Category Archives: Uncategorized

தினம் ஒரு கவிதை

Happy Birthday to DOK

நான் முன்பே வலைப்பதிந்தது போல் எனக்கும் யாஹு குழுமங்களுக்கும், தொடர்பு கொடுத்த ‘தினம் ஒரு கவிதை’ ஆறாவது வருடத்தில் கால்பதிக்கிறது. என்னுடைய வாழ்த்துக்கள்.

வாரம் ஒரு பட்டியல்: பி.கே. சிவகுமார்

அரசியலும் சமூகமும்

ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும

ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை

ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்

பொருந்தாக் காமம்

சிறுகதை

கோயில் விளையாட்டு

Humor In Maraththadi for the New Year – (1)

Humor In Maraththadi for the New Year – (2)

Humor In Maraththadi for the New Year – (3)

கவிதைகள்

ஞாபகங்கள்

யேன் செய்ததில்லை?

பி.கே. சிவகுமார் கவிதைகள்

எந்திர வாழ்க்கை

பி.கே. சிவகுமார் கவிதைகள்

என் காதல்….

எட்ட நின்று எட்டிப் பிடி தேசத்தை

இயந்திர நனைதல்

தமிழ் மாநாடு

பி.கே. சிவகுமார் கவிதைகள்

இலக்கியக்கட்டுரைகள்

வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் “வாழ்க்கைச் சுவடுகள்”

வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் “வெறும் பொழுது”

புதுமைப்பித்தனும் தமிழ் இலக்கியமும் – கருத்துப் பரிமாற்றங்கள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)

தனித்தமிழ் என்னும் போலி – (1)

தனித்தமிழ் என்னும் போலி – (2)

பாரதி சின்னப் பயல் – ஹரி கிருஷ்ணன்

பாரதியார் கவிதைகள்:

பாரதி என்ற பெயரைக் கேட்டாலே மனதில் மலர்ச்சி ஏற்படுகிறது. பாரதிக்குப் பராசக்திப் பித்து அதிகமா அல்லது கண்ணன் பித்து அதிகமா என்று கேட்டால் முன்னது என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். பாஞ்சாலி சபதத்தில் இதற்கு விடை இருக்கிறது.

அவைக்கு ஒரு வேண்டுகோள். பாரதியின் உரைநடை பற்றியும் பேசலாம். அதிகம் கவனிக்கப்படாமலே இருக்கும் துறை அது. கட்டுரை, சிறுகதைகள், ஆங்கில எழுத்து, பத்தி¡¢க்கைக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளுக்கும் தன் பங்கைச் செலுத்தியிருப்பவன் பாரதி. Fox with a Golden Tail என்ற கூடார்த்தக் கதை பாரதி தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும் நகைச்சுவை எழுதுவதில் வல்லவனாய் இருந்தான் என்பதற்குச் சான்று. தாகூர் சிறுகதைகளைத் தமிழிலும் ஆழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருப்பது பலருக்குத் தொ¢யாது. அவற்றைப் பற்றியும் பேசலாமே.

(பலருக்கும் தெரியாதது என்னவென்றால் பாரதிதாசன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அயல்நாட்டுப் பத்திரிக்கைகளில் வெளிவரச் செய்திருக்கிறான். பாரதிதாசனே குறிப்பிடும் உண்மை இது.)

யாப்பறிந்தவர்கள் பாரதியின் யாப்பியல் கொள்கைகளை விவாதிக்கலாமே. இலக்கணம் அறியாத வெள்ளைப் புலவன் என்ற உரையின் உண்மை என்ன என்பதையும் பார்க்கலாமே. (வெளிவிருத்தம் என்ற வகைக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் பாரதியின் ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா என்ற பாடலை அல்லவா பார்க்க வேண்டும்.)

அதிகம் அறியப்படாத பாரதி கவிதைகளையும் அவ்வப்போது வெளிவரும் பாரதி ஆராய்ச்சி நூல்கள் பற்றியும் பரிமாறிக்கொள்ள இந்த இழை எவ்வளவு வாய்ப்பானது! இப்படி ஓர் இழையினை ஆரம்பித்தவருக்கும் இந்த இழையை மிகுந்த ஆர்வத்துடன் இதுவரை பின்னிக்கொண்டிருப்பவர்களுக்கும் திக்குகள் அனைத்தையும் நோக்கி வந்தனம் செய்கிறேன். (பாரதி இழை வெறுமையாக இருக்கலாமா என்ற ஆதங்கம் ஒன்றையும் பார்த்தேன்.) அடடா. உங்கள் உணர்வுகள் என் கண்களைப் பனிக்கச் செய்கின்றன.

என் பங்குக்கு பாரதி சின்னப் பயல் என்ற ஈற்றடியில் பாரதி எழுதிய அவனுடைய ஆரம்பகால வெண்பாக்களை இங்கு இடுகிறேன்.

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்

ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற

காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்

பாரதி சின்னப் பயல். (1)

இந்த வெண்பாவை எழுதியதும் காந்திமதிநாதன் அடைந்த (அவரும் அப்போது 16-17 வயது இளைஞர்தாம்) நாணம் சிறுவன் பாரதியைத் தாக்கியிருக்கவேண்டும். இன்னொரு வெண்பாவும் பாடினான்.

ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்

ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற

காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்

பாரதி சின்னப் பயல். (2)

இந்த நிகழ்ச்சி 1895லிருந்து 1898க்குள் நடந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. அதாவது பாரதிக்குப் 13 முதல் 16 வயதுக்குள். அவைக்கு ஒரு வினா. கண்ணன் பாட்டில் பாரதி பொதுவாக ஒரு முறையைக் கடைப்பிடித்திருக்கிறான். ஆண் வடிவத்திற்குக் கண்ணன் என்றும் பெண் வடிவத்திற்குக் கண்ணம்மா என்றும் பெயர் வைத்திருக்கிறான். குழந்தை வடிவில் ஆண் குழந்தையாகவும் பெண் குழந்தையாகவும் பார்த்திருக்கிறான்.

தாய் என்ற வடிவத்தில் மட்டும் அது என்ன கண்ணன் என் தாய்? கண்ணம்மா என் தாய் என்றல்லவோ இருந்திருக்கவேண்டும்? தலைப்பில் தவறா என்று பார்த்தால் பாட்டிலும் பாரதி “கண்ணன் எனும் பெயருடையாள்” என்றல்லவோ சொல்கிறான்? இது ஏன்? (என் விளக்கத்தை முதலில் இட்டு உங்கள் கருத்துகளுக்குச் சாயமேற்ற விருப்பமில்லை.) யாரேனும் விளக்கம் தர முடியுமா?

நன்றி: மன்ற மையம்

அதிகம் தாக்குபவர் இவர்



Survey Results Thanks to Sparklit and YOU

இந்தத் தேர்தலிலும் பெருவாரியாகக் கலந்துகொண்டு வாக்களித்து ரசிப்புத் திறனுக்கு ராஜ மரியாதையும், பின்னூட்டத்திற்கு ஊக்கமும் தர அனைவரையும் ஆவலுடன் அழைக்கிறேன்.

சித்திரக் கதை

யாஹு குழுமங்களில் இப்படிப் பேசினால் –>

Pickles cartoon

இப்படி எண்ணத் தோன்றும் –>


Blondie - Dagwood courtesy of Washington Post

முடிவு இப்படி ஆகிப் போகும் –>


Pickles

பார்த்ததுவே… கேட்டதுவே… நினைப்பதுவே…

Hail Pakistan

பாகிஸ்தான் குறித்த இவரின் எண்ணங்களுக்கு மறுபேச்சே கிடையாது 😛 அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்!?



அமுதசுரபியின் புதிய புத்தகங்களாக காந்தளகம் அனுப்பிய பட்டியல்:

1. தமிழில் இணைய இதழ்கள்: அண்ணா கண்ணன் – ரூ. 80/-

2. மலர்மன்னன் கதைகள்:மலர்மன்னன் – ரூ. 100/-

நாற்பத்தைந்து ஆண்டுகளாய் எழுதிவரும் மலர்மன்னனின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

3. பாரதியார் சரித்திரம்: செல்லம்மா பாரதி – ரூ. 60/-

1943-இல் முதல் முதலாக வெளியான நூல். அதே வடிவில் 63 ஆண்டுகளுக்குப் பிறகும்.

4. கேப்டன் கல்யாணம்: அமரர் வசுமதி ராமசாமி – ரூ. 125/-

1959-இல் வெளியான புதினம் இப்பொழுது மீண்டும் அச்சில் வந்துள்ளது.

5. விவாதங்கள் சர்ச்சைகள்: வெங்கட் சாமிநாதன் – ரூ. 120/-

இலக்கிய முகமூடிகள், க.நா.சுவும் கோவிந்தாக்களும், வல்லிக்கண்ணனுக்கு ஒரு பாராட்டு, தமிழினி 2000, பிச்சமூர்த்தி நினைவு விழாவில், இன்னும் பல சுவையான கட்டுரைகள்.

தமிழ்நூல் இணையதளத்தில் சுஜாதாவின் புத்தகங்களைத் தேடினபோது கிடைத்த விடைகளைப் பாருங்களேன்! நீங்களும் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் பேரைக் கொண்டோ, புத்தகத்தின் தலைப்பைக் கொண்டோத் தேடிப் பார்க்கலாம்.



நடைபெறும் தேர்தலை நாளையோடு ஏறக்கட்டிவிட்டு புதிய கருத்துக்கணிப்பை ஆரம்பிக்க எண்ணம்.

கேள்வி: பின்னூட்டங்களின் மூலம் கவனத்தைப் பெரிதும் கவர்பவர் யார்?

எனது எண்ணத்தில் இதுவரை உதித்தவர்கள்: 1. பத்ரி 2. டைனோ 3. பரி 4. பிரபு ராஜதுரை 5. ரமணீதரன் 6. ரவியா 7. உஷா 8. மறுமொழிகளில் எவரும் அக்கறை ஏற்படுத்துவதில்லை!

நான் தவறவிட்ட உகப்பானவர்களை பின்னூட்டத்திலோ bsubra at india . com முகவரியின் மூலமோ சொல்லுங்கள்.

யார் இவர்?

LTTE leader Mr. V. Pirapaharan at Heroes dayTamil: “இந்திய அரசு புதிதாக ஆயுதங்களை தரும் அல்லவா?” என்றார் அமைச்சர் பண்டுருட்டியார். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ரஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பதுபோல பிரதமரும் தலையசைத்தார். புலிகளின் தலைவர் பிரபாவுடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ரஜீவ். பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது.

பண்டுருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். ‘இந்த இரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விடயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரம் இருக்கிறது. ஆயுதக் கையளிப்புப் பிரச்சினை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியற் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரில் நம்பிக்கையில்லை? இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே? என்றார் அமைச்சர். ரஜீவ்காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

Book by Balasinghamஇலங்கையில் வட,கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று hPதியாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாய்நிலம். இந்த தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வட-கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டபோதும், இந்த தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட்டை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தை கூறுபோட வழிவகுக்கும் என்று விளக்கினேன்.

பண்டுருட்டியார். ‘எதற்காக யோசிக் வேண்டும். இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு” என்றார். ‘இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாம் அப்படித்தான்” என்று பிரபாகரன் கிண்டலாக பதிலளித்தார்.”

கணை விடும் களங்கள்

ஜெயமோகனைக் கேளுங்கள் முடியப்போகிறது. அதற்கு முன் அவரின் படைப்புகளை அலசி விட்டு வினா தொடுக்கலாம். பொதுவான சில கேள்விகளைப் பாராவிடம் கேட்டு அவரது எண்ணங்களைப் பெறலாம். அப்படி எதுவும் தோன்றாவிட்டால் சில இலக்கிய-ஸ்டாண்டர்ட் கேள்விகள்:

1. படிப்பு அனுபவம் / படைப்பு அனுபவம் என்ற வித்தியாசத்தை பலர் வலியுறுத்துகின்றனர் – நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

2. உங்கள் சம – கால எழுத்தாளர்களின் உங்களை வாசிக்கத் தூண்டிய எழுத்து யாருடையதாக இருந்தது?

3. பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். உங்கள் Sensitivity – யை இவைகள் பாதித்தனவா அல்லது மேலும் எழுத வித்திட்டதா?

4. சென்னை நூல் வெளியிட்டு விழாக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

5. பொதுவாக இன்று “சாதி” எழுத்துக்கள் “தனித்த அடையாளம்” என்ற பெயரில் உருவாகின்றனவே? இது ஆரோக்கியமான போக்கா?

6. டி.வி. மெகாசீரியல்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

7. நீங்கள் ஏன் இலக்கியத்தின் மற்ற வடிவங்களை பிரயோகிக்கவில்லை. அதாவது கவிதை உலகில் நீங்கள் பரவலாக கவனம் பெறாமல் போன காரணம் என்ன?

8. தத்துவ இலக்கிய உலகிற்குள் எப்போது நுழைந்தீர்கள்? ஏன்?

9. உங்கள் படைப்புலகத்திற்கு உந்து சக்தியாய் அமைந்த இளமைக்கால அனுபவங்களைக் கூறமுடியுமா?

10. அடுத்து என்ன முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள்?

நன்றி: வெப்-உலகம்

சூரியனும் நிலாவும்……. – பிரேம் நிமல்

பிரேம் நிமல் வலைப்பதிவு:

“பூமிதான் அம்மா

நிலா தம்பி

சூரியன்தான் அண்ணன்

….

….

தானே விளையாட்டில் வெற்றி

கொள்ள வேண்டும் என்ற

ஆசையில் அங்கேயே நிற்கிறான் அண்ணன்…

அங்கே சென்றால் நாம் தோல்வி

அடைந்து விடுவோமோ

என்ற பயத்தில் செல்லாமல்

அம்மாவை சுற்றுகிறான் தம்பி….

அம்மாவும் தன் வேலையை

பார்த்துக்கொண்டிருக்கிறாள்…..

இத்தனை காலம் முடிந்தும்

அண்ணன் தம்பி பக்கத்திலும்,

தம்பி அண்ணன் ப்க்கத்திலும்,

செல்லாமல் இருக்கின்றனர்…………….
”

ஆண்டுவிழா மலர் – ஆசிப் மீரான்

தமிழ்-உலகம் – ஆசிப் மீரான்: வருகிற மே மாதம் முதல்வாரம் அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் நான்காமாண்டு நிறைவுவிழா நடைபெறவிருக்கிறது. எல்லா வருடங்களையும் போலவே இந்த விழாவின்போது கணினியில் தமிழ் தொடர்பான செயல்முறைவிளக்கம்,குறுந்தகட்டில் தமிழ் மென்பொருட்களின் இலவச வினியோகம், கவியரங்கு, நூல் வெளியீடு ஆகியவை முக்கிய நிகழ்வாக இடம் பெறப் போகின்றன.

அமீரகத் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளும் இந்த விழாவில் குறைந்தது 500 பேராவது கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விழாவின்போது வெளியிடுவதற்காக ஆண்டுவிழா மலர் தயாரிக்கும் வேலைகளிலும் நாங்கள் இப்போது ஈடுபட்டிருக்கிறோம்..இதற்காக தமிழறிஞர்கள்,ஆன்றோர் பெருமக்களிடமிருந்து ஆக்கங்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.

1000 பிரதிகள் அச்சிடப்படும் இந்த் ஆண்டு விழா மலரில் உங்களது ஆக்கமும் இடம் பெற வேண்டுமென்றால் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிக்குள்ளாக உங்களது படைப்புகளை எனக்கு அனுப்பித் தரும்படி மிக அன்புடன் வேண்டுகிறேன்.

aaNdu vizaa malar padaippu என தலைப்பிட்டு அனுப்பினால் மிக நன்றியுடையவனாவேன்.

அமீரகத் தமிழிணைய நண்பர்களின் ஆண்டு விழா மலரைச் சிறப்பிக்கும் வண்ணம் உங்கள் ஆக்கங்களை அனுப்பித தருமாறு மீண்டும் அன்புடன் வேண்டுகிறேன்.

மிக்க அன்புடன்,

ஆசிப் மீரான் – aj at emirates . net . ae

(அமீரகத்தமிழிணைய நண்பர்களின் மலர் குழுவினருக்காக)