Tag Archives: Hits

அஞ்சனக்காரன்

விஜய்காந்த்தை முதன் முதலில் பார்த்தது விவித் பாரதியில். இளையராஜா என்று நினைத்த ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’ பாடலில். இப்பொழுது பார்த்தால் சலீல் சௌத்ரி!

அசல் ரஜினி இருக்கும்போது இன்னொரு புரட்சியாளரும் ஏழைப் பங்காளரும் எனக்கெதற்கு என்று அவரின் ‘நூறாவது நாள்’ கூட தள்ளிப் போட்டு வந்த எனக்கு, தீபாவளி வந்தது. கூடவே, ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் வந்தது.

ராத்திரி ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ரேவதியை கல்யாணம் செய்வானா!? அதை விட்டுவிட்டு வெறுமனே ‘ராசாத்தி… ஒன்ன காணாத நெஞ்சு’னு எவராவது புலம்புவானா? கதாபாத்திரம் நம்பமுடியவில்லை. எனினும், தமிழ் சினிமா. திகிலடையவோ அதிர்ச்சியடையவோ ஏதாவது செய்வார்கள். பத்து வருடத்திற்கு மேல் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெற்ற மனைவியை எரியூட்டி விட்டு வரும்போதே, ‘எந்த வீட்டில் எவ வயசுக்கு வந்திருக்கா?’ என்பதை நேரடியாகக் கேட்டும் பார்த்தும் வளர்ந்த எனக்கு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனும் மோசமான படைப்பாளி பட்டியலில் இணைந்து கொண்டார்.

அதன் பின்பும் ‘ஒலியும் ஒளியும்’ பாடல்கள் மூலமே விஜய்காந்த் ஈர்த்தார்.

ராதா படங்களைத் தேடித் தேடி பார்த்தபோது, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ அகப்பட்டது.
’முத்துமணி மாலை… என்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட..’விற்காக ”சின்ன கவுண்டர்” கண்ணில் விழுந்தது.
அன்றைய (இன்றைக்கும் தான்) தேவதையான பானுப்ரியாவிற்காக ‘சத்ரியன்’ + ‘பரதன்’. இதில், ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் சுவர்களே தெரியாதவாறும் வெறும் வண்ணம் மட்டும் பின்னணியில் வருமாறு உழைத்ததாக சாந்தோம் மாணவர், அந்த நாள் நடன இயக்குநர் பிரபு தேவா சொல்ல, பாட்டின் சிறப்பு சற்றே புலப்பட்டது.
’சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ அர்த்தம் புரிந்ததா என்று பொறிப்புரை கொடுத்த விடலை பள்ளித் தோழர்களுக்காக ”பூந்தோட்ட காவல்காரன்”.
’மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்!’ குறித்து தமிழ்த்திரை சுப்புடு சுரேஷ் கண்ணன் முதல் மரவண்டு வரை பலரும் மரத்தடி முதல் முகநூல் வரை எழுதி விட்டார்கள்.

விஜய்காந்த் நடித்த முதல் படம் – ‘ஊமை விழிகள்’.
விஜய்காந்த் கொடுத்த முதல் ஏ+பி+சி செண்டர் ஹிட் படம் – ‘அம்மன் கோயில் கிழக்காலே’; அவரின் பிற படங்களில் இதே கதாபாத்திரத்தை ஷோபனா, ரேகா என வாந்தியெடுத்தார்,

பிற்காலத்தில், ‘வல்லரசு’, ‘சிம்மாசனம்’, ‘பேரரசு’, ‘தர்மபுரி’ போன்ற படங்கள் இவரை தெலுங்கு மண்ணில் கொடி கட்டி — தம்பி பாலகிருஷ்ணாவுக்கு டஃப் கொடுக்க வேண்டியவர் தமிழ் மண்ணில் பிறந்த நம்மை இன்னும் கொடுமை செய்கிறாரே என மிரள வைத்தது.

எனினும், இன்றும் என் மனதில் நிற்பது, “தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை! மன்னிப்பு!!”.

விஜயகாந்த் உருவாக்கிய நம்பிக்கைகள் எனக்கு நிஜம்.
’இளைய தளபதி” ஆக விஜய் போன்றோர் உருவாக துணை நின்றது நிஜம்.
சினிமா கல்லூரியில் படித்து விட்டு, வெளியே வந்த புதியவர்களுக்கு துணை நின்றது நிஜம்.
யேசுவோ, மாரியம்மனோ, ஓரங்க நாடகத்தை ஒளியோவியராக்கிய விசுவோ எவருக்கும் கரிசனம் பார்க்காமல் நடித்து குவித்தது நிஜம்.
நடிகர் சங்கமோ, கேப்டன் தொலைக்காட்சியோ, சொந்த கட்சியோ நடத்தி, ஜெயித்தது நிஜம். (இது டி ஆர். ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் வழுக்கிய இடம்).
அவருக்கு என் நெஞ்சில் ஒரு பெக் அடிக்க நினைக்கும் போது, ‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா போனேன்… கேளு! கேளு!! தம்பீ!!!’ நினைவிற்கு வருவதோ, ’சாமிகளே… சாமிகளே… சொந்தக் கதக் கேளுங்க!!’ என தன் பாட்டுக்கு பாடும்போது என்னுள் ஒளிந்திருக்கும் அந்தக் கருப்புத் தங்கம் வெளிவருவதும் நிஜம்.

