உதவிய பதிவு: றேடியோஸ்பதி: : “உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?”
அரிதாக கேட்க கிடைத்த பத்து
1. நன்னாரே :: குரு
பாடியவர்: ஷ்ரேயா கோஸல், உதய் மஜும்தார்
இசை: ஏ ஆர் ரெஹ்மான்
நினைவில் நின்றது: ஐஷ்வர்யாவுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நடனம். ரெஹ்மானுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; ஹிட் பாடல் கொடுப்பது. மணி ரத்னத்துக்கு இவற்றை கறக்கவும் இணைக்கவும் தெரியும்.
2. சின்னஞ்சிறு சீனா கற்கண்டே :: முருகா
பாடியவர்: சங்கீதா, வினீத் ஸ்ரீனிவாசன்
இசை: கார்த்திக் ராஜா
நினைவில் நின்றது: அபஸ்வர ரீ-மிக்ஸ்களின் நடுவே நெருடாத மறு பதிப்பு
3. டென்ஷன் மச்சான் :: வம்புச்சண்ட
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
இசை: டி இமான்
நினைவில் நின்றது: ஜாலி (படம் வந்துவிட்டதா?)
4. போனா வருவீரோ :: வீராப்பு
பாடியவர்: ஜே
இசை: டி இமான்
நினைவில் நின்றது: சுந்தர் சி.க்கு என்று பொருத்தமான ஜோடிகளும் ஆடாமலே அசத்தும் பாடல்களும் அமைந்து விடுகின்றன.
5. பேச பேராசை :: நாளைய பொழுதும் உன்னோடு
பாடியவர்: பவதாரிணி, கார்த்திக்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
நினைவில் நின்றது: இந்த ஆண்டின் நம்பிக்கை நட்சத்திரம், நாயகியாக நடித்திருக்கும் படம்
6. கந்தா கடம்பா :: மலைக்கோட்டை
பாடியவர்: நவீன்
இசை: மணிஷர்மா
நினைவில் நின்றது: ‘ரன்’ படத்தின் ‘தேரடி வீதியில் தேவதை வந்தா’ ரகத்தில் இன்னொரு பாடல்
7. சின்னச் சின்ன மழைத்துளி :: ஆக்ரா
பாடியவர்: சுருதி வந்தனா
இசை: சி எஸ் பாலு
நினைவில் நின்றது: எங்கேயோ கெட்ட மெட்டு
8. பாதை தெரிகிறது :: திருத்தம்
பாடியவர்: டிப்பு
இசை: பிரவீன் மணி
நினைவில் நின்றது: ஏற்கனவே கேட்டது போல் இருந்தாலும் இனிமையான மெட்டு + எளிமையான பொருத்தமான கவிதை வரிகள்
9. பொறந்தது பசும்பொன்னு :: திருமகன்
பாடியவர்: தேவா & டிப்பு
இசை: தேவா
நினைவில் நின்றது: 2011 முதல் மந்திரி என்று பிரஸ்தாபிக்காத தமிழ் நடிகரின் ஹீரோயிஸப் பாடல்
10. நூத்துக்கு நூறு :: தொலைபேசி
பாடியவர்: எஸ்.பி.பி.
இசை: சாந்தகுமார்
நினைவில் நின்றது: வைரமுத்துவை நினைவூட்டும் பிரயோகங்கள்.
அதிகம் கேட்கவைக்கப்பட்ட பத்து
1. பறவையின் கூட்டில் :: கற்றது தமிழ் (தமிழ் எம்.ஏ)
பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜாநினைவில் நின்றது: திரையில் இயல்பான பயணம் + என்றும் இளையராஜா
2. டோல் டோல்தான் அடிக்கிறான்
பாடியவர்: சுசித்ரா, ரஞ்சித்
இசை: மணி ஷர்மா
நினைவில் நின்றது: நடனம் & இசை – Made for each other
3. மதுரைக்குப் போகாதடி :: அழகிய தமிழ்மகன்
பாடியவர்: அர்ச்சித், பென்னி, தர்சனா
இசை: ஏ ஆர் ரெஹ்மான்
நினைவில் நின்றது: ஆரம்ப துக்கடா; பா விஜய்; தாவணி அசின் ஷ்ரேயா; விஜய் ஆட்டம்… எதை விடுப்பது!
4. எல்லோரையும் ஏத்திப்போக :: இராமேஸ்வரம்
பாடியவர்: ரேஷ்மி, சூரியா, ஹரிசரண், மாணிக்க விநாயகம்
இசை: நிரு
நினைவில் நின்றது: காட்சியாக்கம்
5. கடி கடி கொசுக்கடி :: வியாபாரி
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம், மனோ
இசை: தேவா
நினைவில் நின்றது: எஸ்.பி.பி. போன்ற மனோ; எஸ் ஜே சூர்யா மசாலாவுடன் அனுராதா ஸ்ரீராம்; Explicit ஆக இல்லாத இரட்டை அர்த்த வரிகள்.
6. யார் யாரோ :: ஒன்பது ரூபாய் நோட்டு
பாடியவர்: பரத்வாஜ்
இசை: பரத்வாஜ்
நினைவில் நின்றது: வைரமுத்து; தொட்டுக்க தங்கர் பச்சன் & சத்யராஜ்.
7. அழகான பாதகத்தி :: கருப்பசாமி குத்தகைதாரர்
பாடியவர்: சங்கீதா, கார்த்திக்
இசை: தினா
நினைவில் நின்றது: கரணுக்கு ஹிட் பாட்டு தருவது பெரிய விஷயம்!
8. அதிரடீ – சிவாஜி
பாடியவர்: ஏ. ஆர். ரெஹ்மான், சயனோரா
இசை: ஏ. ஆர். ரெஹ்மான்
நினைவில் நின்றது: கேட்டால் எட்டடி; பார்த்தால் பதினாறடி; ரஜினி என்றால் முப்பத்திரண்டடி! ஷங்கரும் என்பதால் 70 எம் எம் அடி!!!
9. ஜல்ஸா பண்ணுங்கடா :: சென்னை 600028
பாடியவர்: ஹரிசரண், கார்த்திக், ரஞ்சித், டிப்பு, கானா பழனி, கானா உலகநாதன், கருணாஸ், ப்ரேம்ஜி அமரன், சபேஷ்
இசை: ப்ரேம்ஜி அமரன்
நினைவில் நின்றது: கங்கை அமரன் இது போல் சமகால இலக்கியம் நிறைய படைக்கவேண்டும்.
10. அய்யய்யோ… என் உசுருக்குள்ள :: பருத்தி வீரன்
பாடியவர்: ஷ்ரேயா கோஸால், கிருஷ்ணராஜ், மாணிக்க வினாயகம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
நினைவில் நின்றது: ஆரம்ப துக்கடா முதலே அமர்க்களம்தான்.
தொடர்ந்து அதிகம் கேட்கவிரும்பும் பத்து
1. காற்றின் மொழியே :: மொழி
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர்நினைவில் நின்றது: பாடல் அருமை; காட்சியாக்கம் அழகு.
2. எல்லாப்புகழும் (முன்னால் முன்னால் வாடா) :: அழகிய தமிழ்மகன்
பாடியவர்: ஏ ஆர் ரெஹ்மான்
இசை: ஏ ஆர் ரெஹ்மான்
நினைவில் நின்றது: முக்காபலாவில் இருந்து ‘ம’ வரிசையில் துவங்கும் வெற்றிப்பாடல் ஜோடியான வாலி + ஏ ஆர் ஆர்; திரை வடிவமைப்பு மெகா சொதப்பல் 😦
3. மின்னல்கள் கூத்தாடும் :: பொல்லாதவன்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
நினைவில் நின்றது: பாடலாசிரியர் யார் என்று பார்க்க வைத்த நா முத்துக்குமார்
4. யாரோ யாருக்குள் இங்கு யாரோ:: சென்னை 600028
பாடியவர்: எஸ்.பி.பி., கே எஸ் சித்ரா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
நினைவில் நின்றது: ஏனோதானோ வாலியை கண்டுகொள்ளாத திரைக்காதலர்களின் மெய்ப்பாடு.
5. அறியாத வயசு :: பருத்தி வீரன்
பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
நினைவில் நின்றது: எவ்வளவோ இளையராஜா கேட்டிருக்கோம்… இதுவும் ஃபேவரிட் ஆக்கிட மாட்டோமா!
6. டிங்கி டிங்கி டோரிடோ :: நினைத்தாலே
பாடியவர்: பவித்ரா, வினயா
இசை: விஜய் ஆண்டனி
நினைவில் நின்றது: ஹீரோயின் தனிப்பாடல் & துள்ளல்
7. முதல் நாள் இன்று எதுவோ ஒன்று & உன்னாலே உன்னாலே :: உன்னாலே உன்னாலே
பாடியவர்: மஹாலஷ்மி, கேகே, ஷாலினி & கார்த்திக், கிருஷ், ஹரிணி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
நினைவில் நின்றது: அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரி இருக்கும் படத்தில் கொஞ்சம் வித்தியாசப்படும் பாடல்
8. தமிழ்ச்செல்வி தமிழ் செல்வி :: கூடல் நகர்
பாடியவர்: சாதனா சர்கம், ஹரிஹரன்
இசை: சபேஷ் – முரளி
நினைவில் நின்றது: சாதனா சர்கமின் ஓரளவு சுத்த உச்சரிப்பு
9. உலக அழகி நான் தான் :: பிறப்பு
பாடியவர்: ஜனனி பரத்வாஜ்
இசை: பரத்வாஜ்
நினைவில் நின்றது: கார்த்திகாவின் எண்ணெய் தேய்த்த தனியாவர்த்தனங்கள் (தொடர்பான பதிவு: வினையூக்கி: ரசித்த ஆறு + ஆறு விசயங்கள்)
10. தோரணம் ஆயிரம்:: அம்முவாகிய நான்
பாடியவர்: தீபிகா, கீதா, ஸ்ரீவித்யா
இசை: சபேஷ்-முரளி
நினைவில் நின்றது: காதலியுடனான சில்மிஷங்களைத் தவிர வேறு எதையாவதையும் நினைக்கிற மாதிரி படத்தில் ஏதாவது படமாக்கியிருக்கலாம்.
சென்ற வருடம்:
Tamil Cinema – 2006 Top Movies List « Snap Judgment
Tamil Film Songs – 2006 Best « Snap Judgment
தெரிந்தே விட்டது: பில்லா; தெரியாமல் விட்டது எவ்வளவோ!
ஒரு கொலை குத்தம்
//மதுரைக்குப் போகாதடி :: அழகிய தமிழ்மகன்
நினைவில் நின்றது: ஆரம்ப துக்கடா; பா விஜய்; தாவணி அசின்; விஜய் ஆட்டம்… எதை விடுப்பது!//
அசினல்ல ஷ்ரேயா
uh…oh 😀 நடனத்தில் லயித்ததில் பேரு மாறிப்போச்சு 😛
மாத்திடறேன்
Nice collection of songs… However some of the songs seem to be missing such as “Poompavai.. aambal..” in sivaji etc…
நன்றி ஸ்ரீகாந்த்
// நினைவில் நின்றது: கேட்டால் எட்டடி; பார்த்தால் பதினாறடி; ரஜினி என்றால் முப்பத்திரண்டடி! ஷங்கரும் என்பதால் 70 எம் எம் அடி!!! //
சூப்பர்.
இசை இன்பம்: : “தமிழ்த் திரை இசையில் டாப் டென் 2007”
கார்த்தியின் கனவுலகம்: 2007-ன் மயக்�
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம் வருகிறேன்… தள முகப்பு அருமை பாலா.. அழைத்ததிற்கு நன்றி..
அழகான வரிசை பட்டியல்கள்.. நினைவில் நின்றது பகுது அருமை
சென்னை 28-ன் இசை யுவனுடையது.. தாங்கள் பிரேம்ஜி அமரன் என்று பதுப்பித்திருக்கிறீர்கள் பாலா
ஏங்க நீங்க அமெரிக்காலதான் இருக்கீங்களா கோடம்பாக்கத்துலயா? இத்தனை படமும் பார்ப்பீங்களா என்ன? நான்லாம் படம் பார்க்கிறதே கொஞ்சம் அபூர்வம்தான் 😦
அரசி, எனக்கும் பாலா மீது அதே சந்தேகம் தான்..
பாலா, எங்க இருந்து இத்தனை படப் பாடல்களையும் தரயிறக்கம் செய்கின்றீர்கள்
இசை: ப்ரேம்ஜி அமரன் — Yuvan.
//பாலா, எங்க இருந்து இத்தனை படப் பாடல்களையும் தரயிறக்கம் செய்கின்றீர்கள்//
சிவ சிவா! இப்படி அப்பட்டமா கேட்டா எப்படிங்க பதில் சொல்வீங்க?
பிங்குபாக்: What were the notable & forgettable Tamil Movies in 2008: Thamil Cinema « Snap Judgment
பிங்குபாக்: Superhit Songs in Tamil Cinema - 2008 Year in Review « Snap Judgment
பிங்குபாக்: 2012 Anadhan Vikadan Awards for Popular Tamil Cinema, TV and Bestsellers | Snap Judgment
பிங்குபாக்: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot