Karunanidhi writes letter to Jayalalitha
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் கூடவுள்ள நிலையில், பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறார் கருணாநிதி.
அவரது செயலாளர்களான முனீர் ஹோதாõ, டிஆர் ராமசாமி, ராஜமாணிக்கம் ஆகியோர் திமுகவின் தேர்தல் அறிக்கையை பட்ஜெட்டாக மாற்றுவதில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் நாகநாதனுடன் இரவு பகலாக டிஸ்கஷனில் இறங்கியுள்ளனர். மேலும் இந்த டீம் மற்ற துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந் நிலையில் பட்ஜெட்டிலேயே இலவச கலர் டிவிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிடவும், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே கலர் டிவிக்களை வழங்கிவிடவும் முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து கலர் டிவிக்கள் வாங்குவது தொடர்பாகவும், டெண்டர்கள் முடிவு செய்வது தொடர்பாகவும் அனைத்து கட்சிக் குழுவை அமைக்க கருணாநிதி முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு தானே கைப்பட கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார்.
அதில், கலர் டிவி வாங்க சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு அமைப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னேன். அதன்படி குழு அமைக்க விரும்புகிறேன். உங்கள் கட்சியின் சார்பில் குழுவில் இடம்பெறும் சட்டமன்ற உறுப்பினரின் பெயரைப் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
தனது கையெழுத்துடன் கூடிய இந்தக் கடிதங்களை எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
கடிதத்தைத் பெற்றுக் கொண்டதற்கான அக்னாலட்ஜ்மெண்டையும் இந்தத் தலைவர்களிடம் இருந்து பெற்றுவிட்டதாம் அரசுத் தரப்பு.
இந்தக் கடிதத்துக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரிடம் இருந்தும் பதில் வந்துவிட்ட நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பதில் வரவில்லை. அதே போல வைகோ, திருமாவும் பதில் அனுப்பவில்லை என்று தெரிகிறது.
இதனால் அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை கமிட்டியில் இடம் பெறுவார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் விரைவிலேயே கலர் டிவி டெண்டரை பரிசீலிக்க சட்டமன்றக் கட்சி தலைவர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்படும் என்று தெரிகிறது.
சென்னை வரும் விவசாயிகள்: :: குதிரைப் பந்தயத்தை ஒழித்ததற்காக சென்னையில் குதிரை வீரன் சிலை நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதைப் போல, விவசாயிகளின் கடன் சுமையை ஒழித்ததற்காக சென்னையிலோ அல்லது தமிழகத்தின் முக்கிய நகரம் ஒன்றிலோ மாபெரும் நினைவுச் சின்னம் ஒன்றையும் எங்களது கட்சி அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் செல்லமுத்து.










