ஐஸிஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்த இருபத்தியோரு யெஸிடி பெண்களுடன் ருக்மிணி கலிமாக்கி அவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நியு யார்க் டைம்ஸில் எழுதியிருக்கிறார். முஸ்லீம் இறையியலின்படி பெண்களை அடிமையாக நடத்துவது மட்டுமல்ல, வன்புணர்வையும் மதக் கடமையாக மேற்கொள்ளவேண்டும் என்பதை ஐஸிஸ் சட்டமாக வைத்திருக்கிறது.
போரின் போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாவது புதிது இல்லை. ஐ.நா. செயலர் பான் கி மூன் மாதந்தோறும் மன்னிப்புக் கேட்டுகொள்வது மாதிரி ஐ.நா. அமைதி காக்கும் படைகள் முதற்கொண்டு எந்த நாட்டு இராணுவம் அன்னிய நாட்டிற்குள் நுழைந்தால் – பெண்கள் மீது அத்துமீறல் சகஜமாக நிகழ்த்தப்படுகிறது. 2011ல் ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும் செய்தித்தாளில் இதுதான் தலைப்புச் செய்தி: “காங்கோவிலும் லைபீரியாவிலும் ஐ.நா. அமைதிப்படை மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் குறையத் துவங்கியிருக்கின்றன”
ஆனால், ஐஸிஸ் போர்க்குற்றமாக பெண்கள் மீதான வன்முறையை நடத்துவதில்லை. ஒரு ஊருக்குள் நுழைகிறார்கள். அந்த ஊரை ஆக்கிரமிப்பதற்கான முதல் படியாக, அந்த சிற்றூரில் இருக்கும் சிறுமிகளையும், பெண்டிர்களையும், லாரி லாரியாக அபகரிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் அனைவரிடமும் தங்களின் கேள்விப் பட்டியலில் இருந்து விடை கேட்டு குறித்துக் கொள்கிறார்கள். எப்போது மாதப்போக்கு வந்தது போன்ற அந்தரங்கங்களையும் விடாமல் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்கிறார்கள். ஏனென்றால் கருவுற்றிருக்கும் தாயை பலாத்காரம் செய்யக் கூடாது என்று இறைதூதர் காலத்தில் இருந்த வழக்கத்தை இன்றும் பின்பற்றுவதே காரணம்.
பிறகு, அந்தப் பெண்களை அடிமை ஏலம் விடுகிறார்கள். அடிமையைப் பெற்றுக் கொண்டவரின் கடமை என்ன? முதலில் நமாஸ் செய்யவேண்டும். தொழுகை முடிந்தவுடன் பன்னிரெண்டு வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்யவேண்டும். அதன்பின் குளித்துவிட்டு, மீண்டும் நமாஸ் செய்து இறைக்கடமையை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின், மீண்டும் அந்த குழந்தை விற்கப்படுகிறார்.
யெஸிடிகள் மீது இன்னும் கோபத்துடன் இந்த வன்முறையை ஐஸிஸ் செலுத்துகிறது. கிறித்துவர்கள் போல், இஸ்லாமியர்கள் போல் ஒரு இறைவர், அவர்களின் தூதர் என்று ஒற்றைப்படையில் இல்லாமல், ஏழு தெய்வங்களை யெஸிடிகள் வணங்குகிறார்கள். அவர்களின் புனித நூல் குரான் போல் பைபிள் போல் எழுத்தில் இல்லாமல், வழிவழியாக முன்னோர்களின் வாய்ப்பேச்சு மூலமாகவே தலைமுறை தாண்டி ஓதப்பட்டு வருகிறது. இதைக் கண்டு ஐஸிஸ், பன்கடவுள் கொண்ட சமூகம் மீது நபிகள் நாயகம் காலத்தில் விளங்கிய நிலையை விரிவாக எடுத்தோந்தும் நூல்களை வெளியிட்டிருக்கிறது. நபிகளும் அவர்களின் தோழர்களும் எவ்வாறு பலதெய்வ வழிபாடு செய்தவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள் என்பதை வழிகாட்டி விளம்பரமாக வெளியிட்டு தங்களின் கோரத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது.
இன்னும் இந்த நிலையில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட யெஸிடி பெண்களை கொத்தடிமைகளாக ஐஸிஸ் வைத்திருக்கிறது. இவர்களை எப்படி விற்க வேண்டும், நபிகள் காலத்தில் நடந்த தொன்மையான வழக்கப்படி எவ்வாறு பலாத்காரம் செய்வது, அடிமை வர்த்தகத்தில் ஐஸிஸ் அரசிற்கு எவ்வளவு வரிகட்ட வேண்டும் என்பதை தங்களின் பிரதேசத்தில் சட்டமாக்கி இருக்கிறார்கள்.
இந்தியாவில் தினசரி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பசியினாலும் தீவிரவாதத்தினாலும் இறக்கின்றனர். அமெரிக்காவிற்கு அப்படி அல்ல. ஒரே ஒரு நாள். அது மட்டுமே நினைவுச் சின்னம்.
செப்டம்பர் 11, 2001.
பத்தாண்டுகளுக்குப் பிறகு அதன் ஆய பலன் என்ன? எது நடந்தது?
88% – அமெரிக்காவில் அரசாங்கத்திற்கும் மதக்கோட்பாடிற்கும் சம்பந்தம் இல்லை; எனினும், 47% – இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அமெரிக்ககாவில் இடம் இல்லை.
83% – நார்வே கிறித்துவர் மாதிரி கொலையாளிகளை கிறித்துவர் என்றே சொல்ல இயலாது; எனினும், 48% மட்டுமே – முஸ்லீம் தீவிரவாதிகளை, இஸ்லாமுடன் தொடர்புபடுத்தி, அடையாளம் காண முடியாது என்று எண்ணுபவர்கள்.
அமெரிக்காவின் பொது இடங்களில், இஸ்லாமியராகவோ இந்தியராகவோ தோற்றமளித்தால் நீங்கள் விசாரிக்கப் படலாம். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உண்ணிப்பாக கவனிக்கப்படலாம். அதை பயத்தினால் எழுந்த பாதுகாப்புணர்ச்சி என்பதா அல்லது உருவபேதத்தினால் உண்டான நம்பிக்கையின்மை என்பதா? ‘மால் ஆஃப் அமெரிக்கா’ போன்ற புகழ்பெற்ற ஷாப்பிங் இடம் ஆகட்டும்; வருகையாளர்களும் சுற்றுலா விரும்பிகளும் புழங்கும் இடமாகட்டும் – உங்களின் நிறமும் முகமும் இறைச்சின்னங்களும் உங்களுக்கு உபத்திரவமாக அமையும்.
அயல்நாட்டுப் போர்
ஆறாயிரம் அமெரிக்க போர் வீரர்களின் மரணம் வெளிப்படையாகத் தெரிகிறது. நட்பு நாடுகளின் இருபத்தி ஆறாயிரத்து சொச்சம் இறப்பு அவ்வளவாக வெளியில் வருவதில்லை.
இராக்கில் மொட்டும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் குடிமக்கள் செத்திருக்கிறார்கள். அதே போல், பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால், மொத்தமாக 225,000 பொதுஜனம் மரித்திருக்கிறார்கள்.
இறந்தவர் நிம்மதியாக போய் சேர்ந்தார். ஆனால், குண்டடிப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கைகளையும் கால்களையும் இழந்து நிற்பவர் எண்ணிக்கை? அமெரிக்க படையில் மட்டும் ஒரு லட்சம். இவர்களுக்கு
வேலைவாய்ப்பின்மை
மருத்துவ சிகிச்சை தராமை
குடும்பத்தினருக்கு ஏற்படும் பளு
மனநல மருத்துவம் – போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
வீடிழந்தோர் எண்ணிக்கை: 7.8 மில்லியன். அமெரிக்காவின் கனெக்டிகட்டும் கெண்டக்கியும் சேர்ந்தால் கூட இந்த மக்கள் தொகையை எட்ட முடியாது. இவ்வளவு சனங்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு கூடாரத்தில் வசிக்கிறது.
போராளி உருவாக்கம்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் தாயையும் தந்தையும் இழந்தவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும்? தங்கள் உறவினரை பங்கம் செய்த கிறித்துவப் போர் என்னும் எண்ணம் விதைப்பு அவர்களை எப்படி பாதிக்கும்?
பொருளாதாரச் சீரழிவு – கடன் சுமை
இதைக் குறித்து ஒபாமா பேசுகிறார்; காங்கிரஸ் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்; சாம, தான, பேத, தண்டம் முயல்கிறார்.
நிதி நிலவரத்தினால் பராக் ஒபாமா எளிதில் தோற்பார் என்று ரிபப்ளிகன் வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.
இது வரை அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட, சிவில் போராட்டாம் முதல் குவைத் ஆக்கிரமிப்பிற்கான இராக் போர் வரை, அனைத்துமே நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்டது. இரண்டாவது இராக் போர்/ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மட்டுமே எந்த வித பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக, கண்மூடித்தனமான செலவழிப்புகளுடன் நடக்கும் போர்.
ஒன்று வரி ஏற்றப்படும் – வருமானம் அதிகரிக்க வழி
அல்லது கடம் பத்திரம் வழங்கப்படும் – அதிகாரபூர்வமாக நிதிச்சுமையை தெரிவிப்பது
ஆரம்பித்த இடத்திலேயே முடிக்கலாம். உள்ளூரில் இத்தனை டிரிலியன் டாலர் செலவு; எல்லோருடைய வாழ்விலும் இவ்வளவு கெடுபிடி; உலகளவில் இம்புட்டு கெட்ட பெயர்.
