1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.
1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
ப்ரியா.
1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?
பெண்கள் சினிமாவில் நுழைந்தால் ஆபத்து பின்தொடரும்.
ஸ்ரீதேவி நீச்சலுடை.
எவராவது கடத்தி சென்றுவிட்டால் குடும்பப் பாட்டு கற்றுவைத்துக் கொள்ளவேண்டும்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தமிழ்: தசாவதாரம்(ஆங்கிலம்; வால் – ஈ)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.
ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.
அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்
அன்பைத் தேடி – எத்தனையோ பழைய படங்களை புத்துருவாக்கம் செய்யும் நிலையில் இந்த premise நன்றாக இருந்தது. ஏதாவது கற்பனையில் சஞ்சரித்து நிஜத்தைக் கோட்டை விடும் நாயகன் சிவாஜி. (குழந்தை நடிகை) இந்திரா (காந்தி) & நாயகன் (ம.கோ.) ராமுவையும் கோர்த்து அரசியல் கிண்டல் செய்யும் சோ.
எவனோ ஒருவன் – சுவாரசியமான அறச்சீற்றம்
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.
குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.
குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.
லன்ச்-ப்ரேக்.
பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.
‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’
அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.
பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’
குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?
பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?
சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.
7. தமிழ்ச்சினிமா இசை?
திருப்புகழ் கூட டி.எம்.எஸ் பாடிய சினிமாப் பாட்டு – ஆன்மிகம்
எஸ்.பி.பி பாடிய பாடல் என்பதால் சங்கராபரணம் – கர்நாடக/சாஸ்திரீய சங்கீதம்
வேப்பமரத்து உச்சி பேய் முதல் கல்லை மட்டும் கண்டால் – சமூகம்
மன்றம் வந்த தென்றலுக்கு என்பதும் கல்யாண மாலை கொண்டாடுவதும் – வாழ்க்கை
என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.
When Harry met Sally – ஆங்கிலம்
City of God – வேற்றுமொழி (துணையெழுத்து உபயம்)
Mississippi Masala (தேசி – NRI)
Raju Ban Gaya Gentleman – இந்தி
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.
பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.
வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.
என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.
சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அருண் வைத்யநாதன் போன்ற தமிழ் சினிமாவின் நாகேஷ் குகூனூர்கள்
தொலைக்காட்சி, இணையம், செல்பேசித்திரை என்று விரியும் வழிகள்
குறைந்த பொருட்செலவும் பத்து நிமிடத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கவைக்கும் நேர விரயமாகாத நுட்பங்களின் அணுக்கம்
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?
காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?
நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.
“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”
“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”
பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’
மேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு:
சொல்லப்பட்ட பரிந்துரை: எக்கச்சக்கம்! ஆனால், ரஜினி, சிவாஜி இல்லை
கூகிள்.காம்
கூகிளின் பச்சை துரோகத்தை, தசாவதாரம் தேடுபவர்களை ‘சிவாஜி‘க்கு திசை திருப்புவதை கண்டிக்கிறேன்.
அது எப்படி! கூகிள் மட்டும் கமலைத் தேடினா ரஜினி வரணும் என்று சரியா யோசிக்குது?!
ஆனால்… ‘சிவாஜி‘ என்று தேடினால், தசாவதாரம் வராமல், கமல் முதுகில் குத்தியுள்ளதை கண்டிக்கிறேன். இனி தன்மான கமல் ரசிகர் எவரும் கூகுளை நாடக்கூடாது என்று பெட்டிசன் போட்டால், கையெழுத்து இடுவேன் என்று வாக்குறுதியும் கொடுக்கிறேன்.
4. தசாவதாரத்தைப் பார்த்து சுசி கணேசனின் கந்தசாமியில் இன்னொரு முகப்பூச்சு கூட்டப்படுமா?
5. துணை நடிகர்கள் எல்லாரும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ பாடல் காட்சியில் பற்பல பிரபு தேவாக்கள் விதவிதமாக நடனமாடுவார்கள். அது போல் தொலைக்காட்சித் தொடரில் இளவரசு, பாஸ்கர் போன்றோர் தொலைந்து போனதால், தற்செயலாக தசாவதாரம் எடுக்கிறாரா கமல்?
6. இதெல்லாம் என்ன பெரிய விஷயம்! அந்தக் கால பாடல் காட்சிகளில் ஒரே ஃப்ரேமில் இருபது தடவை கமல் முகம் வந்திருக்கிறதே… அதுவும் சாதனைதானே?
கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்துகொண்டே இருக்கிறது. காதில்விழும் சொல்லாக இருந்த நிலை மாறிக் கண்ணில்படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்துகொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகரப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடுகூடிய முகத்தையும் கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி பத்துத் தடவையாவது பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
என்று அர்ச்சிக்கும் அ ராமசாமி தொடங்கி தமிப்பதிவர்கள் வரை ‘மிகை நாடும் கலை’ப் பார்வை தர இன்னொரு வாய்ப்பு தந்திடுகிறாரா?
8. கமல், தசாவதாரம், ஹிந்தி ஆஸ்கர் (ரவிச்சந்திரன் அல்ல) விருது – கேள்வி தொடுக்கவும்
9. முத்தம், பாமரர், சி சென்டர், வெற்றி – வழக்கமான சர்ச்சை வரவைக்கவும்
10. ஜெமினி கணேசன் & கே ஆர் விஜயா நடித்து கேயெஸ் கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய தசாவதாரம் – சிறுகுறிப்பு வரைக.
படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை. ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே ‘தசாவதாரம்.’ இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கமலின் அடி மனதில் தேங்கியிருந்த கதை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் துணிச்சலால் இன்று திரைவடிவம் பெற்று வருகிறது. படத்தின் ஏகதேச பட்ஜெட் முப்பத்தைந்து கோடிகள்!
படத்தின் பாதி பட்ஜெட்டை பிரமாண்ட அரங்குகள் எடுத்துக் கொள்கின்றன. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மண்டலத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். முக்கியமாக பொன் கூரைவேய்ந்த சிதம்பரம் கோவில் மற்றும் கோவில் வளாகம். நூற்றுக்கணக்கில் சோழ குடிமக்கள், குதிரைகள், குலோத்துங்க சோழனின் பட்டத்து யானை என ஆயிரக்கணக்கில் துணை நடிகர்களை வைத்து சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இதில் குலோத்துங்க சோழனாக நெப்போலியன் நடித்திருக்கிறார்.
சைவ சமயத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் சயன நிலையில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசுவதும், அந்தச் சிலையை அணைத்தபடி ரங்கராஜ நம்பி கடலுக்குள் மூழ்குவதும் படமாக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சிலையும், நம்பியும் மூழ்கும் காட்சியை ஸ்பெஷல் கேமராக்கள் உதவியுடன் கேமராமேன் ரவி வர்மன் படமாக்கினார். இந்தக் காட்சியில் ரங்கராஜ நம்பியாக உடலில் திருமண் அணிந்து நடித்தார் கமல்ஹாசன். படத்தில் வரும் பத்து கெட்டப்புகளில் ஒன்று இந்த ரங்கராஜ நம்பி.
முன்னதாக, ரங்கராஜ நம்பியின் முதுகில் இரும்பு கொக்கிகளை சதையை துளைத்தபடி பிணைத்து பறவை காவடி போல் இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. ரங்கராஜன் நம்பியாக நடித்த கமல் சொந்தக் குரலில்,
‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
சைவம் என்று பார்த்தால தெய்வம் கிடையாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது’
என கொக்கியில் தொங்கியபடி பாடிச் சென்றார். வாலி எழுதிய இந்தப் பாடல் மற்றும் காட்சி வரலாற்று முக்கியத்துவமுடையது.
இன்று சைவர்களும், வைணவர்களும் இந்து என்ற அடைப்புக்குறிக்குள் ஒற்றுமையாக கழிந்தாலும் 12-ம் நூற்றாண்டில் சைவர்களும் வைணவர்களும் சிண்டை பிடித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சிவன் பெரிதா பெருமாள் வலிதா என்பது அன்று ஒரு தீராச் சண்டை. பெரும் பகை. சுடுகாட்டில் திரிபவனுக்கு கோவில் எதற்கு என சிவனை வைணவர்களும் கடலில் கண்ணயர்ந்து கிடப்பவனுக்கு பூஜையும் வைவேதிகமும் எதற்கு என விஷ்ணுவை சைவர்களும நடுவீதியில் நாறடித்துக் கொண்டிருந்தனர். அதன் ஒரு சிறு துணுக்கே கமல், நெப்போலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.
இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு வரும்போது காட்சிகளிலும் கமலின் கெட்டப்பிலும் 180 டிகிரி மாற்றம். இப்போது கமல் ஒரு விஞ்ஞானி. ஏறக்குறைய வெளிநாட்டு மனிதனின் சாயல். இந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கியிருக்கிறார்கள். எளிதில் அனுமதி கிடைக்காத அமெரிக்காவின் மிகப் பெரிய ஆராய்ச்சி கூடத்தை இதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி கூடத்தின் நடுவில் கம்ப்யூட்டர்கள் மிகப்பெரிய எந்திரங்களை இயக்குவது போன்று செயற்கையான அரங்கு ஒன்றை அமைத்து, அது விபத்தில் அழிவது போன்று எடுத்துள்ளார்கள். இந்த அரங்கை வடிவமைத்தவர் கலை இயக்குனர் பிரபாகரன். இவரைத் தவிர சமீர்சந்தாவும் இப்படத்திற்காக பல பிரமாண்ட அரங்குகளை அமைத்துள்ளார்.
கமலின் இன்னோரு முக்கியமான வேடம், தற்காப்புக் கலை நிபுணர். மலேசிய பாரம்பரிய தற்காப்புக் கலைஞர் வேடத்தில் கமல் எதிரிகளுடன் மோதும் காட்சியை மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புகழ் பெற்ற இரவு விடுதி ஒன்றில் பாடல்காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. மல்லிகா ஷெராவத் இருபது அமெரிக்க அழகிகளுடன் ஆடுவதை கமல் பார்ப்பதாக காட்சி. பிருந்தா இந்த நடனத்தை அமைத்தார்.
படத்தின் முக்கியமான அம்சம் சண்டைக்காட்சிகள். கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா மரணமடைந்ததால் அவர் இடத்தை பிடித்திருக்கிறார்கள் தியாகராஜனும், கனல் கண்ணனும். இவர்கள் இருவரும் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு சண்டை அமைத்தவர்கள். அமெரிக்காவில் எடுத்த சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளை எடுத்தவர்கள் Joop Katana மற்றும் Matos. இருவரும் ஹாலிவுட் சண்டைக் கலைஞர்கள். மலேசியாவில் எடுக்கப்பட்ட பாரம்பரிய Akido சண்டைக்காட்சியை எடுத்தவர் Sonnylake.
படத்தில் ஜிம்மி ஜிப், ஸ்டெடிகேம், பான்தர் கிரேன் என அதிநவீன கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். 747 ஜெட் விமானத்திற்குள் கமல் ஊடுருவும் காட்சியை இதுவரை இந்திய சினிமா காணாத வகையில் எடுத்துள்ளனர்.
கமலுடன் நெப்போலியன், அசின், மல்லிகா ஷெராவத், சந்தான பாரதி, ஜெயப்ரதா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசன். இயக்கம் கே.எஸ். ரவிக்குமார்.
படத்தில் பணிபுரியும் அனைவரும் இதனை மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகின்றனர். “எனக்கு இந்தப்படம் தனியா ஒரு இன்டிட்யூட்ல படிக்கிற அனுபவத்தை தருது. ஒவ்வோரு காட்சியை எடுக்கும்போதும், ஒத்திகை, டேக், லேப்ல டெவலப் பண்றப்புறம் டெலிசினி எடிட்டிங்கில் இப்படி பத்து முறை பார்த்தாலும் பதினோராவது முறை பார்க்கும் போதும் சுவாரஸியமாகவும் பிரமாதமாகவும் இருக்கு” என சிலாகிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.
“எனது சினிமா வாழ்க்கையை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் படம்” என பெருமிதப்படுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் கணிப்பு வேறு மாதிரி. “கண்டிப்பா தமிழ் சினிமா சரித்திரத்தில் இந்தப் படத்துக்கு தனி இடம் உண்டு. படத்தோட கலெக்ஷ்னும் அப்பிடி இருக்கும்னு நம்பறேன்.” நாம் மேலே பார்த்தது கமலின் மூன்று வேடங்களை.
கெட்டப்புகள் என வரும்போது கமலின் உழைப்பை சொல்லாமல் இருக்க முடியாது. சிங்கிள் கெட்டப்புக்கே அலும்பல் செய்பவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக பத்து விதவிதமான மனிதர்களாக மாறியிருக்கிறார் கமல். ஒவ்வொரு கெட்டப்பிற்கும் மேக்கப்போட ஆறுமணி நேரமாகிறது. அதிகாலை மூன்று மணிக்கே மேக்கப்பிற்கு முகத்தை கொடுக்க வேண்டும். ஆறுமணி நேரம் பொறுமையாக இருந்தால் படப்பிடிப்புக்கு தயாராகலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். மூன்று நான்கு மணி நேரமே மேக்கப் தாக்குப்பிடிக்கும் என்பதால் அதற்குள் அந்தநாள் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். மேக்கப் போடும் நேரம், மேக்கப்புடன் நடிக்கும் நேரம், மேக்கப்பை கலைக்கும் நேரம் என ஏறக்குறைய ஒரு நாளின் பதினைந்து மணி நேரம் தாடை அசைய எதையும் சாப்பிட முடியாது. வெறும் திரவ உணவுகள் மட்டுமே சாப்பாடு. இப்படி பத்து கெட்டப்புகள் போடவேண்டும்.
கமலின் கெட்டப்புகள் எதையும் பிறரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இதற்கு மோஷர், அனில் பெம்ரிகர் இருவருக்கும்தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள். மோஷர் ஒப்பனை கலைஞர். பெம்ரிகர் சிகை அலங்கார நிபுணர்.
இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா. இந்தப் பாடல் காட்சியை படுபிரமாண்டமாக அமைத்திருகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள். அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது. ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!) கதற… கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது.
உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக் கடலில் தூக்கி வீசப்படுகிறார். உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால், சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட… அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்.
‘முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா ‘வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா’
பாடலை நம்மூர் ஸ்டைலில் ரொம்ப சாஸ்திரியமாக முயற்சி செய்திருக்கிறார் வட இந்திய ஹிமேஷ். காப்பி ராக சாயலில் அமைந்துள்ள ‘முகுந்தாவில்’ அனாவசிய வாத்திய இரைச்சல் இல்லை. வீணை, மிருதங்கம், கடம் ஆனந்தமாய் ஒலிக்கிறது. சாதனா சர்கத்தின் தொண்டையில் நிரந்தரமாக தேன் தடவியிருக்கிறதோ என்னமோ, அப்படியரு குழைவு, இளமை!
சொல்லப்போனால் தசாவதாரத்தின் ஐந்து பாடல்களில் இதில் மட்டுமே கர்நாடக சங்கீதத்தை கேட்க முடிகிறது.
மல்லிகா ஷெராவத்தின் துள்ளலான ஆட்டத்திற்கு ராப் ஸ்டைலில் விளையாடியிருப்பவர் கமலின் மகள் ஸ்ருதி. பல்லவியை ஆங்கிலத்தில் ஆரம்பித்து அனுபல்லவியின் போது தமிழுக்கு வருகிறார். வாத்திய இரைச்சல் சற்று அதிகம் என்றாலும் மேற்கத்திய இசை ரசிகர்களை தோளைக் குலுக்கி, குதிகாலைத் தூக்கி ஆடவைக்கலாம். முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட அட்டகாசம்!
வழக்கமாக கமல் பாடும் போது வாயில் எதையோ அடக்கிக் கொண்டு பாடுவது போல தெரியும். தசாவதாரத்தில் அவர் பாடும் டூயட் ‘ஓ.. ஓ சனம்’ பெட்டர். முழுவதும் மேடையில் பாடுவது போன்ற காட்சி. இடை யிடையே ‘உஸ் உஸ்’ என்று சீறும் அலை ஓசை வித்தியாசமானது. பாட்டின் பல இடங்களில் கிதார் ரகளை செய்கிறது!
‘‘உடல் பூமிக்கு போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்’’
‘‘கடவுளும் கந்த சாமியும்
பேசிக் கொள்ளும் மொழி இசை’’
‘‘வீழ்வது யாராயினும்
வாழ்வது நாடாகட்டும்’’
போன்ற வைரமுத்தின் நயமான வரிகள் பாட்டு நெடுகிலும் உண்டு.
படத்தின் க்ளைமாக்ஸில் எல்லா கமல்களும் அணிவகுக்கும் போது ஆர்ப்பாட்டமாக வருவது:
‘‘உலக நாயகனே… கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே!’’
ராப், ஹிந்துஸ்தானி எல்லாவற்றையும் அழகாக கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். கமல் ரசிகர்கள் திரைக்கு முன்பு ஓடிவந்து நாக்கை மடக்கி வெறியாட்டம் போட வைக்கிற அதிரும் பீட்! அந்த ‘கிடதங் கிடதங்’ பின்னணி அருமை! கமல் ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே ‘நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன்’ என்று வைரமுத்துவின் கெத்தான வரிகள் வேறு! கேட்கவா வேண்டும்?
ஹிமேஷ் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிறபோது சற்று ரஹ்மானை நினைவுபடுத்தினாலும் தமிழுக்கு அந்த பீட்களும், அலறும் வயலின்களும், வேகமும் புதியது! மேற்கத்திய வாடை சற்று தூக்கல்! நம்மூர் கர்நாடிக் மியூஸிக்கை ஊறுகாயைப் போல தொட்டுக் கொண்டு விட்டு விட்டாரே என்ற ஏக்கமும் வராமல் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கல்லாவைப் பார்ப்பாரா, கர்நாடிக்கைப் பார்ப்பாரா?.
‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலமாக தமிழ் திரைஉலகில் அறிமுகமாகி, ரஜினி உடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்ததால் புகழ் உச்சிக்கு சென்றவர் நடிகை ஸ்ரேயா. புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் திருமலைக்கு ஸ்ரேயா சென்றிருந்தார்.
அதிகாலையில் சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியே வந்தபோது சிலர் அவரை அடையாளம் கண்டனர். உடனே ஸ்ரேயாவை நெருங்கி `ஆட்டோகிராப்’ கேட்டனர். கையை பிடித்து குலுக்கவும் முயற்சித்தனர். அப்போது ஒரு ரசிகரை ஸ்ரேயா ஓங்கி அறைந்தார். அவருடைய உதவியாளர்களும் அந்த ரசிகரை அடித்து உதைத்தனர்.
ஸ்ரேயாவின் இடுப்பை அந்த ரசிகர் கிள்ளியதால் அவர் கோபமடைந்து அடித்ததாக கூறப்பட்டது. ஸ்ரேயாவிடம் அடி வாங்கியவர் பெயர் ஹரி என்பது, பின்னர் தெரிய வந்தது. திருமலையில் உள்ள ஒரு மடத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
ஸ்ரேயா கூறியதாவது:-
கோவிலில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்த நான், பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒருவன் எனது இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்தான். புனிதமான இடத்தில் இப்படி நடந்து கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
முதலில் கண்ணில் படுவது ‘புத்தாண்டை முன்னிட்டு’.
தற்போது ஒகெனக்கல் தமிழ்நாட்டில் இருக்கிறதா/சத்யராஜ் தேர்தலில் நிற்பாரா என்னும் சூழல் நிலவுவதை கணக்கில் எடுக்கவும். கன்னட வருடம் பிறந்ததைக் கொண்டாட ‘முன்னாள் தமிழ்நாடு’ (சென்னை மாகாணத்தில்) இருந்து துண்டாடப்பட்ட தெலுங்கு தேசத்தில் உள்ள கோவிலுக்கு ஷ்ரேயா சென்றிருப்பதன் அவசியம் என்ன? அன்று திருப்பதி தாரை வார்க்கப்பட்டது; இன்று ஹொகேனக்கல் சென்று விடக் கூடுமா?
இவ்வாறு சிந்திப்பது ‘ சுற்றிக்கட்டு’ காட்டினாலும், ஷ்ரேயாவை முடிச்சுப் போடாமல் பாதியில் அனாதரவாகத் தொங்கி நிற்கிறது. இந்த மாதிரி எழுதுவது ‘தொலைநோக்கு பார்வை‘ எனப்படும்.
அடுத்ததாக ஹரி ‘இந்து சமயம்’ சார்ந்த மடத்தில் வேலை பார்க்கும் சமாச்சாரம் கிடைக்கும். இது முற்போக்கு பார்வைக்கு மட்டுமே உதவும். பார்ப்பனியம், ஆரியம், மடத்தலைவன் என்று முடிந்த அளவு தட்டையாக சித்தாந்தப் பார்வை ஆக்கி விடலாம்.
மதம் எல்லாம் ‘கதம் கதம்’ என்று பாபா ரஜினி வழியா உங்களுக்கு? பரவாயில்லை! அடிபட்டவர் துப்புரவு பணியாளர் என்பதால், கவிஞர் வாலியைப் போல் ‘சாக்கடைக்குள் போய் சுத்தம் செய்யும் பேரு; நாலு நாளைக்கு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு’ என்று இலக்கியப் பார்வை வடிக்கலாம்.
‘ஷ்ரேயாவுக்கு நேர்ந்தது எனக்கும் அன்றாடம் நேர்கிறதே’ என்று பாலாஜி பக்தையின் கதியை எடுத்துவைத்தால் பெண்ணியப் பார்வை என்று முடக்கப்படலாம்.
கரிசல் » பொதுவுடைமை என்பது போல் “சாமானியர்களும் ஏழைகளும் தொடக்கூடாதா என்ன?” என்று ஆணியப் பார்வைக்கு தாவலாம்.
கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரெஸின் ஏசி வகுப்பு போல் அலுக்காத சினேகா இன்னமும் சந்தையில் காலந்தள்ளுகிறார்.
பதிவுசெய்யப்படாத வகுப்பு போல் எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயணிக்கும் நமீதா;
நிதிநிலை அறிக்கையில் தள்ளுபடியான விலை போல குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் சிம்ரன்;
ராஜதானி போல் தலைநகரை நோக்கினாலும் சென்னையிலும் கால் வைத்திருக்கும் அசின்;
எப்பொழுது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படும் என்று கிசுகிசுக்கப்பட்டாலும் பாஸெஞ்சரின் வாஞ்சையான நடிகையர் திலகம் மீரா ஜாஸ்மின்;
கிராமம், நகரம் என்று வித்தியாசம் பாராட்டாமல் பயணிக்கும் இருவுள் போல் இரண்டுவிதமான நடிப்பிலும் அசத்தும் ப்ரியாமணி;
ரயில்வே சாப்பாடாக சென்நை பிரியாணி பரிமாறிய பூஜா;
பொறிக்கு தக்கவாறு, ஒரே தடத்தில் வேகமாக செல்லும் வண்டியும், நின்று நிதானித்து செல்லும் வண்டியும் செல்வது போல் இயக்குநருக்கு ஏற்ப மிளிரும் பாவ்னா;
புதிய விமானங்களாக வந்திறங்கும் பாரதி, விஜயலஷ்மிகள்;
ஏர் இந்தியாவாகப் பறந்து கொன்டிருக்கும் த்ரிசா;
‘தவமாய் தவமிருந்து’ என்று எக்ஸ்பிரெசாக அறிமுகம் ஆகி ‘பட்டியல்’ சூப்பர் ஃபாஸ்ட் என்று பதவி உயர்வு அடையும் பத்மப்ரியா;
தடம் மாறக் கூடாது. மீண்டும் சதியாலோசனைக்குத் திரும்பவும்.
சொர்ணமால்யா குறித்த கிசுகிசு வந்தால் எவராவது சீந்துகிறார்களா? இல்லையே! புகழுக்கும் புதருக்கும் மோனை மட்டும் ஒற்றுமை அல்ல. இன்று புகழோடு இருப்பவர் நாளை கோப்புகளாக்கி மூலையில் புதைக்கப்படுகின்றனர்.
கொண்டாட்ட மேடையில் நடிகர்களின் பேச்சு மட்டுமே முன்னிறுத்தப்பட்டது. நடிகைகளுக்கு கனவுப்பாடல் தரப்படவில்லை. பின்னணிக்குரல் நாயகி சவீதாவும் வரவில்லை. இப்படிபட்ட சமயத்தில் செய்தியில் எப்படி இடம்பிடிப்பது?
பிடித்தார் துணை நடிகரை; கொடுத்தார் ரியாலிடி டிவியை!
‘நடிக்கிற மாதிரி நடி; அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்’ என்று சொல்லி வைத்ததை அரங்கேற்ற, அகில லோக செய்திகளிலும் தலைப்புகளில் அடிபடல் ஆனார்.
மெரீனாவில் பெருமாளின் திருக்கல்யாண சேவை பார்த்த மக்களிடம் தன் கடவுள் பக்தியை பறைசாற்றினார். புலியை முறத்தால் விரட்டிய தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறி விளைந்த வீர பரம்பரை சங்கச் சித்திரத்தை செயலில் காட்டி இலக்கிய தமிழர்களை மெய்சிலிர்க்க வைத்தார் என்று அடுக்கினால் கான்ஸ்பிரசி கொள்கை எனப்படும் என்றறிக!
மார்கரெட் அட்வுட் என்பாருடைய அரை-பெண்ணிய நாவல் ஒன்று 90களில் வந்தது என நினைவு. ‘The handmaid’s tale’ என்று தலைப்பு என நினைக்கிறேன். நல்ல நாவல். இதை ஒரு சுமார் படமாகக் கூட எடுத்தார்கள். (The Handmaid’s Tale (1990))
இந்த நாவலில் இப்படி ஒரு ஆண்- பெண் பிரித்து வாழ்ந்த சமுகம் கற்பனை செய்யப்படுகிறது. இதில் பெண்கள் கடும் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டு, உடல்கூறு வழியே பகுக்கப்படுகிறார்கள். இது முற்றிலும் பெண் வெறுப்பை மையம் கொண்ட கதை இல்லை, ஆனால் பெண்ணடிமைத்தனத்தைக் கொண்டது. கிட்டத்தட்ட மத்தியகால யூரோப்பின் பெண்கள் நிலை, இன்றைய அரபிய இஸ்லாமிச சமுதாயப் பெண்களின் நிலை, தாலிபானிய, பின்லாடனிய இஸ்லாமியச் சமுகம் இங்கு கதையில் வரும் உலகம் போன்றது.
இன்னொரு விருப்பமான எழுத்தாளர்- உர்சுலா லெ க்வின் (Ursula le Guin) இவரும் இப்படி ஆண் பெண்கள் கடுமையாகப் பிரிக்கப்பட்ட ஒரு சமுகத்தை வைத்து அருமையான நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த நாவலில் பெண்ணியப் பிரச்சார நெடி குறைவு, உளவியல் நுட்பங்கள் அதிகம்.
ஜெயலலிதா ரொம்ப பிரில்லியண்ட்டானவர். அசாத்திய அறிவுக் கூர்மையுடையவர் என்பது ஒரு கற்பிதம். இதை கேள்வி கேட்காமல் நிறையப் பேர் ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவு பெரிய புத்திசாலி, பிரில்லியண்ட் நபர் எப்படி தன் முழு அரசியலையும் வாழ்க்கையையும் ஏதோ ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த சசிகலா குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு இருக்கிறார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது.
கருணாநிதி பற்றியும் இது போன்ற கற்பிதங்கள் உள்ளன. அவர் ஒரு பகுத்தறிவாளர், ஜனநாயகவாதி என்பதெல்லாம் அப்படிப்பட்ட கற்பிதம்தான்.
இந்த வார குட்டு
கிறிஸ்துவ மதத்துக்குள் தலித் கிறிஸ்துவர்களுக்கும் வன்னிய கிறிஸ்துவர்களுக்கும் இடையே ஆலய வழிபாட்டில் ஜாதி வேறுபாடுகள் காட்டப்படுவதை நீக்காமல் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் நடக்கக் காரணமாக இருந்து வரும் புதுச்சேரி மறைமாவட்டப் பேராய நிர்வாகிகளுக்கு
இந்த வார கேள்வி
தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு என்ற சலுகைக்காக படத்துக்கு தமிழ்ப் பெயர் வைத்துவிட்டு, தயாரிப்பு நிறுவனத்துக்கு மட்டும் ஆங்கிலப் பெயர் வைத்துக் கொள்ளும் சினிமா உலகத் தந்திரத்தை ‘முத்தமிழ் அறிஞரின்’ பேரன் உதயநிதியும் (ரெட்ஜெயண்ட் மூவீஸ்) பின்பற்றுவது முறையா ?
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde