Tag Archives: சினிமா

ரத்த சரித்திரம் – How it narrates the Story of BJP vs Congress?

இந்தப் பதிவுக்கு இகாரஸ் பிரகாஷ் எழுதிய ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் ஊக்கம் தந்தது.

படத்தின் துவக்கத்தில் வரும் உரிமைதுறப்பு: ‘இந்தப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே’
பிறகு துவங்கும் படத்தின் சற்றே பெரிய எழுத்தில் வரும் டைட்டில் கார்டு: ”நிஜத்தில் நடந்த கதை”

என்ன கதை?

காந்தி சிலையுடன் காட்சித் துவக்கம். ஏன்?

ஆனந்தபுரத்தைத் திருப்பி போட்டால் தண்டி. அஹிம்ஸையின் மறுபக்கமாக அரசியல் செய்கிறார் நாகேந்திர மூர்த்தி (ஜின்னா & பிரிட்டிஷார்).

இவரது வலது கரமாக விளங்கும் வீரபத்ரனை (பாரதம்) பெரிதும் நம்புகிறார். விவசாய பாட்டாளிகளுக்காக (பாரதியவாசிகள்) உண்மையாக பாடுபடும் மக்கள் பிரதிநிதி.

இந்தக் கூட்டணியை விரும்பாத நாகமணி (ஜவகர்லால் நேரு) இந்தியாவைக் கலைத்து இரண்டாகப் பிரிக்கிறார். மக்களின் ஆதரவு ஒருங்கிணைந்த பாரதத்திற்கு ஏற்படுகிறது. இதனால் ஜின்னாவும் நேருவும் ஆங்கிலேயரும் இணைந்து வீரபத்ரனை, அவரது நம்பிக்கையான ஆளை (ஹிந்து – ஆர்.எஸ்.எஸ்.) வைத்தே தீர்த்து கட்டுகின்றனர்.

தவறான ஆட்களின் கோள்மூட்டுதலால் அதுவரை காத்து வந்தவரையும் (இந்தியா) அவரது முதல் மகனையும் (காந்தி) கொலைசெய்கிறார்கள்.

கொல்லப்பட்டவரின் இரண்டாவது மகன் (இந்து முஸ்லீம் பிரிவினையை சொல்வதற்காக இரண்டாவது என்னும் குறியீடு) அதற்காக ஒரு பழிவாங்கல் கதையை தன் அரிவாளால் எதிரிகளின் ரத்தத்தால் எழுதுகிறான். அது மாத்திரமல்லாது தனக்கு எவருமே எதிரிகளே இருக்கக்கூடாது என்று ஒரு ஆபரேஷன் திட்டம் (எமர்ஜென்சி) செய்து அனைவரையும் கொல்வதற்கு ஏற்பாடு செய்கிறான்.

அரசியல் அவனை (காங்கிரஸ்) அரவணைக்கிறது.

எதிரிகளைத் தவிர்த்து பிற பொதுமக்களுக்கு அவன் நியாயமாகவே நடந்துகொள்கிறான் போலத்தான் தெரிகிறது.

நடுவில் பிரதாப்பின் மனைவியாக ராதிகா ஆப்தே ராஜீவ காந்தியை அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கவைக்கும் சோனியா.

சூப்பர் ஸ்டாராக அரசியலில் குதித்தவர் சிவராஜ். (சத்ருஹன் சின்ஹா – அமெரிக்கா) கோகோ கொலாவாக தண்டிபுரத்தில் நுழையும் அவரை வன்முறை வரிகள் கொண்டு, சட்ட வெடிகுண்டு வீசி துரத்தியடிக்கின்றன.

இவர்களை எதிர்க்க யார் சரியான ஆளாக இருக்க முடியும் என்று அவர் யோசிக்கும் போது கண்ணில் படுபவன் மன்மோகன் சிங் + நரசிம்மராவ். உலகமயமாக்கி, பொருளாதார வல்லுநராக்குகிறது.

திருப்பமாக அவனைப்போலவே அவனால் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் மகன் (பாரதீய ஜனதா கட்சி) உருவெடுக்கிறான். எந்தச் சமாதானங்களுக்கும் உட்படத் தயாராகயில்லாத வெறி (அயோத்தியா ராமர் கோவில் + பாப்ரி மசூதி இடிப்பு) நிறைந்ததாக இருக்கிறது அவன் நோக்கம். வளர்ந்து நிற்கும் இவனை பழிதீர்ப்பது அவனுக்கு கடினமான வேலையாக இருந்தாலும் சில தோல்விகள், போராட்டங்களுக்குப் பின் நினைத்ததைச் சாதிக்கிறான்.

தொடர்புள்ள பதிவுகள்:

1. அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation
2. சந்திரமுகி க(வ)லையா?

விமர்சனம்:
1. பிச்சைப் பாத்திரம் – சுரேஷ் கண்ணன்
2.
ஆதிமூலகிருஷ்ணன்

ட்விட்டரும் நானும் (2)

முந்தைய ட்வீட்ஸ்

அ. தமிழ் ட்வீட்ஸ் – குறுஞ்செய்தி வாக்கு: சிற்றெழுத்து ஓடை

ஆ. டிவிட்டவோ உளறவோ வேண்டியது

இ. ட்விட்டர்த்துவம்

1. What’s wrong with asking for credentials from illegal immigrants in Arizona? If you have it, why can’t you carry a simple license? #immi #AZ

2. was explaining a theory that Faisal Shahzad could be a handiwork of team like ‘Men Who Stare at Goats’ implanted by Team USA.

3. If only Super Singer Junior allows winners by relatives of producers, the picks should be: 1. Vishnu Charan; 2. Bala sarangan #VijayTV #Star

4. 1000thil Oruvan: fun to watch; doesn’t connect; inventive but does not satisfy the inner need for relating to the characters.

5. VTV: Gautam is getting into Bharatiraja/KB type syndrome in which success breeds stereotyped siblings with minimal variations.

6. அவள் பெயர் தமிழரசி: எ.கொ.சா.இ; joins the select list of classic ‘Gigli‘ genre movies in Tamil.

7. அங்காடித் தெரு: அண்ணாச்சியின் மறுபக்கத்தையும் ஓரமா காமிக்கலாம்; சினேகா இடைச்சொருகல் தவிர இன்னொரு பருத்தி வீரன்.

8. Inglorious Basterds: Conspiracy theories consolidated; touches from slavery to smartness with current amnesty regime for dictators.

9. I was appreciating ‘Up in the Air’ to my colleague. He asked me back ‘Do you have any movie that you don’t like?’ My reply: ‘I’m like Gandhi

10. அடுத்தவரோட வேலைக்கு உலை வைக்கிற நுட்பத்தை நுழைக்கிறவருக்கு, அவரோட வேலையில உலை வைக்க ஒரு நாடு பிறந்திருக்கும். #IT #Outsourcing #Tech

11. @peyarili நான் நீங்கதான் விசுவாமித்திரரின் மித்திரர்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.

12. அக்கால scientistகள்? Seismologist: அகத்தியர்; Anthropologist: வியாசர்; Ethnologist: வால்மீகி; Geophysicist, Geologist, volcanologist யாரு?

13. Volcanic Ash Cloud இமாலயத்தில் எரிமலை வெடித்தால் கைலாயத்தில் நெற்றிக்கண் திறந்தது எனலாம்.

14. நிலைப்பாடு தமிழ் அல்ல. ‘லைப்’ (life) நடுவில் crisis கொடுக்கிறது. செயலைப் பாடினால் செயல்பாடு?

15. அழகியர் எவ்வாறு காரியத்தில் கண் வையாரோ, அவ்வாறே, தமிழ்ப்பதிவர் தமிழைத் தழைக்க வையார். #Tamils #NewYear

16. Paandavar Bhoomi Memorial Pole in Africa & Oceania. #memorials http://post.ly/XkOZ

17. கறுப்பு, வெளுப்பாவதை புகைப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் பார்க்க பார்க்க, என் கண் முன்பே @writerpara நரைக்க கவலையா? கல்வியா?

18.When you say ‘I like’ Catcher in the Rye novelist dies in Google Reader what are you conveying? #Share

19. Today I was one of the last persons getting off the train. Never noticed so many disabled, cane wielders when I used to be one among the 1st

20. ‘சின்னத்தம்பி’யில் மனோரமாவுக்கு நடக்கும் வைபவத்தின் தீவிரத்தோடு, ‘யாரடி நீ மோகினி’யில் தனுஷ் வேலையிழப்பதை ஒப்பிடலாமா? #Ceremony

21. ட்யூனை சுட்டது யார் தேவா-வா? நெப்ட்யூனை சுட்டது யார் நாந்தானே அட நாந்தானே! யுரேனஸ் உதடுகள் உன்னுது? வைரத்தை வெட்டுவது யாரது!

22. Losing one glove is certainly painful;but nothing compared to the pain of losing one, throwing away the other & finding the first one -Hein

23. Misterக்கும் Ministerக்கும் in வித்தியாசம். அதே போல் கடி x கிண்டி [க + in + டி] என்றால் ட்விட் கேஸ் தயார். #Tamil99

24. இந்தியாவிற்கு எதிர்மாறாக மேடைப் பேச்சில் நாகரிகமாகவும், டிவி விளம்பரங்களில் ஏச்சும் பேச்சுமாகவும் இருக்கிறது. #Campaign

25. கிட்னியில் கல் தோன்றுமளவு சிறுநீர் தேக்கக் கூடாது என்பது எவ்வளவு உண்மையோ, அது போல் டேட்டாபேஸ் ரொம்புமளவு காத்திருத்தல் தகாது. #TwitGas

26. தான் விடும் குறட்டை பிறர் தூக்கத்தைக் கெடுப்பது தனக்கேத் தெரியாது; அது போல் தன் ட்விட்டின் கரியமில வாயு நச்சையும் அறியார். #TwitGas

27. reminded me of ‘Fight club’ quote: When people think you’re dying, they really, really listen to you, instead of just…

28. EKSI Moment: Even kids can SMS the pledge donation money to Red Cross 4 Haiti. They shd hv basic restrictions for 18+ minors offensive texts

29. பாத்ரூம் போனா உச்சாவோ ரெண்டுக்கோ போவணுங்கிற மாதிரி தமிழருக்கு இலக்கியமோ அறிவுப்பசியோ மட்டுமே சமைக்கப்படும். #TamBooks

30. வேலையில் இந்தப் பெயரின் infamousnessஐ குறிப்பிடுவது விருப்பமில்லை. வலையில் ‘என்ன வேலை’ வினவலையும் விரும்புவதில்லை.

31. As a Employee cum Blogger which gives you more kick? Tough problem analyzed & solved at work (or) A post being received well & reaches mass?

32. குறளுக்கு புராணக்கதை சொல்லும் ஏழாங்கிளாசு வாத்தி போல கதாகாலட்சேபமும் விஜய் ஆன்டனிகளை ஏசுவதாக டெம்பிளேட் ரம்பம். #Piraisoodan

33. ‘ஏதாவது ஹிட் படத்தை II ஆக்கலாம்’ என்ற நிபந்தனையோடு தமிழ் சினிமாவில் உங்களுக்கு வாய்ப்பு தந்தால், எந்தப் படம் தேர்ந்தெடுப்பீர்கள்?

34. சூத்திரனே சூத்திரமறிந்த சூத்ரதாரி என்பதற்கும் சூத்ரதாரியே சூத்திரமறிந்த சூத்திரன் என்பதற்கும் உள்ள இலக்கண வித்தியாசம் என்ன? #Sentenced

35. தனி மடலுக்கு பதில் போடாமல், பொது ட்விட்டுக்கு @ போடுவது, பொண்டாட்டியை தூங்கவிட்டுட்டு PPVஇல் பலான படம் பார்ப்பது போலாம். #Twithuvam

36. If I am in Starbucks I get free wi-fi, but no free coffee; If I am at work, I get free coffee with Iron curtains. At home?

37. Learning 48%; Money 31%; and Thinking -25%; Numbers -66%; Sex -85% for the list http://twitter.com/snapjudge/chattytamils

38. @icarusprakash கலக்கல்! “பச்சை சுடிதார் உள்ள வாங்க என்றார். நான் ம.வே.சிவகுமாராக இருந்திருந்தால், ‘எதுக்கு உள்ள’ என்று கேட்டிருப்பேன்.”

39. Watched Harry Potter 6 followed by HP2: Chamber of secrets. Its all falling in place now. Need to watch all of them again in reverse order.

40. How close was the 2nd half of Sujatha’s ‘Pirivom.. Santhippom’ to ‘Anandha Thandavam’? 1st part remained faithful to original AFAI remember.

41. இன்றைய சந்தேகம்: புனைப்பெயரை வைத்து அழைப்பது உங்களுக்குப் பிரியமா (எ.க.: மனுஷ்யபுத்திரன்). (அ) உண்மைப் பெயரா? (உ.: ஹமீது)? #Thalavedichurum

42. அடுத்தது என்னனு தெரியாம இருக்கறத விட, அந்தப் பாட்டை ஸ்கிப் செய்ய முடியாம பொறுமை காப்பதும் சுகம். iPhone shuffleனும் சுகம்.

43. ‘பியர்கடல் பிரந்தாமன்’ கூல். இதே மாதிரி அறுபடை வீடு, பரலோக பரமபிதா, கைலாயவாசி ஆகியோருக்கும் ஏதாவது இருக்கா?

44. கலைஞர் டிவியின் ‘நாளைய இயக்குநர்கள்’தான் நாளைய இயக்குநர்கள் என்றால், கவலையளிக்கிறது. நல்ல கான்செப்ட்; திராபையான கதைத் தேர்வு.

45. நேற்று அதிக ட்வீட்டுகளை சுவாரசியத்தோடு வழங்கிய பெருமையைத் தட்டிச் செல்பவர்: @vaamanikandan

46. அரசியல்/சினிமா தல மறைந்தவுடன் ஏன் கலாட்டா? 1. ஆள் அவுட்டானபிறகுதான் அவர் மேல கோபத்தக் காட்டமுடியும். 2. ஹீரோவை அடித்து நொறுக்கலாம்.

47. மற்றவர்கள் கருத்து சொல்லும் ட்விட்டரைப் பார்த்தால் தன்னாலே கீபோர்ட் சதை ஆடுதே! இது peer pressureஆ? blood pressureஆ? #Twitthuvam

48. இதை நடைமுறையாக்க என்னுடைய யோசனை. Child offenders could be posted as Security officers. They get kicks & get the job done too.

49. Which is a classic lyric? 1. இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்? (or) 2. மீயா மீயா பூனை; நான் மீசை வச்ச யானை & நான் ஆத்தா வுட்ட புஸ்ஸு.

50. அந்த வரி தவறு என்கிறார் நண்பர். ‘அஞ்சு மணி பஸ்; நான் அதை உட்டா மிஸ்’ஸாம். என்னுடைய காதுகளில்தான் எசகுபிசகு போல…

51. இந்தப் பாடலுக்கு இசையமைப்பது அசெம்பிளி மொழியில் வெப்சைட் உருவாக்கியது மாதிரி என்கிறார் ஆன்டனி. #Objects

52. சமீபத்திய ‘அரசு இலவச மருத்துவ முகாம்’ சென்று வந்த நண்பர் இலவச ஈசிஜி முதல் எலும்புத்தேய்வு சோதனை வரை செய்துகொண்டு DMK அனுதாபியாகி விட்டார்.

53. ‘Chennai Merina is ultra clean; Everything in Govt. schools r free & quality has improved. Why shd I vote 4 somebody else & take risk?’ #DMK

54. பிடுங்கிய மைக் முன் விடாக்கொண்டரில் டாப் யார்? 1. பிறைசூடன் 2. டியெஸ்பி தேவிஸ்ரீபிரசாத் 3. டி ராஜேந்தர் 4. ஹரீஷ் ராகவேந்திரா #Music #TV

55. என் டி திவாரி செய்கை மேல் உள்ள கோபத்தை விட அவன் மீதுள்ள பொறாமைதான் கோபத்தைக் கிளறுகிறது என்பார் பர்னாலாவின் மகன். #NDT #Males

56. பெரியார் வாழ்க்கை வரலாறு கொண்டு வந்தால் அரசு இன்சென்டிவ் ஏதாவது உண்டா? இன்னும் இரு பதிப்பகங்களும் திடீரென்று கொணர்ந்துள்ளதாம்.

57.சுயநலத்தில் டாப் நாடு எது? 1. நவூரு 2. இஸ்ரேல் 3. அமெரிக்கா 4. சீனா – http://nyti.ms/55FtSo

58. Writer நாகார்ஜுனன் ஏன் நடுவில் கொஞ்ச காலம் அஞ்ஞாதவாசம் இருந்தார் தெரியுமா? தெலுங்கில் ஹீரோவாக நடிக்கிறீர்களாமே என்று விசாரித்ததால். #Mokkai

59. Happy 60th Birthday to China: Unlike India it has organized corruption, people don’t have freedom to voice the divide between rich & poor.

60. Big Bang Theory is certainly a must-watch; geared for men; with geeks as social outcasts. simple, laugh a minute ritual to unwind. #TV #CBS

61. Question to IR bashers: Ilaiyaraja had written 4/5 books while ARR is yet to write any?

62. How will a TV serial look like if Rajinikanth acted in it? Watch ‘Aaril irunthu Arupathu varai’. #Psenti #Films

63. It’s Always Sunny in Philadelphia is pretty funny, edgy, comedy central-ish. Living without Sun TV is good. Started picking other TV serials

64. All the Indian Grocery stores in New England has variety of books on Hinduism, Krishna, Q&A by ISKCON prominently for a token donation. #God

65. Kaalachuvadu & Uyirmai are better selling (read – more money, cashflow, personnel) but doesn’t respond to e-mails of Subscribers @uyirmmai

66. Have to really appreciate Anyindian & Vaarthai for customer delight; replied for my trivial query over the weekend; resolved it @ivansivan

67. Comcast customer service is great. Patient responses; quick dispatches; solves quirky requests. Nice variety of free OnDemand DVR choices.

68. #Films Superman Returns: Kevin Spacey does justice even to masala chars; For a predictable Rajni like heroic movie, gripping narration.

69. #Films Bheja Fry: Overzealous Milind Soman; always scoffing Sarika; Aam Aadmi idiot hero; Nice premise; Drama like bg & boring developments.

70. 2 new movies recently released which I am looking forward to watch in DVD: Blind Date (Stanley Tucci) & Disgrace (Malkovich & Coetzee novel)

71. பரிதாபமாக பார்வை விட்டு அனுதாபம் சம்பாதிக்கும் போட்டியில் ‘North Station’ வாயிலில் அமர்ந்திருக்கும் ‘Traveling hungry’ போர்டுகாரர் வெல்வார்.

72. 50+ குடுமிகாரர் முக்கிய சாலையின் நடுவில் உற்சாகமாக ஸ்கேட்டிங். அவரின் ஐ-பாடில் ‘இமயம்’ சிவாஜி ‘திருமாலின் திருமார்பில்’ டூயட் பாடியிருபபார்.

73. Writers Nanjil Nadan & S Ramakrishnan have written songs for Suga’s Padithurai; Tamil Film Heroine talks in Tamil! http://bit.ly/2OU8CD

74. Whatever unwritten & hidden in the post is spelled out explicitly via tags. If post is a Cliff Notes, then tags are poems.

75. Started reading Penguin Classic The Love Letters of Abelard and Heloise: http://bit.ly/15tw1p #Romance #Books

76. Tamanna appeared in a single second shot as bride on Shahrukh’s ‘Om Shanthi Om’. Blink after interval & U wud hv missed it. #priorlife

77. What was the first Tamil film to have a scene of a person relieving himself? #Bathrooms #Grossness #Movies

78. was reading this to get motivated to clarify my doubt in Tamil Cinema http://is.gd/3Bn1n

79. @anantha Remembered some Nammavar fight sequences; Nandha ceremony; 7G lecture; but MMKR… thanks!

80. catching up on old DVR; ‘Surviving Suburbia’ is pretty realistic & funny too. Not sure whether women also reciprocate that thought. #TV

81. #Films ‘Welcome to Sajjanpur’: Scary thoughts of Shyam Benegal’s artsy stuff went away. Amrita Rao is 2 chocolatey; matter of fact narrative

82. What is the similarity between IE8 & FF3.5? They both crash when you visit Tamil blogs with their numerous aggregator toolbars, scripts.

83. ‘முதல் வாரத்திலேயே ‘உன்னைப் போல் ஒருவன்’ காலியாக கிடைக்கிறது. கல்லூரி வட்டாரத்தில் மோகன் லால் வசனம் புரியவில்லை’ என்றும் சொன்னார்கள். #UPO

84. 4 girl students frm Panimalar polytechnic missing: http://bit.ly/3MOOKc The women in teens shd hv their right to privacy or it a news item?

85. Arunthathi has a tap & water scene in which the victim slips & hurts himself; Eeram has the same, in which she dies. Where is the original?

86. அந்த ‘அபூர்வ ராகங்கள்’ வழக்கு ரொம்ப பிரசித்தமாச்சே… பாலச்சந்தரின் எந்தக் கதையுமே அவருக்கு சொந்தமில்லையா!? #Films #KB

87. Kancheevaram: Original Story, Screenplay, Movie was written by Suprabharathi Manian; inspired by Priyadarshan: http://bit.ly/3SooxN #Films

88. ‘மச்சான்னு கூப்பிடறதாலே நமீதா உனக்கு கொழுந்தியாளும் இல்லை. உன் கொழுந்தியாள் உன்னை மச்சான்னு கூப்பிடறதாலே அவ நமீதாவும் இல்லை!’ #SMS #Vikatan

89. ‘கமல் தீர்க்கதரிசி. இல்லையென்றால், அவரது குழனதைக்கு ஸ்ருதி என்று அப்போதே பெயர் வைத்திருப்பாரா?’ Literal quote from Gowthami in Vikadan #Film

90. புனைப்பெயரை மனுஷ்யபுத்திரன் என்று வைத்துக்கொண்டால் கவிலக்கியத்துவம். மனுஷய புள்ள என்றால் ப்ளாகத்துவம். ‘ப்’ எங்கே என்றால் சின்னபுள்ளத்தனம்.

91. Kalainjar Karunanidhi’s ‘நீயின்றி நானில்லை’ film title has been changed to ‘பெண் சிங்கம்’. Is it a reference to tagless Kanimozhi? #DMK

92. Actress Tamanna never sees a complete movie or preview of her acted film. She just watches her songs picturization in complete. frm Vikadan

93. ரொம்ப நேரமாக எங்களின் அலுவல் கட்டிடத்தின் மேல் ஹாலிவுட் படம் போல் ஹெலிகாப்டர் அப்படியே நின்று கவனிக்கிறது. வெளியே சென்றதால்தான் தெரிகிறது.

94. Pasanga: Taboo things aren’t watchable by teens like Mid-life crisis of middle-classers in Films. Explores bullying, nepotism, Consanguinity

95. Nadodigal: Cutesy leading ladies; late blooming Sasikumar; open ended real life interpretations without making Cheranish preachments. #Films

96. Arundhathi: Harry Potter met Chandramuki with Vittalacharya strewn in. Except 4 Anouska’s graceless classical dancing, good masla. #Films

97. A broken plastic spoon showed his head inside Complan bottle like a severed human raising its lame hand for help from Sri Lanka.

98. I asked her, ‘Cold! Isn’t it?’. Got reply. ‘It is Friday. Yeh.’ எத்தனை நாளானாலும் இந்த அமெரிக்கன் accentம் வராது. தாட்சணய கேள்விகளும் போகாது

99. அச்சுதனில் இருந்து பிதாச்சுதன் வந்ததா? சூத்தியாவில் இருந்து மதுசூதனுக்குப் போகலாமா? விஷ்ணு 1K நாமமான சுதன்வா டு சுதர்சன் to Shubhanallah!

100. “ஆரஞ்சு நிறம் குறைவாயிருக்கிறது . கால்களை நீருக்குள் அமிழ்த்தியிருக்கும் கொக்குகளை வரைகிறான்.” -நரன்: http://bit.ly/hQJSI #Quotes #TamilBlog

101. Old habits die hard or is it tired hands at keyboard or a longing for Indian cultural heritage? Typed dd/mm/yy in a doc & got befuddled resp

102. குமாரசெல்வா சிறுகதையும் கானகனின் ஊடகம் குறித்த குற்றப்பட்டியல் கட்டுரையும் தவிர பிற எதுவும் இ.வா. காலச்சுவடில் கவனிப்பைக் கோரவில்லை. #Magz

103. What is common between Jeyamohan, A Muttulingam, Manushyaputhiran, Charu Nivethitha speeches in public? All say ‘I don’t read Tamil blogs’.

104. Sruthi: ‘Nothing new to be done in Music; Music itself is couple of 100 years old.’ “Even from AR Rehman I can learn.” http://bit.ly/37p4su

105. People in China eat 5 times because of food abundancy & can be compared to Movies reel abuse: http://bit.ly/biZMZ #Kamal #UPO #Quotes #Video

106. ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் படிக்கத் தெரியுமான்னு @shrutihaasan போட்டு கேட்கலாம்; அல்லது ப்ளேசிக்கு எழுத வருமான்னும் கேக்கலாம். #UPO

107. What will be your keywords if a Twitter client allows you to hide tweets automatically based on their appearance (like spam filters)?

108. ‘ஆண்டவனப் பார்க்கணும்… அவனுக்கு ஊத்தணும்’ (மக்கள் என் பக்கம்) சத்யராஜ் பாடலை எழுதியவர் கபீர்தாஸா? ஆதிசங்கரரா?: http://bit.ly/RkzSi

அடுத்தவரப் பத்தி எழுதணும்னா ட்விட்டு (140க்குள் முடி); உன்னப் பத்தி எழுத (பெத்த) பதிவு என்று வழக்கப்படுத்திக்க ராசா. #Twithuvam

தமிழ் ட்வீட்ஸ் – குறுஞ்செய்தி வாக்கு: சிற்றெழுத்து ஓடை

1. பிச்சைக்காரனின் சிரத்தையையொத்த பகுப்புகள் கொண்ட தமிழ் பேப்பரில் ‘நல்ல எழுத்து’ ( http://www.tamilpaper.net/?cat=23 ) பகுதி அ.மு/மி பவ.

2. பிரிட்டிஷ் ம்யூசியத்துக்கு போன 10 வயசுக்காரி டகடகவென்று எல்லா ஓவியத்தையும் ட்ரேஸ் செஞ்ச மாதிரி ஜெயாவில் #Kamal http://bit.ly/clUIo0

3. பல் பிடுங்கப்பட்ட பாம்புகள் பரிதாபமாய் பல்லிளிக்கும்போது ‘They deserve it’ தோன்றினால் பாவமா?

4. ஏழு வருசம் முன்பு போட்ட பதிவை இப்படி ட்வீட்டுவது தவறல்ல; அப்படியே மறுபதிவது இமாலய தவறு. தீபாவளி வாழ்த்துக்கள்: wp.me/p3fCv-se

5. டபுள் கா மீட்டா சாப்பிட்டிருக்கீங்களா? தேவாமிர்தம்னு பேசிக்கறாங்களே… அதேதான். இனிய தீபாவளி ஸ்வீட்.

6. அறிவாளி விஷயமறிந்தவள்; புத்திசாலி விஷயத்தை அலசத் தெரிந்தவள்; சாமர்த்தியசாலி புத்திசாலியை வேலைக்கு அமர்த்தத் தெரிந்தவள்.

7. தூரத்தில் +ல் யேசு பிரும்மாண்டமாய் அழைத்தார். நெருங்கினேன். நெடிந்துயர்ந்த கட்டிடங்களுக்கிடையில் கிறிஸ்து காணாமல் போனார்.

8. குரங்கு கையில் பூமாலை; @charunivedita கையில் இலக்கியம்; அமெரிக்கன் கையில் தெர்மோஸ்டாட்; @peyarili கையில் ஒளிப்படம்; தமிழன் கையில் கலாசாரம்

9. இந்தியாவில் இருந்தால் தாத்தா, பாட்டிகளைக் கொல்லலாம்; இங்கே இருப்பது ஒரேயொரு கார்; எத்தனை முறை பழுதடையச் செய்வது? #லீவு

10. மைக் மோகன் என்பார்கள்; கவர்னர் பட்வாரி போல் எங்கும் அட்டெனடன்ஸ் என்பார்கள்; விமர்சக சுப்புடு என்பார்கள்; கர்னாடக வித்வான் சௌம்யா எனலாம்.

11. ‘சரணம்’ ரெண்டு வகைப்படும் என்கிறார் எஸ் பி ஷைலஜா. ஷரணாகதி – கிருத்திகாவிடம் சரவண பவன்; ச்சரணம் – ரஜினி கல்யாணத்திற்கு பாமக அழைப்பு.

12. ஆயர்பாடியில் இருந்து ஆய் வந்ததா? ஆயா வந்தாளா?

13. Cold வந்தாலும் கணவன்; ஃப்ளூ வந்தாலும் புருஷன் என்றால், அரை மைல் ஓடிட்டு அரைஞாண் கயிறு லூசாயிடுச்சான்னு பார்க்கிற மாதிரி இல்ல என்கிறாள்.

14. காதலை சொல்லத் தெரியாத 80s வகையறா ‘கல்லறை’ cliche கிடையாதென்பதும் @ppothen ‘அப்பாவின் காதலை’ பழசு என்பதை பார்ப்பதும்தான் தமிழ் சினிமா ரசிகர்

15. திருட்டுக் கதை என்றால் @ppothen சாதாரணமா கோபம் வரும். ஆனா, தெரிஞ்சவங்க சுப்ரமணிய ராஜுவை சுட்டுப் போட்டா பாராட்டுவார் போல. #Naalaiya #TV

16. ‘நாளைய இயக்குநர்’ல் மதனுக்கு Suicide வந்தால் பிடிக்கல; மது, சிகரெட்டுக்கு தடா போடுறார்; திருவிளையாடல் எடுத்தாப் பாராட்டுறார். பரிசில் தரார்

17. கலைஞர் டிவி ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளரை ‘சொந்தில்நாதன்’ ஆக்கியதன் பிண்ணனி என்ன? அஞ்சலிப் பாப்பாவையும் காணோமே.

18. நோட் பண்ணதையெல்லாம் நோட் செஞ்சது பதிவர் காலம். இதெல்லாம் நோட் பண்ணணுமா நெனக்கிறது, இந்தக் காலம்.

19. http://www.keetru.com போய் @tamilpaper வருவது தமிழிணையத்தின் சீரழிவு என்று எத்தனை கட்டுரை வந்திருக்கிறது? #Tamils

20. NBCஇன் Olympics அப்புறம் தூர்தர்ஷனின் Commonwealth பார்த்தால், ஷெனாய் வாசிப்புடன் கமலா காமேஷ் கவர்ச்சி டான்ஸ் உணர்ச்சி பொங்குகிறது. #DD

21. So many blue jeans at #necc14 it looks like uniform. Shirts differentiate coders.

22. Saw ‘Buddha‘ in PBS: Very poetic adaptation; imaginative cartoons to symbolize mystical & religious portions; profound quotes in rusticness

23. saw ‘Diary of a Wimpy Kid’: My daughter observed, ‘The book was much better; I had imagined the main character to be different!’ I liked it.

24. What is your strategy? Being a specialist niche player or jack of all arts? In career? In blogs? What works for your company?

25. I used to think FourMediumOneLarge as something to do with whiskey. It seems layout spec for ribbons in sharepoint. #scale

26. Some predictions (rather currently in prod) 1. Mouse is the new remote. 2. JavaScript is the new C language. 3. SharePoint is the new Excel.

27. சிவாஜி படமே பார்க்காத சபதத்தினால், ‘சுமதி என் சுந்தரி’ டைட்டிலில் ஏன் half-clad women from men’s magazines ஏன் நிறைந்திருக்கிறார்கள்?

28. ஹஜ்ஜுக்கும் புத்தாண்டு டைம்ஸ் சதுக்கத்திற்கும் என்ன வித்தியாசம்? சவுதி செல்வதற்கு சென்னை காசு கொடுக்கும். டைம்ஸில் குண்டு வெடிக்கும்.

29. Doordarshan பொதிகையில் ‘வாலிப வாலி’: என்னவாக இருந்தாலும் ‘மலரும் நினைவு’களை அடிச்சுக்க எதுவுமேயில்ல… காமராஜ், கல்கி, ராஜாஜி, அம்மா சென்டி

30. மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’: என்னதான் ஊர்க்குருவி (& சம் காக்காஸ் ஆல்ஸோ) சுஜாதாவாக நினைத்தாலும், கிட்ட நெருங்க இப்போதைக்கு எவருமே லேதண்டி

31. கற்றது தமிழ்: ‘நான் கடவுள்’ முன்னோடி; ஜெயமோகன் வசனத்தை விட தமிழ் எம்.ஏ ஷார்ப். Flow இருக்கிறது; நாயகருக்காக ‘ஐயோ… பாவம்’ கூட வருகிறது.

32. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு: வெளியாகியபோது வெகுவாக ரசித்த படங்களை இப்போது பார்த்தால், காலப்போக்கும் விமர்சனவலை-மனமும் ரசிக்கவைக்கவில்லை.

33. ‘பார்த்திபன் கனவு’ படம்: செம திக் கதை; கருப்பு சரோஜா தேவி; காரண காரியம் முழுமையாக சொல்லாத திடுக் திருப்பங்கள். குழப்ஸ்.

34. சாமர்த்தியம் என்பது இந்தியராய் பிறந்த எவருக்கும் பாடமாய் அனுபவிப்பது; அவ்வாறு கற்றதை சுயநல பொது பயன்பாடுக்கு மாற்றுவது மேற்கத்திய நாகரிகம்

35. ராசா எத்தனை ராஜா! ஆண்டிமுத்து ராஜாவா? மன்மத ராசாவா? ஸ்பெக்டரம் மாபியாவா? தலித்தியத்தவரா? நீலகிரி பிரபுவா? எப்பவுமே அவரு ராசாவா? #Raja #Rasa

36. Wanted: டாஸ்மாக் நிவேதிதாவும் நீமன் மோகனும் க்ளோபஸ் புத்திரரும் போலோகிருஷ்ணனும் நிறைந்த தற்கால தமிழ் இலக்கியம் வளர வால் மார்ட்கள் தேவை.

37. The perfume from the lady standing in front of me at the Dunkin Donuts is more pleasant, refreshing & strong than the Coffee itself.

38. ஆண்டியார், அல்லி, அரசு, பிரார்த்தனை க்ளப், பராசக்தி என்று பதில் கேட்டால் Monopoly. ‘போலி… போலி’ என்று போலினால் இணையக்காலி. #வார்மிண்ட்

39. Veblen Good என்றால் பூணூல் என்பார் வீரமணி பார்ட்டி. ஐ-பாட் என்பர் சீன அடியார். வெப்ளென் வேண்டாம், வாழை போதும் என்பது 7ஆம் உலகம்.

40. சாப்பிடும்போது கொல்லைக்குப் போனதைப் பற்றி பேசினால் திட்டு விழும். பாத்ரூமில் Food mag படித்தால் பீயை உண்ணத் தோன்றுமா?

41. ஈ ஓட்டும் குறிப்பு: அமெரிக்கக் கொசுக்களை ரெண்டு கையால் தட்டிக் கொல்வதை விட ஒரே கையால் அபகரிப்பது எளிது.

42. தப்புத் தப்பாக செய்தியைத் திரிப்பது பெரிய தவறா? தப்பும் தவறுமாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றுவது தவறா?? செய்தியே சொல்லாமல் விடுவது?

43. கலைஞர் டிவிக்கு மொழிபெயர்ப்பவருக்கு இரண்டு மொழிகள் தெரியாது. 1. இந்தி; 2. ஆங்கிலம். எனினும், தமிழில் தட்டச்சுவதால் வேலை கிடைச்சுடுச்சு.

44. டேட் என்றால் நாள்பட பொருள். நாள்போகப் போக முன்னேற்றம். டேட் போடாவிட்டால் பால் கெட்டுப் போகுமே…

45. பாத்ரூமிற்கும் கர்னாடக கச்சேரி அரங்கிற்கும் ஆறு ஒற்றுமை இருக்கு… தெரியுமா?

46. Who in your life demonstrates living to the full (not living recklessly) and what other characteristics do they display?

47. எழுத்தாளனுக்கும் பறக்காவெட்டிக்கும் வித்தியாசம்? 1. ரசிகர்: http://bit.ly/9BBurw 2. கீபோர்ட்நடுங்கி: http://bit.ly/aAec80

48. Oru என்பதில் இருந்து Our பிறந்தது. ‘நாம் அனைவரும் ஒன்று’ என்பதன் குறியீடு. அதை ‘நமக்கு ஒருவர்’ என்று திரிப்பது தவறு. #குக #கால்வெட்டுவல்

49. சூதாட்டம் @akaasi க்கு பிடிக்காது. ஏன்?

50. Santosh Sivan’s Sivapuram: கொஞ்சம் அன்னியன்; Appleஇன் புது கண்டுபிடிப்பு போல் காவ்யா மாதவன்; மலையாள மேஜிக்; எகிறி குதிக்கும் ஜோர்.

51. அங்காடித் தெருவில் ஜவுளிக்கடைகாரரை வில்லனாகக் காட்டுவது சுந்தர ராமசாமிக்கான குறியீடு; பாத்ரூம் சுத்தம் செய்பவர் சாரு நிவேதிதா எனலாமா?

52. வீட்டு வாசல் புல்லை மான் மேய்ந்தால், லயிந்து அழகு பார்க்கும் மனது, வாத்துக் கூட்டம் கபளீகரிக்க வந்தால் அடித்து துரத்துகிறது.

53. தூரத்தில் நீச்சல் குளம். ‘நீந்துவது ஆணா? பெண்ணா?’ கேள்வி எழுகிறது. எல்லாமே எந்திரன் என்கிறது பைனாகுலர் இல்லாத கண்பார்வை தூரதிருஷ்டம்.

54. பதிவருக்கும் எழுத்தாளருக்கும் வித்தியாசம்? ப்ளாகர் கிண்டலடிப்பார்; எழுத்தர் 1/2 மணி நான் ஸ்டாப் கருத்துரை; அவர் பழகியவர்; இவர் பெரியவர்.

55. எட்டு பேரு; அட்லான்டிக் சிடி; விடிய விடிய அரட்டை; சகஜமான கால் வாறல்; கல்லூரி ரீயுனியன் மாதிரி ஒரு சந்திப்பு. வருசா வருசம் பதிவர் விசிட்டணும்

56. கொன்னா பாவம் தின்னாப் போச்சு பழசு. தின்னா வாசம், (பல்) ஃப்ளாஸினா போச்சு புதுசு.

57. Celbrityக்கும் @charuniveditaக்கும் என்ன வித்தியாசம்? புகழை விமர்சித்தால் பிஆர்ஓ வக்காலத்து; சாருவை விமர்சித்தவருக்கு வக்காலத்து கூட்டம்

58. ‘அவசியம் எனில் மட்டுமே பேசலாம்’ என்றால் அவசியமில்லை எனில் கூட அரட்டையடிக்கலாம் என்னும் அர்த்தம் பொதிந்துள்ளதா?

59. ஜெமோ சொன்னப்புறம்தான் தெளிவாக காதில் விழுகிறது ‘அருந்ததிப் பயலே’; அது வசவு என்பதும் விளக்கியபிறகே புரிகிறது.

60. 10 lists hv @charunivedita @uyirmmai has 13; @writerpara – 59; 163 for @selvaraghavank A top 10 for listing count shd be due

61. முதலியம் -> முதலியார்; பிரம்மச்சரியம் -> பிராமணர்; தோட்ட தரணியம் -> செட்டியார்; தேவரடியாரியம் தேவேந்திராவா தர்மேந்திராவா?

62. அந்தக் காலத்தில் இஸ்லாம் மட்டுமே இருந்துச்சு என்பதற்கான அடையாளமே மதார்ஸாவில் இருந்து திரிந்த மதராசப்பட்டினம் என்பதாம்.

63. Massல் ஒரு எம்மும் புடுங்க முடியாது… அப்படியும் பிடுங்கினாக்க, Ass ஆயிடும்.

64. ‘சத்யா’ திரைப்படத்தில் தன் சாதி என்ன என்பதை கமல் வெளிப்படையாக்குவது ஏன் என்பதிருக்கட்டும்! படத்தில் சத்யமூர்த்தி என்ன #caste ? #Satya

65. இதயம் தொட்ட கதைகள் – தமிழ்ச்செல்வனின் `ஒரு பிரம்பு ஒரு மீசை’: வசனம் கொஞ்சம் செப்பனிடலாம். மத்தபடிக்கு அருமை. #JayaTV #Shorts

66. ஆயிரம் பக்கம் எழுதினால் ரெண்டு மூணு சீன் கூடவா உருப்படாம போயிடும்? ‘ராஸலீலா’ மாதிரி திராபைகளில் கூட முத்துகள் உண்டே.

67. அவர்களுக்கு சொந்தமாகவோ பதிப்பாளரோ எடிட் செய்ய கைவரவில்லை. ஓவர்-ரைட்டிங்கை ஒழுங்கு செய்ய இயக்குநரிடம் சரண். கைமேல் பலன்

68. அந்த லிம்கா விளம்பரத்தைப் பார்த்தால் ‘அங்காடித் தெரு’ துவக்கப் பாடல் பார்த்த துள்ளல் ஒட்டிக் கொள்கிறது. அழகான ஜோடி; ஜில் ரம்மியம்.

69. ஜெயா டிவியில் ‘தினம் ஒரு திவ்ய நாமம்’ தலைப்புப் பாடலில் புடைவைத் தலைப்பை பிடித்து கும்மியடிப்பவர்களின் முழுப் பாட்டு கிடைத்தால் ஷேமம்.

70. ‘ஒரு ஷாட்’ எடுத்த ‘நாளைய இயக்குநர்’ 3ஆம் பரிசு: Either I have high standards of School dramas or that 5 min was Magical Bullshitism.

71. Playback singer S Janaki looks incredibly healthy & young with a even more sweet voice at 72. Belated wishes!

72. Turned on ChannelLive. Now eagerly waiting for a notable event like Jaya or Kalainjar’s death on respective TV’s live coverage stream.

73. பதவியில் இருக்கும் போது போனால், மூன்று நாள் விடுமுறை கிடைக்குமே என்று பிஞ்சிலேயே யோசிச்ச ஆளுங்கதானே

74. காஸ்மிக் தூசி யாராக இருக்கும்?

75. Notable recent books: Naked Science by Charles Wheelan. Undressing the dismal science.

76. The drunkard’s Walk by Leonard Mlodinow. How Randomness rules our lives. #books

77. Everyday Survival. Why smart people do Stupid things by Laurence Gonzales. #books

78. Eating the Dinosaur by Chuck Klosterman. #books

79. Traffic. Why we drive the way we do and what it says about us by Tom Vanderbilt. #books

80. When a lover is on the other end, cell rings like rock music; while it is the wife it rings like coins clanking.

81. The quantum is love directly related to the distance, communication medium among (>n) pyaaris & spouse’s cooking capabilities.

82. நவீன ‘நான் சிகப்பு மனிதன்’ Kanagavel Kaakka: ஜூனியர் ஷங்கர் கவின்பாலா என்றால் சீனியர் சுஜாதா மாதிரி @writerpara

83. Thamizhachi Thangapandiyan was the original Priyamani in Veli Rangarajan’s Ravanan by Ku Alagirisami: http://bit.ly/9ohe4y #Maniratnam

84. நித்யானந்தருக்கு மட்டுமல்ல, வீழ்ச்சியடைந்த எல்லா மனிதர்களின் ஒரே பலவீனம் தன் உடன் இருப்பவரை நம்புவதுதான். – Manushyaputhiran

85. கார்ப்ரேட் சாமியார் & பரஸ்பர முதுகு சொறிதல்: நமக்குப் பிடித்ததையே அவர் சொல்கிறார். அப்படிச் சொல்வதுதான் நமக்குப் பிடித்திருக்கிறது.-Charu

86. Queen Rocks… ‘We will… we will rick you!’ What is a similar timeless uplifting classic in Tamil? #Songs #Music

87. Phil Jackson is the ultimate closer. Knows when to step up, where to speed things, calls key plays, stops momentum with timeouts.Hate him 🙂

88. Reputation matters to not get into foul trouble. That seems to be the difference between ‘traveler’ Gasol & Wallace.

89. Chitra used to be uncomfortable with the not so subtle advances from Singer Mano on Alka, Sahana, Nithyasree in Vijay TV’s Super Singer Jr.

90. மனோ நன்றாக நிர்வகித்தாரா 😦 He was close to a pervert to with his ‘நீங்க நல்லா அழகா இருக்கீங்க’ when a singer has sung well.

91. Difference between winning team and a loser in NBA: When you cannot shoot field goals, drive & get fouled to get free throws- Michael Jordan

92. ஒருவனுக்கு ஒருத்தி என்றால் ஒருவனின்/ஒருத்தியைத்தான் நசுக்க முடியும். It shd be a n…m cardinality association relationship.

93. Unsung heroes list: Rasheed Wallace. Rombavey sung heroes list: Kevin Garnet, Kobe Bryant.

94. Who is sitting beside Leonardo DiCaprio? Dress லட்சணமா இருக்கு

95. Kobe Bryant, Dwight Howard, Lebron James… everybody is getting switched off one by one by Boston Celtics. It is the defense! stupid

96. Lakers shd be called Rebound பிச்சைக்காரன். If only Celtics can rebound and avoid the second chance rather third chance points by LA…

97. Lakers vs Celtics rivalry buildup seems to be epic like India vs Pakistan, Red Sox vs Yankees, Army vs Navy, Nadal vs Federer. #NBA

98. Without referees intervention, NBA will not be interesting. When players have a bad day, umpires make them champs. Lakers made interesting.

99. இன்றைய முடிபுத்துவம்: பரஸ்பர நம்பிக்கையின் பின்னே இருப்பது மக்களின் மனதில் ஆழமாக இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சி. #Quotology

100. i3 – மூன்று முகம்; i5 – மைக்கேல் மதன காமராஜன்; i7 – எல்லாம் இன்ப மயம்; பாக்கி எல்லாம் தசாவதாரம்.

101. i3, i5, i7, dual-core, multi-core – அசந்தா அடிக்கறது மைக்ரோசாஃப்ட் பாலிசி; அசராம அப்க்ரேடறது இன்டெல் ஸ்டரடீஜி.

102. ஓ ரெய்லி போல் சாருவோ வக்கணையான வலைப்பதிவரோ டிவி நிகழ்ச்சியில் சார்பான கருத்து வைத்து வலியுறுத்தி அரட்டை அடித்தால் வித்தியாச ஹிட் ஆகும்

103. மடலில் விடாக்கண்டரை குப்பை வீசலாம். மின்னஞ்சல்காரர் எரிதவகை. வலை ராவல்பிண்டிகளையும் கடக்கலாம். முகத்துக்கு எதிரான மொழிவெள்ளத்தை வெல் இயலா

104. மசாலான்னா ‘மெகாதீரா’. தெலுங்குப் பட டைட்டிலில் பேருக்குக் கூட ஆங்கில இனிஷியல் இல்லியே. எப்பத்தான் நாலெழுத்து கத்துப்பாங்களோ? #Telugu #Films

105. இன்றைய உவமை: ஆயில் கிணறு – வலைப்பதிவு. குத்தகை – செய்தியோடை. இரான் – போலி டோண்டு. BP – வினவு: http://nyti.ms/a4G6C3

106. @ivansivan //தினம் சில வரிகள்// துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்தாச்சு போலிருக்கே. (‘வாழ்க்கை ஒரு வட்டம்’னு இ.த, அன்னிக்கே சொல்லிட்டாரே 😉

107. There are two types of people: one who has their name in ration cards & others who keep their names in two ration cards

108. பாலைவனச்சோலை கடசீல வர வாழ்க்கைக்கான டயலாக் வலைப்பதிவுக்குப் பொருந்துது. திண்ணைகள் மாறலாம்; ஆனால், அஞ்சு பேர் உட்கார்ந்திருப்பாங்க.

Benny Dayal – A Performer

பென்னி தயால் பாடி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ரவியைப் போல் மெச்சியிருப்பீர்கள். அவர் பாடி நீங்கள் பார்த்ததுண்டா?

மெகா டிவி புண்ணியத்தில் ‘சங்கர்ஷ் 2010’ நிகழ்ச்சியில் பார்த்தேன். கொண்டாட்டமாக ஆடினார்; உற்சாகமாக ‘ஊலலா’ ரீங்காரித்தார்; இளமைத் துள்ளலுக்கு definition கேட்டால் உத்தரவாதமாக பென்னியை சொல்லலாம்.

Infectious enthusiasm என்பார்கள். ‘வேதம் புதிது’ அமலாவின் ஜாக்கெட்டுக்குள் நுழைந்த மீன் என்பேன். அமலாவின் நளினம்; மீனின் லாவகம் – இரண்டும் குழையும் குரலுடன்,மேடையில் நடனமாடியது.

கர்னாடக சங்கீதம் பதினைந்து வருடம்; தாம்பரம் கிறிஸ்டியன் கல்லூரி வாசம்; அபு தாபி வளர்ப்பு; இவையெல்லாம் போதாதென்று பரதநாட்டியமும் பயின்றுவிட்டார்.

ஹிந்தியிலும் கொஞ்சுகிறார். சின்னச் சின்ன ஆசையில் துவங்கி, ‘ஒமானப் பெண்’ண்ணிற்கு சிரமமில்லாமல் பாய்கிறார். சகாக்களை சுவாரசியமாக அறிமுகம் செய்கிறார்.

ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன் எல்லாம் ஸோ நைன்ட்டீஸ்… பென்னி இஸ் இன்!

அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation

திரைப்படத்தை நாம் என்றுமே, திரைப்படமாக மட்டும் பார்ப்பதில்லை. எழுதவேண்டிய ஆக்கம் என்றால், மூர்மார்க்கெட்டில் இருந்து கோயம்பேடுக்கு ரோடு போடுவோம். உள்நோக்கம், குறியீடு, படைப்பு அரசியல் என்று விரிய வைக்கலாம்.

அப்படி சமகோட்டுப் பார்வையில் ஜெயமோகன் வசனம் எழுதிய ‘அங்காடி தெரு‘ சினிமாவிற்கான சித்திரம் இது.

உண்மையில் இதைத்தான் சொல்ல வந்தாரோ, இவரைத்தான் குறிப்பிடுகிறாரோ, இந்த சண்டையைத்தான் இவ்வாறு முடிச்சுப் போடுகிறாரோ என்று எண்ண வைக்கும் கதாபாத்திர ஒப்பீட்டு பத்து.

  1. சேர்மக் கனியாக வரும் அஞ்சலி: ஜெயமோகன்
  2. (நாயகன்) ஜோதிலிங்கம்: தமிழ் சினிமாவுலகம்
  3. ஜவுளிக் கடை முதலாளி அண்ணாச்சி: சுந்தர ராமசாமி
  4. ஊழியர்களின் கண்காணிப்பாளர் – கருங்காலி: ‘காலச்சுவடு’ கண்ணன்
  5. ஹீரோவின் தோழர் மாரிமுத்து: வசந்தகுமார்
  6. நகராட்சி கழிவறையை உபயோகித்து சம்பாதிக்கும் வழிப்போகன்: சாரு நிவேதிதா
  7. பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானவர்: சுஜாதா
  8. பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவர்: ‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன்
  9. மகளை ஆஸ்பத்திரியில் அம்போவென்று விட்டுச்செல்லும் தந்தை: ஜாலியாக லிங்க் போடும் இடத்தில், சீரியஸாக நிஜ வாழ்க்கைக்கு தொடுப்புக் கொடுக்கலாமா!
  10. நடிகை சினேகா: வேற யாருங்க… இதில் கூடவா குறி வைக்க முடியும்?

உதவிய பதிவுகள்:

அங்காடித் தெரு, பார்ப்பனீயம், சாதி, பெண்ணியம் – திருமலை ராஜன்

தொடர்புள்ள செய்தி:

:: By NILANJANA S. ROY (NYT) – In India, thousands of women are participating in movements against the abuse of women in public spaces.
முந்தைய இடுகை :: ஜாதி: தேவையா? வேண்டாமா?

முதலில் அங்காடித் தெரு சினிமாவில் நீங்கள் வைத்திருந்த பிராமணப் பெண்ணின் பாத்திரம் உங்கள் கதைப் படி, கதையின் வலுவிற்குத் தேவையான ஒரு பாத்திரம் என்பதையும் அந்தப் பெண்மணியின் மூலமாகவே நீங்கள் மாத விலக்கைத் தீட்டாகவும் அதே நேரத்தில் புனிதமாகவும் கருதும் இந்து மதத்தின் இரு வேறு எல்லைகளை விளக்குவதற்கும் அதன் மூலம் சேர்மக்கனி பெறும் மன தைரியத்தை விளக்குவதற்கும் அந்தப் பாத்திரத்தை நீங்கள் படைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நிச்சயம் உங்களது பாத்திரப் படைப்பிற்கு உள்நோக்கம் கற்பிக்கவும் மாட்டேன். அதன் நோக்கம் பற்றி நன்கு அறிந்தவன். மேலும் அந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணப் பெண்ணைக் காட்டினால் மட்டுமே அந்தக் காட்சிக்கு யதார்த்தமும், நிஜத்தன்மையும் கிட்டும் என்பதற்காக நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

நிச்சயமாக நீங்கள் பிராமணர்களை இழிவு செய்யும் நோக்கத்தில் அந்தப் பாத்திரத்தை வைக்கவில்லை என்பதை நன்கு அறிவேன். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஒரு காட்சிக்கு அதன் களனும், அந்தப் பாத்திரங்களின் நம்பகத்தன்மையும், களனின் யதார்த்தமும், ஏன் பாத்திரங்கள் கையாளும் மொழியும் கூட முக்கியமானவை என்பதை மலையாளப் படங்களையும், பிற முக்கியமான உலகப் படங்களையும் தொடர்ந்து பார்ப்பவன் என்ற முறையில் இந்தக் காட்சிக்கு நீங்கள் பயன் படுத்தியிருக்கும் பாத்திரத்தின் ஜாதியின் முக்கியத்துவம் குறித்தும் நான் வேறு எவரையும் விட மிக நன்றாகவே அறிவேன்.

நம்பூதிரிகளைக் காட்டாமல் ஒரு பரிணயம் எடுக்கவியலாது. மீனவர்களைக் காட்டாமல் ஒரு செம்மீன் சாத்தியமேயில்லை. கம்னியுஸ்டுகளைக் காட்டாமல் ஒரு அரபிக் கதாவை எடுத்திருக்க முடியாது. நாயர்களைச் சொல்லாமல் ஈழவர்களைச் சொல்லாமல் பெரும்பாலான மலையாளப் படங்களை எடுத்திருக்கவே முடியாது. முஸ்லீம்களைச் சொல்லாமல் ஒரு மிழிகள் சாட்சி எடுத்திருக்க முடியாது. கிறிஸ்துவர்களைக் காண்பிக்காமல் ஒரு அச்சன் உறங்காத வீட்டையோ, ஒரு சின்சையோ தொட்டிருக்கக் கூட முடியாது.

ஆகவே ஒரு படைப்பில் அது சினிமாவாக இருந்தாலும் சரி, நாவலாக இருந்தாலும் சரி அந்தக் கதையில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அதைச் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச் சொல்லாமல் மழுப்பினால் அது மணிரத்தினத்தின“இருவர்” சினிமா போல ஒரு வெளிறிப் போன ஒரு அபத்தமான படைப்பாகவே போய் முடியும். அந்தப் படைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாகி அந்தப் படைப்பே கேலிக்குரியதாகி விடும். ஆகவே ஒரு படத்திலோ ஒரு நாவலிலோ ஒரு ஜாதியோ, ஒரு கட்சியோ, ஒரு இனமோ, ஒரு மதமோ சொல்ல வேண்டிய தேவை அந்தக் கதைக்கு இருப்பின் அதைத் தயங்காமல் சொன்னால் மட்டுமே ஒரு நல்ல படைப்பு உருவாகும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் ஆட்சேபணையும் கிடையாது.

அதே அடிப்படையில் எனக்கும் அங்காடித் தெரு படத்தில் நீங்கள் படைத்திருக்கும் பாத்திரங்களில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்பதை நான் நிச்சயமாகத் தயங்காமல் சொல்வேன். அப்படி எவ்வித சந்தேகமும் இருந்திருப்பின் மிக நீண்ட இரு பெரும் பதிவுகளை அந்தப் படம் குறித்து

http://solvanam.com/?p=7588
http://solvanam.com/?p=7575

நான் சொல்வனத்தில் எழுதியே இருக்க மாட்டேன்.

இரண்டாவதாக நான் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் என்னை நிறுத்திக் கொண்டு இங்கே எழுதவில்லை. முதலில் அப்படி நிறுத்திக் கொள்ளும் தகுதி எனக்குக் கிடையாது. அப்படியே நான் நிறுத்திக் கொள்ள முயன்றாலும் அதே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்னைக் கல்லால் அடித்து இறக்கி விட்டு விடுவார்கள். ஆகவே அந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டியதில்லை. நான் இங்கு என் சார்பாக மட்டுமே என் அனுபவத்தின் அடிப்படையில் விளைந்த சில கருத்துக்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேனே அன்றி நான் யாரையும் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் பேசவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.

வேறு எந்த ஜாதிக்கு வேண்டுமானாலும் ஒரு ஒற்றுமையான பிரதிநிதி இருந்து விட முடியும் ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அந்த ஒற்றுமை உணர்வு சாத்தியமே இல்லை என்பது என் தீர்மானமான எண்ணம். அங்கு ஒரே ஒருவர் மட்டும் மிச்சம் இருந்தால் கூட நிச்சயம் இரண்டு விதமான கருத்து அந்த ஒருவரிடமிருந்தே கிளம்பும் அவ்வளவு ஒற்றுமையுள்ள சமூகம் அது. ஆகவே நான் எனக்காக மட்டுமே இங்கு பேசுகிறேன் என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன்.

ஆனால் ஒருவர் ஒரு குழுவிற்காக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாமியத் தீவீரவாதத்தால் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப் படும் எந்தவொரு ஹிந்துவும் ஹிந்துக்கள் சார்பாகப் பேசினால் அதை நாம் தவறாக கருத முடியாது என்பதே என் எண்ணம்.

இன்று தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே பண உதவி அரசாங்கத்தால் செய்யப் பட்டு வருகிறது. அதை விடக் கீழான ஏழ்மையில் இருக்கும் இந்து மாணவர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப் படுகிறது. வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது ஆனால் அதே வேளையில் கடும் ஏழ்மைச் சூழலில் வாழும் இந்து மாணவனுக்கு அது கிடையாது என்னும் பொழுது அந்த ஒரு லட்ச ரூபாய்க்காக அந்த ஏழை இந்து மாணவன் மதம் மாற வாய்ப்புகள் உண்டு.

ஆக அரசாங்கமே மதமாறத்தை ஊக்குவிக்கிறது என்ற அநியாயத்தைக் கருதி ஒரு இந்துவாக நான் குரல் கொடுத்தால் நிச்சயமாக அதை ஒரு குழுவின் பிரதிநிதியாக என்னைக் கருதிக் கொள்கிறேன் என்று நீங்கள் குறை சொல்ல மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிச் சொன்னால் அது தவறு. ஆக ஒரு சில இடங்களில் பிரதிநித்த்துவக் குரல்கள் ஒலிப்பதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்

இந்த இரண்டு சுய விளக்கங்களுடன் என் கருத்துக்களை வைக்கிறேன்.

முதலில் தமிழ் சினிமக்களில் பிராமண ஜாதி பாத்திரங்கள் இழிவாகக் காண்பிக்கப் படுவது குறித்து சில கருத்துக்கள்.

தமிழ் சினிமா, இலக்கிய, கலைச் சூழலில் இன்று நீங்கள் எந்த ஜாதியையும், எந்த கட்சியையும் குறை கூறும் வகையில் சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு பிராமணர்கள் மட்டுமே. பிராமணர்களை சினிமாக்களில் இழிவாகவும், கேலிக்குரியவர்களாகவும், ஆபாசமாகவும் காண்பிக்கப் படுவது எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் பல வருடங்களகாகத் தமிழ் நாட்டில் தொடர்ந்து வருகிறது. இதை ஆரம்பித்து வைத்தவர்களே பிராமண சினிமாக்காரர்கள் தான் என்பதையும் சொல்ல வேண்டும்.

சூர்யா போன்ற இயக்குனர்கள் பிராமணப் பெண்களைக் காட்டும் விதம் போல் வேறு எந்த விதப் பெண்களையும் பெயர் சொல்லிக் காண்பித்து விட முடியாது. சினிமாக்களில் மட்டும் அல்ல பத்திரிகைகள், இணைய தளங்கள், ப்ளாகுகள் ஆகிய இடங்களிலும் கூட இந்த ஆபாசம் தொடர்கிறது. அதற்கு எந்த விதமான நியாயத்தையும் சொல்லி விட முடியாது. ஒரே காரணம் அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். எதிர்த்துப் பேச விருப்பம் இல்லாதவர்கள் அல்லது அதற்கான ஒற்றுமை இல்லாதவர்கள்.

ஏற்கனவே தமிழக அரசியலில் அவர்கள் கொடுமையானவர்களாகவும் ஆதிக்க ஜாதியினர்களாகவும் பெரும் வில்லன்களாகச் சித்தரிக்கப் பட்டவர்கள். ஆகவே அவர்களை எப்படி சித்தரித்தாலும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க்க மாட்டார்கள், அப்படியே ஒரு சிலர் வந்தாலும் அவர்களை அடித்து விரட்டி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே இவ்வித சித்தரிப்புக்களுக்குக் காரணம். இதையே நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சொல்லியிருந்திருப்பேன்.

ஒரு ஜாதியினரை ஒரு கதையின் நம்பகத்தன்மை கருதி காண்பிக்கக் கூடாதா என்றால் அதற்குப் எனது பதில் தாராளமாக காண்பிக்கலாம் காண்பிக்க வேண்டும் என்பதே. ஆனால் தமிழ் சினிமாக்களில் சமீப காலமாக அந்த வித யதார்த்த நோக்கம் கருதி பிராமணர்கள் காண்பிக்கப் படுவதில்லை. அவர்களது உடை, தோற்றம், மொழி ஆகியவற்றைக் கேலி செய்யும் நோக்கிலும் பெண்களை விரக் தாபத்தில் அலையும் பெண்களாகச் சித்தரிக்கும் நோக்கிலும் மட்டுமே அந்த ஜாதியினர் காண்பிக்கப் படுகிறார்கள் என்பதைத் தமிழ் படங்களைத் தொடர்ந்து பார்க்கும் எவரும் அறிவர்.

இதனால் உனக்கு என்ன? நீ ஏன் அவர்களது பிரதிநிதியாக வருகிறாய் ? என்று நீங்கள் கேட்க்கலாம்.

நான் யாருடைய பிரதிநிதியாகவும் இங்கு வரவில்லை. நான் என்னுடைய பிரதிநிதியாக மட்டுமே இங்கு பேசுகிறேன்.

ஒரு பிராமணப் பெண்ணை தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் விரக தாபம் மிக்க பெண்களாக சித்தரிப்பதன் மூலம் அந்த ஜாதிப் பெண்கள் தெருவில் வரும் பொழுது அவர்களைக் காணும் எந்தவொரு விடலைப் பையன்கள் மனதிலும், எந்தவொரு பொறுக்கியின் மனதிலும், எந்தவொரு லும்பன்களின் மனதிலும் அவர்களை கேலிப் பொருளாக எளிதில் வக்கிரமாகக் கைக்கொள்ளும் மனோநிலையே ஏற்படும். இதில் படிதவர்களுக்கும் தெருவில் சுற்றும் ரவுடிகளுக்கும் கூட வித்தியாசம் இல்லை.

அதனால்தான் அமெரிக்காவில் பி எச் டி செய்யும் பொறுக்கிகள் கூட இணையத்தில் பாட மறுக்கும் பாப்ப்பாத்திகள் என்று எளிதாக எழுதி விட்டு முற்போக்குப் பட்டமும் வாங்கிக் கொண்டு போய் விட முடிகிறது.

சினிமாக்களில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெருமுனை தி க, தி மு க, தனித் தமிழ் கூட்டங்களிலும் இதே விதமான வக்கிரப் பிரச்சாரமே தமிழ் நாட்டில் கடந்த அறுபது வருடங்களாக அவிழ்ந்த்து விடப் பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளும் பொழுது பிராமணப் பெண்களும் ஆண்களும் தெருவில் செல்லும் பொழுது ஏற்படுத்தப் படும் அவமானகரமான செயல்பாடுகளுக்கு இந்த விதமான சினிமாக்களே பொறுப்பாகின்றன. இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தமிழ் இணைய ப்ளாகுகளையும் அதில் வெளியிடப் படும் பின்னூட்டங்களையும் ஒரு நாள் உலாவிப் பார்த்தாலே புரிந்து விடும்.

பிராமணப் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கூட கடுமையான கேலிக்கும் தாக்குதலும் அடிக்கடி உள்ளாகின்றனர். ஆவணி அவிட்டம் என்ற பிராமணர்களின் பூணூல் அணியும் சடங்கு முடிந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் தாக்கப் படுவதும் ஆபாசமாகக் கிண்டல் செய்யப் படுவதும் இன்றும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் நடை பெறுகின்ற ஒரு காட்சியே. ஒரு முஸ்லீம் பெண் பர்தா அணிந்து வரும் பொழுது செய்யப் படாத ஒரு கிண்டல், ஒரு முஸ்லீம் குல்லா போட்டு வரும் பொழுது, மீசையை மழித்து விட்டுத் தாடி மட்டும் வைத்துக் கொண்டு செல்லும் பொழுது செய்யப் படாத ஒரு கேலி, ஒரு சர்தார் தாடி வைத்து, டர்பன் வைத்துக் கொண்டு போகும் பொழுது செய்யப் படாத அவமானம், ஒரு பாதிரியார் பாவாடை அணிந்து கொண்டு போகும் பொழுது செய்யப் படாத ஒரு ஏளனம், ஒரு பிராமணப் பெண் மடிசார் கட்டிக் கொண்டு போகும் பொழுதும், ஒரு பிராமணப் புரோகிதர் குடுமி வைத்துக் கொண்டு செல்லும் பொழுதும், ஒரு பிராமணர் பூணூல் அணிந்து கொண்டு போகும் பொழுது மட்டுமே செய்யப் படுவதன் காரணம் என்ன? தமிழ் நாட்டின் இன வெறுப்பு அரசியல் மற்றும் ஆபாச சினிமாக்கள் இரண்டுமே காரணம் என்று நான் சொல்கிறேன்.

இதை நீ ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் என் மனைவியோ, அம்மாவோ, அப்பாவோ, மகளோ செல்லப் படும் பொழுதும் இதே அவமானத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதினால் சுயநலம் கருதி நான் இவற்றைக் கடுமையாக எதிர்க்கிறேன். கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

இதனால் பாதிக்கப் படாத இந்த நிலைகளையெல்லாம் அறிய நேராத நீங்களோ வேறு எவருமோ இதையெல்லாம் வெற்றுப் புலம்பல் என்று கருதி மிக எளிதாக இடது கையால் ஒதுக்கி விட்டுப் போய் விடலாம் அல்லது ஒரு குழுவின் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொண்டு அநாவசியமாகப் புலம்புகிறான் என்று மிக எளிதாக ஒதுக்கி விடலாம். உண்மை அதுவல்ல இன்றும் இவை போன்ற அவமானத் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதற்குப் பெரும் அளவில் நம் அரசியல் கட்சிகளும், ஆதிக்க ஜாதியினரின் பழியைப் பிறரிடம் தள்ளி விடும் போக்கும், சினிமாக்களுமே காரணம் என்று நான் கருதுகிறேன். அந்தக் காரணங்களினால் நான் சொந்த வாழ்வில் நானும் என் குடும்பத்தாரும் பாதிக்கப் படும் பொழுதும் அவ்வாறு பாதிக்கப் படும் சாத்தியம் இருக்கும் பொழுதும் அதற்கான காரணங்களை ஒது தனிப்பட்ட ஒரு அநாதயான குரலாகவேனும் ஒரு சிறிய பலவீனமான எதிர்ப்பையாவது பதிய முயல்கிறேன்.

இப்படி சினிமாக்களில் பிராமணர்களை அவமானப் படுத்தும் போக்குகளை ஒரு ஞாநியோ, ஒரு தி ஹிந்து ராமோ ஒரு கமலஹாசனோ கேள்வி கேட்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் சுய அடையாளங்களை மறைப்பதற்கே அவர்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள்.

மேலும் ஒரு கமலஹாசனின் குடும்பப் பெண்களோ, ஒரு பாலச்சந்தரின் குடும்பப் பெண்களோ டவுண் பஸ்ஸில், தாம்பரம் பீச் ட்ரெயினில் செல்பவர்கள் அல்லர், ரேஷன் அரிசிக்காக க்யூவில் நிற்கும் பிராமணர்கள் அல்லர், தனியார் வேலைக்குச் செல்பவர்கள் அல்லர். ஆகவே அவர்களுக்கு இது குறித்து எவ்விதக் கவலையும் கிடையாது, மாறாக ஒரு ஜெயமோகனை தலித்துக்களை அவமானப் படுத்தி விட்டார் என்று சொன்னால் அவர்களுக்கு முற்போக்கு பட்டம் கிட்டும் அவர்களின் ஜாதி அடையாளத்தை மறைக்க உதவும் அதனால் அதை வேகமாகச் செய்வார்கள்.

ஆகவே பாதிக்கப் படுபவர்கள் மட்டுமே இது குறித்து ஏதேனும் சொல்ல முடியும். நான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டவன். சிறு வயதில் நான் அனுபவதித்த ஒரு கொடூரமான தாக்குதலின் பயங்கரத்தில் இருந்து இன்றும் மீள முடியாத கடுமையான கசப்பில் உழல்பவன் என்ற முறையில் இவை போன்ற சினிமாக்களை ஒரு தனி மனிதனாக கண்டித்தால் அது தவறு ஏதும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.

சினிமாவில் பிராமணப் பெண் அலைவதாகக் கவர்ச்சி மதிப்பு கருதி மட்டும் காண்பிக்கப் படும் பொழுது அதைப் பார்க்கும் ரோட்டில் அலையும் ரவுடிக்கு அவன் காணும் பிராமணப் பெண்களின் இடுப்பைக் கிள்ளச் சொல்லும் தைரியத்தை அளிக்கிறது. சினிமாவில் குடுமி வைத்த ஒரு புரோகிதர் இழிவு செய்யப் படும் பொழுது ரோட்டில் அதே போலச் செய்யும் ஒரு புரோகிதர் அசிங்கமாக ஏசப் படுகிறார் சமயங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகிறார். இவையெல்லாம் நடக்கின்றன, நானே கண்டிருக்கிறேன். உங்கள் சூழலில் நடக்கவில்லை என்பதினால் இப்படி நடப்பதேயில்லை என்று சொல்லி விடாதீர்கள்.

ஏன் தமிழ் நாட்டில் தலித்துக்கள் அவமானப் படுத்தப் படுவதில்லையா, கொடுமைக்குள்ளாவதில்லையா நீ அவமானப் பட்டால் என்ன உன் முன்னோர் செய்த பாவத்திற்கு நீ கொடுக்கும் விலை இது என்பது அடுத்த பதிலாக வரும். நிச்சயமாக ஒடு தலித் படும் வேதனைக்கும் அவமானத்திற்கும் வேறு எந்த அவமானமும் ஈடு இணையாகாது. ஆனால் அவர்களை சினிமாவில் அப்படிச் சித்தரிக்க யாரும் துணிவதில்லை.

கட்சி மேடைகளில் யாரும் பேசுவதில்லை. அவர்கள் படும் அவமானம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் அல்லாத பிற ஜாதியினரால் உண்டாக்கப் படுவது மட்டுமேயன்றி சினிமாக்கள் காரணமாக இருப்பதில்லை.

எனக்கு ஜெயமோகனைத் தெரியும், ஒரு சினிமாவிலோ ஒரு படைப்பிலோ தேவை கருதி ஒரு ஜாதியோ ஒரு இனமோ, ஒரு மதமோ ஒரு கட்சியோ சித்தரிக்கப் பட வேண்டுமானால் அதன் அவசியம் குறித்து நன்கு தெரியும். ஆகவே அங்காடித் தெருவில் நீங்கள் எந்த வித உள்நோக்கமும் இன்றி அந்தக் கதையின் நம்பகத்தன்மைக்காகவும், அதன் நிஜத்தன்மைக்காகவும் மட்டுமே அந்தக் காட்சியை வைத்திருக்கிறீர்கள் என்பதும் நன்கு தெரியும்.

ஆனால் உங்களை அறியாத உங்கள் எழுத்துக்களைப் படித்தறியாத, உங்கள் நோக்கங்களை அறிந்திராத, தமிழ் சினிமாவில் வழக்கமாக பிராமணர்கள் சித்தரிக்கப் படுவதைக் கண்டு வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்ட அதனால் பாதிக்கப் பட்ட ஒரு சராசரி பிராமணப் பெண்ணோ ஆணோ, அப்படிச் செய்யும் சினிமாக்காரர்களையும் உங்களையும், வசந்த பாலனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவே செய்வார்கள். அது புரியாமல் உங்களைப் பற்றி அறியாமல் செய்யும் ஒரு செயலாகவே நான் கருதுவேன்.

அடுத்து அடையாளம் குறித்து. எனக்கு அடையாளங்கள் ஏதும் கிடையாது. எனக்கு அடையாளங்களின் அவசியமும் தேவையும் கிடையாது. எந்த பிராமணர்களிடத்தும் போய் எதற்காகவும் கெஞ்சி நின்றதும் கிடையாது. ஜாதி என்பது உறவுகளைப் பேணவும் உணவு, சடங்குகள் போன்ற ஒரு சில கலாச்சார அடையாளங்களை தொடர்வதற்காகவும், ஒருவருக்கு ஒருவர் தேவைப் பட்டால் கஷ்டப் படுவதற்கு உதவுவதற்காகவும் வேண்டுமானால் ஜாதிகள் தேவைப் படுமே ஒழிய அவற்றை மீறி அதன் தேவைகள் ஏதும் இல்லை என்ற கொள்கைகள் உடையவன்.

மேலும் ஒருவர் எந்த ஜாதியில் பிறந்தாலும் பிறப்பின் அடிப்படையில் அவர்கள் யாருக்கும் உயர்வானவர்களோ தாழ்வானவர்களோ கிடையாது என்ற நம்பிக்கையும் உடையவன். ஆனாலும் நான் பிறந்த குழுவின் அடிப்படையில் என் மீது நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அடையளங்கள் திணிக்கப் படுகின்றன. அதற்கு நான் பொறுப்பாக முடியாது, நீ இந்த ஜாதி ஆகவே இப்படித்தான் நடந்து கொள்வாய் என்ற தெளிவான முன் தீர்மானங்கள் கொண்டே இன்று தமிழ் நாட்டில் எவரும் அணுகப் படுகிறார்கள்.

ஆகவே என் மீது திணிக்கப் படும் ஜாதி சார்ந்த அடையாளங்களுக்கு நான் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஜாதியின் அடையாளமாக நான் இதைச் சொல்லாமல் தனிப்பட்ட அளவில் பாதிக்கப் பட்ட பாதிக்கப் படும் வாய்ப்புள்ளவன் என்ற அளவில் மட்டுமே நான் இதை அணுகுகிறேன் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

அங்காடித் தெருவில் அந்த பிராமணர் பாத்திரம் குறித்தும் பக்தியுள்ள இந்துக்கள் வில்லன்களாக காண்பிக்கப் படுவதும் குறித்தும் நீங்கள் உள்நோக்கம் கருதி அவற்றை வைக்காவிட்டாலும் கூட வக்கிரம் புரையோடிப் போன நம் தமிழ் சூழலில் அவை எவ்வாறு புரிந்து கொள்ளப் படும் என்ற என் அச்சத்தை எனது அங்காடித் தெருவின் சமூகப் பார்வை என்ற கட்டுரையில்

http://solvanam.com/?p=7588

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். குறை உங்களிடம் இல்லை நம் பார்வையாளர்களிடம் உள்ளது என்பதைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒரு பிராமணப் பெண்ணை அப்படிச் சித்தரிப்பதினால் எல்லா பிராமணப் -பெண்களுமே அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் ஒட்டு மொத்த ஜாதியையும் சொல்ல வரவில்லை என்பதை ரப்பர் படித்த, பி தொ நி குரல் படித்த, காடு படித்த, அனைத்து கட்டுரைகளையும் படித்த, ஜெயமோகனுடன் நெருங்கிப் பழகி நேரில் அறிந்த நான் நன்கு அறிவேன். அதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் கிடையாது.

ஆனால் இதை அறியாத பொதுவாகவே கடந்த அறுபது எழுபது வருடங்களாக தமிழ் நாட்டில் நிலவி வரும் கடுமையான பிராமணக் காழ்ப்புச் சூழலில் வளர்ந்த பிராமணர்கள் என்றாலே கொடூரமான வெறியர்கள் என்று சொல்லி வளர்க்கப் பட்ட தமிழர்களில் பலருக்கும் இந்தக் காட்சி பிராமணர்களை கடுமையாக வெறுக்க மற்றும் ஒரு காரணத்தைக் கற்றுக் கொடுக்கும் அது போன்ற குரோத மனப்பான்மைக்கு தூபம் போடும்.

இது சினிமாவில் அதை வைத்த உங்கள் நோக்கம் வேறு ஆனால் அது பெரும்பான்மை தமிழர்களிடம் ஏற்படுத்தும் விளைவு வேறு. நீங்கள் அறியாமலேயே விளைவது அந்தக் குரோதம். இந்தச் சூழல் கேரளாவில் கிடையாது. அங்கு படம் பார்ப்பவனுக்குத் தெரியும். சினிமாவில் ஒரு நம்பூதிரியோ, ஒரு முஸ்லீமோ, ஒரு கிறிஸ்துவனோ மோசமாக காண்பிக்கப் பட்டால் அது அதே இனத்தைச் சேர்ந்த அனைவரின் ஒட்டு மொத்தக் குணமும் கிடையாது என்பதை ஒரு எளிய மலையாள ரசிகன் கூட புரிந்து கொள்வான்.

ஆனால் தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை. ஆகவேதான் தமிழ் சினிமாக்களில் ஜாதிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இங்கு நிலவும் சூழலில் ஒரு கட்சியையோ, ஜாதியையோ, தலைவர்களையோ படைப்பின் யதார்த்தம் கருதி கூட அப்படியே காண்பித்து விட முடியாது என்பதுதான் தமிழ் நாட்டு யதார்த்தம். ஆனால் பிராமணர்களை காண்பிக்கலாம் அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் அதை உரிய விதத்தில் புரிந்து கொள்வார்கள். கையை, தலையை வெட்ட வரமாட்டார்கள்.

உண்மைதான்.

அதனால் உங்களைப் போன்ற ஒரு சில படைப்பாளிகள் நேர்மையான காரணங்களினால் ஒரு சின்ன சுதந்திரம் எடுத்துக் கொள்கிறீர்கள் அதில் தப்பும் இல்லை. ஆனால் அந்த சின்ன சுதந்திரம் கூட அப்படிப் பெருந்தன்மையுடன் புரிதலுடன் அமைதி காக்கும் ஒரு தரப்பாருக்கும் கூட எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதே என் ஆதங்கம்.

இன்றைய தமிழ் சூழலில் ஒரு சிவாஜி, ஒரு எம் ஜியாரை விமர்சிக்க முடியாது. பிராமணர்களைத் தவிர வேறு எந்தவித ஜாதியினரையும் பெருமைப் படுத்துவது அன்றி வேறு எந்த விதமாகவும் விமர்சித்து விட முடியாது. பா ஜ க போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியினரையும் சினிமாவில் விமர்சித்து விட்டு உயிரோடு இருந்து விட முடியாது.

இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் படைப்புச் சுதந்திரம் கருதி எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு சமூகத்தை மட்டும் எப்படியும் காண்பிக்கலாம் என்பது நிச்சயம் படைப்பாளிக்கு எந்த வித எதிர்ப்பையும் ஏற்படுத்தாது ஆனால் அந்த சமூகத்தின் மீது தமிழ் நாட்டுச் சூழலில் ஒரு வித புரிதல் இல்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்த அவை போன்ற யதார்த்தம் கருது உள்நோக்கமின்றி வைக்கப் பட்ட காட்சிகள் காரணமாகி விடுகின்றன என்று கருதுகிறேன்.

இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் நான் ஒரு சினிமா இயக்குனராக இருந்தால், ஒரு சமுதாயம் அல்லது ஒரு கட்சி மட்டுமே தன் பலவீனம் காரணமாகவோ, எண்ணிக்கை காரணமாகவோ, பெரும் தன்மை காரணமாகவோ, சரியான புரிதலின் காரணமாகவோ அல்லது வேறு எந்த விதமான காரணமாகவோ தன்னைப் பற்றிய நேர்மையான, ஆபாசமான, கேலியான, உள்நோக்குள்ள்ள, இல்லாத அனைத்து விதமான சித்தரிப்புகளையும் பொறுமையுடனும் புன்னகையுடனும் அனுமதிக்கிறது என்றாலும் கூட என் படைப்புகளில் நான் அந்த சமூகத்தை மட்டுமே பயன் படுத்த மாட்டேன். என்று எனக்கு எல்லாவிதமான சமூக அமைப்புகளையும், ஜாதிகளையும்,கட்சிகளையும், தலைவர்களையும் ஒரே விதமாக விமர்சிக்கும், சித்தரிக்கும் உரிமை மறுக்கப் படுகிறதோ அந்தவிதமான ஒரு விஷச் சூழலில் நான் ஒரு சமூகத்தை மட்டும் அது அனுமதிக்கிறது அல்லது அது அனுமதிக்கும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறது அல்லது பெருந்தன்மையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக என் படைப்புகளில் அந்தச் சமூகத்தைப் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதே என் நிலைப்பாடாக இருக்கும்.

எமர்ஜென்சியின் பொழுது யாரும் இந்திராவையோ அவரது கட்சியையோ ஆட்சியையோ விமர்சிக்க முடியாது. கடுமையான சென்சார், கடுங்காவல் எல்லாம் அமுலில் இருந்தது. அப்பொழுது கவிழ்க்கப் பட்ட தி மு க ஆட்சியும் ஒன்றும் யோக்யமான ஆட்சி அல்ல அது மாநில அளவில் எதோச்சிகாரமும் ஊழலும் அராஜகமும் செய்து கொண்டிருந்த கட்சிதான் (இன்றைக்கும் அதே கதைதான்) அப்பொழுது சோ வுக்கு கருணாநிதியையும் அவர் ஊழல்களையும் விமர்சிக்க முழு உரிமையும் அனுமதியும் இருந்தது.

அன்று சோ தனது துக்ளக்கில் தாராளமாகக் கருணாநிதியை விமர்சிக்கலாம் ஆனால் இந்திராவை விமர்சிக்க முடியாது. அப்பொழுது சோ ஒரு தீர்மானம் எடுத்தார் எப்பொழுது என்னால் ஒரு கட்சியை விட்டு விட்டு இன்று கவிழ்க்கப் பட்டு பலவீனமாக இருக்கும் மற்றொரு கட்சியை மட்டுமே விமர்சிக்க முடிகிறதோ அப்பொழுது நான் கருணாநிதியையும் விமர்சிக்கப் போவதில்லை. என்று என்னால் இந்திராவை விமர்சிக்க எனக்கு அனுமதியும் பேச்சுரிமையும் மீண்டும் கிடைக்கிறதோ அன்றுதான் நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று கூறினார்.

சோவின் நிலைப்பாடே என் நிலைப்பாடாகவும் இருக்கும்

என் அச்சங்கள் தேவையற்றதாகவும், அதீதமானதாகவும் நீங்கள் கருதலாம். பாதிக்கப் படாத யாரும் அவ்வாறே கருதுவார்கள். நான் சொல்வது என் அனுபவத்தின் அடிப்படையில் நான் கண்ட சம்பவங்களின் அதன் காரணங்களாக நான் கருதுபவற்றின் அடிப்ப்டையில் அமைந்தவை மட்டுமே. இதையே நான் மலையாள சினிமா சூழலுக்குச் சொல்ல மாட்டேன். அங்கு இயக்குனர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எல்லா ஜாதியினரைப் பற்றியும், மதத்தினரைப் பற்றியும், கட்சியினரைப் பற்றியும் துணிவுடன் விமர்சிக்கும் சுதந்திரம் நேற்று வரை இருந்தது. இன்று கைகள் வெட்டப் பட்ட கிறிஸ்துவ கல்லூரி ஆசிரியருக்குப் பின்னால் கேரளத்திலும் கூட தமிழகத்தில் நிலவும் சூழல் வந்து விட்டிருக்கிறதோ என்ற அச்சம் நிலவுகிறது.

இருந்தாலும் நேற்று வரை இருந்த மலையாள படைப்புலகச் சூழலில் எந்த ஜாதியினரை விமர்சிப்பதிலும் யாரும் தயக்கம் இருந்ததில்லை அதற்கான தேவையும் பெரும்பாலும் இல்லை. ஆனால் தமிழ் நாட்டின் சூழல் வேறு. இங்கு கருணாநிதியையும், எம் ஜி யாரையும் குறிப்பிட்டு ஒரு சாதாரண சினிமா கூட எடுக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது. மலையாள அரபிக் கதாவில் சர்வ சாதாரணமாக பிரணையில் விஜயனும், அச்சுதானந்தனும் பேசப் படுகிறார்கள். போப்பும், நம்பூதிரிகளும், சங்கராச்சாரியர்களும் மிகச் சுதந்திரமாக விமர்சிக்கப் படும் சூழல் உள்ளது. அங்கு தாராளமாக படைப்புச் சுதந்திரத்தைப் பயன் படுத்தலாம்.

ஆனால் புரையோடிப் போயிருக்கும் தமிழ் நாட்டுச் சூழலில் வேறு விதமாகச் செயல் பட வேண்டிய கட்டாயமே எந்தவொரு படைப்பாளிக்கும் நிலவுகிறது. அந்த சூழல் மாறும் ஒரு காலம் வரும் பொழுது என்று எல்லா ஜாதியினரையும் சமமாக விமர்சிக்கலாம் என்ற காலம் வரும் பொழுது, என்று எல்லா கட்சியினரையும் அரசியல்வாதிகளையும் எவ்வித அச்சமும் இல்லாமல் பகிரங்கமாக நேர்மையாக விமர்சிக்கலாம் என்ற நிலை வரும் பொழுது பிராமணர்களையும் அவர்களில் பலரது சிறுமைகளுக்காகவும், ஆணவங்களுக்காகவும், ஜாதி மேலாண்மைக்காகவும், தீண்டாமைக்காகவும் கட்டாயம் கடுமையாக விமர்சிப்பதில் எந்த வித ஆட்சேபணையும் இருக்க முடியாது.

Aayirathil Oruvan is Ravanan

எதெதற்கோ முடிச்சுப் போடுகிறோம்! செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஐயும் மணி ரத்னத்தின் ‘இராவணன்‘ஐயும் கோர்த்து விட முடியாதா?

படத்தின் துவக்கம் கடத்தல். தொல்பொருள் ஆய்வாளர் பிரதாப் போத்தன் காணாமல் போவதில் ஆ.ஒ. ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யா ராய் கடத்தப்படுவது ராவணன் முதற்காட்சி.

இரண்டு படங்களிலும் முக்கியமாக சொல்லப்படுவது ஜென்ம ஜென்மமாகத் தொடரும் வன்மம்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே உள்ள தீராப்பகை. சோழரும் பாண்டியரும் இரண்டாயிரம் வருடங்களாக சண்டை போடுகிறார்கள். காவல்துறையும் ராபின் ஹூட்களும் அனுமார் காலத்தில் இருந்தே பிணக்கில் இருக்கிறார்கள்.

சோழர் மகன் காணாமல் போய், அதன் பின் கடல் கடந்தது ஐதீகம். இராமர் கடலில் பாலம் கட்டி அதை வானர சேனையுடன் கடந்ததும் நம்பிக்கை. இராவணன் சீதையை விட்டுவிடுவான் என்பது மட்டும் நம்பக்கூடியதா என்ன?

பிரதாப் போத்தன் புகைப்படத்தை வைத்து அடையாளம் கேட்டு அடுத்த இடங்களுக்கு செல்வது போல், வீராவின் நிழற்படமும் படம் நெடுக முக்கிய பாத்திரம்.

‘நீ என்ன பொட்டையா?’ என்று ஆணைப் பார்த்து ஆயிரத்தில் ஒருத்தி கேட்பாள். அவனிடம் இல்லாத அதே தைரியத்தை ராகினியிடம் பார்த்து வியப்பது ‘இராவணன்’.

தசரதன் தன் மகனைக் காட்டுக்கு அனுப்பியது போல் அப்பாவும் மகளுக்கும் பிரச்சினையால் வீட்டை விட்டு வந்து காடு/மலை என்று கஷ்டப்படுபவள் லாவண்யா – ஆண்ட்ரியா.

சீதை தன்னுடைய நகைகளை வழித்தடத்தில் விட்டுப் போனது காப்பியம். பிரதாப் தன்னுடைய கறுப்புப் பையை விட்டுப் போவது ஆயிரத்தில் ஒருவன்.

ஆ.ஒ. சோழ சாம்ராஜ்யத்தில் நார்த் இந்தியன் ஸ்டைல் கோவில் கட்டுகிறார்கள்; திருநெல்வேலியில் உள்ள ஆரிய சமாஜத்தில் திருமணம் கட்டுகிறார் இராவணன்.

வாலியை மறைந்திருந்து தாக்குகிறான் இராமன். ஆயிரத்தில் ஒருவன் கிளாடியேட்டர் மைதானத்தில் நேருக்கு நேர் போர் புரிகிறான்.

வாலிக்கு பயந்து குகையில் பரிவாரங்களுடன் வாழ்ந்தவன் சுக்ரீவ ராஜா. சோழ அரசரும் பாண்டியனுக்கு பயந்து அடங்கி, மறைந்து வாழ்கிறார்.

‘மண்டையோடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ’ என்பான் சோழன். வீராவும் அங்ஙனமே பலி கொடுத்து வாழ்கிறான்.

இடர்வழி

ஆயிரத்தில் ஒருவனில் ஏழு சிக்கலைக் கடந்து இறுதி லட்சியத்தை அடைகிறார்கள்.

முதலில் கடல். ஜெல்லி ஃபிஷ் தாக்குதல்; அட்டை போல் ஒட்டிக் கொண்டு இராணுவ வீரர்களைப் பறிக்கிறது. இராவணனில் ஓடும் ஜீப்களில் ஏறி இராணுவத் தளவாடங்களைப் பறிக்கிறது.

இரண்டாவது காட்டுவாசிகள். வீராவிற்கு இல்லாத டியாள் கூட்டமா!

அடுத்தது காவல் வீர்களில் எறிகணைத் தாக்குதல். நடுக்காட்டில் போட்ட கூடாரம் சீரழிகிறது. பலர் இறக்கிறார்கள். அங்கேயும் வெடிகுண்டுகளுடன் வலியோரை நோக்கிய வெறிப் பாய்ச்சலும் பேரழிவும் உண்டு.

தொடர்வது சர்ப்பம். பாம்பில் இருந்து தப்பிக்க தண்ணீர் உபாயம். இராவணனில் சதா சர்வகாலமும் தண்ணீரில் குதித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். பின்னிப் பிணையும் பாம்பை உருவகமாகப் பார்த்தால், பாசத்தை சொல்லலாம். பசுமையான சூழலில் தான்தோன்றியாக உருவாகும் நாகம் போல் பச்சிளம் காரிகையைப் பார்த்தவுடன் வீராவிற்கு தடாலடியாக உதிக்கும் காதல்.

பின் பசி, தாகம் & புதைகுழி. நடராஜன் வடிவத்தில் சுரிமண். இராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டுத்தானே கிளம்புகிறார் இராம்ர். அதே போல் இங்கேயும் இறைவணக்கம்.

கடைசியாக கிராமம். அங்கே மான் கேட்டாள் சீதை. இங்கே ஒட்டகம் கேட்கிறான் கார்த்தி.

மேம்போக்கு வழி

தற்கால பெரும் பொக்கீடு படங்களின் அடியொற்றி, தசாவதாரம் போல் பட்டாம்பூச்சி விளைவை இரண்டுமே குறிப்பால் உணர்த்துகின்றன. ‘ஓ லீசா… எல்லீஸா’வில் பட்டர்ஃப்ளை தலை காட்டுகிறது. அங்கே ஐஸ்வர்யாவினால் ஃப்ளை விரிவடைகிறது.

இராமனையும் இலக்குவனையும் பின் தொடர்ந்தது சீதை. அனிதாவையும் ஆன்ட்ரியாவையும் பின் தொடர்வது பருத்திவீரன்.

குரங்கு கூடவே வருவது போல் கார்த்தி இறுதி வரை துணை இருக்கிறார். தோளில் பையனைத் தூக்கி கடல் கடக்கிறார்.

ஆயிரத்தில் ஒருவனை ஆந்த்ரபாலஜிஸ்ட்டை பைத்தியமாக்கிறார்கள். இராவணனில் இராச்சிய விசுவாசத்தை கேலிக்குள்ளாக்குகிறார்கள்.

Ravanan & Angaadi Theru

குரங்கு மாதிரி கார்த்திக் மட்டும் அல்ல; அங்காடித் தெரு இராமனின் உற்ற நண்பர் மாரிமுத்துவும் குதிக்கிறார் என்பது இந்தப் பதிவின் தோற்றுவாய். அங்காடித் தெருவிலும் தாழ்த்தப்பட்டவரை ‘பன்றி’ என்று விளிக்கும்போது வெகுண்டெழாத சமூகம் ஆசனவாய்.

இராவணன் பிரும்மாண்டம். அங்காடித் தெரு குடிசை வீடு. இருந்தாலும் இந்த வருடம் வந்ததில் இந்த இரண்டு மட்டுமே முக்கியமான ஆக்கம்.

இரஜினிகாந்த் படங்களில் வருவது போல் ஐஸ்வர்யா, விக்ரம், பிரபு, கார்த்திக் நட்சத்திரப் பட்டாளம் கொண்டது ராவணன். புதுமுகங்களும் கூடிய சீக்கிரமே கூத்துப் பட்டறை கலைராணி மாதிரி அலுத்துவிடக் கூடிய விக்கிரமாதித்யர்களும் நிறைந்தது ‘அங்காடி தெரு’.

அங்காடித் தெருவில் வசனம் பலம். சுஜாதா இல்லாத உயிர்மையை ஜெயமோகன் மட்டும் வாழவைக்காவிட்டாலும், சாரு நிவேதிதாவிற்கும் வசனம் வராதது மணி ரத்னத்தின் இராவணப் பிரச்சினை.

பவிசு, பரதேசம், சில்லாட்டை என்று வட்டார வழக்கு ஆகட்டும்; வேலையில் சக்கை பிழியபட்டு வீடு திரும்புபவரின் செல்பேசி அலறல் பதில் அன்யோன்யம் ஆகட்டும். வசந்தபாலன் இயக்கமும் ஜெயமோகன் உரையாடலும் நகைச்சுவையையும் வாழ்க்கையையும் இழையவிடுகிறது. இராவணனில் ‘வினவு‘ தளத்துக்கு நுழைந்துவிட்ட அஜீரணம் கலந்த பிரச்சாரப் போலி பித்தளை.

சகோதரிகளுக்கு அப்பாவின் சட்டை; சரவணா ஸ்டோர்சுக்கு ஜோதிலிங்கம் கிளம்பும்போது பள்ளிக்கூட சீராடை. கேரளா விளக்கைத் தூக்கும்போது நெருங்கும் கை; போன்ற நுணுக்கங்கள் நிறைந்தது ‘ரங்கநாதன் தெரு’. இராமாயணத்தில் அன்றும், இன்றும், என்றும் லாஜிக் இல்லா மேஜிக் ரியலிசம்.

இவ்வளவு வித்தியாசம் நிறைந்த படங்களை எப்படி ஒரே பதிவாக்கலாம்?

நான் அங்காடித் தெருவிற்கு விமர்சனம் எழுதவில்லை; படம் வந்தும் நாளாகி க்ளாசிக் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது முதல் காரணம்.

இரு படங்களுமே ஜாலியான மசாலா என்பது முக்கிய காரணம்.

இரண்டு படங்களிலும் அசல் வாழ்க்கை நாயகர்களான காவல்துறையும் தொழில் துறையும் வில்லன்கள்.

மெதுவாகத்தான் அறிமுகம் ஆகிறார்கள். மிடுக்கோடு; கொஞ்சம் அப்பாவியாக; அவர் தொழிலுக்கு பக்தி என்றால், அண்ணாச்சி இறைபக்தி.

அங்கே ராமர்/சீதை/அனுமன்/இலக்குவன்/ஜடாயு/சூர்ப்பநகை சொல்ல பிரும்மப் பிரயத்தனம் என்றால், இங்கே சரவணா ஸ்டோர்ஸுக்கு பல்வேறு முன்னிறுத்தல்.

சாதாரணமாக நாயகியின் அப்பா, எதிர்மறை கதாபாத்திரம் செய்வார். அங்கே நாயகியின் கணவன். இங்கே நாயகிக்கு சம்பளம் தருபவர். இந்த இடத்தில் பெரும்பாலான திரைப்படங்களை ஒத்தே அமைந்திருக்கிறது. மூவருமே நிஜ வாழ்வில் சிம்ம சொப்பனம். அவர்கள் கிண்டலடிக்கப்படும்போது ஒடுக்கப்பட்ட மனம் கிளர்வது இயல்பு.

‘ஓசியில கொடுக்க அரசாங்கமா’ என்னும் கலைஞர் டிவி நையாண்டி அங்கே; ‘எந்தப் பொந்தில் போய் ஒளிஞ்சுண்டிருக்கான்’ என்று வாலியை மறைந்தடித்த ராமரும் இராவணரில் உண்டு.

இரண்டு படத்திலும் மூலக்கதைக்கு சம்பந்தமில்லாத தொகுப்புக் காட்சிகளும் கதாபாத்திரங்களும் மான்டேஜ் சித்திரங்களாக எக்கச்சக்கம். அவை பிரமிக்க வைக்கின்றன; அல்லாட வைக்கின்றன.

சத்தமாக அருளாசி வழங்குவதில் அங்காடித் தெரு ஜொலி சொலிக்கிறது. இராவணனில் புனித பிம்பங்களைக் குறித்து வினா மட்டுமே வைக்கப்படுகிறது.

படத்திற்கும் பாடல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், மணி ரத்தினம் அதற்கான கெத்தை நிலைநாட்டுகிறார். இரண்டாவது பல்லவியும் வராதா என்று ஏங்கவைக்கிறார். ‘நான் கடவுள்’இல் ‘பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்’ பாடல் எம்டிவி அடியொற்றி உண்டியல் குலுக்கியது. ஜெயமோகனின் இந்தப் படத்திலும் ‘கண்ணில் தெரியுது வானம்’ நீர் கோர்க்க வைக்கும் புலம்பல். அடுத்ததாக ஜெயமோகனார், சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களின் பிரச்சினைகளை முன்வைத்து அழுவாச்சி மூன்று நிமிஷம் கொடுக்க விண்ணப்பம் வைத்துவிடுகிறேன்.

இட்டமொழியில் பாரம்பரியச் சின்னம் போன்ற கோவில் இருப்பதை ஆராய முடியாது. அதே போல் திருநெல்வேலியில் வாரணாசி கோபுரமும் கிடைக்கும்.

அ.தெ.வில் ‘வானாகி மண்ணாகி’ காதல் ஊடல். இராவணனில் வீராப்புடன் கோபாவேச பாரதியார் வசன கவிதை.

சூர்ப்பனகைக்கு ஒரு நியாயம்? சீதைக்கு இன்னொரு கற்பு நிலையா? என்று கேட்பது மணிரத்னமாயணம். படி ஏறி இறங்காத நாயகி கனி (அஞ்சலி)க்கு ஒரு நியாயம்? நாயகன் அடி வாங்கும்போது மட்டும் இரக்கநிலையா என்று வினவுவது அங்காடி இராமாயணம்.

காதலியைக் காப்பாற்ற இயலாத கையாலாகாதவர்களினால்தான் இரு கதைகளுமே முன்னகருகிறது. ப்ரியாமணியின் கணவன் நடுங்குகிறான். கன்னுக்குட்டி செல்வராணி சௌந்தரபாண்டியனால் அனாதரவாகும் காட்சி அதனினும் மிரட்சி.

வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆபத்பாந்தவம் லிங்குவிடமும் உண்டு; எஸ்.பி.யும் அதே பயத்துடன் நாயகியை நிராகரித்து வீராவிடமே அனுப்பி வைக்கிறார். இரு இடங்களிலும் ஏமாற்றம்.

அண்ணாச்சி அறியாமல் கனியும் காதல் அங்கே; அண்ணன் ராமனுக்குத் தெரியாமல் மலரும் காதல் இங்கே.

சரி… காதல் எத்தனை வகை?

1. ஆசை: அங்காடித் தெருவில் அஸ்வினி வகை. இராவணனில் வீராவிற்கு வருவது – காமம்; உடல் சார்ந்தது.

2. உடைமை: இது வீராவிற்கும் கைக்கடிகாரத்திற்கும் இடையே உள்ளது. ‘என்னுடைய வாட்ச்’ என்னும் ஆக்கிரமிப்பு சார்ந்தது. பயம் கொணர்வது.

3. சார்புநிலை: அங்கே லிங்குவிற்கும் கனிக்கும் இடையே உள்ளது.

4. சுய அடையாளம்: எஸ்.பி பிருத்விராஜூக்கு இருக்கும் தொழில்பக்தி. காதலுக்கு பதில் அகந்தை தலைதூக்கும்.

சினேகாவின் ஒரிஜினல் பெயர் சுகாசினி. ராவண் வசனம் எழுதியவர் சுஹாசினி. இரண்டு பேருமே இரு படத்திலும் சம்பந்தமில்லை என்பதுதான் சம்பந்தம்.

Ravanan movie with Kamba Ramayanam

கம்பராமாயணம் என்பதற்கு பதிலாக கம்பராவணாயணம் என்பதே பொருத்தமோ என்பது போல், கம்பன், வில்லனைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். எனவே, மணி ரத்னத்திற்கும் ஆர் எஸ் மனோகருக்கும் இன்ஸ்பிரேசன் கம்பர் (அல்லது வான்மீகி?)

ராவணனின் வீரத்தைப் புகழும் கம்பர்:

காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கலந்த
பூளை போன்றதப் பொருசினத் தரிகள்தம் புணரி

மலர் மென்மையானது. [ஐஸ்வர்யா ராயை சொல்லவில்லை]. பூளைப்பூ காற்றால் சிதறியோடுவதை, வீரர் முன் வீரமிலாப் படை சிதறியோடுவதற்கு உவமையாக்குகிறார் கம்பர்.

இராமனை இகழும் இராவணன்:

தேறுதி; நாளையேயல் விருபது திண்டோள் வாடை
வீறிய பொழுது, பூளை வீயென வீவன்.

கரன் [கனகவேல் காக்க அல்ல] போன்ற தளபதிகள் இறந்தார்கள் என்னும் சூர்ப்பனகையின் சொல்லைக் கேட்டவுடன் கிளர்ந்தெழுந்த சினத்தன்மை:

ஆழித்தீயில் நெய் ஊற்ற ஆழித்தீ கனல்தலென இராவணன் சினந்தான்

மலையில் தோன்றிப் பாய்ந்த நீர், ஆறாக ஓடிக் கடலோடு கலந்தது. – ப்ருதிவிராஜில் தொடங்கும் காதல், விக்ரமில் சங்கமம் ஆகிறது.

தொடக்கத்தில் ஒரே இடத்தில் தோன்றிப் பல இடங்களில், பல்வேறு விதமான அளவுகளிலும் வடிவத்திலும் பாய்ந்து, வழிநெடுகிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியில் கடலில் கலந்து, வேறுபாடின்றிக் கலக்கும் உயிர்களின் தன்மைக்கு விளக்கமாக இரு தரப்பினரும் உரைப்பதை ஒத்து இருந்தது.

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே.

ராமன் உலாவரும் காட்சியைக் கண்ட மிதிலைப் பெண்களின் நிலையைக் கூறுமிடத்தில், இராமனையே முழுமையாகப் பார்க்காதவர்கள் என்னும் நையாண்டி:

தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைக்க ண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கண்ட சமயத்து அன்னார் உருவு கண்டாரை ஒத்தார்

சீதையைப் பற்றி கம்பர் எப்படி வர்ணிக்கிறார்?

  • மாதரார் வடிவு கொண்ட, நஞ்சு தோய் அமுதம்
  • சீதை என்று ஒரு கொடுங் கூற்றம்
  • சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்;

போர்க்களத்தில் சமையல் நடக்கும் பாடலில், யானைகளின் மேலிடும் தவிசும், அம்பும், தேரும், வில் முதலிய படைகளும் — கொடிய விறகுகளாய் அமைய, இறந்த வீரர்களுடைய சினமிக்க கண்களாகிய தீயில் பிணங்கள் வெந்து அவை பேய்கட்கு உணவாகின்றன:

சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி

வீராவின் [படத்தில் விக்ரம்] மற்றொரு பாதி அவனின் தங்கை. அவளுக்கு நடந்த வன்முறை பிறரால் அன்று. இராவணனாலேயே நிகழ்ந்தது. தோன்றாதவை, அல்லது தோன்றியவை அவனைத் தவிர வேறொன்றும் இல்லை. அவன் கொலை செய்கிறான்; அல்லது வாழவைக்கிறான். பற்பலவற்றைப் படைத்த பிறகும் அவன் மட்டுமே எச்சம். ஊரார் எல்லாம் அவனின் தோற்றங்களே. பல்வேறு வகைப்பட்ட இவற்றின் அழிவிற்குப் பிறகும், அவனே இருப்பான்:

வில்லும் வேலும்வெங் குந்தமும் முதலின விறகாய்
எல்லு டைச்சுட ரெனப்புக ரெஃகெலா முருகத்,
தொல்லை நன்னிலை தொடந்துபே ருணர்வன்ன தொழிலச்
சில்லி யுண்டையிற் றிரண்டன படைக்கலச் சாலை

எம்.ஃபில்லோ, முனைவரோ ஆகுமளவு மணி ரத்தினமும் கம்ப ராமாயணத்தை அடியொற்றியே ‘இராவணன்’ அமைந்திருக்கிறார்.

நாயகனின் ‘அந்தி மழை மேகம்’ உங்களுக்குப் பிடிக்குமா? கிழவிகள் கொட்டமடிக்கும் ‘ருக்குமணி ருக்குமணி’ ரீங்காரமிடுகிறதா? ‘திருடா திருடா’வின் லாஜிக்கின்மை கவருகிறதா? உங்களுக்கு இந்தப் படம் பிடித்துப் போகும் வாய்ப்பிருக்கிறது.

ப்ரியாமணியுடையது, பருத்தி வீரனில் ஏற்கனவே செய்யப்பட்ட கதாபாத்திரம்! பிருத்விராஜைப் பார்த்தால் ‘டூயட்’ ரமேஷ் அர்விந்த் மாதிரி ஐஸ்வர்யாவோடு பொருந்தாமை!! வீரப்பன், நக்சல்பாரி, விடுதலைப் புலிகளின் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், ‘பேராண்மை‘ என்றெல்லாம் +2 படிக்கும் மாணக்கனாக பக்கம் பக்கமாக பதிபவரா நீங்கள்? உங்களுக்கு இந்தப் படம் நிறையவே பின்னூட்ட வருகை பிராப்திரஸ்து ஆசீர்வதிக்கும்.

அவ்தார் போன்ற கொடுமையை மெச்சும் ஹாலிவுட் அர்ச்சகரா? ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று பச் பச்சென்று பறித்த சாலட் கொறிப்பாளரா? உயிர்மை போன்ற நவீன குமுதங்களில் இடம்பிடிக்க விழைபவரா? உங்களுக்கும் உள்ளேன் அய்யா போட்டுக் கொள்ளலாம்.

அங்காடித் தெரு’ போன்று கருப்பு வெள்ளையாக எல்லா கதாபாத்திரமும் உங்களுக்கு உலா வர வேண்டுமா? ‘மெகாதீரா‘ போன்று அல்டாப்பு நிறைந்த மாய்மால ரசிகரா? ‘Shutter Island‘ போன்று குப்பாச்சு, குழப்பாச்சு மூக்குச்சுற்றி மூச்சுத்திணறல்களின் விரும்பியா? ஐ எம் வெரி சாரி மேடம். வெயிட் ஃபார் ‘யாவரும் கேளிர்’.

Avatar: அவதார்

1. அமெரிக்கா வந்த புதுசு. ஜேம்ஸ் கேமரான் குறித்து தெரியாத வயசு. கூடவே நாலஞ்சு பொண்ணுங்க வேற கூப்பிடறாங்க. டிக்கெட் எளிதாக கிடைத்துவிடுகிறது. ‘டைடானிக்’ மட்டும் மூழ்கவில்லை. வலைப்பதியாத அந்தக் காலத்திலேயே படம்  பார்த்தபிறகு எழும் இயலாமை ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ பார்த்த எஃபக்ட் கொடுத்தது.

அந்தப் படத்திலாவது பிறந்த மேனி கேட் வின்ஸ்லட் ஆறுதல். அதுவும் இங்கே லேது. மிஷேல் ரோட்ரிக்ஸ் இருந்தும் அவதாரில் ஏமாற்றம்.

2. தமிழருக்கு லாஜிக் ஓட்டை சொல்லாமல் இருக்க வேண்டுமானால், சிம்பு படமாக இருக்க வேண்டும் அல்லது ‘சிவாஜி’யாக இருக்க வேண்டும்.

3. கடவுள் என்றாலே லேட்டாகத்தான் வருவார். ‘காக்க காக்க’வில் அன்புச்செல்வன் அனைத்தையும் இழந்தாலும் ஹீரோ என்றறியப்படுவது போல்  ஈவா தெய்வமும் வெகு தாமதமாக, தன்னை வணங்கும் கூட்டம் பஸ்மமான பிறகே தலை நீட்டுகிறது.

4. ஜூராசிக் பார்க்கில் பார்த்த டைனோசார். ஜுமாஞ்சியில் பார்த்த இரணகளம். ஆவியோடு பேசும் Defending Your Life. அவியல் பிடிக்கும்தான். அவதார் அவியல் அல்ல; ஆட்டோவில் கொட்டிப்போன கேரியர் சாப்பாடு.

5. அமரும் இடத்தில் கூட அதிர்வு கொடுக்கும் 3டி நுட்பம் வெகு அபாரம். தூக்கம் எட்டிப்பார்த்தால், எழுப்பிவிடுகிறது.

6. நாவிக்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? அஜீரணம் உண்டாகுமா? ரத்தம் ஒரே நிறமா? அபான வாயு காமெடி எல்லாம் கிடைக்குமா?

7. ஜேம்சுக்கு படம் எடுக்கத் தெரியாவிட்டாலும் சந்தையாக்கத்தில் கெட்டி. இவருடன் எந்தப் படமும் போட்டி போடாமல் இருப்பது உபரி. உலகவெம்மை ஆதரவாளர்களும், இராக் ஆக்கிரமிப்பு அசூயைக்காரர்களும், அமெரிக்கன் காப்பாற்றுவான் வலதுசாரிகளும் தங்கள் கொள்கை, இலட்சியங்களுடன் பிணைத்துப் பார்க்க வைக்கும் மார்க்கெடிங் மாயாஜாலத்துக்கு ஜெய் ஹோ!

8. புத்தம்புது பூமி வேண்டும்! நானும் நாவியாக மாறி இளவரசியுடன் ஜொள்ளு விட்டு, பொருளாதார வீக்கம் கவலை மறந்து, நாளொரு சி#ம், பொழுதொரு Perlம் கற்காமல், குதிரையில் பறந்து… பறந்து…

9. வாடகை வீட்டை காலி பண்ண சொன்னால், ஜாகையை மாற்றுவீர்களா? இல்லையா? நாவிக்கள் கூட வேற மரம் பார்த்து குடிபோயிருக்கலாம் என்று இயக்குநர் எண்ண வைக்கிறார்.

10. வெள்ளித்திரையிலோ, டிவிடியிலோ பார்க்குமளவு பெரிய விஷயம் எதுவும் இல்லை என்று தோணவைத்தது எது? நமீதாவா? அய்யனாரின் இரானியப் பட விமர்சனங்களா? வீட்டிலேயே கிடைக்கும் 60″ டிவியா? எது…

சில பார்வைகள்:

  1. தமிழ்ஹிந்து » திரைப்பார்வை: அவதார்
  2. jeyamohan.in » Blog Archive » அவதார் – ஒரு வாக்குமூலம்
  3. ஏன் இப்படி…!: அவதார் – இது சினிமா மட்டுமல்ல!
  4. Op-Ed Columnist – The Messiah Complex – NYTimes.com
  5. IdlyVadai – இட்லிவடை: அவதார் – விமர்சனம்
  6. அதிஷா: ஆ… அவதார்!
  7. Cameron’s Avatar: The emerging zeitgeist? :: Vijayvaani.com
  8. ‘Avatar’ team brought in UC Riverside professor to dig in the dirt of Pandora | Hero Complex | Los Angeles Times
  9. இளையதளபதியின் அவதார்…அவதார் படத்தில் விஜய் நடித்திருந்தால்….
  10. கணேஷின் பக்கங்கள்!: இவள மாதிரி பொண்ணு பாரும்மா?