Tag Archives: கவிதை

En Uchi Mandaila: விஜய் & அனுஷ்கா – வேட்டைக்காரன்

என் உச்சி மண்டையில சுர்ங்குது
உன்ன நான் பாக்கையில கிர்ங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ங்குது
டர்ங்குது
டர்ர்ர்ர்ர்ர்ர்

கை தொடும் தூரம் காச்சவளே
சக்கரையால செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே
சுந்தரியே

தாவணி தாண்டி பாத்தவனே
கண்ணால என்ன சாச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே
சந்திரனே

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பாக்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது
டர்ருங்குது
டர்ர்ர்ர்ர்ர்ர்ரு

மீயா மீயா பூனை
நான் மீசை வச்ச யானை
கள்ளு கடை பானை
நீ மயக்குற மச்சான

வில்லு கட்ட மீசை
என் மேல பட்டு கூச
ஆட்டுக்குட்டி ஆசை
உன் கிட்ட வந்து பேச

மந்திரக்காரி மாய மந்திரக்காரி
காகிதமா நீ இருந்தா
பேனா போல நான் இருப்பேன்
ஒவியமா உன் உருவம் வரைஞ்சிடுவனே

உள்ளங்கையா நீ இருந்தா
ரேகையாக நான் இருப்பேன்
ஆயிலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பனே

என்னுச்சி மண்டையில் சுர்ர்ர்ர்ர்ர்ர்
உன்னை நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்ர்
கிட்ட நீ வந்தால் விர்ர்ர்ர்ர்ர்
டர்ர்ர்ர்ர்ர்ர்

அஞ்சு மணி பஸ்
நான் அதை உட்டா மிஸ்
நான் ஆத்தா வுட்ட புஸ்
ஒரே ஒரு கிஸ்
நீ ஒத்துக்கிட்டா யெஸ்

கம்மாங்கரை காடு
நீ சுட்ட கருவாடு
பந்திய நீ போடு
நான் வாரேன் பசியோடு

மந்திரக்காரா மாய மந்திரக்காரா
ஏய் அப்பாவியா மூஞ்சிய வெச்சு
அங்க இங்க கைய வச்சு
நீயும் என்னை பிச்சு தின்ன கேக்கரியேடா

துப்பாக்கியா மூக்கை வச்சு
தோட்டா போல மூச்ச விட்டு
நீய்ம் என்னை சுட்டு தள்ள பாக்கரியேடி

Puli Urumudhu: Vijay’s Vettai Kaaran

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டக்காரன் வரதப் பாத்து

கொல நடுங்குது குல நடுங்குது
துடிதுடிக்குது துடிதுடிக்குது

நில குலையுது நெல குலையுது
வேட்டைக்காரன் வரதைப் பார்த்து

பட்ட கத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க

பறந்து வரான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

வரான் பாரு வேட்டைக்காரன்

யார் இவன் யார் இவன் யாரிவன்
அந்த அய்யனார் ஆயுதம் போல் கூர் இவன்

இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா

அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான்
இவன் தமிழதான் மொண்டு தினம் குளிச்சிடுவான்

இவனோட நியாயம் தனி நியாயம்
அட இவனால அடங்கும் அநியாயம்

போடு அடியப்போடு போடு அடிய போடு
டக்கரு டங்கரு டக்கரு டக்கர்னா
போடு டக்கரு டங்கரு டக்கரு டக்கர் னா

யார் இவன் யார் இவன் யார் இவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்

சினத்துக்கு திறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை இங்கு எவனடா

இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம்

திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிறுக்கு முன்னால எவன் இருப்பான்

போடு அடிய போடு போடு அடிய போடு

Microsoft Excel நாமாவளி

அசல்: Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

சி ஷார்ப்பு, டாட் நெட்டு, ஏயெஸ்ப்பி, ஜாவா, பீன்சு, அபாச்சி, லீனக்ஸு, சீக்வலு, ஆரக்கிளு, டிபீட்டூ, வெப்ஸ்பியரு, டிப்கோ, சாப்பு, பீப்பிள்சாஃப்டு, பாஸ்கல், பியெச்பி, பெர்ல், ஐஐஎஸ்ஸு, பிஸ்டாக்கு, அஷூரு, கோ, எர்லாங்கு, அடோபு, ப்ளாசு, அஜாக்சு, எச்டியெமலு, எக்செமல்லு, அதா, சி, போர்ட்ரானு, அசெம்பிளி, வோர்டு, யூனிக்சு, கோபாலு, ட்விட்டரு, பேஸ்புக்கு, பயர்பாக்சு, சிப்ளசுபிளஸு, 68330, 8085…

இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு

வணக்கம் – அனலேந்தி

இட்லி கிடைக்கும் என்றால்
இருபது வரியில் கவிதை…
கிட்னிபீஸ் கறியென்றால்
கால்பக்கம் சின்னக்கதை…

சிக்கன், மட்டன் பிரியாணியா?
சிக்கிவிடும் சிறுகதை…
சொக்க வைக்கும் விருந்தா?
நிற்க வைப்பேன் காவியம்…

நூறு ரூபாய் நோட்டுக்கு
ஆறுவகைப் பாட்டுண்டு…
ஊறுகாயும் குவார்ட்டருமென்றால்
ஊடுகட்டி அடிப்பேன் இலக்கியம்…

பெட்டி நிறைய ‘கட்டா’?
தொட்டு விடுவேன் எழுத்துச் சிகரம்!
சட்டென்று சொல்லி விடுங்கள்
சரக்கு எது வேண்டுமென்று!

எட்டுத்திக்கும் எகிறிவரும்
என்னறிவுப் பெட்டகத்தை
துட்டுகுவித்து வாய்கவரும்
தரகர்களுக்கு என்வணக்கம்.

பதவிசான குளிர்காரில்
பவனிவரும் பிரமுகருக்கு
தொட்டுவிடும் கால்வணக்கம்!

வெளியான இதழ்: கல்வெட்டு பேசுகிறது
அக்டோபர் – 2008
ஆசிரியர்: சொர்ணபாரதி

ஆறிலிருந்து அறுபது வரையில் பூக்கள்.. பூக்கள்! – வைகைச்செல்வி

ஆறு வயதிற்கு
பிச்சிக் கொடி உயரம்தான்

பதினாறு வயதில்
செம்பருத்தி மட்டுமே
பள்ளிக்குள் ஆடின

இருபத்தாறு வயதில்
உன் தோட்டம் எதிரில்தான்
ஆனால் –
வேலிப்படல் தாண்ட
யாருக்குத் துணிவுண்டு?

பந்தக்கால் போட்ட பின்பு
தினந்தோறும்
கதம்பமும் கனகாம்பரமும்
திரும்பிப் பார்ப்பதற்குள் –
முப்பதும்… நாற்பதும்
அறுபதுமாய் வருடங்கள்
வாசமின்றி உதிர்ந்தன

இன்று –
ஊரெங்கும் திருவிழா.
எங்கிருந்தோ வருகிறாய்
கையில் பூச்சரத்துடன்
கறுப்புத் தேருக்கே
வண்ணப் பூச்சூட்டல்கள்.
என்
வெள்ளிப் பூந்தலையில்
மல்லிகைக்கு ஏது நிறம்?

நன்றி: தினமணி தீபாவளி மலர் 2004

ராபர்ட் ஃப்ராஸ்ட்: சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கங்கள்)

நான் ஒரு கவிஞனில்லை. கவிதையை மொழிபெயர்ப்பது எனக்குச் சிறிது துணிச்சலான காரியமாகவே படுகிறது. இருந்தும் ஃப்ராஸ்டின் கவிதைகளைப் படிக்காதவர்களை ஃப்ராஸ்ட்டுக்கு அழைக்க இந்த மொழிபெயர்ப்பு உதவும் என நம்புகிறேன்.

புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன்
சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது — நீயும் வாயேன்
oOo
கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன்
அதன் அம்மாவின் பக்கத்தில்
நின்றுகொண்டிருக்கிறது – ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது
தடுக்கி விசுகிறது
அதிக நேரம் ஆகாது — நீயும் வாயேன்

– ஆகஸ்ட் 1975

அசல்:

The Pasture by Robert Frost

I’m going out to clean the pasture spring;
I’ll only stop to rake the leaves away
(And wait to watch the water clear, I may):
I sha’n’t be gone long.—You come too.

I’m going out to fetch the little calf
That’s standing by the mother. It’s so young,
It totters when she licks it with her tongue.
I sha’n’t be gone long.—You come too.

கொசுறு: The Death of the Hired Man by Robert Frost

முகவரிகள் – மாதங்கி (சிங்கப்பூர்)

நன்றி: உயிர்மை

பெருவிரைவு ரயிலில்
அரை மணி நேரப்
பயணம்;
பரிச்சயம் செய்துகொண்ட
பக்கத்து இருக்கை பெண்மணி
வங்கி அலுவலராம்;
குழந்தைகள், புத்தகம்
பேச்சு நீண்டது

ஷெண்டன்வே பக்கம்
வந்தால் வங்கிக்கு வர வேண்டும்
விடைபெற்றார்

ஆறு மாதம்
கழித்து வேறு
வேலையாக அந்தப்
பக்கம் சென்றபோது
வங்கியில் நுழைந்தேன்
உணவு இடைவேளையில்

அந்நியமான பார்வை
கண்டு
வழித்துணையாய்
வந்ததை நினைவுபடுத்தியபோதும்
என்னைத் தெரியாமல் போனது
அவருக்கு

‘இப்ப இங்க வேலை எதுவும்
காலி இல்லை’ மெல்லிய
புன்னகையோடு சொன்னார்

அதன்பின்
எத்தனையோ பயணங்கள்
என்றாலும் வழித்துணையாய்
வருபவர் முகவரி கொடுத்தால்
வாங்கிக்கொள்ளத்தான் செய்கிறேன்

தேவதச்சன் கவிதை – உயிர்மை

வானவில்கள்

அது
நிறங்கள் அடர்த்தியாகிக்
கொண்டுவரும் வானவில். என்
வீட்டின்மேல் அழகாய் வட்டமிடத்
தொடங்கியது
“எவ்வளவு பெரிய வில். உள்ளே
வந்தால் வீடு
உடந்துவிடும்தானே” என்கிறார்கள்
உறவினர்கள்
“வில்லும் உடைந்துதானே
போகும்” என்கிறார்கள்
நண்பர்கள்
கண்ணில் வழிந்தோடு
குமிழிகளில்
தானே வளர்கிறது
சப்தத்தைக் கடந்த அன்பில் வில்
தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக
வளைந்திருக்கும்
வானவில்லுக்குள்ளே
இருக்கிறது என் ஊர்.
ஊருக்குள்ளே இருக்கிறது
என் வீடு,
எப்போதும்
கதவுகள் மூடியிருக்கும்
என் சின்னஞ்சிறிய வீடு

கல் எறிதல்
ஆளாளுக்கு கல் எடுத்து
எறிந்தனர். என் கையிலும்
ஒன்றைத் திணித்தனர்

உள்ளங்கையை விரித்து
மலைத்தொடர் வடிவத்தில்
இருந்த கல்லைப் பார்த்தேன்

உற்று நோக்கினேன்
உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
மலைத்தொடர் மறைந்தது

வெறுங்கையை வேகமாக
வீசினேன்.
விடைபெறும் முகமாகவும்
என்னையும்
தூக்கிச் செல்லேன் என்று
இறைஞ்சும் விதமாகவும்.

Om Siva Om – Vijay Prakash: நான் கடவுள் – இளையராஜா

நன்றி: The Hub :: View topic – Bala’s Naan Kadavul & Pulikesi’s Weblog

விளக்கம், பொருள், மொழிபெயர்ப்பு, தமிழாக்கம்: அண்டை அயல்: நான் கடவுள்; ருத்ரம்

முந்தைய பதிவு: Naan Kadavul – Music « இசை விமர்சனம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
தனமஷிவாய தஷிமதவாதச்சா….

அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
மூலப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன
ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
டம டம டம டம டுப டுப டுப டுப
சிவடபருத நாதவிஹரதி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

ஆர்யா – குமுதம்

‘நான் கடவுள்’ பற்றி…

காசியில ருத்ரதாண்டவம் ஆடிய நான் எப்படியோ பழநிக்கு வந்தேன். அங்கேயுள்ள மக்களால என்னைத் தாங்க முடிஞ்சுதா? இல்ல என்னால அந்த மக்களோடு செட்டாக முடிஞ்சுதா?!

பாலா முதல்ல சந்திக்கும் போதே சிரசாசனம், பத்மாசனம் பண்ற படத்தைக் காட்டி இதே மாதிரி பண்ணணும். ஒரு `மாசத்துல தயாராக இருங்க’ன்னு கிளம்பிட்டார். அந்த ஆசனங்களைப் பத்தி யோகா மாஸ்டர்கிட்ட கத்துக்கிடலாம்னு போனால், `தம்பி இதுதான் யோகாவுல கடைசி ஆசனம். குறைந்த பட்சம் ஒரு வருஷமாவது ஆகும்’னு சொன்னார். அப்புறம் நானாகவே வீட்டுல தினமும் மூணு மணிநேரம் பெட்ரூம்ல சுவத்துல தலைகீழாக சாய்ஞ்சபடி ப்ராக்டீஸ் பண்ணினேன்.

`நான் கடவுள்’ படத்துக்குப் பிறகு விஷ்ணு வர்தனுடன் சேர்ந்து பண்ற `சர்வம்‘ வந்துடும். அதனால நான் விட்ட இடைவெளியை நிச்சயம் நிரப்பிடுவேன்.”

நான் கடவுளில் பல பிரச்னைகளால் உங்களுக்கு ஜோடியாக ஹீரோயின்கள் மாறிக் கொண்டே இருந்தார்களே… அந்தக் கொடுமையான அனுபவம் எப்படியிருந்தது?

“அது கொடுமையில்ல. ஹீரோயின்கள் மாறியதால காமெடியான அனுபவம்தான் இருந்துச்சு. முதல்ல ஹீரோயினோடு எடுத்த காட்சிகளை, திரும்பத் திரும்ப மத்த ஹீரோயின்களோடு எடுக்க வேண்டியிருந்துச்சு. ஒரே காட்சியை நான்கு ஹீரோயின்களோடும் நடிச்சேன்.

முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்

இசை: வித்யாசாகர்

பாடலாசிரியர்: வைரமுத்து

இயக்கம்: திருமுருகன்

ஆண்:
கட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்க
எட்டிமிதிக்கும் யானைய நம்புங்க

ஸ்டிக்கர் பொட்டுக்காரிகள நம்பாதீங்க
அப்புறம் சீரழிஞ்சு பிஞ்சிலேயே வெம்பாதீங்க

கண்ணால காதல் கொடுப்பா
ஒரு நேரம் வந்தா காதலுக்கே கடுக்கா கொடுப்பா

முந்தான தந்தியடிப்பா
நீ கிட்ட வந்தா மூஞ்சியிலே எட்டியுதைப்பா

பெண்:
ஒட்டிக் கெடக்கும் செங்கல நம்புங்க
…???… கூரைய நம்புங்க

கட்சி மாறும் ஆம்புளைய நம்பாதீங்க
பிறகு கத்திரியில் …???… வெம்பாதீங்க

சீனி முட்டா வாங்கிக் கொடுப்பான்
அத முடிச்சதுமே சீமத்தண்ணி ஊத்தியடிப்பான்

ராமனப் போல் நல்லா நடிப்பான்
உன்ன ஒறங்கவிட்டு காமனுக்கு தந்தியடிப்பான்

ஆண்:
கொளத்துல மீனிருந்தா
கொத்தவரும் கொக்கு வரும்

வெக்கயில தண்ணி கொறஞ்சா
கொளத்த மாத்தி றெக்கையடிக்கும்

பொம்பளையும் கொக்கு
இதப் புரிஞ்சுக்காதவன் மக்கு

பெண்:
பொட்டிபணம் உள்ளவரைக்கும்
பொம்பளயக் காலப்பிடிப்பான்

ரொக்கமுள்ள முண்டச்சி கண்டா
வெக்கம் விட்டு சீலத் துவைப்பான்

ஆம்பளதான் பொறுக்கி
இத அறியாதவ சிறுக்கி

ஆண்:
சத்தியமும் செஞ்சு கொடுப்பா
சமயம் பாத்து சாமத்துல கழுத்த அறுப்பா

சட்டிப்பானை எல்லாம் மறைப்பா
ஒன்ன உறங்கவிட்டு தாந்தின்னியா தின்னு தீர்ப்பா

பெண்:
தாலி தந்த பொம்பளையோட
தலகாணியில் ஒட்டிக் கெடப்பான்

கோழி கூவும் சாமத்துல
கொழுந்தியாளக் கட்டிப் பிடிப்பான்

கொரங்கு மனசுக்காரன்
அவன் குடிகெடுப்பதில் சூரன்

ஆண்:
கடலெல்லாம் பொங்கி வரட்டும்
காதல் மட்டும் மூழ்காதப்பா

பெத்தவுங்க கண்ணீர் சொட்டில்
மொத்தத்தையும் மூழ்கடிப்பா

பெரிய நடிப்புக்காரி
அவ பேச்சில்லாத லாரி

பெண்:
ஆம்பளைக்கு வருத்தமெல்லாம் …???…
பொம்பளைக்கு வருத்தமெல்லாம் இந்த மண்ணவிட்டு போகுற காலம்வரைக்கும்

பாடலைக் கேட்க: Kattipidikkum Karadiya :: Muniyandi Vilangiyal Moondramandu

ஒத்த முந்தைய பாடல்: மண்வாசனை :: பாட்டுக்கு பாட்டெடுத்தேன்

தொடர்புள்ள எசப்பாட்டு இடுகை: வே.சபாநாயகம் :: புதுமைப்பித்தன், ஒட்டக்கூத்தர், கம்பர், ஔவை