சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (2)


‘திரை உலகுக்கு கருணாநிதி அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு:

Tamil Nadu - e-LECTIONS 2006இவரை அடுத்து இனி ஆட்சிக்கு யார் வந்தாலும் 2006-ல் திரையுலகுக்கு கலைஞர் அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள். அதற்காக நானும் துணை நிற்பேன்.” என்று ரஜினி பேசியதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தது. சிவாஜி பட ஷூட்டிங்கில் இடுப்பு வளையாததால் ஷங்கரிடம் திட்டு வாங்கி கடுப்பில் இருந்த சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ss‘கேயெஸ் ரவிக்குமாரா இருந்தால் விரலை மட்டும் “விஷ்க் விஷ்க்” என்று அசைக்க சொல்வான். இவன் ரொம்பப் படுத்தறான்’ என்று உடம்பின் நோவைப் பகிர்ந்தார். தொடர்ந்து, ‘நான் பேசியதை மாற்றி விட்டார்கள். கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம் கொடுத்த உமறுப்புலவர் விருது கிடைத்திருக்கிறது. மேலும் ஆழ்வார், ஆரெம்வீ என்று பலரும் பல பரிசுகளையும் பட்டங்களையும் கொடுக்கிறார்கள். ‘கருணாநிதிக்கு அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ என்று சொல்ல வேண்டியது, ஷங்கர்ஜி கொடுத்த டார்ச்சரில் நாகுழறி விட்டது’ என்றார்.


| |

5 responses to “சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (2)

  1. Unknown's avatar முத்து(தமிழினி)

    இதெல்லாம் ஞாயமா நைனா? ரஜினி ராம்கிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?

  2. முத்து (தமிழினி)

    —ரஜினி ராம்கிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?—

    ர.ரா.: “முன்னமே சொல்லியிருந்தார் என்றால், நம்ம புத்தகத்தில் ‘கலைஞரும் கலைஞர்களும்’ என்று அத்தியாயம் சேர்த்திருக்கலாமே! அடுத்த பதிப்பில் பார்த்துக்கலாம்’ 🙂

    வைசா __/\__

  3. Unknown's avatar வெங்கட்ராமன்

    சினிமா கலைஞர்கள், ஒரு காக்கைகள் கூட்டம்.

    – கலைஞர் மு. கருணாநிதி.

    ஜேக்கு விழா எடுத்தப்ப கலைஞர் சொன்னது, ஆனா இந்த விழாவ பத்தி ஜெயலலிதா ஒன்னு மே சொல்லல.

    மு.கு : எனக்கும் ரஜினிய ரொம்ப பிடிக்கும்.

    மு.கு -> முக்கிய குறிப்பு

  4. வெங்கட்

    —சினிமா கலைஞர்கள், ஒரு காக்கைகள் கூட்டம்.—
    ஆஹா… நேரங்காலம் தெரியாமல், உண்மைகளை அவிழ்த்து விடறீங்களே!

    ‘மறப்போம்… மன்னிப்போம்’ என்று பெருவுள்ளம் கொண்டவர் கலைஞர் 😉

Boston Bala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.