Tag Archives: Marriages

அனேக அகமுடையார்: யானம் சிறுகதை விமர்சனம்

ஜெயமோகன் அவ்வப்போது சிறுகதைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வயதில் அல்லது அவரைப் போன்ற ஆளுமையை அடைந்த பிறகு அவரின் சமகாலத்தவரோ, அவருக்கு முந்தைய இலக்கிய ஜாம்பவான்களோ அத்திப் பூத்தது போலத்தான் சிறுகதைகள் எழுதினார்கள். அவர்கள் நாவல் எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அல்லது பேசாமல் இருப்பதே கௌரவத்தைக் காப்பாற்றும் என்று அமைதி காத்தார்கள்.

நான் நினைத்தது – ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர். சுஜாதா மட்டும் விதிவிலக்கோ!?

இந்த எண்ணம் தவறுதலாக இருக்கலாம். இருபதுகளில் துவங்கி அறுபது வயது தாண்டியும் எந்த எழுத்தாளராவது தொடர்ச்சியாக சிறுகதைகளை தொண்ணூறுகளில், 2000களில் வெளியிட்டார்களா?
தீபாவளி சிறப்பிதழ்கள் தவிர்த்து அதற்கான பத்திரிகைகள் இருந்ததா என்பதைக் குறித்த என் எண்ணத்தையும் திருத்தவும்.

நிற்க.

யானம் (சிறுகதை) | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

இந்தப் பதிவு இலக்கியகர்த்தாக்களின் பிற்கால படைப்பூக்கம் பற்றியது அல்ல. அமெரிக்காவில் வசிக்காத ஒருவர் அமெரிக்காவைப் பற்றி புனைவு எழுதலாமா என்பதைப் பற்றியும் அல்ல. எனினும், அதையும் நோக்குவோம்.

ஒரே ஒரு மேற்கோள்: “என்ஜாய் பண்றாங்களோ இல்லியோ, இது ஸ்கூலிலே பிரெஸ்டிஜ் இஷ்யூவா இருக்கு”

பொத்தாம்பொதுவாக ஜல்லியடிப்பது வாத்தியாரின் வித்தை. ஜெயமோகனின் சிறுகதைகளில் ஒற்றை வரி தீர்ப்பு கொடுத்து மொத்த சமுதாயத்தை சுருக்குவதும் அவ்வப்போது செய்வதுதான். இதிலும் சாமர்த்தியமாக கதாபாத்திரத்தின் வசனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல் கதை நெடுக மனைவியும் கணவனும் கனமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள்.

கார் என்பது எல்லைகளில்லா சுதந்திரம். நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கும் வீட்டில் இருந்தும், உடன் இருக்கும் நபர்களிடமிருந்தும் கட்டற்ற விடுதலை. பிடித்த பாடல். நினைத்த வேகம். இலக்கற்ற பாதை. அமெரிக்காவில் ஆண்டி முதல் அரசர் வரை எவரும் எளிதில் வாங்கி, உடனடியாக ஊர்ச்சுற்ற, இல்லமாக குடியிருக்க என்று நினைத்த மாதிரிக்கு பயன்படுத்தும் மூலமுதலாதாரப்பொருள்.

யானம் சிறுகதையில் நான்கைந்து நல்ல பொறிகள், துவக்க கண்ணிகள் இருக்கின்றன:
1. அந்தத் தற்கொலை எண்ணம்
2. பச்சை விளக்கிற்காக காத்திருக்கும்போது(ம்) பக்கத்து வண்டிகளை எட்டிப் பார்ப்பது
3. விடுமுறை விட்டால் காரை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்புவது

அதை விட அந்த இடங்களை உளவியல் ரீதியாக தீர்க்கமாகவோ சம்பவங்களின் கோர்வையில் ஆழமாகவோ உள்ளே செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் அவசரத்துடன் தாண்டி விடுகிறார். அதை விட ஆபத்தான பிரதேசம் – இந்திய சாலைகளையும் போக்குவரத்தையும் அமெரிக்க மக்களோடும் இயந்திரங்களோடும் ஒப்பிடும் பிரதேசங்கள். அவை இன்னும் தேய்வழக்காக அலுமினிய பிரகாசத்துடன் மின்னிடுகின்றன.

காரில் இருக்கும் விடலைகளும் பாந்தன்களும் இன்றைய காலத்தில் செல்பேசியில் மூழ்குவார்களேத் தவிர இந்த மாதிரி தத்துவபூர்வமான விவாதங்களுக்குள் செல்லமாட்டார்கள். கதைதானே? ஜெயமோகன் கற்பனைதானே? அரட்டை அடிக்கக் கூடாதா என்ன!?

எனினும், கதையின் அடிநாதம் முக்கியமான ஒன்றைச் சுட்டுகிறது.

இந்தக் காலத் தம்பதியினருக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. இல்லறமும் போரடிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பத்தாம்பசலி கொள்கைகளிலும் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை.

அவர்கள் திறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள். அன்றாடம் ஒரேயொருவடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதினால் வரும் அலுப்புகளை உணர்ந்தவர்கள்.

”நியு யார்க்கர்” கட்டுரையில் இருந்து நறுக்:

So many rules! “American Poly” reveals Americans to be very American. Good Puritans, we made marriage into work and non-monogamy into even more work—something that requires scheduling software, self-help manuals, even networking events. Presumably, participants could at least skip the icebreakers.

https://www.newyorker.com/magazine/2024/01/01/american-poly-christopher-gleason-book-review-more-a-memoir-of-open-marriage-molly-roden-winter

”அன்புள்ள அல்லி” கேள்வியில் இருந்து இன்னொரு மேற்கோள்:

My nesting partner of a decade and I opened our relationship about four years ago, and for the first three years, we were ethically non-monogamous, but not poly. We’re pretty parallel, but we’re recently trying garden party style for big events… the polycule… metamour…

https://slate.com/human-interest/2024/01/birthday-plan-relationships-sex-advice.html

மணிரத்னம் ஓகே கண்மணி எடுத்தது போல், அனேக அகமுடையார் கொள்கைகளை ஜனரஞ்சகமாக்க இன்றைய கல்கித்தனமான கதை. மணி ரத்தினம் சினிமா போல் இதுவும் ஒட்டிக்கோ/கட்டிக்கோ வேட்டியாக பல்லிளிக்கிறது.

உங்கள் வாசிப்பில் என்ன உணர்ந்தீர்கள்?

State of matchmaking in India: 2014 Brides and Grooms

பெண் பார்ப்பது இப்பொழுது ஆண் பார்ப்பது என அழைக்கப்படுகிறது. பத்தாண்டுகள் முன்பு வரை ”மாப்பிள்ளை முறுக்கு” பிரபலம். இப்பொழுது மணப்பெண் ப்ரெட்ஜல் (pretzel) புகழடைந்திருக்கிறது.

இதற்கான உதாரணங்களை முதலில் காண்போம்.

“பையன் பக்தி சிரத்தையாக இருக்க மாட்டானே? நாள்தோறும் கோவில் கோவிலாக ஏறி இறங்க மாட்டானே? காலங்கார்த்தாலே பூஜை, புனஸ்காரம் செய்ய மாட்டானே?” – இது இன்றைய கால்கட்டிற்கு மணல்கயிறு மாதவிகள் போடும் முதல் கட்டளை.

“அமெரிக்காவா… லாஸ் ஏஞ்சலீஸ்னா சரிப்படலாம். எங்களுக்கு குளிர் ஒத்துக்காது. அங்கே சமையற்காரி வைச்சுண்டா, தேவயானி கோப்ரகாடே மாதிரி அம்மணமாக்கி வேற சோதனை செய்யறா!” – வெளிநாட்டினருக்கு இடமில்லை என்னும் சுதேசிக் கொள்கையும் இப்பொழுது பரவலாகி வருகிறது.

“இருபது லட்சமாவது சம்பளம் வாங்குகிறானா? பொறியியல் மட்டும் இல்லாமல் மேலாண்மையும் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறானா? கூடவே பி.எம்.பி., சிக்ஸ் சிக்மா, ஜாவா, பி.எச்.பி. பரீட்சை எல்லாம் தேறி சான்றிதழ் இருக்கிறதா?” – அம்மி மிதிப்பதற்கு முன் காலாகாலமாக சம்பந்திகள் முன்வைக்கும் கட்டளையும் உண்டு.

எல்லாப் படமும் மறு ஆக்கம் செய்கிறார்களே… ’மணல் கயிறு’ மறுபடி மருமகள் நிபந்தனைகளைக் கொண்டு வந்தால், “எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை” பாட எந்தப் பாடகி நீங்கள் தேர்வு செய்வீர்கள்?

மனைவியை மயக்குவது எப்படி?

ஆண்களுக்கு அழகே வீட்டைக் கலைத்துப் போட்டு வைத்திருப்பதுதான். அவர்களால் தங்கள் இல்லங்களை அருங்காட்சியகம் போல் கலை மிளிர, சமையலறையில் சுத்தம் சோறு போட வைக்க முடியும். பூந்தோட்டம் அமைத்து, வைத்தது வைக்கப் பட வேண்டிய இடங்களில் பொருந்தி வைக்க முடியும்.

ஆனால், இல்லத்தரசிகளுக்கு பொறுப்புணர்வு கூடிய கர்வம் தர விரும்பும் ஒவ்வொரு குடும்பத் தலைவனும், ‘நீ மட்டும் இல்லேன்னா… நான் அதோகதி’ என்று சொல்லி ஏமாற்றி, வெற்றி காண்பான்.

அப்படி ஒரு ‘மௌன ராக’ தருணத்தை மெரினோ லாமினேட்ஸ் விளம்பரம் ஆக்கியிருக்கிறது:

அம்மா கோந்து கணவன், பொறுப்பான புருஷலட்சணமிக்க பராமரிப்பாளனாக மாறுவதை சுட்டுகிறார்கள். இளைய வயதினர் அவசரம் அவசரமாக முடிவெடுப்பதை சுட்டுகிறார்கள். சென்ற தலைமுறையினர் நாலு சுவருக்குள் புனருத்தாரணம் செய்யாத வீட்டிற்குள் குடித்தனம் செய்த காலம் இறந்து போனதை சுட்டுகிறார்கள்.

இப்படி சட் சட்டென்று டைவோர்ஸ் முடிவுகளையும், கண்ணாலம் கட்டிக்கிறியா உறுதிமொழியும் மாற்றி மாற்றி முடிவெடுக்கும் மின்னல் யுகத்தில் இருக்கிறோம்.

FeTNA gets virtual support from Kongu Vellala Gounder Community in Coimbatore

முந்தைய பதிவு:

1.US Tamils Blog: உங்க சாதி என்ன? – FeTNA கேட்கிறது
2. அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டும் பெட்னா

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ஒரு சாதி மாநாட்டில் கலப்புத்திருமண சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்தியாவில் சுயமரியாதை திருமண சட்டம் இருக்கிறது. அமெரிக்காவில் கலப்பு திருமண சட்டம் என்று ஒன்று இருக்கிறதா?

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனக்கு வாழ்க்கை துணையாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் உரிமையை தடுப்பதில் மேற்குலகு சென்றும் வட அமெரிக்க தமிழ் சங்கங்கள் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது.

தங்கள் சாதி கட்டமைப்பு சிதைந்து விடுமோ என்று அச்சப்படாதபடி படித்தவர்களின் சந்திப்பில் நடிக, நடிகையரின் குத்தாட்டத்துடன் கூடுகிறார்கள்.

தொடர்புள்ள பதிவு: FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America

குத்துங்கம்மா குத்து: தமிழ் பேட்டை ராப், துள்ளல் கும்மாளம் & சாவு மேளம்

Avan Ivan

http://www.youtube.com/watch?v=WyUhFr0BLug

என்னை விட்டு ஓடிப் போக முடியுமா?

joseph-m-pallipurath-church-dead-killer-india-wifeபள்ளிபுரத் ஜோசப் ஏழு மலை கடந்து இரண்டு கடல்களைக் கடந்து கஷ்டப்பட்டு இந்தியா சென்றடைந்து மனைவியைக் கண்டுபிடித்தார். மூன்று மாத காலமாக மனைவியை வாட்டியெடுத்து நரகத்தில் தள்ளினார். சாய்ந்து கொள்வதற்கு மாமியாரும் இல்லாத வீட்டில் இருந்து, இவரின் கொடுமையில் இருந்து தப்பியோடி நியுஜெர்சியில் தஞ்சம் புகுந்தார் மனைவி ரேஷ்மா.

இந்தியா சென்று இல்லத்தரசியைக் கண்டுபிடித்தது போல் மீன்டும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து அதே மனைவியை சுட்டுத் தள்ளியும்விட்டார்.

nijith-kurian-st-thomas-syrian-orthodox-knanaya-churchஜோஜப்பை விட்டுப் பிரிந்த ரேஷ்மா ஜேம்ஸ் நியு ஜெர்சியில் இருக்கும் கசினுடன் ஒதுங்கி வாழ்ந்து வந்தார். கலிபோர்னியாவின் சாக்ரமென்டோவில் கிளம்பிய ஜோசப், நியூ ஜெர்சியின் க்ளிஃப்டனில் ஞாயிறு காலை தேவாலயத்திற்கு வந்த மனைவியை அடையாளம் கண்டுகொண்டு நெற்றிப் பொட்டில் சுட்டுத் தள்ளினார்.

பக்கத்தில் இருந்த சிலருக்கும் குறிதவறி குண்டு பாய்ந்துள்ளது.ரேஷ்மாவின் கசின் சில்வி பெரிஞ்செரிலுக்கும் பலத்த காயம். ரேஷ்மாவைக் காப்பாற்ற முனைந்த இருபத்தாறு வயது கூட நிரம்பாத மலோசெரிலும் மரணமடைந்தார்.

ஜியார்ஜியாவுக்கு தப்பியோடிய ஜோசப்பை உறவினர்களின் வீட்டில் வைத்து பிடித்துவிட்டார்கள்.

reshma-kunnaserry-thoompanakkunnel-pazhoothuruthu-kaduthuruthyமேலும் விவரங்களுக்கு:

1. The Associated Press: NJ church killings shake up close-knit community: “The shootings at the St. Thomas Syrian Orthodox Knanaya Church in Clifton have reverberated throughout the Knanaya faith, a close-knit Christian minority in India”

2. Authorities nab California man accused of fatally shooting estranged wife, another man in Clifton, N.J., church – Lehigh Valley News, Easton News, Nazareth News, Bethlehem News, Phillipsburg: “Pallipurath, of Sacramento, is suspected of shooting and killing 24-year-old Reshma James, and Dennis John Mallosseril inside the St. Thomas Syrian Orthodox Knanaya Church in Clifton”

3. Kaduthuruthy shocked: “Reshma, the only daughter of James and Mercy, had got married on August 25, 2007, to Joseph Sanish Pallipurath, 27, son of Pallipurathu Mathew from Nilambur”

அங்கும் இங்கும் – ட்விட்டரில் கதைத்த விவரம்

  1. மகளுடன் (மனைவியுடனும்) இரண்டு படங்கள் மீண்டும் பார்த்தேன்.’திருடா திருடா’ இன்னும் முடிக்கவில்லை. எஸ்.பி.பி. சீக்கிரமே நடிக்க வந்திருக்க வேண்டும்.
  2. இருவர்: ‘இந்தப் படம் இம்புட்டு நல்லா இருக்குமா?’ என்று நான் குசேலன் பார்த்தபிறகு ஆச்சரியப்பட்ட மாதிரி மனைவி அசந்து போனாள். நிறுத்தி நிதானமாக எம்ஜியாரின் ‘நான் ஏன் பிறந்தேன்’ ஆரம்பித்து ஜெயலலிதாவின் சுய வரலாறு எழுதிய கதை வரை பின்னணியோடு படம் பார்த்தாள். நிறையக் கேள்வி கேட்டாள்; நிறைய அளக்க முடிந்தது. படம் பார்த்து முடிக்க ஒரு வாரம் ஆனது:
    • எம் ஆர் ராதா சுட்டாரா? ஏன்?
    • வி என் ஜானகி முதல் மனைவி இல்லையா?
    • மு க.வுக்கு எத்தனை மனைவி? முக முத்து படத்தில் உண்டா?
    • கனிமொழிக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் எதில் வருகிறது? என்ன அர்த்தம்?
    • ப்ரூக்ளின் ஆஸ்பத்திரி சென்றதெல்லாம் வரவில்லையே
    • ரிக்ஷாக்காரனா? கட்சி சின்னம் வருமா?
    • அண்ணா யார்? பெரியார் எங்கே?
    • ஆர் எம் வீரப்பனா அல்லது அமைச்சர்களுமா?
  3. அஞ்சலி: மணி ரத்னம் என்றாலே போர் என்ற மகளை நிமிர்ந்து உட்கார வைத்தது. Of course, அழுது விட்டோம்.
  4. மகளுடன் அமெரிக்க அரசியல்: பக்கத்து பென்ச் தோழி மெகயின் ஆதரவாளராம். இரண்டு காரணங்கள் – டினா ஃபே; அப்புறம் ஜான் வந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அதிகரிப்பதாக அவளிடம் சொல்லி இருக்கிறாராம்.
  5. உருளைக் கறி: நாலு கிழங்கை எடுத்தோமா; குக்கரில் வேக வைத்தோமா; தோசைக் கல்லில் ரென்டு பெரட்டு பெரட்டினோமா என்பது என் பாணி. மனைவியோ மைரோவேவ் பயன்படுத்தி நாலு நாழி வேக வைக்கிறார். அதன் பிறகு தோலை உறிக்கிறார் (ஐய்யோ! அய்யய்யோ!!! சத்தெல்லாம் போவுதே); அதற்குப் பிரகு நான் ஸ்டிக் தவ்வா அழுமளவு ரோஸ்ட் நடக்கிறது. பசி வயத்தைப் பிடுங்க எந்த ஷேப்பில் காய் இருந்தாலும் கபளீகரம் ஆகிறது.
  6. ஸீக்வல்: எனக்குத் தெரியாத டேட்டாபேஸா என்று மிதப்போடு வகுப்புக்கு சென்றால் என்னென்னவோ சொல்லிக் கொடுத்தார்கள். கற்றது மைக்ரோசாஃப்ட் அளவு; கல்லாதது ஓபன் சோர்ஸ் அளவு!
  7. கட்டாந்தரையில் அண்ணாமலை: ஆர்வக்கோளாறில் டென்ட் அடித்து தூங்குவது போல் மெத்தையை வீட்டு கீழே படுத்து பார்த்ததில் முதுகு பேந்துவிட்டது. அடுத்த நாள் படுக்கையில் புரண்டு கூட உறங்க முடியாத அவஸ்தை. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றால் இதான் அர்த்தமா?
  8. கல்யாணம், காதல்: முஸ்லீம்களுக்கு நடுவில் நிலவும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் குறித்து என்.பி.ஆர் புலம்பல் கலந்த பழைய பல்லவியை ஒப்பித்தது. புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும், போக்குவரத்தில் சிக்கிய காலைப்பொழுதில் கேட்டு வைத்தேன். ‘உங்களிருவருக்கும் காதல் உண்டா?’ என்று கொக்கி போட்டு தொக்கி நிற்கவிட்டார்கள். இந்தக் காதல் என்றால் என்ன?
    • வெள்ளி இரவு வெளியில் சாப்பிடுவது
    • அவ்வப்போது ‘ஐ லவ் யூ’ சொல்லிக் கொள்வது
    • அவ்வப்போது இன்னொருவரின் வேலையை எடுத்துக் கொண்டு ஆச்சரிய சந்தோஷம் அளிப்பது
    • எதிர்பாராத நேரத்தில் முத்தமோ சில்மிஷமோ நடத்துவது
    • கண்ணீரைத் துடைத்து விடுவது
    • பெற்றோரை நினைத்து ஏங்க வைக்காத சூழலை உருவாக்குவது
    • பொண்ணுக்கும் பூ பிடிக்கும் என்று மறக்காதது
    • எதிர்பார்ப்புகளில் சிக்கிக் கொள்ளாதது
  9. தமிழ் சங்கமும் ஹாலோவீனும்: பாஸ்டன் தமிழர்கள் மாறுவேடப் போட்டி நடத்துகிறார்கள். அமெரிக்காவில் சூனியக்கார கிழவியும் இளவரசிகளும் (சாரா பேலினும்தான்) ‘ட்ரிக் ஆர் ட்ரீட்’ சென்றால் இவர்கள் ஔவையார், கண்ணகி, வள்ளுவர், பாரதி, கட்டபொம்மன் கேட்கிறார்கள். நான் ‘பெரியார்’ ஆக போகட்டும். கவனம் திருப்புவாள் என்று நினைத்தேன். மனைவியோ ‘சிலப்பதிகாரம்’ என்று வசனத்திற்காக தேட என்னுடைய பதிவே கூகிளில் விடையாக வந்தேற ‘கொடும… கொடும என்று கோவிலுக்குப் போனா.. அங்கே’ என்று சொலவடைத்தாள்.
  10. ஒட்டுக்கேட்டல்: அவனுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம். நான் முதன் முதலாக சென்ற உணவகத்தில் சரியான க்யூவில் நான் நின்றிருக்க, அவனோ தவறான க்யூவில் நின்றிருந்தான். கூட வந்திருந்தவள் (ஐம்பது இருக்கும்) அவனை என் பின்னே நிற்க சொன்னாள். அவர்களுடன் முப்பது பிராயத்தை பத்தாண்டுகள் முன்பு கடந்தவளும் வந்திருந்ததை என் அருகில் உள்ள இருக்கைகளில் அவர்கள் அமரும்போதுதான் கவனித்தேன்.

