Tag Archives: வரி

தேர்தல் வாரம்: பொருளாதாரம் – இரண்டாம் விருந்தினர்

தென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன்.

1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா? முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது? பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா?

சோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று பொருள். அந்த நிலைக்கு அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் எந்த நாடுமே இனிபோகாது. காம்யூனிசம் செத்தது செத்ததுதான். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீளப்போவதில்லை..

முதலிய கொள்கை எனப்படும் சுதந்திர பொருளாதார கொள்கை மனிதனுக்கு என்று ஆசை மனதில் தோன்றியதோ அன்றே தோன்றிவிட்டது. கொலம்பசை கப்பலில் ஏறி இந்தியாவை தேட வைத்ததும், ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பியதும், எட்ட முடியாத பனிமலைகளை மனிதனை ஏறிக்கடக்க வைப்பதும் அதே ஆசைதான்.

ஆசையும் சுயநலமும் இல்லையென்றால் மனித இனமே கிடையாது.மீண்டும் அவன் மிருகநிலைக்கு தாழவேண்டியதுதான்.

  • டாட்டாவின் சுயநலம் லட்சம் ரூபாய் காராக மலர்ந்தது.
  • நாராயணமூர்த்தியின் சுயநலம் இந்தியாவை டிஜிட்டல் யுகத்துக்கு கொண்டு சென்றது.
  • லாரி பேஜின் சுயநலம் கணிணி இருப்பதே எழுத்தாளனாவதற்கு தகுதி என்ற நிலையை தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொண்டுவந்தது.

தனிமனிதனின் சுயநலத்தை பொதுநலத்துக்கு பயன்படுத்துவதே ஒரு நல்ல அரசின் கடமை.

2. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா? அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார்? உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா?

ஒபாமாவின் வருமான வரிக்கொள்கை ஓட்டுக்களை பெற்றுத்தருமே அன்றி வேலைகளை பெற்றுத்தராது. கம்பனிகளுக்கு வருமானவரியை அதிகரித்தால் அவை வேறு தேசத்துக்கு போய்விடும். இது எல்லைகள் இல்லாத உலகம்.

வருமானவரி விலக்கு கிடைக்கும் என்றதும்

  • ஐ.சி.சி தான் பிறந்த லண்டனை விட்டுவிட்டு துபாய்க்கு ஜாகையை மாற்றிவிட்டது.
  • டாட்டா நானோவை மேற்குவங்கம் துரத்தினால் குஜராத் கைநீட்டி வரவேற்கிறது.

ஒபாமாவின் கொள்ககளால் பீதியடைந்த வால்மார்ட் ஒபாமாவுக்கு எதிராக தனது தொழ்லாளிகளிடம் பிரச்சாரம் செய்கிறது. அமெரிக்க தொழில்துறை முழுவதும் ஒபாமாவுக்கு எதிராக மெக்கெய்னுக்கு நிதியுதவி அளிக்கின்றது. தொழிலகங்கள் இல்லாவிட்டால் தொழிலாளியே கிடையாது என்பதை டெமக்ராட்க் கட்சியினர் புரிந்துகொள்வது நல்லது

தென்றல்: அமெரிக்க பங்குசந்தை – இறுதிப் பகுதி

முந்தைய பதிவுதென்றல்

3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா? பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா?

Consumer Market ‘நல்ல படியாக’ வைத்துக் கொண்டாலே போதும். (அதை எப்படி நல்லபடியா வைத்துக் கொள்வது…??)

4. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா? அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார்? உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா?

ஆண்டிற்கு 250,000 டாலர்க்கு மேல் வாங்கும் குடும்பங்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்பது ஒபாமா தரப்பு திட்டம். அதுவும் மெக்கெய்னின் தரப்பு கூறப்படுகின்ற ‘வசதியுள்ள பெருங்குடி மக்களுக்கு’ கொடுக்ககூடிய வரி சலுகைகளைதான் ஒபாமா எதிர்கிறார்.

ஆனால் உண்மை என்னவென்றால், நாட்டின் பெரும்பான்மையான வரிபணம் கிடைப்பது அந்த குறைவான சதவீதமுள்ள ‘பெருங்குடி மக்களிடமிருந்து’ தான் என்று அரசாங்க குறிப்பு சொல்கிறது. ‘அதனால் அவர்களின் வரிச்சுமையை 3-4% குறைத்தால் என்ன?’ என்பது மெக்கெய்னின் தரப்பு கேள்வி!.

ஒபாமாவின் திட்டம் பெரும்வாரியான குடும்பங்களின் வரிச் சுமையை ஓரளவு தளர்த்த உதவும். அதனால் ஒபாமா திட்டம் சிறந்ததாகவே (எனக்கு) தோன்றுகிறது.

5. முதியவர்களுக்கான வரி: (An Updated Analysis of the 2008 :: Presidential Candidates’ Tax Plans – Tax Policy Center and Urban Institute) அறுபத்தைந்து வயதைத் தாண்டியோர் $50,000த்திற்கு குறைவாக சம்பளம் ஈட்டினால், முழுமையான வருமான வரிவிலக்கு தருவதாக ஒபாமாவின் கொள்கை தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தை குட்டியோடு உழலும் சாதாரணக் குடிமக்கள் குடும்பம் இந்த சலுகைக்கு உகந்தவர்கள் இல்லையா? ஏற்கனவே முதியவர்களுக்கு பல்வேறுவிதமான தள்ளுபடி கிடைக்கும் இன்றைய நிலையில் இது போன்ற கேரட்களும் தேவைதானா?

சுட்டிக்கு நன்றி! இதுல (An Updated Analysis of the 2008 – Presidential Candidates’ Tax Plans: Revised August 15, 2008) அருமையான தகவல்கள் இருக்கு!

“அரசியல இதலாம் சகஜம்தான்” னாலும் மூத்த குடிமக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வரவேற்கதக்கதே!!

அமெரிக்க பொருளாதாரம்: அலசல் – தென்றல்

முந்தைய இடுகை

2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்?

ஆகா…இந்த கேள்விக்குதான் ‘பெரிய பெரிய தலைகளே’ மண்டை பிச்சிகிட்டு இருக்கிறாங்க!!

சமீபத்திய பங்குச்சந்தை/நிதி நிர்வாகங்களின் சரிவு, 700 பில்லியன் டாலர் தேவை ….

இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்னனு பார்த்தா எனக்கு தோன்றியது …… பேராசை – சாமான்யமிடமிருந்து பெரிய நிர்வாகம் வரை..

5, 6 வருடத்திற்கு முன், கேக்குறவுங்களுக்கு எல்லாம் கடன். ஒரு சென்ட்கூட கையில் இருந்து குடுக்காம வீடு வாங்கலாம். அதுவும் 3-4 வருடத்திற்கு, interest only loan. ‘ஆடி/சிறப்பு தள்ளுபடி’யா 3.5% வட்டி விகிதம் !! வருசத்திற்கு 40000, 50000 டாலர் சம்பாதிக்கிறவன், ஆரம்பத்தில மாசத்துக்கு 2000 mortgage கட்டினா போதும். வாங்குறவனுக்கு தெரியாத என்ன, ‘3-4 வருசத்திற்கு அப்புறம் வட்டி கூடும், அதிகமா வட்டி கட்ட வேண்டி வரும்..நம்ம வரம்புக்கு மீறி எப்படி கட்டுறது’னு.. அவன் கணக்கென்ன, ‘3-4 வருசத்தில வீட்டோட விலை அதிகமாச்சினா, நல்ல இலாபத்துக்கு வித்துட்டு போயிடலாம்.’

வங்கிகள், நிதி நிர்வாகங்களின் கணக்கு 3-4 வருடத்தில் வீட்டின் விலை கூடும், வட்டி கூடும்….. நல்ல வசூல்!

மூன்று வருடத்தில். 3.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், 6, 6.5. சதவீதமானது. மாசத்துக்கு 2000 mortgage கட்டியவன் இப்பொழுது 3500 கட்ட வேண்டும். வீட்டை விக்கலாம்னா, வாங்கின விலையை விட கம்மி! அதுவும் வாங்க ஆளில்லை! Foreclosures!

அந்தப் பக்கம், ஃபேனி மே, ஃபிரெட்டி மேக், லெஹ்மன் பிரதர்ஸ் ..திவால்!!

இதற்கு வங்கிகள், நிதி நிர்வாங்களின் விதிமுறைகள், சட்ட திட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
திவால் ஆகிற நிதி நிர்வாங்களை அரசாங்கம் காப்பதறதுண்ணா. நாளைக்கு Ford, GM, Staples (!) க்கும் இதே மாதிரி நிலைமை வந்தா அரசாங்கம் ஓடி வருமா?

சரி.. இந்த நிலையில் இருந்து நிமிர யார் தேவை…!!

ஓபாமா நல்ல பேச்சாளர். ஆனால் ராஜ தந்திரியா… இப்போதைக்கு தெரியாது! ஏன்..?

செனட்ரா இருந்து அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடப் படவில்லை!

He is not a good lobbyist! இப்பொழுது அவருக்கு பக்க பலமாக இருக்கும் அவருடன் இருப்பவர்களும் அப்படியே! ஓபாமா, இதுவரை lobby பண்ணி சாதிச்சதா ஒண்ணுமில்லை.

அப்புறம் அவருடைய அனுபவமின்மை….எதிர்காலத்தில் இதுவே பிரச்சனையாக இருக்கலாம். ஆனால், ஜோ பிடன் தேர்வு விவேகமானது!

பெரிய நிர்வாகங்களை (eg: Exxon-Mobil) லாம் பிடி பிடினு பிடிக்கிறார். இப்படி அவர் ‘தைரியமா’ பேசுவதற்கு காரணம், பெரிய பெரிய பணசுனாமிகளின் தாக்கம் இவர் மேல் நேரிடையாக இல்லை. எட்டு வருடம் இவருடைய கட்சி அதிகாரத்தில் இல்லாததும் இவருக்கு ப்ளஷ்.

அந்தப் பக்கம், மெக்கெய்ன்… நல்ல அனுபசாலி! இருபது ஆண்டுகள் செனட்டில் இருந்த அனுபவம், பல திட்டங்களில் ஒருங்கிணைத்த விதம், பணமுதலைகள், யூதர்கள், கிருஸ்தவர்களின் பக்க பலம்…… இதலாம் சேர்த்து அவரை ஒரு நல்ல lobbyist உருவாக்கி இருக்கிறது. அதனால், மெக்கெய்ன் வந்தால் நல்லது!

3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா? பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா?

தேர்தல் வாரம்: கொள்கை விளக்கம் – பொருளாதாரம்

அமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்!‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள்.

தேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு கிடங்குகளை காட்டுகிறது. சேமிப்புக் கிடங்கின் அடியில் நிறைய சில்லறையும், வரிக் கிடங்கு காலியாகவும் இருந்தது. குறைவாக சேமித்தால் நிறைய வருமான வரி போடும் கொள்கை என்று இதை நான் புரிந்து கொண்டேன்.

இந்த மாதிரி நாணயமான சந்தேகங்களை விளக்க வருகிறார் தென்றல்:


முதலில் டிஸ்கி;

(அமெரிக்காவைப் பொறுத்தவரை) ராமன் ஆண்டா என்ன ..ராவணன் ஆண்டா என்ன கட்சியை சேர்ந்தவன். நம்ம ஊர்லயாவது ஓட்டு போடலாம். இங்க அதுவும் இல்ல! தலைப்பு செய்திகளை படிச்சிட்டு, வெட்டி விவாதங்கள் பண்ணிட்டு, CNN, Fox, Jay Leno, Saturday Night live பார்த்துட்டு சிரிச்சிட்டு போற கோஷ்டியை சேர்ந்தவன்!!

1. பொருளாதாரக் கொள்கை: யாருடையது மேம்பட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறது? ஏன்? எந்த அம்சங்கள் கவர்ந்தது?

இப்பொழுதய நிலையில், பொருளாதாரக் கொள்கை னா நாலு குருடர்கள் யானையை வர்ணித்த கதைதான் நினைவுக்கு வருது.

‘அந்தளவுக்கு’ விசய ஞானம் இல்லாததால், நமக்கு எந்தளவு இவர்களுடைய திட்டங்கள் நல்லதுனு பார்த்தா….

  • வருடத்திற்கு, $250,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு வரியை உயர்த்தப் போவதில்லை.
  • $80,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு $1000 வரி விலக்கு
  • 10% Morgage interest வரி விலக்கு
  • கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு $4000 வரி விலக்கு
  • ராணுவச் செலயை குறைப்பதற்கான வழிமுறைகள்
  • எல்லாரும் பொதுவா சொல்றது, நாட்டில் தொழில் உற்பத்தியை வளர்க்க பாடு படுவேன்

… இப்படியாக நடுத்தர மக்கள் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ள உதவும் திட்டங்கள் ஒபாமா தரப்பிடமிருந்து…

மெக்யன் தரப்பிலிருந்து

  • வேலை வாய்ப்பை அதிகரிக்க, பெரிய நிர்வாகங்களின் வரி விகிதத்தை 35% லிருந்து 25% ஆக குறைத்தல்
  • Single Parentக்கான வரி விலக்கு $3500 லிருந்து $7000 ஆக உயர்த்துதல்
  • இணையதளத்திற்கான வரி விலக்கு
  • புது கைத்தொலைபேசிக்கான வரிவிலக்கு
  • கோடைகால விடுமுறை நாட்களில் பெட்ரோல்/டீசலுக்கான வரி விலக்கு

இதில் எந்தந்த அம்சங்கள் யார் யாருக்கு சிறந்தது…?!!

2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்?

'நான் சம்பாதிப்பதை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளலாமா?' – ஜோ

கடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:

வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா? என்பது அவருடைய கேள்வி.

