Karunanidhi Police Cover cartoon in Thuklak 


Karunanidhi Police Cover cartoon in Thuklak Posted by Picasa

One response to “Karunanidhi Police Cover cartoon in Thuklak 

  1. என் வணகத்துக்குரிய தமிழ் மக்களே,

    தற்பொழுது சிறீலங்காவில் நடப்பது ஏதோ ஒரு நாட்டுக்கும் வேறு ஒரு நாட்டுக்கும் நடக்கும் போர் போல் உள்ளது. போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஒன்று இருப்பதை “ஸ்ரீலங்கா” அரசு மதிக்காமல் தன்னிச்சையாக ஒப்பந்தத்தை ரத்து செய்துகொண்டு “கருணா” என்ற நம்பிக்கை துரோகியை கூட வைத்துக் கொண்டு அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கின்றது இந்த சிங்கள அரசு. உலக நாடுகள் எல்லாம் சொல்லுவதை கூட கேட்காமல் ஆளும் சிங்கள அரசு ரத்த வெறி கொண்டு அலைகின்றது என்பது வெட்ட வெளிச்சமாக நமக்கு தெரிகின்றது. தமிழன் ஸ்ரீலங்காவில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமானால் இந்தியாவின் தலை ஈடு கண்டிப்பாக அவசியம் என்பதினை நாம் அனைவரும் நன்கு உணர வேண்டும்.

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் திரு.கருணாநிதி அவர்கள் தற்பொழுது ஸ்ரீலங்கா தமிழர்களுகாக அனைத்து கட்சிகளுக்கும் தங்களின் சுய வெறுப்பு, விருப்புகளை மறந்து ஓர் அணியில் திரண்டு போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருப்பது மனதளவில் தமிழன் என்ற முறையுள் ஆறுதல் அளிகின்றது. மேலும் தந்தி கொடுப்பதாலோ, இல்லை தொலைபேசியில் ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் பிரச்சனைகளை நமது பிரதமரிடம் கூறுவதாலோ ஒன்றும் பயன் ஏற்பட போவது இல்லை என்று நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் திரு.கருணாநிதி அவர்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும் நடக்கும் என்று சொல்லிருக்கிறார்கள்.

    நமது மதிப்புக்குரிய பாராத பிரதமர் டாக்டர் திரு மன்மோகன் சிங்க் நான் பார்த்து கொள்கிறேன் நீங்கள் ஸ்ரீலங்கா மக்களை பத்தி கவலை கொள்ள வேண்டாம் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் திரு.கருணாநிதி அவர்களிடம் கூறிஇருக்கிறார்கள். நமது மரியாதைக்குரிய பிரதமர் எண்ணத்தை பார்க்க போகிறார் என்றுதான் இன்றளவும் புரிய வில்லை “தமிழ் இனமே” ஸ்ரீலங்காவில் அழிந்த பின்பு தமிழ் இனம் இல்லா “ஸ்ரீலங்காவையா”. அவர் கூறுவது அப்படித்தான் உள்ளது. காரணம் இந்தியாவில் செயல்கள் அப்படிதான் உள்ளது மேலும் இந்தியா அரசின் செயல்பாடுகளும் அப்படித்தான் உள்ளது மறைமுகமாக ராணுவ உதவியையும் ஆயுத உதவியையும் நமது அரசு “ஸ்ரீலங்கா சிங்கள அரசுக்கு” கொடுத்து அப்பாவி ஸ்ரீலங்கா தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவுகிறது. நேற்று கூட ஸ்ரீலங்காவின் ஆளும் அதிபரின் சகோதரர் வெளிபடையாகவே கூறுகிறார் ” இந்தியா எங்களுக்கு விடுதலை புலிகளை ஒடுக்க முழு ஒத்துலைப்பையும் கொடுக்கிறது என்று” அதற்கு நமது மரியாதைக்குரிய பாராத பிரதமரோ இல்லை அவரின் சகாக்களோ வாயை திறந்து மறுப்பு இதுவரை தெரிவிக்கவில்லை.

