Tag Archives: இலக்கியம்

ட்விட்டரில் கவர்ந்தவை

ட்விட்டரில் நான் தொடரும் சிலரின் கால நீரோட்டத்தில் என்னைக் கவர்ந்த சமீபத்திய சில வாசகங்கள், தருணங்கள்…

  • ரவி: While a history of millenium can be written in one wikipedia page, it’s irony v read / watch daily news for hours 😦
  • சங்கர் கணேஷ்: “To the world, you might be one person. But, to one person you might be the world” @iheartquotes
  • போட்டோமாட்: well we’re 20ish full-time and only 2.5 years old. what’s the breaking point – # of people? money raised? market success?
  • நாராயண்: கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி. உள்ளே இருக்கறவன் எப்படா வெளிய போவோம்னு இருப்பான். வெளிய இருப்பவன் எப்படா உள்ள போவோம்னு இருப்பான்.
  • கிருபா: SavitaBhabhi.com is easily the desibaba of the toon world.
  • பிரிஜ் சிங்: Playing with Scribd apis. Grand plan = email your doc, let your friends view/comment (NOT OPEN) on those docs.
  • அருட்பெருங்கோ: நேத்து ‘க்ராந்தி’ தெலுங்கு படம் பார்த்தேன். முடியல! 😦 இதுக்கு ‘பருகு’ வே ரெண்டாவது தடவை பாத்திருக்கலாம்!
  • ஆர்கே: “The difference between life and the movies is that a script has to make sense, and life doesn’t.” – Joseph L Mankiewicz
  • ரவிகிரண் ராவ்: If the cafeteria food stays this bad, I will seriously consider quitting my job.
  • பவளராஜா: ‘பிரியாணி’ய பத்தி தொல்காப்பியத்துல குறிப்பு இருக்குதாம்.. ஊண்சோறு’ன்னு.. நிசமா??
  • பாட்ரிக்ஸ்: Perpetrator of a race attack in College Station last month caught. White male. Why mention the race of the culpirt? More later.
  • விஜய்: Serial Bomb blast in Jaipur.வழக்கம் போல் ஒரு ‘உச்’.அதற்கு என்ன செய்யமுடியும்? என் மேம்போக்கான கொடிய மனமே!நீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாம்.
  • sidin: I don’t care if sound hoity toity. I want Suchi NOW!
    (தொடர்ச்சி) Ahem. I meant I want Sushi now.
  • விக்கி: Read Es.Ra’sஉறுபசி while returning frm native.Characters r stereotypic, storyline not much impresive.But can read it once 4 xcelnt narration
  • அக்கிராஜு: Why can we never OWN a domain name? Why is it always leased for a particular amount of time?
  • சாய் ராம்: செய்ய வேண்டியவை லிஸ்ட் அடுத்த ஜென்மத்திற்கும் நீளும் போலிருக்கிறது. பேசாமல் எல்லாவற்றையும் அழித்து விட்டால்?
  • காயத்ரி: I have new found respect for my mother. Standing in the kitchen in this weather is no joke! yabbba..
  • அப்பண்டை: Work fascinates me – I can look at it for hours!
  • ஜான்: Thanks for the birthday wishes, everyone! My age is nicely divisible by 2, 3, 4, 6, 8, and 12! Going to be a squared number next year.
  • சிறில் அலெக்ஸ்: The Special Effect I meant is different. It’s said crab meat is poor man’s Viagara. Hope you didn’t have such incidents 🙂 (in reply to bsubra)
  • நித்யாஸ்: Reading Hari Kunzru’s book ‘Transmission”. Interesting novel about a computer geek from India.
  • பிரகாஷ்: dosai +milagapodi+white chutney+ghee = short cut route to heaven
  • பரத்: Shocked to hear that my friend’s roomie died in a car accident yesterday in Pennsylvania.He got engaged recently.totally 6 indians died.
  • அனிதா போரா: observation: girls in singapore are way too thin. i have yet to figure out the magic recipe for this wide spread phenomenon.
  • மோகன்தாஸ்: இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேன். நானும் அக்காவும் தான் வீட்டில், அக்கா நான் எழுவதுக்கு முன் ஆபிஸ் போய்டுவாங்க. அப்ப யாராயிருக்கும்???
  • சாகேத் வைத்யா: Saying that Java is nice because it works on all OS’s is like saying that anal sex is nice because it works on all genders (bash.org)
  • ஸ்ரீநிதி ஹண்டே: Bought mangoes at 49 a kilo-reminds me of childhood days when we used to eat dozens of them 4 free grown in our own garden
  • பிரபு ஃபெராரி: Chat is impersonal. Voice call is not. Thanks Chenthil 🙂
  • நான்: What is the difference between a blogger and a bond? A bond matures and makes money. (adapted from Chuck Leavell)
  • சந்திரசூடன்: yup. writing them all down. used to be blog. now twitter
  • லேஸிகீக்: the twitter politics just sucks
  • ஜேக்: new hobby: sneaking up on people in twitter, did you forget it’s all indexed? thx @tweetscan
  • எலிசபெத் சக்: one the one hand, anthropologist robin dunbar says the human brain can handle about 150 friendships. on the other hand, twitter.
  • ஸ்டீவ் ரூபல்: Even better. Using Friendfeed you can create your own custom Twitter search engine – like Google Coop – of just your pals.

ட்விட்டரியம்

ஒருவர் சகட்டுமேனிக்கு இடுகைகளை அளித்துக் கொண்டேயிருந்தால் அவர்களை டயரீயா என்பதை நினைவூட்டும் “ட்விட்டெரியா” என்று அழைக்கின்றனர். – நுண் வலைப்பதிவுகள் :: எம்.எஸ்.என்

அதே போல் சோஷலிசம், காந்தியம், மார்க்சியம், அழகியல், கம்யூனிசம், உளவியல் என்னும் இயம், இயல் போன்ற பின்னொட்டிட்டு, ட்விட்டரியம் தோன்றுகிறது.

நீங்கள் ட்விட்ட்ரியவாதியா என்றறிய, கீழே உள்ளதில் உடன்படும் கருத்துக்களை குறியிடவும்:

  1. [ ] If i sign up, i may get hooked on and wont be able to control it (Especially with iPhone/data plan at hand)
  2. [ ] Life is pretty routine… so after some time will get repetitive answers to “What are you doing?”
  3. [ ] Not in my information diet plan
  4. [ ] Current modes (email + phone) of keeping in touch with friends works out pretty well
  5. [ ] I am known for writing very brief messages. Wanted write longer messages. Twitter make me not get out of brief messages habit.

1 – × போட்டிருந்தால் வியாதியாகும் அறிகுறி

2 – × : நீங்கள் வலைப்பதிவுக்கு லாயக்கில்லை

3 – × : பழனி மலையில் ஏறியிருக்கீங்க. கொஞ்சம் தலாய் லாமாவாகும் வழியைப் பாருங்க

4 – × : நீங்கள் வலைப்பதிய அவசியமில்லை

5 – × : கூடிய சீக்கிரம் புத்தக பேரம் பிராப்திரஸ்து.

தொடர்புள்ள முந்தைய இடுகை: நான் ஏன் எழுதுகிறேன் – தலை பத்து

கலைஞர் கவிதை – பச்சைக்கிளி: தை இதழ் (தமிழ்வெளி)

இதழை வாசிக்க: தை இதழ் மூன்று

Kalainjar Mu Karunanidhi Tamil Kavidhai

நன்றி: கலைஞர் மு கருணாநிதி

ஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்

முதலில் வந்த பட்சிக்காக:

K.N. Rao‘s introduction to the book “Biorhythms of Natal Moon – Panchapakshi Shastram”

http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5080
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5081
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5082
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5083
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5084
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5085
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5086
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5087

சூக்குமம் நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் உள்ளது.

இவ்வாறே, மானுட இனத்தையும் பிறந்த நட்சேத்திரங்களை அடிப்படையாக வைத்து ஐந்து பிரிவுகளாகப்
பிரித்தனர். ஒவ்வொரு பிரிவையும் அடையாளம்காண ஒரு பறவையின் பெயரைக்கொடுத்தனர். அந்த
நட்சேத்திரத்தில் பிறந்தவனுக்குண்டான குணநலன்களைக் கணக்கில் கொண்டு, அதேவகை குணநலன்களையுடைய பறவையைத் தெரிவுசெய்தனர். அவைகள்:

  1. வல்லூறு,
  2. ஆந்தை,
  3. காகம்,
  4. கோழி,
  5. மயில்

பறவைகள் உருவகமே.

பறவை அரசாளும் என்றால் அப்பறவை அரசனாகவியலாது. இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும் இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும். ஆனால், செயல்கள் ஐந்துதான்.

வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் தொழில்கள் மாறும். அவையாவன:

  1. உண்ணும்,
  2. நடக்கும்,
  3. தூங்கும்,
  4. அரசாளும்,
  5. இறக்கும்.

இதை,

  1. ஊண்,
  2. நடை,
  3. நித்திரை,
  4. அரசு,
  5. மரித்தல்

என்பர்.

இப்பஞ்சபட்சி சாற்றிறத்தில்,

  • திதிப் பிரிவு,
  • அட்சரப் புணர்ச்சி,
  • பட்சிப் புணர்ச்சி,
  • அட்டயோனிப் பொருத்தம்,
  • எழுத்தலங்காரப் பொருத்தம்,
  • நாமயோனிப் பொருத்தம்,
  • வெற்றி தோல்விநிலை,
  • அருக்கனிலை,
  • பட்சியின் வலிமை,
  • படுபட்சிகள்(இறக்கும் பட்சிகள்),
  • பட்சிகளின் செயல்கள்,
  • பட்சி பாகம்

இவ்வாறு பலவற்றை இச்சாற்றிறம் இயம்புகிறது.

அகத்தியரின் பஞ்ச பட்சி சாற்றிறம்

காப்பு

1. உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து – வன்னி
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்
கதை காவியப் பொருலே காப்பு.

2. துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற்
செய்யமலர்ப் பாதஞ் சேவித்தேன் – வையத்
தைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன்
சிந்தை தனினிற்கவே செய்.

3. ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்
நின்றநிலை யாருடத்தில் நேருமே – நன்று
வழுவா துரைதாயும் வல்லவர்கள் சொன்ன
முழுவா கடத்தின் முறை.


முதலதிகாரம்.

1. மொழிக்கு முதலெழுத்தே முன்னுதிக்கு மாமதனைப்
பழித்தவலன் றன்னிலையும் பார்த்து – வழிபெறவே
பேரால் வருவனவும் பேதமறிந் துணர்ந்து
ஆராய்ந்து சொல்வ தறி.

2. அகரமே வல்லூறு ஆந்தை இகரமதாம்
உகரங் கருங்காக முன்னிப் – பகரில்
எகரமது கோழி யெஞ்ஞான்று மஞ்ஞை
ஒகார முயர் மெய்யாந் துரை.

3. ஊணடையரசு நித்திரை மரணம் உயிர்பகலிரவினிலுண்டு
நீணிலத்தரசு செய்துபின் சென்று நெறியுடனடந்து மேயுறங்கும்
பூணுறும்மர பக்க நற்பகலூண் பொன்றியுந் துயின்றரசாகிக்
சேணுறு நடையுண் டுறங்கியே சென்றுஞ் செத்தர சாளுநல்லிரவே.

ஐந்து பட்சிகளும் ஐந்து செய்கைகளை மாறிமாறிச் செய்கின்றன. அவைகளின் முறை:
பூர்வபக்கம்:
பகல்: ஊண், நடை, அரசு, நித்திரை, மரணம்.
இரவு: ஊண், அரசு, மரணம், நடை, நித்திரை.
அமரபக்கம்:
பகல்: ஊண், மரணம், நித்திரை, அரசு, நடை.
இரவு: ஊண், நித்திரை, நடை, மரணம், அரசு.

4. ஒன்றேகா லொன்ரறையீ ரொன்று முக்காலரையும்
நன்றாக விவ்வாறு நாழிகையுங் – குன்றாத
வளர்பிறைக்குந் தேய்பிறைக்கும் வாலாய மாஞ்சூட்ச
வளமுரைத்தார் முன்னோர் வகுத்து.
(இச் சாற்றிறம் அகத்தியர் காலத்திற்கு முன்னமேயே வளர்ந்து வாழ்ந்திருத்தல் வேண்டும்)

5. மறித்து மொருவகையால் வண்கடிகை யாறுந்
தெறித்ததொரு சூக்குமத்தைச் சேரக் – குறித்திடுங்கா
லுண்டு நடந்தாண் டுறங்கி யிறந்திடுமே
வண்டனைய கண்ணாய் மதி.

6. உண்பானுக் கொன்றேகா லொன்றரையிற் றானடக்க
கண்பார்த் தரசிரண்டிற் காண்போமே – பண்பாகத்
தூங்குவது முக்காலாய்த் துஞ்சுவது தானரையாய்ப்
பாங்குடைய பட்சி பலன்.

7. வினவின் முதற்றி தியாறும் பதினொன்று நத்தை
மேலிரண்டேழ் பன்னிரண்டும் விளங்கும் பத்திரையா
மினியதொரு மூன்றெட்டும் பதிமூன்றுஞ் சயையா
மிருத்தை யென்பா னாந்கிலுட நவமி பதினான்கை
புனைகுழலாய்ப் பஞ்சமியும் பத்துமுவரத் தரமும்
பூரணை மென் மறியலவன் கோன் மகரஞ் சரமாந்
தனிவிடை தேள் குடஞ்சிங்கம் நிலைராசி சாகுந்
தனுமிதுனங் கன்னியுமீ னுபய மெனத்தகுமே.

8. ஊர்கோணத்தைக் கதிர்செவ்வாய் அகரமோங் கும்பத்திரையாம்
தேர்கோளருணன் மதி இகரஞ் சயையும்பொன்னும் உகரமதாம்
வேர்கோளிருத்தைப் புகர் எகரம் வெய்யசனிபூரணை ஒகரம்
ஏர்கோளிடையாய் பகற்கடிகை யிவ்வாறிவையூண் சொன்னோமே.

9. சொன்னவகரம் வல்லூறூண் துய்ய இகரமாந்தையிணூண்
முன்னை உகரங் கொடியூணா மொழியிலெகரங் கோழியிணூண்
பன்னுமெகர மஞ்ஞையிணூண் பண்டையடையவே பறவைகளொண்
றுண்ணுமிரண்டு நடைமுடி மூன்றுறக்க நான்குசாவைந்தே.

10.சாய்ந்த அகரங்ககரமுடன் சகரந்தகரந் தந்நகரம்
வாய்ந்தபகர மகரமுடன் வகரமிவை யெட்டெழுத்தாகும்
ஆய்ந்தபருந்து முதல் யோனியிரு நான்கினுக்குமடைவாக
வேய்ந்த பொருத்தம் வெற்றியுடனிதனாற் பறவையியம்பிடுமே.

பகுதி 4

31. வல்லூறு முண்ண மாமயிலுந் தானரசாய்ப்
பொல்லாத கொழியது போயிறக்க – நல்லாய்க்கேள்
காரண்டந் தானடக்கக் கண்டுயிலு மேயாந்தை
சீரண்ட மாலுண்டு சேர்.

32. ஆந்தை யமுதுண்ணும் வல்லூறரசு செயுஞ்
சாந்த மயிலதுவுஞ் செத்துவிழும் – ஏந்திழையீர்
கோழியது நடக்குங் கொம்பார்ந்த காகமது
வீழும் விழிதுயின்று மேல்.

33. திங்கட் சனிமயிலாஞ் சேயருக்கன் கோழியதாம்
பொங்கு புதன்காகம் போசனமா – மங்கையே
அந்தணனுக் காந்தை யணிபுகர்க்கும் வல்லூறு
சந்தமும் பிற் பகற்கே சாற்று.

34. கூறிடுந் திங்களாந்தை குலவுசேய் வல்லூறு
மீறிய வருக்கன் காகம் வெள்ளியும் – புதனுமஞ்ஞை
யேறியசனி வியாழங் கோழியா மியம்புங்காலை
யாறுபத்தாகுங் கன்ன லதிற் சாகும மரபக்கம்.

35. உண்டுடனே செத்து முறங்கிய ரசாண்டும்
விண்டு நடக்கும் விழிமடவீ – ரன்றிரவில்
உண்டு முறங்கு முடனே நடத்திறக்குங்
கண்டரசனாகு மெனக் காண்.

36. வரியார் மயிலுண்ண மாலாகு மாந்தை
திரியாதோ தேசமெலாஞ் சென்று – பெரிய
வாரணமே மண்ணாள வல்லூறு தானுறங்கக்
காரணத்தாற் காக்கை சாங் காண்.

37. கண்டாந்தை யுண்ணக் கருங்கோழி தானடக்க
வண்டாயுண் வல்லூறு மன்னவனாய் – விண்ட
விழிமூடுமே காகம் வீணாக மஞ்ஞை
பழிதேட வேயிறக்கும் பார்.

38. சொற்கோழி யுண்ணத் தொடர்ந்தேகும் வல்லூறு
நற்காக நன்றாக நாடாளும் – பொற்காவின்
மண்ணின் மயிலுறங்க மாலாந்தையே மரணம்
எண் ணுமறிவா லெடு.

39. வந்த பிற் பக்கத்தில் வல்லூறு முண்ணவே
முந்து கருங்காக முடனேகும் – அந்தமயி
லாளுமே பூமியது வாந்தையே கண்டுயிலு
மாளுமே கோழியதே வந்து.

40. தண்காக முண்ணத் தனிமயிலுந் தானடக்க
மண்காவ லாந்தையது வந்தாளப் – பெண்கொடியே
கோழியுறங்கக் குல வலியானே சாக
வாழி புதனுக் கெனவே வை.

பகுதி 5

41.மந்தன் சோமன் கோழியிணூண் மானேவெள்ளி மயிலுண்ணும்
புந்தியாந்தைப் போசனமாம் பொன்னிற்காக மிரையருந்தும்
சிந்தைமகிழச் சேயிரவி தினத்தேவல்லூ றமுதுசெயும்
அந்தித்தோன்றும் பிற்பக்கத்தடைவே சொன்னோமறி நன்றே.

42.வாரணம் பொன்னேகாரி மயில்புகர் புதனேமிக்கச்
சீரணிகாகம் வெய்யோன் சிறந்தமாமுனி யாந்திங்கள்
பேரணிவலியன் செவ்வாய்ப் பிற்பக்கத் திரவிற்றங்கும்
ஏரணி குழலாயென்று மிடமறிந்தியம் புவாயே.

43.சேவல் புசிக்கத் திரியுமே யாந்தையது
மாவிற் புவியாளு மாமயிலுங் – கூவி
யுறங்குமே காக்கையுடனி றக்குமே வலியன்
கறங்கு மேகக் கலையாய் காண்.

44.அல்லின் மயிலுண்ண வார்ந்து நடக்குங்காகம்
வல்லம் புவியாளும் வாரணமு – மில்லுறங்கு
மாந்தையது சாகுமன்ன நடைக் கன்னன்மொழி
யேந்திழையா யென்னே இடர்.

45.வகுத்த மினியுண்ண மஞ்ஞையது நடக்கச்
செகத்திற் கொடியரசு செய்யவே – நகைத்துத்
தூங்குமே வல்லூறு துஞ்சுமே செஞ்சேவல்
மாங்குயிலே யென்னா மதி.

46.செப்பக் காரண்டந்தான் றின்னநடக்கும் வலியான்
தப்பிலாக்கோழி தரையாளும் – ஒப்பிலா
மாலாந்தை கண்டுயிலும் வாழ்மயிலுஞ் சாவாகும்
சேலார்விழி மடவீர் செப்பு.

47.வல்லூறினிதுண்ண வார்கோழியே நடக்க
நல்லாந்தை வந்திருந்து நாடாளப் – பொல்லாத்
தூக்கமுறு மயிலாஞ் சொல்ல விழுங்காகத்
தாக்கமலைப் பொடியாந் தான்.

48.போசனமாகில் பதிவாழும் போனார்மீள்வார் போங்கவலை
காசினிவாழுமீ மழைபொழியுங் களவுமில்லைக் கதிர்விளையும்
பேசிற்கன்னிப் பேறாகும் பிணியுந்தீரும் பெண்பெறுவள்
வாசிசெழும் பொன்வாணிபமாம் மன்னரைவெல்வாய் மாங்குயிலே.

49.யாத்திரையாகில்லை நிலைகுலையு மொன்னார் வெல்வரிருநீதிபோங்
காத்திரமில்லாக் கதிர்விளையுங் கன்னியர்வாழ்க்கை நன்றாகா
மாத்திரள்செல்லும் பொருள் கூடாவேட்கை தவழ்ந்துமணங்கூடா
சூத்திரஞ் சொன்னபடியாலே சொன்னார்பெரியோர் சுரிகுழலே.

50.அரசேசெய்யிற் புவிப்பேராம் அரசராலே பலனெய்து
முரசுமதிரும் வரிசையுடன்மூண்ட கருமந்தான் விலகும்
பரிசும்பெரியோர் திறலிடுவர் பழையபிணி போம்பயமில்லை
புரைபோங் களவுந்தான் காணும்போக்குமில்லை புரிகுழலே.

பகுதி 6

51. தூங்குமாகில் நோய்மாறா தூரம்போனார் தாம்மீளார்
ஆங்கேகரும நன்றாகா வரிவைவாழ்க்கைத் தாழ்வாகுந்
தீங்கேயல்லால் மழைபொழியாச் செந்நெல்விளையாச் செய்குறியீர்
ஓங்கிமணமுந் தாராதே யுண்மையாக வுரைத்தோமே.

52. துஞ்சுமாகிற் சாவுசொலுந் துலையாப்பிணியுந் தானெய்தும்
நெஞ்சினினைந்த பொருள்கூடா நிதியுங்காணார் நிலைகுலைவார்
வஞ்சநோயுமிக வுண்டாமனையாள் வெறுக்கிலு றவாகாள்
கஞ்சமலரார் குழலாளே கருத்தாயுரைத்த படியறியே.

53. கெடுதிய்முட நேகாணார் கிளையுடன் வாழ்வுபேறாம்
கடுகிய பிணியுந்தீருங் கலக்கமோ சற்றுமில்லை
அடைமழை பெருகவுண்டா மகமேற நிற்குந்தன்மை
முடுகிய பயணமில்லை மொழிந்தபின் நுண்ணுங்காலை.

54. வெற்றியுஞ்சுகமு முண்டாம் வியாதியும் மாற்றும்பின்பு
பற்றியகருமந் தானும் பயமில்லையக முந்தாழார்
உற்றதோர் கெடுதி காணாருறு மழையுண்டுதூரத்
துற்றவர் வரவுங்கூடச் சொல்லும் பின்னடக்கத்தோன்றில.

55. ஜெயமொடு சுகமுமுண்டு சிறந்ததோர் பயணந்தன்னில்
புயலிடுமழையு மற்பம் புவிதனிற் கலக்கமில்லை
இயம்பினாற் பெறலாம்வெற்றி யிலாபமும் நீடுமாகும்
பயம்விளையாது நாளும் அரசதாம் பறவையாகில்.

56. உன்னிடிற் பிணியுமல்லா லொருபிணி யதிகமாகும்
மண்ணில்மழையே யில்லை வையத்தில் கெடுதிகாணும்
துன்னிய நெஞ்சிற்றோடந் தோன்றிடுங் கருமஞ்செய்யும்
பன்னியே யுதிக்கும் பட்சிபயனுட னுறங்குமாகில்.

57. காவினிற் பயமுமுண்டு கலகமாங் கருமமெல்லாம்
தீவினைபடு மற்றன்றிச் செய்யுநல் வினைகளாகாச்
சாவினில் விழுந்த பட்சி தனித்து வந்துதிப்பதாலே
பூவினிற்சிறந்த மாதே புகன்றனர் பள்ளினூலே.

58. ஓதுகிலோ மாபட்சி யன்றுண்ணு மொன்றுயிர்போம்
ஏதுமிலா வொன்றையிலேகுமே – நீதிபுனை
நன்றி யுடநொன்றறையி நாடறியத் தானுறங்கும்
ஒன்று முதலாள் வதுலகு.

59. போசனத்தில் மூத்தோனும் போய்நடக்கி லிளையோனும்
ஆசனத்தி னெடியோனு மாயவனை – மாசற்றுத்
தூங்குமவன் குள்ளன் றுஞ்சிடுமே யாமாகில்
அங்கி ருவரோ ராண்டறி.

60. உண்கின்றான்பால நுயர்நடை யானே குமரன்
பண்பாமரசனே பாராள்வான் நண்பு பெறு
முற்றுந்துயில் கிழவன் மோனமுடிந்தோன் சாவோன்
பற்றுந் தவத்தின் பலன்.

பகுதி 7
61. ஊணினிலுயர்ந்தோன் வெல்வனுயர் நடைக்குள்ளன் வெல்வன்
காணுறு வெகுரோமத்தன் கடுகராச்சியத்தில் வெல்வன்
தானருந் தூக்கந்தன்னி ளிருவருள் வலுத்தோன் வெல்வன்
வேணுமோர் மரணந்தன்னுளிருவருள் வலுத்தோன் வெல்வன்.

62. ஊணில் நடைவலிது நடையி லரசுறுதி
நாணியுறங்கிடவு நன்றாகப் – பேணி
விலகுகுழலாளே யிறப்பும் பொல்லாதென்
றுலகு புகழவுரை.

63. உண்பா னடப்பானை வெல்வ னடப்பானுந்
தன்பாலரசனையுந் தானழிப்பான் – மன்காத்
திருப்பான் றுயில்வானை வெல்லத் துயில்வோன்
மரிம்மானை வெல்வன் மதி.

64. நல்லூணாகிற் கிழவன்வெல்வ நடையேயாகிலிளவல் வெல்வான்
செல்லத்தூக்கமாமரசிற் சிறந்தோன் மிகவும் வென்றிடுவான்
எல்லாமரசேயாமாகி லிளையோன் வெல்வா னென்நாளும்
பொல்லாச் சாவேயாமாகிற் போனாரிருவர் மீளாரே.

65. உரைத்திடு மிருவர்பேரு மொரு பக்ஷ¢யுண்ணுமாகில்
நரைத்திடுமவனே வெல்வனடையினி னெடியோன் வெல்வன்
கருத்தரசிளை யோன்வெல்வன் கருங்குட்டன் துயிலில்வெல்வன்
மரித்திடச் சரியாமென்றே மாதவருரைத்தார் மாதே.

66. உண்பான டப்பானை யோட்டு மிருவர்களும்
பண்பாம் பதியைப் பரிந்தோட்டும் – பெண்பாவாய்
துஞ்சினோர்க் கஞ்சுந் துயில்வோனை யாவருமே
யஞ்சலென் றழைத்திடு வாராம்.

67. வல்லூறு பொன்னிறமாம் வாழாந்தை வெள்ளியதாம்
செல்லாருங் காகஞ் சிவப்ப்பாகு – நல்லாய்கேள்
கோழியுறு பச்சை குளிர்ந்தமயில் கறுப்பாம்
நாழி மணக்க நவில்.

68. ஆந்தை சிவப்பாம் அணிகாகம் பொன்னிறமாம்
வாய்த்த பச்சை வண்ணமயிலாகும் – ஏந்திழையீர்
வெள்ளையாங்கோழி விளங்கு வரிகறுப்பு
வல்லூறாக் கொண்டு மதி.

69. வல்லூறு பார்ப்பான் வளராந்தை தான்வணிகன்
செல்லாருங் காகஞ் செகத்தரசன் – நல்லாய்க்கேள்
கோழியாம் வேளாளன் கூறுமயில் சண்டாளன்
ஆழியா நூலாய்ந் தறி.

70. பொன்மறையோனும் வலியான் பேராந்தை வேந்தனும்
துன்னுமொழிகாகந் துலை வணிகன் – மன்னும்
உழுகுலத்தோன் கோழியே யோதுங்காண் மஞ்ஞை
இழிகுலத்தோ னென்றே யிசை.

பகுதி 9

81. வல்லூறு பாலை வளராந்தை வண்குறிஞ்சி
நல்லாருங்காக நடுமருதம் – மெல்லியரே
வாரணமே முல்லை வளருமயி னெய்தல்
ஆரணத்தோர் சொல்லா லறி.

82. வல்லூறு வண்மை வளர்காக நீர்க்காலாம்
நல்ல திறலாந்தையது நாற்காலாம் – சொல்லக்
குறுங்கோழி கொம்பாங் குலவு மயில் பட்சி
பெறுங்கா ணிவையாய்ந்து பேசு.

83. வல்லூறு பொன்னாம் வளராந்தை வெள்ளியதாம்
நெல்லார்ய்ங்காக நிறஞ் செம்பாம் – பொல்லாத
கோழியது வெண்கலமாங் கோலமயிலி ரும்பாம்
வாழி மடவார் வகை.

84. வல்லூறு வருகின்றான் மாமறையோன் தூரவந்தான்
நெல்லிக் கருங்காக நிற்கின்றான் – மெல்லியரே
கோழியே மீண்டான் குலவு மயிலுமரை
நாழிகையிலே வருவா னாடு.

85. மன்னவன் வல்லூறாகின் மனிதர்கைப் புகுந்ததென்க
வெண்ணிய வாந்தையாகி லொண்டொடியெடுத்தாளென்க
உண்ணிடுங்காகமாகி லொருவனே கொண்டா னென்க
வண்ணமார்கோழி யாணும் பூமியின்மயில்தான் பெண்ணே.

86. வல்லூறுகாக மயின் மூன்று மாணாகும்
நல்லதிரவுகோ லுஞ்சொன்னோம் – பொல்லாத
ஆந்தை பொற்கோழி பெண்ணாகுமிதேதோழி
செர்ந்தறிந்து சொல்லுந் திறம்.

87. உரைகிழக்கு வல்லூறு உயிராந்தை தெற்காம்
விரையங் கருங்காக மேற்காம் – புரைதீரக்
கொத்தியிரை விழுங்குங் கோழி வடக்காகு
மத்திபத்தி னிற்கு மயில்.

88. பச்சைமயில் மேற்காம் பாரில் வடக்காந்தையா
மிக்ககிழக்காகும் வல்லூறு – மெச்சு நல்ல
தெற்காகும் காகமது தேனார்விழி மடவாய்
பொற்கோழி மத்திபமாம் போற்று.

89. மத்திபத்தில் வல்லூறு வாழாந்தை தெற்காகும்
உற்றநிதி கிழக்கேயொண் காகம் – சற்றிடமே
தெற்காகுங் கோழி சிறந்தமயின் மேற்காகும்
எக்காலுஞ் சாற்றுதற்கா மீடு.

90. காணு மகாரப் பேரானுடைய கண்டமுதல்
காணுஞ் சிரசாந்தை கைகாகம் – பேணிக்
கோழியுடம்பு மயில் முன்பின்னாகும் வலியான்
தாழுமிரு சரணந்தான் இஉஎஒஅ

Anjaathey – Bharathi Aathichoodi

அஞ்சாதே பாடல்:

1. அச்சம் தவிர்
62. நையப் புடை
76. மானம் போற்று
96. ரௌத்திரம் பழகு
2. ஆண்மை தவறேல்
43. தாழ்ந்து நடவேல்
30. சூரரைப் போற்று
45. தீயோர்க்கு அஞ்சேல்
…(¶#¶)…

11. ஓய்தல் ஒழி
61. நேர்ப்படப் பேசு
43. தாழ்ந்து நடவேல்
26. சாவதற்கு அஞ்சேல்

14. காலம் அழியேல்
16. கீழோர்க்கு அஞ்சேல்
74. போர்த்தொழில் பழகு
52. தோல்வியில் கலங்கேல்
…(¶#¶)…

69. புதியன விரும்பு
106. வீரியம் பெருக்கு
19. கெடுப்பது சோர்வு
51. தொன்மைக்கு அஞ்சேல்

107. வெடிப்புறப் பேசு
54. நன்று கருது
110.வௌவுதல் நீக்கு
53. தவத்தினை நிதம்புரி
…(¶#¶)…

13. கற்றது ஒழுகு
21. கைத்தொழில் போற்று
32. சேர்க்கை அழியேல்
72. பேய்களுக்கு அஞ்சேல்

38. ஞாயிறு போற்று
75. மந்திரம் வலிமை
36. சௌரியம் தவறேல்
55. நாளெல்லாம் வினை செய்


பாக்கி ஆத்திச்சூடி
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
12. ஔடதம் குறை
15. கிளைபல தாங்கேல்
17. குன்றென நிமிர்ந்து நில்
18. கூடித் தொழில் செய்
20. கேட்டிலும் துணிந்து நில்
22. கொடுமையை எதிர்த்து நில்
23. கோல்கைக் கொண்டு வாழ்
24. கல்வியதை விடேல்
25. சரித்திரத் தேர்ச்சிகொள்
27. சிதையா நெஞ்சு கொள்
28. சீறுவோர்ச் சீறு
29. சுமையினுக்கு இளைத்திடேல்
31. செய்வது துணிந்து செய்
33. சைகையில் பொருளுணர்
34. சொல்வது தெளிந்து சொல்
35. சோதிடந்தனை இகழ்
37. ஞமலிபோல் வாழேல்
39. ஞிமிரென இன்புறு
40. ஞெகிழ்வது அருளின்
41. ஞேயம் காத்தல் செய்
42. தன்மை இழவேல்
44. திருவினை வென்று வாழ்
46. துன்பம் மறந்திடு
47. தூற்றுதல் ஒழி
48. தெய்வம் நீ என்று உணர்
49. தேசத்தைக் காத்தல் செய்
50. தையலை உயர்வு செய்
56. நினைப்பது முடியும்
57. நீதிநூல் பயில்
58. நுனியளவு செல்
59. நூலினைப் பகுந்துணர்
60. நெற்றி சுருக்கிடேல்
63. நொந்தது சாகும்
64. நோற்பது கைவிடேல்
65. பணத்தினை பெருக்கு
66. பாட்டினில் அன்பு செய்
67. பிணத்தினைப் போற்றேல்
68. பீழைக்கு இடம் கொடேல்
70. பூமி இழந்திடேல்
71. பெரிதினும் பெரிது கொள்
73. பொய்ம்மை இகழ்
77. மிடிமையில் அழிந்திடேல்
78. மீளுமாறு உணர்ந்து கொள்
79. முனையிலே முகத்து நில்
80. மூப்பினுக்கு இடங்கொடேல்
81. மெல்லத் தெரிந்து சொல்
82. மேழி போற்று
83. மொய்ம்புறத் தவம் செய்
84. மோனம் போற்று
85. மௌட்டியந்தனைக் கொல்
86. யவனர்போல் முயற்சிகொள்
87. யாவரையும் மதித்து வாழ்
88. யௌவனம் காத்தல் செய்
89. ரஸத்திலே தேர்ச்சி கொள்
90. ராஜஸம் பயில்
91. ரீதி தவறேல்
92. ருசிபல வென்றுணர்
93. ரூபம் செம்மை செய்
94. ரேகையில் கனிகொள்
95. ரோதனம் தவிர்
97. லவம்பல வெள்ளமாம்
98. லாவகம் பயிற்சி செய்
99. லீலை இவ்வுலகு
100. உறுத்தரை இகழ்
101. உலோக நூல் கற்றுணர்
102. லௌகிகம் ஆற்று
103. வருவதை மகிழ்ந்துண்
104. வானநூல் பயிற்சிகொள்ள
105. விதையினைத் தெரிந்திடு
108. வேதம் புதுமை செய்
109. வையத் தலைமைகொள்

நன்றி: Andhimazhai – பாரதியார் ஆத்திச்சூடி

பெண்களும் ஆண்களும் சேர்ந்து கல்வி பயிலவா? அது கலவிக்குத்தான் இட்டுச் செல்லும்?

இது நியு யார்க் டைம்ஸின் சமீபத்திய கட்டுரை:
Teaching Boys and Girls Separately – Single-Sex Public Education – Children and Youth – Schools – Gender – New York Times: “Why Gender Matters: What Parents and Teachers Need to Know About the Emerging Science of Sex Differences.”

நண்பரின் விரிவான பதிலில் சில பகுதிகள்:

மார்கரெட் அட்வுட் என்பாருடைய அரை-பெண்ணிய நாவல் ஒன்று 90களில் வந்தது என நினைவு. ‘The handmaid’s tale’ என்று தலைப்பு என நினைக்கிறேன். நல்ல நாவல். இதை ஒரு சுமார் படமாகக் கூட எடுத்தார்கள். (The Handmaid’s Tale (1990))

இந்த நாவலில் இப்படி ஒரு ஆண்- பெண் பிரித்து வாழ்ந்த சமுகம் கற்பனை செய்யப்படுகிறது. இதில் பெண்கள் கடும் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டு, உடல்கூறு வழியே பகுக்கப்படுகிறார்கள். இது முற்றிலும் பெண் வெறுப்பை மையம் கொண்ட கதை இல்லை, ஆனால் பெண்ணடிமைத்தனத்தைக் கொண்டது. கிட்டத்தட்ட மத்தியகால யூரோப்பின் பெண்கள் நிலை, இன்றைய அரபிய இஸ்லாமிச சமுதாயப் பெண்களின் நிலை, தாலிபானிய, பின்லாடனிய இஸ்லாமியச் சமுகம் இங்கு கதையில் வரும் உலகம் போன்றது.

இன்னொரு விருப்பமான எழுத்தாளர்- உர்சுலா லெ க்வின் (Ursula le Guin) இவரும் இப்படி ஆண் பெண்கள் கடுமையாகப் பிரிக்கப்பட்ட ஒரு சமுகத்தை வைத்து அருமையான நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த நாவலில் பெண்ணியப் பிரச்சார நெடி குறைவு, உளவியல் நுட்பங்கள் அதிகம்.

சுட்ட மொழி – சன்னாசி on ஜெயமோகன் vs விகடன்

தான் புதிதாகக் கற்றுக்கொள்ளும் எந்தவொரு விஷயத்தையும், சமகாலத்தின் மிக முக்கியமான, நிராகரிக்க இயலாத ஒரு போக்காக பில்டப் கொடுத்து நிறுவ முயல்வதைப் படிக்கநேர்வது கடுப்பேற்றும் விஷயம்.

பெரியார் குறித்து எழுதியிருந்த வாசகருக்கு எழுதியிருந்த பதிலிலும், பல காலம் முன்பு தங்கமணிக்கு கீதை குறித்து எழுதியிருந்த பதிலிலும், பதிலைத் தொடங்குமுன்பே, ‘இதுகுறித்து நாகரிகமாகக் கேள்வி எழுப்பியதற்கு நன்றி’ என்ற ஆழ்நீரோட்டத்துடன் தான் பதில் தொடங்கியிருக்கும். இதுதான் இந்த சுயபிரஸ்தாப இலக்கிய ஜல்லி லாரி, தனது பிரசங்கத்தைத் தொடங்குமுன்பே தன்னுடன் உரையாடுபவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்ராயம்.

எவ்வளவு நாசூக்கான உத்தி – சுஜாதாவிடம் முன்னுரை வாங்குவது அல்ல; விஷ்ணுபுரம் சுஜாதாவைத் தாண்டியது என்ற வெகு தெளிவான பிரக்ஞையோடு, சுஜாதாவின் முன் அதை வைத்து ‘உன்னால் இதற்கு முன்னுரையாவது எழுதமுடியுமா’ என்று தான் அவரைத் ‘தாண்டிவிட்டதை’ பஸ்மாசுரன் போல உணர்த்துவது!! பள்ளியில், நான் சென்ட்டம் நான் சென்ட்டம் என்று பரீட்சைக்குப் பரீட்சை பேப்பரை ஆட்டிக்கொண்டு திரிந்து, நீ எவ்வளவு நீ எவ்வளவு என்று கேட்டுக்கொண்டு திரியும் முதல்பெஞ்சுப் பயல்களின் சல்லித்தனம் போன்றதைத் தாண்டி இதில் வேறேதும் இல்லை.

அங்கதம் என்ற போர்வை போர்த்தினாலும், தன்னை மீறியவர்களுக்கு செக் வைக்க பொதுவாக உபயோகிக்கப்படும் உத்தி இது என்பதும், அங்கதத்தை விமர்சனத்துக்காக உபயோகிக்காமல் ஒரு escape/defense mechanismஆக உபயோகிக்கிறவர்கள் கையில் இது கிடைக்கும்போது எவ்வளவு அசிங்கமாக இருக்கும் என்பதையும் இதுமாதிரிப் பத்திகளைப் படிக்கும்போது உணரமுடிவது பிறருக்கும் சாத்தியமாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

அவரது பத்திகளின் he said she said anecdotes பெரும்பாலானவை தினமலர் பாணியிலான ‘என்று மக்கள் நினைக்கிறார்கள்‘ பாணியிலானவை என்பதுதான் என்பது என் ஊகம்.

மெக்கென்னாஸ் கோல்டு காலத்து கிழடுகள் (மரியாதைக்குறைவாக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்) எவற்றிடம் அந்தப் படம் பற்றிக் கேட்டாலும் மெக்கென்னாஸ் கோல்டா, அந்த பருந்து(கழுகு) வர்ற சீன் தானே? என்பார்கள் – ரஜினின்னா யாரு, இந்த சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில பிடிப்பானே, அவந்தானே என்று இங்கே சந்தித்த ஒரு போன தலைமுறை மலையாளி என்னிடம் கேட்டது போல.

இன்றைக்கு சுஜாதாவைத் தனது முன்னோடியாகக் கொண்டிருப்பதை தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரிய புரட்சியாகச் சித்தரிப்பது போல, ஜி.கே.செஸ்டர்டனையும் அவரது ‘Father Brown’ கதைகளையும் போர்ஹேஸ் முன்னோடியாகக் கொண்டிருப்பதையும், புனைபெயரில் ராஜேஷ்குமார் ஸ்டைலில் துப்பறியும் கதைகளை எழுதியதையும் ஒரு ‘புரட்சி’ யாக போர்ஹேஸ் சுயதம்பட்டமடித்து எழுதி நான் படித்ததில்லை!!

  • மண், வேர், வெங்காயம் என்று பேசுபவனை தல்ஸ்தோயும் தாஸ்தாயெவ்ஸ்கியும் படித்திருக்கவேண்டும் என்று மடக்கலாம்.
  • குமுதம் விகடன் படித்து வருபவனை, சிறுபத்திரிகைகளில் நடப்பது குறித்த எந்த அறிவுமற்றவர்கள் என்று மடக்கலாம்,
  • கொஸாக்குகளையும் பனியையும் கற்பனை செய்துகொண்டு, ராதுகா பப்ளிஷர்ஸ் புத்தகங்களில் மட்டுமே அபாக்கியமாகத் தனது தொடக்கத்தைக் கொண்டுவிட்டவர்களிடம், அவர்களுக்கு வெகுஜன இலக்கியம், pulp குறித்த புரிதல் எப்படி இல்லை என்று அவனையும் மடக்கி அடிக்கலாம்.
  • பல்ப்பையும் படித்து சிறுபத்திரிகையையும் படித்தவனாக இருந்தால் ஆன்மீக, தத்துவ விசாரமும் விளக்கெண்ணெயும் இருக்க வேண்டும் என்று டபுள் இம்பாக்ட் கொடுக்கலாம்.

வெளிப்படையாகப் பேசாத பாண்டிகளால் ‘காலை’க் கழுவுது என்றுதான் சொல்ல முடியும்; குண்டியைக் கழுவுது என்று வெளிப்படையாகச் சொல்ல வெக்கப்படமாட்டானா பாண்டி?

தனது Order of thingsன் முன்னுரையில், இந்தப் புத்தகத்தைப் படிக்குமளவு முயற்சியெடுக்கும் வாசகன் இதை எப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் என்று நன்றியுடன் கூறுகிறேன் என்னும் எழுத்தாளர்கள் எங்கே, என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது? என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்?தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள். யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும் என்று எழுதும் இந்த சல்லிப்பயல்கள் எங்கே.

தமிழ் எழுத்தாளர்களின் முதன்முதலில் பாத்டப்பைப் பார்த்தது சுந்தர ராமசாமி வீட்டில்தான் என்றும் ‘பதிந்து’ வைத்துவிட்டால், பொருந்தவேண்டிய இடத்தில் தானாக அது பொருந்திக்கொள்ளும்.

பாண்டிப்பயல்களின் மொழியில் pubic hairக்கு வார்த்தை இல்லை என்று அங்கதப் பத்தி எழுதும் இவரின் ‘மலம்’ கதையில், கதை முழுக்க மலம் மலம் மலம் மலமோ மலம்தான். மருந்துக்குக்கூட ‘பீ’ கிடையாது, பொறவு என்ன? அவ்வளவு அக்கறை இருந்தால் pubic hairக்கு வார்த்தை கேட்ட மூத்த எழுத்தாளருக்கு நாஞ்சில் பாசையில் சிதிமயிர் என்று எடுத்துக் கொடுத்திருப்பதுதானே. ஓ, அதை நாங்களெல்லாம் செய்யமாட்டோம் திராவிட இயக்கத்தில் ஊறி வந்த பாண்டிக்குஞ்சுகள்தான் செய்யும், இல்லையா.

பாண்டிகள்தான் கேவலம். பாண்டிப் படங்களில் நடிக்கும் ஆர்யா என்ற பையனும் கூட ‘பாய்’ பையந்தான் (இன்சைடர் இன்பர்மேசன்). பாண்டிகள் பேரிலிருந்து ஜாதியைக் கழற்றி வைத்துவிட்டார்கள். புதிய தலைமுறை ஜாதியை முற்றிலும் கழற்றப் பார்க்கிறது, அடுத்த தலைமுறையில் மீதி இருப்பதும் காணாமல் போகவேண்டுமென்றுதான் நம்பிக்கை வைக்கவேண்டும்.

கேரளத்தை விட ஜனத்தொகை அதிகமுள்ள தமிழ்நாட்டில் பிரச்னைகளும் அதிகமாகத்தான் இருக்கும். கர்நாடகா ஆந்திராவில், ஏன் கேரளத்திலும் இருப்பது போல ஒன்றிரண்டு ஜாதிகளின் ஆதிக்கத்திலா மொத்த மாநிலத்தின் அரசியலும் இருக்கிறது? லிங்காயத்துகள், கம்மாக்கள் ரெட்டிகளைத் தாண்டி ஆந்திரா கர்நாடகாவில் யாருடைய ஆதிக்கமாவது (பிரதிநிதித்துவமாவது) இருக்கிறதா?

கல்லூரியில் படிக்கும்போது தெற்கிலிருந்து வரும் நாடார் பையன்களை பொதுவாக ‘பனையேறி கொட்டை தேஞ்சு போன’ கோஷ்டிகள் என்று இன்னொரு கும்பல் (குறிப்பாக, இதுவுமே ஒரு தென்தமிழகக் கும்பல்) கிண்டலடிக்கும் – ஆக, இதிலுள்ள ‘அங்கத’ உணர்வை ரசிப்போமா நாம்? தோழர்களுக்கு நடுவில் என்றால் சரி, அது தான் கிண்டலடிக்கும் மற்றவனுடனான சௌஜன்யத்தைப் பொறுத்தது. அதைத் தாண்டி, பொதுவில் எழுதும்போது ‘நாடார்கள் பனையேறிப் பனையேறி கொட்டை தேஞ்சுபோன கோஷ்டிகள்’ என்று மற்றொரு தமிழன் எழுதுவதற்கும் ‘கறுப்பர்களுக்கு சாமான் வளர்ந்துள்ள அளவு மூளை வளர்ந்திருக்கலாம்’ என்று ஒரு வெள்ளைக்காரன் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை – இரண்டும் அங்கதம் அல்ல – கேவலமான ரசனை.

சன்னாசி

Bolshevescent by Peter Gizzi

You stand far from the crowd, adjacent to power.
You consider the edge as well as the frame.
You consider beauty, depth of field, lighting
to understand the field, the crowd.
Late into the day, the atmosphere explodes
and revolution, well, revolution is everything.
You begin to see for the first time
everything is just like the last thing
only its opposite and only for a moment.
When a revolution completes its orbit
the objects return only different
for having stayed the same throughout.
To continue is not what you imagined.
But what you imagined was to change
and so you have and so has the crowd.

from The Outernationale, © 2007 by Peter Gizzi, published by Wesleyan University Press.

நன்றி: Poets.org – Poetry, Poems, Bios & More – Bolshevescent

நான்கு சிறுகதை – வாசக அனுபவம்

‘இலக்கியச் சிந்தனை’யால் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ள கதை: Marathadi : மீனாமுத்து: “யாத்தி”

அமெரிக்கா போன்ற சட்டதிட்டங்கள் ஓரளவு கடுமையாக, உடனடியாக நிறைவேற்றும் நாடுகளிலேயே, இந்தக் கொடுமை எளிமையாக, அன்றாடம் நடந்தேறுகிறது, ‘படித்தவர்கள் பண்பற்றவர்கள்’ என்பது போல் பல கேஸ்கள்; சமீபத்தில் கைராசியான நியு யார்க் மருத்துவ தம்பதியர்கள் கைதாகி, குற்றமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நிகழ்வை ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையாகக் கண்முண் கொணருகிறார். அதிர்ச்சிக்காக மட்டும் இல்லாத நேர்த்தியான முடிவு. மிகவும் பிடித்திருந்தது.

மென்மையான எழுத்துக்களை தட்டச்சும்போது கூட என்னுடைய கீபோர்ட் சத்தமெழுப்பி, சிந்தையைக் கலைத்துப் பொடும். அது போல், சிறுகதையைப் படிக்கும்போது ஆச்சரியக்குறிகள் தொடர்வண்டியாக நடுவில் வந்து ஓசையெழுப்புகின்றன.


Thinnai: “ஒரு நாள் உணவை… – ரெ.கார்த்திகேசு”

குழந்தைகளை கம்பேர் செய்யக்கூடாது; சுஜாதாவையும் சுரதாவையும் ஒப்புமையாக்கி தராசு எல்லாம் கூடாது என்று எண்ணுபவன் நான். இருந்தாலும், முந்தைய கதையில் முழுநீள வாழ்க்கையே விவரித்திருக்க, இங்கு சம்பவம் விரிகிறது.

விவரணப்படம் போல் ஆகிவிடும் அபாயம் இருந்தாலும், அவ்வாறு போரடிக்காத சஸ்பென்ஸ் நோக்கிய விறுவிறுப்பு. மணமான இல்லறத்தில் நிகழ்வதை படம் பிடித்து ஓடவிடும் லாவகம்.

நான் என்ன நினைக்கிறேன் எனக் கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 10-15 நிமிடம் பேசுவார்கள். சிலர் நம் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே பேசுவதால் அகலவும் முடிவதில்லை.

போன்ற களையான பிரதேசங்கள்.

தவறவிடக்கூடாத ஆக்கம்.


அ.முத்துலிங்கம் எழுதி விரைவில் வெளிவரப்போகும் சுயசரிதைத் தன்மையான நாவலின் ஓர் அத்தியாயம்தான் மேலே தந்திருப்பது.

என்று பீடிகையுடன் முடிகிறது: Thinnai – யுவராசா பட்டம் – அ.முத்துலிங்கம்

விமர்சிக்கலாம் என்று படிக்க ஆரம்பிக்கும் ஆணவம், தொலைந்து போக வைக்கும் சாமர்த்தியம். ‘நிஜம்தானோ!’ என்னும் பிரமிப்பு. ‘அச்சச்ச்சோ’ என்று தொடரும் பரிதவிப்புடன் பதற வைத்து எழுத்துக்குள் மூழ்க வைக்கிறார்.


நுனிப்புல்: ஐந்தும் ஆறும் – புனைவு என்பது உணர்ச்சிகளை சித்தரிப்பது; கேள்விகளை எழுப்புவது.

‘நந்தா’ திரைப்படத்தில் பல காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், அந்த துவக்க காட்சியில் நடக்கும் பிரதோஷ உபன்யாசம் மறக்க முடியாதது. எள்ளல்தன்மையுடன் தொடரும் திரைக்கதையில் வீட்டில் நடப்பதைக் காட்டி லெக்சர் மகிமையை சிந்திக்கவைப்பார்கள். திருக்குறள் என்னதான் கலக்கலாக இருந்தாலும், அதைப் போல் போதனை இலக்கியம் எனக்கு அசூயையே தருகிறது.

ஒரு வேளை.. ‘பெண்ணெழுத்தின் நாடித்துடிப்பு பெண்ணிற்குத்தான் புரியும்’ என்னும் மங்கையர் மலர் கால ஃபீலிங்குடன் மனைவியிடம் கொடுக்க, அவரோ லாஜிக்கலாக கேள்விகளை எழுப்பும் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார். ‘எலக்கியம்னா அனுபவிக்கனும்; நோ க்வெஸ்டின்ஸ்’ என்று மகளுக்கு ஈசாப் நீதிக்கதைகளை வாசிப்பதுடன் அனுபவம் முடிந்தது.

Writer Sujatha

Thiruppur Krishnan:

“வேண்டாம் வரதட்சிணை” என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் – என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:

பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!


InterviewsTFM Page Magazine – Screen-Turners: Chap 3.1 – Something about Sujatha (Naaz)

தீராநதி – குமுதம்.காம்: “சுஜாதா நேர்காணல்”

Miscellany:

அவருக்கு பிடித்த 10 படங்கள் « Snap Judgment

கல்கி வளர்த்த சிரிப்பலைகள் « Appusami.com

site:www.thinnai.com சுஜாதா – Google Search

Excerpts from his Works:
சுஜாதா « Snap Judgment: என் இனிய இயந்திரா

கண்ணம்மா: சுஜாதாவின் சிறு சிறுகதைகள்: (Six Word Stories)

Sujatha Turns 70 – Katrathum Petrathum: Anandha Vikadan « Tamil Archives

Experiences:

அறுபது அமெரிக்க நாட்கள் (17) « தமிழன் எக்ஸ்பிரஸ் :: டிசம்பர் 25-31, 1996

Bloggers with Sujatha

கில்லி – Gilli » Blog Archive » Meeting writer Sujatha

தேசிகன் பக்கம்: “எழுபத்தொன்று – சுஜாதா”

தேசிகன் பக்கம்: “ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா”

ஒரு அரட்டையும் ஒரு பதிவும் « Snap Judgment

Family & Life:

பிச்சைப்பாத்திரம்: எழுத்தாளர் (திருமதி & திரு) சுஜாதாவின் நேர்காணல்

Movie Reviews:

தேசிகன் பக்கம்: வேட்டையாடு விளையாடு விழா பற்றி சுஜாதா

Controversy, Issues, Critiques:

கில்லி – Gilli » Blog Archive » Sujatha’s Short Story & Bloggers’ Reaction

பெருசுகளின் பெருங்காப்பியங்கள: புறநானூறு : சுஜாதாவின் பிழைகள்

கில்லி – Gilli » Blog Archive » Azhagiya Periyavan, Sujatha & Dalit Ilakkiyam

Book reviews:

PK Sivakumar – கற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்

Thinnai: “மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘) – பாவண்ணன்”

Thinnai – ஜெயமோகன்: “தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா: உயிர்மை பதிப்பகம்”

Thinnai: “சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் – ஜெயமோகன்”

Homepages:

:: WriterSujatha.com:: Home Page

:: Ambalam :: Tamil Ezine

Sujatha – Wikipedia, the free encyclopedia

சுஜாதா (எழுத்தாளர்) – தமிழ் விக்கி


கணிப்பொறி “கேண்டீன்” இரண்டிலும் அடிக்கடி ஒரேபிரச்சனைதான். சர்வர் ப்ராப்ளம்.
-சுஜாதா, அம்பலம்இந்தியா டுடே 30-8-2000 :: சுஜாதா பதில்கள்

கேள்வி: ‘கவிதைகளைத் திருடி எழுதினார் கண்ணதாசன்’ என்று ஒரு கவிஞர் கூறியுள்ளாரே?

பதில்: மணிமேகலையில் திருக்குறள் வருகிறது. ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது. மற்ற இலக்கியங்களில் வரும் வரிகளைப் பின்வரும் இலக்கியக்கர்தாக்கள் பயன்படுத்துவது இயல்பானதே. ஷேக்ஸ்பியர் தட்டின வரலாறுகளும் வரிகளும் எண்ணற்றவை. ஷேக்ஸ்பியரிடமிருந்து தட்டினதும் அவ்வண்ணமே. இத்தகைய குற்றச்சாட்டுகள் நிற்காது. சாதனைகள் தான் நிற்கும்.


ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா
ஆர். விஜி, அரகண்டநல்லூர்

இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்..?

பெட்ரோலும், கூட்டுக் குடும்பங்களும், கல்யாணமும், பிள்ளைப் பேறும், தாய்ப்பாசமும், விமான, பஸ் பயணமும், செலுலாய்டு சினிமாவும், டெலிபோனும் பெரும்பாலான வியாதிகளும், கடவுள் பக்தியும், கதை, கவிதைகளும், ரூபாய் நோட்டும் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது அழிந்து போக. தற்கொலை மட்டும் பாக்கியிருக்கும்.

த. சத்தியநாராயணன், அயன்புரம்.
உலகின் முதல் டெர்ரரிஸ்ட் யார்?

சதாம் என்கிறது அமெரிக்கா. ஒஸாமா என்றும் சொல்லி வந்தார்கள். ‘அமெரிக்காதான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட்’ என்கிறார் நொவம் சாம்ஸ்கி. மகாபாரதத்தில் துரியோதனன் மகன் ஒருவன் டெர்ரரிஸ்ட்டாக இருந்திருக்கிறான். இந்திரன்தான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட் என்று இந்து புராணங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர் எழுதியிருக்கிறார். முதல் டெர்ரரிஸ்ட் சரித்திரத்தில் முதன் முதல் ஒடுக்கப்பட்ட குழுவினரில்தான் பிறந்திருக்க வேண்டும்.


வாக் போகையிலே… – மெரீனா ”என்ன சார், ஈவினிங் வாக்கா?””ஆமா..”

”ஏன், இப்பல்லாம் நீங்க ஒண்ணுமே எழுதறதில்லே?”

”நிறைய எழுதியாச்சே..”

”நிறைய பேசியாச்சேன்னு, யாராவது பேசாம இருக்காங்களா?” உதிர்த்த பொன்மொழியை அவரே ரசித்துக்கொண்டார்!

”எப்பவாவது எழுதக் கூடாதா?”

”எதை எழுதுவது?”

”எதையாவது…”

”எதையாவது எழுதினா யாரு போடுவாங்க..?”

”யாராவது..”

”யாரு படிப்பாங்க?”

”படிக்கிறவங்க படிச்சுட்டுப் போறாங்க…”

”நீங்க படிப்பீங்களா?”

”ஐயையோ! என்னை நம்பி எழுதாதீங்க… எனக்கு எதைப் படிக்கவும் நேரமில்லே.. போறபோக்குலே பத்திரிகை போஸ்டர்களைப் படிக்கிறதோட சரி..” புறப்பட்டேன்.

”சும்மா இருக்காதீங்க.. என்னை மாதிரி தினம் டைரியாவது எழுதுங்க. எழுதற பழக்கம் விட்டுப் போயிடக்கூடாது!”