Monthly Archives: மே 2006

Annual FETNA Festival – New York City

  • செல்வி‘ வில்லி தேவிப்ரியா வாராங்க! (தேவதர்ஷினியையும் சேத்தனையும் கூப்பிட்டிருக்கலாம்)
  • சித்திகிழக்கே போகும் ரயில் ராதிகா வாராங்க!! (ஒய் விஜயா, வடிவுக்கரசி, ஜெயசுதா எல்லாம் ஏன் அழைக்கவில்லை?)
  • அர்ஜூனா அர்ஜுனா‘ பாடலில் துணை நடனமாடிய புலன் விசாரணை சரத்குமார் வாராங்க!!! (நமீதாவையும், ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்த நயந்தாராவையும் விட்டுட்டு வருவது துளிக்கூட நியாயமில்லை.)
  • வான்மதி‘ ஸ்வாதி வாராங்க!!!! (விந்தியா, சிம்ரன் எல்லாம் சும்மாத்தானே இருப்பாங்க?)
  • ‘வண்ண வண்ணப் பூக்கள்’ விநோதினி வாராங்க!!!!! (‘ஈரமான ரோஜாவே’ மோகினி, ‘இதயம்’ ஹீரா, ‘புது நெல்லு புது நாத்து’ சுகன்யா என்று 1991 சகமுகங்களோடு டச் வெச்சுண்டு இருக்காங்களா?)
  • ‘கவிப்பேரரசு’ கள்ளிக்காடுக் கவிஞர் வைரமுத்து வாராங்க!!!!!!

    இந்த மண்ணில், மலைகளில், நதிகளில், மரம் செடி கொடிகளில், பறவைகளில், விலங்குகளில், கண்ணீரில், ரத்தத்தில், கண்படு உறவுகளில், கண்காணா உறவுகளில், ஒவ்வொரு மைக்ரோ வினாடியிலும் வலைப்பதிவுகள் உட்கிடையாகவோ, வெளிப்படையாகவோ இருக்கிறது.

    (வலைப்பதிவு எழுதுவதற்கு ஃபார்முலா சொல்லித் தருவீங்களா?)

    FeTNA in coordination with New York Tamil Sangam 19th Annual Tamil Convention

    நுழைவு கட்டணம் – $85 (இரு நாள்களுக்கும் சேர்த்து)

    மேலும் விவரங்களுக்கு: ஃபெட்னா


    | |

  • Day with a Difference & BlogDesam

    Happy Birthday! :: தினம் ஒரு கவிதை யாஹூ குழுமத்தின் மூலம் பரிச்சயம் ஆனவர்களில் ப்ரியாவும் ஒருவர். தினந்தோறும் Day with a Difference என்னும் மின்மடலை கடந்த மூன்று/நான்கு வருடங்களாக அனுப்பி வருகிறார்.

    சிந்தையை மேம்படுத்தும் மேற்கோள், புத்தகங்கள்/பதிவுகளில் இருந்து ரசனையான பத்தி மற்றும் அறிவை விசாலப்படுத்தும் தகவலுடன் அனுதினம் அனுப்பி வந்தவர், தற்போது வலைப்பதிந்தும் வருகிறார்.

    பிரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


    BlogDesam – IndiBlogs Portal

  • சுன்சுனா,
  • மைடுடே,
  • இண்டிப்ளாக்,
  • சுலேகா,
  • தேஸிப்ளாக்ஸ்
    என்று நிறைய பேர் இருப்பதாலோ என்னவோ, ப்ளாக்தேசம் இன்னும் பரவலாகப் புகழ் அடையவில்லை?!
  • கண்ணுக்குப் பழக்கமான, (ஆனால் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமான) வடிவமைப்பு உடையது
  • மற்ற எந்த (ஆங்கிலத் தொகுப்பகங்கள்) வலையகத்திடமும் இல்லாத மறுமொழி நிலவரத்தைக் காட்டுவது
  • வலைப்பதிவரே ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்துவது (பெரும்பாலானவற்றில் வலைப்பதிவை பொத்தாம் பொதுவாக ‘அரசியல்’, ‘விளையாட்டு’ என்றுதான் ஒரேயடியாக வகைப்படுத்த இயலுகிறது.)
  • ஒவ்வொரு category-க்கும் தனித்தனியே செய்தியோடை விடுவது
  • வலைப்பதிவை எளிதில் அடையாளம் காட்ட ஒவ்வொரு பதிவுக்குப் பக்கத்திலும் ஆசிரியரின் உருவம் தோன்றுவது
  • வாசகரின் கோபத்தைப் பதிவு செய்வதற்கு ‘-‘ வாக்குகளோ, பிறருடன் பகிர நினைப்பதை செயலாக்குவதற்கு ‘+’ வாக்குகளோ போட சொல்வது
  • தமிழ்மணம் போல் இல்லாமல் தானியங்கியாக பதிவுகளைக் கண்டெடுப்பது (manual vs automatic aggregation)
  • கருவிப்பட்டி எல்லாம் நிறுவாமலேயே, மறுமொழி கலவரத்தை வாசகர்களுக்கு பிரகடனம் செய்ய முடிவது…

    சாம்பார் பந்தோக்கு / அஞர் அறிஞர் / உடனடி குளம்பி / கிருபா / ஆண்டி போன்ற பதிவுப்பரிபாகிகளும் ஜோதியில் ஐக்கியமானால் வலை தேசமே களை கட்டும் 🙂

    ப்ளாக் தேசத்தில் இணைய…


    | | | |

  • 36 IAS officers transferred in TN

    36 IAS officers transferred in TN

    மாற்றப்பட்ட அதிகாரிகள்: (அடைப்புக்குறிக்குள் அவர்கள் வகித்த முந்தைய பதவிகள்)

    ஷீலா பாலகிருஷ்ணன் ஒழுங்குமுறை சிறப்பு ஆணையர், சேலம் (முதல்வரின் 1வது செயலாளர்)

    பி.செல்வம் பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை (மது விலக்கு ஆயத்துறை)

    மச்சேந்திரநாதன் கூட்டுறவுஉணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் (இதே துறையில் சிறப்புச் செயலர்)

    எஸ்.மாலதி வணிக வரித்துறை சிறப்பு ஆணையர் (பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைசிறப்பு ஆணையர்)

    தேவராஜ் வணிக வரித்துறைமற்றும் பதிவுத்துறைச் செயலர் (மிகவும் பிற்பட்டோர் துறை சிறப்பு ஆணையர்)

    ராஜரத்தினம் பொதுப்பணித்துறை செயலர் (வணிக வரி, பதிவுத் துறை செயலர்)

    சுப்புராஜ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (தொழிலாளர் நலத்துறை ஆணையர்)

    சிவகாமி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் (ஒழுங்கு முறை ஆணையர் சென்னை)

    சக்தி காந்ததாஸ் தொழில்துறை செயலாளர் (எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர்)

    சன்வத் ராம் சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர்நிர்வாக இயக்குநர் (பொது மறுவாழ்வுத் துறை செயலர்)

    கணேசன் மதுவிலக்கு, ஆயத்துறை செயலர் டாஸ்மாக் தலைவர் (வேளாண் விற்பனைப் பிரிவு ஆணையர்)

    அலாவுதீன் நெடுஞ்சாலைத் துறை செயலர் (தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம்)

    ராம் மோகன் ராவ் நில நிர்வாக சீரமைப்புத் துறை (நெடுஞ்சாலைத் துறை பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவர், நிர்வாக இயக்குநர்)

    பழனியப்பன் சமூக நலம், ஊட்டச்சத்துத் துறை செயலர் (பொதுப் பணித்துறை செயலர்)

    ஜக்மோகன் சிங் ராஜு தொழில்துறை ஆணையர், தொழில், வணிகத் துறை இயக்குநர் (தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம்)

    நிரஞ்சன் மார்டி நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் (நில நிர்வாக சீர்திருத்த ஆணையர்)

    வெங்கட்ரமணன் ஒழுங்கு முறை ஆணையர், தஞ்சை (முதல்வரின் செயலர்2)

    வெ. இறையன்பு செய்தி, சுற்றுலாத்துறைச் செயலர் (ஒழுங்குமுறை ஆணையர், மதுரை)

    ஜோதி ஜெகராஜன் பொது, மறுவாழ்வுத்துறை செயலர் (உள்துறை சிறப்புச் செயலர்)

    சந்தீப் சக்சேனா தமிழ்நாடு சர்க்கரைக் கழக நர்வாக இயக்குநர், ஆணையர்

    எஸ்.அய்யர் ஒழுங்கு முறை ஆணையர், நெல்லை (டாஸ்மாக் தலைவர்)

    காசி விஸ்வநாதன் உள்துறைச் சிறப்புச் செயலர் (கால்நடை பராமரிப்புத் துறை, பண்ணை,மீன்வளத்துறை சிறப்புச் செயலர்)

    சண்முகம் ஒழுங்குமுறை ஆணையர், ராமநாதபுரம் (போக்குவரத்துத் துறை செயலர் மற்றும் ஆணையர்)

    ஜவஹர் ஆட்சித் தலைவர், நாகப்பட்டனம் (பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலர்)

    கண்ணா வருவாய்த்துறை இணைச் செயலர் (தமிழ்நாடு சர்க்கரைக்கழக நர்வாக இயக்குநர்)

    சுகுமாறன் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலர் (மாவட்ட ஆட்சித் தலைவர், சேலம்)

    டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் (நாகை மாவட்ட ஆட்சித் தலைவர்)

    டாக்டர் சொர்ணா வேளாண்துறை துணைச் செயலர் (முதல்வரின் துணைச் செயலர், முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயலர்)

    விஜயக்குமார் கால்நடை பராமரிப்பு, பண்ணை, மீன் வளத்துறை இணைச் செயலர் (தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குநர்)

    இளங்கோவன் தமிழ்நாடு எரி சக்தி மேம்பாட்டு நறுவன தலைவர், நர்வாக இயக்குநர் (கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, காதித்துறை செயலர்)

    பாலகிருஷணன் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன தலைவர் (தமிழ்நாடு தொழில் ¬தலீட்டுக் கழக தலைவர்)

    சிவதாஸ் மீனா சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் (சென்னை மாநகராட்சி இணை ஆணையர்)

    ஸ்வரண் சிங் தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், நிர்வாக இயக்குநர்)

    கருத்தையா பாண்டியன் தமிழ்நாடு மருத்துவசேவைக் கழக நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர்)

    சுப்ரியா சாஹு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்ட இயக்குநர், உறுப்பினர்செயலர் (ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், சுகாதாரம், குடும்ப நல கூடுதல் செயலர்)

    வி.மூர்த்தி தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவன நிர்வாக இயக்குநர் (ஒழுங்கு¬முறை ஆணையர், தஞ்சை)

    Stalin gets two best officers to assist him

    Stalin gets two best officers to assist him

    உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருந்து அமைச்சகத்தை திறம்பட நடத்த மிகத் திறமையான அதிகாரிகளான டாக்டர் ராதாகிருஷ்ணன், அசோக் வரதன் ஷெட்டி ஆகியோரை முதல்வர் கருணாநிதி தேர்வு செய்து நியமித்துள்ளார். தமிழக அரசுத் துறைகளிலேயே அதிக அளவு பட்ஜெட் ஒதுக்கப்படும் துறையும் இதுதான் (கிட்டத்தட்ட ரூ. 10,000 கோடி வரை ஒதுக்கப்படுகிறது).

    அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி. ராதாகிருஷ்ணனைப் போலவே திறமையான, சர்ச்சைகளில் சிக்காத அதிகாரி ஷெட்டி. இவரும் பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராக இருந்தவர். அவரை ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக நியமித்துள்ளார் கருணாநிதி. இவர் இதற்கு முன் ஊனமுற்றோர் நலத்துறையின் ஆணையராக இருந்து வந்தார்.

    இதுவரை ஊரக வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்து வந்த சாந்த ஷீலா நாயர் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

    மாற்றப்பட்ட, சாந்த ஷீலா நாயர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக (டிக்) தலைவராக நயமிக்கப்பட்டுள்ளார். இவரும் சுனாமி பாதிப்பின்போது ஆரம்ப கட்டப் பணிகளை முடுக்கி விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல அதிமுக ஆட்சியில் விவசாயத் துறை கூடுதல் இயக்குனராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்த சந்தானத்தையே அத்துறையின் இயக்குனராக நியமித்துள்ளார் கருணாநிதி.

    இதுவரை இந்தப் பொறுப்பில் இருந்த வாசுதேவன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

    métier

    வலைப்பதிவருக்கு டிப்ஸ், புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள், வலைப்பதிவரின் மனோபாவங்கள் என்று கடந்த சில வருடங்களில் மாதந்தோறும் ஒன்றிரண்டு தடவையாவது எழுதியிருப்பேன். இருந்தாலும் இணையத்தின் வழியாக பரிச்சயமான முக்குறி (த்ரீ ஸைன்ஸ்) கேட்டுக் கொண்டதற்கிணங்க வாசகர் விருப்பப் பதிவு.

  • ப்ளாக்ஸ்பாட்டை விட வோர்ட்ப்ரெஸ் சிறந்தது. யார் பின்னூட்டம் இடுகிறார்கள், எப்படி வருகை புரிகிறார்கள் போன்ற சில்லறை விஷயங்களிலிருந்து போலிகளைக் கட்டுபடுத்துவது வரை மேம்பட்ட முறையில் செயல்படுகிறது. இதுவரை வலைப்பதிவு தொடங்காவிட்டால் வோர்ட்பிரஸ் பயன்படுத்தவும்.
  • கல்யாணம் என்றால் மாப்பிள்ளை வீடு, மாமியார் வீடு ரெண்டும் முக்கியம்; அது போல், தேன்கூடு, தமிழ்மணம் இரண்டிலும் பதிவை சமர்ப்பித்து விடவும்.
  • சாஃப்ட்வேருடன் வரும் manual-களை ஏறெடுத்தும் சீந்தாத சாதியைச் சேர்ந்தவர்கள் நாம். என்றாலும், கில்லியின் தமிழ் தட்டச்சு பக்கம், Indian Language Development WebSite போன்ற உதவிப் பக்கங்களைப் பொறுமையாக ஒரு முறையாவது முழுவதுமாக சிரத்தையாக படித்து மனதில் ஏற்றிக் கொள்ளவும்.
  • டெக்னோரட்டி, ரோஜோ, போன்ற அகில உலக தில்லாலங்கடி சேவைகளிலும், அனிதா போரா, காமத், போன்ற லோக்கல் தாதா லிஸ்டிங்களிலும் முன்மொழிந்து மொய் போல் சுட்டியை வலைப்பதிவில் சேர்த்துவிட்டு அவர்களின் நோட்டு புத்தகத்தில் இடம் பிடித்துவிடவும்.
  • இனி எழுத வேண்டியதுதான் பாக்கி. ஆரம்பத்தில் எழுத நிறைய விஷயம் இருக்கும். சின்ன வயசில் சைட் அடித்த கோடி வீட்டு ராமைய்யா, முதன் முதலாக தாவணி கட்டித் தழும்பானது, சுரிதார் பறக்க ஸ்கூட்டி ஓட்டியது, லயன் கிங் படத்திற்கு அலுவலக கும்பலுடன் சென்றது, தக்சின் உணவகத்தில் குலோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்தவன் என்று நினைவலைகளில் தொடங்கவும்.
  • ப்ராஜெக்ட் டெலிவரி ஆனபிறகு சப்போர்ட் கடுப்படிக்கும். அது போல் நாளடைவில் நனவோடைகள் போரடிக்க, சினிமா, தொலைக்காட்சி, புத்தகம் போன்ற கலைத் துறை விமர்சனங்களை முன் வைக்கவும்.
  • இதுவும் தீர்ந்து போக தினசரி செய்திகளை மேயவும். எல்லோரும் தினத்தந்தி, தினமலர், தினகரன் படிப்பதால் தி ஹிந்து, டெக்கான் * போன்ற ஆங்கில நாளிதழ்களை வாட்ச் செய்யவும். விகடன், குமுதம், கல்கி, துக்ளக், கீற்று.காம் போன்றவற்றையும் கண்காணிக்கவும்.
  • தொடர்ந்து சரக்கில்லாவிட்டால், இந்தியா டுடே, ஃப்ரண்ட்லைன், தி வீக், அவுட்லுக் பக்கம் பார்வையைத் திருப்பவும். இதுவும் redundant ஆனால், எகனாமிஸ்ட், ஃபாரின் பாலிசி,ஃபோர்ப்ஸ் என்று மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் உதவும்.
  • நியுஸ்லெட்டர்ஸ் கொடுக்கும் தளம் அனைத்திலும் பெயரையும் மின்மடலையும் பதிவு செய்து, அவர்களின் வலையகம் அப்டேட் ஆகும்போதெல்லாம் தெரிவிக்க வசதி செய்து கொள்ளவும்.
  • இவ்வளைவையும் படித்து அப்படியே கொடுக்க செய்திகள் ஹார்லிக்ஸ் அல்ல என்பதை புரிந்து கொள்ளவும். நமக்கு முக்கியமாகப் படுவதை, புல்லட் பாயிண்ட்டாக கொடுத்தால் நேரப் பற்றாக்குறையால் திண்டாடும் படிப்பாளிகளுக்கு வசதியாக இருக்கும். நம்ம கருத்தை சுருக்+நறுக்காக பக்கத்திலேயே சொந்தமாக கிறுக்கலாம். புகைப்படம் இட்டால், காசி சொல்வது போல் (மேலும் விரிவாக இங்கே) எளிதில் வலைப்பதிவில் தோன்ற வகை செய்யவும்.
  • சிந்தையைக் கிளறுவதாக தோன்றும் பதிவுகளில் நிறைய பின்னூட்டங்கள் இடவும். நமக்குப் பிடித்த பதிவுகளாகத் தேர்ந்தெடுத்து இடவும். நமக்குக் கருத்து இருந்தால் மட்டுமே இடவும். கண்டிக்கிறேன், பிடிக்கவில்லை, ரசிக்கவில்லை, நீங்க நல்லா எழுதலை போன்ற பெரிய மனுசத்தனமான மறுமொழிகள் தேவையில்லாதது; அப்படியும் கை அரித்தால் ஏன் என்றாவது சொல்லி விடவும். நம்ம அலுவல்/வீட்டு ஐ.பி முகவரி தெரியக் கூடாது என்றால் பிகேபி சொல்வது போல் செயல்படவும்.
  • அனானியாக பின்னூட்டமிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். நம்ம வலைப்பதிவிற்கு சக கருத்து உடையவரை (& vice versa) வரவேற்பதற்கும் காமெண்ட்கள் உதவுகிறது; அதே சமயம் நம்ம crap-ஐ நாமே சொந்தம் கொண்டாடா விட்டால், வேறு யார் உரிமை பாராட்டுவார்கள்?
  • நேர்மையாக சொல்ல வந்ததை எழுதவும். நம்ம மனசுக்குப் பட்டதை ஒத்துக் கொண்டு எழுதினால் அதற்கு கிடைக்கும் வரவேற்பே தனி. மேலும், எழுத்திலும் வெளிப்படையான எண்ணம் தெரியவரும். அதற்காக சொல்ல வந்ததை அப்படியே சொல்கிறேன் என்று உடனடியாக போஸ்ட் செய்து விடாமல், ஒரு தடவையாவது ப்ரூஃப் பார்த்து தட்டச்சுப் பிழைகளை கூடிய மட்டும் திருத்திப் போட்டால் வாசகரை கௌரவிக்கும்.
  • வலைப்பதிவுகள் பலவற்றைத் தொடர்ந்து படித்து வரவும். கில்லி, தேஸிபண்டிட், தேஸிகிரிடிக்ஸ் போன்ற பரிந்துரைகளைப் பார்க்கவும். தினசரி தெருமுக்கு பிள்ளையாருக்கு அரகரா போடுவது போல் தேன்கூடு, தமிழ்மணம், மறுமொழி நிலவரம், வாசகர் பரிந்துரை, நட்சத்திரப் பதிவர். அதிகம் பார்வையிடப்பட்டவை ஆகியவற்றை தரிசித்து விடவும். [இந்த வலைப்பதிவரும் கில்லியின் பங்களிப்பாளர் போன்ற disclosureகளை சொல்லிவிடவும்]
  • வலைப்பதிவு என்பது தனி நபர் மடலுக்கு ஈடாகாது. நீங்கள் வலைப்பதிவராக இல்லாவிட்டால், இந்தப் பதிவை நான் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக அஞ்சலிட்டிருப்பேன். ஆனால், இந்தப் பதிவு வேறு எவரையும் புண்படுத்தாது என்றும் உணர்ந்தால் மட்டுமே பொதுவில் இடவும்.
  • நக்கலுக்கும் நரகலுக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். நமக்கு நக்கலாகப் படுவது இன்னொருவருக்கு நரகலாகத் தெரியும் அபாயம் இருக்கும். இன்னொருவரை மிதித்து, திட்டி, கிடைக்கும் பாராட்டைத் தவிர்க்கவும்.
  • மேலே உள்ள கருத்திற்கு பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் விதிவிலக்கு. அரசியல்வாதிகள், நடிகர்கள், மருத்துவர்கள் போன்றவர்களைத் திட்டாவிட்டால் வலைப்பதிவுக்கு மேட்டரே கிடைக்காது.
  • வார்ப்புருவில் மாட்டிக் கொண்ட வலையகம் போல் ஒரே மாதிரி monotonous-ஆக எல்லா பதிவுகளும் அமைத்துக் கொள்ளாமல், ஒரு பதிவில் நினைவலை, அடுத்தது அரசியல், தொடர்ந்து சினிமா, கொஞ்சம் வலைப்பதிவு வட்ட அரசியல், சொல்ப தமிழ், லிட்டில் ஆங்கிலம், குடும்ப ரசாபாசம் என்று கலந்து கட்டி கூட்டாஞ்சோறாகக் கொடுக்கவும்.
  • ஃப்ரீயா கொடுத்தா பினாயில் குடிப்போம் என்பதற்காக என்னைப் போல் நிறைய சுட்டிகளையும், ஜாவாஸ்க்ரிப்ட் ஜாலங்களையும் வலைப்பதிவில் இணைப்பதால், அகலபாட்டை இல்லாமல் வருபவர்களுக்கு ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படம் எப்போது முடியும் என்று பொறுமையிழப்பது போல் கோபம் வரும். டெம்பிளேட்டில் அதிகம் கை வைத்தால் சரக்கு கம்மி என்று அர்த்தம். உலகெங்கும் உலாவிகள் தோறும் அதிவேகத்தில் வலைப்பதிவு மின்ன, சின்ன வார்ப்புரு வைத்திருக்கவும்.
  • கொதிப்பு உயர்ந்து வருகிறதா… பதிவு செய்யலாம்; கருத்தை நிறைக்கிறதா… பகிரவும்; அசத்தல் திரைப்படமா… சொல்லவும்; போன பதிவில் பின்னூட்டமிட்டவருக்கு இந்த விஷயம் பிடிப்பதால் மட்டும் பதிய நினைக்கிறோமா… பதிவதற்கு முன் யோசிக்கவும்.
  • அதிகம் ஈஷிக் கொள்ளாமல், முன்முடிவுகளுடன் நட்புக்காக சங்கடமான எண்ணங்களைத் தவிர்க்காமல், இன்றைக்கு மட்டும் நான்கு பதிவுகள் இட்டு விட்டோமே என்று சுயக்கட்டுப்பாடுகள் இட்டுக் கொள்ளாமல், பெருசு போல் டி ஆர் விஜயகுமாரி கண்களுக்கு மயங்குகிறோமே என்று மறைத்து வைக்காமல், தனித்துவமாக நினைத்த விஜய்காந்த் முதல் நாளே சட்டசபை மட்டம் போடும் உள்முரண்களை இருட்டினுக்குள் தட்டிக் கொள்ளாமல் எழுதினால் லேஸிகீக் சொல்வது போல் Raw, naive and unfettered ஆக இருந்தால் வரப்பிரசாதம்.ஏதோ சொல்ல நினைத்து, எங்கோ இழுத்து சென்றால் ஃப்ரீயா வுடுங்க… அதுதான் ப்ளாக் போஸ்ட்! இந்தப் பதிவில் ஒரு பயனும் இல்லாவிட்டாலும் தலைப்பு வார்த்தையாவது புத்சு.

    | |

  • MIA Already – Jayalalitha & Vijayganth

    எம்.எல்.ஏ.க்களாக ஜெயலலிதா, விஜயகாந்த் பதவி ஏற்க வரவில்லை

    தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 5 பேர் தவிர, 228 பேர் சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிவபுண்ணியம் (மன்னார்குடி), உலகநாதன் (திருத்துறைப்பூண்டி), பத்மாவதி (நன்னிலம்) ஆகிய 5 பேர் இன்று பதவி ஏற்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடப்பதால் அவர்கள் வரவில்லை என்று தெரிகிறது.

    ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் அறைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு வருகிறார். விஜயகாந்த் காலை 11.30 மணிக்கு மேல் வருகிறார். இன்றும் பதவி ஏற்க முடியாமல் போனால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணிக்கு சட்டசபை கூடும்போது அங்கு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொள்ளலாம்.

    Raama Narayanan becomes Director – State Sangeetha Nataka Academy

    தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் இராம. நாராயணன் :: Tamil Nadu Iyal Isai Nadaga Mandram

    தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக திரைப்பட இயக்குநர் இராம. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை முதலமைச்சர் கருணாநிதி புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.

    மன்றத்தின் உறுப்பினர் செயலராக கவிஞர் இளையபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

    News & Web Log

    சிதறலாய் என் சிந்தையைக் கவர்ந்த சில செய்திகள்/வலையகங்கள்:

    1. பிரேசிலின் சிறைகளை தாதா ஆதரவாளர்கள் கைப்பற்றி காவலாளர்களைப் பிணைக்கைதியாக்கினார்கள்: கூட்டுக் குடும்பமாக இருந்த எட்டு பெரிய தாதாக்களை பிரித்து விட்டார்களாம்; அதனால் ஏற்பட்ட வியாபாரப் பின்னடைவினால் கொந்தளிப்பு. சிடி ஆஃப் காட் நிஜத்தில் அரங்கேறுகிறது.
    2. விடாக்கண்டன் அமெரிக்காவிற்கும் கொடாக்கண்டன் க்யூபாவிற்கும் மீண்டும் சதாய்ப்பு: அமெரிக்க கட்டிடத்தில் விடுதலையைக் கவர்ச்சியாக விற்கிறார்கள்; பயந்து போன ஃபிடல் காஸ்ட்ரோ கொடித் தோரணம் கட்டி மறைக்கிறார். (க்யூபா குறித்த முந்தை பதிவு.)
    3. ‘Incendiary Circumstances – Amitav Ghosh: புத்தக விமர்சனம் – 1
    4. ‘Seeing’ By José Saramago: நோபல் பரிசு வென்றவரின் சமீபத்திய புத்தகத்தைக் குறித்த விமர்சனம் (பு.வி. 2)
    5. Chantix™ (Varenicline): நீங்க புகை ஊதுபவரா? பழக்கத்தை விட்டுவிட நினைப்பவரா? இன்னொரு மார்க்கம் சந்தைக்கு வரப்போகிறது.
    6. இஸ்ரேலில் திருமணமானவர்கள் பிரிந்திருக்க வேண்டும்: பாலஸ்தீனியர்களை மணமுடித்தவர்களைப் பிரித்து வசிக்க வைக்கிறது இஸ்ரேலிய நீதிமன்றம் & சட்டம்.
    7. ஜெர்மனியின் ராபின் – ஹூட்: அமெரிக்க டாலர் 150-க்கு சாண்ட்விச்; கூச்சி கைப்பைக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்று சம்பாதிப்பவர்களிடம் இருந்து திருடினால் தப்பா?
    8. மோச்சே பழங்குடியினருக்குத் தலைவராக இருந்தவர் பெண்: 1600 வருடங்களுக்கு முந்தைய பெரு நாட்டின் பூர்வகுடியினர் சம்பந்தமான ஆராய்ச்சி.
    9. The Revolution Will Not Be Televised: வெனிசுவேலா நாட்டு அதிபர் ஹூகோ சாவெஸ் குறித்த திரைப்படம். உங்கள் ஊரில் திரையிடுகிறார்களா என்றும் அறியலாம்.
    10. PIRELLI FILM – The Call: பிரேல்லி டயர்கள் தயாரிப்பது தவிர, (Rated Adults Only) நாள்காட்டிதான் இதுவரை கொடுத்து வந்தார்கள். இப்பொழுது நவோமி காம்பெல், ஜான் மால்கோவிச்சுடன் திரைப்படம். இணையத்திலேயேப் பார்க்கலாம் (திரைப்படம் சைவ விளம்பரம்தான்; தைரியமாகக் குடும்பத்தோடு பார்க்கலாம்)
    11. FREE Gas Help.com: அமெரிக்காவில் இலவசமாய் பெட்ரோல் பெறுவது எப்படி?


    | |

    Tamil Nadu Ministry

    அமைச்சரவை

    பெயர் – வயது – எத்தனையாவது முறை எம்.எல்.ஏ ஆகிறார் – அமைச்சராக முன்பு எத்தனை தடவை இருந்திருக்கிறார் – வேறு பொறுப்புகள், வாரிசு தகுதி

  • கருணாநிதி – 82 – 11 – 4 – திமுக தலைவர்
  • அன்பழகன் – 84 – 8 – 3 – திமுக பொதுச் செயலாளர்
  • ஆற்காடு வீராசாமி – 69 – 6 – 2 – திமுக பொருளாளர்
  • முக ஸ்டாலின் – 53 – 4 – 0 – திமுக இளைஞரணி செயலாளர்; திமுக துணைப் பொது செயலாளர்
  • கோசி மணி – 76 – 4 – ? – தஞ்சை மாவட்ட திமுக செயலாளர்
  • வீரபாண்டி ஆறுமுகம் – ? – ? – ? – சேலம் மாவட்ட திமுக செயலாளர்
  • துரைமுருகன் – 62 – 8 – 2 – திமுக தலைமைக் கழக செயலாளர்
  • பழனிவேல்ராஜன் – 74 – 3 – 0 – முன்னாள் சபாநாயகர்
  • பொன்முடி – 56 – ? – ? – முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்து துறை அமைச்சர்
  • கே என் நேரு – 53 – 3 – 2 – திருச்சி மாவட்ட திமுக செயலாளர்; முன்னாள் லால்குடி எம்.எல்.ஏ.; நெப்போலியனின் மாமா.
  • பன்னீர்செல்வம் – 49 – ? – 1 – கடலூர் மாவட்ட திமுக செயலாளர்; திமுக நட்சத்திரம் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தியின் வாரிசு
  • ஐ பெரியசாமி – 54 ? – 1 – திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளர்
  • சுரேஷ்ராஜன் – 43 – 2 – 1 – குமரி மாவட்ட திமுக செயலாளர்
  • பரிதி இளம்வழுதி – 47 – 6 – 0 – திமுக துணைப் பொது செயலாளர்
  • எவ வேலு – 54 – 3 – 0 – திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர் (பஸ் கண்டக்டராக இருந்தவர்; பல கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்)
  • சுப தங்கவேலன் – 71 – 2 – 0
  • கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் – 57 – 8 – ? – விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர்
  • அன்பரசன் – 46 – ? – 0 – காஞ்சி மாவட்ட திமுக செயலாளர்
  • பெரியகருப்பன் – 47 – ? – 0 – சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர்
  • என் கே கே பி ராஜா – 40 – 1 – 0 – ஈரோடு மாவட்ட திமுக செயலாளர்; முன்னாள் அமைச்சர் என்கேகே பெரியசாமியின் வாரிசு
  • தங்கம் தென்னரசு – 38 – 2 – 0 – மறைந்த அமைச்சர் தங்கப்பாண்டியின் வாரிசு
  • உபயதுல்லா – 60 – 4 – 0
  • மொய்தீன்கான் – 58 – 2 – 0 – தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்
  • என் செல்வராஜ் – 62 – 1 – 0 – திருச்சி எம்.பியாக இருந்தவர்
  • சாமிநாதன் – 42 – 3 – 0 – திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர்
  • பூங்கோதை – 42 – 1 – 0 – முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் வாரிசு
  • கீதா ஜீவன் – 36 – 1 – 0 – தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்தவர்; திமுக தலைவர் என் பெரியசாமியின் வாரிசு
  • தமிழரசி – 30 – 1 – 0 – மதுரை மேற்கு ஒன்றிய தலைவராக இருந்தவர்
  • கேபிபி சாமி – 56 – 1 – 0 – திருவொற்றியூர்
  • யு மதிவாணன் – 48 – 1 – 0 – திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர்
  • கே ராமச்சந்திரன் – 57 – 1 – 0 – நீலகிரி மாவட்ட திமுக செயலாளர்

    உதவியவை: தேர்தல் 2006 :: வாரிசு வேட்பாளர்கள் | தினகரன்


    | |

  • Percentage Votes – Dinamani

    தேர்தல் முடிவுகளும் அரசியல் திருப்பங்களும் – இரா. செழியன்

    2001 – 2006 சட்டசபைத் தேர்தல்களில் வாக்களித்தவர்களின் விகிதாசார அளவுகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் முறையே

    தமிழ்நாடு 59.1% – 70.8%,
    மேற்கு வங்காளம் 75.3% – 82.0%,
    புதுச்சேரி 70.1% – 85.7%,
    அசாம் 74.6% – 79.1% என்று அதிகரித்துள்ளன.

    கேரளத்தில் மட்டும் 72.5% – 72.3% என மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளது.

    ஐந்து மாநிலங்களில் வந்து வாக்களித்தவர்களின் விகிதாசாரங்கள்
    தமிழ்நாடு 60.8%,
    புதுச்சேரி 76.1%,
    கேரளம் 71.5%,
    மேற்கு வங்காளம் 78.0%,
    அசாம் 69.1%.

    இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் 2004 நாடாளுமன்றத் தேர்தலைவிட 2006 சட்டசபை தேர்தல்களில் வாக்காளர்கள் அதிகமான ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள்.

    தி.மு.க. அணிக்கு 44.7% என்றும் அ.தி.மு.க. அணிக்கு 44.1% என்றும் இருப்பதால், இடையில் குறைந்த அளவில் வித்தியாசம் வந்துள்ளது.

    நாம் கடைப்பிடிக்கிற இங்கிலாந்து நாட்டுத் தேர்தல் முறையில் அதிகமான வாக்குகள் பெற்ற வேட்பாளர் மொத்த வாக்குகளில் பத்து சதவிகிதம்தான் விழுந்தன என்றாலும் 5.1 சதவிகிதம் வாங்கிய வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். வாக்கு விகிதாசாரப்படி இடங்கள் கிடைப்பதில்லை. ஜெர்மன் நாட்டில் உள்ள பட்டியல் முறைப்படி, பாதியிடங்கள் நேரடியான தேர்தலாகவும், மறுபாதி இடங்கள் கட்சிகள் பெற்ற விகிதாசார முறையிலும் அமைவதாகவும் இருப்பதைப்போல பல ஆண்டுகளாக இந்தியாவிலும் தேர்தல் சீர்திருத்தம் பற்றி பேசப்பட்டு வருகிறது.