Category Archives: Uncategorized

நான் யார்?

கண்ணன் தன்னை அறிந்து கொள்ள வைக்கும் கேள்வி-பதில் பக்கங்களை சொல்லியிருந்தார். நானும் போய் பதில் கொடுத்து பார்த்தேன்; அதன் முடிவுகள்:


Economic Left/Right: 2.12
Social Libertarian/Authoritarian: 0.56

நான் மற்ற பெருந்தலைகளுடன் ஒப்பிட்டால் எங்குள்ளேன் என்றும் பாருங்கள்:

(Politicians)

ஊடகங்கள் என்னை எப்படி மாற்றியிருக்கின்றன என்று சுய பரிசோதனை செய்து பார்த்தால் :((


நவீன ‘ஜன கன மன’



Ayidha Ezhuthu



ஏ.ஆர்.:

ஓ யுவா யுவா ஒ

கோரஸ் 1:

ஜன கன மன

ஜனங்களை நினை

கனவுகள் அல்ல (அல்லது வெல்ல)

காரியம் துணை

கோரஸ் 2:

ஓளியே வழியாக

மலையே படியாக

பகையோ பொடியாக

சக் சுக் சுக் சுக் கும்செய்

M:

இனியொரு இனியொரு விதி செய்வோம்

G:

ஓ யுவா யுவா ஒ யுவா

M:

விதியினை மாற்றும் விதி செய்வோம்

G:

ஓ யுவா யுவா ஒ யுவா

M:

கோரஸ் 1

கோரஸ் 2

ஏ.ஆர்.:

ஓ யுவா யுவா ஒ ஒஹோ

M:

ஆயுதம் எடு ஆணவம் சுடு

தீப்பந்தம் எடு தீமையைச் சுடு

ஏ.ஆர்.:

இருளை எரித்து விடு

ஏழைக்கும் வாழ்வுக்கும்

இருக்கின்ற இடைவெளி குறைத்து

நிலை நிறுத்து

ஆடி கொட்டத்தில் விட்டதை சட்டத்தின் வட்டத்தை உடைத்து

M:

காட்டுக்குள் நுழைகின்ற காற்று என்றும்

காலணி எதுவும் அணிவதில்லை

ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால்

ஆயுதம் எதுவும் தேவையில்லை

G:

ஓ யுவா யுவா ஒ யுவா

M:

கோரஸ் 1

ஏ.ஆர்.:

அச்சத்தை விடு லட்சியம் தொடு

வேற்றுமை விடு வெற்றியைத் தொடு

தோழா போராடு

மலைகளில் நுழைகின்ற நதியெனெ

சுயவழி அமைத்து, படை நடத்து

அட வெற்றிக்கு பக்கத்தில்

முற்றத்தின் சுற்றத்தை நிறுத்து

M:

நல்லவர் யாவரும் ஒதுங்கிக் கொண்டால்

நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்

வாலிபக் கூட்டணி வாளெடுத்தால்

வலப்பக்கம் பூமி திரும்பி விடும்

G:

ஓ யுவா யுவா ஒ யுவா

M:

கோரஸ் 1

கோரஸ் 2

கோரஸ் 1

ஏ.ஆர்.:

இனியொரு இனியொரு விதி செய்வோம்

G:

ஓ யுவா யுவா ஒ யுவா

ஏ.ஆர்.:

விதியினை மாற்றும் விதி செய்வோம்

G:

ஓ யுவா யுவா ஒ யுவா

நன்றி: வாலி – யாஹு குழுமம்

பிகு: கொழுந்து விட்டெரியும் பிரச்சினைக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை P

மறுமொழியின் எதிர்கொரலுக்கு பின்னூட்டம் தரும் கருத்து

Interesting Commenters

சிகரம் தொட்ட பெண்மணிகள்

தினகரன்: பா. ராகவன்

அமிர்தானந்தமயி

கமலா தாஸ்

பெனசீர் பூட்டோ

கிளியோபாட்ரா

ஆண்டாள்

டயானா

நதீன் கோர்டிமர்

சாரதா தேவி

இந்திரா காந்தி

யார் எழுதிய கவிதை?

ஈ-தமிழுக்காக நண்பர் ஒருவரிடம் கவிதை கேட்க, அவர் கொடுத்த கவிதை இது.



ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க

மெய்யா வயிறு வலிக்குதுங்க ஐயோ என்செய்ய

ஆசுபத்திரி போயி நீயும் ஊசி போட்டுக்கோ

அதுக்கு நானும் என்ன செய்ய அழகுசாமியே

ஆசுபத்திரி செல்ல எனக்கு காசு வேணாமா

பீசுகேட்டா என்ன செய்ய ஓசி டாக்டரா

காசு இல்லை என்றுதானே கவலைப்படுகிறாய்

இந்தா காசு எடுத்துக்கொண்டு உடனே சென்றிடு

காசு கொடுத்து பீசு கொடுத்து ஊசி எதுக்குங்க

காசிக்கடை அல்வா போதும் காசு குடுங்க



நாளை முதல் நடக்கும் கருத்துக் கணிப்பில், யார் எழுதிய கவிதை என்று சொல்லுங்களேன்.



பாஸ்டன் பாலாஜி / சொக்கன் (நாகாஸ்) / ஹரன் பிரசன்னா / மீனாக்ஸ் / பிரகாஷ் / பா ராகவன் / (பெயரிலி) ரமணீதரன் / பிகே சிவகுமார் / உஷா / யாரும் இல்லை



(நாளை முடியும் பின்னூட்டங்கள் கருத்துக் கணிப்பில் அனைவரும் கிட்டத்தட்ட சம வாக்குகள் பெற்றுள்ளனர் 🙂

நம்பர் 1

யாஹு குழுமங்களின் எண்ணிக்கை: மொழிவாரியாக

தமிழ்: கிட்டத்தட்ட 2,410,000 (நம்மை அடித்துக்கொள்ள எவர் இருக்கிறார்)

ஹிந்தி: இதர் உதர் 2,370,000

தெலுங்கு: చుట్టూ, చుట్టూరు 814,000 (Thats a good number?)

பெங்காலி: குத்து மதிப்பாக 753,000

கன்னடா: about 480,000 (அஷ்டே!)

மலையாளம்: About Transliterated in Malayaalam480,000

ஒரியா: ஏறக்குறைய 180,000

ஆதாரம்/நன்றி: ScreamCast

"இப்படி ஒரு மாமியார் இருப்பாரா"



Kolangal Serial by Sun TV
தமிழ் சிஃபி.காம்: “இந்த மாதிரி மாமியாருங்க எக்கச்சக்கமா இருக்காங்க. சும்மா.. அப்படியே கிராமப் பக்கம் போய்ப்பாருங்க. அப்ப தெரியும் இதைவிட கரிச்சு கொட்ற மாமியாருங்க நிஜமாவே இருக்காங்க.

தேவயானி கேரக்டரே வித்தியாசமானது. குடும்பத்தில் அவங்க மூத்த பெண். தன்னோட பொறுப்பை உணர்ந்து எல்லா விஷயங்களையும் அமைதியாக சகித்துக்கொள்கிற உறுதியான பெண். அவளால் மாமியாரை எதிர்த்து பேசமுடியாது என்று அர்த்தமல்ல. யாருக்கும் தன்னை புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என்று விலகிவிடுகிறாள். அவ்வளவுதான்.”

கோலங்கள் இயக்குநர் திருசெல்வம்.

குழுமங்களிலும் வலைப்பதிவுகளிலும் என்ன எழுதலாம்?



to be frank with you , நான் ஆ.வி பாத்துட்டு கிளப்புக்குள்ள சேந்ததே ஒரு பார்வையாளனாகத்தான். பங்கேற்பாளனாக இல்லை. . ஹா இது தான் நமக்கான இடம். தடையில்லாம் இனிமே படிக்கலாம்னு நெனைச்சேன். உங்க புஸ்தமெல்லாம் படிச்சது, புடிச்சது இதெல்லாம்

” அப்பா. நலம். ஹாஸ்டலில் மெஸ்ஸுக்கு பணம் கட்டவேண்டும் (பொய்) .உடனே ஐநூறு ரூபாய் தந்தி மணியார்டரில் அனுப்பவும்” அப்படிங்கற மாதிரியான கடிதம் தவிர்த்து, வேற எழுதறது எனக்கு பழக்கமே இல்லை. ஒரு ஆங்கில மாதமிருமுறை பத்திரிக்கையில், கரஸ்பாண்டென்ட்டாக ஒரு ஐந்து ஆண்டுகள் பணியாற்றியதால், ஆங்கிலம் மட்டும் சுமாராக வரும். கிளப்புக்குள்ளே சேந்தப்புறந்தான் எனக்கே தெரியும் ஆங்கிலத்த விட தமிழ் நல்லா வருதுன்னு.

எவ்ளோ அசையாக வந்தேன் தெரியுங்களா ? ஒரு நாள் ஓய்வா இருந்தப்போ பழைய மடல்களை யெல்லாம் பாத்தேன் . மனசு ஆத்து ஆத்து போறது சார். எவ்ளோ நல்ல டாபிக், எத்தனை பேரோட பங்களிப்பு, மனசு புண்படாத கால் வாரல்கள், புதுசு புதுசான செய்திகள், எத்தனை எழுத்தாள , நூல் அறிமுகங்கள். அதெல்லாம் எங்க போச்சுன்னே தெரியலையே? சே. அப்பமே நான் சேந்திருக்கணும் .

புச்சு புச்சா இன்னும் எழுதவேண்டியது எவ்ளோ இருக்கு?

Madras Musings s.முத்தையா பத்தி,

‘கரைந்த நிழல்கள்’ பத்தி,

நகைச்சுவை துளியுமில்லாமல் அங்கதம் எழுதும் இ.பா பத்தி,

ஆர்.சூடாமணியின் கதைகள் பத்தி,

ஜெயகாந்தனின் தற்போதைய சமரசங்கள் பத்தி,

கிருத்திகாவின் ‘வாசவேஸ்வரம் பத்தி,

எம்.வி.வி யின் ‘பெட்கி’ பத்தி,

திசைகள் பத்தி,

சாவி உருவாக்கிய எழுத்தாளர்கள் பத்தி,

சுப்ரமண்ய ராஜு ‘கசடதபற வில்’ எழுதிய மீராவின் கவிதைதொகுப்பின் விமர்சனம் பத்தி ( மீரா நல்ல கவிஞர். ஆனால் கவிதைகளே எழுதவில்லை – சு.ராஜூ),

ஆத்மாநாம் கவிதைகள் பத்தி, ;

‘கால்களின் ஆல்பம்’ பத்தி,

சிங்கப்பூர் அரவிந்தன் பத்தி,

வத்சலாவின் கவிதைகள் பத்தி,

சத்தியமாக கண்ணில் நீர் வரச்செய்த ‘தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள் ‘ என்கிற ஈழக்கவிதை பத்தி,

Aldous Huxely பத்தி,

பாதிராஜ்யம் பத்தி,

யே ஜோ ஹை ஜிந்தகி பத்தி,

‘different strokes’ பத்தி,

நளினி சிங்கின் டெலி ரிபோர்ட்டிங் பத்தி,

M.J. அக்பர் பத்தி,

அல்பாயுசில் போய்விட்ட அற்புதமான ந்யூஸ் ப்ரசென்ட்டர் அப்பன் மேனோன் பத்தி,

வயலார் பாட்டு பத்தி,

சௌந்த்ர்யாவின் த்வீபா பத்தி,

எம்.எஸ்.சத்யு வின் கரம் ஹவா பத்தி,

‘பரதனின் ‘தகரா’ , ‘சாவித்திரி ‘ பத்தி,

ஜென்சி யோட பாடல்கள் பத்தி,

சுதா வின் ‘குறையன்றுமில்லை’ பத்தி,

phaneesh murthy யின் திருவிளையாடல் பத்தி,

இளையராஜாவின் கன்னட திரைஇசை பத்தி,

புட்டண்ணா கனகாலின் ‘நாகரஹாவு’ பத்தி,

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் பத்தி,

அகில பாரத நாடக விழாவில் முதல் பரிசு வாங்கிய மாலனின் sci-fi ரேடியோ நாடகம் பத்தி,

ருத்ரையா பத்தி,

ஆற்றூர் ரவிவர்மா பத்தி,

‘சங்க சித்திரங்கள்’ பத்தி,

அ.ச.ஞா வின் தமிழ் பத்தி,

வாத்யாரின் ‘ஆர்யபட்டாவிற்கும்’ எஸ்.பாலச்சந்தரின் ‘அந்த நாளு’க்கும் உள்ள ஒற்றுமை பத்தி,

டி.ஆர் ராமச்சந்திரன் பத்தி, காளி.என்.ரத்தினம் பத்தி,

ஞானசவுந்தரி பத்தி, மகேந்திரனின் ‘மெட்டி’ பத்தி, அழியாதகோலங்கள் பத்தி,

பாலுமகேந்திராவின் திண்ணையில் வந்த நேர்காணல் பத்தி,

அற்புதமான நடிகை ஷோபா பத்தி, எஸ்.வி ரங்காராவின் குணச்சித்திர நடிப்பு பற்றி,

உங்கள் கனவுக்கன்னி ஜெயசித்ரா பத்தி,

டில்லி பாரதி பாலு என்கிற ‘நகுபோலியன்’ பத்தி,

கோவை ஞானி பத்தி,

பெங்களூர் ரவிச்சந்திரன் பத்தி,

எம்.ஜி.வல்லபனின் தைப்பொங்கல் படம் பத்தி,

அக்கிரகாரத்தில் கழுதை இயக்கிய ஜான் பிரகாம் பத்தி,

ரா.கி.ர வின் கிருஷ்ணதேவராயர் பத்தி,

பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாபாட்டி பத்தி ,

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஹாம்பர்கர் பிட்ஸா உண்டு ‘கஷ்டத்தில்’ ஜீவித்திருக்கும் நம் பரதேச மென்பொருளாளர்கள் பத்தியும் , அவர்களைப் பற்றி எங்கள் சுதேசி மனங்களில் ஏற்பட்டிருக்கும் ‘தட்டையான பிம்பம்’ பத்தியும் எழுத வேண்டியது எவ்ளோ இருக்கு?

இன்னொரு முக்கியமான இசைத் தடமான country music பற்றி யார் எழுதப் போகிறீர்கள்? ஹாங்க் வில்லியம்ஸ், ஜெண்டில்மேன் ஜிம் ரீவ்ஸ் என்று தொடங்கி நடாலியா இம்ப்ரோக்லியா வரை நீளும் சுவையான வரலாறு இல்லையா அது?

இந்தக் கடிதத்தை யார் எழுதியது என்பதற்கு ராகாகியில் இரா. முருகன் கொடுத்த முன்னுரையில் இருந்து ஒரு பகுதி:



Dear all,

I am reproducing an interesting mail I reced from one of our friends. (u can easily guess who it is from the writing style 🙂

What an impressive list of items to cover in RKK! Thanks dear ….

Why can’t we start forthwith?

rgds,

era.murukan

வாழ்க்கை – சுஜல்

(c) Corbis.comஅம்மாவின் மடியில் படுத்து உறங்க அக்காளுடன் சண்டை

அப்பாவின் கை பிடித்து சென்று கடையில் வாங்கிய பச்சை ரிப்பன்

பக்கத்து வீட்டு ரகுவிடம் பல்ப்பத்திற்கு பாகப்பிரிவினை

பாட்டியின் வடுமாங்காய்,தாத்தாவின் கண்ணன் கதைகள்

இவையாவும் நேற்று கண்ட பகல் கனவாய் மனதில்…

இன்று மூடிய அறையில் கணினி மட்டும் துணையிருக்க

அக்காவின் கல்யாணத்தை வீசீடி யிலும்

அப்பாவின் கைபட்ட வாரமொருமுறை மின்னஞ்சலையும்

பார்க்க முடியாமல் போன பாட்டியின் கடசி நேர முகத்தையும் எண்ணி …

மூடு பனி சூழ்ந்த வீட்டினில் ,நானும் ஒரு இயந்திரமாய்…

உற்றமும் சுற்றமும் கண்டு பொறாமைப்படும்

என அமெரிக்க வாழ்க்கை!

யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year

நேற்று புத்தாண்டு பிறந்த தெலுங்கு மற்றும் கன்னட நண்பர்களுக்கு யுகாதி வாழ்த்துக்கள்.

பிகு: காமிரா இல்லாமல் வசந்த கால பூக்காட்சிக்கு சென்றது வருத்தம்தான்; ஆனால், அவர்கள் செய்திருக்கும் தோட்ட வித்தைகளுக்கு ஏற்ப வீடு இல்லாமல் இருப்பதும் சௌகரியமே. (வேலை அதிகம் செய்ய வேண்டாமே!)