அஞ்சலிகள்!

இளையராஜா இசையில் இறுதியாக இதம் தந்த இந்தி அல்லாத இனியவை எது?

இளையராஜா இசையில் கடைசியாக மனதை அள்ளிய பாடல் பெற்ற படம் எது? Cheeni Kum சொல்லக்கூடாது. எனக்கு ‘சேது’.

இதுதான் என்னுடைய கேள்வி. ட்விட்டரில் வெளியான மற்றவர்களின் எண்ணங்கள்:

neotamizhan @bsubra இளங்காத்து வீசுதே…. பிதாமகன்

spinesurgeon @bsubra உன்னைவிட (விருமாண்டி) . அத்ற்கு முன் எங்கே செல்லும் இந்த பாதை (சேது)

sivaramang @bsubra ‘kaiyetha kombatho’ from vinodayathra –http://tinyurl.com/5ay368, if tamil katrilvarum&kajuraho from ONOK http://tinyurl.com/644jfh

santhoshguru @bsubra Sihi Gaali from a Kannada movie Aah Dinagalu

paval @bsubra நீ பார்த்த பார்வைக்கு.. (ஹே ராம்!)

neotamizhan @bsubra @paval இசையில் தொடங்குதம்மா…. ஹே ராம்

krgopalan @bsubra எளங்காத்து வீசுதே…! (பிதாமகன்)

sudgopal @bsubra “மயில் போல பொண்ணு ஒண்ணு..” பாரதி

anbudan_BALA @bsubra பாட்டு தொண்டையில நிக்குது, மொட்டையும் ஜானகியும் பாடின பாட்டு, படம்:அவதாரம்

rarunach @anbudan_BALA Thendral vandhu veesum bodhu?

sureshkannan70 @bsubra //இளையராஜா இசையில் // நினைவிலிருப்பது ” உன்ன விட” (விருமாண்டி) சேதுக்கப்புறம் எதுவுமே பிடிக்கலையே? இணையத்துல உதைக்கப் போறாங்க.

sureshkannan70 பாலாவிற்கு போட்டிக் கேள்வி: ரகுமானின் இசையில் கடைசியாய் நன்றாக அமைந்திருப்பதாக தோன்றின பாடல் எது? எனக்கு ‘மருதாணி” (சக்கரகட்டி)

mohandoss @bsubra எனக்கு விருமாண்டி

sugavasi @bsubra “பிதாமகன்”-ல் “எளங்காத்து வீசுதே”….Loved it. The BGM for the movie was also great.

nandhakumar @bsubra எனக்கு விருமாண்டியும் ஹேராமில் இசையில் தொடங்குதம்மாவும்தான்…

ilavanji @bsubra விரு விரு மாண்டி விருமாண்டி!!! 🙂

rozavasanth @bsubra கடைசியாய் எரிச்சலை கிளப்பியது மாயாபஜார், அஜந்தா, க.க.பா., உளியின் ஓசை, தனம் அட எல்லாமே!

bmurali80 @bsubra ஒரு நாள் ஒரு கனவு – ஃபாசில் படம், இளையராஜா இசையில். 3 பாடல்கள் கிளாஸ்…

icarusprakash @bsubra : kajuraho kanavile – http://tinyurl.com/6eodmz

sudgopal @bsubra “எனக்குப் பிடித்த பாடல்…” ஜூலி கணபதியையும் சேர்த்துக்கோங்க

parisalkaaran @bsubra இளையராஜா இசையில்… நீங்க கேட்டதுக்கு என் பதில் இளங்காத்து வீசுதே…. (பிதாமகன்)

penathalar @bsubra இளங்காத்து வீசுதே. வானவில்லே வானவில்லே

valluvan @bsubra Virumandi

rozavasanth @bsubra சரி, கேள்விக்கான பதில், கடைசியாக மனதை அள்ளியது (சொல்லப்போனால் அழ வைத்தது) ̀அழகி’.

rozavasanth @donion உங்களுக்கு ஜூலி கணபதியின் இசை பிடிக்கவில்லையா? (பிடித்திருந்ததாக எனக்கு நினைவு, இப்போது சரியாக தெரியவில்லை.)

icarusprakash @donion we tend to ignore these just becoz the films are bad. I zapped when i saw athu oru… few weeks back in tv

icarusprakash @donion even i thought so. but u shud spend some time listening to the BGM scores of julie ganapathy and athu oru kana kalam.

rarunach @bsubra My last ilaiyaraja favorite was “Onna vida” from Virumandi. (Used Imdb for ilaiyaraja’s filmography!). Kaasi, how about you?

thendral @bsubra கடைசியா அவரு இசை அமைத்த படம் எது…? ம்ம்ம் 😉