இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களுள் ஒருவரான பேராசிரியர் ஆல்பர்ட் ஃப்ராங்க்ளின் (எஸ். கோபாலியுடன் இணைந்து மொழிபெயர்த்தார்) நாவலின் தலைப்பை ‘பாத்திரங்களின் வரிசை’ (Cast of Characters)என்று வைத்தார்.
ஓர் அத்தியாயத்தில் கால நிர்ணயத்துக்கு இடம் கொடுக்கும் ஓர் உண்மைத் தகவல் வந்துவிட்டது; அது நாவலின் தரத்தைக் குறைத்துவிட்டது என்று தி.க.சி. சொன்னார். அந்த நேரத்தில் இந்த உலகத்தின் மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராக அவர் எனக்குத் தோன்றினார்.
செப். 2005 முன்னுரையில் அசோகமித்திரன்.
சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள். சினிமா உலகத்தில் தானாகவே உருவான சட்ட திட்டங்கள்; அந்தச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ முதலாளிகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், புரொடக்ஷன் – புரோகிராம் மேனேஜர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என்று பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பெரும்பாலும் சினிமாவைப்போல் வண்ணமயமாக அமைந்துவிடுவதில்லை. திரையில் பயிரிடும் கனவுகளுக்காக வாழ்வின் கனவுகளைச் சிதைத்து உரமாக்கும் வர்க்கம் குறித்த இப்படியொரு யதார்த்தம் குலையாத நாவல் இதற்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பியக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் அசோகமித்திரன், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவரது பல படைப்புகள் இந்திய-அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. இந்த நாவல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளது. அசோகமித்திரன், ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1996-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
1. எண்ணங்கள்: படித்த இரு கதைகள்
பின்னிணைப்பாக மணி என்பவர் எழுதிய விமரிசனமும் உள்ளது. இந்த விமரிசனம் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள, இந்தக் கதையின் மூலம் அசோகமித்திரன் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள வெகு உதவியாயிருக்கிறது.
2. புத்தக அறிமுகம்: அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’
வழக்கமான கதை பாணியில் அமையாமல் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு கால இடைவெளிக்கு ஏற்ப அத்தியாயஙகளாக அமைந்த நாவல். திரைப்படம் என்னும் மாய உலகுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.
3. Thinnai :: அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ – ‘சூரியராஜன் ‘
4. சுரேஷ் கண்ணன் (maraththadi.com) – கரைந்த நிழல்கள்
பெரும்பாலும் தன்னுடைய நாவல்களில் நனவோட்டம் என்ற முறையை அவர் வெகுவாகத் தவிர்த்துவிடுவதால், பாத்திரங்களின் செயல், பேச்சு ஆகியவற்றின் மூலம் கதை வளர்கிறது.
6. Karaintha Nizhalgal – Asokamithiran (1) | பகிர்வு II
7. கதாவிலாசம் – எஸ். ராமகிருஷ்ணன் :: மீதமிருக்கும் சொற்கள்!
சினிமா உலகின் நிஜத்தை முகத்தில் அறைவது போலச் சொல்லும் அசோக மித்திரனின் ஒரு சிறுகதை இருக்கிறது. அக்கதை ‘புலிக் கலைஞன்’. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற அசோக மித்திரனின் சிறுகதைத் தொகுப்பில் அது இருக்கிறது.
8. அசோகமித்திரனும் போடப்படாத இரண்டு சட்டை பித்தான்களும்
சினிமா உலகின் மாயபிம்பத்தை சுஜாதாவின் ‘கனவுத் தொழிற்சாலை’ ஒரு கோடி காட்டியதென்றால்
9. Riyadh Tamil Sangam – ரியாத் தமிழ் சங்கம்
அசோகமித்திரனும் ஆறாவது கூட்டமும் – லக்கி ஷாஜஹான்.
10. அம்பலம் – ஒரு நுட்பமான படைப்பாளி அசோகமித்திரனுடன் நேர்காணல்
ராஜன்பாபு
“பத்து வரியே வெளிவந்தாலும் தரமாக இருக்க வேண்டும்”
பிறப்பு, படிப்பு, முதல் உந்துதல்கள்…
இன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிகந்திராபாத் என்ற ஊரில் 1931-ல் பிறந்தேன். அந்த ஊரிலேயே படித்தேன். பி.எஸ்ஸி. படிக்க சுமார் ஐந்து மைல் தள்ளியிருக்கும் ஹைதராபாத் நிஜாம் கல்லூரிக்குச் சென்றேன்.
தமிழ் பாடமாக இண்டர்மீடியட் வகுப்பு வரையில் இருந்தாலும் ஆழ்ந்த பாதிப்பு பாடங்களினால் ஏற்படவில்லை. ஆசிரியர்களைக் குறைகூற முடியாது. அங்கிருந்த சூழ்நிலையில் தமிழ்மொழி தவிர்க்கக் கூடியதாகவே இருந்தது. அநேக தமிழ்க் குடும்பங்களில் தமிழ் எழுத்துகள் தெரியாது.
எங்கள் வீட்டில் இருந்த சில தமிழ் நூல்கள், வாரா வாரம் வரும் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகை இவைதான் அன்று என் தமிழ் எழுத்துலகம். ஆசிரியர் கல்கி விகடனில் இருந்த நாளிலும் அதற்குப் பிறகும் கூட ‘ஆனந்த விகடன்’ மிக நல்ல பத்திரிகையாக இருந்தது. பல இந்தி, மராத்தி, வங்காளக் கதைகள், பிரேம்சந்தின் ‘சேவா சதனம்’, சரத் சந்திரரின் ‘சந்திரநாத்’ போன்ற படைப்புகள் வெளியிடப்பட்டன. மலினமான, பரபரப்பான பொருள்கள் தவிர்க்கப்படும். மேலும் கம்பராமாயணம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் போன்ற பழைய இலக்கியங்களும் ‘ஆனந்த விகட’னில் வெளியிடப்பட்டன. இதெல்லாம்தான் எனக்குத் தமிழ் படைப்பிலக்கியத்தில் ஆர்வம் ஊட்டின. முத்தாய்ப்பாக உ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்!’ இன்றைய சூழ்நிலையில் எந்தப் பத்திரிகை ‘என் சரித்திரம்’ போன்ற படைப்பைத் தொடராக வெளியிடும்?
பரீட்சை எழுதுவதும் எனக்கு எழுத்தில் ஆர்வம் ஊட்டியது. அந்த நாளில் விடைகளை ‘உங்கள் சொந்த நடையில் எழுதவும்’ என்று நிபந்தனை. ஆதலால் பாடப் புத்தகத்தை அப்படியே ஒப்பிக்க முடியாது. இந்தச் சொந்த நடை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.
சென்னை வந்தது, பணிபுரிந்தது……
என் தகப்பனார் இறந்தது எங்களுக்குக் கிலியூட்டியது. ஆதலால் உறவினர்கள் அருகில் இருக்க வேண்டுமென 1952-ம் ஆண்டு சென்னை வந்து குடியேறினோம். ஜெமினி ஸ்டூடியோவின் பொது ஜன தொடர்புப் பிரிவில் சேர்ந்தேன். நான்கு ஆண்டுகளில் அப்பிரிவின் அதிகாரியாக்கப்பட்டேன்.
அங்கு நானாகப் பழைய காகிதக் கட்டுகளைப் படித்தேன். அதற்கெல்லாம் அதிக நேரம் கிடையாது. அருகில் இருந்த அமெரிக்கன், பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மன் (மாக்ஸ்முல்லர் பவன்) நூலகங்களில் சேர்ந்து நிறைய நூல்களும், பத்திரிகைகளும் படித்தேன். முடிந்த அளவுக்கு.
எனக்கு இடப்பட்ட பொறுப்புகளுக்கும், ஊதியத்துக்கும் சம்பந்தம் கிடையாது. ஒவ்வொரு நாளும் புதுச் சூழ்நிலை, புது மனிதர்கள். ஆதலால் எப்போதும் முனைப்பாக இருக்க வேண்டும்.
பணி என ஏற்றுக் கொண்டது எதையும் நான் தட்டிக் கழித்தது கிடையாது. ஆதலால் எல்லா அலுவல்களின் எல்லாத் தகவல்களும் எனக்குப் பரிச்சயமாயின. இதெல்லாம் என் படைப்புகளில் காணலாம்.
முதல் கதைகள், மேலும் கதைகள்……
பிரசுரமான முதல் தமிழ்க் கதை ‘நாடகத்தின் முடிவு’. இது ‘கலைமகள்’ வெள்ளி விழாப் போட்டிக்காக எழுதப்பட்டது. ஜூலை 1957 இதழில் வெளிவந்தது. இரு வருடங்களுக்குள் ‘கலைமகள்’ என்னுடைய ஏழு கதைகளைப் பிரசுரித்தது. அந்த நாளில் ‘கலைமகள்’ பத்திரிகையில் படைப்பு வருவது மிகவும் பெருமைக்குரியது.
ஆங்கிலத்திலும் என் சிறுகதைகள் வெளிவந்த வண்ணமிருந்தன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, ‘இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா’ போன்ற பத்திரிகைகள் கூட என் கதைகளைப் பிரசுரித்தன. இங்கிலாந்து கவிஞர் ஸ்டீபன் ஸ்பெண்டர் ஆசிரியராக இருந்த ‘என்கவுன்ட்டர்’ பத்திரிகைக்கு ஒரு கதை அனுப்பினேன். கதை திரும்பி வந்தது. கூடவே ஸ்பெண்டரின் கடிதமும் வந்தது; மேலும் கதைகள் அனுப்ப.
அப்போதுதான் நான் ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்தினேன். மீண்டும் பத்தாண்டுகள் கழித்து எழுதினேன். ஆனால் அவை நான் முதலில் தமிழில் எழுதி, மொழிபெயர்க்கப்பட்டவை.
‘கரைந்த நிழல்கள்’, ‘தண்ணீர்’, ’18-வது அட்சக்கோடு’ பற்றி…..
தீபம் நா.பார்த்தசாரதி கேட்டுக் கொண்டதற்கிணங்க ‘தீபம்’ இதழுக்காக, ‘கரைந்த நிழல்கள்’ எழுதினேன். நான் முதலில் திட்டமிட்ட தலைப்பு ஒருமையில்தான். ஆனால் கதைச் சுருக்கத்தைக் கேட்ட நா.பா., தானே அப்படி ஒரு கதை எழுதவிருப்பதாகச் சொன்னார். ஆதலால் ஒரு வார காலத்திற்குள் என் கதையின் உட்பொருள், வடிவம் இரண்டையும் மாற்றி முற்றிலும் புத்தம் புதிதாக எழுதினேன். மீண்டும் அவர் விரும்பியபடி அதை ஒரு குறிப்பிட்ட இதழோடு முடித்தேன்.
அது இன்னும் சில அத்தியாயங்கள் போயிருக்கக் கூடும். ஆனால் பத்திரிகைப் பிரசுரத்திலுள்ள இக்கட்டுகள் பத்திரிகையின் ஆசிரியர் மீது சுமத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
அதே போலத்தான் ‘தண்ணீர்’, ’18-வது அட்சக் கோடு’ நாவல்கள் கூட வெளியிடப்பட்டன. பத்து வரியே வெளிவந்தால் கூட அது தரமாக இருக்க வேண்டும் என்பதில் நான் எப்போதும் முனைப்பாக இருந்தேன்.