அவள்: ‘உன்னோட டேட்டிங் கதை என்னவாச்சு?’

அவன்: ‘ரெண்டு வாரம் முன்னாடி அந்த ரெஸ்டாரென்ட் போயிருந்தோம் இல்லியா? ரொம்ப யதார்த்தமா பேசிண்டிருந்தோம். ரொம்ப நல்லாப் போச்சு. என் வீடு வரைக்கும் வந்தா. ஞாயித்துக்கெழம கூப்பிட்டப்ப ‘ஏர்போர்ட்ல இருக்கேன்‘னு கட் பண்ணிட்டா. அந்த திங்கட்கிழம என்ன அவக் கூப்பிட்டிருந்தா! அவளே கூப்பிட்டா! நான் போன் செய்யாம அவளே பேசினது எனக்கு டென்சன குறைச்சது. சனிக்கிழம சந்திக்கலாம்னு சொன்னா. போன வாரம் நானும் ரெடியா இருந்தேன். ரெண்டரை ஆச்சு; மூன்றரை ஆச்சு; போன் பண்ணினா ரிங் போவுது; நாலரை ஆச்சு. எனக்கு அப்பவே தெரிந்து போச்சு. அஞ்சு ஆச்சு. நான் என் போன ஆஃப் செஞ்சுட்டேன். ஆறு ஆச்சு. இன்னும் அவ போன் ரிங் போயிண்டே இருக்கு. வாய்ஸ் மெஸேஜ் போவுது. ஆஃப் பண்ணல… எடுக்க மாட்டேங்கிறா! திண்ணக்கம். எல்லாம் அந்த ஏர்போர்ட் விவகாரமாத்தான் இருக்கும். டெக்ஸ்ட் மெஸேஜ் செஞ்சேன். அதுக்கும் பதில் இல்ல. அடுத்த நாள் கூப்பிட்டா! ஏதோ சால்ஜாப்பு சொல்றா. எனக்குத் தெரியும்! அவ என்ன ஏமாத்தறா! கடுப்பா பேசி கட் பண்ணிட்டேன். டெக்ஸ்ட் செஞ்சா. மரியாதையா இருக்காதுன்னு நானும் பதில் போட்டேன். திங்கள், செவ்வாய், புதன்… டெக்ஸ்ட்டா செய்யறோம். எனக்குப் பொறுக்கல. போன் செஞ்சேன். அவ எடுக்கல. ஆனா, டெக்ஸ்ட்டுக்கு மட்டும் உடனுக்குடன் பதில்!’

இன்னொருவள்: ‘அவ டீச்சர்னு சொன்னியே? க்ளாஸ்ல இருந்திருப்பாளா இருக்கும்?!’

அவன்: ‘அதெப்படி? க்ளாஸில் இருந்தா — டெக்ஸ்ட் ஒண்டி செய்ய முடியுமா? நேத்திக்குக் கூப்பிட்டா. கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். சரிப்பட மாட்டேன்னு. அவ இந்த சனிக்கிழம கூப்பிடுவான்னு நெனக்கிறேன். அந்த ஃப்ளைட் பார்ட்டி இந்த வீகெண்ட் போய் சேர்ந்துரும். அதற்கப்புறம் என்ன சாப்பிட அழைப்பான்னு எனக்குத் தோணுது’

நான் சாப்பிட்டு முடித்துவிட்டதால் நடையைக் கட்டிவிட்டேன். அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

கடவுள் அமைத்து வைத்த மேடையோ, கல்யாண மாலை கொண்டாடுமோ, மனைவி அமைவதெல்லாமோ முணு முணுக்காமல் – போகிற வழிக்கு ஸீக்வல் பாராயணித்துக் கொண்டேன்.