Tamil Movie Songs f***in rock maan!


விவிதபாரதியில் தமிழ்ப் பாடல்கள் ஒலிபரப்பினால், வானொலி வீட்டில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். காலையில் இத்தனை மணிக்கு இன்ன விளம்பரம் என்று அத்துப்படி. சில விளம்பரங்களைக் கேட்டால், பள்ளிக்கூடத்துக்கு வெகு தாமதம் என்று வயிற்றைக் கலக்கும்.

விளம்பரதாரர் நிகழ்ச்சியில் ‘உங்கள் பிரபு’ என்று அட்டகாசமாய் எதிரொலியுடன் சொல்வார்கள். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்திற்கு ‘எது பிடித்த பாடல்’ என்று போட்டி வைப்பார்கள். ‘வாடீ என் கப்பக்கிழங்கே’ பாடலைத் தடை செய்தாலும், ‘அலைகள் ஓய்வதில்லை’ வெளிவந்த அன்றே ‘ஆயிரம் தாமரை மொட்டுகள்’ பலமுறை ஒலித்தது.

சாயங்கால நிகழ்ச்சி ரசனையாக ‘நிலாப் பாடல்கள்; சகலகலா வல்லவனில் இருந்து ‘அம்மன் கோயில் கிழக்காலே..’ ஒலித்த பின் அதன் தொடரும் பாடலாக சென்ற பாடலின் துவக்கத்தைப் படத்தின் தலைப்பில் கொண்ட திரைப்படத்திலிருந்து ‘சின்ன மணிக் குயிலே’; நாகேஷ், முத்துராமன் என்று ஒரு நடிகரின் பாடல்கள்; ஷைலஜா, சசிரேகா என்று ஒரு பாடகரின் தொகுப்பு; மெட்ராஸ், காசி என்று ஊர்களின் அணிவரிசை; இயக்குநர்களின் முத்திரைப் பாடல்கள்; ஒத்த சூழ்நிலை (அனைத்துப் பாடல்களும் ரேடியோ பதிவாக அல்லது மேடைக் கச்சேரியாக அல்லது எடக்கு மடக்கு எசப் பாட்டாக); ஒவ்வொரு நாளும், இன்று என்ன pattern என்று கண்டுபிடிப்பதே சுகம்.

அடுத்த நாள் பரீட்சை இருந்தாலும் பாடல் ஒலிக்காவிட்டால் பாடம் ஓடாது. ‘இவனுக்கு இளையராஜா இசையமைத்தால்தான் சயின்ஸ் ஒப்பிக்கப் போறான்’ என்று கோபம் தெறித்தாலும், வானொலியை யாரும் நிறுத்தியதில்லை. தேனிசையாக மும்மதப் பாடலுடன் தொடங்கி, ‘புத்தம்புதுசு’ என்று புதுப்பட விளம்பரத்துடன் முடியும் விவிதபாரதியுடன் வாலிபம்.

பாடலைப் பல முறை கேட்டு மட்டுமே இருப்பதால், காட்சியை வெள்ளித் திரையிலோ தூர்தர்சனிலோ பார்க்கும்போது சில சமயம் ஏமாற்றமும் பல சமயம் கற்பனைக்கேற்ற திருப்தியும் கிடைக்கும். பாடலே கேட்டிராமல் முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்த்த அனுபவம் நிறைய உண்டு. அதன் பின் மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்பது இன்னொரு ரகம்.

ராஜாவின் பாடல் என்றால் கண்ணை மூடிக் கொண்டு காஸெட் வாங்கச் சொல்லுவேன். மாதத்திற்கு மூன்று/நான்கு இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள் வெளிவரும். கோவைத் தம்பி, ஆர் சுந்தர்ராஜன், விஜயகாந்த், ஆர்வி உதயகுமார், கங்கை அமரன் என்றால் ராஜா ஸ்பெஷலாக போட்டிருப்பார் என்பது நம்பிக்கை. சந்திரபோஸும் சங்கர்-கணேஷும் எப்பொழுதாவது ஓரிரு பாடல்களை முணுமுணுக்க வைப்பார்கள்.

படித்த தெர்மோடைனமிக்ஸ் விதிகள் மறந்தாலும் தெம்மாங்குப் பாடல்களின் மெட்டும் வரிகளும் எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கின்றன.

என்றென்றும் அன்புடன் பாலா தான் அடிக்கடி இந்த மாதிரி பல்லவியும் சரணமும் நடத்துவார். பாடல் நடுவே வரும் சரணங்கள் இங்கே. படமும் பல்லவியும்???

எல்லாமே மிகவும் விருப்பமான பாடல்கள். சோகம் ததும்பும் துக்கப்பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும், அழுது வடியாமல் இருக்க ஓரிரண்டு குத்துப் பாடல்களை சேர்த்துள்ளேன். ராஜாவாக ரொம்பி வழிந்ததில் இருந்து சிலவற்றை கழித்து காதல் டூயட் ஒன்றிரண்டை கூட்டி, தற்காலம் என்று சேர்த்து பாடல் மிக்ஸ் ரெடி:

  1. பாவை வண்ணம் கோவில் ஆகும்

    மாலை வண்ணம் கைகள் ஆகும்
  2. கொஞ்சம் மறைஞ்சு பார்க்கவா
    இல்ல முதுகு தேய்க்கவா

    சின்னக் காம்புதானே பூவை தாங்குது

  3. ‘கிருதாவை வைக்கச் சொன்னியே
    வெச்சேனே…

    மீசையத்தான் எடுக்கச் சொன்னியே
    எடுத்தேனே…

    பந்தான்னு நான் நெனச்சேன்
    என்னை பாகவதராக்கிப்புட்டியே

  4. நாயரு மேயராகும் எழுத்து மாறினா
    லோயரும் அப்பருதானே எழுத்த மாத்தினா
    சின்னச்சின்னத் தலையில் நீ எழுதும் எழுத்தில
    என்னன்னமோ நடக்குதிங்கே ஒண்ணும் புரியலே

  5. ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே

    என்னை உன்னைக் கேட்டா வாழ்க்கைப் பயணம் போகுது?

  6. தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
    கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
    பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும்
    அந்த மேகம்தன்னில் ஏது நீ சொல்வாய் கண்ணா

    ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தரநிலவோ
    நாளும் நிலவது தேயுது மறையுது
    நங்கை முகமென்று யாரதை சொன்னது

  7. முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
    முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்
    நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
    மேனியெங்கும் பூ வசந்தம்

  8. வயசோட வந்ததெல்லாம் வெளங்கலியே அப்போது
    விளங்காத கேள்விக்கெல்லாம் விடை வருதே இப்போது
    கருப்புமில்லே வெளுப்புமில்லே
    கண்ணுலதானே பேதமிருக்கு

  9. கங்கை நீயென்றால் கரை இங்கு நானடா

  10. கனவிலாடும் நினைவு யாவும் இனிய பாவம்


| |

7 responses to “Tamil Movie Songs f***in rock maan!

  1. இளவஞ்சி

    பாலா,

    அவ்வப்போது உங்களுடைய பதிவுகளைப் படித்து கண்களுக்கு பயிற்சியளிப்பது வழக்கம்!

    நட்சத்திர வாரத்தில் தினமும் இரண்டு பதிவாவது படித்து கண்வலி தாங்கலை! அறிவுக்கண் திறக்கும் உங்கள் பதிவுகள் முகத்தில் இருக்கும் கண்களை நொள்ளையாக்கலாமா?!

    ஆகவே, ஃபாண்ட் கொஞ்சம்.. கொஞ்சமென்ன.. நிறையாவே பெரிசா வையுங்க.. இல்லைன்னா… உங்க மூக்குக்கண்ணாடிய இங்க அனுப்பிவைங்கப்பு! 🙂

  2. சிறில் அலெக்ஸ்

    அட..
    நட்சத்திரப் பதிவு.

  3. —-நட்சத்திரப் பதிவு—

    :-))) நன்றி சிறில் 🙂

    —உங்க மூக்குக்கண்ணாடிய இங்க அனுப்பிவைங்கப்பு—

    நீங்க இன்னும் காண்டாக்ட் லென்ஸுக்கு மாறலியா…

  4. டுபுக்கு… 1, 3, 4, 5, 6, & 9

    சிறில் (அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.) … 1,2,6,7 & 9 ==> ஐந்து!

  5. சிறில் அலெக்ஸ்

    1. பாவை வண்ணம் கோவில் ஆகும்

    மாலை வண்ணம் கைகள் ஆகும்

    பல்லவி: பாடும் வானம் பாடி
    படம்: நான் பாடும் பாடல்
    (என்க ஊர் செம்மண் காட்டுல நடந்துகிட்டே பாடுவார்னு நினைக்கிறேன். முட்டத்துலேயும் படமாக்கப்பட்டது)
    ———
    2. கொஞ்சம் மறைஞ்சு பார்க்கவா
    இல்ல முதுகு தேய்க்கவா

    சின்னக் காம்புதானே பூவை தாங்குது

    பல்லவி: பொத்திவச்ச மல்லிகை மொட்டு
    படம்: மண் வாசனை
    —-
    6. தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் ….

    பல்லவி: இதழில் கதை எழுதும்
    படம்: உன்னால் முடியும் (அ)தம்பி
    —–
    7. முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்..

    பல்லவி: இந்த(இன்ப) வேளையில்
    படம்: இளமைக்காலங்கள்(?)
    (அருமையான ரிதம் இந்தப் பாடலில்)
    —–
    9. கங்கை நீயென்றால் கரை இங்கு நானடா
    பல்லவி: சின்ன சின்ன ரோசாப்பூவே
    படம்: பூவிழி வாசலிலே (What a title?)
    (அருமையான ரிதம் இந்தப் பாடலில்)
    ——-

    ம்ம்ம்ம் அஞ்சுதான் முடிஞ்சது

  6. பாவை வண்ணம் கோவில் ஆகும் – பாடும் வானம்பாடி
    (நான் பாடும் பாடல்)

    கிருதாவை வைக்கச் சொன்னியே- தேவதையைக் கண்டேன் -கோயிலாண்ட வரச் சொன்னியே
    வந்தேனே

    நாயரு மேயராகும் எழுத்து மாறினா- கண்ட கண்ட பசங்கள எல்லாம்
    மேல ஏத்தும் கடவுளே – Thevan

    ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் – Nandha – எங்கெங்கோ

    தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் – **ahem** Unnal Mudiyum thambi – Ithalil Kathaiyezhuthum

    கங்கை நீயென்றால் கரை இங்கு நானடா – Poo Vizhi Vasalile – Chinna chinna roja poove

  7. பிங்குபாக்: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.