Category Archives: Uncategorized

வாக்களித்த அனைவருக்கும் நன்றி

அடுத்த கருத்துக்கணிப்பு:

தங்களை எண்ணங்களை அதிகம் தாக்கம் செய்யும் வலைப்பதிவு எது?

1. ஆப்பு 2. பத்ரி 3. இட்லி-வடை

4. கார்த்திக்ராமாஸ் 5. பெயரிலி 6. பாரா

7. ரஜினி ராம்கி 8. தங்கமணி 9. வலைப்பூ

10. அனைத்து வலைப்பதிவுகளிலும் நகைச்சுவையையே மிளிர்கிறது.

தங்கள் மேலான ஓட்டைப் பதிவு செய்ய (விரைவில்) அழைக்கிறேன் 🙂

திருட்டு ஆய்த எழுத்து

தயவு செய்து ஒலிப்பேழையோ, வட்டோ வாங்கி விடவும். அது வரையில் பாடல்களைக் கேட்பதற்கு:

ஃபனா

குட் பை நண்பா

ஜனகனமண

நெஞ்சம் எல்லாம் காதல்

சண்டைக் கோழி

டோல் டோல்

நன்றி: டீகட

அங்கும் இங்கும்

இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்வதில் கருணாநிதியும் ஜெஜெவும்தான் தேர்ந்தவர்கள் என்று நினைத்திருந்தேன். ஆதாரமற்ற குற்றசாசாட்டுகளை வைப்பதில் தமிழருக்கு எந்த விதத்திலும் ஜான் கெர்ரியும் சளைத்தவரல்லர். அபாண்டமாகப் பழி போடுவதை விட நேரடியாக பச்சை பச்சையாகத் திட்டுவதே மேலா?

அப்படியானால், வெஸ்ட் விங், 24, சிக்ஸ் ஃபீட் அண்டர் போன்ற தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்குப் பிடித்த கெட்ட வார்த்தைகளைப் பார்க்கலாம். (இந்த மாதிரி சுட்டி கொடுப்பதற்காக எந்தத் தகாத வார்த்தையை உபயோகித்தீர்கள்?)

இந்த மாதிரி உரல்கள் ஏன் கொடுத்தாய் என்று கேட்டால் ரிபப்ளிகன் பொன்மொழிகள் பலவற்றுள் மாதிரிக்கு ஒன்றை மொழிபெயர்த்தால் தன்னிலை மறுப்புக்கு உதவும்:

நான் தளபதி – யாருக்கும் விளக்கம் தரத் தேவையில்லை; ஏன் செஞ்சேன், எதற்காக சொன்னேன் என்று எல்லாம் விளக்க வேண்டாம். ஜனாதிபதியாக இருப்பதன் பலன் இதுதான். மற்றவர்கள், தான் செய்வதற்கு நியாயம் கற்பிக்க அவசியம் இருக்கலாம்; நான் யாருக்கும் விளக்கம் சொல்ல கடமைப்பட்டவன் போல் தோன்றவில்லை. – ஜார்ஜ் புஷ் (நவ. 19, 2002)

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கமல் சந்திப்பார் என்று தெரிகிறது என்னும் செய்தியை நிலா முற்றம் சொல்கிறது. இந்தச் செய்தி உத்தரவாதமானதுதானா என்று கூகிளில் தேடலாம் என்றால் நம்பாதே என்று அறைகூவுகிறது எனக்கு வந்த ஒரு மடல். அமெரிக்கரின் வசம் இருக்கும் கூகிளும் ஃப்ரெஞ்சுக்கு எதிராகத்தான் பக்கங்களை வரவழைத்துத் தருகிறது போல.

ஆனால், வதந்திகளை நம்பக் கூடாது. புக்கர் பரிசை நூலிழையில் தவறவிட்ட மோனிகா அலி ஆரஞ்சு பரிசையாவது வெல்லலாம் என ஆருடம் நிலவுகிறது. தாய்பே டைம்ஸ் கூடப் புகழும் ரூபா பாஜ்வா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜும்பா லஹரி, காம்பிளியின் கதை சொல்லும் சிமாமந்தா என்று சரியான போட்டி நிலவுகிறது.

பிகு: இல்லிஸ்ட்ரேடட் வீக்லியில் வாராவாரம் ‘Separated at Birth’ என்ற பகுதியின் நினைவாக ரெஹ்மான்/மாதவன் படம்.

ஆய்த எழுத்து – பாடல்கள்

எம்பி3யில் கேட்க.

ரியல் மீடியாவில் கேட்க:

குட் பை நண்பா – ஷங்கர் மஹாதேவன், சுனிதா சாரதி, லக்கி அலி, கார்த்திக்

ஜனகனமண – ஏ. ஆர். ரெஹ்மான், கார்த்திக்

சண்டைக் கோழி – மதுஸ்ரீ, ஏ. ஆர். ரெஹ்மான்

டோல் டோல் – ராப்: ப்ளேஸ்/ஷாஹீன்

நெஞ்சம் எல்லாம் காதல் அத்னான் சாமி, சுஜாதா

ஃபனா – ஏ. ஆர். ரெஹ்மான், சுனிதா சாரதி, ஷாலினி சிங்

நன்றி:

1. டீகட பின்னூட்டங்கள்

2. ஏ. ஆர். ரெஹ்மான்

தெரிந்தது மட்டும் vs. கற்றதும் பெற்றதும்



Non Sequitur

பிகு: தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எல்லாம் யோசித்து வழுக்கையாக வேண்டாம்.

அங்கம்மாளின் கவலை – ஞானக்கூத்தன் (1981)

பலகைக் கதவில் நான்காவதனைக்

கஷ்டப்பட்டு விலக்கி எடுக்கையில்

அங்கம்மாளின் கண்ணில் நாராயணன்

வருவது தெரிந்ததும் அலுத்துக் கொண்டாள்

ஊதுவத்தியில் இரண்டைக் கொளுத்திப்

பூ கிடைக்காத சாமிப் படத்துக்கும்

கல்லாப் பெட்டிக்கும் காட்டிவிட்டு

இடத்தில் அமர்ந்தாள் அங்கம்மாள்.

கடைக்கு நாராயணன் வந்து சேர்ந்தான்

சங்கடமான சிரிப்பொன்று காட்டினான்.

பார்க்காதவள் போல் அவளிருந்தாள்

சுருட்டுக்காக அவன் வந்திருந்தான்

முதல் வியாபாரத்தில் கடனைச் சொல்ல

கூச்சப்பட்டு ஓரமாய் நின்றான்

என்ன வென்று அவள் கேட்கவில்லை

என்ன வென்று அறிந்திருந்ததால்

சைகிளில் வந்தான் சுப்பிரமணியன்

அவனைக் கண்டதும் அவள் வியர்த்தாள்

காலைப் பொழுதில் இரண்டாயிற்று

இன்றைக் கெப்படி ஆகப் போகுதோ?

“என்னடா நாணி? ஆரம்பிக்கலையா?”

“உன்னைத்தான் பார்த்தேன் நீ ஆரம்பி.”

அங்கம்மாள் இந்தப் பேச்சை கேட்டு

உள்ளுக்குள்ளே எரியத் தொடங்கினாள்.

“நாணிக்கிரண்டு எனக்கிரண்டு

நடக்கட்டும் வியாபாரம் இன்றைக்கென்று

சுப்பிரமணியன் வண்டியை விட்டுக்

கடைக்குப் பக்கமாய் நெருங்கி வந்தான்

ஒன்றும் சொல்லாமல் அவள் இருந்தாள்

வேகம் குறையாத நடை பயின்று

கோபாலன் வந்தான் சேர்ந்து கொண்டான்

கேட்பதைத் தனக்கும் சேர்த்துக் கேளென்றான்

அங்கம்மாள் அவனை ஒருகணம் முறைத்தாள்

“என்ன முறைக்குது அங்கம்மா?” என்றான்

எல்லா முறைப்பும் சரியாப் போய்விடும்

வருகிறான் அங்கே ரத்தினம்” என்றான்

அந்தப் பெயரை கேட்டதும் அங்கம்மா

கொஞ்சம் பதறி நிலைமைக்கு வந்தாள்

‘என்னடா அங்கே காலை வேளையில்

கிண்டல் கலாட்டா நமது கடையில்?

ரத்தினம் குறும்புடன் சிரித்துக் கூறினான்

“வாடா இன்னும் மத்தவனெல்லாம்

வரலியா?” என்றாள் அங்கம்மா

“என்னடா ரத்தினம் பெண்டாட்டி வாயில்

அடாபுடா? வெட்கம்” என்றான் கோபாலன்

சீற்றத்தோடு அங்கம்மாள் எழுந்து

நாயென்றும் கழுதையென்றும் அவர்களைத்

திட்டினாள்

“கணவன் மனைவி உறவில் இதெல்லாம்

சகஜம்” என்று ரத்தினம் சொன்னான்.

“நீங்களெல்லாம் படித்தவர்கள் தானா?

உங்களுக்கு எந்த மூடன் கொடுத்தான்

பட்டங்கள்?” என்று பொரிந்தாள் அங்கம்மா.

‘அவரும் ஒருவேளை உன்னிடம் வருவார்

சுருட்டுக் கேட்டெ’ன்று நாராயணன் சொன்னான்

“அவரைப் பிடித்துக் கொண்டு அப்புறம் என்னை

விட்டு விடாதே”யென்று ரத்தினம் கெஞ்சினான்

அந்தச் சமயம் வேணுவும் வந்தான்

சுருட்டை எடுக்கக் கடைக்குள் நீண்ட

வேணுவின் கையை அவள் மடக்கினாள்

சுகமோ சுகமென்று வேணு பாடினான்

ரத்தினம் அவனது தலையில் தட்டி

அத்து மீறினால் உதை என்று சொல்லி என்

பெண்டாட்டி என்பது மறந்ததா என்றான்

மன்னிக்கச் சொல்லி வேணு சிரித்தான்

வேணுவின் கையை மடக்கிய வேகத்தில்

சேலை நகர்ந்து சிறிது வெளிப்பட

நல்லதாய்ப் பெயரை உங்கப்பன் வைத்தான்

என்றான் ரத்தினம் அங்கம்மாளுக்குக்

கோபம் பொரிய உங்கம்மாவைப்

பார்த்துச் சொல்லென்று உரக்கக் கூவினாள்

இடையில் சிறுவன் மிட்டாய்க்கு வந்தான்

எடுத்துக் கொடுத்து அனுப்பிய பின்பு

சீயக்காய்க்குக் கிழவி ஒருத்தியும்

வெற்றிலைக்குக் கோனார் ஒருவரும்

ஊறுகாய்க் கென்று பிச்சைக் காரியும்

வந்து போனதும் கோபாலன் மெல்ல

முதல் வியாபாரம் நடந்த பிற்பாடு

தாமதம் ஏனென்று கையை நீட்டினான்

நீட்டிய கையைத் தட்டி நீக்கினாள்

தட்டிய கையைத் தீண்டிய தன் கையை

முத்தம் கொடுத்து பிறர்க்கு நீட்டினான்

அந்தக் கைக்கு முத்தம் கொடுத்தனர்

கௌரவமான தகப்பன் தாய்க்குப்

பிறக்காத பிறவிகள் நீங்களென்று

ஒட்டு மொத்தமாய் அங்கம்மாள் திட்டினாள்

உன்னைப் பார்த்தோம் உன்னைத் தொட்டோம்

முத்தம் கூடக் கிடைத்துவிட்டது

சுருட்டைக் கொடுத்து எங்களை அனுப்பென்று

வேணு நயமாய் எடுத்துக் கூறினான்.

அவளுக்குக் கோபம் எல்லை தாண்டிற்று

அவர்கள் சிரிப்பும் எல்லை தாண்டிற்று

அடுத்த வீடுகள் எதிர்த்த வீடுகள்

இன்னும் தெருவில் போவோர் வருவோர்

அனைவரும் இதனைப் பார்த்து ரசிக்க ஒரு

சுருட்டுப் பெட்டியைத் தெருவில் எறிந்தாள்

ஆளுக் கொன்று பற்ற வைத்துத்

தங்கள் பாக்கியை ஒன்றாய்த் திரட்டி

அங்கம்மாளை ஆங்கிலப் படத்துக்குக்

கூட்டிக் கொண்டு போகலாமென்று

ரத்தினம் சொல்ல அனைவரும் சிரித்தனர்

ஒன்பதுக் கப்புறம் இரவில் பார்ப்பதாய்

வேணு சொன்னதும் அனைவரும் கலைந்தனர்.

அங்கம்மாள் இருக்கையில் அமர்ந்தாள்

அருகில் இருந்த ஒருவரைக் கேட்டாள்.

‘என்ன சாமி எனக்கும் வயது

நாளை வந்தால் ஐம்பதாகிறது

இந்தப் பிள்ளைகள் என்னைத் தாயாய்

நினைக்காமல் போகக் காரணம் என்ன?’

—-

ஞானக்கூத்தன் கவிதைகள் – விருட்சம் – ரூ. 80.00

virutcham@mailcity.com

ஆய்த எழுத்து

நன்றி: ‘ஐகாரஸ்’ பிரகாஷ்

கருத்துக் கணிப்புகள்

இது தேர்தல்களின் காலம். தேர்தல் என்றாலே கருத்துக் கணிப்புகள் அவசியம். உங்களின் இலவச ப்ளாஃக்ஸ்பாட், ப்ளாஃக்ட்ரைவ் தளங்களில் கூட வாக்கெடுப்பும் தேர்தல் நடத்தும் சௌகரியத்தையும் ஸ்பார்க்லிட் போன்ற சில வலைத்தலங்கள் செய்கின்றன. இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் யார் ஜெயிப்பார்கள், பத்துப்பாட்டில் எவை இடம் பெறுகின்றன, ‘கருவறை வாசம்’ எழுதியவர் யார், விஷ்ணுபுரம் புரிந்து படித்தீர்களா, படித்துப் புரிந்ததா, புரியாமலே படிக்கவில்லையா, படிக்காமல் புரியவில்லையா, ‘இட்லி வடை’ யார், ‘தலை பத்து’ கவர்ச்சி கன்னிகள் வரிசைப்படுத்தல் என்று கருத்துக் கணிப்பு நடத்தலாமா?

என்னுடைய ஒரு முயற்சி பக்கத்தில் உள்ளது! மேலும் சில ஸ்பார்க்லிட் மாதிரிகளையும் பார்த்துவிட்டு வாக்காளப் பெருமக்களின் மேலான வோட்டை வேண்டவும்.

தட்டச்சுத் திறமை



தங்களின் தட்டச்சும் திறமைய பரிசோதிக்க ஒரு வலைவிளையாட்டு. நான் ஒன்பது சுற்றில் வெற்றியடைந்து பத்தாவது சுற்றில் அனைத்து ‘உயிர்களை’யும் இழந்து 84 மதிப்பெண் எடுத்தேன். நீங்க? (பாஸ் பக்கத்தில் வந்துவிட்டார் என்று அழுகுணி ஆடாமல் விளையாடுங்க).

குண்டராய் பார்த்து குறைக்காவிட்டால்…

பரியின் இன்றைய பதிவில் அவசியமான சில கேள்விகளை எழுப்புகிறார்.



என் கேள்வியெல்லாம், இதையெல்லாம் சட்டம் போட்டுதான் தடுக்க வேண்டுமா? எதைத் திண்ணலாம் எவ்வளவு திண்ணலாம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மூடர்களாகிவிட்டார்களா மக்கள்?

இந்த சட்டம் “276-139” என்னும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுவிட்டது. செனட்டில் இருக்கும் நூறு பேரும் தலையாட்ட வேண்டும்; கடைசியாக பெருந்தலைவர் ஜி.டபிள்யூவின் கையெழுத்தும் பாக்கி. வெகு விரைவில் சட்டமாகி விடும். மெட்டொனால்டும், பிட்ஸா ஹட்டும் போண்டியாகக் கூடாது என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். தவறான உணவு வகைகளை மொக்குவது; அனுபவித்து ருசித்த இடத்தையே குற்றஞ்சொல்லி, வழக்கு தொடுத்து உணவின் சுவைதான் என்னை சாப்பிட வைத்தது என்று விதண்டாவாதம் செய்பவர்களைத் தடுக்க ஒரு சட்டம்.

இதற்கும் நேற்று ஜாமா எனப்படும் மருத்துவர்களின் சஞ்சிகை வெளியிட்ட ஆய்வு முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?

* தவிர்த்துவிடக் கூடிய காரணங்களால் ஏற்படும் மரணங்களில் ‘உணவு கட்டுப்பாடின்மை’க்கு இரண்டாம் இடம்.

* 2000-ஆவது ஆண்டில் 400,000 பேர்கள் இவ்வாறு இறந்திருக்கிறார்கள்.

* புகை பிடிப்பது 435,000த்தைக் கொன்று இன்னும் முதலிடத்தில் இருக்கிறது.

* இதே மாதிரி போனால் உணவு பழக்கவழக்கங்களினால் இறப்பவர்களுக்கு 2005-இல் முதலிடம் கிடைத்துவிடும்.

* அடுத்த வருடமே 500,000-ஐ எட்டும்.

* அமெரிக்காவில் 64 விழுக்காடு மக்கள் சராசரியாக இருக்க வேண்டிய எடையை விட அதிகம் உள்ளார்கள்.

* (நாங்கள்) 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்தியத்திற்கு செலவு செய்தோம்.

* சர்க்கரை வியாதி போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டால் $117 பில்லியன்.

மக்களுக்கு விழுப்புணர்வும் உடற்பயிற்சியை செய்ய ஊக்கததுயும் தருவதற்காக அரசாங்கமும் “ஆரோக்கியமான வாழ்க்கை” போன்ற பல முயற்சிகளை செய்து வருகிறது. சவுத்வெஸ்ட் விமான சேவை சில மாதங்களுக்கு முன் குண்டாக இருப்பவர்கள் இரு பயணிகளின் டிக்கெட்டுக்கான காசை செலுத்தவேண்டும் என்னும் புது நியமனத்தை வழிவகுத்தது. அரசும் நிறுவனங்களும் அறிவுறுத்தி என்ன பயன்?

என்னவோ.. நடக்குது.. மர்மமா இருக்குது.. ஒன்னுமே புரியலை உலகத்துலே.. (இட்லி வடை, பெயரிலி வரிசையில் மற்றுமொறுவர்; சாப விமோசனம் மாதிரி சுவையாக இருக்கிறது. புதுமை விரும்பும் பித்தன் மாதிரி பாதியிலேயே நிறுத்தாத வரைக்கும் சரி!?