டையாடு விளையாடுவையும் எவ்வாறு ஒப்பிட முடியும்?

3. —அச்சம் கலந்த வெட்க உணர்வினால் கூட அநாகரிகம் என சொல்கிறார்கள் —

கடற்கரையில் நீச்சலுடையில் உலா வந்தால் அழகு. விளையாட்டுகளில் ஊக்குவிப்பு என்னும் பேரில் cheerleading அழகு?! மோதிரம் மாற்றிபின் முத்தமிடுதல் அழகு. ஆதுரத்துடன் ஆரத் தழுவுதலும் அழகு. விரசத்துடன் தொடர்ச்சியான புணர்ச்சிகளில் இறங்கினால் ஒவ்வொருவருக்கும் அளவுகோல் மாறும். பிறரின் ‘ரேட்டிங்’ என்னுடைய எல்லையை மீறும்போதுதான் பிரச்சினை.

தொடர்புடைய இரண்டு திரைக்காட்சிகள்…

அ) ‘விடுகதை‘ திரைப்படத்தின் இறுதிக்காட்சி. மெரீனாவில் வயதான ஆணும் இளமையான பெண்ணும் சிரித்துப் பேசி வருவதைப் பார்த்து பிரகாஷ்ராஜ் சினமுறுவார். உளவியல் அலசலாக ஆராயும் ருத்ரன் ‘அவர்கள் ஏன் அண்ணன், தங்கச்சியாக இருக்கக் கூடாது? ஏன் பேராசிரியர், மாணவியாகவோ பிற உறவுகளாகவோ இருந்திருக்கக் கூடாது’ என்று கேட்பார்.

ஆ) ‘மௌனம் பேசியதே‘ படத்தில் சூர்யாவின் குணச்சித்திரத்தை உணர்த்தும் காட்சி. புதுமணத் தம்பதியர் தோளில் கை போட்டுக் கொண்டு சுகமாகப் பேசி நடை பழகுகிறார்கள். பைக்கில் வரும் நாயகன், அவர்களைத் தடுத்தாட்கொண்டு, ‘அவ என்ன ஓடிப் போயிடுவாளா? ஏண்டா இறுக்கிப் பிடிச்சுண்டு இருக்கே’ என்று கிண்டலடித்து பிரித்து விடுவார்.

அன்னியோன்யம் எவ்வாறு நாளடைவில் தேய்கிறது என்பதையும் இந்தக் காட்சி உணர்த்தலாம் 😉

வயதான காலத்தில் மனைவியை, அவளின் சின்னச் சின்ன செய்கைகளை, ஆடை அலங்காரத்தில் செய்யும் மாற்றங்களை, பகிர்தலுடன் வீட்டின் கடமைகளை எவ்வாறு ஆசை அறுபது நாளாக நின்று போகாமல் தொடர்ச்சியாக மோகம் காட்டுகிறான்?

‘பொது இடத்தில் கணவன் மனைவி கட்டிப் பிடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’

எப்படி கட்டுகிறார், எங்கே பிடிக்கிறார், எவ்வளவு வயது என்று பதில் கேள்வி எத்தனை பேர் கேட்டார்களோ!

7 responses to “Hug, Kiss, Love, Lust, Sex – Appropriateness in Public places

  1. “விடுகதை” படம் பார்க்கலாம்னு சொல்றீங்க … 🙂

  2. பாபா

    நல்ல விளக்கம். உண்மைதான், தங்களுள்ளே சரியான வழிகாட்டுதல் இல்லாததாலேயே இவர்கள் எது நாகரிகம் என்ற எல்லை வரவேண்டும் என்பதை அறியாமல் கூறுகிறார்கள் என நம்புகிறேன்.

    அதே போல் இதில் வரைமுறை என்ன என்பது அந்த அந்த கால கட்டத்திற்கு ஏற்றால் போல் மாறுபடும். இந்தப் பதிவை நான் இங்கே கொடுக்க காரணமே 90% என்று இருந்ததால் தான். இதுவே 60% என்று இருந்திருந்தால் பதிவிட்டிருக்கமாட்டேன். எனென்றால் அதில் நிச்சயம் அடுத்த தலைமுறையின் எண்ணம் அதிகம் இருந்திருக்கும். அப்பொழுது இந்த வரைமுறையில் மாற்றம் வந்திருக்கும். ஆனால், 90%??? ம்ம்ம்

    நன்றி

  3. மதுரா – விடுகதை நல்ல படங்க..ஆனா ஓடாமப் போயிடுச்சு

    அந்த மௌனம் பேசியதே காட்சிக்குத் திரையரங்கில் சீட்டியும் பறந்தது !!

  4. மவுனம் பேசியதே வசனத்துக்கு பேருதான் காச்சலெடுத்து பேசறதுனு ஊருல சொல்லுவாங்க.

    தானும் தெரியாமா, பொறத்தியாருக்கும் ரப்சர் கொடுத்து ஒரு காச்சல் வந்தா இந்த டயலாக்கெல்லாம் வரும்.

  5. Madura… I liked Vidukathai. I used to love Balachander; so watched it and had my own takeaways 🙂

Sivabalan V -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.