‘கதையின் கதை’ என எழுதுவதில் எனக்கு அதிக ஈடுபாடு கிடையாது. ஆதலால் இது போதும்.
பிடித்த இலக்கிய வடிவம் குறித்து…..
உரைநடைப் படைப்பு எதுவாக இருந்தாலும், ஒரு கடிதமாக இருந்தாலும், அதற்கு ஒரு வடிவ ஒழுங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பவன். உண்மையில் எனக்குக் கட்டுரை, கதை என்பது பிறர் அடையாளம் கண்டு கொள்ளப்படுவதற்காகவே என்று எண்ணம்.
‘காலக் கண்ணாடி’ என்ற நூலில் பல சிறு சிறு குறிப்புகள் இருக்கும். அவைகூட மிகுந்த கவனத்தோடுதான் எழுதப்பட்டன. ஒரு சொல் கூடப் பலவீனமாகப் போய்விடக் கூடாது என்பது என் இலக்கு.
பத்திரிகையில் பணிபுரிவது படைப்பாற்றலுக்குத் துணை போகுமா என்பது பற்றி…
ஓரளவுக்கு தமிழ் எழுதிப் பழகப் பத்திரிகை அனுபவம் பயன்படும். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு வேறெதெற்குமே நேரமோ, மன ஓய்வோ கிடைக்காது போய்விடும். படைப்பிலக்கியத்திற்கு ஆழ்ந்து யோசித்தல் அவசியம். மாதப் பத்திரிகையானால்கூடத் தொடர்ந்து பத்திரிகைப் பொறுப்புகள் இருந்து வரும். படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள எவரும் எழுத்து சம்பந்தமான வேலையில் அமருவது நல்லதல்ல.
படைப்பாளியின் சிறந்த படைப்பு தோன்றும் காலம் குறித்து…..
இலக்கிய வரலாறைப் பார்த்தால் பெரிய படைப்பாளிகளில் பெரும்பான்மையோர் முப்பது வயதுக்குள் அவர்களுடைய மிக முக்கிய படைப்பை வடித்துவருகிறார்கள். விதிவிலக்கு உண்டு என்றாலும் முதல் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. நான் எழுதும் அளவை மிகவும் கட்டுக்கடங்கியதாக வைத்திருப்பது இக்காரணம் கொண்டுதான். ஆனால் இதில் ஓர் அபாயம் இருக்கிறது. பல படைப்புகள் எழுத முடியாமலே போய்விடுகிறது.
இதர தமிழ்ப் படைப்பாளிகள், இன்றைய போக்கு பற்றி…
எனக்கு ஏராளமான படைப்பாளிகளின் எழுத்தின் மீது மதிப்பும், ஈடுபாடும் உண்டு. நான் பலரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
எனக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை உண்டு. ஆதலால் இன்றைய போக்கு என்று ஏதோ ஒரு அம்சத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டு எல்லாம் பாழாகிவிட்டது என்று கூறுவதில் சம்மதமில்லை. நல்லது-கெட்டது, பிடித்தது-பிடிக்காதது எல்லாக் காலத்திலும் காணப்படும். நல்லதைப் போற்ற நாம் தயங்கக் கூடாது. நான் தயங்குவதில்லை.
Thinnai: “அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் :: வே.சபாநாயகம்”
‘அவள் இன்னும் நட்சத்திர நடிகை ஆகிவிடவில்லை. ஒல்லியாகத்தான் இருந்தாள். முகம், உடல், சருமம் எல்லாம் இன்னும் விசேஷமான, அபரிமிதமான சத்துள்ள உணவு உட்கொள்வதன் மூலம் ஏற்படும் மினுமினுப்பு இல்லாமல், ஒரு குழந்தைக்குத் தாயான ஒரு நடுத்தர வீட்டுப் பெண்மணியினுடையது போல் இருந்தது’.