Thamizmanam Introductions – Observations for Life: Tamil bloggers perceptions


thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « நட்சத்திரம் – காசி

வாழ்க்கையை நிலை நிறுத்துவதற்கும், விரும்பிய துறை அறிவுக்கும் தேவைப்படுவதைத் தவிர பெரிதாக வாசித்ததில்லை.
மொழி ஒரு மனிதருக்குக் கருவி மட்டுமில்லை, அது ஒரு சமுதாய அடையாளம் என்ற நம்பிக்கை. எந்த ஒரு மொழியும் இன்னொருமொழியை விட சிறந்ததில்லை என்பதும், அதே சமயம் தாய்மொழியை உதாசீனப்படுத்தும் சமுதாயம் தலைநிமிர்ந்து வளருவது கடினம் என்பதும் கூட நம்பிக்கைகள். இந்த நம்பிக்கைகளே தமிழில் இணைய எழுத்துக்கள், கணினி நுட்பங்கள் வளரவேண்டும் என்று ஆசைப்படவும், அதற்கு ஆன பங்களிப்பைச் செய்யவும் தூண்டுகோலாய் இருக்கின்றன.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « “வற்றாயிருப்பு” சுந்தர்

தொழில் : உண்மையைச் சொன்னால் நிறைய பொய் சொல்லி வாடிக்கையாளர்களிடம் ‘சேவை’யை விற்று வருவாயீட்டும் பொட்டி தட்டும் தொழில்! ‘விற்பனை’ என்ற பெயரில் பில் கேட்ஸின் பவர் பாயிண்ட்டை வைத்துக்கொண்டு படம் போட்டு நான் செய்யும் அநியாயங்களுக்கு எனக்கு விமோசனமே கிடைகாது என்று தெரிந்தாலும், I love my job!

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « Chameleon – பச்சோந்தி

நான் ஒரு திரிலோக சஞ்சாரி.
நான் சஞ்சரிக்கும் மூவுலகங்கள்.

1.பாதாள உலகம்
தொழிலாளி, அதிகாரி, முதலாளி.

2. பூவுலகம்
கைநாட்டு, பட்டதாரி, முனைவர்.

3. தேவ உலகம்
குழந்தைகள், பெரியோர், முதியோர்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « ROSAVASANTH

உலகத்தின் எந்த பகுதியிலும் காணவியலாத வகையில், போலித்தனத்தை வாழ்வின் அத்தனை தளங்களிலும் பேணுவதாக (இன்னமும்) நினைக்கும் சென்னைக்கு, அதன் போலித்தனத்தை எதிர் கொள்வதிலிருந்து எல்லா வகையிலும் தப்ப விரும்பிய மனநிலையை, காலத்தின் போக்கில் தாக்குபிடிக்கும் அளவிற்கு கரைத்துக் கொண்டு, மிக விரும்பி மிகுந்த மனத் தெளிவுடன் இங்கே வாழ்வதை தேர்ந்தெடுத்துள்ளேன்.

ரோஸாவசந்த் என்ற பெயரை மிக எதேச்சையாக திண்ணை விவாதகளத்தில் எழுத (குறிப்பாக சின்னக் கருப்பன் அவர்களுக்கு ஒரு எதிர்வினை வைக்க) தீர்மானித்த தருணத்தில் தேர்ந்தெடுத்தேன். ஒரு எதிர்வினையாக மட்டுமே, இணையம் அளிக்கும் வசதி மற்றும் சுதந்திரத்தினால் எழுதத் தொடங்கினேன். எழுதியதில் பெரும் விழுக்காடு எதிர் வினைகளாகவும், போலமிக்ஸாகவும் இருப்பதை ஒப்புகொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. சுயநினைவுடன், அதற்கான தேவை கருதி அதன் எல்லைகளை கணக்கில் கொண்டே, வாய்திருக்கும் வசதிகொண்டு, முடிந்தவரை அதை செய்வதாக நினைக்கிறேன்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « பொடிச்சி

வலைப்பதிவுகளின் வருகை தணிக்கையற்ற (சுயதணிக்கைகளைத் தவிர) விவாதங்களிற்கு வழிவிட்டிருக்கிறது. பெரும்பான்மைக் குரல்களுக்குள் சக்திவாய்ந்த மாற்றூடகம் என்ற வகையில் தடைகளற்று எழுதுவது பிடித்திருக்கிறது (சிலவேளை அலுப்படித்தாலும்). எல்லாவற்றிலும் விட, நான் வாழ நேர்கிற இந்த உலகில் எதிர்கொள்கிற அத்தனை முரண்பாடுகள் குறித்தும் — பல சமயங்களில் எழுதுவது தவிர வேறு வழியில்லாததால் எழுதிக் கொண்டிருக்கிறேன்!

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « அசுரன்

இணையத்தில் எழுத தூண்டுகோலாக இருந்தது இங்கு பிற்போக்கு சக்திகள் கேள்வி கேட்க ஆளின்றி பொய்களையும், புரட்டுகளையும் பரப்பி வந்ததும், உலகமய பொருளாதாரத்தில் வளப்பமுறும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு பகுதி, தமது சம்பளத்திற்க்கு மதிப்பை கொடுக்கும் பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி சுயநலத்திலும், பிழைப்புவாதத்திலும் மூழ்கி இருப்பதுமே ஆகும். இந்த இரண்டையும் எதிர்த்தே இங்கு எனது எழுத்து ஆரம்பித்தது.

சுய திருப்தியையும், ஒரு அல்பவாதிக்குரிய குணங்களையும், தற்பெருமையையும் ஊக்குவிக்கும் சூழல் ப்ளாக்குகளில் நிலவுகின்றன. இது தவிர்க்க முடியாதது.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « இலவசக்கொத்தனார்

ஆதங்கம் : இன்று வலைப்பதிவுகள் மூலம் எவ்வளவோ சாதிக்க இருக்க, மீண்டும் மீண்டும் இங்கு நடக்கும் குடுமிப்பிடி சண்டைகளும் தனிமனிதத் தாக்குதல்களும்தான். எவ்வளவுதான் ஒதுங்கிப் போனாலும் மீண்டும் மீண்டும் இதே நடப்பதால் சில சமயங்களில் நாமும் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கிவிடும் வீக்னெஸ்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « கைப்புள்ள

எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது உண்மை. நம்மால் யாரும் எவ்விதத்திலும் புண்படக் கூடாது, மனம் நோகக் கூடாது என்ற எண்ணம் எனது ஒவ்வொரு நடவடிக்கையிலும், செயலிலும் இருக்கிறது என்று பெரிதும் நம்புபவன். கண்காட்சியில் வண்ண விளக்குகளையும் விதவிதமான விளையாட்டு பொம்மைகளையும் கண்டு அதிசயித்து வாய் பிளந்து நிற்கும் ஒரு சிறுவனைப் போன்றே அமைந்துள்ளது இது வரையிலான என் பயணம். அப்பயணத்தில் நான் மிகவும் ரசித்து வாய் பிளந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு கருவியாகவே என் வலைப்பூவைக் காணுகிறேன்.

One response to “Thamizmanam Introductions – Observations for Life: Tamil bloggers perceptions

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.