விவாதம் முடிந்தவுடன் சிபியெஸ் தொலைக்காட்சியின் கேட்டி கௌரிக் உடன் ஜோ உரையாடினார். அந்த ஒளிப்பதிவு மற்றும் பேட்டி:
Joe The Plumber's Chat With Couric – Horserace

மேலும் விவரங்களுக்கு: And Then There’s Joe – The Caucus Blog – NYTimes.com

அடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா

5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?

நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.

அரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.

அடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் ‘அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு’ அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தோன்றுகிறது.

அவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.

மகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.

இவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.

6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்?

சத்யா

வரி-கழுதையானை

நன்றி : parade.com

 

பாஸ்டனில் தசாவதாரம்

ஜூன் ரெண்டாந்தேதி வருதாம்.

அதுவரை, வாலியின் இந்தப் பாடலை உல்டா செஞ்சுண்டிருங்க… நமச்சிவாய வாழ்க!

ஓம் நமோ நாராயணாய

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் அறியாது

அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது

ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது

இராஜலஷ்மி ராஜ நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேர் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா?

கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?

சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

அமெரிக்காவிற்கு வால் ஸ்ட்ரீட் தேர்தல் நிதி; இந்தியாவிற்கு விவசாயம்

housing_loans_home_investments_agriculture_farmers.jpg

தொடர்புள்ள செய்தி: சரிவில் உலகப் பங்குச் சந்தைகள்

ரான் பால், விளையாட்டு: தமிழ்ப்பதிவுகள் – பெப்ரவரி 15

1. ஜாலியாக விளையாட அழைக்கிறார். டிக் சேனி எப்போதும் விருப்பத்துடன் ஆடும், ‘நண்பர்களை துப்பாக்கி கொண்டும் சுடும் ஆட்டம். 🙂

தங்கள் அபிமான வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கு ஏதுவாக ஒரு விளையாட்டையும் உருவாக்கி இருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்


2. அமெரிக்காவின் காந்தி: டாக்டர். ரான் பால் (பகுதி 1) – சரண்

விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:

  • IRS constitution-க்கு எதிரானது
  • நாமெல்லாம் அறிந்த அமெரிக்க கலாச்சாரத்திற்கு எதிராக(?) ஒரே மனைவியுடன் ஐம்பது வருடங்களை கடந்து வாழ்ந்துகொண்டு,

பொருத்தமான இடங்களில் வீடியோ சுட்டிகள், கட்டுரை தொடுப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. இப்போதைக்கு சில கேள்விகள்:

  1. வருமான வரி கட்டாமல் அரசை ஏய்ப்பவரும் ‘கான்ஸ்டிடியூஷன்’ சொல்கிறபடிதான் நடக்கிறார்களா?
  2. வசதியாக வாழ்பவர்கள் வரி கட்டாமல் இருப்பது நாட்டிற்கு நன்மை விளைவிக்குமா?
  3. இராக்கின் மீது போர் தொடுத்தது தப்பு; ஆனால், நீங்கள் ‘ஆப்கானிஸ்தானை தாக்கியது மட்டும் சரி’ என்று சொல்வது ஏன்?
  4. தற்போதைய ஜனாதிபது புஷ் முதற்கொன்டு அனைத்து அமெரிக்க அதிபர்களும், ஆப்பிரிக்காவிற்கு (கிள்ளுக்கீரை அளவாவது) உதவுவதை தார்மீக நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ… அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ‘ஐ.நா., உலக வங்கி போன்ற எல்லாமே குப்பை’ என்று தாங்கள் சொல்கிறீர்கள். எனவே, ஆப்பிரிக்கா போன்ற இல்லாதோருக்கு கை கொடுப்பதும் அமெரிக்காவின் ‘கான்ஸ்டிடியூஷனிற்கு’ எதிரான ஒன்றுதானா?
  5. அமெரிக்காவில் எனக்குப் பிறந்த குழந்தை, இந்த நாட்டின் பிரஜையாக மாறுகிறது. முறையற்ற வழியில் குடிபுகலை தடுப்பது வேறு; இந்த மாதிரி நியாயமாக எச்1-பி வைகயறாவில் வந்து பெற்றுக் கொள்ளும் புதிய தலைமுறையையும் அமெரிக்க குடிமகளாக ஆகாமல் இருக்க வைக்க வேண்டும் என்பது சுயநலத்தின் உச்சமல்லவா? அமெரிக்காவே குடிபுகுந்தவர்களால் உருவான நாடு என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தால், தாங்கள் கூறும் ‘கான்ஸ்டிடியூசனுக்கும்’ எதிரானது அல்லவா?

இவரைக் குறித்த முந்தைய இடுகை: ரான் பால் – நியூஸ்வீக்
இந்த லிபரடேரியர்களை புரிந்து கொள்ளவே முடியலியே 😀