    இதில் இருந்து இந்தியாவின் “ரெட்டை நாடகம்” அம்பலம் ஆகி உள்ளது. ஒன்றை மட்டும் கூறி கொள்கிறேன் “ஸ்ரீலங்காவில் தமிழன்” தலை நிமிர்ந்து இருக்கும் வரை நமக்கு நமது மக்களுக்கு இந்தியாவின் இறையான்மைக்கு ஒருபோதும் களங்கம் வராது மாறாக நமது அரசாங்கம் சிங்களர்களுக்கு சாதகமாக செயபடுமேயானால் இதற்கான பின் விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும். நாம் நம் தலையில் நாமே தெற்கிலும் பிரச்சனயை உருவாக்கி கொண்டது போல் ஆகிவிடும். மேலும் தெற்கிலும் ஒரு பாகிஸ்தான், ஒரு பங்களாதேஷ், ஒரு சீனாவை போல சிங்களர்களும் நமக்கு பிரச்சனயை கொடுப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. சிங்களர்களின் வெறிக்கு நமது மக்களை பலிகடா ஆக்க கூடாது அவர்களை நாம் நம் கண் எதிரிலேயே பழி கொள்ளவும் விடக்கூடாது.

    இன்று உலகம் முழுவதும் மனித உரிமையை பற்றி பேசுகிறார்கள் பக்கம் பக்கமாக பேப்பரில் எழுதுகிறாகள் இவர்கள் எல்லோரும் வெறும் ஏட்டில் எழுதிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைகிறார்கள் அது வெறும் கற்பனையே. “உலகத்தில் அகிம்சையை போதித்தவர் நமது நாட்டில் பிறந்து வளர்ந்த கவும்தம புத்தர்” அவரின் கொள்கைகளை பின் பற்றி வாழும் சிங்கள அரசு மக்களை கொன்று குவிக்கின்ற்றது இவர்கள் புத்தரை கும்பிடுகிறார்களா இல்லை அவரின் பேரை சொல்லி கொண்டு உலகை ஏமாத்துக்கிறார்களா என்று தெரியவில்லை. இது அவரின் கொள்கைக்கும் போதனைகளுக்கும் எதிரானவை அவரின் ஆன்மா கண்டிப்பாக ரத்த வெறி கொண்ட சிங்களர்களை மன்னிக்காது.

    நாம் அடுத்த நாட்டு மக்கள் மீது காட்டும் கருணையை கூட நமது ரத்தமான ஸ்ரீலங்கா தமிழர்களின் பிரச்சனையில் காட்ட வில்லை என்பது வேதனை கலந்த விஷயம் அது ஏன் என்றுதான் தெரியவில்லை. நாம் நமது மதிப்புக்குரிய முன்னால் பிரதமர் அமரர் திரு.ராஜுவ்காந்தியை இழந்தோம் அதற்கான பழி வாங்கும் தருணமும் இது அல்ல அவரின் ஆன்மாவும் அதனை விரும்பாது. அப்படி பார்த்தால் நமது மதிப்புக்குரிய பாராத பிரதமர் திரு. டாக்டர் மன்மோகன் சிங் இன்று ஆட்சியிலே பிரதமர் பதவியில் இருக்க முடியாது. நமது அன்னை மதிப்புக்குரிய முன்னால் பாராத பிரதமர் இந்தியாவின் இரும்பு பெண்மணி திருமதி.இந்திராகாந்தி அவர்களை அவரின் பாதுகாவர்களாக இருந்த ஒரு “சிங்” கொன்றான் என்பதற்காக நாம் ஒட்டு மொத “சிங்” இனத்தையே வெறுக்கவில்லை மாறாக அவர்களை இன்று உயர்ந்த பதவிகளில் வைத்து அழகு பார்க்கிறோம். அதுபோலத்தான் இதுவும் ஒரு தவறுக்காக நாம் ஒரு நாட்டில் ஒரு இனத்தையே அழிக்க துணை போக கூடாது அப்படி போனால் நம்மை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

