வாசன் பதிவை (படிக்க: அமேரிக்காவில் தமிழன் » அமேரிக்க மாநிலங்கள்) பார்த்தவுடன், நான் சென்ற மாகாணங்களின் பட்டியலைப் போட்டுப் பார்க்க எண்ணம்.
create your own personalized map of the USA
ஹ்ம்ம்… இன்னும் நிறைய பாக்கி இருக்கு!
வாசன் பதிவை (படிக்க: அமேரிக்காவில் தமிழன் » அமேரிக்க மாநிலங்கள்) பார்த்தவுடன், நான் சென்ற மாகாணங்களின் பட்டியலைப் போட்டுப் பார்க்க எண்ணம்.
create your own personalized map of the USA
ஹ்ம்ம்… இன்னும் நிறைய பாக்கி இருக்கு!
பாஸ்டனில் பொங்கல் விழா
இடம்: லிட்டில்டன் மேல்நிலைப் பள்ளி அரங்கம், லிட்டில்டன், மாஸசூஸட்ஸ் (அடையும் வழி அச்செடுக்க)
நாள்: ஃபெப்ரவரி 3, 2007 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3:30
நான் எதுவும் நிகழ்ச்சி தரப்போவதில்லை என்பதால், நீங்கள் தைரியமாகப் பார்க்க வரலாம். புதிய நண்பர்களை அறிமுகம் பெறவும், பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பிக்கவும் அருமையான வாய்ப்பு.
அமெரிக்கா வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அலுவலில் இருந்து அழைப்பு. அப்பொழுதெல்லாம் வேலைக்கு சேருவதற்கு, நல்ல நிறுவனமாக இருந்தால் கணிப்பொறியாளர்களுக்குப் போதாது. ஹ்யூமன் ரிஸோர்சஸில் க்ளோசப் விளம்பரம் கொடுக்கத் தகுந்த பல்வரிசையுடன், பாரதிராஜா கண்ணில் பட்டால் ‘ர’ வரிசை நாயகியாகும் அபாயம் வாய்ந்த மேலாளர் வாய்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட நிறுவனத்தில்தான் நானும் இருந்தேன். ‘அமெரிக்கா போகப் போறோம், வெட்டிப்பயல் கதைகளில் வருவது போல் காதல் மலர்ந்திருக்குமோ!?’ என்னும் பயிர்ப்பு கலந்த துள்ளும் மனத்துடன் சென்றேன்.
நேர்காணல் அன்று பளீரிட்ட அதே பற்பசை சிரிப்பு. போகியன்று வீட்டுக்கு வெள்ளையடிப்பதை, நாள்தோறும் ‘வைட்டனர்’ போடுவதை அறியாத வயது. அமெரிக்கா குறித்து துப்புகள் கொடுக்க ஆரம்பித்தாள்.
அவற்றில் இன்றும் கடைபிடிக்க, கால் கட்டைவிரலை கார்பெட்டில் சுழித்து நாணிக் கோணுவது: ‘சுயதம்பட்டம்‘.
தற்பெருமை கூடாது என்று வளர்ந்த அறிவு. இளைய தளபதி வேறு ‘அடங்காம ஆடினே தலை இருக்காது’ என்று மிரட்டி வைத்திருந்தார். கைக்கெட்டும் கனவு (கன்னியா இல்லையா என்றறியேன் பராபரமே) HR ‘கொட்டு முரசே’ என்றது. பஸ்மாசுரனாக மோகினியிடம் அக அழகை முன்வைக்கலாம் என்னும் எண்ண விமானத்தை, சடன் ப்ரேக் இட்டு, அமெரிக்க விமானக்குதிரையை முடுக்கிவிட்டேன்.
ஆட்டோ ரிக்ஷாவில் குறைந்தபட்சமாக இருபது ரூபாய் கேட்பது போல், அமெரிக்காவில் அனைவருமே தங்கள் performance appraisal-களில் 20% லாபத்தைக் கூட்டியதற்கு உதவியதாக உட்டாலக்கடி போடுகிறார்கள். அனைவரின் மதிப்பு கூட்டு சதவிகிதத்தைக் கணக்கிட்டால், கம்பெனிக்கு 200 கோடி% லாபம் அதிகரித்திருக்க வேண்டும்.
வலை வந்தபிறகும் இந்த அன்புத்தொல்லையை சகபதிவர்கள் செவ்வனே நிறைவேற்றினார்கள். ‘நான் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறிது நேரம் விழித்திருக்கவும்.‘ என்று வருமுன் காப்போன் மின்மடல் வரும். கொஞ்ச நாள் கழித்து ‘நான் பதிவு போட்டு விட்டேன். படிக்கவும்.‘ என்று மாற்று செய்தியோடை அறிவிப்பு வரும். இன்னும் கொஞ்ச மாதம் கழித்து ‘நான் பதிவு எழுதினேனே! படித்து முடித்து ஒழுங்கு மரியாதையாக மறுமொழி போடவும்.‘ என்று செல்லக் கொஞ்சல் வந்து சேரும்.
சுயம் பேசுவதை நிலைநிறுத்த இத்தனை முஸ்தீபு எதற்கு?
சுட்ட செய்திகளைத் தொகுத்து வைக்கும் Tamil News பதிவிற்கு கூகிள் பக்க மதிப்பில் 6/10 கிடைத்திருக்கிறது.
நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம் போன்ற ஆதிகால அசல் தாதாக்களும், தேன்கூடு, தமிழ்மணம் போன்ற இக்கால கல்லடி கணை வாங்கும் வலைமாந்தர்களும் கூட 5/10 என்று கூகிளாண்டவரால் அருள்பாலிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், ஆறு போட்டது பெருமைக்குரியது.
சொர்ணமால்யா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களைத் தேடித்தான் பலரும் வருகிறார்கள். சாத்தான் கேட்டது போல்
Prashanth – Grahalakshmi : Counseling to avoid Divorce – A quick end to the Cine Star’s marriage life « Tamil News: இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி இந்த வலைப்பதிவை நடத்திவருகிறீர்கள். இந்த மாதிரி முக்கியமான செய்திகளைத் தவிர்த்து அதில் கிடைக்கும் நேரத்தில் இந்த வலைப்பதிவில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கலாமே
தோன்றினாலும், நாளொன்றுக்கு நமீதா ரசிகர் மன்றத்தையும் நீலிமா நாயுடுவையும் வைத்துதான் 1,500 வாடிக்கையாளர்கள் கிடைக்கிறது. எத்தனை பேர் ‘படம்’ பார்க்க வருகிறார்கள், எத்தனை பேர் ஞானம் பெற வருகிறார் என்பதெல்லாம் புள்ளிவிவரங்களில் அறியமுடிவதில்லை.
ஏதோ கூடிய சீக்கிரம் சேமநல நிதியை நம்பாத மாதிரி, இணைய வங்கியில் ஓவர்ஃப்லோ ஆகுமாறு, லஷ்மி வந்து சேர்ந்தால் சரி.
உங்களின் பக்க மதிப்பை அறிய இங்கு செல்லவும்: Google Page Rank Checker – FREE PageRank Calculator
கூகிள் வலைமதிப்பு நுட்பம் குறித்து அறிய: PageRank – Wikipedia
உங்களை நீங்களே முன்னிறுத்திக் கொள்வதாக இருந்தால் கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்கலாம்:
1. உங்களை நீங்களே எள்ளல் செய்து நிதர்சனத்தை ஒப்புக் கொள்ளவும். Shameless self-promotion என்று மறுப்புக் கூற்று இடலாம். தினமணி, மாலைமலர், பிபிசி தளங்களின் முதுகில் சவாரி செய்து திருட்டுத்தனமாக பெற்றது என்று ஒப்புக் கொள்ளவும்.
2. நண்பர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில், ஒவ்வொருவரையும் தனிப்பட விளிக்கவும். பொத்தாம் பொதுவாக கூட்டாஞ்சோறு To: அடித்தால், பயனில்லை.
3. மற்றவர்களைக் கவர, அவர்களின் சுட்டி கொடுத்தாலே போதுமானது. ‘உன்னைப் பற்றி கூட, நடுவில் ரெண்டு வார்த்தை சொல்லியிருக்கேன்‘ என்று சொன்னாலே, பலரும் விழுந்தடித்து வந்து படித்துவிடுவார்கள்.
கடைசியாக Tamil News குறித்த சில புள்ளிவிவரங்கள்:
இதுவரை மொத்த பார்வையாளர்கள்: 122,064
ஒரே நாளில் மிக அதிகமாக வந்தவர்கள்: 1,810
நகலெடுத்து, சுராதாவில் எழுத்துரு மாற்றி பதிந்த செய்திகளின் எண்ணிக்கை: 750
அவற்றின் தொடர்ச்சியாக வந்த மறுமொழிகள் (பெரும்பாலானவை என்னுடையது): 233
இடுகுறிச் சொற்கள் (Tags): 5,316
Posted in Page Rank, Personal, Self Promotion, Statistics, Tamil Blogs, Tamil News
குடியரசு தினம் (படிக்க: Republic « Tamil News). பாராட்டினால் இந்திய ராணுவத்தின் நேனோமீட்டர் குறைபாடுகளை கிகாமீட்டராக முன்னிறுத்தி, மகிழ்ச்சியான நிகழ்வை இகழ்ந்து தள்ளுவார்களோ (படிக்க: Military « Tamil News) என்னும் காபந்து.
எனவே, இனிய அவுஸ்திரேலியா தின வாழ்த்துகள்.
‘No Worries’ என்பது ஆஸ்திரேலிய தாரக மந்திரம். தமிழில் ரெஹ்மான் பாட்டுடைத்தது போல் ‘முஸ்தஃபா, முஸ்தஃபா டோண்ட் வொர்ரி முஸ்தஃபா‘ என்று குருபாயாக (Guru – Digest & My Views : ஈ – தமிழ்) சாதிக்கச் சொல்லி உற்சாகமூட்டும் தினம்.
இரு நாடுகளிலும் மகிழ்ச்சியும் களியாட்டமும், அவற்றை மறுக்கும் சுதந்திர கருத்தோட்டமும் தொடரட்டும்.
Greetings | Australia | India | Republic Day
Posted in Uncategorized
சிறில் அலெக்ஸின் (பார்க்க: தேன்: தீபாவளி ஜப்பானியத் திருவிழாவா? அல்லது கூகிள் வீடியோ) பதிவைப் பார்த்தவுடன் அஞ்சலில் கிடைத்த கிண்டல் (சிற்சில கூட்டல் கழித்தலுடன்)
கொஞ்ச நாள் முன்னாடி கண்ட பதிவு: பினாத்தல்கள்: கனவில் வந்த தமிழ்மணம் (10 Jan 2007)
தலைப்புக்கும் பதிவுக்கும் பொருத்தம் அறியாதவர்கள் இங்கு (Fraunhofer lines: Definition and Much More from Answers.com) செல்லவும்.
Science | parody | Tamil Blog
Posted in Uncategorized
இன்றைய தினமணியில் பிளஸ் டூ தமிழ் பொதுத் தேர்வுக்கான மாதிரி (Dinamani.com – TamilNadu Page) வினாக்களை கேட்டிருக்கிறார்கள்.
பதில் தெரிகிறதா?
நிறுவனத்துக்கு கணினி வேலை நேர்காணலுக்குத் தேர்வாகுவதற்கு, முதல் படியாக பரீட்சை வைப்பார்கள். நான்கைந்து வருடங்களுக்கு ஒரு முறை சி#, ஜாவா, டேட்டாபேஸ் தேர்வுகளை எழுதி 70+ மதிப்பெண் எடுத்தால்தான் ஸ்திரமான வேலையில் நிரலி தட்ட முடியும்.
நல்ல வேளை.
வலைப்பதிவு நுழைவதற்கு இலக்கண வினாக்கள் படிக்கல்லாக இல்லை. ‘நான் படிக்கிற காலத்தில்’ என்று பெற்றோர் ஆரம்பிப்பது போல் அந்தக்கால மதிப்பெண்ணை வைத்தே காலத்தை ஓட்ட முடிகிறது.
விடை தெரியாதவர்களுக்காக மாற்றுத் வினாத்தாள்:
Posted in Uncategorized
நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்!
இது ‘போக்கிரி‘ வசனம்.
Posted in Uncategorized
கண்ணில் பட்ட இரு செய்திகள்:
1. ஏற்காட்டில் இன்று பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை: வழக்கமாக இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்குமென பரபரப்பாக தகவல்கள் வெளியாகும். இதற்கு மாறாக இந்த ஆண்டு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை என குறிப்பிடப்படுகிறது. மகளிர் போலீசார் மட்டும் அக்கிராமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
‘கிழக்கே போகும் ரயில்’ ஞாபகம் வந்துச்சே!
2. மதுராவில் அனுமன் கண்ணீர் வடிப்பதாக பரபரப்பு: நேற்று காலை சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர் அனுமன் சிலையில் இருந்து கண்ணீர் வடியும் காட்சியை பார்த்தார். உடனேஅவர் ஒடிச் சென்று பூசாரி மற்றும் அர்ச்சகரிடம் கூறினார். அவர்கள் வந்து பார்த்த போது அனுமன் கண்களில் இருந்து முத்து முத்தாக நீர் வடிந்தது.
இந்த தகவல் அருகில் உள்ள கான்பூர் நகருக்கும் பரவி யது. உடனே பக்தர்கள் உள்ளூரில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள அனுமன் சிலையில் இருந்தும் கண்ணீர் வடிவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
‘பெரியார்’ திரைப்படத்தின் பாடல் வரிகளை கேட்டு விட்டு கண்ணீர் சொரிவதாக இன்னும் யாரும் அறிக்கை விடவில்லையா?
Hinduism | India | Beliefs | Superstition

பார்த்ததும் கிடைத்த பாடல் வரிகள்… (படம் என்ன தெரிகிறதா?)
நியூ யார்க்கர் கொடுத்த தலைப்பு Good shrink; Bad shrink.
எனக்குத் தோன்றியது சில…
வேறு என்ன உங்களுக்குத் தோன்றுகிறது?
பேட்ட ராப்பில் வரும், ‘உன் சான்ஸ்… உன் கையில் எல்லாமே இருக்குதடா‘
Posted in Uncategorized
கனடா குடிபுகல் அதிகாரிகளின் இனப்பாகுபாட்டு விழுமியம்
1. TheStar.com – artsentertainment – Not alone in border hassles: Rapper
2. globeandmail.com: Black stars harassed, suit alleges
கனடாவை நிறப்பிரிகை இல்லாத நாடாக சொல்லலாம்?
வெற்றி பெறுவதற்காக வெறி கொண்ட வார்த்தைகளை உதிர்த்ததாக இங்கிலாந்தில் இனவெறி குற்றச்சாட்டு. (படிக்க: கில்லி – Gilli » Big Brother, Shilpa Shetty & Racism). அதைத் தொடர்ந்து கனடாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இந்த வழக்கு ஜெரோம் (Jerome Almon) மூலம் தொடுக்கப்பட்டிருக்கிறது.
கறுப்பராக இருந்ததால் ‘சிறப்பு கவனிப்பு’ கிடைத்திருக்கிறது என்கிறார். ராப் பாடகராக இருந்ததினால், கனடாவுக்குள் நுழைவதற்கான ஆவணங்கள் சரிபார்த்தல் முதல் கார் பரிசோதனை வரை நீண்டு, நெடிய காத்திருத்தலாக மாறியிருக்கிறது. இனவெறி சொற்றொடர்களுக்கும் ஆளாகியிருக்கிறார்.
டொரண்டோ, வான்கூவர் நகரங்களில் தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்ல வகைசெய்யும்விதமாக இவை அரங்கேறியிருக்கிறது. கருப்பின ராப் நட்சத்திரங்கள் கனடாவுக்குள் நுழையத் தடை விதிக்கும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த பாகுபடுத்தலையும் அவதானிக்கிறார்.
முந்தைய சம்பவங்கள் சில:
சட்டத்தின் துணையுடன் அதிகாரிகளின் மனக்கற்பனைகள் மாற முயற்சி எடுக்கும் வேளையில், தன்னுடைய மனசஞ்சலத்துக்கு ஈடாக $900 மில்லியன் தொகை கேட்டிருக்கிறார்.
Racism | Canada | Jerome Almon | Black | News | Drugs | Detroit
Posted in Uncategorized