Category Archives: Films

Bheema – Audio Lyrics

Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!

2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

மசாலா பத்து

  1. போக்கிரி – தூள். மகேஷ் பாபு மலை என்றாலும், மடுவாகாத விஜய்.
  2. அழகிய தமிழ்மகன் – ரஜினிக்குப் பிறகு மசாலை ஊச வைக்காத நம்பிக்கை நட்சத்திரம் விஜய் முதல் முறையாக இரு வேடத்தில் தோன்றினார்.
  3. தாமிரபரணி – கடகட காட்சி நகர்த்தல். நேர்த்தியான விஷால். சன் டிவி சீரியலின் சாமுத்ரிகா நாயகி. சந்திரமுகி அல்லாத பிரபு.
  4. கண்ணாமூச்சி ஏனடா – பெண்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுக்க இன்னும் முன்வருகிறார்களே! பார்க்கலாம்… பாராட்டலாம்.
  5. பருத்திவீரன் – ஜாலியான கதையில் கடைசி அரை மணி ரணகளம்.
  6. நான் அவனில்லை – ஸ்னேகா திருஷ்டிப் பொட்டாக இருந்தாலும் ஜீவன் பிழைக்கவைக்கிறார்.
  7. அம்முவாகிய நான் – பார்த்திபனுக்கு என்றும் பாயசம், செக்ஸ் அன்றும் விற்றது; இன்றும் சதை சக்கை போடுகிறது.
  8. கிரீடம் – இளைய தளபதிக்கு மட்டும்தானா ரீமேக்?
  9. பில்லா – மீண்டும் வறட்சி; இன்னொரு ரீமேக்.
  10. பச்சைக்கிளி முத்துச்சரம் – மொழிமாற்றம் என்ற முறையில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வித்தியாச பத்து

  1. உன்னாலே உன்னாலே – வசனத்தில் பன்ச்; துள்ளலில் தங்கச்சி கஜோலுக்கு அக்கா; ‘ஜெய’த்திற்கு பின் மீண்டும் சதா நடிப்பு.
  2. எவனோ ஒருவன – சாது மிரண்டால்; கல்கி புருஷன்.
  3. ஒன்பது ரூபாய் நோட்டு – சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடிப்பும் சோகமும்.
  4. ஓரம்போ – சென்னை ஆட்டோக்களும் ஆட்டோ சார்ந்த பிரதேசங்களும்.
  5. கற்றது தமிழ் – ஆசைப்படுவதை படிப்பதை விட ஆசைப்பட்டது கிடைக்குமாறு படிக்க சொன்ன படம்
  6. கல்லூரி விஸ்வாமித்திரர் வாயால் பிரும்மரிஷி பட்டம்
  7. லீ – படம் நல்லா இருக்காமே?
  8. சென்னை 600028 – படம் நன்றாக இருக்கிறது
  9. சத்தம் போடாதே – வசந்த்
  10. பொல்லாதவன் – பார்க்கவேண்டும்

விட்டுப்போனவை

பயமுறுத்தியவை

  1. மிருகம் – சலனம் செய்யவேண்டுமென்றால் ஆவணப்படமாவது எடுக்கத் தெரிந்திருக்கவேண்டும்
  2. வீராசாமி – உடலுக்கும் உருவத்துக்கும் ஏற்ற பாத்திரம் எடுக்கத் தெரியவேண்டும்
  3. ஆழ்வார் – இயக்குநரை தேர்தெடுக்கத் தெரியவேண்டும்
  4. குற்றப்பத்திரிகை – தணிக்கை அரசியல் தெரிந்திருக்கவேண்டும்
  5. தீ நகர் – கரண் பொருத்தமாக செய்கிறாரே என்னும்போது கொம்புசீவுபவர்களை அடக்கத் தெரியவேண்டும்
  6. தீபாவளி – ஜெயம் ரவிக்கு தெரிந்ததெல்லாம் மறுசுழற்சி; எதற்கு சொந்த முயற்சி?
  7. மாயக்கண்ணாடி – சேரன், எஸ்,ஜே. சூர்யாவுக்கு எல்லாம் இயக்குநர் சரக்கு தீர்ந்தாச்சா?

உதவிய பதிவுகள்:
சண்டே சினிமா :: ஃப்ளாஷ் பேக் 2007 – மனோஜ்கிருஷ்ணா

Tamil Cinema 2007 – Top Films, Movies, Flashback, Stars: Dinamalar

Muthu – Movie Screenplay bits & pieces

மீனா: வேதனை. அவமானம், வெட்கம்!

பாண்டிய மன்னனாக வடிவேலு: ஆமா… இது என் டயலாக் இல்ல?

மன்னனுடன் கூட வந்திருக்கும் மந்திரிகள்: டயலாக்க ரிப்பீட் பண்ணாத்தான் ஜெயிக்க முடியும்.

மீனா: அழகு ராணி; அதிரூப சுந்தரி; ஆடவர் மயங்கும் அற்புத மேனி கொண்ட இந்த அரசிளங்குமரிக்கு, சுடுகாட்டில் எரியும் கொள்ளியில் இருந்து சூடு தாங்க முடியாமல் எழுந்தோடி வந்த பிணம் போல் இருக்கும் இவனா எனக்கு மணமகன்?

பார்வையாளன் ரஜினி: ஆ…ஆச்சு (தும்மல் போடுகிறார்

மீனா கடுப்பாகிறார்

மீனா:  என் கடைக்கண் பார்வை பட்டால் படைபலம் கொண்ட மன்னர் கூட்டம் அனைத்தும் நாடு மறந்து நகரம் மறந்து என் பின்னால் வர தயாராக இருக்கும்போது… என்னை நாடி வந்த பேடியே!

ரஜினி மீன்டும் பெருந்தும்மல்.

மீனா:  என்னை நாடி வந்த பேடியே! இந்த பூலோகத்தில் மட்டுமல்ல. ஏழேழு லோகம் சுற்றிவந்தாலும் உன்னை ஒரு பைத்தியக்காரி கூட மணந்து கொள்ள மாட்டாள். ஹ்ம்ம்ம்… அமாவாசைக்கு பௌர்ணமி மேல் ஆசையா?

Rajni continues his lengthy preludes to and the sneezing process itself.

மீனா:  யோவ்! என்னா? விளயாட்டா இருக்கா? வந்ததில் இருந்து பார்க்கிறேன்… சும்மா தும்மிக்கினே இருக்கே!

ரஜினி அப்பாவியாய் சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

மீனா:  யோவ்… உன்னத்தான் சொல்றேன்.

காந்திமதி: ரெங்கநாயகி… வேண்டாம்! பேசாமல் இரு.

மீனா: நீங்க சும்மா இருங்க அக்கா! அப்பத்திலிருந்து நானும் பார்த்துட்டே இருக்கேன். தும்மிக்கிட்டே இருக்கியே!? என்ன நெனச்சுட்டு இருக்கே உன் மனசில்?

ரஜினி: ஏம்ப்பா… நாட்டில மனுசன் தும்மினாக் கூடவா தப்பு?

மக்கள்: கோரஸாக அதானே?!

மீனா: தும்மினா ஒண்ணும் தப்பில்லைய்யா…ஆனா! இங்க ஒருத்தி அழகா நடிச்சுட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ற மாதிரி தும்முறியே… அதான் தப்பு!

ரஜினி: ஏம்மா… இந்தத் தும்மலு, இருமலு, விக்கலு, கொட்டாவி, நல்லது, கெட்டது, பசி, தூக்கம், பொறப்பு, இறப்பு, பணம், பட்டம், பதவி… இதெல்லாம் கேட்டு வராது. தானா வரும். வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது.

எச்ச எச்ச எச்ச எச்சா… கச்சச்ச கச்சகச்சா

(ரஜினியின் தோழர்) ரமேஷ்கன்னா: இது வசனம்… முத்து… தூள் கிளப்புமா! ஆ… அக்காங்… நீயும் பேசறியே!?

மீனா:  யோவ்… வசனம் எல்லாம் கிழேயிருந்து என்ன வேணா பேசலாம்யா. இத்தன பேருக்கு முன்னால மேசையேறி பேசிப்பாரு. ஒதறும்!

ர.கன்னா: யாருக்கு உதறும்? என்னா நெனச்சுக்கிட்ட எங்க முத்துவப் பத்தி!? அவர் வண்டியோட்ற ஸ்டைல்ல பார்த்தே இந்த ஊர் மயங்கிக் கிடக்குது.

மீனா: வண்டி ஓட்டிடலாம்யா.. மேடையேற முடியுமா?

ர.கன்னா:  யாரப் பாத்து என்னா கேள்வி கேக்கறே? இது என்னா மேடை? அவர் எந்த மேடையா இருந்தாலும் ஏறுவாரு! தைரியமாப் பேசுவாரு! ஆடுவாரு! பாடுவாரு… பார்க்கிறீயா!?

ரஜினி:  என்ன கண்ணா… இப்படி மாட்டி விடுறீயே!

ர.கன்னா:  சும்மா இரு முத்து! உன் வெயிட்டு உனக்கேத் தெரியாது!

மீனா:  யோவ்… தைரியமான ஆம்பிளையா இருந்தா.. மெடையில வந்து ஆடிப்பாடி நடிக்க சொல்லுய்யா பார்ப்பம்…

கூட்டத்திலொருவர்: என்னா முத்தூ… அந்தப் பொண்ணு அது பாட்டுக்கு பேசிகிட்டிருக்கு. நீ பேசாம ஒக்காந்திட்டிருக்கியே.. மேடையில போய் கொஞ்சம் வெளையாண்டுட்டு வாம்மா…

ரஜினி:   ஐய்யய்யோ… அண்ணே… நமக்கெதுக்கண்ணே இந்த வேண்டாத விளையாட்டெல்லாம்?

கூட்டத்தில் இன்னொருவர்: உன் வேலைய நீ காட்ட வேண்டாமா? போ வாத்யாரே

ரஜினி:  அட சும்மா இருப்பா… ஏதோ சின்னப் பொண்ணு… தெரியாமப் பேசிடுச்சு…

ர.கன்னா:  ஐய்யய்யே… இப்படி சொன்னா கேட்க மாட்டாருப்பா… நாமதான் அவரை மேடையேத்தி வுடணும்

ரஜினி மிரள மிரள மக்கள் குண்டு கட்டாக தூக்குகிறார்கள்.

மேடையில் ஏற்றப்பட்ட ரஜினி: ஏம்ப்பா சுடுது!!

ரஜினி: உங்க பாட்டுக்கு ஏத்திவிட்டீங்க… இவங்களையெல்லாம் எப்படிம்மா மேய்க்கிறது?

மக்கள்: சும்மா பூந்து விளையாடும்மா… இத்தினி பேரு உன் பின்னாடி இருக்கம்ல…

ரஜினி:  எசமான்…??

சரத்பாபு மையமாக உம் கொட்டி தலையாட்டுகிறார்.

ஒருவன் ஒருவன் முதலாளி பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் துண்டு ஸ்டைல் விசிறுகிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினி: பெண் பார்க்க வந்த மன்னவனின் மனதைப் புண்படுத்திய மருத நாட்டின் மகளே! ஆண் அழகை முகத்தில் பார்க்காதே… அகத்தில் பார்! மற்றவர்களின் மனதைப் புண்படுத்துவதற்கு பதிலாக, நீ கூறிய அதே… அதே பதிலை, கொஞ்சம் புன்னகையுடன் கூறிப்பார்!

அப்பொழுது நீ அறிவாய்… அதில் இருக்கும் இனிமை! அவைதான் நீ பொறந்த நாட்டிற்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை!! பார்த்தாயா… தமிழ் மொழியின் அருமை!!!

மீனா:  எல்லாரும் கை தட்டினா… நீ என்ன பெரிய ஆளா?

ரஜினி:  அவங்க கை தட்டிதாம்மா எல்லாரும் பெரிய ஆளாயிருக்காங்க…

மீனா:  டிராமா பார்க்க வந்தாயா? இல்ல… வம்பிழுக்க வந்தாயா?

ரஜினி:  வம்புக்கு நான் இழுக்கல

மீனா:  என்ன… திமிரா?

ரஜினி:  அது எனக்கில்ல

மீனா:  பின்ன எனக்கா?

ரஜினி:  அப்படீன்னு நான் சொல்லல

மீனா:  யோவ்… நீ உன் மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கே?

பொதுவாக என் மனசுத் தங்கம்… ஒலிக்கிறது.

கண்டு ரசிக்க:

மீனா:ரஜினி:

Netflix Queues

  1. No Country for Old Men (2007)
  2. Juno (2007)
  3. The Kite Runner (2007)
  4. Atonement (2007)
  5. Outsourced (2006)
  6. Before the Devil Knows You’re Dead (2007)
  7. American Gangster (2007)
  8. Starting Out in the Evening (2007)
  9. Lars and the Real Girl (2007)

Tamil Film Songs – Best of 2007 Movie Music

உதவிய பதிவு: றேடியோஸ்பதி: : “உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?”

அரிதாக கேட்க கிடைத்த பத்து

1. நன்னாரே :: குரு
பாடியவர்: ஷ்ரேயா கோஸல், உதய் மஜும்தார்
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: ஐஷ்வர்யாவுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நடனம். ரெஹ்மானுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; ஹிட் பாடல் கொடுப்பது. மணி ரத்னத்துக்கு இவற்றை கறக்கவும் இணைக்கவும் தெரியும்.

2. சின்னஞ்சிறு சீனா கற்கண்டே :: முருகா
பாடியவர்: சங்கீதா, வினீத் ஸ்ரீனிவாசன்
இசை: கார்த்திக் ராஜா

நினைவில் நின்றது: அபஸ்வர ரீ-மிக்ஸ்களின் நடுவே நெருடாத மறு பதிப்பு

3. டென்ஷன் மச்சான் :: வம்புச்சண்ட
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
இசை: டி இமான்

நினைவில் நின்றது: ஜாலி (படம் வந்துவிட்டதா?)

4. போனா வருவீரோ :: வீராப்பு
பாடியவர்: ஜே
இசை: டி இமான்

நினைவில் நின்றது: சுந்தர் சி.க்கு என்று பொருத்தமான ஜோடிகளும் ஆடாமலே அசத்தும் பாடல்களும் அமைந்து விடுகின்றன.

5. பேச பேராசை :: நாளைய பொழுதும் உன்னோடு
பாடியவர்: பவதாரிணி, கார்த்திக்
இசை: ஸ்ரீகாந்த் தேவா

நினைவில் நின்றது: இந்த ஆண்டின் நம்பிக்கை நட்சத்திரம், நாயகியாக நடித்திருக்கும் படம்

6. கந்தா கடம்பா :: மலைக்கோட்டை
பாடியவர்: நவீன்
இசை: மணிஷர்மா

நினைவில் நின்றது: ‘ரன்’ படத்தின் ‘தேரடி வீதியில் தேவதை வந்தா’ ரகத்தில் இன்னொரு பாடல்

7. சின்னச் சின்ன மழைத்துளி :: ஆக்ரா
பாடியவர்: சுருதி வந்தனா
இசை: சி எஸ் பாலு

நினைவில் நின்றது: எங்கேயோ கெட்ட மெட்டு

8. பாதை தெரிகிறது :: திருத்தம்
பாடியவர்: டிப்பு
இசை: பிரவீன் மணி

நினைவில் நின்றது: ஏற்கனவே கேட்டது போல் இருந்தாலும் இனிமையான மெட்டு + எளிமையான பொருத்தமான கவிதை வரிகள்

9. பொறந்தது பசும்பொன்னு :: திருமகன்
பாடியவர்: தேவா & டிப்பு
இசை: தேவா

நினைவில் நின்றது: 2011 முதல் மந்திரி என்று பிரஸ்தாபிக்காத தமிழ் நடிகரின் ஹீரோயிஸப் பாடல்

10. நூத்துக்கு நூறு :: தொலைபேசி
பாடியவர்: எஸ்.பி.பி.
இசை: சாந்தகுமார்

நினைவில் நின்றது: வைரமுத்துவை நினைவூட்டும் பிரயோகங்கள்.


அதிகம் கேட்கவைக்கப்பட்ட பத்து

1. பறவையின் கூட்டில் :: கற்றது தமிழ் (தமிழ் எம்.ஏ)
பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜாநினைவில் நின்றது: திரையில் இயல்பான பயணம் + என்றும் இளையராஜா

2. டோல் டோல்தான் அடிக்கிறான்
பாடியவர்: சுசித்ரா, ரஞ்சித்
இசை: மணி ஷர்மா

நினைவில் நின்றது: நடனம் & இசை – Made for each other

3. மதுரைக்குப் போகாதடி :: அழகிய தமிழ்மகன்
பாடியவர்: அர்ச்சித், பென்னி, தர்சனா
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: ஆரம்ப துக்கடா; பா விஜய்; தாவணி அசின் ஷ்ரேயா; விஜய் ஆட்டம்… எதை விடுப்பது!

4. எல்லோரையும் ஏத்திப்போக :: இராமேஸ்வரம்
பாடியவர்: ரேஷ்மி, சூரியா, ஹரிசரண், மாணிக்க விநாயகம்
இசை: நிரு

நினைவில் நின்றது: காட்சியாக்கம்

5. கடி கடி கொசுக்கடி :: வியாபாரி
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம், மனோ
இசை: தேவா

நினைவில் நின்றது: எஸ்.பி.பி. போன்ற மனோ; எஸ் ஜே சூர்யா மசாலாவுடன் அனுராதா ஸ்ரீராம்; Explicit ஆக இல்லாத இரட்டை அர்த்த வரிகள்.

6. யார் யாரோ :: ஒன்பது ரூபாய் நோட்டு
பாடியவர்: பரத்வாஜ்
இசை: பரத்வாஜ்

நினைவில் நின்றது: வைரமுத்து; தொட்டுக்க தங்கர் பச்சன் & சத்யராஜ்.

7. அழகான பாதகத்தி :: கருப்பசாமி குத்தகைதாரர்
பாடியவர்: சங்கீதா, கார்த்திக்
இசை: தினா

நினைவில் நின்றது: கரணுக்கு ஹிட் பாட்டு தருவது பெரிய விஷயம்!

8. அதிரடீ – சிவாஜி
பாடியவர்: ஏ. ஆர். ரெஹ்மான், சயனோரா
இசை: ஏ. ஆர். ரெஹ்மான்

நினைவில் நின்றது: கேட்டால் எட்டடி; பார்த்தால் பதினாறடி; ரஜினி என்றால் முப்பத்திரண்டடி! ஷங்கரும் என்பதால் 70 எம் எம் அடி!!!

9. ஜல்ஸா பண்ணுங்கடா :: சென்னை 600028
பாடியவர்: ஹரிசரண், கார்த்திக், ரஞ்சித், டிப்பு, கானா பழனி, கானா உலகநாதன், கருணாஸ், ப்ரேம்ஜி அமரன், சபேஷ்
இசை: ப்ரேம்ஜி அமரன்

நினைவில் நின்றது: கங்கை அமரன் இது போல் சமகால இலக்கியம் நிறைய படைக்கவேண்டும்.

10. அய்யய்யோ… என் உசுருக்குள்ள :: பருத்தி வீரன்
பாடியவர்: ஷ்ரேயா கோஸால், கிருஷ்ணராஜ், மாணிக்க வினாயகம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: ஆரம்ப துக்கடா முதலே அமர்க்களம்தான்.


தொடர்ந்து அதிகம் கேட்கவிரும்பும் பத்து

1. காற்றின் மொழியே :: மொழி
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர்நினைவில் நின்றது: பாடல் அருமை; காட்சியாக்கம் அழகு.

2. எல்லாப்புகழும் (முன்னால் முன்னால் வாடா) :: அழகிய தமிழ்மகன்
பாடியவர்: ஏ ஆர் ரெஹ்மான்
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: முக்காபலாவில் இருந்து ‘ம’ வரிசையில் துவங்கும் வெற்றிப்பாடல் ஜோடியான வாலி + ஏ ஆர் ஆர்; திரை வடிவமைப்பு மெகா சொதப்பல் 😦

3. மின்னல்கள் கூத்தாடும் :: பொல்லாதவன்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்

நினைவில் நின்றது: பாடலாசிரியர் யார் என்று பார்க்க வைத்த நா முத்துக்குமார்

4. யாரோ யாருக்குள் இங்கு யாரோ:: சென்னை 600028
பாடியவர்: எஸ்.பி.பி., கே எஸ் சித்ரா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: ஏனோதானோ வாலியை கண்டுகொள்ளாத திரைக்காதலர்களின் மெய்ப்பாடு.

5. அறியாத வயசு :: பருத்தி வீரன்
பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: எவ்வளவோ இளையராஜா கேட்டிருக்கோம்… இதுவும் ஃபேவரிட் ஆக்கிட மாட்டோமா!

6. டிங்கி டிங்கி டோரிடோ :: நினைத்தாலே
பாடியவர்: பவித்ரா, வினயா
இசை: விஜய் ஆண்டனி

நினைவில் நின்றது: ஹீரோயின் தனிப்பாடல் & துள்ளல்

7. முதல் நாள் இன்று எதுவோ ஒன்று & உன்னாலே உன்னாலே :: உன்னாலே உன்னாலே
பாடியவர்: மஹாலஷ்மி, கேகே, ஷாலினி & கார்த்திக், கிருஷ், ஹரிணி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

நினைவில் நின்றது: அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரி இருக்கும் படத்தில் கொஞ்சம் வித்தியாசப்படும் பாடல்

8. தமிழ்ச்செல்வி தமிழ் செல்வி :: கூடல் நகர்
பாடியவர்: சாதனா சர்கம், ஹரிஹரன்
இசை: சபேஷ் – முரளி

நினைவில் நின்றது: சாதனா சர்கமின் ஓரளவு சுத்த உச்சரிப்பு

9. உலக அழகி நான் தான் :: பிறப்பு
பாடியவர்: ஜனனி பரத்வாஜ்
இசை: பரத்வாஜ்

நினைவில் நின்றது: கார்த்திகாவின் எண்ணெய் தேய்த்த தனியாவர்த்தனங்கள் (தொடர்பான பதிவு: வினையூக்கி: ரசித்த ஆறு + ஆறு விசயங்கள்)

10. தோரணம் ஆயிரம்:: அம்முவாகிய நான்
பாடியவர்: தீபிகா, கீதா, ஸ்ரீவித்யா
இசை: சபேஷ்-முரளி

நினைவில் நின்றது: காதலியுடனான சில்மிஷங்களைத் தவிர வேறு எதையாவதையும் நினைக்கிற மாதிரி படத்தில் ஏதாவது படமாக்கியிருக்கலாம்.


சென்ற வருடம்:
Tamil Cinema – 2006 Top Movies List « Snap Judgment
Tamil Film Songs – 2006 Best « Snap Judgment

தெரிந்தே விட்டது: பில்லா; தெரியாமல் விட்டது எவ்வளவோ!

Ilaiyaraja’s Neengal Kettavai – Kanavu Kaanum vaazhkkai yaavum

தேன் கிண்ணம்: 53. கனவு காணும் வாழ்க்கை யாவும்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

ிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருகின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன
ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்
கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி
ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்

பேதை மனிதனே கடமை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்..

படம் : நீங்கள் கேட்டவை
குரல் : யேசுதாஸ்
இசை : இளையராஜா

Evano Oruvan – Poster (& Review from an acquaintance)

மாதவன் தயாரித்து நடித்துள்ள எவனோ ஒருவன் திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி

evano oruvan sangitha mathavan dombivili fast Tamil Cinema Movies Films Reviews Posters Dinamaniநடிகர் மாதவன் தனது நிறுவனம் லியுக்கோஸ் பிலிம்ஸ் சார்பில் ‘எவனோ ஒருவன்’ என்ற தமிழ் படத்தைத் தயாரித்து அதன் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமிழ் பட வரலாற்றில் ஒரு புதுமையாக, முதன் முறையாக, இந்தத் திரைப்படத்தின் முதல் திரையிடல் வட அமெரிக்காவில் நடந்துள்ளது. ஹெச் எஸ் பி சி வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் விப்ரோ சந்தூர் சோப் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சினிமா கலிஃபோர்னியா வாழ் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு மட்டும், படம் அதிகாரபூர்வமாக வெளியிடப் படும் முன்பாகவே திரையிடப் பட்டது. இந்தத் திரையிடலை ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தார் மாதவன். அக்டோபர் 26 சனிக்கிழமை அன்று, கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஓசே நகரின் செஞ்சுரி 10 திரையரங்கில் இந்த சிறப்பு திரைப்பட காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஹெச் எஸ் பி சி வங்கியும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கலிஃபோர்னியா பே ஏரியாப் பகுதியில் உள்ள தமிழ் ரசிகர்களை இந்த நிகழ்ச்சிக்காக வரவேற்றிருந்தனர்.

நிகழ்ச்சிக்காக, ‘எவனோ ஒருவன்’ திரைப் படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் நடிகர் மாதவன், திரைப்படத்தின் இயக்குனர் நிஷிகாந்த் காமத், கதாநாயகி நடிகை சங்கீதா ஆகியோர் இந்தியாவில் இருந்து அமரிக்கா வந்திருந்தனர். அமெரிக்காவில் நியுயார்க் மற்றும் சான் ஓசே நகரங்களிலும் இன்னும் பல நாடுகளிலும் இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் (special screening) தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. டிசம்பரில் வெளியிடப் படும் ‘ எவனோ ஒருவன்’ திரைப்படமே தமிழ் திரையுலகில் முதல் முறையாக வெளிநாடுகளில் சிறப்பு ஒளிபரப்புச் செய்யப் பட்டு வரவேற்பை பெற்று பின் தமிழ் நாட்டில் ரீலீஸ் செய்யப் பட இருக்கிறது. சான் ஓசே திரையரங்கில் அரங்கு நிறைந்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினை இத் திரைப்படம் பெற்றது. வழக்கமான தமிழ்த் திரைப்பட ஃபார்முலாவை விட்டு முற்றிலும் விலகி எடுக்கப் பட்டிருந்த இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

சிறப்பு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து ரசிகர்களை வரவேற்ற மாதவன், இந்த முறை தான் தயாரித்தப் படத்தினை அமெரிக்கா வாழ் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கும் ரசனைக்கும் முதலில் காண்பிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இயக்குனரரயும், நடிகை சங்கீதாவையும் அறிமுகப் படுத்தினார். ஹெச் எஸ் பி சி வங்கி அதிகாரிகளின் வரவேற்பினையும், மாதவனின் சிற்றுரரயையும் தொடர்ந்து ‘ எவனோ ஒருவன்’ தமிழ் திரைப்படம் திரையிடப் பட்டது.

திரையிடல் முடிந்த பின்பாக படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு மாதவனும், நடிகை சங்கீதாவும், இயக்குனர் நிஷிகாந்த் காமத்தும் பதில் அளித்தனர். பின்னர் பல ரசிகர்களின் விமர்சனங்கள் பதிவு செய்யப் பட்டன. கலிஃபோர்னியா வாழ் தமிழ் ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்த நடிகர் மாதவன் அனைத்து ரசிகர்களுக்கும் புன்னககயுடனும் பொறுமையுடனும் தனது கையொப்பம் இட்டு எவனோ ஒருவன் புகைப் படத்தினை வழங்கினார். ரசிகர்கள் அனைவருடனும் புகைப் படம் எடுத்துக் கொண்டார். பின்னர் ரசிகர்களுடன் மவுண்டன் வ்யூ நகரில் உள்ள இந்திய உணவகத்திற்குச் சென்று இரவு விருந்தளித்தார். இத்துடன் கலிஃபோர்னியா சிலிக்கான் வேலியில் மாதவனின் எவனோ ஒருவன் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி நிறைவுற்றது.


எவனோ ஒருவன் – திரைப்பட விமர்சனம்

தமிழ் திரையுலகில் ஆடல், பாடல், சண்டைகள், ஹீரோ வழிபாடல் போன்ற யதார்த்தத்துக்கு ஒவ்வாத நிஜமில்லாத வணிக சமாச்சாரங்கள் தவிர்த்த மண்சார்ந்த பிரச்சினைகளை அலசும் நிஜமான சினிமாக்கள் வருவது வெகு அரிது. வணிக சமரசங்களை முற்றிலும் தவிர்த்து கதையம்சத்துக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள படம் எவனோ ஒருவன். கோடிக்கணக்கான மக்களில் ஒருவன், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை அதற்கானத் தீர்வுகளைத் தேடும் ஒருவன் எவனோ ஒருவன். நாலு பாடல்கள், ஐந்து சண்டைகள், இரண்டு நாயகிகள் இல்லாமல் எடுத்தால் தமிழ் படங்களைப் பார்க்க மாட்டார்கள் என்ற நிலையில் தமிழ் மக்களின் ரசனையய மலிவு படுத்தி வைக்கப் பட்டிருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குள் இருக்கும் மேலான ரசனையை நம்பி நடிகர் மாதவன் துணிந்து ஒரு நல்ல படத்தை தமிழில் ஒரு புதிய முயற்சியை, தரமான சினிமா அனுபவத்ததக் கொணர்ந்திருக்கிறார்.

ஒரே வகை மசாலா என்னும் மாயச் சுழலில் சிக்கித் தவித்து மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட உலகுக்கு ஒரு புதிய வரவு இந்த எவனோ ஒருவன் , இது போன்ற படங்களின் வெற்றி உலகத் தரத்திற்கு இணையான தமிழ் படங்களை மேலும் தயாரிக்கவும் இயக்கவும் மாதவன் போன்ற கலைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். புதிய இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் இது போன்ற தரமான சினிமாக்களை எடுக்கத் தூண்டும் நெம்புகோலாக அமையும். நடிகர்களுக்கும் சண்டைகளையும் டூயட்களையும் தவிர்த்து யதார்த்தப் படங்களில் நடிக்கக் கூடிய துணிவை அளிக்கும். மலையாளத்திலும், வங்காளத்திலும், மராத்தியிலும் இது போன்ற முயற்சிகள் பெருத்த வரவேற்பையும், விருதுகளையும் அள்ளிக் குவிக்கும் பொழுது தமிழிலும் அது போன்ற ஒரு ஆரோக்கியமான திரைப்படச் சூழ்நிலையைக் கொணர முயலும் மாதவனின் முயற்சி ஆதரிக்கப் பட வேண்டியது. பாடலும், நடனமும், அபத்தமான ஹாஸ்யக் காட்சிகளும், காதல் கதைகளும் இல்லாமல் மக்களின் பிரச்சினைகளை, நகரப் புறங்களில் மக்கள் சந்திக்கும் அன்றாட சிக்கல்களை ஒரு நிஜ சினிமமவாக எவனோ ஒருவன் சொல்லியிருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை மிகுந்த விறுவிறுப்புடனும் உணர்ச்சி வேகத்திலும் பயணிக்கிறது.

எவனோ ஒருவனின் கதை புதிதல்ல. பல்வேறு திரைப்படங்களிலும் ஹாலிவுட் படங்களிலும் சொல்லப் பட்ட கதையின் ஒரு வடிவம் தான். இயக்குனர் நிஷி இது ஃபாலிங் டவுண் என்ற ஹாலிவுட் படத்தினால் உந்தப் பட்ட கருவே என்கிறார். . ஆனால் அந்தக் கதை சொல்லப் பட்ட விதமும், கதையமைப்பும், சூழலுமே இந்தப் படத்தை, இதே போன்ற கதைச் சாயலுடன் கூடிய பிற தமிழ்/ஆங்கிலப் படங்களில் இருந்து வித்தியாசப் படுத்துகிறது. முக்கியமாக போலீஸ் அதிகாரி வெற்றிசெல்வனின் பாத்திரப் படைப்பு இந்தப் படத்திற்கு வித்தியாசமான ஒரு பரிணாமத்தை அளிக்கின்றது. இது வரை இதே போன்ற கதையின் சாயலுடன் வந்த நான் சிகப்பு மனிதன், ஜெண்டில் மேன், இந்தியன், அந்நியன் போன்ற திரைப்படங்கள் மிகைப் படுத்தப் பட்ட, ஃபாண்டசிகள் நிரம்பிய வகைத் திரைப் படங்கள். யதார்த்தத்துக்கும் நிஜவாழ்வுக்கும் ஒவ்வாத ஹீரோ வொர்ஷிப் நிறைந்த சினிமாக்கள். அது போன்ற மிகைப் படுத்தல்களைத் தவிர்த்து ஒரு சாதாரணனின் இயல்பான யதார்த்தமான பார்வையில் மட்டுமே எவனோ ஒருவன் சொல்லப் படுகிறது. இது போன்ற கதை சொல்லலும் திரை அமைப்பும் தமிழ் படச் சூழலில் அடிக்கடி நிகழ்வதில்லை. இது போன்ற திரைப்படங்களே உலக அரங்கில் மதிப்பும் மரியாதையும் விருதுகளையும் பெற்றுத் தருகின்றன. தமிழ் படங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் உலக அரங்கில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரப் போவது உறுதி.

ஸ்ரீதர் வாசுதேவன் கோடிக்கணக்கான இந்தியர்களைப் போல அன்றாட வாழ்வின் அலுப்பிலும் சலிப்பிலும் உழல்பவன். நெருக்கமான தூய்மையற்ற சுகாதாரமற்ற சூழலிலும், ஊழலும் அராஜகமும், மனித நேயமின்மையும், சுரண்டலும், ஏமாற்றுதலும் நிறைந்த குழப்பமான நகர வாழ்வின் கொடுமைகளில் சிக்கி மீள முடியாமல் மூச்சுத் திணறுபவன். நாற்றமெடுக்கும் சமூக அமைப்புடன் அதன் நாற்றத்தைச் சகித்துக் கொண்டு, அனுசரித்துக் கொண்டு வாழ முடியாத, வாழப் பிடிக்காத, தன் கையயலாகாததனத்தின் மீது ஏற்படும் சுய கோபத்துடன் வாழும் தார்மீகக் கோபத்தைச் சுமந்து கொண்டு, மனதில் அழுத்திக் கொண்டு வாழும் ஒரு நகர்புற இளளஞன். சட்டத்தை மதிக்க வேண்டும், விதி முறைகளை மீறக் கூடாது, நேர்மையையும் உழைப்பையும் நம்ப வேண்டும் அநீதிக்கும், ஊழலுக்கும் துணை போகக் கூடாது என்ற காலத்துக்கு ஒவ்வாத உயரிய நோக்கங்களுடன் வாழ முயற்சிக்கும் ஸ்ரீதருக்குக் கிடைப்பது என்னவோ ஏளனமும், பரிகாசமும், இகழ்ச்சியும்தான். அன்பு மனனவியே கணவனின் ஊரோடு ஒத்துப் போக முடியாத லட்ச்சியங்களினால் அயர்வுற்று கணவனை நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு மாசு பட்ட அமைப்புடன் அனுசரித்து வாழ நிர்ப்பந்திக்கும் நிலமை. தன் லட்சியங்களுடன் வாழ முடியாத அயர்ச்சி, சீர் கெட்ட சமூகத்தின் அழுத்தம், அன்றாட வாழ்வின் சலிப்பு எல்லாம் சேர்ந்து ஸ்ரீதரின் பொறுமையின் எல்லையைச் சோதிக்கின்றன. கடும் மன அழுத்தமும், விரக்தியும், வேதனையும் ஒரு கட்டத்தில் அடக்க முடியாத எரிமலையாகப் பொங்கி வெடிக்கிறது. நெறிகெட்டுப் போன சமுதாயத்திடம் பொறுமை இழக்கும் ஸ்ரீதர் தன்னளவில், தன் பார்வையில் படும் அவலங்களுக்கெல்லாம் சட்டத்துக்கு ஒவ்வாத ஆனால் தன்னால் முடிந்த தீர்வை செயல் படுத்திப் பார்க்கக் கிளம்புகிறான். உயர்ந்த லட்ச்சியம் நேர்மை, ஊழலற்ற மனித நேயமிக்க சுமூகம் என்ற உயரிய கொள்கைகளான தீபத்தினை நோக்கிச் ஈர்க்கப் படும் விட்டில் பூச்சியாக அவன் கதை முடிகிறது.

ஸ்ரீதரின் மனசாட்ச்சி, ஸ்ரீதரின் விடுதலை பெற்ற சுய தீர்வுகள் சென்னை நகரைக் குலுங்க வைக்கிறது. செம்மறியாட்டுக் கூட்டத்திற்கு அவனது தார்மீகக் கோபம் வன்முறையாக்த் தோன்றுகிறது, அலட்ச்சியமும் சமூக நோக்கும் இல்லாத மக்களுக்கு மற்றொரு பரபரப்பு செய்தியாகக் கழிகிறது. வெகு சிலருக்கு மட்டுமே ஸ்ரீதர் மேற்கொண்ட தனி நபர் விஜிலெண்ட்டியிசத்தின் தாக்கம், அதன் அர்த்தம் புரிகிறது. ஸ்ரீதரின் குடும்பம் குழப்பத்தில் தவிக்கிறது. ஸ்ரீதர் போன்றவர்களின் கோபத்தை வளர விட்டால் அது அரசாங்கத்து வினையாக முடியும் என்பதனாலும், படித்த மக்களுக்கு அமைப்புசார் அரசாங்கத்தின் ஊழல் மீதும், மோசடிகள் மீதும் உள்ள கோபம் எந்த நேரத்திலும் உணர்ச்சிப் பிராவகமாக ஒரு சின்ன ஸ்ரீதர் வாசுதேவனால் தூண்டப் பட்டு விட்டால், அது ஆங்கோர் காட்டினின் பொந்தினில் வைத்த அக்னிக் குஞ்சாக நாட்டையே வெந்து தணித்திடும், அந்த அக்னிக் குஞ்சின் முழு வெப்பத்தைத் தாங்க முடியாது என்பதை உணர்ந்த அரசும், காவல்துறையும் ஸ்ரீதர் வாசுதேவன் என்ற ஒரு தனிநபர் புரட்ச்சியை அடக்கக் கிளம்புகிறது. ஒரு சாதாராண, படித்த பாமரன் தன் பொறுமையின் எல்லையைத் தாண்டினால், சாது மிரண்டால் என்ன நடக்கக் கூடும் அதன் விளைவுகள் என்ன அதன் தாக்கம் என்ன என்பது குறித்தான கேள்விகளள எழுப்பி, படத்தைப் பார்க்கும் மக்கள் மனதில் தார்மீகக் கேள்வி அலைகளை எழுப்புகிறது எவனோ ஒருவன், அது எழுப்பும் கேள்விகளே படத்தின் முக்கிய பலம். அஸ்திவாரம்.

ஸ்ரீதரின் தார்மீகக் கோபத்தையும் அதன் பின்னால் உள்ள நியாயத்தையும், நேர்மையின்பால், தூய்மையான லட்ச்சிய சமுதயாத்தின் மேல் அவனுக்குள்ள வேட்க்கையையும் அவனை வேட்டையாடக் கிளம்பும் காவல்துறை அதிகாரி மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்கிறார். ஸ்ரீதரின் மனசாட்ச்சி அந்த அதிகாரியிடம் அதிர்வலைகளையும், குற்ற உணர்வையும் சுய தேடல்களையும் தோற்றுவித்து இறுதியில் அவனது மனசாட்ச்சி அந்த அதிகாரியிடன் இடம் மாறுகிறது. காணும் ரசிகர்களிடமும் அதே கேள்விகளும், ஆரோக்கியமான சமூகத்தின் அவசியம் குறித்த உணர்வும் தீவீரமாக எழுப்புகிறது இந்தப் படம்.

ஸ்ரீதர் வாசுதேவனாக ஒரு சாதாரணக் குடும்பத் தலைவனாக, இரண்டு குழந்தைகளின் தகப்பனாக, தினமும் அதிகாலை அலாரம் வைத்து விழித்து, கார்ப்பரேஷன் லாரிக்குக் காத்துக் கிடந்து, தண்ணீர் பிடித்து, குழந்தைகளை தயார் செய்து, டிபன் பாக்சில் அடைத்த சாப்பாட்டுடன் எலக்ட்ரிக் டிரெயினில் நசுங்கி பீச் ஸ்டேஷன் வரை பயணம் செய்து, வங்கியில் அமர்ந்து மாலை வரை கரன்சி எண்ணிக் கணக்குப் பார்த்து அலுத்துக் களைத்து, மீண்டும் ரயில் பிடித்து கசக்கிப் பிழிந்து வாடி வதங்கி, வாழ்கையை அனுதினமும் ஒரே விதமாகச் சுற்றும் கடிகார முள் போல் அலுப்பும் சலிப்புடன் கழிக்கும் ஸ்ரீமான் பொது ஜனமாக எவ்வித ஹீரோத்தனங்களும் பாசாங்குகளும் இல்லாத வெகு இயற்கையாக நடித்திருக்கிறார் மாதவன். ஸ்ரீதர் வாசுதேவன் என்ற சாதாரணப் பாமரனின் பாத்திரத்துக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார் மாதவன். விரக்தியையும் வேதனையும் குமுறலையும், மன அழுத்தத்தையும் பாசத்தையும் எவ்வித மிகை நடிப்பும் இன்றி மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார் மாதவன். தமிழின் மிகத் திறமையான இயல்பான நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மாதவன். எந்த இடத்திலும் தன் ஹீரோ இமேஜை நிரூபிக்க ஒரு இம்மி கூட அவர் முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாயில் ரத்தம் வர அடிப்பது அல்லது அடி வாங்குவது, நிதர்சனத்துக்கு மீறிய செயல்களைச் செய்வது என்பது போன்ற பாசாங்குகள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண வங்கி ஊழியனின் பொறுமையின் எல்லை மீறினால் என்ன செய்வானோ அதை மட்டுமே நடித்திருக்கிறார் மாதவன். இந்தப் படம் அவருக்கு மற்றொரு மைல்கல்.

அவரது மனைவியாக இரண்டு குழந்தைகளுடனும், இருண்டு கருத்த மாடிப் போர்ஷனில் கஷ்டப் பட்டு ஜீவனம் நடத்த வேண்டிய குடும்பத் தலைவியாகவும், விரக்தியும் வேதனையையும் கொட்டி தன் கணவனை இயல்பான மனிதனாக மாற்ற முயன்று தோற்கும் குடும்பப் பெண்ணாக தனக்கு அளிக்கப் பட்ட பாத்திரத்தை வெகு சிறப்பாகச் செய்திருக்கிறார் நடிகை சங்கீதா.

தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தான் காணும் அநியாயங்களுக்கு உடனடி தீர்வு காண முயலும் ஸ்ரீதர் வாசுதேவன் கை மீறிப் போய் தனி நபரின் கோபம் ஒட்டு மொத்த வெள்ளைக் காலர் சமுதாயத்தின் கோபமாக வெடித்திடும் முன்பாக தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார் இயக்குனர் சீமான். ஸ்ரீதரைத் தேடும் பணி அவரது ஆன்மாவை பரிசோதனைக்கு உள்ளாக்கும் தன்னிடத்தில் சத்தியத்தைத் தேடும் பணியாக மாறி, தாங்க முடியாத மன உளைச்சலிலும், சுய பச்சாதாபத்திலும், விரக்தியிலும், குற்ற உணர்விலும் தத்தளிக்கும் அதிகாரியாக சீமான் மிகச் சிறப்பாகத் தனக்கு அளிக்கப் பட்ட பாத்திரத்தின் கனம் உணர்ந்து நடித்திருக்கிறார். அவரது மனசாட்ச்சியின் அழுத்தத்தின் கனம் ஒவ்வொரு காட்ச்சியிலும் அதிகரித்து அதிகரித்து, அந்தக் கனம் பார்ப்போர் மனதில் அப்படியே இறங்குகிறது. ஸ்ரீதரின் தனிநபர் போராட்டத்தின் ஒரே சாதனையாக ஒரு கறை படிந்த ஆனால் மனசாட்ச்சியுள்ள போலீஸ் அதிகாரியிடம் ஏற்படுத்தும் பெருத்த ஆன்ம விசாரமும், மன மாறுதலுமே. இது ஒரு ஆரோக்கியமான தொற்று நோயாகா மாறி படத்தைப் பார்ர்கும் ஒவ்வொருவரிடமும் ஸ்ரீதரின் மனசாட்ச்சி கேள்வி அலைகளை எழுப்புமானால் அதுவே இந்தப் படத்தின் மிகச் சிறந்த வெற்றியாக அமையும். சீமானின் நடிப்பும் பாத்திரமும் இந்தப் படத்தின் முக்கிய தூண்கள்.

அளவான பிண்ணனி இசையும், கச்சிதமான எடிட்டிங்கும் படத்தின் விறுவிறுப்புக்குத் துணை சேர்க்கின்றன. ஸ்ரீதரின் அலுப்பும் சலிப்பும் நிறைந்த அன்றாட நங்கநல்லூர் டூ பீச் பயணம், பரபரப்பு நிறைந்த சென்னை நகரத்தின் தொலைந்து போன மனிதத்தை காமெரா மிகச் சிறப்பாக காண்பிக்கிறது. ஸ்ரீதரின் அன்றாட வாழ்க்கையை அதை மீண்டும் மீண்டும் மிக வேகமாகக் காண்பித்து காண்போரை அந்த அலுப்பின் சலிப்பின் உச்சக் கட்டத்துக்குத் தள்ளி உணர வைக்கும் ஆரம்பக் காட்ச்சிகளின் விறு விறுப்பான எடிட்டிங் அபாரம். டி வி பேட்டிகளும், டி வி செய்திகளும் தக்க விதத்தில் பயன்படுத்தப் பட்டுக் காட்ச்சிகளை விறு விறுப்பாக நகர்த்திச் செல்கின்றன. அதே காட்ச்சிகள்தான் மக்களின் பொதுப் புத்தியையும் , அலட்ச்சிய மனப்பான்மையும், அக்கறையின்மையையும், அறியாமையையும், அப்பாவித்தனத்தையும், முட்டாள்த்தனத்தையும் காண்பிக்கின்றன. ஒரு ஸ்ரீதர் வாசுதேவனுக்கு எழும் தார்மீகக் கோபம் ஒவ்வொரு குடிமகனுக்கும் எழாமல் போவதே மக்களைக் காக்க வேண்டிய அமைப்பு அவர்களள ஏமாற்றும் அவல நிலைக்குக் காரணம் என்பதை படத்தின் பல்வேறு காட்ச்சிகள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன,

படத்தில் ஏற்கனவே காட்ச்சி பூர்வமாக விளக்கப் பட்டுள்ள காட்சிகளை மீண்டும் சீமானின் வசனங்கள் மூலமாகச் சொல்ல முயல்வதும், ஸ்ரீதர் வாசுதேவன்
யார் அவன் என்ன செய்ய முயல்கிறான் என்பதை முழுவதும் அறியும் முன்னாலேயே போலீஸ் அதிகாரி அவனைப் பற்றிய ஒரு மிகைப் படுத்தப் பட்ட பிம்பத்தைக் கொள்வதும், போலீஸ் உயர் அதிகாரி ஒரு இன்ஸ்பெக்கடரிடம் நேரடியாகக் கட்டளை இடுவதும், ஒரு சில இடங்களில் வாய் அசைவுகளின் ஒத்திசைவு இன்மையும் படத்தின் சில மெல்லிய குறைபாடுகள்.

இயக்குனர் நிஷிகாந்த் காமத் இந்தப் படத்தை மராத்தியில் ‘டோம்ப்பிவிலி ஃபாஸ்ட்’ என்ற பெயரில் எடுத்து ஏற்கனவே உலகத் திரைப்பட விருதுகள் உட்பட 36 விருதுகளைக் குவித்திருக்கிறார். ‘டோம்ப்விலி ஃபாஸ்ட்’ படத்தை தமிழில் சென்னைச் சூழ்நிலைக்குப் பொருத்தி மீண்டும் எடுத்திருக்கிறார். இந்தப் படம் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த ஒரு புத்துணர்வுள்ள ஆக்சிஜன். இந்த இயக்குனரை தமிழ் பட உலகு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமானால் தமிழ் திரையுலகுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பல காட்சிகளில் இயக்குனரது முத்திரை ஜொலிக்கிறது. இது போன்ற இயக்குனர்களின் வரவு தமிழ் திரையுலகினை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உலக அளவில் தமிழ் படங்களுக்கும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தர இது பொன்ற புது இயக்குனர்களாலும் அவரை ஆதரிக்கக் கூடிய மாதவன் போன்ற நடிகர்களாலுமே முடியும். சென்னை மாநகரின் அவலங்களை புழுத்துப் புரையோடிப் போன, ஈ மொய்க்கும் அழுகிய மிருகம் ஒன்றை ஒரு குறியீடாகக் காண்பிக்கிறார் நிஷிகாந்த். ஊழல்களாலும், சட்ட மீறல்களாலும், மனிதநேயமற்ற மனிதர்களாலும், சுற்றுப் புற மாசு கேடுகளாலும், அராஜகங்களாலும், அதிகார வர்க்கத்தின் திமிராலும், மக்களின் அக்கறையின்மையினாலும், அறிவின்மையினாலும், அரசியல்வாதிகளின் மோசடிகளாலும் மொய்க்கப் படும் ஒரு அழுகிய புழுத்த உடலின் நிலையில்தான் சென்னை அல்லது எந்தவொரு இந்தியப் பெருநகரும் இந்தியாவில் இன்று இருக்கிறது என்பதை உணர்த்துகிறார் நிஷிகாந்த். இறுதியில் ஜன்னலோரம் சீட் கிடைக்காதா காற்றுக் கிடைக்காதா என்று ஏங்குவேன் அது இன்று கிடைத்திருக்கிறது என்று மாதவன் சொல்லும் பொழுது அதன் குறியீட்டில் இயக்குனர் நம்மை கலங்க வைக்கிறார்.

வணிக சமரசங்களற்ற மக்களின் அன்றாடப் பிரச்சினை ஒன்றைத் துணிவுடன் கருவாக எடுத்துக் கொண்டு அணுகிய நிஷிகாந்தும் அதைத் திரையில் சாதகமாக்கிய மாதவனும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே. இந்தப் படம் எவ்விதத் தீர்வையும் அளிப்பதில்லல. நல்லது கெட்டது என்று கருப்பு வெள்ளையாக எவ்வித மெசேஜும் கொடுப்பதில்லை. பார்ப்பவர்களை நிச்சயம் சிந்திக்கத் தூண்டும், எண்ண அலைகளை உருவாக்கும், பல நாட்க்களுக்கு தாக்கத்தை உருவாக்கும்,. அதன் விளைவு ஒட்டு மொத்த சமூகத்தில் ஒரு லேசான மாற்றத்தை உருவாக்கினால் அல்லது அதற்கான ஒரு சிறிய முயற்சியை படம் பார்க்கும் மக்களிடம் ஒரு லேசான தீப்பொறியைப் பற்ற வைத்தாலும் கூடப் போதுமானது. சமுதாய அவலங்களுக்குத் தீர்வு தனி மனிதர்களின் எண்ணப் போக்குகளின் மாற்றத்தில்தான் இருக்கிறது. அத்தகைய மாற்றத்தை சிறிதளவேனும் தூண்டும் ஒரு சேஞ்ச் ஏஜெண்டுகளாக இது போன்ற திரைப்படங்கள் அமைகின்றன. தமிழக ரசிகர்கள் அவசியம் காண வேண்டிய திரைப்படம் எவனோ ஒருவன்.

தொடர்புள்ள பதிவு: கில்லி – Gilli » Blog Archive » evanO oruvan, Movie Review – ‘DhooL’ Balaji

Steve Buscemi: Favorite Actors – List

தூக்கக் கலக்கத்தோடு பட்டியல்.

1. ஸ்டீவ் புசீமி

Steve Buscemi - Pencil on newsprint - digitally colored: Um Graphics

சமீபத்தில் பார்த்தது என்றால் ‘சொப்ரானோஸ்’. வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று ஆரம்பித்து அரை நொடி சறுக்கலில், மீண்டும் அடியாளாக மாறும் குணச்சித்திரம். உழைத்துக் களைக்கும்போது சாதாரண போராட்ட மனிதனின் தோற்றம். தாதா ஆக உருமாற்றம்; பிரமிக்க வைக்கும் ஆளுமை. சொப்ரானோஸ் தொடரின் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் இயக்குவார்கள். இவரும் இயக்கியிருக்கிறார்.

30 ராக்‘கில் போன வாரம் வந்திருந்தார். நகைச்சுவையும் கைவந்த கலைதான்.

திரைப்படங்களில் பிக்ஸரின் ‘மான்ஸ்டர்ஸ் இன்க்‘ வில்லன் கதாபாத்திரம் செய்திருக்கிறார்.

முதல் முதலாக ‘கான் ஏர்‘ படம் மூலமாக எனக்கு அறிமுகமானார். அந்த மசாலப் படத்தின் ஹீரோ/வில்லன்களை மிஞ்சி நினைவில் நின்ற மாந்தராக இருந்தார். அப்புரம் ஃபார்கோ.

நல்ல மனிதர். செப்டம்பர் 11 -ல் உலக வர்த்தக மையம் வீழ்ந்த அடுத்த நாள். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்காக தன்னார்வலராக வந்திருக்கிறார். அனுதினமும் களத்தில் இறங்கி சுத்தம் செய்வதில், தீயணைப்பு வீரர்களுக்கு உதவுவதில், தன்னை வெளிப்படுத்தாமல் பன்னிரெண்டு மணி நேர ஷிப்ட்களில் வேலை செய்திருக்கிறார்.

நேர்காணல்: Steve Buscemi (I) | Interviews | Guardian Unlimited Film

“I don’t tend to think of these characters as losers [I play]. I like the struggles that people have, people who are feeling like they don’t fit into society, because I still sort of feel that way.”

இதே வரிசையில் இன்னும் சிலரை பட்டியல் மட்டும் போட்டு வைத்து, பிறகு தொடரும் எண்ணத்தில்:

2. வில்லியம் எச் மேஸி (William H. Macy)

3. நானா படேகர்

4. வுடி ஹாரல்ஸன் (Woody Harrelson)

5. ஷான் பென் (Sean Penn)

கடைசியாக சிலரைச் சொல்லாமல் இருக்க முடியாது:

10. டென்சல் வாஷிங்டன் (Denzel Washington)

9. மைக்கேல் டக்ளஸ் (Michael Douglas)

8. ஆல் பசினோ (Al Pacino)

7. ஜான் ட்ரவோல்டா (John Travolta)

6. டாம் க்ரூஸ் (Tom Cruise)

சில நேரங்களில் – வின்சென்ட் அசோகன்

பிரமோஷன் அருமை

பாடல்கள் 😦 (தற்போதைக்கு)

Netflix – ரிசர்வ் செய்யப்படுகிறது

1. The Darjeeling Limited

2. Trade

3. Jindabyne

4. Eastern Promises

5. In the Valley of Elah