    விடுதலை புலிகளே பலமுறை வருத்தப்பட்டும் இருக்கிறார்கள் அதனால் நிறைய பாதிப்புகளையும் சலுகைகளையும் இந்தியாவில் இருந்து இழந்தும் இருக்கிறார்கள். நான் விடுதலை புலிகள் பண்ணியது சரி இன்று கூறவில்லை ஒரு உயிருக்காக ஓர் ஆயுரம் உயிர்களை பலியுட நாம் காரணமாக இருக்க கூடாது என்றுதான் கூறுகிறேன். இன்று அமரராக இருக்கும் மதிப்புக்குரிய முன்னால் பாராத பிரதமர் திருமதி.இந்திராகாந்தி இல்லை என்றால் பங்களாதேஷ் என்ற ஒரு நாடு உலக வரை படத்தில் இல்லாமல் போய் இருக்கும். ஸ்ரீலங்கா மக்கள் எதற்காக போராடுகிறார்கள் அவர்களின் உரிமைக்காக ஒரு நாட்டிலே தமிழனுக்கு ஒரு நீதியையும் சிங்களனுக்கு ஒரு நீதியையும் வழங்க இவர்கள் யார் நாடு நாடு என்கிரார்களே ஸ்ரீலங்கா “சிங்கள நாடு” என்றால் அங்கே உள்ள தமிழர்கள் எந்த நாடு அவர்கள் எங்கு போவார்கள் என்ன செய்வார்கள் தமிழகம் மட்டும் இல்லை என்றால் அவர்களின் கதி என்ன ஆகும் கோஞ்சம் யோசித்து பாருங்கள் உலக நாட்டு தலைவர்களே.

    தமிழர்களே “தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த சகத்தினை அழித்திடுவோம்” என்று நமது மகாகவி பாரதியார் அன்றே பாடி உள்ளார். இன்று தான் பிறந்த நாடான சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு உண்ண உணவு இன்றி உறங்க உறைவிடம் இன்றி தனது சொத்து சுகங்களை எல்லாம் இழந்து தெருவில் அனாதையாக நிற்கிரர்களே இது உலக நாடுகளுக்கு தெரியவில்லையா இல்லை தெரிந்தும் தமிழர்கள்தானே செத்துவிட்டு போகட்டும் என்று நினைக்கிறார்களா. நாம் ஸ்ரீலங்காவை அழிக்க வேண்டாம் தமிழ் மக்களின் உரிமையை பெற்று தரலாமே நமது தமிழ் மக்களின் வாழ்வுரிமையை வாங்கி தரலாமே இவை எல்லாம் ஒரே நாட்டுக்குள் நடக்கும் சுதந்திர போராட்டம் போல் உள்ளது. நேற்று கூட “கொக்கரிக்கிறான் அந்த நாட்டு ராணுவ தளபதி ஒரு ஒரு அடியுளும் ஒரு சிங்க கோடி பறக்கும்” என்று. அவன் கூறுவது நாட்டின் இறையான்மையை காட்டவில்லை மேலாக சிங்கள மக்களின் ஆதிக்க வெறி தன்மைய காட்டுகின்றது. இவன் கூறுவது பண்டைய காலங்களில் அரசர்கள் நாடு பிடிக்கும் கொள்கையை காட்டுகின்றது.

