வேதாள உலகம்
- 1948-இல் வந்த படம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் இயக்கம். பத்மினி நாட்டியம் ஆடி அறிமுகமான முதல் தமிழ் படம்.
- ‘உன்னாலே உன்னாலே’வில் நாயகன் பிற மாந்தருடன் சல்லாபிப்பதை, நாயகி ஒட்டுக் கேட்பது போல் காட்சியமைப்பு; இதில் அன்னையின் இறைவேண்டுதலை நாயகன் ஒட்டுக் கேட்டுவிடுகிறார்.
- ‘இம்சை அரசன் புலிகேசி’ போல் அணுகுண்டு, அராஜக அரசு என்னும் சமகால நிகழ்வுகளைப் பொருத்தமாக நுழைத்திருக்கிறார்கள்.
- நாயகி கனவு கண்டால் கூட தானே டூயட்டில் நுழையாமல் ‘குமாரி கமலா’ ஆடுகிறார்
- ‘ராசாக்குட்டி’ என்று கிண்டலாக அழைப்பது இந்தப் படத்தில்தான் துவங்கியதா என்று தெரியவில்லை
- அம்சமான திரைக்கதை. பில்லா எல்லாம் தூசி தட்டுவதற்கு பதில், இந்த மாதிரி ‘க்ளீன் எண்டெர்டெயினர்’ மறுபதிப்பாக்கலாம்.
- எளிமையான் நகைச்சுவை. தற்கால ‘கனிமொழி’ அரசியல் கூட காமாலைக் கண்ணர்களுக்குத் தட்டுபடலாம் 🙂











பார்க்க தூண்டும் விமர்சனம். பாடல்கள் எப்படி? யார் கதாநாயகன்?
இந்த வாரந்தான் உத்தம்புத்திரன் பார்த்தேன். இனிமையான பாடல்கள்.
நன்றி நிர்மல்.
நாயகன் – டி ஆர் மஹாலிங்கம்
நகைச்சுவைக்கு – கே சாரங்கபாணி
பல கர்ண பரம்பரை கதைகளைத் தொகுத்து, கொஞ்சம் கடவுள் நம்பிக்கை, கொஞ்சம் அரசியல், கொஞ்சம் மனித மனங்களின் விநோத தீர்மானங்கள் எல்லாம் போதிய அளவில் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
நாயகியின் பெயர் யோக மங்களம்.
தயாரித்த காலத்தில் இந்தியா சுதந்திரம் பெறாததால், அரசனை பிரிட்டிஷ் அரசாக உருவகப்படுத்தி, டிகே பட்டம்மாள் குரலில் பாரதியின் பாடல்களையும் ஒலிக்க விட்டிருக்கிறார்கள்.