மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி

சென்ற பதிவு

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

ஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

இப்பொழுது எதுவுமில்லை.

2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.

4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்? எதற்காக?

ஹில்லரி கிளிண்டன்.

(அ) முதல் கேள்வியில் நான் சொன்ன முதல் காரணம் ஹில்லரிக்கும் பொருந்தும். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.

மேலும் தனிப்பட்ட அளவில் அவருக்கு நிறைய திறமைகள் இருந்தும் பில் கிளிண்டனின் மனைவி என்பதற்காகவே குடியரசுக் கட்சியினர், கட்சிச் சார்பற்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் கருப்பினத்தவர், சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் என அனைவராலும் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் படிருக்கிறார்.

குடியரசுக் கட்சியினர் அவரையும் கணவர் கிளிண்டனையும் தங்களுக்குச் சிம்ம சொப்பணமாக நினைத்து வெறியோடு எதிர்ப்பவர்கள்.

கட்சி சார்பற்றவர்கள் என்ன வேண்டுமென்று நினைக்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கேட்டால் எங்களுக்கு மாற்றம் வேண்டுமென்பார்கள் – கிளிண்டனை ஆதரிப்பது நிச்சயம் அவர்களைப் பொருத்தவரை மாற்றமில்லை.

ஜனநாயகக் கட்சி கருப்பினத்தவருக்கு ஒபாமா கிடைத்ததால் ஹில்லரி வேண்டாம்.

சாதாரண அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோர் தலைவராக வரக்கூடிய பக்குவம் ஒரு பெண்ணுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எனக்கு பில் கிளிண்டன் காலத்திலிருந்தே ஹில்லரியை பிடிக்கும்.

குறிப்பாக ரஷ் லிம்பாக் நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஹில்லரி மேல் அளவு கடந்த பற்று வரும். இவர் ஒரு நாள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அமெரிக்கர்களின் பெண் சமத்துவக் கோட்பாடு சோதிக்கப் படவேண்டும் என்று நினைப்பதுண்டு.

ஒபாமாவுடனான முன்னோட்டத் தேர்தல் விவாதங்களில் கூட ஹில்லரியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. மற்றபடி அவர் உள்நாட்டுப் பிரச்னைகளில் சொன்னதைச் செய்வாரா என்ற நம்பிக்கையின்மையும் மற்ற அமெரிக்கர்களைப் போல் உண்டு.

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

ஒப்பிட முடியாது, கூடாது என்றும் நினைக்கிறேன்.

தோழா… தோழா! தோள்கொடு தோழா!

  • இரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
  • ‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே?’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார்.
  • ஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன.
  • டெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
  • இந்த நிலையிலும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் டெட் ஸ்டீவன்ஸை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார்.

ஏன்?

தொடர்புடைய பதிவுகள்:

1. Alaska Senator Stevens Is Guilty Over His Failures to Disclose Gifts – NYTimes.com: Senator Ted Stevens, the Senate’s longest-serving Republican, was found guilty of violating ethics laws for failing to report gifts and services that he was given by friends.

2. U.S. Senator Sarah Palin

3. John McCain calls for Ted Stevens to quit; Sarah Palin doesn’t go quite that far | Top of the Ticket | Los Angeles Times

4. UPDATE: Sarah Palin joins the push for Ted Stevens to resign | Top of the Ticket | Los Angeles Times

ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)

சிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி

டென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.

டேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தமிழ் செய்தி: ஒபாமாவைக் கொல்ல சதி திட்டம்: 2மாணவர்கள் கைது!

ஒபாமா தேர்தல் பிரசாரம் செய்யும் போது காரை வேகமாக ஓட்டிச் சென்று அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியியிருந்ததாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


மாலைமலர்: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமாவை கொல்ல சதி; 2 பேர் கைது

ஏற்கனவே தனது தாத்தாவிடம் இருந்து டேனியல் ஒரு துப்பாக்கியை திருடி வைத்திருந்தான். ஒபாமா பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவரை நோக்கி வேகமாக காரை ஓட்டிச் செல்லவும் காரின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சரமாரி சுடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் டேனியல் தெரிவித்துள்ளான்.


தட்ஸ்தமிழ்: ஓபாமாவை கொல்ல சதி: 2 வெள்ளையர்கள் கைது

வெப்துனியா: ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது!

ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்!

தேர்தல் செலவுகளைக் கணக்கில் கொண்டுவருவதே நம் ஊர்த் தேர்தலுக்கும் அமெரிக்கத் தேர்தலுக்குமுள்ள முக்கிய வித்தியாசங்களில் ஒன்று. அமெரிக்க பெடரல் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி,  கடந்த 2004ஆம் தேர்தலுக்கு மொத்தமாக தேர்தல் பிரச்சாரக் குழுக்களால் வசூலிக்கப்பட்ட தொகை 800 மில்லியன் டாலர்கள், ஆனால் இந்த தேர்தலின் வசூல் ஏற்கனவே ஓரு பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது.

மெக்கெய்ன் மற்றும் ஒபாமா இருவரின் தேர்தல் பிரசாரக் குழுக்களின் அக்டோபர் 15 வரையிலான அதிபர் தேர்தலுக்கான வசூலும் செலவுகளும்,

மொத்த வரவு மொத்த செலவு கையிருப்பு பணம் கடன் நிலுவை
ஜான் மெக்கெய்ன் $368,609,473 $302,090,668 $66,991,256 $2,016,924
பராக் ஒபாமா $521,869,310 $498,894,922 $65,762,929 $2,302,457

( as per Federal Election Commision’s data :- http://www.fec.gov/finance/disclosure/srssea.shtml)

மேலும் FEC-யின் தகவலின்படி,  இந்த தேர்தலில் ஜீஸஸ் பிலால் இஸ்லாம் முகம்மது (MUHAMMED, JESUS BILAL ISLAM ALLAH) என்ற வேட்பாளர் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கே சொடுக்கவும்  http://herndon1.sdrdc.com/cgi-bin/cancomsrs/?_08+P80004070

இது தவிர நியூஜெர்சியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ராஜேஷ் சீனிவாச ராகவன் என்ற நம்ம ஊர்க்காரர் ஒருவரும் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்காக தனது பெயரைப் பதிவு செய்துத் தனது பணத்தில் $97 செலவு செய்த பின் (மொத்த செலவு $1097) அவர் தனது வேட்பாளர் பதிவையும்  விலக்கியிருந்திருக்கிறார்!

http://herndon1.sdrdc.com/cgi-bin/cancomsrs/?_08+P80004336

FEC தவிர சில தன்னார்வக் குழுக்களும், தேர்தலுக்கான செலவினங்களைக் கண்காணித்து வருகின்றன, ஓபன்சீக்ரெட்ஸ்.காம் என்பதும் அதில் ஒரு குழு, அவர்களின் தளத்தில்

2008 அதிபர் தேர்தல் தொடர்பான பக்கம் http://www.opensecrets.org/pres08/index.php

2008 அதிபர் மற்றும் அவைத் தேர்தலுக்கான பக்கம் http://www.opensecrets.org/overview/index.php

W & McCain

‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ

கருத்துப் படம்:

கொசுறு படம்:

தீவிரவாதி ஒபாமாவின் முகமூடி – அமேசான்.காம்

செய்தி & புகைப்படம் நன்றி: லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்


பேலின் அக்டோபர் எட்டாம் தேதி ஃப்ளோரிடா மாநிலத்தில் செய்த பிரச்சாரத்தின் போது பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்திருக்கும் ஒருவரை நாட்டை நடத்திச் செல்லும் பதவியில் அமர்த்துவதா என்று அலறியிருக்கிறார். இவர் பேச்சைக் கேட்ட சில அறிவிலி அமெரிக்கர்கள் ஒரு நிருபர் கேட்ட “ஒபாமா ஒரு பயங்கரவாதி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு “இருக்கலாம்” என்றும் “அவர் தீவிரவாதிதான்” என்றும் கூறியிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் தேர்தல் பொய்கள் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

குடியரசுக் கட்சியினர் இவ்வாறு பிரச்சாரம் செய்வதன் பிரதிபலனோ, என்னவோ!

ஹாலோவீன் கொண்டாட்டங்களில் அங்கமாக விதவிதமான முகமூடிகள் அணிந்து இன்னொருவர் போல் வேடம் கட்டுவது வழக்கம். அமேசான்.காம் வலையகத்திலும் க்ளின்டன் போல், பின் லாடன் போல், சூனியக்கரி போல் வேஷங்கள் அணிவதற்கு ஆடைகளும், இன்ன பிற அணிகலன்களும் விற்கப்படுகின்றன.

இதில் ‘தீவிரவாதி போல் உடை தரிக்கலாம் வாங்க‘ (“arab costume, terrorist”) பகுதியில் வலப்பக்கம் இருக்கும் பராக் ஒபாமாவின் ஒப்பனையை தொகுத்து இருந்திருக்கிறார்கள்.


கீழே இருப்பது அதி உயர்ரக ஒபாமா முகமூடி:

பராக் ஒபாமாவும் சாரு நிவேதிதாவும்

சாரு நிவேதிதா எழுதிய ராஸ லீலா நாவலில் இருந்து:

இந்த நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியப் பிரதம மந்திரிகளின் குடியரசு தின உரைகளை கவனித்துப் பாருங்கள். அல்லது, ஜனாதிபதி மக்களுக்கு ஆற்றும் உரைகளக் கேட்டுப் பாருங்கள்.

அச்சு அசல் நக்ஸல்பாரி போராளிகளின் பேச்சு போலவே இருக்கும்.

நாட்டில் நிலவும் பஞ்சம், வறுமை, கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள், அரசியலில் புகுந்துவிட்ட கிரிமினல்களை ஒடுக்க வேண்டியதன் அவசியம், வேலையில்லாத் திண்டாட்டம், ஜாதிக் கொடுமை, பெண்ணடிமைத்தனம் என்று பல பிரச்சினைகளைப் பற்றி நக்ஸல்பாரிகளின் மொழியிலேயே பேசியிருப்பார்கள்.

ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரிகளின் உரையைத் தயாரித்துக் கொடுக்கும் அவர்களது காரியதரிசிகள் ஒருவேளை பழைய எம்மெல் ஆட்களோ என்று கூட பெருமாளுக்கு சந்தேகமாக இருக்கும்.


தமிழினத் துரோகி என்பது போல் சோஷலிஸம் என்பது அமெரிக்காவில் தகாத வார்த்தை. ஒபாமாவை சமதருமம பேசுபவர் என்று சித்தரிப்பதன் மூலம் இழக்கும் வாக்காளர்களைப் பெற முடியும் என்பது மெகயினின் புதிய பிரச்சார யுக்தி.

ஒபாமாவை சோஷலிஸ்ட் என்று முத்திரை குத்தும் ஊடகங்களின் தொகுப்பு மற்றும் $700 பில்லியன் கொடுத்து நிறுவனங்களை தேசியமயமாக்குவது சோஷலிசம் அல்ல என்று பேட்டி கொடுக்கும் மெகயினின் விழியம்:

மேலும் விவரங்களுக்கு: Democracy Now! | McCain Campaign Calls Obama a “Socialist” — But Why is That a Smear?:


பிபிசியில் இருந்து:

மார்க்ஸியத்துக்கு மீண்டும் மவுசா?

கார்ல் மார்க்ஸின் சித்தாந்தம் மீண்டும் பிரபலம் அடைகிறதா? ஜெர்மனியின் மிகப்பெரிய இடதுசாரி பிரசுர நிறுவனங்களில் ஒன்றான டியெட்ஸ்ஸின் பார்வை அது.

தற்போதைய உலக பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து மார்க்ஸின் பிரபல படைப்புகள் எல்லாம் தமது கடைகளில் வேகமாக விற்றுத் தீர்ந்துவருகின்றன என்று அப்பிரசுர நிறுவனம் கூறுகிறது.

கார்ல் மார்க்ஸுடைய பொருளாதாரச் சித்தாந்தம் – அதிலும் குறிப்பாக அதன் ரஷ்ய லெனினிய வடிவம் – சோவியத் ஒன்றியம் 1980களின் பிற்பகுதியில் சிதறுண்டதிலிருந்தே, தனது மொத்த மவுஸையும் இழந்துவிட்டிருந்தது.

ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை, முதலாளித்துவத்தின் தோல்வியாகப் பார்க்கும் சிலர், நாம் எங்கே கோட்டை விட்டிருக்கிறோம் என்பதை மார்க்ஸின் சித்தாந்தத்தால் விளக்க முடியும் என்று நம்புகின்றனர்.

சொ. சங்கரபாண்டி – இந்த வார சிறப்பு விருந்தினர்

1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்?

சந்தேகமேயில்லாமல் ஓபாமாதான். பல காரணங்கள் உண்டு, எனக்கு மிக முக்கியமாகப் பட்ட இரண்டு மட்டும் இங்கே (பெருவாரியான அமெரிக்க மக்கள் வாக்களிப்பதற்கு இவை அடிப்படையாக இருக்காது என்றும் கருதுகிறேன்) :

(அ) அமெரிக்காவின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது யார் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதில் அமெரிக்க நலன் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக நலனும் அடங்கியிருக்கிறது.

சோவியத் யூனியன் இருந்தவரை இரு வல்லரசுகளிடையேயிருந்த போட்டியில் இரண்டு நாடுகளும் ஓரளவுக்காவது தங்கள் ஏகாதிபத்தியச் சண்டித்தனத்தை எச்சரிக்கையுடன் கையாண்டன. அதனால்தான் ரீகன் தலைமையிலான அமெரிக்க முதலாளித்துவ ஆதிக்கவெறியர்கள் சோவியத் யூனியனை எப்படியாவது உடைத்தெறிவதில் முழுமுனைப்பாக இருந்து வெற்றியும் கண்டனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கை மட்டுப்படுத்துவதில் எந்த பெரிய நாடும் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டதில்லை.

பொதுவுடைமைப் போலியான சீனா போன்ற நாடுகள் தங்களுடைய குறுகிய தேச நலனுக்காக எல்லாவிதச் சமரசங்களைச் செய்து கொள்வது மட்டுமல்லாமல், தம்மளவில் புதிய மக்கள் விரோதச் சண்டிநாடுகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே அமெரிக்காவின் தலைவராக வருபவர் உலக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் முனையாவிட்டாலும் (எ.கா: ஜிம்மி கார்ட்டர் முயற்சி செய்தார்) பரவாயில்லை, சுயநலத்தின் உந்துதலால் உலக அமைதியைச் சிதைப்பவராக இல்லாமல் இருப்பதே பெரிது (எ.கா: புஷ்-சேனி கும்பல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது).

அமெரிக்காவில் உள்நாட்டில் எத்தனையோ பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளுள்ளன. அவற்றின் மேல் முதலில் அக்கறை செலுத்துபவராகவும் இருந்தால், உலகத்தைச் சீர்குலைப்பதில் குறைவான கவனம் செலுத்தக் கூடும் (எ.கா: பில் கிளிண்டன்).

மேலும் அமெரிக்க அரசிடம் ஏகோபித்த செல்வாக்கு செலுத்தி வரும் இஸ்ரேலிய ஆதாயக் கூட்டத்தின் முழுமையான கைப்பாவையாகச் செயல்படக்கூடியவராக (எ.கா. மெக்கெய்ன் – பேலின்) இல்லாமல் இருக்க வேண்டும்.

உலகெங்கும் இசுலாமிய அடிப்படைப் பயங்கரவாதம் உருவாக முக்கியமானதொரு காரணம் அமெரிக்க அரசை ஆட்டிப்படைக்கும் இஸ்ரேலிய ஆதரவுக் கும்பல்தான். விளைவு பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் பல நாடுகளில் தற்பொழுது அரசு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

மெக்கெய்னுக்கும், பேலினுக்கும் இஸ்ரேல் மட்டும்தான் செல்ல நாடுகள் என்பது அவர்களுடைய வாதங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் வந்தால் நிலைமை மோசமாகவே வாய்ப்பிருக்கிறது. மெக்கெய்ன்- பேலின் தேர்ந்தெடுக்கப் பட்டால் போரும், இராணுவமும் பூதாகரமான வளர்ந்து எல்லா நாடுகளிலும் மக்களை வறுமை, வேலையிழப்பு, பட்டினி என இட்டுச் செல்லும் வாய்ப்பு அதிகம்.

(ஆ) கடந்த தலைவர் தேர்தலுக்குப் பின் உருவான ஓபாமா என்ற புதிய நட்சத்திரத்தை(அல்லது பிம்பத்தை)ப் பற்றி நண்பர்கள் பேசியபொழுதெல்லாம் நான் ஓபாமாவைப் பற்றிய நல்லதொரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒபாமவை தமிழரங்கம் சொல்லியதுபோல் ”பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி“யாகத்தான் அல்லது சன்னாசி-சுந்தரமூர்த்தி-செல்வராஜ் போன்ற நண்பர்களின் கருத்துப்படி சரக்கில்லா வெறும் பிம்பமாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். இன்னமும் அவர்கள் எழுப்பிய ஐயங்கள் பொய்யாகத்தோன்றவில்லை. சன்னாசியின் இந்த இடுகையுடன் எனக்கு உடன்பாடில்லை என்றும் சொல்லி வைக்கிறேன். ஆனால், ஓபாமாவின் இனங்களுக்கிடையேயான சிக்கல்களைப் பற்றிய பேச்சில் தெரிந்த யதார்த்தமும், நேர்மையும் அவரைப் பற்றிய நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.

தலைமையும், வழிகாட்டலுமில்லாமல் வெள்ளை மேட்டுக்குடியினரிடம் பல துறைகளில் போட்டியிட இயலாத கருப்பினத்து மக்களிடையே தன்னம்பிக்கையுடன் சில மாற்றங்களைக் கொண்டுவர ஓபாமாவின் தேர்வு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

மிக எளிமைப் படுத்திச் சொல்வதாயிருந்தால், இராஜாஜியையும், சிதம்பரத்தையும் விட கல்வியறிவிலும், மேதாவித்தனத்திலும் பின்தங்கியிருந்தாலும், கருணாநிதியும், மாயாவதியும் ஆட்சிக்கு வந்தபின்னால் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கை மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

மூதறிஞர் என்று சொல்லப் பட்ட இராஜாஜி சாதித்ததை விட கல்வியறிவும், அனுபவமுமில்லாத எம்.ஜி.ஆர் சாதித்தது எவ்வளவோ மேல்.

மற்றபடி மருத்துவ நலம், கல்விக்கட்டணங்கள், வேலை வாய்ப்பு என எத்தனையோ உள்நாட்டு விசயங்களில் பெரிய மாற்றங்களையெல்லாம் கொண்டுவரக்கூடிய சூழ்னிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் இன்றைக்கில்லை. எனவே யார் வந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை.

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

அமேரிக்க குடிமகள்

நேற்று மெக்கெயினும், ஒபாமாவும் எங்கள் ஊருக்கு வந்து சென்றார்கள்.
மெக்கெய்ன் கூட்டத்திற்கு 2000 பேர் கூட வரவில்லை, மிட்டாய் கொடுத்து மக்களை உபசரித்து உட்கார வைத்தார்கள் என்றும் – ஒபாமா கூட்டத்திற்கு 20000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, 35000 மக்கள் வந்தார்கள் என்றும் சொல்கின்றது உள்ளூர் நாளிதழ். 

இது பற்றி எழுதி கிழிக்காமல் வாக்களிக்கச் (Early Voting) சென்ற சிறந்தவொரு அமேரிக்க குடிமகள் பற்றிய செய்தி குறிப்பு, கீழே, வெட்டி ஒட்டப்பட்டுள்ளது.

நன்றி:  http://kob.com/article/stories/S625956.shtml?cat=0

Suspected drunk passes out at voting location 
 
A woman who passed out at an early voting location could be in trouble after police found vodka tucked away in her waistband. Most people think early voting and early drinking don’t mix.

“I believe you should be sober when you vote,” said early voter Davin Poulin.

Police say a 45-year-old woman was anything but sober when she walked into an early voting location in Bernalillo County last Friday at 10 in the morning.

According to a police report, election officials say the woman became “unexpectedly agitated and began to scream and yell.”

That’s when they put the woman in a separate room to “avoid further agitation.”

“The poll workers here acted very swiftly and called the proper authorities,” said Bernalillo County spokesperson Liz Hamm.

Police found the woman inside the room passed out. When she woke up, she told police that she had “a brain tumor and could not stand or sit up.”

That’s when police noticed the bottle of vodka in her waistband.

The county clerk’s office says poll workers are trained to call police if someone is drunk or has a medical emergency.

The woman is facing two misdemeanors for disturbing a polling place and possession of alcohol within 200 feet of a polling place.

பத்து நாள்களும் இருநூறு பதிவுகளும்

நவம்பர் நான்காம் தேதி செவ்வாய்க்கிழமையோடு அமெரிக்க தேர்தல் மேளா இனிதே முடிகிறது. இன்னும் பத்து நாள்கள் கூட இல்லை.

இதுவரை இந்த வலைப்பதிவும் வலைவிவரங்களும்:

இடுகைகள்: 200
பகுப்புகள்: 36
குறிச்சொற்கள்: 757
மறுமொழிகள்: 594

மொத்தப் பார்வை: 21,160
மிக அதிக வருகையாளர் வந்த தினம்: நேற்று, அக். 24
எண்ணிக்கை: 879

வருகையாளர்களுக்கும் விஐபி விருந்தினர்களுக்கும் நன்றி!