    மேலும் ஸ்ரீலங்கா சிங்களர்களுகே சொந்தமாம் மற்றவர்கள் வேண்டுமானால் எங்களோடு இரண்டாம் தர மக்களாக வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று. இவர்கள் எல்லாம் ஆதிக்க வர்க்கம் மற்ற சமூகவத்தவர்கள் அடிமைகள் அப்படித்தான் இருகின்றது இவர்களின் கூறறு உலகம் உத்து பார்க்கும் ஒரு விஷயத்தை பிரச்சினையை இப்படி மேலும் காலம் தாழ்த்துவது என்பது “ஸ்ரீலங்கா தமிழர்களின் பிணத்தின்” மேல் பேச்சு நடத்துவது போன்றதாகும் அப்படி பேசினாலும் அது யாருக்கும் குறிப்பாக “ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்கும்” பயன் இல்லாமல் போகவும் நாம் காரணமாக இருக்க கூடாது. மதிப்புக்குரிய முன்னால் பிரதமர் அமரர் திரு.ராஜுவ்காந்தி அவர்களின் இழப்புக்கு பிறகு சிங்கள ஆட்சியாளர்கள் மனதில் ஒரு பயம் இல்லாமல் போய்விட்டது. இந்தியா இனி ஸ்ரீலங்கா பிரச்சனையில் தலை இடாது என்பதினை மனதில் வைத்து கொண்டுதான் இந்த சிங்கள அரசு இப்படி தமிழ் அப்பாவி தமிழ் மக்களை கண்மூடித்தனமாக சுட்டு பொசுக்கிறது.

    நம் தமிழ் மக்கள் இதனை காதில் வாங்குகிறார்களோ இல்லையோ சினிமா சீரியல் என்பதினில் காட்டும் ஆர்வத்தில் ஒரு துளி நமது உடன் பிறவா சொந்தங்களான ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்காக காட்ட வேண்டுமாறு கொள்கிறேன். நாளை நமக்கு ஒன்று என்றால் நமது பங்காளிகளாக ஸ்ரீலங்கா தமிழர்கள் பக்க பலமாக உடன் இருபார்கள் என்பதினில் ஐயம் இல்லை. ஆகையால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் திரு.கருணாநிதியவர்கள் தற்பொழு உள்ள நிலைமையை பயன் படுத்திக்கொண்டு ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் பிரச்சனையில் நிரந்தர தீர்வை எட்டுமாறும் அவர்களின் வழ்வாரத்தை பெற்று தருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    “ஸ்ரீலங்காவை தமிழனாகிய சிவ பக்தன் மன்னன் இராவணன் ஆண்ட பூமி” என்பதினை இன்று தங்கள் நாடு இன்று உரிமை கொண்டாடும் சிங்களர்களும் உலக மக்களும் அறியாமலும் இல்லை. வரலாறை புரட்டி பாருங்கள் உலக மக்களே உண்மை புரியும். நமது மகா காவியமான இராமாயணத்தில் ஒரு துளி கூட சிங்கள மக்களை பற்றி செய்தி இல்லை அப்படியனால் “யார் வந்தான் குடி சிங்கள இனமே ” என்பது வெட்ட வெளிச்சமாகும். உண்மையை மறைக்க பார்க்கிறது சிங்கள அரசு , வரலாற்றை மாற்ற பார்க்கிறது இந்த சிங்கள அரசு. மன்னன் இராவணன் ஆண்ட பூமியை இன்று தங்கள் பூமி இன்று கொக்கரிக்கும் சிங்கள சிப்பாய்கள் ஒரு கணம் உண்மையை தோண்டி பாருங்கள் உங்களின் உள்மனதில். நமது இராமாயண காவிய நாயகர் ஸ்ரீ.ராமர் சிறீலங்காவில் ஸ்ரீ.சீதையை தேடி இராவண நாட்டுக்குதான் சென்றார் மாறாக சிங்கள மன்னனை நோக்கி இல்லை அப்படி ஒரு இனம் இருந்ததாக நமது இராமாயணத்தில் ஒரு வரியில் கூட கூற வில்லை. ஆகையால் ஸ்ரீலங்கா முழுக்க முழுக்க தமிழர்களுகே சொந்தம் அது சீதா தமிழ் பூமி.

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் திரு.கருணாநிதி அவர்கள் இதனை ஒரு செய்தியாக மட்டும் விட்டு விடாமல் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்று இணைத்து ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் அவசியம் என பட்டாள் அனைத்து கட்சி தலைவர்களையும் (அண்ணா திராவிட முன்னேற் கழக தலைவர் முன்னால் முதமைச்சர் டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு. மருத்துவர்.ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட கழக தலைவர் திரு.வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் திரு.நல்லகண்ணு, திரு.வரதராஜன், திரு..பாண்டியன், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற் கழக தலைவர் திரு.விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் திரு.சரத்குமார்,

    தமிழக தந்தை பெரியாரின் வாரிசுகளான திராவிட கழக தலைவர் திரு.வீரமணி, மார்க்கிசிய பெரியாரிய பொதுவுடமை கட்சி தலைவர் திரு.வே.ஆனைமுத்து, மற்றும் ஈழ மக்களுக்காக தன்னை பல முறை வருத்திக்கொண்ட பல.நெடுமாறன் ஐயா, தாயாக மறுமலர்ச்சி கழக தலைவர் திரு.ராஜேந்தர், மற்றும் முஸ்லீம் கழக தலவர்களையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்று மாண்புமிகு பாராத பிரதமர் டாக்டர் திரு மன்மோகன் சிங்க் அவர்களை நேரில் சென்று வலியுறுத்த வேண்டும். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னை சோனியா காந்தியையும் சந்தித்து பேச வேண்டும். மேலும் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி தலைவர் மாண்புமிகு எதிர் கட்சி தலைவர் திரு L.K.அத்வானி, மட்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் திரு.பிரகாஷ் கரத், மற்றும் ஏனைய அனைத்து தலைவர்களையும் நேரில் சென்று ஸ்ரீலங்கா மக்களுக்காக உதவுமாறு வலியுறுத்த வேண்டும்.

    இது சாத்தியமா என்பதை விட இவர்கள் இதனை சாத்திய படுத்தி நாங்கள் எல்லோரும் எங்களுககவோ இல்லை எங்களின் பதவி சுகத்துக்காகவோ கட்சி நடத்தவில்லை என்றும் நாட்டு மக்களின் நலனுகாகத்தான் கட்சி நடத்துகிறோம் என்பதனை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். தற்பொழுது தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களின் மனதிலும் ஒரே மாதிரியான எண்ண அலை ஓடுகிறது.இதுநமக்கு கொஞ்சம் ஆறுதலான விஷயம் மாற்று கருத்தை கொண்டு இருந்த முன்னால் முதமைச்சர் டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா கூட தற்பொழுது ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பது அவருக்கும் தமிழ் ரத்தம் ஓடுகிறது என்பதினையே காட்டுகின்றது.

    நாம் ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும் நமது முதல்வர் தொலைபேசியில் பேசியும் தந்தி கொடுத்ததும் பிரதமருக்கு அறிவித்தார் இதனை நமது பிரதமர் காதில் வாங்கி கொண்டார் ஆனால் அவர் பண்ணியது எனன என்பதினை நாம் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். நேரடியாக் இவர் ஸ்ரீலங்கா அதிபரிடம் பேசாமல் நமது தூதரை விட்டு பேச சொல்லி இருக்கிறார் அதுவும் அந்த நாட்டு அதிபரிடம் கூட இல்லை வெறும் ஸ்ரீலங்கா தூதரிடம் அப்படியனால் தற்பொழுது உள்ள நமது அரசாங்கம் கண்டிப்பாக ஸ்ரீலங்கா ஆளும் சிங்கள அரசுக்கு நிதி உதவியும் ஆயுத உதவியும் அளித்து கொண்டு உள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது. மரியாதைக்குரிய அமெரிக்காதிபர் திரு. ஜார்ஜ் புஷ்டன் மணிக்கணக்கில் பேசும் நமது பாராத பிரதமர் பக்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா அதிபருடன் பேச தயங்குவது ஏன்.

    நமது மதிப்புக்குரிய பாராத பிரதமர் டாக்டர் திரு மன்மோகன் சிங்க் அவர்களை பார்த்து ஒன்றை மட்டும் கேட்டு கொள்கிறேன். நமது முன்னால் பிரதமர்களான இன்று அமரர்களாக இருக்கும் மதிப்புக்குரிய அன்னை திருமதி.இந்திராகாந்தி, திரு.ராஜுவ்காந்தி அவர்கள் ஸ்ரீலங்கா அரசோடு போட்ட ஒப்பந்தத்தை இதுவரை ஸ்ரீலங்கா அரசு நிறைவேற்றி உள்ளதா அப்பு்றம் ஏன் இவர் கங்கணம் கட்டிகொண்டு ஸ்ரீலங்கா சிங்கள அரசுக்கு ஆயுத உதவியையும் நிதி உதவியையும் அள்ளி வழங்குகிறார். மதிப்புக்குரிய பாராத பிரதமர் டாக்டர் திரு மன்மோகன் சிங்க் அவர்களே நீங்கள் தமிழனை கொள்ள துணை போகாதிர். தமிழன் தன்மானம் உள்ளவன். வரலாறு உங்களை இல்லை உங்கள் இனத்தையே வெறுக்கும் அப்படி ஒரு நிலையை உருவாகாதிர்….

    நாம் பாரம்பரியத்துக்கு சொந்தகரகள் எங்கு எல்லாம் மனித உரிமை மீறல் நடக்கிறதோ அங்கு எல்லாம் அனைத்து காலங்களிலும் நமது நாட்டின் தலையிடும் நமது தேசிய தலைவர்களின் தலையிடும் இருந்து இருக்கின்றது ஆனால் நமது பக்கத்தில் நடக்கும் பிரச்சனைகளில் கண்ணை மூடி கொண்டும் வாயை மூடி கொண்டும் அமைதியாக நமது அரசும் பிரதமரும் இருப்பது நமக்கு எல்லாம் வேடிக்கையாகம் வேதனையாகவும் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக வெள்ளையர்களை எதிர்த்து முதன் முதலிம் குரல் கொடுத்தவர்கள் ஆப்ரிகாகாரர்கள் அல்ல நமது “தேச பிதா மகர் அண்ணல் காந்தியடிகள்” என்பதினை மறந்து இந்த அரசு செயல்பட வேண்டாம்.

    மேலும் தமிழ் நாட்டிலே உள்ள அரசியல் கட்சிகள் மட்டும் சினிமாகாரர்கள் மட்டும் அனைத்து தரப்பு மக்களும் தனி தனியே போராடுவதை விட்டு விட்டு ஒன்று பட்டு ஒன்றுமையாக தங்களின் பலத்தை காட்டி போராட வேண்டும் என்பது என் அவிப்பிறாயம். இவர்களுக்காக முதல் வகுப்பிலே உள்ள எருது சிங்கம் கதையை தோண்ட வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

    மேலும் தமிழ் நாட்டிலே ஒரு அரசியல் களத்திலே ஒரு “சகுனி” உண்டு என்றால் அது முழுக்க முழுக்க தமிழ்நாடு ஜனதா கட்சி தலைவர் மதிப்புக்குரிய “திரு.சுப்பிமணிசாமி” அவர்களையே சாரும். இவர் என்றாவது ஈழ மக்களுக்காக குரல் கொடுத்தது உண்டா இல்லை தமிழக மக்களுக்காவது போராடியது உண்டா இதில் வேறு வெந்த புண்ணில் வேல் பாச்சியதை போல் ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் மனதை காயப்படுத்தி பேசுவது. மேலும் முற்றும் உணர்ந்த மகா ஜானி போல் அறிக்கைகளை அள்ளி விடுவது. இவர் அறிவு ஜீவியாக இருக்கலாம் தமிழகத்தை பொருத்தவரை இவர் மாபெரும் அரசியல் கோமாலி”. இவர் பேசுவது எல்லாம் நடைமுறைக்கு ஒதுவரதவைகலே அதிகம்.

    இவர் பிறந்த இனத்துக்காக வேண்டுமானால் இவரை அண்ணா திராவிட முன்னேற் கழக தலைவர் முன்னால் முதமைச்சர் டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா தான் அமைக்கும் அரசியல் கூட்டணியில் சேர்த்து கொள்ளலாம். வேறு ஒன்றும் காரணமாக இருக்க முடியாது. காரணம் இவருக்கென்று தனி பட்ட செல்வாக்கு எல்லாம் தமிழகத்தில் கிடையாது குறிப்பாக அவரின் நிழலே அவரின் பின்னால வர மறுக்கும்.

    ஆகையால்!!!!!!!!!

    நமது மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் டாக்டர்திரு.கருணாநிதி அவர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து ஸ்ரீலங்கா தமிழர்களுக்காக டெல்லி சென்று மாண்புமிகு பாராத பிரதமர் டாக்டர் திரு மன்மோகன் சிங்க் அவர்களையும் மட்டும் நமது முதல் குடிமகன் எனப்படும் மாண்புமிகு குடியரசு தலைவர் திருமதி.பிரதிபா பாட்டேல் அவர்களையும் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து ஸ்ரீலங்கா தமிழர்களின் வாழ்வதார பிரச்சனைகளை எடுத்து கூறி ஒரு நிரந்தர தீர்வு காண உதவி பண்ண கேட்டு கொள்கிறேன். ஸ்ரீலங்கா தமிழர்களின் நலனுக்காக தமிழக தலைவர்கள் தங்களின் சுய நலன்களையும், பதவி சுகங்களையும் விட்டு கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் மற்றும் அதற்காக தயங்கவும் கூடாது.

    நமது மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் டாக்டர்திரு.கருணாநிதி அவர்கள் அப்படி பன்னுவறேயானால் இவவுலகில் அழியா தமிழ் இனம் உள்ளவரை அவரை வாழ்த்தி போற்றி புகலும் மாறாக அமைதியாக இருப்பாறேயானால் அவரின் ஆன்மாவே அவரை விரட்டும் என்ற உண்மை அவருக்கும் தெரியும். இன்று தமிழகத்திலே மறைந்த நமது மரியாதைக்குரிய முன்னால் முதல்வர் அமரர் டாக்டர் மக்கள் திலகம் M.G.R இருந்து இருந்தால ஈழ தமிழ் மக்களின் வாழ்கையில் ஒரு விடிவு பிறந்து இருக்கும் அவரும் அன்னை இந்திராகாந்தியும் ஈழ மக்களுக்காக நிறைய செய்து இருக்கிறார்கள். அவர்களின் காலத்திலே ஸ்ரீலங்கா சிங்கள அரசு இந்தியா அரசுக்கு பயந்து கொண்டு இருந்தது.

    “கருணா என்ற நம்பிக்கை துரோகிக்கு பதவி கொடுப்பதால் மட்டும் சிங்களர்கள் தமிழர்களை மதிக்கிறார்கள் என்பது ஆகிவிடாது” அவன் நம்பிக்கை துரோகி ………..
    அவனையும் இந்த சிங்கள அரசு தன்னிச்சையாக குண்டு வைத்து கொன்று விட்டு விடுதலைப்புலிகளின் மேல் பழி போடும் காலமும் வெகு தொலைவில் இல்லை…….என்பதினை நாம் உணர வேண்டும்.

    சிறீலங்காவில் தமிழ் இனம் தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமா இல்லை சிங்களர்களின் அடிமைகளாக வாழ வேண்டுமா யோசியுங்கள் தமிழர்களே……….

    வாழ்க தமிழ் மக்கள்! வளர்க்க தமிழ் இனம்! தமிழ் இனம் தலைகட்டும் இந்த புவி எங்கும்!

    த.பூபதி, முருக்கன்குடி, பெரம்பலூர்

D.BOOPATHI -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.