Category Archives: Tamil Blog

பக்கி, நிக்கி, ஜெ.கி.

ஜெயகிருஷ்ணனுக்கு வெறுப்பாக வந்தது.

ஒவ்வொரு ராத்திரியும், அர்த்த ராத்திரியில் அழும் குழந்தைக்கு நிப்பிள், இளஞ்சூட்டில் பால், டயாபர் மாற்றுதல் என்று சகல சிஷ்ருஷைகளும் செய்துவிடுவது போல் ஒவ்வொருவரும் எழுதியிருந்தார்கள். எல்லாக் கதைகளிலும் அன்னிய புருஷர்கள் ஏவுகணை வேகத்தில் பறந்தார்கள்.

ஏதேதோ மொழி பேசி, நிலவுக்கும் திருநள்ளாறுக்கும் நடுவில் திரிசங்குவாகி, நிமிஷ நேரத்தில் ஐஐடி+ஐஐஎம் குழந்தை பெற்று, தண்ணியில்லாக் காட்டில் மாமி மெஸ் மாத்திரை முழுங்கி, குப்பை நகரங்களில் உலவி வந்த மனிதர்களின் கதைதான் வலைப்பதிவுகளில் கிடைத்தது.

பக்கத்தில் இருந்த பறவை மானிட்டர் அலறியது. படித்துக் கொன்டிருந்த அறிபுனைவுக் கதையை அப்படியே விட்டுவிட்டு பறவை பக்கம் சென்றார்.

“பாஸ் இல்லாவிட்டால் லன்ச்சுக்கு காணாமப் போகிற மாதிரி இரண்டு மணி நேரமாக என்னைப் பார்க்கவே வரவேயில்லையே?” – இது பச்சைக்கிளி.

“அப்படியில்லடா பக்கி. ‘மனுசங்களுக்குப் புரியற மாதிரி எழுதுவதில் எந்த கிரகவாசி சிறந்தவர்?’ போட்டிக்கு வந்திருந்த மேட்டர் எல்லாம் படிச்சிண்டிருந்தேனா! அப்படியே தூங்கிட்டேன். குழந்தை அழற மாதிரி கனவு. ரொம்ப நாளா வளராம அப்படியே இருக்கிற குழந்தை. அழுதுண்டே இருக்கு. யார் எடுத்து டான்ஸ் ஆடினாலும் அழறத நிறுத்த மாட்டேங்குது. ‘வரந்தந்த சாமீக்கு பதமான லாலி’ பாட்டை மட்டும் பதினெட்டாயிரம் மொழியில் பாடறோம். எதற்கும் அடங்கல. மூஞ்சியெல்லாம் செவந்து போச்சு. அப்படி ரத்தக் கண்ணீர். நரகத்தில் பிண்டம் துடிக்கிற மாதிரி இருக்கு. கருட புராணத்தில் வருமே? அந்த மாதிரி குட்டிக் கைவிரல் சைஸில் முகம்.”

“உன்னை விட்டால் அந்தக் காலத்தில் வெண்பா பாடத் தெரிஞ்சவன் எல்லாம் நாலடியில் டயலாக் விட்ட மாதிரி இருநூறு பக்கத்துக்கு குழந்தைப் புராணம் எழுதுவே!” – இது நீலக்கிளி.

“அந்த மாதிரி எழுத இப்ப யாரு இருக்கா நிக்கி? ஒவ்வொண்ணுத்தையும் இக்கினியூண்டு இக்கிணியூன்டா ஆராஞ்சு, ருசிச்சு, சக்கைய கொடுத்து, வாசகனத் திளைக்க வைக்கணும். அதானே மனுசனுக்குப் பிடிச்ச கத? நம்ம தாத்தன், பாட்டன் வாழ்ந்த கலாச்சாரம்! அன்னனின்னிக்கு நடக்கிற வாழ்க்கையின் சுவாரசியம்; உன்னிப்பா கவனிச்சு, உறவுக்குள்ள நடக்குற கலவரங்கள சொல்லணும். எத்தன மக்கள் இருந்திருக்காங்க! சுயநலம், பச்சாதாபம், பேராச பிடிச்ச பொருளாதார பித்து முதல் அடுத்தவ வீட்டுக்குள்ள நுழையற மோகம் என்று ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம்!”

“ரி-நாய்-சென்ஸ் மாதிரி இவங்க எல்லாம் புது ட்ரெண்ட் உருவக்கறாங்கன்னு நீ ஏன் நெனைக்கக் கூடாது?”

“பெட்ரோல் தீர்ந்துபோச்சுன்னு கைவிரிச்ச காலத்தில் வண்டியோட்னவனுக்குத்தான் பெட்ரோலோட அருமை தெரியும். நீயே படிச்சுப் பாத்து நொந்தாத்தான் உனக்கு வெளங்கும்.”

“எங்களுக்கும் கொடுத்தா நாங்களும் படிப்பம்ல?”

“அதுதான் பெஸ்ட் நிக்கி. இதுவரைக்கும் வந்த இருபது கதைகள்ல பகல் பத்தை பக்கி படிக்கட்டும். இராப்பத்தை நீ படி நிக்கி”.

“அப்படீன்னா… உனக்கு யாரு தாலாட்டுப் பாடறது?”

நிக்கியைப் பார்த்து ஜெய கிருஷ்ணன் கண்ணை சுழற்றினார். ஒலி 96.8 ஆக தமிழ் பண்பலை போட்டுக் கொண்டார்.கைவிரலை தாளமிட்டவுடன் சத்தம் சரியாக வைக்கப்பட்டது. கண்மூடிய நிலையில் ஓடிய கருவிழிகளில் திரைப்படத்தையும் ஒளிர விட்டுக் கொண்டார்.

ஜெயகிருஷ்ணன்.

சுருக்கமாக ஜெ.கி. அருகிவரும் இலக்கிய உலகில் மீதமிருந்த ஒரே இலக்கியவாதி. தேடல்களினால் ஆய பயன் எதுவும் இல்லை என்று முடிவெடுத்த யுகத்தில் தப்பிப் பிறந்த இவரை சனிக்கிரகம் கண்டுபிடித்து தன் பார்வையில் வைத்து இரஷிப்பதற்குள் ஏழரை நாட்டு உலகத்துக்கே சென்றுவிட்டவர்.

‘கீக்கீக்கீ’ என்று கத்திக் கொண்டிருந்த பச்சைக் கிளியை பக்கி என்று பெயரிட்டு பேசிவருபவர். ‘கூக்கூக்கூ’ என்று கூவிக் கொண்டிருந்த நீலக்கிளியில் பீத்தோவன் தொட்டு பரத்வாஜ் முதற்கொண்டு பீட்டில்ஸ் வரை பாட வைத்து நிக்கியாக்கிக் கொண்டவர்.

இதற்கெல்லாம் மின் சாதனங்கள் இருக்கின்றனவே என்ற மானுட ஜாதியினரிடம் புழு பூச்சிக்கும் முனைவர் அறிவு உண்டு என்பதை உலகறிய ஓதியதால் தூக்கு மேடை வரை சென்று, மீண்டு, நிரூபிப்பதில் வாழ்நாள் ஆராய்ச்சியாளர் ஆனவர்.

பக்கத்தில் இருந்த பறவை மானிட்டர் அலறியது. ஆராய்ந்து கொன்டிருந்த புழு, பூச்சிகளின் ஆறறிவை அப்படியே விட்டுவிட்டு பறவை பக்கம் சென்றார்.

“பன்றியா மறுபிறப்பெடுத்த ரிஷி பழைய பொறப்ப மறந்தே போன மாதிரி இரண்டு மணி நேரமாக என்னைப் பார்க்கவே வரவேயில்லையே?” வரவேற்றது பச்சைக்கிளி.

அறிவியல் சிறுகதைப் போட்டி

உழைப்பாளி பாட்டாளி வேலைக்காரர் :: PiT June

போட்டித் தலைப்பு
அன்றாட வேலையினூடே ஒரு நாள் (A Day at Work) – அன்றாட வேலையில் ஈடுபட்டிருக்கும் உயிரினங்களை (மனிதர்கள் /மிருகங்கள்) ஒரு படத்துக்குள் கொண்டு வருதல்.

கொசுறு வேலை

எட்டுகின்ற உணவை எட்டாத உயரத்தில் வைத்து குப்பை கருவி காக்கை

சூடான இடுகைகள் – அந்தக் காலம்

முன்னொமொரு காலத்தில், மூன்றாண்டுகளுக்கு முன்பு சூடான இடுகைகளாக எவை இருந்தன/எவர் இருந்தார்கள் என்று நினைத்து பார்த்தபோது…

1. ரோசா வசந்த் :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்…!: “சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்.”

2. மதி கந்தசாமி :: ஓர் ஆணாதிக்க ஆங்கிலப் பேராசிரியர் என்ன எழுதுவார்?..

3. வெங்கடேஷ் :: கமலுக்குப் பின்… – நேசமுடன்

4. மூக்கு சுந்தர் :: My Nose – நண்பர் சுந்தரவடிவேலுக்கு ஒரு பகிரங்க கடிதம்

5. காசி :: தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்புகள் – சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

6. டோண்டு :: Dondus dos and donts: சோ என்னும் சிறந்தப் பத்திரிகையாளர்

7. ஆப்பு :: Aappu: “டமில் நியு இயரு விஷ்ஷீ லிஸ்ட்டு”

8. ரஜினி ராம்கி: Rajni Ramki: “அடுத்த ’10’ படங்கள்!”

9. பொட்”டீ” கடை: நான் இந்தியனா?

10. 31. முகத்திரை களைகிறேன்.. | தருமி: 25. ‘இவர்களும்’…’அவர்களும்’

11. பிகே சிவகுமர்: சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ | விமர்சகரும் வாசகரும்

12. முத்து (தமிழினி) :: ஒரு தமிழனின் பார்வை: “மசாலா தமிழ் திரைப்படங்களும் தமிழர்களும்” | ஒரு செய்தியும் சில பின்னூட்டங்களும்

13. சுரேஷ் கண்ணன் :: பிச்சைப்பாத்திரம்: “பிரபல நேர்மையானவர்களின் மற்றொரு முகங்கள்”

14. குழலி பக்கங்கள்: “மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் – ஒரு அலசல் – 1”

15. மாலன் :: என் ஜன்னலுக்கு வெளியே…: “ஜேகே என்றொரு நீராவி என்ஜின்”

கருத்து சுதந்திரமா – லிட்டருக்கு எத்தன ரூபா??

செய்தி: AFP: Rights group highlight threats in Europe on press freedom day | ‘Predators of press freedom’ identified – UPI.com

  1. இஸ்லாமிய போராளிக் குழுக்கள்: ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான்
  2. Ilham Aliev: அஜர்பைஜான்
  3. அலெக்சாந்தர் லுகாஷென்கோ (Alexander Lukashenko): பெலாரஸ்
  4. Than Shwe: பார்மா (மியான்மர்)
  5. Hu Jintao: சீனா
  6. Diego Fernando Murillo Bejarano: கொலம்பியா
  7. ஆயுதந்தாங்கிய கொலம்பிய புரட்சிப் படை (Revolutionary Armed Forces of Colombia (FARC)): கொலம்பியா
  8. ரௌல் காஸ்ட்ரோ: கியூபா
  9. Teodoro Obiang Nguema: மத்தியரேகை கினியா (Equatorial Guinea)
  10. Issaias Afeworki: எரிதிரியா (Eritrea)
  11. Yahya Jammeh: காம்பியா (Gambia)
  12. Ali Khamenei: இரான்
  13. மஹ்மூத் அஹ்மதிநிஜாத் (Mahmoud Ahmadinejad): இரான்
  14. இஸ்ரேல் இராணுவம்: இஸ்ரேல்
  15. Nursultan Nazarbayev: கஜக்ஸ்தான் (Kazakhstan)
  16. Choummaly Sayasone: லாவோஸ்
  17. Muammar Gaddafi: லிபியா
  18. நட்சத்திர காவல் துறை (Star Force Police): மாலத்தீவுகள் (Maldives)
  19. போதை மருந்து கடத்தல் குழுக்கள்: மெக்ஸிகோ
  20. போராளிக் குழுக்கள்: நேபாளம்
  21. அரசு பாதுகாப்பு சேவை (SSS): நைஜீரியா
  22. கிம் ஜாங் இல்: வட கொரியா
  23. பாலசுதீன அதிகார சபை: பாலஸ்தீனம், காசா கரை
  24. பாலஸ்தீன பாதுகாப்பு படை: பாலஸ்தீனம், மேற்கு கரை
  25. விளாதிமிர் புடின்: ருஷியா
  26. Paul Kagame: ருவாண்டா
  27. Abdallah Ibn al-Saud: சவுதி அரேபியா
  28. Mohamed Dhere and Mohamed Warsame Darwish: சோமாலியா
  29. Al-Shabaab: சோமாலியா
  30. ETA: ஸ்பெயின்
  31. வேலுப்பிள்ளை பிரபாகரன் (விடுதலைப் புலிகள், தமிழீழம்): இலங்கை
  32. கோத்தபாயா ராஜபக்சே (Gotabhaya Rajapakse), இராணுவ/பாதுகாப்பு அமைச்சர்: இலங்கை
  33. Bashar el-Assad: சிரியா
  34. Zine el-Abidine Ben Ali: டுனிசியா
  35. Gurbanguly Berdymukhammedov: துருக்மெனிஸ்தான்
  36. Islam Karimov: உஜ்பெகிஸ்தான்
  37. Nong Duc Manh: வியட்நாம்
  38. ராபர்ட் முகாபே: ஜிம்பாப்வே

தொடர்புள்ள வரைபடங்கள்: Map of Freedom in the World & freedomhouse.org: Map of Press Freedom

முழுமையாக வாசிக்க: Reporters Without Borders :: Reporters sans frontières – International

முந்தைய பதிவு: இன்றைய உலகம் & சுதந்திரம் & தணிக்கை – சிந்தனை

அமெரிக்கா, ஆஸ்திரியா – ஆன்மிகம், ஆண், அப்பியாசம்

ரொம்ப நாளாக வரைவோலையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை; பின்னணி அறியவில்லை என்பது சுணங்கலுக்கு முதல் காரணம். ரொம்ப ஆறிப் போய்க் கொண்டிருக்கிறது/நினைவை விட்டு அகல்கிறது என்பது இன்னொரு காரணம். எனவே, டிராஃப்ட்… அப்படியே…

பிபிசி செய்தி: ஆஸ்திரியாவில் பெற்ற பெண்ணையே சிதைத்த கொடூரன் கைது

ஆஸ்திரியாவில் தனது பெண்ணையே சுமார் இருபது ஆண்டுகளுக்கு நிலவறையில் பூட்டி வைத்து பாலியல் சித்ரவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எழுபத்தி மூன்று வயதான அந்நபர் தனது பெண் மூலமாக மேலும் ஆறு பெண்களை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாற்பது வயதுகளில் இருக்கும் அப்பெண், தனது தந்தை கடந்த 1984 ம் ஆண்டு தன்னை நிலவறைக்குள் வரவழைத்து தனக்கு போதை வஸ்துகளை கொடுத்து தன்னை அப்போது இருந்து அடைத்து வைத்து இருப்பதாக கூறியுள்ளார். இந்த பெண்ணோடு சேர்த்து ஒரு சில குழந்தைகளும் நிலவறையிலேயே அடைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காமக் குரூரன் செய்தியை ஜீரணிக்கத் துவங்கியுள்ளனர் ஆஸ்திரிய மக்கள்

ஆஸ்திரிய மக்கள், தங்கள் நாட்டில் நடந்த மிகக் குரூரமான செய்தியை கொஞ்சம் கொஞமாக நம்பத் துவங்கியுள்ளனர்.

73 வயதான ஆண் ஒருவர், தனது மகளை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவறையில் அடைத்துவைத்து, அந்த பெண் மூலம் ஏழு குழந்தைகளை பெற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் செய்தியை அந்நாட்டு மக்கள் படிப்படியாக ஜீரணிக்க முயன்று வருகிறார்கள்.

ஆஸ்திரியா நாட்டில் நிலவறையில் மனிதர்கள் அடைத்து வைக்கப்படும் செய்திகள் வெளியாவது, சமீபத்தில் இது மூன்றாவது முறை. நடாஷா காம்புஷ்ச் என்கிற இளம்பெண், எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவறையில் அடைக்கப்பட்டிருந்த பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிலிருந்து வெளியே வந்திருந்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர், தனது மூன்று பெண்களை ஏழு ஆண்டுகள் இருட்டறையில் அடைத்துவைத்திருந்த செய்தி 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.


செய்தி: Foster care could be wrenching for Texas sect children – Yahoo! News

என்.பி.ஆர் ஒலித்தொகுப்பு: Texas Polygamy Case Challenges Religious Thinker : NPR

பலதார திருமணம் குறித்த நியு யார்க் டைம்ஸின் செய்திக் கோர்வை: Polygamy News – The New York Times

மேலும் செய்திகள்:
Texas Polygamy Raid May Pose Risk – New York Times

பிபிசி: BBC NEWS | Americas | More raids on Texas polygamy sect

டைம்:
1. The Texas Polygamist Sect: Uncoupled and Unchartered – TIME

2. Tracing the Polygamists' Family Tree – TIME

விழியம், பேட்டிகள்: Men From Polygamy Sect Speak, Early Show Co-Anchor Maggie Rodriguez Lands Exclusive Interview With 3 From Texas Compound – CBS News

ஒரே வீட்டில் இரு மனைவி இருப்பது அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் சட்டப்படி சரி: A different brand of polygamy – The Denver Post

வ.கே.கே.: ABC News: What's Next in Polygamy Custody Case?

காலங்காலமாக நடப்பதுதான்: Under God: Polygamy and Intrusion in West Texas – On Faith at washingtonpost.com

அடிக்கடி எழும் வினாக்களுக்கான பதில்கள்: 04/26/2008 | What is the FLDS polygamous sect? | Kansas.com

ஆஸ்திரியா குறித்து ஊடகமெங்கும் செய்தி அடிபட்டுக் கொண்டிருக்க, அமெரிக்காவில் இன்றளவிலும் தொடரும் இந்தப் பழக்கவழக்கம் குறித்து யாரும் கண்டுகொள்வதே இல்லையே? டெக்சாஸில் நிச்சயம் தோற்கப் போகும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஒபாமாவும் ஹில்லரியும் கூட இந்த மாதிரி கூத்தை அரசியல் பிரச்சினையாக கையில் எடுக்காதது புரிகிறது. ஆனால், ஊடகங்கள்!?

கலைஞர் கவிதை – பச்சைக்கிளி: தை இதழ் (தமிழ்வெளி)

இதழை வாசிக்க: தை இதழ் மூன்று

Kalainjar Mu Karunanidhi Tamil Kavidhai

நன்றி: கலைஞர் மு கருணாநிதி

Happening Tamil Blogs – Must Read 30: Index

கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. பரிந்துரைப் பட்டியல்:

டௌ ஜோன்ஸ், FTSE மாதிரி தமிழுக்கு ஒரு 30 போட்டால் (எந்த வரிசையும் இல்லை)

க்வாண்டிடி & க்வாலிட்டியை முன்வைத்து இந்த முப்பதைத் க்வார்ட்டருக்கு ஒரு தடவையாவது தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்க எண்ணம்.

தொடர்புள்ள முந்தைய இடுகை: இந்த வருடத்தின் சிறந்த வலைப்பதிவு எது? (பரிந்துரைகள்)

SEO

Advanced Search Engine Optimization: Generating More Site Traffic from Search | Sessions at Mix08 | MIX Online

Mix08 Presentation – Advanced SEO for Developers

நான்கு சிறுகதை – வாசக அனுபவம்

‘இலக்கியச் சிந்தனை’யால் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ள கதை: Marathadi : மீனாமுத்து: “யாத்தி”

அமெரிக்கா போன்ற சட்டதிட்டங்கள் ஓரளவு கடுமையாக, உடனடியாக நிறைவேற்றும் நாடுகளிலேயே, இந்தக் கொடுமை எளிமையாக, அன்றாடம் நடந்தேறுகிறது, ‘படித்தவர்கள் பண்பற்றவர்கள்’ என்பது போல் பல கேஸ்கள்; சமீபத்தில் கைராசியான நியு யார்க் மருத்துவ தம்பதியர்கள் கைதாகி, குற்றமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நிகழ்வை ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையாகக் கண்முண் கொணருகிறார். அதிர்ச்சிக்காக மட்டும் இல்லாத நேர்த்தியான முடிவு. மிகவும் பிடித்திருந்தது.

மென்மையான எழுத்துக்களை தட்டச்சும்போது கூட என்னுடைய கீபோர்ட் சத்தமெழுப்பி, சிந்தையைக் கலைத்துப் பொடும். அது போல், சிறுகதையைப் படிக்கும்போது ஆச்சரியக்குறிகள் தொடர்வண்டியாக நடுவில் வந்து ஓசையெழுப்புகின்றன.


Thinnai: “ஒரு நாள் உணவை… – ரெ.கார்த்திகேசு”

குழந்தைகளை கம்பேர் செய்யக்கூடாது; சுஜாதாவையும் சுரதாவையும் ஒப்புமையாக்கி தராசு எல்லாம் கூடாது என்று எண்ணுபவன் நான். இருந்தாலும், முந்தைய கதையில் முழுநீள வாழ்க்கையே விவரித்திருக்க, இங்கு சம்பவம் விரிகிறது.

விவரணப்படம் போல் ஆகிவிடும் அபாயம் இருந்தாலும், அவ்வாறு போரடிக்காத சஸ்பென்ஸ் நோக்கிய விறுவிறுப்பு. மணமான இல்லறத்தில் நிகழ்வதை படம் பிடித்து ஓடவிடும் லாவகம்.

நான் என்ன நினைக்கிறேன் எனக் கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 10-15 நிமிடம் பேசுவார்கள். சிலர் நம் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே பேசுவதால் அகலவும் முடிவதில்லை.

போன்ற களையான பிரதேசங்கள்.

தவறவிடக்கூடாத ஆக்கம்.


அ.முத்துலிங்கம் எழுதி விரைவில் வெளிவரப்போகும் சுயசரிதைத் தன்மையான நாவலின் ஓர் அத்தியாயம்தான் மேலே தந்திருப்பது.

என்று பீடிகையுடன் முடிகிறது: Thinnai – யுவராசா பட்டம் – அ.முத்துலிங்கம்

விமர்சிக்கலாம் என்று படிக்க ஆரம்பிக்கும் ஆணவம், தொலைந்து போக வைக்கும் சாமர்த்தியம். ‘நிஜம்தானோ!’ என்னும் பிரமிப்பு. ‘அச்சச்ச்சோ’ என்று தொடரும் பரிதவிப்புடன் பதற வைத்து எழுத்துக்குள் மூழ்க வைக்கிறார்.


நுனிப்புல்: ஐந்தும் ஆறும் – புனைவு என்பது உணர்ச்சிகளை சித்தரிப்பது; கேள்விகளை எழுப்புவது.

‘நந்தா’ திரைப்படத்தில் பல காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், அந்த துவக்க காட்சியில் நடக்கும் பிரதோஷ உபன்யாசம் மறக்க முடியாதது. எள்ளல்தன்மையுடன் தொடரும் திரைக்கதையில் வீட்டில் நடப்பதைக் காட்டி லெக்சர் மகிமையை சிந்திக்கவைப்பார்கள். திருக்குறள் என்னதான் கலக்கலாக இருந்தாலும், அதைப் போல் போதனை இலக்கியம் எனக்கு அசூயையே தருகிறது.

ஒரு வேளை.. ‘பெண்ணெழுத்தின் நாடித்துடிப்பு பெண்ணிற்குத்தான் புரியும்’ என்னும் மங்கையர் மலர் கால ஃபீலிங்குடன் மனைவியிடம் கொடுக்க, அவரோ லாஜிக்கலாக கேள்விகளை எழுப்பும் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார். ‘எலக்கியம்னா அனுபவிக்கனும்; நோ க்வெஸ்டின்ஸ்’ என்று மகளுக்கு ஈசாப் நீதிக்கதைகளை வாசிப்பதுடன் அனுபவம் முடிந்தது.

வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம்

தமிழ்ப்பதிவுகளுக்கு அடுத்த கட்டம் என்ன ஏது என்றெல்லாம் ஸ்பஷ்டமாக விளக்குமாறு கொக்கிப் பிடி போடாவிட்டால், ஐந்தாவது ஆண்டில் இருக்கும் தமிழ் தட்டச்சும் நல்லுலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

ஏன்?

  • ஏற்கனவே பதிவுகள் என்ற அளவில் உள்ளே வந்து, புண்ணூட்டங்களில் – சிறு பத்திரிகையை மிஞ்சும் அளவிலும், உள்ளடக்கத்தில் – நாப்கினைக் கூட நிரப்பாத அளவிலும் மறுமொழி வாங்கி; ஒதுங்கிய ‘பெரியவர்கள்’ மீண்டு, தங்களுக்கென வலையகம் அமைத்திருப்பது. (பாரா | எஸ் ரா)
  • தினமலர் எல்லாம் பதிவை எடுத்து உதாரணம் காட்டி அச்சு ஊடகத்துக்குக் கொண்டு சென்றாலும், செக்சுக்கு நிகராக அலைந்து விழும் கூட்டத்தை, பதிவுலகத்துக்கு இட்டுக் கொண்டு வந்த விகடனின் கைங்கர்யத்தாலும் அதற்கு நிகராகத் தொடரும் ஜெயமோகனின் க்வாலிடியாலும்!
  • பதிவுகளில் எழுதியதே புத்தகமாக வருவது தவிர, பிரத்யேகமாக எழுதிக் கொடுக்க வல்லுநர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. குப்புசாமி செல்லமுத்து போன்றோரை சொல்லலாம்.

மாற்று மெச்சூர் ஆகிவிட்டது, தமிழ்மணம் தடுக்காமல் தரவுதளமாகிவிட்டது என்று அடுக்கிக் கொண்டே போக ஆசை.

நிதர்சனமாக நண்பர்களைக் கூப்பிட்டு சில காரியங்களை கடந்த வாரத்தில் சோதித்துப் பார்த்தேன்.

  1. தமிழ் வோர்ட்பிரெஸில் பதிவைத் தொடக்குவது (என்னுடைய உதவி இல்லாமல்; கணினி நிரலாளர்/பயனர்கள்)
  2. ஜெயமோகன்.இன், தமிழ் கணிமை போன்ற இடங்களுக்கு செல்ல வைத்து, தொடர்ந்து செல்வாயா/செல்கிறார்களா என்று கவனிப்பது
  3. குமுதம்.காம், தட்ஸ்தமிழ் ஆகியவற்றுடன் எம்.எஸ்.என், ஏஓஎல், யாஹூவை ஒப்பிடுதல்
  4. தமிழ்மணம், தேன்கூடு புரட்ட வைத்தல்

ஆசிரியர் பாடம் எடுப்பது போன்ற கசப்புடனே பெரும்பாலோர் அணுகினார்கள். வோர்ட்பிரெஸ் தமிழாக்கம் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள். ஆங்கில இடைமுகம் கண்டபின் பரவசமானார்கள்.

‘எம்.எஸ்.என், யாஹூ எல்லாம் அதே செய்திகளைத்தானே… தமிழ்ப்படுத்தியிருக்கிறது? நாங்க சன் நியூஸே பார்த்துக்கிறோம்’ என்றார்கள்.

குமுதம் வீடியோ நேர்காணல் போல் எங்கு கிடைக்கும் என்று தேடிப் பார்த்தார்கள். சின்னப்பையன் போன்ற விஷயங்களை மேலும் தரும் இடங்களை வினவினார்கள். ‘பிரமிட் சாய்மீரா மாதிரி குமுதமும் விகடனும் கூட வலைப்பதிவு கொடுக்கிறதா? அதற்கு வழிகாட்டேன்…’ என்று பிரியப்பட்டார்கள்.

மொத்தத்தில் ‘தானாகக் கனியாத பழத்தை தடி கொண்டு பழுக்க வைக்கலாகாது’ என்பதற்கேற்ப ஸ்பூன் ஃபீடிங்கை நிறுத்திவிட்டு இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.