Tag Archives: Play

கண்கூலி

சொல்வனம் இதழின் 326வது வெளியீட்டில் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ மூன்றாம் பகுதி வந்திருக்கிறது.

#solvanam பத்திரிகைக்கு நன்றி

ஒரு நாடகம்.
ஒரு உயர்தனிச் செம்மல் (வார்த்தை உதவி பி.ஏ.கே அவர்கள்)
ஒரு பரிந்துரை.

இவை மூன்றுமே ஆழமாகவும் இந்திய தத்துவத்துடனும் வாத்தியார்களின் துணை கொண்டும் எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு எழுத வேண்டும் என்று 326 குறிப்புகள் வரைவோலையாகக் கிடப்பில் இருக்கிறது.

சொ.வ. இதழில் இதை விட மூன்று முக்கியமான ஆக்கங்களும் வெளிவந்துள்ளன:
1. டொரொண்டோ வெங்கட்ரமணன் எழுதிய இருளையும் ஒளியையும் வென்றவன் – ஆதி பகவன் மாதிரி பத்ரியும் வெங்கட்டும்: அவர்கள் முதற்றே பதிவுலகு
2. நிர்மல் எழுதிய பொற்குகை ரகசியம் – சிறுகதைத் தொகுப்பு: வாசிப்பு அனுபவம் – ஆங்கில விஷயங்களுக்கு சாட்ஜிபிடி இருக்கிறது. தமிழ் நூலுக்கு விமர்சனம்/அறிமுகம் கொடுப்பதற்கு சுய சரக்கு தேவை.
3. சிறுகதை சிறப்பிதழ்

வெளியான கதைகளில் எது உங்களுக்கு #1?

பாதை தெரியுது பார்?

ழான் பால் சார்த்தர் எழுதிய வெளியேறாதே (“No Exit”) படித்திருப்பீர்கள். அதில் மூன்று தொலைந்து போன ஆத்மாக்கள் ஒருவரையொருவர் காலாகாலத்திற்கும் படுத்திக் கொண்டேயிருக்கும். அந்த மூவரின் முந்தைய வாழ்க்கையின் நுண்ணிய மறந்துவிட வேண்டிய தகவல்களையும் ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருந்து, சமயத்திற்கேற்ப நினைவு கூர்ந்து அசௌகரியமாக்கிக் கொள்ளும். மற்றவர்களை எவ்வாறு கோபத்தின் உச்சிக்குத் தள்ளுவது என்பதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வார்கள்.

அதில் இருக்கும் புகழ்பெற்ற வரி: “நரகம் என்பது பிற மாந்தர்கள்” (“Hell is other people.”)

இது குழம்பிக் கொள்ளக் கூடிய கவித்துவமான வரி. எல்லாவிதமான உறவுகளும் நட்புகளும் தவிர்க்கவியலாமல் கசப்பில் போய் முடியும் என்னும் அனர்த்தம் – நேரடி கற்பிதம். ஆனால், மற்றவர் எப்படி நம்மை அவதானிக்கிறார்களோ, அப்படிதான் நாமே நம்மை மதிப்பிடுகிறோம்.. பிறர் எவ்வாறு நினைப்பார்கள் என்பது பொதுபுத்தி ஆக நம் மனதில் தங்கியிருக்கிறது; அதற்கேற்ப நம்மை இலக்காக்கிக் கொள்கிறோம்.

சொல்வனத்தில் வெளியான ’பழனி’ கதை – மற்றவர்கள் எவ்வாறு தங்களின் தீர்ப்பை பழனியின் மீது எழுதுகிறார்கள் என்பதைச் சொல்கிறது. வழக்கமான பாணி; சாதாரணமான நடை. ஆனால், அந்தக் கதைக்கு இப்படியொரு பருந்துப் பார்வை பார்க்க முடியும் என்பது — கபாலி பாஷையில் *மகிழ்ச்சி*
mw-hell-is-other-people-natalie-dee-jean-paul-sartre-play_no-exit

கைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம் III

ஒளிப்படங்கள், விழியம்: Kaisika Purana Nadagam: Nambaduvaan Sarithiram by Prof. Ramanujam

வரலாறு + சரித்திரம்: கைசிக புராண நாடகம் :: நம்படுவான் சரிதம்

தமிழ் உலா – என்றென்றும் அன்புடன், பாலா: திருக்குறுங்குடி கிராமமும் ‘கைசிக’ நாட்டிய நாடகமும்

சில குறிப்புகள்

  • அழிந்து போகும் பழங்கால கலைவடிவம்: முப்பாட்டனுக்கு முந்தைய காலத்து பழக்கம். தேவதாசியர்கள் அபிநயித்து நடத்திக் காட்டிய கலை வடிவம். இன்று முனைவர்களும் பேராசிரியர்களும் நாடக ஆர்வலர்களும் வைணவப் பெருந்தகைகளும் ஒன்று சேர்ந்து மறுபடி மீட்டெடுத்து இருக்கிறார்கள்.
  • நடனம் + இசை + செவ்வியல்: எண்பது வயது தேவதாசியிடம் இருந்து செவிவழிப் பாடல்களை செம்மையாக்கி, விடிய விடிய பன்னிரெண்டு மணி நேர கூத்து வடிவத்தை இரண்டு மணித்துளிகளாக சுருக்கி, பொருத்தமான அரங்க வல்லுநர்களைக் கோர்த்து, நடிக்க வைத்து, முற்றிலும் இலவசமாக பரவசமாக்கினார்கள்.
  • தேவதாசி + பெண்ணியம்: ஆண் வேடத்தையும் பெண்களே ஏற்று நடிக்கிறார்கள். நாயக நம்படுவானுக்கும் நாராயணனுக்கும் நம்பிக்கும் பெண்களே ஹீரோவாக வேடம் கட்டுகிறார்கள். வாழ்வில் அனுதினமும் அரக்கர்களை தரிசிப்பதால், வில்லன் பிரும்ம ராக்கதனுக்கு, அசல் ஆண் அரங்கேறுகிறார்.
  • விஐபி: ‘கண்டு கொண்டேன்’² வில்லி அனிதா ரத்னம், கூத்துப்பட்டறையின் நிறுவனர்களில் ஒருவரான நா.முத்துசாமி, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, நாடகத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்த பேராசிரியர் ராமானுஐன், இராமானுஜர் ஆவணப்படம் உண்டாக்கிய அண்ணாமலை, ‘சென்னைஆன்லைன்.காம்’ அண்ணாகண்ணன் என்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. விரிவாக கானா பிரபா மாதிரி அளவளாவ ஆசை மட்டுமே; சரக்கில்லை.
  • நாடக விமர்சனம்: நடுவில் ஜெட்-லாக் பழிபோடலினாலோ அல்லது ‘அகோ வாரும் பிள்ளாய்’ உரையாடலினாலோ அல்லது ஒரே மாதிரி அபிநயப் பாடல்களினாலோ கொஞ்சமாய் கண் சொருகியது உண்மை.
  • எது தூள் + ரசனை ஜோர்?
    • ஜனரஞ்சகமாக பல்வேறு கதாபாத்திர அறிமுகங்கள் எவ்வாறி மேடை ஏறும், எங்ங்னம் கொணரப்படும் என்பதை சொன்னார்கள்.
    • வில்லன் பிரம்மராஷஸன் தொம் தொம்மென்று Irish ‘tap dancing’ போல் அமர்க்களமாய் காலடி ஓசையில் மிரட்டி உருட்டினார்.
    • கருட வாகனத்துடன் புடைசூழ பெருமாள் தோற்றம் நாடகத்தின் உச்சகட்டம்.
    • மூன்று மணி நேரம் இடையறாது தெருக்கூத்து கிராமியக் கோவிலுக்கே அழைத்துச் சென்ற குரல்வளமிக்க இசைப்பாட்டு மிகவும் குறிப்பிடத்தக்கது.