Happy Birthday! :: தினம் ஒரு கவிதை யாஹூ குழுமத்தின் மூலம் பரிச்சயம் ஆனவர்களில் ப்ரியாவும் ஒருவர். தினந்தோறும் Day with a Difference என்னும் மின்மடலை கடந்த மூன்று/நான்கு வருடங்களாக அனுப்பி வருகிறார்.
சிந்தையை மேம்படுத்தும் மேற்கோள், புத்தகங்கள்/பதிவுகளில் இருந்து ரசனையான பத்தி மற்றும் அறிவை விசாலப்படுத்தும் தகவலுடன் அனுதினம் அனுப்பி வந்தவர், தற்போது வலைப்பதிந்தும் வருகிறார்.
பிரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
BlogDesam – IndiBlogs Portal
சுன்சுனா,
மைடுடே,
இண்டிப்ளாக்,
சுலேகா,
தேஸிப்ளாக்ஸ்
என்று நிறைய பேர் இருப்பதாலோ என்னவோ, ப்ளாக்தேசம் இன்னும் பரவலாகப் புகழ் அடையவில்லை?!
கண்ணுக்குப் பழக்கமான, (ஆனால் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமான) வடிவமைப்பு உடையது
மற்ற எந்த (ஆங்கிலத் தொகுப்பகங்கள்) வலையகத்திடமும் இல்லாத மறுமொழி நிலவரத்தைக் காட்டுவது
வலைப்பதிவரே ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்துவது (பெரும்பாலானவற்றில் வலைப்பதிவை பொத்தாம் பொதுவாக ‘அரசியல்’, ‘விளையாட்டு’ என்றுதான் ஒரேயடியாக வகைப்படுத்த இயலுகிறது.)
ஒவ்வொரு category-க்கும் தனித்தனியே செய்தியோடை விடுவது
வலைப்பதிவை எளிதில் அடையாளம் காட்ட ஒவ்வொரு பதிவுக்குப் பக்கத்திலும் ஆசிரியரின் உருவம் தோன்றுவது
வாசகரின் கோபத்தைப் பதிவு செய்வதற்கு ‘-‘ வாக்குகளோ, பிறருடன் பகிர நினைப்பதை செயலாக்குவதற்கு ‘+’ வாக்குகளோ போட சொல்வது
தமிழ்மணம் போல் இல்லாமல் தானியங்கியாக பதிவுகளைக் கண்டெடுப்பது (manual vs automatic aggregation)
கருவிப்பட்டி எல்லாம் நிறுவாமலேயே, மறுமொழி கலவரத்தை வாசகர்களுக்கு பிரகடனம் செய்ய முடிவது…
சாம்பார் பந்தோக்கு / அஞர் அறிஞர் / உடனடி குளம்பி / கிருபா / ஆண்டி போன்ற பதிவுப்பரிபாகிகளும் ஜோதியில் ஐக்கியமானால் வலை தேசமே களை கட்டும் 🙂
ப்ளாக் தேசத்தில் இணைய…
Blog | RSS | Portal | India | தமிழ்ப்பதிவுகள்
neenga solliteengalla…sernthiduvom 🙂
Nanri Thala 🙂
பிங்குபாக்: How to be picky with blog posts? - Primer for selective reading « Snap Judgment