ஆனால், ஒரு மதாலயத்தில் இன்னொரு குண்டு வெடிக்கவில்லை. இன்றும், எங்கும் எவரும் சென்றுவர சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது!
அமெரிக்க இராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களையும் போர்வீரர்களையும் நம்ப முடியவில்லை. எழுபது ஆப்கானிஸ்தானிய படைவீரர்கள், வெறும் பத்து பேர் கொண்ட தாலிபானிடம் சரணடைகிறார்கள்.
இத்தனைக்கும் தாலிபேனிடம் இருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கவில்லை; குண்டு போடப்படவில்லை.
சாதாரணமாக, இந்த மாதிரி சரணாகதிகளுக்கு, கண்ணிவெடி போன்ற குண்டுவெடிப்புகள் காரணமாக இருக்கும். இங்கே அந்த மாதிரி எதுவும் இல்லை. தங்கள் துப்பாக்கி, இன்ன பிற ஆயுதங்களை வெகு சந்தோஷமாக அல்-க்வெய்தாவிடம் கொடுத்துவிட்டு, ஜீப்பில் ஏறி சென்று விடுகிறார்கள்.
இப்பொழுது இந்த திருட்டு வீடியோ வெளிப்பட்டது ஏன்?
1. நிஜமாகவே அல் – கெவெய்தாவிற்கு விசுவாசமானவர்கள். தாலிபான் இட்ட கோட்டைத் தாண்டாதவர்கள்.
3. ஊரான் வீட்டு அமெரிக்க நெய்; கடைத் தேங்காய்; வழியில் அல்லா. உடைக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் மேலும் படைவீரர்களை அனுப்பி வைக்குமாறு இராணுவத் தளபதி வெளிப்படையாகவும், வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களின் மூலமாகவும் அழுத்தமளித்து வருகிறார். அப்பொழுது, இந்த மாதிரிக் காட்சிகள் வெளியாவதால், உள்ளூர் காவலர்களின் லட்சணம் உலக அரங்கில் அம்பலமாகும்.
ஒபாமாவும் துணை ஜனாதிபதி பிடெனும் மேலும் மேலும் படை வீரர்களை குவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆப்கானிஸ்தானே தன்னிறைவை எட்டவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர்கள். கடந்த ஆண்டில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போதே இதை பராக் ஒபாமா வலியுறுத்தி வந்தார்.
இராக்கில் இருந்து முழுமையான படை விலகல். ஆப்கானிஸ்தானில் கொஞ்சம் ஆள் கூட்டப்படும். அதன் பின் முழுமையாக, வெகு சீக்கிரமாகவே அனைவரும் சொந்த நாடு திரும்புவார்கள். இதுதான் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கை.
ஜார்ஜ் புஷ்ஷும் டிக் சேனியும் பதவியிறங்கிய பின் சோகத்தில் ஆழ்ந்த Military Industrial Complexம் இப்பொழுது சுறுசுறுப்பாக இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபட விரும்பும்.
President Hamid Karzai was photographed by an election worker in Jalalabad, Afghanistan, on Monday as he official registered to stand for reelection. His running mates are seated to his right.
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தேர்தல் நடக்கப் போகிறது.
தாலிபானிடமிருந்து விடுதலையாகி ஏழு வருடங்கள் கழிந்துவிட்டது; 31 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கரைந்துவிட்டது.
நான்கு டஜன் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். இரு பெண்கள், முன்னாள் கேபினட் அமைச்சர்கள், புத்தம்புதிய அமெரிக்க அடிவருடிகள், கம்யூனிஸ்ட்கள், நமது ஊர் சகுந்தலா தேவி போல் குழந்தை ஜீனியஸ் எல்லாரும் நிற்கிறார்கள்.
Simple majority போதாது. 20 சதவிகிதம் வாக்குப் பெற்றுவிட்டு, “தனிப் பெரும்பான்மை எமக்கே! ஆட்சி நமதே!” என்று முழங்க முடியாது. குறைந்தபட்சம் 50% வாக்குகளுக்கு மேல் பெற்றால்தான் வெற்றி. இல்லையென்றால், முதல் இரண்டு இடங்களை வென்ரவர்களுக்குள், மீண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிச்சுற்று வாக்குப் பதிவு நடக்கும்.
அங்கும் ஜாதி/இன வாரியாகத்தான் வோட்டு விழுகிறது. பெரும்பான்மை சமூகமான பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர் அமீது கர்சாய்.
பதினாறு மில்லியன் பேர் ஏழாயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப் போகிறார்கள்.
வாக்காளருக்கான அடையாள அட்டைப் பதிவை தாலிபான்கள் தடுக்கவில்லை. கடந்த 2004, 2005 தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் தாலிபானால், தேர்தலுக்கு பிரச்சினை வராது என்கிறார்கள்.
எனினும், ஒரு லட்சம் போலீஸ், அதன் மேல் இன்னொரு லட்சம் இராணுவ வீரர்கள், அவர்களின் பாதுகாப்புக்கு மேலும் இன்னொரு லட்சம் வெளிநாட்டு படைவீரர்கள் போட்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்கர்கள்.
வேட்பாளர்கள்
Dr. Abdullah in Kabul after filing to run for president.
ஹமீத் கார்சாய்க்கு துணையாக இரு உதவி ஜனாதிபதிகள் உறுதுணையாக களத்தில் நிற்கிறார்கள்.
மில்லியன் கணக்கில் ரூபாய் நோட்டை அச்சிட்டு சொந்தப் புழக்கத்திற்கு பதுக்கிக் கொண்டதால், மந்திரிசபையை விட்டு கல்தா கொடுக்கப்பட்ட மொஹம்மது காசிம் Mohammed Qasim Fahim.
அமீது கர்சாயிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அப்துல்லா, அவரிடமிருந்து விலகி சரியான போட்டியாக விளங்குகிறார். எனினும், கர்சாயை தோற்கடிப்பது துர்லபம்.
முன்னாள் நிதியமைச்சர் அஷ்ரஃப் கனி (Ashraf Ghani)யும் போட்டியிடுகிறார்.
தற்போதைக்கு ரமஜான் பஷர்தோஸ்த் (Ramazan Bashardost) மக்கள் மனதை ஒவ்வொரு வோட்டாக சேமித்து, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தென் சென்னை சிட்டி பாபு மாதிரி மெத்த படித்தவர்.
முனைவர்.
பிரான்சில் குப்பை கொட்டியவர்.
அல் க்வெய்தாவை வீழ்த்திய அமெரிக்காவிற்கு செல்லப்பிள்ளையாக இருந்துகொண்டு, அரசை மொத்தமாக குத்தகை எடுத்து, லஞ்சத்தை அனாயசமாக நிறைவேற்றும் கர்ஸாயின் ஊழல் ராஜாங்கத்தை ஒழிக்கிறேன் என்கிறார்.
15% சதவிகித மக்களைக் கொண்ட ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்.
முன்னாள் மந்திரிசபையில், திட்டத்துறை அமைச்சராக இருந்தபோது தனது சம்பளத்தை தானமாக, தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கியவர்.
கறை படிந்த தொண்டு நிறுவனங்களைத் தடை செய்கிறேன் என்று 2000க்கும் மேற்பட்ட ஊழல் என்.ஜி.ஓ.க்களை தடை செய்து, லஞ்ச ஒழிப்பில் அக்கறை காட்டியதால், அமைச்சரவையை விட்டு நீக்கப்பட்டவர்.
அமெரிக்கா
தன்னுடைய எதிரிகளை ஹமீது கர்சாய் போட்டுத் தள்ளிவிட்டு, “அமெரிக்கா குண்டு போட்டுச்சு! அதான் செத்துட்டாங்க!” என்று திருட்டுப் பட்டம் கட்டிவிட்டதாக அமெரிக்கா நினைக்கிறது.
அமெரிக்காவிற்கு புதிய முகம் தேவை. ஏழாண்டுகளாக கர்சாயைப் பார்த்து ஆப்கானிஸ்தர்களுக்கும் அலுத்துவிட்டது.
தொடரும் தாக்குதல்களில், சில அப்பாவிகளும், பல உள்ளூர்வாசிகளும் துர்மரணம் அடைந்த கோபத்தில், தாலிபான் மீண்டும் எழுச்சியடைவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சமயத்தில், பழைய பெருச்சாளிகளுடன் கூட்டணி அமைத்துள்ள சாமர்த்தியசாலி மீது அச்சம் கலந்த பயம் எழுந்துள்ளது.
அசைக்க முடியாத உப ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு + பணபலம் + பெரும்பான்மை சமூகத்தின் சின்னம் + கடைசி நிமிட அரசியல் பேர வித்தகர் என்பன எல்லாவற்றுக்கும் மேல் சர்வ அதிகாரமும் கொண்டவர் என்பதால் அடுத்த ஐந்தாண்டுக்கு கர்சாயைப் பொறுத்துக்கொள்ள அமெரிக்கா தயார். இந்தத் தேர்தல் அவருக்கு எச்சரிக்கை மணி மட்டுமே.
Source: Op-Ed Contributor – A Threat in Every Port – NYTimes.com: There are a dizzying number of paths that terrorists could use to transport a weapon to an American target city, but game theory can provide clues for protection.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde