Category Archives: Novel

Kosu (Novel) – Paa Raghavan

கொசுவைக் குறித்த முன்னுரையோடு இந்த நாவல் குறித்த விமர்சனத்தைத் தொடங்கலாம்.

கதைப்படி, தொண்டன் என்பவன் கொசு.

அரசியல் என்னும் ‘நிர்வாண சாமியார்களின் குமுகாயத்தில்’ கொசுவுக்கு சிப்பந்தியாக பணி. சுதந்திரமாக ஆடை களைந்தவர்கள் அனுபவித்து மகிழ்வதை கொசு ஆசையுடன் பார்க்கும். காட்டன் மறைத்த தேகத்தை அணுகுவது எளிது. இடுக்கு போர்ஷன்களில், அவாவுடன் நெருங்கி மறைவாக உறிஞ்சி விட்டு கொசுவாகப் பறந்து விடலாம். மில்லிமீட்டர் மேலாடை கூட மறைக்காத இராசவட்டத்தின் அண்டப் பெருவெளியில், எங்கு தொடங்குவது, எப்படி தொடருவது என்று அடி முடி அறியவொண்ணா கட்சிக்கடலில் தொண்டர்கள் குழம்பும்.

கொசுக்கள் எயிட்ஸை பரப்பாது என்றாலும், சிக்கன் குனியாவில் முடங்க வைக்கும். டெங்குக் காய்ச்சலில் சாவடிக்கும் திறமும் கொண்டது. வாரிசு அரசியலை மீறி புதிய முதல்வர்களை கொடுக்க முடியாவிட்டாலும், கவுன்சிலரின் காலை வாரி விடும் திறன் படைத்தது. சில சமயம் எம்.எல்.ஏ.க்கள் கவிழ்வதால் ஆட்சி மாற்றங்களைக் கூட தந்து விடும் சக்தியும் படைத்தது.

ஓ +வ், ஏ1பி -வ் என்றெல்லாம் சாதி, சமயம் பார்க்காது, கிடைக்கக்கூடியதை வைத்து பிழைப்பு நடத்தும். தொண்டனுக்கு டெமொக்ரட்ஸ், ரிபப்ளிகன் என்னும் பற்றெல்லாம் கிடையாது. ஏதொவொன்றை சிக்கென்று பற்றிக் கொண்டு வாழ்க்கையை தள்ளிக் கொள்ளும்.

ஒரே அடியில் கொசுவை அடிப்பது விக்ரமனின் ஒரே  பாடலில் லட்சாதிபதியாகும் சுகானுபவம் நிறைந்த மனச்சாந்தியை அளிக்கவல்லது. உங்கள் அலுவல் கோபம், இல்லத்தரசி சமையலில் உள்ள நொள்ளை, மழலைகளின் தெனாவட்டு அலட்சியம் என்று அத்தனையும் நொடி நேரத்தில் கொசு நசுக்கப்படும்போது மோட்சம் பெறும். முறையே, மேலிடத்து அருள்பாலித்தல், உள்கட்சிப் பூசல், தொண்டர் படை சேர்ப்பு, என்று அத்தனையும் நொடி நேரத்தில் தொண்டன் என்னும் கொசுவேட்டையில் சித்திக்கும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சின்னமாக மாகாணத்தின் பறவை, மாகாணத்திற்கான கொடி, எல்லாம் உண்டு. அவ்வாறு சென்னைக்கு என்றாவது என்ன பிராணி தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிப்பார்களேயானால், ‘கொசு’ என்பதுதான் மதராஸின் ஒருமித்த கருத்தாக இருக்கும்.

கடைசியாக, கொசு பாட்டுக்கு தானுண்டு, தன் பறத்தல் உண்டு என்று வீட்டில் பறக்கும் செல்லப் பிராணியான போல் இருந்தால், சிறுநீர் முதல் சிற்றுண்டி வரை சமபந்தி போஜனமாக சிசுருஷைகள் நடக்கும். கொசு போல் தன் வேலையை மனிதரிடம் காண்பித்தால்தான், அடிபட்டு கொல்லப்படுகிறார்கள்.

யானையின் காதில் புகுந்த கொசு என்று பெரியவர்களைப் பாடாய்படுத்திய கொசுவின் கதைகளை ‘சிவாஜி’ சினிமாக்கள் சொல்லும். பா. ராகவனின் கொசு, அசல் அனுபவங்களின் ரீங்காரமாக, நிஜத்தை, யதார்த்தத்தை டைலர் முத்துராமன் கொண்டு தைக்கிறது.

(தொடரலாம்)

Karaintha Nizhalgal – Asokamithiran (3) : Links

இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களுள் ஒருவரான பேராசிரியர் ஆல்பர்ட் ஃப்ராங்க்ளின் (எஸ். கோபாலியுடன் இணைந்து மொழிபெயர்த்தார்) நாவலின் தலைப்பை ‘பாத்திரங்களின் வரிசை’ (Cast of Characters)என்று வைத்தார்.

ஓர் அத்தியாயத்தில் கால நிர்ணயத்துக்கு இடம் கொடுக்கும் ஓர் உண்மைத் தகவல் வந்துவிட்டது; அது நாவலின் தரத்தைக் குறைத்துவிட்டது என்று தி.க.சி. சொன்னார். அந்த நேரத்தில் இந்த உலகத்தின் மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராக அவர் எனக்குத் தோன்றினார்.

செப். 2005 முன்னுரையில் அசோகமித்திரன்.


சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள். சினிமா உலகத்தில் தானாகவே உருவான சட்ட திட்டங்கள்; அந்தச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ முதலாளிகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், புரொடக்ஷன் – புரோகிராம் மேனேஜர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என்று பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பெரும்பாலும் சினிமாவைப்போல் வண்ணமயமாக அமைந்துவிடுவதில்லை. திரையில் பயிரிடும் கனவுகளுக்காக வாழ்வின் கனவுகளைச் சிதைத்து உரமாக்கும் வர்க்கம் குறித்த இப்படியொரு யதார்த்தம் குலையாத நாவல் இதற்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.


கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பியக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் அசோகமித்திரன், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவரது பல படைப்புகள் இந்திய-அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. இந்த நாவல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளது. அசோகமித்திரன், ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1996-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.


1. எண்ணங்கள்: படித்த இரு கதைகள்

பின்னிணைப்பாக மணி என்பவர் எழுதிய விமரிசனமும் உள்ளது. இந்த விமரிசனம் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள, இந்தக் கதையின் மூலம் அசோகமித்திரன் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள வெகு உதவியாயிருக்கிறது.

2. புத்தக அறிமுகம்: அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’

வழக்கமான கதை பாணியில் அமையாமல் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு கால இடைவெளிக்கு ஏற்ப அத்தியாயஙகளாக அமைந்த நாவல். திரைப்படம் என்னும் மாய உலகுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.

3. Thinnai :: அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ – ‘சூரியராஜன் ‘

4. சுரேஷ் கண்ணன் (maraththadi.com) – கரைந்த நிழல்கள்

5. நல்லநிலம்: முத்துராமன்

பெரும்பாலும் தன்னுடைய நாவல்களில் நனவோட்டம் என்ற முறையை அவர் வெகுவாகத் தவிர்த்துவிடுவதால், பாத்திரங்களின் செயல், பேச்சு ஆகியவற்றின் மூலம் கதை வளர்கிறது.

6. Karaintha Nizhalgal – Asokamithiran (1) | பகிர்வு II

7. கதாவிலாசம் – எஸ். ராமகிருஷ்ணன் :: மீதமிருக்கும் சொற்கள்!

சினிமா உலகின் நிஜத்தை முகத்தில் அறைவது போலச் சொல்லும் அசோக மித்திரனின் ஒரு சிறுகதை இருக்கிறது. அக்கதை ‘புலிக் கலைஞன்’. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற அசோக மித்திரனின் சிறுகதைத் தொகுப்பில் அது இருக்கிறது.

8. அசோகமித்திரனும் போடப்படாத இரண்டு சட்டை பித்தான்களும்

சினிமா உலகின் மாயபிம்பத்தை சுஜாதாவின் ‘கனவுத் தொழிற்சாலை’ ஒரு கோடி காட்டியதென்றால்

9. Riyadh Tamil Sangam – ரியாத் தமிழ் சங்கம்

அசோகமித்திரனும் ஆறாவது கூட்டமும் – லக்கி ஷாஜஹான்.

10. அம்பலம் – ஒரு நுட்பமான படைப்பாளி அசோகமித்திரனுடன் நேர்காணல்

Continue reading

Karaintha Nizhalgal – Asokamithiran (2)

‘பணம் பணத்தினால் வாங்கக்கூடிய வாழ்க்கை – இந்த இரண்டுக்கும் நீ சபலமில்லாமல் மீண்டு வளர்ந்தது பற்றி எனக்கு உன் மேல் மதிப்புண்டு. ஆனால் உனக்கு எவ்வளவோ விஷயங்கள் பற்றி அபிப்பிராயம் சொல்லக்கூடப் போதிய அறிவு கிடையாது என்று எனக்குத் தெரியும். உனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் கரைகண்டவன் என்ற நினைப்புதான் உனக்கு இருக்கிறது.

மிகச் சாதாரணமான ஒன்றைப் பற்றி உனக்குச் சரியான மதிப்பீடு கிடையாது. உனக்கு பணத்தின் மதிப்பே தெரியாது. ஒவ்வொரு தம்படியும் எவ்வளவு நேர உழைப்பு, எவ்வளவு தீவிரமான உழைப்பு என்று எண்ணிக் கொண்டு இங்கே என் எஸ்டேட்டில் என் காரை எடுத்துக் கொண்டு வந்து என் பணத்தை வைத்துக் கொண்டு குடித்து விழுந்து கிடக்கிறாய்.

நான் வாழ்க்கையை ஆரம்பித்தபோது எனக்கு என் மூளை ஒன்றுதான் இருந்தது. உனக்கு என் மூளை இருக்கிறது. கூட ஒரு சிறு சாம்ராஜ்யம் இருக்கிறது. எனக்கு இருபது வருஷம் முப்பது வருஷம் உழைத்து எட்டிப் பிடிக்க முடிந்த நிலை உனக்கு இன் பிரக்ஞயில்லாமலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. நீ என்னோடும் சேராமல், குடும்பத்தோடும் சேராமல் வேறு யாருடனும் சேராமல் இங்கே வந்து அரை இருட்டில் அரை நினைவில் கிடப்பது ஏதோ பெரிய சாதனை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

நான் இதைச் சொல்ல முடியும். இது சாதனையே அல்ல. நீ மனிதர்களைப் பார்த்துப் பேச நிற்காமல் நழுவிவிடுவது உனக்கு அவர்களின் தேவை இல்லை என்பதனால் இல்லை. நீ பேசப் பேச உன் அந்தரங்க நிலைமை சிறிதளவாவது வெளிப்பட்டுவிடும். உனக்கு உன்னைப் பற்றி நிர்ணயம் கிடையாது. அப்படியிருந்தாலும் அது நீ பெருமை கொள்ளும்படி இல்லை.

அதுதான் நீ மனிதர்களைக் கண்டு தூரப் போவதின் காரணம். பணம் பற்றி, பணம் ஒருவழிப் பாதை அல்ல. அது உனக்குத் தெரியும். உனக்கு வாங்கிக் கொள்ளத் தெரியும். திருப்பித்தரத் தெரியாது. ஒரு ஒப்பந்தத்தையும் காப்பாற்றத் தெரியாது. ஒப்பந்தங்களைக் காப்பாற்ற வேண்டிய குணம் உன்னிடம் கிடையாது.

நீ என்னைத் தராசிலிட்டுப் பேசுகிறாய், நீ பேசுவது எனக்கு வருத்தத்தைத் தரவில்லை. ஆனால், என்னைத் தராசிலிட்டு, தவ்றான மதிப்பீடுகள் வைத்து நீ சிந்தனை செய்கிறாய். என்னைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் இந்த வக்கிரப்பட்ட சிந்தனை ஓட்டம்தான் இருக்கும். இதே பின்னப்பட்ட ஓட்டம்தான் மற்றெல்லாவற்றுக்கும். நீ எனக்கு நாணயம் பற்றி சொல்கிறாய்.

நான் துரும்பு பெற்றாலும் அதற்குரிய கட்டணம் கொடுத்து விடுகிறேன். யாரையும் என்னிடம் ஏமாற்றம் அடைய விடுவதில்லை. அது எங்கள் தலைமுறை. அந்தத் தலைமுறையில் சிக்கெடுத்துப் போகும் புத்தி கிடையாது. பொறுப்புகளைக் கண்டு நாங்கள் ஓடிப்போனது கிடையாது. வாக்குறுதிகள் தரவேண்டியிருப்பதற்காகச் சமூகத்தினின்றே ஒளிந்து கொண்டு இருந்தது கிடையாது. உன் புத்தி, உன்னைப் போன்றவரின் புத்திதான் விநோதமாக இருக்கிறது. அந்தப் புத்தி இன்றிருப்பதை எல்லாம் அப்படியே என்றைக்கும் இருக்கும் என்கிற நிச்சயித்தில் உழல்கிறது.

ஆனால் ஒவ்வொரு நாளிலும் எவ்வளவோ விஷயங்கள் அப்படியே அழிந்து போய் விடுகின்றன. இதோ இந்த இரண்டு மணி நேரம் உன்னை என்னோடு சேர்த்துக் கொண்டு போவதற்காக நான் மன்றாடிக் கொண்டிருக்கும் வேளையில் எவ்வளவோ விஷயங்கள், எவ்வளவோ பொருள்கள் என் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன.

போவதை ஈடுகட்டுவதற்கு வேறு பல பெற வேன்டும். இதை நான் முதலிலிருந்து செய்தேன். இதைத்தான் நான் திட்டமிட்டுச் செய்தேன். இப்போது உன்னிடமுள்ளதைப் பெருக்க முயற்சி செய்யாவிட்டாலும் பாதுகாக்கப் பிரயத்தனம் எடுத்துக் கொள்ளாவிட்டால் திடீரென்று ஒரு நாளைக்கு இந்தக் கூரை இருக்காது. அந்த வேலி இருக்காது.

எதுவும் திடீரென்று மடிவது இல்லை. எதுவும் திடீரென்று பிறந்து விடுவதும் இல்லை. ஒவ்வொருவனுக்கும் ஒரு சாம்ராஜ்யம் பெரிதோ சிறிதோ இருக்கிறது. அதை அவன் விழிப்பொடு கைவசம் வைத்துக் கொள்ளத் தவறும் ஒவ்வொரு கணத்திலும் அதன் மீது இருபது படையெடுப்புகள் நிகழ்கின்றன. நீ என்றாவது திவாலாகப் போனால் இதை நினைவில் வைத்துக் கொள். நீ ஒரே நாளில் திவாலாகவில்லை.’

நன்றி: கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்